View in the JustOut app
X

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் சிக்கிய சுரேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

11:30:09 on 17 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

கோஸ்டாரிகா நாட்டின் பாஹியா பல்லேனா என்ற இடத்தில் உள்ள டொமினிகல் கடற்கரையில், 8 அடி நீளம் கொண்ட உப்பு நீர் முதலை ஒன்று கரையில் விரித்து வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிக் கொண்டது. இதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகளில் சிலர் துணிச்சலுடன் அதன்மீது துணியைப் போட்டு பிடித்தனர்.

10:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

36 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலிக்கு விமான சேவை துவங்கியது. சென்னையில் இருந்து ஏர் இந்தியாவின் அலைன்சர் விமானம், யாழ்ப்பாணம் கிளம்பி சென்றது. இலங்கையில் 1983இல் நடந்த உள்நாட்டு போர் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

10:27:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினமலர்

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் தொடா்ந்து 73வது நாளாக புதன்கிழமையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. பிரதான சந்தைப் பகுதியில் உள்ள கடைகள் மூடியிருந்ததாகவும், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் முற்றிலுமாக இயங்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

09:57:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினமணி

அசுரன் படம் மட்டுமல்ல பாடம் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!” எனத் தெரிவித்துள்ளார்.

09:27:01 on 17 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சவுதி அரேபியாவின் மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியாவின் மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது பேருந்து மோதியது.

08:57:41 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஆபத்துத் தரும் 15 செயலிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘image editor’, ‘background cutout’, ‘autocut photo’ மற்றும் ‘autocut picture’ ஆகியன போட்டோ எடிட்டிங் சார்ந்த பெயர் கொண்ட செயலிகளின் பெயர்களைக் கண்டாலே அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

08:57:01 on 17 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

07:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் இருக்கிறது. இது குழந்தையை பல விதங்களில் பாதுகாக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு உள்ளது. இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும்.

06:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், கவிஞர் அல்லாமா இக்பாலின் 'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' என்னும் புகழ்பெற்ற வரிகளை பாடினர். இதை அறிந்த உள்ளூர் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தலைவர்கள் புகார் அளித்தனர்.

05:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்தியாவில் Tecno Camon 12 Air-ன் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக கிடைக்கிறது. இந்த போன் Bay Blue மற்றும் Stellar Purple நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இது 4,000mAh பேட்டரியில் இயங்குகிறது.

04:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ஓபிஎஸ், அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு 1000 வாங்கினீர்களா? இல்லையா...என்று கேட்டார். அதுக்கு பொதுமக்கள் வாய்திறக்காததால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ், பணம் வாங்கிவிட்டு வாயே திறக்க மாட்டீங்களே என்றார்.

03:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

ஒன் பிளஸ்(OnePlus) நிறுவனம் தனது ஒன் பிளஸ் டிவி கியூ 1(OnePlus TV Q1) மற்றும் ஒன் பிளஸ் டிவி கியூ 1 ஃப்ரோ ( OnePlus TV Q1 Pro) தொலைக்காட்சிகளுக்கான சலுகைகளை அமேசான் இந்தியா வழங்குகிறது. நோ கோஸ்ட் இ.எம்.ஐ(no-cost EMI), எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

02:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருக்கும். அடிக்கடி உணவில் கீரை சேர்த்து கொள்வதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் தடுக்கப்படுகிறது. கீரைகளில் லூடின் என்னும் ஊட்டச்சத்து இருப்பதால் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும்.

01:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரச்சனைகளை சந்தித்து வருபவர் மீரா மிதுன். இப்போது அவர் பீச்சில் நின்றுகொண்டு சேரனைப் பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். அவர் எப்படி தன்னிடம் நடந்துகொண்டார், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் கோழைகள் என நிறைய பேசியுள்ளார்.

12:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

கடன் சுமையால் தவித்து வரும் ஏர் இந்தியா (Air India) நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சுமையாக, எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் வழங்கமாட்டோம் என அறிவித்துள்ளன. இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மட்டும், 2 ஆயிரத்து 700 கோடி ரூபாயை ஏர் இந்தியா நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

11:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க Behind Woods

ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘ராஜீவ் காந்தியின் படுகொலைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பில்லை’ என விளக்கி விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னர் வெளியிட்ட அறிக்கை வைரலாகி வருகிறது.

10:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின், மும்பை - ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில், 17 வயது ஆகும் ஜெய்ஸ்வால் 154 பந்தில் 203 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ‘லிஸ்ட் ஏ’ (50 ஓவர் கிரிக்கெட்) போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

09:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட் போன்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிக்சல் 4 ஸ்மார்ட் போனில் 5.7 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இரு டிஸ்ப்ளேக்களிலும் 90 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

08:57:01 on 16 Oct

மேலும் வாசிக்க தினமலர்

”எடப்பாடிக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த 6 அமைச்சர்கள் தான் இருக்கிறார்கள். சசிகலா கட்சிக்குள் வருவது பற்றி ஓபிஎஸ் பேச ஆரம்பித்ததும் பல அமைச்சர்கள் வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். 6 அமைச்சர்களை தவிர மற்றவர்கள் சசிகலாவின் வரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.” என்கிறது ஓபிஎஸ் தரப்பு.

08:25:01 on 16 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்தினர். இதில் சில பெண்களை போலீசார் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லாவின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

07:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பிகில் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதால் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஒழுக்கம் கருதி இரண்டு கெட்ட வார்த்தைகளையும், சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் வசனத்தில் வரும் 'கோர்ட்', 'டெல்லி' என்ற வார்த்தைகளையும் மியூட் செய்துள்ளதாக சென்சார் போர்டு தெரிவித்துள்ளது.

07:25:02 on 16 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கர்நாடகா மாநிலம் கோலாறு பகுதியில் உள்ள பெண் ஒருவரை பேய் பிடித்து விட்டதாக கூறி அவரது குடும்பத்தினர் அங்குள்ள மாரிகாம்பா அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆக்ரோஷத்துடன் இருந்த பெண்ணை பார்த்த சாமியார் மல்லிகார்ஜூன் என்பவர், அந்த பெண்ணை சரமாரியாக சவுக்கால் விளாசியுள்ளார்.

06:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கீழடியில் 5ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அகழாய்வில் கண்டறியப்பட்டுள்ள தொன்மையான பொருட்கள் வரும் 23ஆம் தேதி முதல் மதுரை உலக தமிழ்ச்சங்க கட்டட வளாகத்தில் வைத்து காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்

06:27:01 on 16 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

விக்கிரவாண்டி அதிமுகவினர் ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் பணத்தை விநியோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். திமுகவைப் போலவே குழு அமைத்து நேற்று இரவே வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு சரிபார்த்து தயாரான அதிமுக குழுவினர் இன்று பணப்பட்டுவாடாவை தொடங்கிவிட்டனர்.

05:57:01 on 16 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்திய தொலைத்தொடர்பு துறையில் பழமையான நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் நீண்ட இழுபறிக்கு பின் தற்போது 4ஜி சேவையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சியோமி, விவோ, நோக்கியா, சோனி போன்ற பல்வேறு நிறுவனங்களின் 30க்கும் மேற்பட்ட போன்களில் இதன் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:27:02 on 16 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, அயோத்தி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்தது.

04:55:20 on 16 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையத்தில் ஆஜராவதற்காக சீமான் இன்று தூத்துக்குடி வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல, அம்மாவும் 40 திருடர்களும் என்பதுபோல தமிழக அமைச்சர்கள் உள்ளனர்.” என்றார்.

04:25:01 on 16 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தெய்வமகள் சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் வானி போஜன். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இந்த சீரியல் மூலம் வந்தது. தற்போது இவர் முதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஓ மை கடவுளே படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வானி போஜன் நடிக்கவுள்ளாராம்.

