View in the JustOut app
X

ஒரே நாளில் 3 படங்கள் மட்டும் 120 கோடி ரூபாய் வசூல் செய்கிறது என்றால், பொருளாதார சரிவு எங்கே இருக்கிறது என்று தான் சொல்லியிருந்த கருத்தை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திரும்பப் பெருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

03:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயிக்கப்படும் என தெரிகிறது.

02:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் தான் குர்துக்கள். குர்து மொழி பேசும் இவர்களுக்கென்று தனி நாடு கிடையாது. இவர்கள் இரண்டரை கோடியில் இருந்து 3 கோடி வரை இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

01:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் இருந்து தன்னை விளக்கிவிட்டு அக்ஷரா ஹாசனை ஒப்பந்தமாக்கியுள்ளதாக கூறி சர்சையை ஏற்படுத்தினார் மீரா மிதுன். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் அப்படத்தின் இயக்குனர் நவீன்.

12:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பிஎஸ்என்எல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் புதிதாக சலுகை ஒன்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 1 GB வீதம் மொத்தம் 71 நாட்கள் பயன்படுத்தும் வகையில் இருந்தது. இதில் இனிமேல் 1.5 GB டேட்டா கூடுதலாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் நாளொன்றுக்கு 2.5 GB டேட்டா பயன்படுத்த முடியும்.

11:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க Behind Woods News

குஜராத் மாநிலம் காந்தி நகரில் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட கேள்வித்தாளில், ''காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?'' என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கேள்வியால் மாணவர்கள் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

10:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழககத்தில் வரும் 17ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், வடகிழக்கு பருவமழை, வழக்கத்தை விட 2 நாட்கள் முன்னதாகவே தொடங்குமென தெரிவித்துள்ளது.

09:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க ஜெயா டிவி

வெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ்) என்பது பொதுவாக விலங்குகளுக்கு ஏற்படும் நோயாகும். அந்த விலங்குகள் மனிதனை கடித்து விட்டால் மனிதர்களுக்கும் இந்த நோய் பரவிவிடும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவது மிகவும் கடினம். இந்த நோய் இந்தியாவில் பரவலாக காணப்படுகிறது.

08:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

நெல்லையில் நடைபெற்ற டி.வி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை கஸ்தூரி, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது, சமூகப் பொறுப்பான நிகழ்ச்சி அல்ல. டி.வி நிகழ்ச்சி என்பது பொறுப்புள்ள பொழுதுபோக்காக இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.” என்றார்.

08:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க விகடன்

அஜித்திற்கு பெரும் ரசிகர்கள் படையே இருக்கிறது. தீபாவளிக்கு அஜித் படங்கள் சமீப காலமாக வராதது அவர்களுக்கு வருத்தமே. இந்நிலையில் நெல்லை மாவட்ட ரசிகர்கள் இந்த தீபாவளி வெத்து, அடுத்த தீபாவளிக்கு வைப்போம் வேட்டு என பேனர் வைத்துள்ளனர். இது பலரின் கண்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.

07:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

பொன்.ராதாவுக்கு எதிராக ஹெச்.ராஜாவும், தமிழிசையின் ஆதரவாளர்களும் இணைந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்கு வேட்டி கட்டி, தமிழ்பேசி பிரதமர் மோடி கவர்ச்சிகரமான காய் நகர்த்தல்களை மேற்கொண்டுள்ள நிலையில், பிரதமரை வரவேற்பதிலேயே இத்தனை கோஷ்டிகளா என தமிழக பாஜக மீது கோபத்தில் இருக்கிறது பாஜக தேசிய தலைமை.

07:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிரபல இந்தி நடிகை அமிஷா படேல். இவர் தமிழில் விஜய் நடித்த 'புதிய கீதை' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் ரூ.2.5 கோடி கடனை திருப்பிக் கொடுக்காத வழக்கில், ராஞ்சி சிவில் நீதிமன்றத்திம் நடிகை அமிஷா படேலுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

06:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிறுத்தை ஒன்று நாயைக் கடித்த பின்னர் விரட்டிச் செல்லும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ எந்த பகுதியில் பதிவானது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை. சமூக வலைதளங்களில் இந்தக் காட்சி தற்போது பகிரப்பட்டு வருகிறது.

