View in the JustOut app
X

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோனி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.

10:15:03 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த பானத்தை தினமும் அருந்திவர பெண்களுக்கு வயிற்று பகுதியில் மற்றும் இடுப்பு பகுதியில் சேரும் தேவையற்ற சதைகளை குறைக்க இந்த வெந்தய டீ பயன்படுகிறது.

09:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

09:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்கு சென்ற விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கலால்வட்டாட்சியர் சம்பூர்ணத்தை தொடர்ந்து 3 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் நடராசன் உத்தரவிட்டுள்ளார்.

09:15:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள 40 ஊராட்சிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்புநிலை திரும்பியதை அடுத்து 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

08:57:52 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

08:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள் இணையத்தில் லீக் ஆக்யுள்ளது. அதன்படி இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தில் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒற்றை பெரிய பிக்சலில் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்கும் என கூறப்படுகிறது.

08:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுராந்தகம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர் விடுமுறை முடிந்து ஏராளமானோர் சென்னைக்கு திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

08:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.10-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சியில் துறையூர் அருகே உள்ள கருப்பு சாமி கோயில் விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், 'இந்த சம்பத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்" என்று பிரதமர் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

07:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கடலூரில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் மணல் கடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து கள்ளிப்பாடி பகுதியில் ரோந்து செய்தபோது மணல் திருடி வந்த நான்கு பேர் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை விட்டு விட்டு தப்பி ஓடினர். போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

07:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க தின மலர்

கடந்த 17ஆம் தேதி உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ஆயிரத்து 381 கிலோ தங்கம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யபட்டது. இந்த தங்க கட்டிகள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து தகுந்த ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதை அடுத்து, தங்க கட்டிகள் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

06:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஆக்‌ஷன் த்ரில்லரில் சிம்பு - கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், இந்தப் படம் மெகா பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் 45வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் மதன் கார்க்கி வசனம் மற்றும் பாடல்களை எழுதுகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:25:01 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

இயக்குநர் ஷங்கர் திரை துறைக்கு வந்து இருபத்து ஐந்து ஆண்டுகள் ஆனதையொட்டி, மணிரத்தினம், லிங்குசாமி, சசி, அட்லீ, வசந்தபாலன், ரஞ்சித், பாலாஜி சக்தி வேல், பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் ’S25' நிகழ்வில் பங்கேற்றனர். தற்போது இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

05:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க விகடன்

லாரன்ஸ் ரசிகரின் செயலால், 'மூடர் கூடம்' இயக்குநர் நவீன் தனது டவிட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர், “இது மிகவும் முட்டாள்தனமானது. லாரன்ஸ் மாஸ்டர்கள் அவர்களே, தயவு செய்து உங்கள் ரசிகர்களுக்கு புரிதலை ஏற்படுத்துங்கள்.” என பதிவிட்டுள்ளார்.

04:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரிலுள்ள அரசின் போக்குவரத்துறையின் அலுவலகத்தில் மூவர் பணியின் போது மது அருந்தியுள்ளனர். அத்துடன் இவர்கள் தகாத வார்த்தைகளையும் பேசியுள்ளனர். இதுதொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனையடுத்து 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

04:25:01 on 22 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தேர்தல் நடைமுறை நிறைவடைய இன்னும் 37 நாட்கள் உள்ளன. அதுவரை ஏழை, எளிய மக்களுக்கும் உழவர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உதவிகளை நிறுத்தி வைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

03:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ளது பொன்பரப்பி கிராமம். இந்த பொன்பரப்பி கிராமத்தில் நடந்த கலவரத்தை கண்டித்து, ஏப்ரல் 24ஆம் திமுக தோழமைக்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றன. பொன்பரப்பியில் மறுதேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

03:26:01 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தமிழில் இது நம்ம ஆளு, சார்லி சாப்ளின் 2 ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் நடிகை அடா சர்மா. இந்நிலையில் அவர் தற்போது ஒரு ஹிந்தி படத்தில் கமிட் ஆகியுள்ளார். Man to Man என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் அடா சர்மா ஆணாக இருந்து பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் ரோலில் நடிக்கிறார்.

02:56:02 on 22 Apr

மேலும் வாசிக்க சினி உலகம்

கோடையில் கிடைக்கும் லிச்சிப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதனால் இதனை உட்கொண்டால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

02:26:01 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

வியட்நாமில் உள்ள விமானத்தளம் ஒன்றினை பல மில்லியன் டாலர்கள் மதிப்பில் செலவு செய்து சுத்தம் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இங்குதான் மோசமான 'ஆரஞ்ச்' எனப்படும் ரசாயணத்தை அந்நாடு சேமித்து வைத்திருந்தது.

