View in the JustOut app
X

காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது என்று ஜி.கே.வாசன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதனை சரி செய்வது ஆளுங்கட்சியின் கடமை. வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வங்கிக் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

05:40:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தனியார் தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக கேரள மாநிலம் கொச்சி சென்றார். அங்கு பிற்பகலில் கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் அரசியல் பற்றியும், காவிரி பிரச்சினை குறித்தும் பேசினர்.

05:25:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

குமாரசாமி மந்திரிசபையில் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கவும், சில முக்கிய இலாகாக்கள் ஒதுக்கவும் முடிவாகியுள்ளது. முதல்- மந்திரியாக பதியேற்கும் குமாரசாமி நிதித்துறையையும் கூடுதலாக வைத்துக் கொள்வார் என்றும் குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவும் மந்திரி சபையில் முக்கிய பங்கு வகிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

05:10:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கர்நாடக அரசியல் விவகாரத்தில் ஆளுநர் பாஜகவுக்கு 15 நாள் அவகாசம் அளித்தது கேலிக்கூத்து. ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக ஆளுநர் அதுபோன்று செய்திருக்கக் கூடாது. உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு அளித்துள்ளது என்றும் கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்க உள்ளது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் ரஜினி கூறியுள்ளார்.

04:55:01 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கர்நாடக சட்டப்பேர்வை தேர்தலில் 38 இடங்களைப் பெற்ற மதச் சார்பற்ற ஜனதாதளத்துக்கு முதல்வர் பதவியை காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது பற்றி கேள்விக்கு பதிலளித்துள்ள புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இது அரசியல் கட்சிகள் எடுக்கும் முடிவு. அதற்கு என்ன செய்ய முடியும் என்றும் ‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா' என்றும் கூறியுள்ளார்.

04:40:02 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மறைந்த காமிரா கவிஞர் யதார்த்தத்துக்கு நெருக்கமாக தன் படைப்புகளைத் தந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் பிறந்தநாள் சினிமா பிரியர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் தனது முதல் படத்தில் கேரளா அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினையும் கோகிலா என்ற கன்னட படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர்க்கான தேசிய விருதினையும் பெற்றார்.

04:25:01 on 20 May

மேலும் வாசிக்க சமயம்

சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மக்களின் நியாயமான கோரிக்கைகளை முதல்வா் யோகியும், பாஜக தலைவா் அமித் ஷாவும் கண்டுகொள்வதில்லை என உத்தர பிரதேச அமைச்சா் ஓம் பிரகாஷ் ராஜ்பா் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நாட்டில் உள்ள 100 கோடி இந்தியா்களின் இரத்தத்திலும் ஊழல் நிறைந்து ஓடுவதாக அவர் பேசியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

04:10:01 on 20 May

மேலும் வாசிக்க சமயம்

கர்நாடக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாத பாஜக தெலுங்கானாவில் தடம் பதிக்க முனைப்பு காட்ட உள்ளதாகத் தெரிகிறது. பாஜ தலைவர் கே.லக்ஷ்மண் பேட்டி ஒன்றில் பேசுகையில், “கர்நாடகாவைத் தொடர்ந்து தெலுங்கானா, , மற்றும் ஒரிசாவில் கவனம் செலுத்த பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

03:55:01 on 20 May

மேலும் வாசிக்க சமயம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்ற பெயரில் நடத்தப்படும் கொள்ளைக்கு உடனடியாக முடிவு கட்ட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் மீதான அனைத்து வரிகளையும் ரத்துச்செய்து எரிபொருட்களின் விலை ஓராண்டுக்கு முன்பிருந்த நிலைக்கு குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

03:40:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

தனக்கும் தனது முன்னாள் மாமாவான திவாகரனுக்கும் எந்த சொத்து தகராறும் இல்லை என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி.தினகரன் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திவாகரன் துரோக கும்பலுடன் சேர்ந்தததுதான் தங்களுக்கிடையேயான பிளவுக்குக் காரணம் என்றார்.