06:25:02 on 13 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், வனத்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 பேர் நாட்டுப்படகில் இருந்து தப்பிச் சென்றனர். இதனால், சந்தேகம் அடைந்த வனத்துறையினர், நாட்டுப்படகில் சோதனை நடத்தினர். அப்போது, அதிலிருந்து, ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரியவகை கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

05:57:02 on 13 Oct

மேலும் வாசிக்க தினமலர்

பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு நடைபெறவிருந்ததால் அங்கு சுற்றித்திருந்த குரங்களை பிடிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். முன்னதாக வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் மாமல்லபுரத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் அங்கு சுற்றித்திரிந்த குரங்குகளை வலைகள், கூண்டுகளை வைத்து பிடித்தனர்.

05:27:02 on 13 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தஞ்சை மாவட்டம் புதிய பேருந்து நிலையம் எதிரே சரபோஜிநகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் அமிர்தகணேசன். இவர், கிணறு, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க புதிய கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

04:57:02 on 13 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மதுரை ஆரப்பாளையம் அருகே இருக்கும் மேலபொன்னகரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவரது மனைவி வசந்த மணி(47). இந்நிலையில், மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்க, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் இருக்கும் தனது அக்கா கண்ணம்மா வீட்டிற்கு இருவரும் சென்றுள்ளனர்.

04:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

திமுகவில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய பிரிவு தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கீழ் இம்மாத இறுதியில் இளம்பெண்கள் பேரவை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

03:57:02 on 13 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

திருவள்ளூர் ஆரம்பாக்கம் அருகே செங்கல் சூளைமேடு கிராமத்தில் முருகன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்த முருகனின் மனைவி தேவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவருடன் தகாத உறவு இருந்ததையும், வினோத்துடன் இணைந்து தேவி கணவரை கொலை செய்ததும் தெரியவந்தது.

03:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கணக்கு தொடங்கும் போது, குறிப்பிட்ட நபரை பற்றி முழுவதுமாக அறிந்துகொள்ள KYC எனும் சுய விவரங்கள் அடங்கிய படிவத்தை சமர்பிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனை வரும் ஜன.1ஆம் தேதிக்குள் புதுப்பிக்காவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று ஆர்பிஐ எச்சரித்துள்ளது.

02:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், "மாமல்லபுரத்தில் நான் குப்பைகள் சேகரித்தபோது என் கையில் இருந்த உபகரணம் குறித்து நிறைய பேர் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். அது நான் அடிக்கடி பயன்படுத்தும் அக்குபிரஷர் உபகரணம். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

02:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க தினமணி

புதுவை அரியாங்குப்பம் மணவெளியை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 45). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை பாகூர் அருகே உள்ள கரையாம்புத்தூர் அய்யனார் கோவில் ஏரிக்கரையில் உள்ளது. இந்நிலையில் இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது.

01:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

சிலம் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும் அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

01:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். அதேபோல் வாக்காளர் பட்டியலில் பெயர், முகவரி, புகைப்படம் திருத்தம் செய்ய, பெயர் சேர்ப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

01:00:02 on 13 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

பீகாரில் வசித்து வரும் பெண் நூரி பாத்திமா. கடந்த 2015ஆம் ஆண்டு இம்ரான் முஸ்தபா என்பவருடன் நூரிக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், நவீன பெண்கள் அணிவது போன்று உடை அணியும்படி மனைவியிடம் இம்ரான் கூறியுள்ளார். இதற்கு மறுத்த நூரியை ஒவ்வொரு நாளும் இம்ரான் அடித்து உதைத்து துன்புறுத்தி வந்துள்ளார்.

12:30:12 on 13 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

”கீழடி வைகை நதி நாகரீகம் சாதி, மதம், அரசியல் சார்பற்றது, கீழடி நமது வரலாறு. கீழடிக்கு பள்ளி கல்லூரி மாணவர்கள் தற்போது அதிகளவில் செல்வதை பார்க்கும்போது மகிழ்ச்சியளிக்கிறது, கீழடி பள்ளி பாட புத்தகத்தில் பாடமாகவும், திரைப்படமாகவும் வர வேண்டும்'' என நடிகர் சசிக்குமார் கூறியுள்ளார்.