01:56:02 on 22 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தற்போது சிம்புவின் அடுத்தப்படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை கே.இ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. நர்தன் எனும் புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் கெளதம் கார்த்திக்கும் நடிக்கிறார்.

01:26:01 on 22 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் இரத்தம் விருத்தி ஆகிறது. இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

12:57:01 on 22 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8.61 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு பிப்ரவரி நிலவரத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் எனவும் இபிஎஃப்ஓ அறிக்கையில் கூறியுள்ளது.

12:25:01 on 22 Apr

மேலும் வாசிக்க காமதேனு

வங்கிகளுக்கு வாரம் இரண்டு நாள் விடுமுறை என ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது எனவும், அவ்வாறான அறிவிப்புகள் எதுவும் இந்தியன் ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

11:55:02 on 21 Apr

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

சென்னை திருவொற்றியூரில் கேட்பாரற்று நின்ற டெம்போ ஒன்றில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்திருக்கும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது.

11:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் குற்றால அருவிகளில் தண்ணீர் விழ தொடங்கியது.
இதனால் சுற்றுலா பயணிகள் இன்று காலை முதலே குற்றாலத்தில் வந்து குவியத் தொடங்கியுள்ளனர்.

10:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

மும்பையில் தானே மாவட்டம் மிராரோடு பகுதியில், பணம் திருடியதாக நினைத்து தங்கையை கொன்ற அண்ணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்து உள்ளது.

10:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

பி.எஸ்.என்.எல். நிறுவன போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு அந்நிறுவனம் கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது. அந்த வகையில் சில போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ.4,575 வரை கேஷ்பேக் பெற முடியும். கேஷ்பேக் தொகையை பெற வாடிக்கையாளர்கள் ஆண்டு சந்தா சலுகைகளை தேர்வு செய்ய வேண்டும்.

09:56:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களுக்கு நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

09:25:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

நான்கு தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது திமுக தலைமை. அதற்காக தொகுதிக்கு 25 கோடி பட்ஜெட் முடிவு செய்திருக்கிறார்கள். திமுகவில் இப்படி என்றால் அதிமுகவில் தொகுதிக்கு 75 சி வரையில் செலவு செய்யலாம், ஓட்டுக்கு இரண்டாயிரம் நோட்டு இரண்டு கொடுக்கலாம் என்ற மாஸ்டர் பிளானில் இருக்கிறார்களாம்.

08:57:01 on 21 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இலங்கை சம்பவத்தை உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக தவறுதலாக பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

08:39:02 on 21 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இலங்கை சம்பவத்தை உலகம் முழுவதும் அரசியல் தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும், இலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், 13 கோடி பேர் உயிரிழந்து விட்டதாக தவறுதலாக பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

08:36:02 on 21 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உதகையில் இந்த ஆண்டிற்கான கோடை சீசன் உதகையில் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வர தொடங்கி உள்ளனர்.

08:26:19 on 21 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7

உதகையில் இந்த ஆண்டிற்கான கோடை சீசன் உதகையில் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும், கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும், கடந்த இரண்டு நாட்களாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உதகைக்கு வர தொடங்கி உள்ளனர்.

08:22:50 on 21 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7

ஒடிசாவில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி இதுவரை 14 தேர்தல் அலுவலர்களை இடைநீக்கம் செய்துள்ளார் அம்மாநில தேர்தல் அலுவலர் சுரேந்திர குமார். ஒரு தொகுதிக்கு மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

08:18:01 on 21 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

ஒடிசாவில் ஏப்ரல் 11, 18 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி இதுவரை 14 தேர்தல் அலுவலர்களை இடைநீக்கம் செய்துள்ளார் அம்மாநில தேர்தல் அலுவலர் சுரேந்திர குமார். ஒரு தொகுதிக்கு மறுதேர்தல் நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

08:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

சென்னை, முகப்பேர் கிழக்கு பகுதியில் டால்பின் நீச்சல் குளம் அருகே போதை மாத்திரைகள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தலவல் கிடைத்துள்ளது.அப்போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சரத் என்ற சரவணன் என்பவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

07:57:01 on 21 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஐதராபாத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

07:39:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

ஐதராபாத்தில் நடைபெற்ற இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணி 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

07:36:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலத்தில் பதான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பால்கோட் சம்பவம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறிய விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார்.

07:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

‘தர்பார்’ படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும், இரண்டாம் பாதியில் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் ரஜினி. ஏற்கனவே, ‘மூன்று முகம்‘ படத்தில் ரஜினி நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் பிரமாதமாகப் பேசப்பட்டது.

06:57:44 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி சாலையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 4 நாட்கள் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால், ஆத்தூர் சாலை சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

06:39:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

செங்கல்பட்டு அடுத்த மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி சாலையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 4 நாட்கள் விடுமுறை முடிந்து பொதுமக்கள் சென்னை திரும்புவதால், ஆத்தூர் சாலை சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

06:36:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பிட்காயின் முதலீட்டாளர் சாட் எல்வர்ட்டோவ்ஸ்கி என்பவர் தன் காதலி சுப்ரானி தெப்தெட் என்பவருடன் சேர்ந்து தாய்லாந்தில் கடலில் கான்கிரீட் வீடு ஒன்றை கட்டியிருக்கிறார். அங்கு கடலுக்குள் வீடு கட்டியது சட்டவிரோத செயல் என்றும் அது நாட்டின் இறையாண்மையை மீறிய செயல் என்றும் அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

06:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்வதாக பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

05:57:02 on 21 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்புகள் பெருமபாலானவை தற்கொலை படை தாக்குதல் மூலம் நிகழ்த்தப்பட்டவை என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபன் தெரிவித்துள்ளார்.

05:54:29 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

கத்தார் நாட்டைச் சேர்ந்த கஸ்ராய் என்பவர் சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் ஒரு வீடியோவை யூடியூபில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ஆரம்பிக்கும்போதே “பார்வையாளர்களுக்கு வணக்கம். நான் இன்று உங்கள் மனைவியை எப்படி அடிக்க வேண்டும் என்பதைக் கற்றுத் தரவுள்ளேன்” என்றே தொடங்குகிறார்.

05:35:01 on 21 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

உத்தரப்பிரதேசம் மாநிலம் பதாவுன் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் சங்க்மித்ரா மவுரியா. இவர் பேசியா வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஓட்டு போட வராதவர்களின் ஓட்டுகளைத் தொண்டர்கள் போட்டு விடுமாறு சங்க்மித்ரா மவுரியா பேசி இருப்பதாகக் கூறப்படுகிறது.

05:15:02 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பொன்பரப்பியில் நடந்த சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் பேசியவர் சென்னையில் கைது செய்யப்பட்டார். டிக்டாக் செயலியில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக விஜயகுமார் என்பவரை அசோக்நகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

04:57:01 on 21 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த, ஜெய்ஹிந்த் தேவி என்பவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

04:39:01 on 21 Apr

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த, ஜெய்ஹிந்த் தேவி எனபவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

04:36:01 on 21 Apr

மேலும் வாசிக்க ஏசியாநெட் செய்திகள்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தையொட்டி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 190க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், கொழும்பு புறநகரமான தெமட்டகொடையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் மூன்று போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

04:29:56 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கூடங்குளம் அணு உலையில் நிறைய பிரச்சினைகள் இருப்பது உண்மைதான் என்று இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவரும், இந்திய அணுசக்தி துறையின் செயலாளருமான கமலேஷ் நிகந்த் வியாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். இதையொட்டி அணு உலையை இனி விரிவாக்கம் செய்யக் கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

04:18:01 on 21 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கூடங்குளம் அணு உலையில் நிறைய பிரச்சினைகள் இருப்பது உண்மைதான் என்று இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவரும், இந்திய அணுசக்தி துறையின் செயலாளருமான கமலேஷ் நிகந்த் வியாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். இதையொட்டி அணு உலையை இனி விரிவாக்கம் செய்யக் கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

04:15:02 on 21 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

"அடக் கடவுளே. இலங்கையில் குண்டுவெடிப்புகள். எல்லோருக்கும் கடவுள் துணை நிற்கட்டும். இப்போதுதான் கொலம்போவில் சினாமன் கிராண்ட் ஹோட்டலிலிருந்து வெளியேறினேன். அங்கு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. என்னால் இதை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாக உள்ளது" என்று நடிகை ராதிகா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

03:57:01 on 21 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

"நாங்கள் தேவாலயத்தின் வெளியில் சென்றுகொண்டிருக்கும்போது பலத்த சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடித்தது. இதனால் அருகில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதை போல் உணர்ந்தோம்." என குண்டு வெடிப்பை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

03:39:01 on 21 Apr

மேலும் வாசிக்க விகடன்

"நாங்கள் தேவாலயத்தின் வெளியில் சென்றுகொண்டிருக்கும்போது பலத்த சத்தத்துடன் மிகப்பெரும் குண்டு வெடித்தது. இதனால் அருகில் இருந்த கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கம் ஏற்பட்டதை போல் உணர்ந்தோம்." என குண்டு வெடிப்பை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

