View in the JustOut app
X

”காங்கிரஸ் விலகிப்போனால் எங்களுக்கு நஷ்டமில்லை” என்று ஓப்பனாகக் கருத்து தெரிவித்துள்ளார் துரைமுருகன். கிட்டத்தட்ட கூட்டணி விரிசல் இறுதிக்கட்டத்துக்கு வந்துள்ளது. ஆனால், இதற்குப் பின்னால் பி.ஜே.பி இருப்பதாக இப்போது புதிய தகவல்களைக் கசியவிடுகிறார்கள் காங்கிரஸ் கட்சியினர்.

12:27:01 on 18 Jan

மேலும் வாசிக்க விகடன்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சீனாவின் சங் மற்றும் பெங் ஜோடியை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சானியா மிர்சா மற்றும் கிச்செனோக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

11:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரஜினிகாந்த் மீது காவல்நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களுக்கு உடனடியாக சி எஸ் ஆர் நகல் வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற புகார்கள் அளிக்கும் போது வாங்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருந்துவிடும் போலீசார் இந்த முறை உடனடியாக புகாரை பதிவு செய்துகொண்டு சிஎஸ்ஆர் வழங்கி இருக்கிறார்கள்.

11:27:01 on 18 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

‘நாட்டில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையை ஆர்.எஸ்.எஸ். தனது செயல் திட்டத்தில் சேர்த்து உள்ளது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சட்டம் அவசியம். 2 குழந்தைகள் திட்டத்தையே நாங்கள் ஆதரிக்கிறோம்.’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறி உள்ளார்.

10:55:01 on 18 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

உச்சநீதிமன்ற அனுமதியுடன் பரோலில் வெளிவந்து மாயமாகி விட்ட வெடிகுண்டு வழக்கு குற்றவாளி ஜலீஸ் அன்சாரியை மும்பை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். 83 வயதான டாக்டர் ஜலீஸ் அன்சாரி மீது 50க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள் உள்ளன.

10:25:01 on 18 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

எஸ்.ஐ.வில்சன் கொலை செய்யப்பட்ட போது முதலில் கொலை வழக்கு, ஆயுதச் சட்டம், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த கொலையில் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் மீது தற்போது ‘உபா’ சட்டமும் பாய்ந்துள்ளது.

09:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் உள்பட 2 பேர் இறந்தனர். திருச்சியில் மாடு உரிமையாளரும், சேலம் இடைப்பாடியில் வேடிக்கை பார்த்த வாலிபரும் பலியாகினர். இதுதவிர, பார்வையாளர்கள், வீரர்கள் உள்பட 313 பேர் காயம் அடைந்தனர்.

09:54:36 on 18 Jan

மேலும் வாசிக்க தினகரன்

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர் உள்பட 2 பேர் இறந்தனர். திருச்சியில் மாடு உரிமையாளரும், சேலம் இடைப்பாடியில் வேடிக்கை பார்த்த வாலிபரும் பலியாகினர். இதுதவிர, பார்வையாளர்கள், வீரர்கள் உள்பட 313 பேர் காயம் அடைந்தனர்.

09:44:05 on 18 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 824 கன அடியில் இருந்து 882 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், அணையின் நீர் மட்டம் 109.45 அடியாகவும், நீர் இருப்பு 77.631 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து 8000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

09:29:49 on 18 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 300 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

09:26:27 on 18 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாம் ஒருநாள் போட்டி நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்றது. 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வென்று தொடரை 1-1 என்று சமன் செய்திருக்கிறது. 2013ஆம் ஆண்டு முதல் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளில், இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது.