12:00:23 on 13 Oct

மேலும் வாசிக்க விகடன்

ஜப்பான் நாட்டை ஹகிபிஸ் புயல் நேற்று தாக்கியது. மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலில் சிக்கி 8 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். மேலும் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

11:30:15 on 13 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததையடுத்து நடிகர் ரஜினிகாந்த் 10 நாள்கள் ஆன்மிகப் பயணமாக இன்று இமயமலைக்கு புறப்படுகிறார். அங்கு கேதார்நாத், பாபாஜி குகை, பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு சென்று தங்க திட்டமிட்டிருக்கிறார்.

11:00:07 on 13 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 12,943 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாகவும், நீர்இருப்பு 85.86 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 22,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

10:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க தினமலர்

"தேசிய விடுமுறை தினமான அக்டோபர் 2ஆம் தேதி வெளியான மூன்று இந்தி திரைப்படங்கள் அன்றைய தினமே ரூ.120 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளன. எனவே, நாட்டின் பொருளாதாரம் நன்றாகத்தான் இருக்கிறது" என்று கூறியுள்ளார் இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.

10:00:12 on 13 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி காஷ்மீரின் சிறப்பு சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து செல்போன், இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை முதல் மீண்டும் செல்போன்கள் ஒலிக்கப் போகின்றன. இதனால் அங்கு முழு அளவுக்கு இயல்பு நிலை திரும்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

09:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழக முதல்வரின் குடும்பத்தினர் அவரது நண்பர்கள் நெருங்கிய நண்பர்கள் என ஒரு சிறு வட்டத்துக்கு மட்டும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்புடைய சொத்துகளும் நிறுவனங்களும் இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். மூலம் பாஜகவுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனைக்கொண்டு எடப்பாடி பழனிசாமியிடம் சில நிபந்தனைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

08:57:01 on 13 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தெற்கு கலிபோர்னியாவில் சான் பெர்னாண்டோ பள்ளத்தாக்கில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் 6வது நாளாக தொடர்ந்து தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்நிலையில் அருகில் உள்ள பகுதிகளில் வசிக்கும் சுமார் ஒரு லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் 76 வீடுகளும், 31 கட்டிடங்களும் காட்டுத் தீயில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

08:27:01 on 13 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.14, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.20 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:07:52 on 13 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை அந்நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து டீசர்களின் மூலம் தெரிவித்தது.

06:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

நெல்லிக்காய் ஜூஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அமினோ அமிலங்கள் மற்றும் பெக்டின் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் கொண்டுள்ளது. இவை நமது உடலில் இருக்கின்ற ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து, மேற்கண்ட குறைபாடு ஏற்படாமல் காக்கிறது.

05:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஈரான் நாட்டில் ஆடவர் விளையாடும் கால்பந்துப் போட்டியை பார்ப்பதற்கு கடந்த 1981ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் பெண்களுக்கு கால்பந்து போட்டியை பார்க்க அனுமதி வழக்கப்பட்டது. இதனையடுத்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஆசாதி மைதானத்தில் கால்பந்தாட்டம் நடைபெற்றது.

04:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பனை மரத்திலிருந்து கிடைக்கும் உணவு பொருட்கள் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்றாலும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டைக் கரகரப்பு, நெஞ்சுசளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெரும்பங்காற்றுகிறது. சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் மேற்கூறிய பிரச்சனைகள் தீரும்.

03:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

சிங்கப்பூரில், நீரிழிவு நோய் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக அதிக இனிப்பு அளவு கொண்ட பானங்களின் விளம்பரங்களுக்கு, சிங்கப்பூரில் சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரில் மட்டுமே 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

02:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

Mi.com-ன் விற்பனை பக்கத்தின்படி, 'Diwali with Mi' விற்பனையில் Redmi Note 7 Pro-வின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோஜின் விலை 13,999 ரூபாயிலிருந்து தள்ளுபடி விலையில் ரூ.11,999-க்கு விற்பனை செய்யவுள்ளது. மறுபுறம் Redmi Y3, ஜியோமி விற்பனையின் போது 7,999 ரூபாய்க்கு ஆரம்பமாகும். handset-ன் ஆரம்ப விலை ரூ. 9,999-யாக உள்ளது.

01:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

HONOR Band 5 மற்றும் Mi Band 4 இரண்டும் 0.95 இஞ்ச் 2.5D கிளாஸுடன் ஒரு AMOLED முழு வண்ண தொடு காட்சியைக் கொண்டுள்ளன. இருந்தாலும், HONOR Band 5 பிரகாசமான டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது மிகவும் எளிதானதாகவும் படிக்க வசதியாகவும் இருக்கிறது. எனவே, HONOR Band 5 ல் பேண்டை சூரிய ஒளியில் பார்க்கும்போது நீங்கள் சிரமப்படமாட்டீர்கள்.

12:55:01 on 13 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தின் 370 ஆவது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மூன்றாக பிரிக்கப்பட்டு முற்றிலும் பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், தலைநகரான ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

11:55:01 on 12 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளில், கடந்த 2018 ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவீதமாக இருந்த நாட்டின் தொழில்துறை உற்பத்தி 1.1% அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு எனவும், கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக ஏற்பட்ட வீழ்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:55:02 on 12 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெபாசிட் இழந்த வேட்பாளர்களின் தகவல்களை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. தோல்வியடைந்த 7,484 வேட்பாளர்களில் வெறும் 587 வேட்பாளர்களே டெபாசிட் பெற்றுள்ளனர்.

08:57:02 on 12 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மும்பையில் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானத்தா யு-18 உலக செஸ் சாம்பியன் ஆகியுள்ளார். இந்தப் போட்டியில் அவர் 7 ஆட்டங்களில் வெற்றியடைந்து, நான்கு ஆட்டங்களை டிரா செய்தார்.

08:27:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினமணி

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய திருவாரூர் கொள்ளையன் முருகனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எய்ட்ஸ் நோய் ஏற்பட்டுள்ளது. அதற்கு தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளான். இந்த நோயினால் உடல் மெலிந்தும் பற்கள் விழுந்து மிக மோசமான நிலையில் காணப்பட்டான்.

07:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வருபவர் தஸ்லீமா. இவரது கணவர் அன்சாரி. வெளியே சென்ற கணவன் வீட்டுக்கு வந்ததும் பிரெஞ்சு முத்தம் வேண்டும் என்று தஸ்லீம் அன்சாரியிடம் கேட்டுள்ளார். கணவர் அவருக்கு முத்தம் கொடுக்கும்போது, மனைவின் நாக்கை பிடித்துக் கையில் இருந்த கத்தியால் அறுத்துள்ளார்.

07:25:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

கள்ளத்துப்பாக்கி தயாரித்தல், விற்பது, வைத்திருப்பது போன்ற குற்றங்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் ஆயுதங்கள் சட்டத்தைத் திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது மொத்தம் 35 லட்சம் துப்பாக்கி லைசென்சுகள் வழங்கப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

06:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

06:35:23 on 12 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கட்டண அறிவிப்பால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்களை கவர புதிய அறிவிப்பை ஜியோ அறிவித்துள்ளது. அதன்படி, ஜியோவில் ரீசார்ச் செய்யும் வாடிக்கையாளர்கள் முதன்முறை 30 நிமிடம் இலவசமாக போன் கால் பேசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் ரீசர்ச் செய்த முதல் 7 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

06:27:02 on 12 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் பிகில் திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

06:25:06 on 12 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாங்குநேரியில் பனங்காட்டு மக்கள் படை வேட்பாளர் ஹரிநாடார் காங்கிரஸுக்கு விழக்கூடிய வாக்குகளை கணிசமாக பிரித்துவிடுவார் என்பது அதிமுகவின் நம்பிக்கை. இதோடு சேர்த்து தேவேந்திர குல வேளாளர் இன லோக்கல் பிரமுகர்களை சரிக்கட்டி வாக்குகளை பர்ச்சேஸ் செய்துவிடலாம் என்றும் அதிமுகவுக்கு திட்டமிருக்கிறது.

05:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்நிலையில் தனது சமூகவலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை தொடர்ந்து தக்கவைத்து கொண்டிருக்கிறார். தற்போது அதில் இருந்து ஒருபடி மேலே போய், கவர்ச்சியான வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

05:27:01 on 12 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

மோடி - ஜின்பிங் ஆலோசனையின் போது, காஷ்மீர் விவகாரம் குறித்து எந்த பேச்சும் நடத்தப்படவில்லை என்றும், எந்த குறிப்பிட்ட பயங்கரவாத அமைப்பு குறித்தும் பேசப்படவில்லை என்றும் மத்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார். பொதுவான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தே ஆலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

04:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினமலர்

உணவு மற்றும் பாதுகாப்பு துறை உதவி கமிஷனராக இருக்கும் சித்தார்த் உணவு கலப்படத்தை வேரோடு அழிப்பதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். இதனால் பல்வேறு தொழிலதிபர்கள் முதல் அரசியல் பெரும்புள்ளிகள் வரை பகையை சம்பாதிக்கிறார்.

04:27:02 on 12 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக குடும்பத்தினர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் நம்ம வீட்டு பிள்ளை தமிழகத்தில் மட்டுமே ரூ 56 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

03:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைப் பகுதியில் 9ஆம் வகுப்பு படித்துவரும் 16 வயது பள்ளி மாணவிக்கு ஆலம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி என்பவரின் மகன் விஷ்வா (21) என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நட்பை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட விஷ்வா, மாணவியடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.

03:27:01 on 12 Oct

மேலும் வாசிக்க விகடன்

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அங்கு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, உள்ளூர் பத்திரிக்கைகளில் காஷ்மீர் மாநில அரசு முழு பக்க விளம்பரத்தை வெளியிட்டது.

02:55:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூா் உட்பட பல்வேறு இடங்களுக்கு 8 சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

02:27:01 on 12 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

முறைசாரா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சீன அதிபர் ஜி ஜின் பிங் தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார்.

01:57:49 on 12 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேடு அருகே உள்ள மறவப்பட்டியைச் சேர்ந்தவர் சரவணகுமார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சரவணகுமாரை, அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர் ஒருவர், “நீயெல்லாம் என்னை எதிர்த்துப் பேசுவியா” என்று சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி சண்டையிட்டுள்ளார்.

01:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் சென்னையைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவரை கைது செய்து தேனிக்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார், அங்கு அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவருடன் அவரது தாயையும் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

01:27:01 on 12 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

11வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் உலன் உடே நகரில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை புசெனாஸை எதிர்கொண்டார் மேரி கோம். பரபரப்பான ஆட்டத்தில் 4-1 என்ற கணக்கில், மேரி கோம் போராடி தோல்வி அடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

12:57:02 on 12 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங் தனித்தனியாக சந்தித்து பேசியதை தொடர்ந்து, இருவர் தலைமையில் இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் மோடி பேசும் போது, மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன் என தமிழில் பேச்சை துவக்கினார்.

12:32:32 on 12 Oct

மேலும் வாசிக்க தினமலர்

வடக்கு பிராந்திய ராணுவ தளபதி ரன்பிர் சிங் நேற்று ஜம்முவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், இந்தியாவுக்குள் நுழைவதற்காக, பாகிஸ்தான் எல்லையில் அதாவது ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இயங்கி வரும் பயங்கரவாத முகாம்களில் சுமார் 500 பயங்கரவாதிகள் தகுந்த வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர் என்றார்.

12:25:01 on 12 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவோ பகுதியில் பாஜக முன்னாள் எம்.எல்.ஏவால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் காரில் விபத்துக்குள்ளானது தற்செயல்தான் என்றும், அது திட்டமிட்ட கொலை முயற்சி அல்ல என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.