03:36:01 on 21 Apr

மேலும் வாசிக்க விகடன்

தேர்தலில், வேட்பாளர் தேர்வில் இருந்து, வாக்காளர்கள் வரை, ஜாதி வேரூன்றி உள்ளது.ஹரியானாவில், ஜாட் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில், அதே சமுதாயத்தை சேர்ந்த, முன்னாள் முதல்வர், புபேந்தர் சிங் ஹூடாவுக்கு, 'செக்' வைக்கும் வகையில், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களை, பாஜக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

03:18:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

தேர்தலில், வேட்பாளர் தேர்வில் இருந்து, வாக்காளர்கள் வரை, ஜாதி வேரூன்றி உள்ளது.ஹரியானாவில், ஜாட் சமுதாயத்தினர் அதிகம் உள்ள பகுதிகளில், அதே சமுதாயத்தை சேர்ந்த, முன்னாள் முதல்வர், புபேந்தர் சிங் ஹூடாவுக்கு, 'செக்' வைக்கும் வகையில், பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களை, பாஜக வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

03:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினமலர்

இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. இந்த நிலையில் டோனி இல்லாமல் வெற்றி பெறுவது கடினம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் பிளெமிங் தெரிவித்துள்ளார்.

02:57:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

இலங்கையில் மீண்டும் குண்டு வெடித்ததால் பதற்றம் நிலவிவருகிறது. மேலும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, மாலை 4 மணி முதல் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இலங்கையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

02:48:11 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. அந்நாட்டில் 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்தது.

02:39:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. அந்நாட்டில் 4 நாட்களுக்கு முன், லேசான குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோதே இந்திய உளவுப்பிரிவு இலங்கையை எச்சரித்தது.

02:36:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி இலங்கையில் தேவாலயங்களில் இன்று சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அப்போது, அந்தோணியர் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 156ஆக உயர்ந்துள்ளது.

02:15:02 on 21 Apr

மேலும் வாசிக்க தினமணி

நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களில் எண்ணெய், எரிவாயு கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்காக, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்ய ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

01:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

'வாக்கு இயந்திரம், தபால் வாக்குகள் உள்ள ஸ்ட்ராங் ரூமில் பெண் வட்டாசியர் சம்பூர்ணம் நுழையவில்லை; அவர் சென்ற அறை ஸ்டோர் ரூம்,' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

01:51:18 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மொனாக்கோவில் நடைபெற்று வரும் மான்ட்கார்லோ டென்னிசின் அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், இத்தாலி வீரர் பாபியோ போக்னினியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

01:35:02 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரையில் வாக்கு இயந்திரம் வைத்துள்ள அறையில் நுழைந்த தாசில்தார் சம்பூர்ணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வாக்கு ஐனாதிரா அறைக்குள் அதிகாரி அத்துமீறி நுழைந்தது குறித்து ஆட்சியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல் தெரிவித்துள்ளார்.

01:30:44 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இலங்கையில் நடைபெற்ற கொடூர தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், 'இலங்கை மக்களுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும்,' என்றும் கூறினார்.

01:29:35 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்புத்துறை அமைச்சகத்தின் அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, தலிபான் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

01:15:02 on 21 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூன் 20ஆம் தேதி தொடங்கி ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.முதல் முறையாக பொறியியல் கலந்தாய்வை தொழில்நுடபக் கல்வி இயக்கம் நடத்துகிறது. இதற்கான விண்ணப்பங்களை மே 2ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

12:55:02 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாப்பிரட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகள் உள்பட தமிழகத்தில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரைத்துள்ளார்.

12:37:29 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்,' என அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். மேலும், 'நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம், விரைவில் இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பார்கள்,' எனவும் அறிவித்துள்ளார்.

12:29:30 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மதுரையில் ஈவிஎம் இயந்திரங்கள் தொடர்பான ஆவணங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது.

12:25:39 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இலங்கை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கையில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியிருப்பதாக கடந்த 11ஆம் தேதி அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

12:21:31 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமெரிக்காவின் வார இதழில் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த தலைவர்களின் பட்டியலில் கோவையை சேர்ந்த ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் முதல் 50 இடங்களுக்குள் தேர்வாகியுள்ளார்.

12:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

இலங்கையில் இன்று ஆறு இடங்களில் நிழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில் 102 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

11:59:10 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நாட்டாண்மை பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரண்டு பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

11:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இலங்கையில் சர்ச், ஓட்டல்கள் மீது இன்று காலை முதல் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். 250க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

11:42:59 on 21 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையம் கருப்பசாமி கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளதாகவும், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

11:34:12 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இலங்கை குண்டு வெடிப்பு குறித்த தகவல்கள், உதவி தேவைப்படும் இந்தியர்கள் +94777903082 +94112422788 +94112422789 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:26:55 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியர் தேவாலயம், நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், குண்டு வெடிப்பு சேதம், உயிரிழப்பு, இதற்கு யார் காரணம் போன்ற எந்த தகவல்களும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

11:18:25 on 21 Apr

மேலும் வாசிக்க விகடன்

இலங்கையில் கொச்சிக்கடை தேவாலயம் உட்பட 6 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

11:16:13 on 21 Apr

மேலும் வாசிக்க தினமணி

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடித்ததில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:54:16 on 21 Apr

மேலும் வாசிக்க தினமணி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நகரத்தார்குறிச்சி கிராமத்தில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை வெட்டிக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

10:48:31 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

இலங்கையில் கொழும்புவில் கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்திலும், நீர்கொழும்புவில் கட்டுவப்பிட்டிய தேவாலயத்திலும் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

10:39:51 on 21 Apr

மேலும் வாசிக்க தின மலர்

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

10:15:02 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உத்தர பிரதேசத்தின் மெயின்புரி அருகே ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் லாரி மீது பேருந்து மோதியதில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

09:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

4 நாள் தொடர் விடுமுறை எதிரோலியால் சென்னை நகரில் உள்ள வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் பல்வேறு இடங்களில் உள்ள ஏ.டி.எம்.களில் போதிய பணம் நிரப்பாததால் பொதுமக்கள் அவதியுற்றதாக கூறப்படுகிறது.

09:35:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மூன்றாவது கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்த தேர்தலின் மிகவும் முக்கியமான வேட்பாளர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உ.பி.யின் அமேதி தொகுதியில் போட்டியிடும் இவர், கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் களமிறங்குகிறார்.

09:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

சவுதி அரேபியாவை சேர்ந்த சவுதி அராம்கோ என்ற நிறுவனம்தான் உலக அளவில் அதிக வருமான வரி செலுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமூக நலத்திட்டங்கள் மற்றும் ராணுவத்திற்கு ஆகும் செலவுக்கு அராம்கோ நிறுவனத்தையே சவுதி அரேபிய அரசு சார்ந்துள்ளது.

08:55:02 on 21 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

விங் கமாண்டர் அபிநந்தன் ஜம்மு காஷ்மீரில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கையை விமானப்படை மேற்கொண்டிருக்கிறது.

08:35:02 on 21 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் ஆவணங்கள் நகல் எடுக்கப்பட்ட விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணத்திடம் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

08:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.10-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:53:48 on 21 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்விஸ் பந்துக்கென தனிச் சிறப்பு இருக்கிறது. காலையில் இந்த பயிற்சிகளை செய்யும்போது, உடல் முழுக்க சீரான ரத்த ஓட்டம் நடக்கிறது. இதனால், நாள் முழுவதும் ஃபிரஷ்ஷான உணர்வு கிடைக்கும். ஸ்விஸ் பந்தின் மீது உட்கார்ந்து பயிற்சி செய்யும்போது, நம்மை அறியாமல் நமது உடல் சரியான போஸ்சரை தேர்ந்தெடுத்து தடுமாறாமல் காத்துக்கொள்ளும்.

07:35:01 on 21 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ராணிமேரி கல்லூரியில் உயர் மின்அழுத்தம் காரணமாக தீவிபத்து ஏற்பட்டு புகை வெளியேறியது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:15:01 on 21 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிகத்திற்கான இந்தியாவின் முதல் பிரீமியம் பயணக் கழகத்தின் ஜலாஷ் பயண பயணியர் கப்பலுக்கு, உத்தியோகபூர்வ பெயரிடும் விழாவில் 'கர்ணிகா' என பெயரிடப்பட்டது.

06:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

இந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ வங்கியில் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருப்புத்தொகை வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ மற்றும் அனைத்து ஏடிஎம்-களிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். இதற்கு எந்த அபராத கட்டணமும் இல்லை.

06:25:01 on 21 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் மாம்பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்த நோய் சரியாகும். இரத்த கொதிப்பு உள்ளவர்கள் நெல்லிக்காய் பொடியை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர குணமாகும்.

05:55:01 on 21 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

மேலும் வாசிக்க