09:19:07 on 18 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.19 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 17 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.50 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

09:14:20 on 18 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள அமலாக்க அதிகாரி / கணக்கு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

08:55:01 on 18 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தர்பூசணியில் தண்ணீர் சத்து மட்டுமே நிறைந்திருக்கிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை அதிகரிப்பதோடு தசைகளை வலிமையாக்குகிறது. இதில் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

07:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஒரு பயனாளர் தனது டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த வசதி முற்றிலும் ரத்து செய்யப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

06:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க தினமணி

தமிழ் படங்கள் வெளிநாடுகளிலும் வெளியாகி பெரியளவில் கலக்கி வருகின்றன. வசூலிலும் இப்படங்கள் செய்யும் சாதனை தொடர்ந்து நீடித்து வருகின்றன. இதில் ரஜினிகாந்த், விஜய் இருவரின் படங்கள் தான் பெரும் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகள் செய்து வருகின்றன.

05:55:02 on 18 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

இசைஞானி இளையராஜாவை கௌவரப்படுத்தி கேரள அரசு அவருக்கு ஹரிவராசனம் விருதை வழங்கியுள்ளது. மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்க்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரள அரசாங்கம் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.

10:55:02 on 17 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

களியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் ஏற்கனவே கைதான அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த 3 பேர் தந்த தகவலின் பேரில் மெகபூப் பாஷாவை காவல்துறையினர் கைது செய்தாகவும் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

09:55:01 on 17 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நடிகர் பிரபாஸ் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்திற்கு ஜான் என பெயரிடப்பட்டுள்ளது. ஹைதராபத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் இன்று படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய அறிவிப்பு தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

08:57:02 on 17 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாஜக கட்சியின் அமைப்புத் தேர்தல் பல்வேறு மாநிலங்களிலும் நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் தேர்தலும் நடைபெறவுள்ளது. டெல்லியில் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஜே.பி நட்டா பாஜக தலைவராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

08:25:02 on 17 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அர்ஜெண்டினாவில் லாரா சன்சோன் என்ற இளம்பெண் ஒருவர் தனது தோழியின் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நாய் அவரது முகத்தில் ஆழமாக கடித்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் உள் தையல், வெளி தையல் என 40 தையல் போடப்பட்டுள்ளது.

07:55:01 on 17 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 739 காளைகளும், 688 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். சிறந்த காளைக்கான முதல் பரிசை மதுரை குலமங்கலம் மார்நாடு காளை தட்டிச் சென்றது. 12 மதிப்பெண்கள் பெற்ற குலமங்கலம் காளை களத்தில் 53 வினாடிகள் நின்று விளையாடியது.

07:25:01 on 17 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

என்.ஆர்.சி-க்கு முன்னோட்டமாகப் பார்க்கப்படும் என்.பி.ஆர் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தங்கள் மாநிலத்தில் நிறுத்தி வைத்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

07:04:20 on 17 Jan

மேலும் வாசிக்க விகடன்

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், 16 காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் குமாருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 14 காளைகளை அடக்கிய அழகர்கோயிலைச் சேர்ந்த கார்த்திக்கு 2ஆம் பரிசாக பைக் வழங்கப்பட்டது.

06:35:48 on 17 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

லாவா நிறுவனம் இந்தியாவில் இசட்71 எனும் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 18:9 ரக டிஸ்ப்ளே, குவாட்கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர், 2 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.

05:57:01 on 17 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி திகார் சிறை நிர்வாகம் கோரிக்கையை ஏற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் புதிய தேதியை அறிவித்துள்ளது.

05:39:50 on 17 Jan

மேலும் வாசிக்க தினகரன்

நடிகர் விஷ்ணு விஷால் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது சினிமாவில் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், அவை என்ன பிரச்சினைகள் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. ஆனால், அத்தனைப் பிரச்சினைகளையும் ரசிகர்களின் முன்பு வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

05:27:02 on 17 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்நிலையில் இந்த கருணை மனுவை ஜனாதிபதி இன்று நிராகரித்தார். இதனால் வரும் 22ஆம் தேதி நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேறும் என்பது உறுதியாகி உள்ளது.