11:57:02 on 12 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சர்வதேச சந்திப்பு தமிழகத்தில் நடந்தாலும், எங்களுக்கு 'விஜய்ண்ணா'தான் முக்கியமென்று ட்வீட்டுகளை அள்ளி தெளித்துக் கொண்டிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். ட்விட்டர் இந்தியா டிரெண்டிங்கில் 20.3 ஆயிரம் ட்வீட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளது #BigilTrailerday எனும் ஹாஷ்டேக்.

11:27:02 on 12 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகத்தைச் சேர்ந்த மதுசூதன் ரவீந்திரன், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் உரையை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு மொழிபெயர்ப்பு செய்த நடவடிக்கை அனைவரது கவனத்தை ஈர்த்தது. மேலும், தமிழர் என்பதால் தமிழக பாரம்பரியத்தை எடுத்துரைப்பது எளிதாகவும் அமைந்தது.

10:57:02 on 12 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பிரதமர் மோடி இன்று காலை கடற்கரையோரம் நடை பயணம் மற்றும் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, கடற்கரையில் நிறைய குப்பைகள் இருந்ததால், அவர் அதைத் தனது கைகளால் அகற்றி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். பிரதமர் மோடி இந்தப் பணியை சுமார் 30 நிமிடங்கள் மேற்கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

10:25:02 on 12 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மாமல்லபுரத்திற்கு பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் சென்றார். ஆனால் சீன அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் சாலைப் பயணம்தான் வேண்டும் என்று திட்டமிட்டுள்ளனர். இதற்குக் காரணம் ஹெலிகாப்டரைவிட அதிபர் பயன்படுத்தும் அந்த காரைதான் சீன பாதுகாப்பு அதிகாரிகள் நம்பியிருக்கிறார்கள்.

09:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னை வந்துள்ள சீன அதிபர் ஸீ ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும், இன்று மாமல்லபுரத்தில், மூன்று மணி நேரம், பேச்சு நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகள் தரப்பிலும், தலா எட்டு பேர் பங்கேற்கின்றனர். பிற்பகல் 2:00 மணி வரை இந்த பேச்சு நீடிக்க வாய்ப்புள்ளது.

09:27:02 on 12 Oct

மேலும் வாசிக்க தினமலர்

பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டுள்ளது. கடந்த 8ஆம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 4 நாட்களுக்கு பின் விலக்கிக் கொள்ளப்பட்டது.

08:57:01 on 12 Oct

மேலும் வாசிக்க தினகரன்

நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் FHD+ வாட்டர் டிராப் பியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

07:55:01 on 12 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் கடந்த 3 முதல் 4 மாதங்களில் சுமார் 120 விமானிகள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுபவம் வாய்ந்த விமானிகள் ராஜினாமா செய்வது வருத்தமளிப்பதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

06:55:01 on 12 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

போர்ப்ஸின் பணக்கார இந்தியர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தலைவர் முகேஷ் அம்பானி 2019ஆம் ஆண்டிற்கான முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். கௌதம் அதானி இந்த ஆண்டு எட்டு இடங்களை தாண்டி 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

05:55:01 on 12 Oct

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

5X optical zoom மற்றும் 50X digital zoom போன்றவற்றை வழங்கும் புதிய ஸ்மார்ட்போனை ஜியோமி கொண்டுள்ளது. இது Huawei P30 Pro மற்றும் Oppo Reno 2-க்கு கடுமையான போட்டியாளராக வருகிறது. புதிய MIUI கேமரா செயலியின் மூலம் சமீபத்திய வெளிப்பாடு கண்டறியப்பட்டுள்ளது. MIUI 11 பீட்டா உருவாக்கத்தின் ஒரு பகுதி என்று செயலி கூறுகிறது.

04:55:02 on 12 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இந்தியாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் விநாடிக்கு 9.15 மெகாபைட்டுகளாக இருந்த பதிவிறக்கத்திற்கான இணைய வேகம், நடப்பாண்டு ஆகஸ்டில் விநாடிக்கு 10.65 மெகாபைட்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால் இந்தியாவின் இணைய வேகமானது, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 13 ஆசிய நாடுகளைக் காட்டிலும் குறைவு ஆகும்.