04:00:08 on 16 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகிலுள்ள ராணி மகாராஜபுரத்தைச் சேர்ந்த காதல் ஜோடிகளை மிரட்டி, ஐந்தாயிரம் ரூபாய் பணம் பெற்றதுடன், 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலர் சசிகுமா உட்பட இருவரை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைதுசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

03:30:12 on 16 Oct

மேலும் வாசிக்க விகடன்

உலக அளவில் 117 நாடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் இந்தியா பசி மற்றும் ஊட்டச்சத்தின்மை நாடுகளின் பட்டியலில் 102வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் அண்டை நாடுகளான பாக்கிஸ்தான் (94) , பங்களாதேஷ் (88) மற்றும் நேபால் (73) முன்னேறிய நிலையில் உள்ளன.

02:59:55 on 16 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின்போது ரஜினி பேசியதை சுட்டிக்காட்டியுள்ள சீமான், ”ஸ்டெர்லைட் போராட்டத்தில் பயங்கரவாதிகள் புகுந்து விட்டது ரஜினிக்கு எப்படி தெரியும்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இது குறித்து ரஜினிக்கு சம்மன் அளிக்க வேண்டுமென நீதிபதியிடம் வலியுறுத்தப் போவதாகவும் கூறியுள்ளார்.

02:27:01 on 16 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

அயோத்தி வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளநிலையில் இந்து அமைப்பினர் தாக்கல் செய்த புத்தகத்தை, இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் ராஜிவ் தவான் கிழித்தெறிந்தார். மேலும் ஆக்ரோஷமான வாதங்களை முன் வைத்தார். இதனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.

01:57:01 on 16 Oct

மேலும் வாசிக்க தினமணி

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சண்டையில் நசீர் சத்ரு தலைமையிலான பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். மேலும் அப்பகுதியில் தொடர் தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

01:27:01 on 16 Oct

மேலும் வாசிக்க தினகரன்

ஐஎன்எஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், ப. சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது.

12:57:01 on 16 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஈரோடு மாவட்டம் முழுக்க கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சத்தியமங்கலம் மலைப் பகுதிகளில் கனமழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்கிறது. வனப்பகுதியின் தொடர்ச்சியாக உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் மிக கனமழை பெய்தது. இதன் காரணமாக மலைப்பாதையில் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

12:30:17 on 16 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

நாமக்கல் மேட்டுத்தெருவைச் சேர்ந்த விமல்ராஜ் எனபவர், அனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அனிதாவின் அண்ணனுக்கு வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் கணவர், அனிதாவையும் அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.

12:00:20 on 16 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ராமநாதபுரம் அடுத்துள்ள வாலாந்தரவை ரயில் நிலையம் அருகே, பாழடைந்த ரயில் நிலைய ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில், காவல்துறையின் தனிப்பிரிவு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பாழடைந்த வீடு ஒன்றில் வெடிகுண்டு இருப்பது தெரியவந்தது.

11:30:17 on 16 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்கள் ஒதுக்கக்கூடிய உபரி தொகையைக் கணக்கில்கொண்டு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத்தொகை என மொத்தம் 20% வரை போனஸ் மற்றும் கருணைத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

11:00:15 on 16 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப், 2019-20ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதமாக குறையும் என்று கணித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாக இருக்கும் என்று ஐ.எம்.எப் கணித்த நிலையில், தற்போது 1.2 சதவீதம் குறைத்துள்ளது.

10:27:01 on 16 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 2ஆம்தேதி முதல் 16ஆம்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

09:57:01 on 16 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க உள்ள நிலையில், தமழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கோவை மாவட்டத்தில் இன்றும், பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

09:27:01 on 16 Oct

மேலும் வாசிக்க தினமலர்

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற "Inter University Accelerator Centre" -இல் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

08:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க தினமணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். தொடர் கனமழை பெய்துவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

08:51:57 on 16 Oct

மேலும் வாசிக்க தினகரன்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களில், சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர்களின் டெபாசிட் மற்றும் சுவிட்சர்லாந்தில் சம்பாதித்த பணத்தை டெபாசிட் செய்வதற்கு மட்டுமே அந்நாட்டில் வரி செலுத்த வேண்டும். வெளிநாட்டிலிருந்து டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு வரி செலுத்தத் தேவையில்லை.