04:55:01 on 17 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

தலைவி படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். இந்நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளான இன்று, அரவிந்த் சாமியின் கதாபாத்திரத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடித்த ஒரு பாடலின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

04:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்து மாடுபிடி வீரர் பரிசு பெற்ற பிரபாகரன் உள்ளிட்ட மாடுபிடி வீரர்கள் 28 பேர் காயம் அடைந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

03:57:02 on 17 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

காஷ்மீரின் மூத்த காவல்துறை அதிகாரி தேவிந்தர் சிங், பணம் மீது கொண்டிருந்த பேராசை காரணமாக போதை மருந்து கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கார் திருட்டு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும், அதைத்தொடர்ந்து பெரும் பணத்திற்காக தீவிரவாதிகளுக்கு உதவும் வேலையிலும் அவர் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

03:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்ற வருடம் தீபாவளி அன்று வெளிவந்த படங்கள் தான் பிகில் மற்றும் கைதி. இப்படங்களில் விஜய்யின் பிகில் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக கைதி தான் வெற்றியடைந்தது. இதனை தொடர்ந்து வரும் summer அன்று விஜய்யின் மாஸ்டர் படமும் கார்த்தியின் சுல்தான் படமும் ஒன்றாக வெளிவரவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

02:57:02 on 17 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

மக்கள் தொகை பதிவேட்டு படிவத்தில் தவறான தகவல்களை நிரப்பினால் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கணக்கெடுப்பின் போது எந்த ஆவணங்களையும் காட்ட தேவையில்லை என்றும் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எண்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

02:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், கோடிக்கணக்கில் வங்கியின் அதிகாரியே மோசடி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

01:57:01 on 17 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் டிஜிபி.,யை கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர், அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

01:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க தினமலர்

இராக்கில் உள்ள அல் அசாத் விமான தளத்தில் ஈரான் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இதில் அமெரிக்க வீரர்கள் பலியானதாக ஈரான் கூறியது. ஆனால் இத்தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என்று அமெரிக்கா கூறி வந்த நிலையில் தற்போது ராணுவ வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக, அந்நாடு ஒப்புக் கொண்டுள்ளது.

12:57:01 on 17 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ஜிசாட்-30 செயற்கைக்கோளை இன்று அதிகாலை 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தென்அமெரிக்காவில் உள்ள பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியான் ராக்கெட் 5 மூலம், ஜிசாட்-30 விண்ணில் செலுத்தப்பட்டது.

12:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரகசியமாக சேவற்கட்டு நடப்பதாகவும், சேவல்கள் காலில் கத்தி கட்டுவது உள்ளிட்டவற்றை அவர்கள் செய்வதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளில் மேற்பார்வையிட்ட அரவக்குறிச்சி போலீசார் வெவ்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 10 பேரை கைது செய்துள்ளனர்.

11:57:02 on 17 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

விழுப்புரம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தில், 10 அடி ஆழம் கொண்ட குறுகலான அஸ்திவாரக் குழிக்குள் விழுந்த 4 வயது சிறுமியை, இளைஞர்கள் சாதுர்யமாக செயல்பட்டு பத்திரமாக மீட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

11:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. டெல்லி ஆளுநர் நிராகரித்த நிலையில், கருணை மனு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றவாளிகள் 4 பேரையும் வரும் 22ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

11:02:55 on 17 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாகிஸ்தானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் முக்கிய நகர்வு ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாட்டை நடத்தும்போது அதன் அனைத்து உறுப்பு நாடுகளின் அரசாங்கத் தலைவர்களையும் இந்தியா அழைக்கும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

10:57:01 on 17 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் இன்று காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரை பகுதியில் 5 ஆயிரம் போலீசாரும், பெசன்ட்நகர், திருவான்மியூர், வண்டலூர், கிண்டி சிறுவர் பூங்கா உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களில் 5 ஆயிரம் போலீசார் என மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட இருக்கிறார்கள்.

10:27:01 on 17 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. அந்த வகையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், 2ஆவது போட்டி, குஜராத்தில் உள்ள சவுராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

09:57:01 on 17 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு உதவிய காஷ்மீர் துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு வழங்கப்பட்ட உயரிய போலீஸ் அதிகாரிக்கான பதக்கம் பறிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

09:33:08 on 17 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல்வர், துணை முதல்வர் சார்பில் பரிசாக கார் வழங்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனம், தங்கம், வெள்ளிக் காசுகள், சைக்கிள், பீரோ உள்ளிட்டவையும் பரிசாக வழங்கப்படுகிறது.