03:55:01 on 12 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

இளம் ரசிகர்களை சமீப காலத்தில் அதிக கவர்ந்த நடிகைகளில் ரஷ்மிகாவும் ஒருவர். அவர் தற்போது கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்போது அணிந்துவந்த உடையை பலரும் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

02:55:01 on 12 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

ரிபோஃப்ளேவின், நியாசின், சயானோகோபாலமின் போன்ற வைட்டமின்கள் நிறைந்த சில உணவுகளை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளுங்கள். திரவ உணவுகளை அதிகம் உட்கொண்டால், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறிவிடும்.

01:55:01 on 12 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோட்டார் வாகன விற்பனை நடப்பு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாத கால கட்டத்தில் மட்டும் சரிவை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் பயணிகள் வாகன விற்பனையானது 25%, வணிக வாகன விற்பனை 20% குறைந்துள்ளது.

12:55:01 on 12 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கியமாக பேசப்பட்ட நடன நடிகை சில்க் ஸ்மிதா, 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி தன்னுடைய 35வது வயதில் தற்கொலை செய்துகொண்டு மறைந்தார். தற்போது இணையதளத்தில் வலம் வரும் வீடியோ ஒன்றில் இருக்கும் பெண்ணை பலரும் பார்ப்பதற்கு சில்க் போலவே இருப்பதாகக் கூறி சிலாகித்து வருகின்றனர்.

11:55:01 on 11 Oct

மேலும் வாசிக்க Behind Woods

இடைச் சுற்றளவு ஆண்களுக்கு 90 செ.மீ, பெண்களுக்கு 80 செ.மீ. இருக்க வேண்டும் இது தான் சரியான அளவாகும். உடல் பருமனால் முழங்கால் மூட்டுகளில் வலியும், வீக்கமும் தோன்றும். ரத்த நாளங்களை சுருங்கச் செய்யும். இருதய நோய்களை உண்டாக்கும். ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும்.

10:55:01 on 11 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

சவுதி அரேபியாவின் கடல் பகுதியான செங்கடலில் ஈரானுக்கு சொந்தமான எண்ணெய் கப்பல் மீது இரண்டு ராக்கெட்கள் ஏவப்பட்ட தாக்குதலில் அக்கப்பல் தீ பிடித்து எரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெத்தா நகரில் இருந்து சுமார் 96கிமீ தொலைவில் இந்த கப்பல் இருந்துள்ளது.

09:55:01 on 11 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்தியாவில் விற்பனையாகி வரும் நோக்கியா 4.2 மற்றும் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த இரு ஸ்மார்ட்போன்கள் மீது தற்காலிக விலை குறைப்பாக பல முறை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

09:00:15 on 11 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சிறுத்தை சிவா இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினிகாந்த் தனது 168படத்தில் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவுள்ளது. எந்திரன், பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தில் ரஜினியுடன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மூன்றாவது முறையாக இணைவது குறிப்பிடத்தக்கது.

08:27:01 on 11 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சிரியாவில் உள்ள குர்திஷ் படைகளை அழிப்பதற்காக துருக்கி அரசு மீண்டும் சிரியா மீது போர் நடத்தி வருவதால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவி வருகிறது. துருக்கியின் தாக்குதலுக்குப் பயந்து சிரியாவில் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமான குர்திஷ்கள் தங்கள் இருப்பிடங்களைக் காலி செய்துவிட்டு வேகவேகமாக நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

07:57:01 on 11 Oct

மேலும் வாசிக்க விகடன்

மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கிற்கு, நாச்சியார்கோயில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை நினைவு பரிசுகளாக பிரதமர் மோடி வழங்கினார். தமிழ்நாடு கைவினைப்பொருட்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட பரிசுகளை மோடி வழங்கினார்.

07:37:05 on 11 Oct

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் மனீஷ் பாண்டே, நடிகர் அஷ்ரித்தா ஷெட்டியை திருமணம் செய்யவுள்ளார். இவர்களின் காதல் திருமணம் வரும் டிச.2ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. நடிகை அஷ்ரித்தா ஷெட்டி, 2013ஆம் ஆண்டு வெளியான உதயம் என்.எச்.4 படத்தில் நடிகர் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்தவர்.