08:00:16 on 16 Oct

மேலும் வாசிக்க விகடன்

அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும். மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும்.

06:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் எஸ்5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.6 இன்ச் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

05:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

சாதாரணமா கம்பியூட்டர், லாப்டாப்ல எல்லாம் விளையாடப்பட்டு வந்த பல கேம்கள் ஸ்மார்ட்ஃபோன்களிலயே விளையாடக் கிடைக்கிற மாதிரி பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கு. அதன் காரணமா அந்த கேம்களை விளையாடுறவங்களோட எண்ணிக்கையும் இப்போ ரொம்பவே அதிகமாகியிருக்கு.

04:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேற்கு வங்கத்தில், ஆர்.எஸ்.எஸ் ஊழியரான பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், பிரகாஷ், அவரது மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

03:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க விகடன்

உத்தரபிரதேச மாநிலம் சிதாபுர் மாவட்டத்தின் விச்பாரியா கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில், சமீபத்தில் மாணவர்களுக்கு மத்திய உணவு வழங்கையில் சாதத்துடன் காய்கறிகள் எதுவும் கொடுக்காமல், வெறும் மஞ்சள் கலந்த நீரை அதனுடன் கலந்து கொடுத்ததாக வீடியோ ஒன்றை செய்தியாளர் ஒருவர் வெளியிட்டார்.

02:55:02 on 16 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

Oppo A11 சில வாரங்களுக்கு முன்பு சீனா டெலிகாமில் காணப்பட்ட பின்னர் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பைப் பார்க்கும்போது, ​​இந்த தொலைபேசி கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Oppo A5 2020-யின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தெரிகிறது.

01:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தை தொடர்ந்து ரியோ நடிக்கும் புதிய படத்தில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். இந்த படத்தை பாணா காத்தாடி, செம போத ஆகாத ஆகிய திரைப்படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்கவுள்ளார்.

12:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

பீகார் மாநிலம் பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (PMCH) டெங்கு நோயாளிகளைப் பார்வையிடும்போது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மீது ஒருவர் மை வீசினார். இதை அடுத்து உடனடியாக காரில் ஏறிய அமைச்சர் அஸ்வினி சவுபே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

11:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

வடகிழக்குப் பருவ மழை தொடங்குவதன் முன்னோட்டமாக, வரும் 48 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், வரும் 17, 18ஆம் தேதிகளில் மன்னார்வளைகுடா, குமரி, லட்சத்தீவுகள் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10:59:55 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தர்மபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுடன் 19 பேர் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

10:00:05 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை இந்தியாவைச் சேர்ந்த மத போதகர் ஜாகிர் நாயக்கை மையப்படுத்தி உருவான சர்ச்சை குறித்தே மலேசியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சர்ச்சையைப் பின்னுக்குத் தள்ளும் வகையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

09:00:08 on 15 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பிகில் திரைப்படத்துக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடனேயே அட்லீயின் அடுத்த படம் இருக்கும் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, பாலிவுட்டின் முன்னணி சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான நடிகர் ஷாருக்கானை வைத்து அட்லீ படம் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

08:27:01 on 15 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

இயக்குநரும் நடிகருமான சேரன் நடித்துள்ள ராஜாவுக்கு செக் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. சாய் ராஜ்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சேரன், இர்ஃபான், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தனா வர்மா, சரயு மோகன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

07:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஐசிசி சார்பில் நடக்கும் அனைத்துப் போட்டிகளில் ஆட்டம் சமனில் முடிந்தால், முடிவு கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் மட்டுமே பயன்படுத்தப்படும், பவுண்டரி எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐசிசியின் இந்த விதிமுறை மாற்றத்தை நியூஸிலாந்து வீரர்கள் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளனர்.