03:25:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

இன்று உலக தேனீ தினம் ஆகும். ஆண்டுக்கு 1 லட்சம் கி.மீ தூரம் பயணித்து தன்னுடைய உணவுத் தேவைக்காக தேனீ பூக்களில் இருந்து தேனை எடுக்கிறது என்றாலும், அதன் மூலம் அதிகம் பயனடைவது என்னவோ மனிதகுலம்தான். தேன் மூலம், ஒவ்வொரு நாடும், பல கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்ட உதவுவதோடு, அது மருத்துவ பொருளாகவும் திகழ்கிறது.

03:10:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் வறுத்தெடுக்கும் வேளையில் சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.வேலூர் மற்றும் சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. வாய்க்கால் பட்டறை மற்றும் அம்மாபேட்டை, வீராணம், வலசையூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

02:55:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

கர்நாடக தேர்தலையொட்டி பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதன்பின்னர் கடந்த 7 நாட்களாக விலை உயர்த்தப்பட்டு வருகிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை இம்மாத இறுதியில் மத்திய அரசு குறைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானபோதும், இது குறித்த உறுதியான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

02:25:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததையடுத்து, கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு முன்னாள் பிரதமரும், மஜத கட்சி தலைவருமான தேவகவுடா, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

02:11:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

கர்நாடக விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பிற்கு தலை வணங்குகிறேன் என ரஜினி கூறியுள்ளார். மேலும் கர்நாடகாவில் குமாரசாமி பதவியேற்க உள்ளது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. எடியூரப்பா பதவியேற்றது சரியானது அல்ல. காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்றும் அவர் கூறினார்.

02:10:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170 லிருந்து 185 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். க்யூ ஆர் கோடு மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே டவுன்லோடு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

01:55:02 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

சமீபத்திய சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில், காவிரி மேலாண் வாரியத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 14.75 டி.எம்.சி.,தண்ணீர் அளவு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. வரும் பருவ காலத்திற்குள் நடைமுறைப்படுத்த சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதுவே இறுதியான தீர்ப்பு. கோர்ட்டை நம்பியுள்ளோம் என்றும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

01:40:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், புதிய கர்நாடக அரசுடன் நட்புடன் பழகி, ஜூன் 12 ல் தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் திமுக சார்பில் விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.

01:25:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''கர்நாடக மாநிலம் இனி காவிமயமாகாது. ஆனால், வண்ணமயமாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

01:10:01 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்களிடம் அமோக வரவேற்பு உள்ளது. பெண்கள் இருக்கும் இடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும். நான் துவங்க போகும் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

12:55:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

வர்த்தக போரை கைவிட சீனாவும் அமெரிக்காவும் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக சீன துணை பிரதமர் லியூ ஹி தெரிவித்துள்ளார். இரு நாடுகளிடையே நிலவி வந்த வர்த்தக பிரச்னைகள் முடிவுக்கு வந்ததை அடுத்து அமெரிக்காவில் இருந்து கூடுதல் கபாருட்களை இறக்குமதி செய்யவும் சீனா முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

12:40:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாளை காலை டில்லி சென்று காங்., தலைவர்கள் ராகுல் மற்றும் சோனியாவை சந்திக்க உள்ளதாகவும், பதவியேற்ற பிறகு 24 மணிநேரத்தில் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.

12:27:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 11-ந்தேதி முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வது எனவும், அன்று முதல் மாவட்ட தலைநகரங்களில் தினந்தோறும் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது என ஜாக்டோ-ஜியோ அறிவித்துள்ளது.

12:26:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

நடிகர் ரஜினிகாந்த மாவட்ட செயலாளர்கள், அடுத்து இளைஞரணி செயலாளர்களை தொடர்ந்து இன்று காலை மகளிர் அணி செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையே ரஜினி மக்கள் மன்றத்திலும் புகார்கள் குவிய தொடங்கியுள்ளன. அதனை கண்காணிக்க 6 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.