09:15:44 on 17 Jan

மேலும் வாசிக்க தினகரன்

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் விஜயபாஸ்கரின் 3 காளைகளையும் மாடுபிடி வீரர்களால் பிடிக்கமுடியவில்லை. சின்ன கொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் காளைகளை வீரர்கள் யாராலும் அடக்க முடியவில்லை.

09:12:59 on 17 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும்.

08:55:01 on 17 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இந்தியாவில் நிகழும் குற்றங்களை ஆண்டுதோறும் வெளியிடும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் 2018ஆம் ஆண்டு, நாடு முழுவதும் நிகழ்ந்த குற்றங்கள் பற்றிய தரவுகளை மாநில வாரியாக வெளியிட்டிருக்கிறது. இந்திய அளவில் தமிழகம் குற்றச் செயல்கள் எண்ணிக்கையில் ஏழாவது இடத்தில் உள்ளது.

07:55:02 on 17 Jan

மேலும் வாசிக்க விகடன்

மனிதனைப் போன்று மற்ற உயிரினங்களிலும் புத்திக்கூர்மை உள்ள உயிர்கள் உள்ளன என்பது நாம் அறிந்த உண்மை. இந்நிலையில், கடல்வாழ் உயிரினமான கணவாய் மீன்களுக்கு மனிதர்களை போன்று முப்பரிமாண படங்களை பார்த்தறியும் பண்பு உள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

06:55:02 on 17 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

இந்தியா முழுவதிலுமிருந்தும் எதிர்பார்க்கப்படும் இந்தியன் 2 திரைப்படம் குறித்து நடிகை காஜல் அகர்வால், “என்னுடைய வாழ்நாளில் இப்படியொரு படத்தில் நடித்ததில்லை. என் லெவலே வேறு தளத்துக்கு செல்லும் அளவுக்கு நடித்திருக்கிறேன். வேறு எதுவும் இப்போதைக்கு சொல்லமுடியாது. சொன்னால், என்னைக் கொன்றுவிடுவார்கள்” என்று கூறியுள்ளார்.

05:55:01 on 17 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நடிகர் விஜய்சேதுபதி இன்று தனது 42-வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் நேற்று வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் செகண்ட் லுக்கில் அவர் இடம்பெறுவார் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு நனவாகவில்லை. மாறாக அவருக்கு வாழ்த்து மட்டுமே தெரிவித்துள்ளது மாஸ்டர் படக்குழு.

10:57:02 on 16 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சின்னத் திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அவரது கணவரான சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

09:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அசுரன் படத்தின் 100வது நாள் கொண்டாட்ட விழா நடந்த நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக தனுஷ் நடித்த பட்டாஸ் படம் வெளியாகி இருந்தது. படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் வந்திருக்கிறது. முதல் நாளில் மட்டும் படம் சென்னையில் ரூ.51 லட்சம் வசூலித்துள்ளது.

08:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

மகாராஷ்டிரத்திவில் 350 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்துள்ளார். தாதர் பகுதியிலுள்ள இந்து மில்ஸின் 12 ஏக்கர் நிலத்தில் இச்சிலை அமைக்கப்படவுள்ளது.

08:27:01 on 16 Jan

மேலும் வாசிக்க தினமணி

தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும் ஃபெரல்வகை ஒட்டகங்கள், கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை அதிகம் குடிப்பதாகக் கூறி சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், 5 நாட்களில் சுமார் 5,000 ஒட்டகங்களை சுட்டுக்கொன்றுள்ளனர்.

07:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் 2019ஆம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரர் என ரோகித் சர்மாவும், சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி கேப்டனாக விராத் கோஹ்லியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

07:27:01 on 16 Jan

மேலும் வாசிக்க தினமலர்

கிங்க்கோ மரங்கள் எப்படி 1000 வருடங்களுக்கும் மேலாக உயிரோடு உள்ளன என்னும் ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த மரங்கள் நோய்கள் மற்றும் வறட்சியிலிருந்து தங்களைக் காத்து கொள்ள ஒரு விதமான ரசாயனங்களை உற்பத்தி செய்து கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

06:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் நடைமுறைக்கு வந்தால், பிரதமர் நரேந்திர மோடி தனது பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழை காட்டவேண்டும். ஒரு வேளை பிரதமர் மோடி தனது பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழை காட்டி விட்டால், நாங்கள் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு தேவையான ஆவணங்களை கொடுப்போம்” என திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

06:27:02 on 16 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அடுத்த அம்மணாங்கோயில் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் குழந்தைகள் ஜெயஸ்ரீ, தனுஸ்ரீ ஆகியோர் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தனர். மருத்துவ பரிசோதனையில் குழந்தைகள் இருவரும் ஐஸ்கிரீம் மற்றும் கெட்டு போன உணவுப் பண்டங்களை உண்டதால் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

05:57:02 on 16 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ரெயில் பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கிற வகையில், 2022-ம் ஆண்டு முதல் ரெயில்களில் சினிமா ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் வை-பை என்னும் கம்பியில்லா இணையதள வசதி கொண்ட ரெயில் நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

05:27:01 on 16 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியக் கடலோரக் காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு https://joinindiancoastguard.gov.in/ என்ற லிங்க்கில் தெரிந்து கொள்ளலாம்.

04:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்திய வீரர் ரிஷப் பண்டை பரிசோதித்த மருத்துவர்கள், பண்ட்டின் மூளை அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறினார். மேலும், அவருக்கு அதிக ஓய்வு தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் ராஜ்கோட்டில் நடைபெற இருக்கும் 2வது ஒருநாள் போட்டியில் பண்ட் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

04:27:01 on 16 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கரும்பு சாப்பிடும்போது அதிலுள்ள சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில் தண்ணீர் குடித்தால் அதிகமான சூட்டைக் கிளப்பி வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்பளங்கள் தோன்றும். அதோடு நாக்கும் புண்ணாகும். கரும்பு சாப்பிட்டதும் சிறிது நேரம் கழித்து விட்டு தண்ணீர் குடித்தால் இந்த பாதிப்பு வராது.

03:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

இளம் வயதில் உள்ளவர்களே கரும்பினை தூக்கிட்டு வர சிரமப்படும் நிலையில் முதியவர் ஒருவர் அசால்ட்டாக தலையில் கரும்பினை சுமந்தவாறு வேகமாக சைக்கிள் ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

03:27:02 on 16 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

திண்டுக்கல் வழியாக செந்துறைக்கு செல்லும் தனியார் பேருந்தை ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டிச்சென்றார். அப்போது அவர் தனது செல்போனில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் பார்த்தப்படி பேருந்தை இயக்கினார். பொதுமக்களின் உயிரோடு விளையாடுவதை கண்டு அதிர்ச்சியடைந்த பேருந்து பயணிகள், ஓட்டுநர் ராமகிருஷ்ணனை கண்டித்துள்ளனர்.

03:25:02 on 16 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரு நாள்களும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது இரண்டாவது மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

02:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 277 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

02:27:02 on 16 Jan

மேலும் வாசிக்க தினமணி

இந்திய ரூபாய் நோட்டுகளில் இந்து கடவுளான லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் பண மதிப்பு உயரும் என்றும் இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

01:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு காவி உடையணிந்த வள்ளுவர் படத்தை பகிர்ந்துள்ளார். பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் காவி உடையணிந்த வள்ளுவர் படம் சில மாதங்களுக்கு முன் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

01:27:01 on 16 Jan

மேலும் வாசிக்க தினகரன்

எஸ்.ஜே.சூர்யாவுடன் ப்ரியா பவானி ஷங்கர் பொம்மை படத்திலும் ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியாவிடம் காதலை சொன்னதாக ஒரு தகவல் பரவியது. அதோடு, அந்த காதலை ப்ரியா மறுத்ததாகவும் வதந்திகள் பரவ, எஸ்.ஜே.சூர்யா செம்ம கோபமாகிவிட்டார்.

12:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஜாக்குலின் வில்லியம்ஸ் சர்வதேச ஆண்கள் கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் மூன்றாம் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர், "சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் போர்ட்டிற்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.” என கூறியுள்ளார்.

12:27:01 on 16 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவரும், கொலைக்கான காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.

11:57:02 on 16 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

20-30 வயது வரம்பில் உள்ளவர்கள் மருத்துவ அவசரங்களுக்கும், திருமணத்திற்கும்தான் அதிகமாகக் கடன் பெறுகின்றனர். நமது திருப்பிச் செலுத்தும் எல்லையைத் தாண்டி கடன் சென்றுவிட்டால், அதைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிவிடும். அதனால், கடன் பெறுவதை கூடுமானவரைத் தவிருங்கள்.

11:27:01 on 16 Jan

மேலும் வாசிக்க விகடன்

மேற்கு ஆசிய நாடான ஈரானின் ராணுவ முக்கிய தளபதி மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேரணி நடத்தினார்.

10:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க தினமலர்

தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்காக பொதுமக்களிடம் இருந்து எந்த ஒரு ஆவணமோ அல்லது ரேகையைப் பதிவிடும் பயோமெட்ரிக் பதிவுகளோ கேட்கப்பட மாட்டாது என மத்திய அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

10:27:01 on 16 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஈரோட்டில் ஈரோடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 18ஆம் தேதி 2வது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடக்கிறது. பெருந்துறை ரோட்டில் உள்ள ஏ.ஈ.டி.தனியார் பள்ளியில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் சுமார் 600 காளைகள் வரை போட்டியில் கலந்து கொள்ள உள்ளது.

09:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் தை முதல் நாளான நேற்று, இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. தைத் திங்கள் இரண்டாம் நாளான இன்று, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் மாட்டுப் பொங்கல் திருநாள், தமிழகம் முழவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

09:27:01 on 16 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.

09:19:03 on 16 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதற்கு அடுத்த நாள் பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார்.

09:07:59 on 16 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாலமேடு ஜல்லிக்கட்டில் முறையான டோக்கன் பெறாமல் 100-க்கும் மேற்பட்ட காளைகளை பங்கேற்க வைக்க முயற்சி செய்தனர். அத்துமீறி காளைகளுடன் உள்ளே நுழைய முயன்றவர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

08:54:54 on 16 Jan

மேலும் வாசிக்க தினகரன்

பாகற்காயினை தவறாமல் உட்கொள்வது தேவையற்ற அனைத்து நச்சுக்களையும் அகற்றும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இவை பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. பாகற்காய் சாறு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இரத்த சர்க்கரை அளவைத் தூண்டுவதற்கு இது பெரும்பாலும் உட்கொள்ளப்படுகிறது.

07:57:01 on 16 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

தற்போதே மாஸ்டர் படத்தின் விநியோக உரிமையை விற்று முடித்துவிட்டனர். ப்ரீ ரிலீஸ் பிசினெஸ் மட்டும் தற்போது 200 கோடியை தொடவிருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு உரிமை 68 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

06:55:01 on 16 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பல இடங்களில் இந்த படம் ஆல் டைம் ரெக்கார்டு செய்தது. தற்போது மலேசியாவில் ஓப்பனிங்கில் அதிகம் வசூலித்துள்ள படங்களில் தற்போது தர்பார் 6ஆம் இடத்தை பிடித்துள்ளது.

05:55:01 on 16 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

டெல்லி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மரணம் அடைந்த வழக்கின் குற்றவாளிகளை ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் கருணை மனு நிலுவையில் இருப்பதால் வரும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

10:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

இந்தியாவிலேயே முதன்முறையாக என்ஐஏ என்பது கூட்டாட்சி அரசியல் அமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 131ஆவது பிரிவின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

09:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

விஜய்யின் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இன்று (புதன்கிழமை) பொங்கல் விருந்தாக மாஸ்டர் படத்தின் 2 லுக் வெளிவரும் என்று தெரிவித்திருந்த இந்நிலையில் செகென்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழு.