07:27:01 on 11 Oct

மேலும் வாசிக்க ETV Bharat

கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் பார்வையிட்டு அகழ்வாராய்ச்சி குறித்த விபரங்களை கேட்டறிந்தார். பின்னர் கீழடிக்கு தன் 5 ஏக்கர் நிலத்தை ஆய்வுக்காக கொடுத்த முத்துலெட்சுமி அம்மாளுக்கு வைகோ நன்றி தெரிவித்தார்.

06:57:02 on 11 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கலைநிகழ்ச்சிகளை பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் பார்வையிட்டு வருகின்றனர். கலைநிகழ்ச்சிகள் குறித்து சீன அதிபர் ஜின்பிங்கிற்கு சீன மொழியில் எடுத்துரைக்கப்படுகிறது.

06:55:36 on 11 Oct

மேலும் வாசிக்க தினகரன்

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2ஆம் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன், இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

06:27:01 on 11 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

வெப்பச்சலனம் காரணமாக அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

05:57:02 on 11 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அண்டை நாடான எரிட்ரேயா அதிபருடன் மேற்கொண்ட சமரச நடவடிக்கைகளாலும், எத்தியோப்பியா நாட்டு மக்களின் வாழ்வாதரத்தை வளப்படுத்துவதற்காக ஆற்றிய அரும்பணிக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

05:27:01 on 11 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

மாம்மல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு பகுதியின் சிறப்புகளை சீன அதிபருக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கினார். இதனை தொடர்ந்து இந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை உள்ளிட்ட இடங்களை இரு தலைவர்களும் பார்வையிட உள்ளனர்.

05:24:12 on 11 Oct

மேலும் வாசிக்க தினகரன்

கோவளத்தில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி மாமல்லபுரம் சென்றடைந்தார். பிரதமர் மோடி, தமிழகர்களின் உடையான வேட்டி, சட்டை, தோளில் துண்டுடன் மாமல்லபுரம் வந்துள்ளார். மாமல்லபுரம் அர்ஜுனன் தபசு அருகே சீன அதிபரை வரவேற்க பிரதமர் மோடி உள்ளார்.

05:04:34 on 11 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழ் மொழியில் மட்டும் கிட்டத்தட்ட 33.2 ஆயிரம் #GoBackModi ஹேஷ்டேக் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. இந்தப் பதிவுகள் 2.9 கோடி பேரைச் சென்றடைந்துள்ளது. அதேபோல், #TN_welcomes_XiJinping என்ற ஹேஷ்டேக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 31.5 ஆயிரம் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. இவை 13.24 கோடி பேரைச் சென்றடைந்துள்ளன.

04:57:01 on 11 Oct

மேலும் வாசிக்க விகடன்

சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் செல்லும் வழிநெடுகிலும் பொதுமக்கள் பதாகைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவ, மாணவிகள் இந்தியா மற்றும் சீனா கொடிகளை அசைத்து வழிநெடுகிலும் ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

04:50:18 on 11 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டைச் சதமெடுத்துள்ளார். இரட்டைச் சதம் எடுத்தபோது 7000 டெஸ்ட் ரன்களையும் அவர் கடந்தார். டெஸ்ட் அரங்கில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்களில் கோஹ்லி, நான்காவது இடத்தை ஜெயவர்தனா (இலங்கை), ஹம்மண்டுடன் (இங்கிலாந்து) பகிர்ந்து கொண்டார்.

04:27:01 on 11 Oct

மேலும் வாசிக்க தினமலர்

தமிழக பாஜகவில் தற்போது தலைவர் பதவி காலியாக இருப்பதால், எந்தப் பதவியிலும் இப்போது இல்லாத பொன்.ராதாகிருஷ்ணன், அமைப்புச் செயலாளர் கேசவ வினாயகத்தின் மூலமாக தனக்கு வேண்டப்பட்ட ஆட்களை மட்டுமே பிரதமரை வரவேற்கும் பட்டியலில் சேர்த்திருக்கிறார்.

04:00:14 on 11 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க