07:27:01 on 15 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை வழக்கில் முக்கிய நபர், கொள்ளையன் முருகன் பெங்களூரு போலீசிடம் சரணடைந்தார்.
அவரை விசாரித்த போலீசாருக்கு நகைகள் பதுக்கி வைத்துள்ள இடம் குறித்த தகவல்கள் கிடைத்தது. இதனை அடுத்து, பெரம்பலூரில் உள்ள காட்டுப்பகுதியில் முருகன் பதுக்கி வைத்த நகைகளை போலீசார் மீட்டனர்.

06:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் ராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இந்திய தரப்பினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

06:27:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வைத்தூர் கிராமத்தில் வயலில் வேலை பார்த்த போது இடி தாக்கியதில் விவசாயத் தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இடி தாக்கியதில் படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

05:57:01 on 15 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

விஜய் நடித்துள்ள ’பிகில்’ படத்தை சீனாவிலும் வெளியிடப் படக்குழுத் திட்டமிட்டுள்ளது. சீனாவில் ஏற்கெனவே வெளியிடப்பட்ட அமிர்கானின் ’டங்கல்’, ஸ்ரீதேவி நடித்த ’மம்’ ஆகிய இந்தி படங்கள் நல்ல வசூலை குவித்திருப்பதால், இந்தப் படத்தையும் அங்கு வெளியிட ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

05:27:02 on 15 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயம் ரவி தற்போது லக்‌ஷ்மண் இயக்கத்தில் ‘பூமி’, அஹ்மத் இயக்கத்தில் ’ஜனகனமன’ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூமி படத்தில் பாப் பாடகர் யோகி பி ஒரு பாடலை பாடி உள்ளதாக டி இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

04:57:02 on 15 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு மத்திய அரசுதான் காரணம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரபாகர் குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியின் அரசு, புதிய பொருளாதார கொள்கையை வரையறுப்பதில் போதிய ஆர்வம் செலுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

04:27:02 on 15 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தயாரிப்பாளர் எஸ்.தாணு அவர்களது திரையுலகப் பயணத்தைக் குறிப்பிடாமல் 90களுக்குப் பிறகான தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதிவிட முடியாது. அவர் தயாரித்த அசுரன் படத்தைப் பார்த்துவிட்டு ரஜினி ரியாக்ட் செய்த விதம், அசுரன் கதையமைப்பைப் பற்றி ரஜினி கூறியது உள்ளிட்ட பல தகவல்களை தாணு பகிர்ந்துகொண்டார்.

03:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வயதாவதால் தசைகள் மற்றும் எலும்புகள் பலவீனமடைவதை தடுக்க தசைகளுக்கும் எலும்புகளுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும். பழு தூக்குதல், பயிற்சி கருவிகள் பயன்படுத்துதல் இதற்கு உதவும். வாரம் 3 முதல் 4 முறை அரை மணி நேரம் இத்தகைய பயிற்சிகளுக்கு ஒதுக்கலாம்.

03:25:01 on 15 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகை நமீதா சினிமாவில் வந்த வேகத்தில் அதிகமான ரசிகர்களின் எண்ணிக்கையைப் பெற்றவர். பின் படவாய்ப்புகள் அதிகம் இல்லாமல் போனது. இந்நிலையில், திருமணத்திற்கு பின் தற்போதும் படங்களில் நடித்து வரும் அவர் லேட்டஸ்ட் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

02:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

”கூட்டணியோடு போட்டியிட்டதால்தான் காங்கிரஸ் கட்சி எம்.பி தேர்தலில் 7 இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியாது. மக்களின் ஒரு பிரச்னைக்குக்கூட காங்கிரஸ் கட்சி போராடியது கிடையாது” என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