08:57:02 on 15 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாகி 4 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் ஜனவரி 14ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் மற்றும் அதிகாரிகளுடன் தொகுதி எம்.எல்.ஏவும், தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவுள்ள நிலோபர்கபில் வாணியம்பாடி நகரில் உள்ள பிரச்சனைகள் குறித்து நேரடி ஆய்வு செய்தார்.

07:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

இயக்குநர் கோபி, “தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.” என்றார்.

06:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் படுகாயமடைந்த 10 பேர் மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் 72 பேர் காயமடைந்தனர்.

06:47:48 on 15 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி, வரலாறு காணாத வேலைவாய்ப்பு வீழ்ச்சி குறித்த அறிக்கைகள், ஆய்வுகள் அடுத்தடுத்து வந்தபடி உள்ளன. இந்நிலையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்ட ஆய்வறிக்கையில் நடப்பு 2019-20 நிதியாண்டைக் காட்டிலும் அடுத்த நிதியாண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சமீபத்தில் நடந்த ’அசுரன்’ படத்தின் நூறாவது நாள் விழாவில் பேசிய நடிகர் பவன், தளபதி விஜய் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை கூறியதால் விஜய் மற்றும் தனுஷ் ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நடிகர் பவன் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது

04:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, 8 அதிசயங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை இடம் பிடித்துள்ளது.

03:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

பொங்கல் திருநாள் தொடர் விடுமுறை காரணமாக சென்னை மாநகரமே வெறிச்சோடிக் கிடக்கிறது. வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக் குறைவாக இருக்கிறது. வாகனப் போக்குவரத்து அறவே இல்லை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே செல்கின்றன.

02:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க தினமணி

சி.ஏ.ஏ.க்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதில், லக்னோவைச் சேர்ந்த ராபின் வர்மாவும் அடங்குவார். அவரிடம் ”நீங்கள் ஒரு இந்து. உங்களுக்கு ஏன் அதிகமாக இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள்?” என போலீசார் கேட்டுள்ளனர்.

01:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க விகடன்

”பொருளாதார வீழ்ச்சி நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தல். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தாலோ, வருவாய் இழப்பு ஏற்பட்டாலோ இளைஞர்களும், மாணவர்களும் வெகுண்டெழும் அபாயம் உள்ளது.” என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்தார்.

12:57:02 on 15 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்ட வாழ்த்து செய்தியில், ”உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறது. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.” என தெரிவித்துள்ளார்.

11:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க தினமலர்

”முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரியலெட்சுமினா அம்மா-கால்நூற்றாண்டாக கால்பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக்காரனே திமுகக்காரன். நான் திமுகக்காரன். பொங்கல் வாழ்த்துகள் என உதயநிதி கூறி உள்ளார்.

10:57:01 on 15 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

“நடுநிலை ஊடகங்கள் உண்மை எதுவோ, நியாயம் எதுவோ அதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பத்திரிகைகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். உண்மையில் பொய் என்ற தண்ணீரைக் கலக்கக் கூடாது. எது பால், எது தண்ணீர் என்று பத்திரிக்கையாளர்தான் சொல்ல வேண்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

10:00:00 on 15 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

“நடுநிலை ஊடகங்கள் உண்மை எதுவோ, நியாயம் எதுவோ அதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பத்திரிகைகள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். உண்மையில் பொய் என்ற தண்ணீரைக் கலக்கக் கூடாது. எது பால், எது தண்ணீர் என்று பத்திரிக்கையாளர்தான் சொல்ல வேண்டும்” என்று நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்தார்.

09:57:02 on 15 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டிகள் மாலை வரை நடைபெற உள்ளது. இன்றைய ஜல்லிக்கட்டுப்போட்டியில் பங்கேற்க 700 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காளைகளை அடக்க 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

09:18:56 on 15 Jan

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க