02:27:01 on 15 Oct

மேலும் வாசிக்க விகடன்

சென்னை பள்ளிக்கரணையில் டாஸ்மாக்கை பூட்டிய பின் சட்டவிரோதமாக மதுபானம் வாங்க வந்தவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பார் ஊழியர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் மது வாங்க வந்த இருவரையும் வெட்டிக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

02:00:27 on 15 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

சிரியாவின் குர்தீஷ் படைகள் மீது தாக்குதல் நடத்தியதற்காக, துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க தயாராக உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

01:30:11 on 15 Oct

மேலும் வாசிக்க தினமலர்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் விசாரணை 40-வது நாளான நாளையுடன் நிறைவு பெறும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கினை கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது.

01:07:30 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புனேவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்றதன் மூலம் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை வெளியிட்டுள்ளது. இதில், கோலி 936 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.

12:57:01 on 15 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முஸ்லீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான், நீதிமன்றம் தங்கள் தரப்பிடம் மட்டுமே கேள்விகளை எழுப்புவதாகவும் எதிர் தரப்பிடம் கேள்விகள் எழுப்புவதில்லை என்றும் ஆதங்கப்பட்டார்.

12:27:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்காக சென்னையில் இருந்து 3 நாட்களுக்கு 10,940 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை செயலாளர் கூறியுள்ளார். இதைப்போல பிற ஊர்களில் இருந்து மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

11:57:02 on 15 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.29,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.3,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூ.49.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11:25:01 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் - கரூர், பழனி - கோயம்புத்தூர், பொள்ளாச்சி - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது.

10:57:01 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வாடகை பாக்கித் தொகையை வழங்கக்கோரியும், புதிய வாடகை ஒப்பந்தம் போட வலியுறுத்தியும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

10:27:01 on 15 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மன அழுத்தம் காரணமாக உயிரிழக்கும் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 16 பேர் மன அழுத்தம் காரணமாக இறந்ததாகவும், குறைந்த ஊதியத்தை வழங்கிவிட்டு ஓய்வில்லாமல் பணியாற்றுமாறு நிர்பந்திப்பதே அதற்கு காரணம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

09:57:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

09:27:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.09, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.15 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

09:10:27 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தூத்துக்குடியில் பெய்து வரும் கன மழை காரணமாக இன்று செவ்வாய்கிழமை(அக்.15) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

09:07:26 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் ஹனுமனின் புகைப்படமும், Jai Hanuman என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் பெற்ற மாநிலமான தமிழகத்தில் மாநில அரசின் பேருந்துகளில் இதுபோன்று குறிப்பிடப்பட்டுள்ளது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

09:00:12 on 15 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதன் அறிகுறியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. இன்றும், சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது.

08:59:21 on 15 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதுதில்லியில் உள்ள இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் மற்றும் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க தினமணி

OnePlus இப்போது அதன் OnePlus 7 மற்றும் OnePlus 7 Pro ஸ்மார்ட்போன்களுக்கான புதிய Android 10 அடிப்படையிலான OxygenOS புதுப்பிப்பை வெளியிடுகிறது. இந்த புதிய மென்பொருள் புதுப்பிப்பு வேறுபட்ட உருவாக்க பதிப்பைக் கொண்டுள்ளது மற்றும் முந்தைய பதிப்பில் இருந்த அனைத்து பிழைகளையும் சரிசெய்கிறது.

06:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

புதிய ஐபேட் (iPad 2019) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஐபோன் 11 மற்றும் ஆப்பிள் வாட்ச் (Apple Watch Series 5) அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபேட் (2019) iPadOSஇல் இயக்குகிறது. மேலும் 10.2-இன்ச் (2160×1620 பிக்சல்ஸ்) ரெட்டினா ஐபிஸ் டிஸ்பிளே(Retina IPS display) உடன் வருகிறது.

05:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

உகாண்டாவில் “கில் த கேஸ்’ (kill the gays) எனும் பெயரில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

04:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கோவில், சில ஆண்டுகளாக பெரிய அளவில் பராமரிக்கப்படாத நிலையில், விளையாடுவது, உறங்குவது என அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோவிலை தங்களின் சுய தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

03:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சந்தானம் நடிப்பில் தற்போது ‘டிக்கிலோனா’ திரைப்படம் உருவாகி வருகிறது. கார்த்திக் யோகி இயக்கி வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது. இந்நிலையில், பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இப்படத்தில் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

02:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

விஜய்யின் பிகில் திரைப்படம், சென்சார் குழுவினரால் இன்று(14.10.19) பார்க்கப்பட்டு U/A சர்டிஃபிகேட் பெற்றிருக்கிறது. பிகில் திரைப்படம் U சர்டிஃபிகேட் பெற்றதாக ஒரு சென்சார் சர்டிஃபிகேட் சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறது. அது போலியான ஒன்று என்று தெரியாமல் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

01:55:01 on 15 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த கோபால் கஞ்சு, காமேஸ்வர் ஜங்கு என்னும் இரு இளைஞர்கள் வயிறுவலி காரணமாக அங்குள்ள அரசு மருத்துவமனை ஒன்றுக்கு சென்றுள்ளனர். அவர்களை பரிசோதித்த டாக்டர் முகேஷ் குமார் இருவரையும் கர்ப்ப பரிசோதனை செய்து கொள்ளும்படி பரிந்துரை செய்துள்ளார்.

12:55:02 on 15 Oct

மேலும் வாசிக்க Behind Woods News

கைதி படத்துக்கு தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள பிகில், கார்த்தியின் கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது. இதில் பிகில் படத்துக்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் பிகிலுக்கு முன்னரே தயாராகிவிட்டது கார்த்தியின் கைதி.

11:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விக்ரம், பத்துக்கும் மேற்பட்ட புது புது கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்த படத்தில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10:55:02 on 14 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த ரெட்லபள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்தனா. இவரும், அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸ் என்பவரும் ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

09:55:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

லட்ச ரூபாய் சம்பளம் என்ற ஆசையில் குவைத்துக்குச் சென்ற சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளம்பெண் சந்தித்த துயரங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது என்று எய்ம்ஸ் என்ற என்.ஜி.ஓவைச் சேர்ந்த கன்னியாபாபு தெரிவித்தார்.

08:57:01 on 14 Oct

மேலும் வாசிக்க விகடன்

அம்பானி, அதானி போன்ற பெரும் பணக்காரர்களின் ஒலிபெருக்கியாக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சாதாரண மக்களை பற்றி பிரதமர் மோடிக்கு கவலையில்லை என்றும், மக்கள் பணத்தை பிடுங்கி நாட்டின் பெரும் பணக்கார்கள் 15 பேருக்கு கொடுக்கிறா்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

08:27:01 on 14 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான புயல் ஒன்று தாக்கியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நகனோ நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் உலக புகழ்ப்பெற்ற அதிவேக புல்லட் ரயில்கள் பாதி மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.

08:00:22 on 14 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அனீஷ், தனீஷ், ராஜேஷ், பிரகாஷ் ஆகியோரிடம் தலா ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை ஏஜெண்டுகளிடம் கட்டி, மலேசியாவில் வெல்டர் பணிக்காக சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் அங்கு வேலையும் இல்லாமல், உணவும் இல்லாமல் 4 பேரும் தவித்து வந்துள்ளனர்.

07:25:01 on 14 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் கருதப்படும் அந்த இடம் யாருக்குச் சொந்தம் என்பது பிரதான சர்ச்சையாக உள்ளது. அது பாபர் மசூதி இருந்த இடம் என்றும். அங்கு ஏற்கெனவே இருந்த இந்துக் கோவிலை இடித்துவிட்டோ அல்லது மாற்றி அமைத்தோ மசூதி உருவாக்கப்பட்டது என்றும் சில இந்து அமைப்புகள் தரப்பில் கூறப்படுகிறது.

06:57:01 on 14 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மேலும் வாசிக்க