12:25:02 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

உலக சுற்றுப்புற சூழல் தினம் வரும் 5-ம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி ஐநா சபை சார்பில் 'பிளாஸ்டிக் மாசுவை அகற்றுவோம்' என்ற கருத்தை முன்னிறுத்தி பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து இந்தியாவில் பல்கலைக்கழக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த யுஜிசி தடை விதித்துள்ளது.

12:10:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

சீனாவில் நடைபெறவுள்ள டிராகன் படகுப்போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. மொத்தம் 6 அணிகள் கலந்துகொண்ட முதல்நிலை போட்டியில் பந்தயதூரமான 500 மீட்டரை முதலில் கடக்கும் அணி வெற்றிபெறும் என்ற நிலையில், கறுப்பு உடை அணிந்திருந்த அணி 1 நிமிடம் 59 நொடிகள் பயணித்து முதலிடத்தைப் பிடித்தது.

11:55:02 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

ஒற்றை தலைவலியை சரி செய்வதற்காக எய்மோவிக் என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த மருந்துக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஊசி மருந்தை மாதம் ஒரு முறை செலுத்த 38 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஆண்டு முழுவதும் செலுத்த 4.6 லட்சம் ரூபாய் ஆகும்.

11:40:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

அனைத்து வகை நுழைவு தேர்வுகளில் பங்கேற்க, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள், 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என வரி ஆலோசனை ஆணையம் தெரிவித்துள்ளது. அவர்கள் மாணவர்களிடம் வசூலிக்கும், ஜிஎஸ்டியில் பெரும் பகுதியை, உள்ளீட்டு வரிப் பயனாக திரும்பப் பெறலாம். அதனால், பயிற்சி கட்டணத்தை உயர்த்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

11:25:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

இந்­தியா–அமெ­ரிக்கா இடையே, அதி­ந­வீன ராணுவ தள­வா­டங்­கள் தயா­ரிப்பு, கொள்­மு­தல் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான அடிப்­படை ஒப்­பந்­தங்­கள் விரை­வில் கையெ­ழுத்­தாக உள்ளன. இது தொடர்­பாக, அமெ­ரிக்க அர­சி­யல் பாது­காப்பு விவ­கா­ரங்­கள் துறை­யின் முதன்மை துணை அமைச்­சர் டினா கைட­நவ், அடுத்த வாரம், இந்­தி­யா­வுக்கு வருகை தர உள்­ளார்.

11:10:02 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சொந்தமான இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனைகள் நடத்தினர். அங்கு இருந்து பணம், நகைகள் நிரப்பப்பட்ட ஏராளமான கைப்பைகள் சிக்கின. இந்த நிலையில் அவர் வரும் செவ்வாய்க்கிழமை அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி ஊழல் தடுப்பு அமைப்பு சம்மன் அனுப்பி உள்ளது.

10:55:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். "அரசு அதிகாரிகளில் சிலபேர் லஞ்சம் வாங்கி வருவதால் மொத்தமாக அரசு நிர்வாகத்தின் பெயர் கெடுகிறது. இந்தநிலை நீடிப்பது நல்லதல்ல. இனி லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என எச்சரித்திருக்கிறார்.

10:40:01 on 20 May

மேலும் வாசிக்க விகடன்

பிக்பாஸ் 2 பாகம் தொடர்பான இரண்டாவது டீசரை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இந்த முறையும் 15 பேர் அதில் பங்கேற்க உள்ளனர். இருப்பினும் அந்த 15 நபர்கள் யார் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. நல்லவர் யார்.. கெட்டவர் யார்..? என்பதை தெரிந்துகொள்ள காத்திருக்குமாறும் கமல்ஹாசன் அந்த டீசரில் கூறியுள்ளார்.

10:25:01 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளியின் வகுப்பறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த ஒருவன், சுட்டதில் ஒரு ஆசிரியரும், 9 மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும், படுகாயமடைந்த 10 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஒருவனை கைது செய்தனர்.

10:10:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

பஞ்சாப் வங்கியில் 13 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாடு தப்பிச் சென்ற வைர வியாபாரி நிரவ் மோடி, தற்போது ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் லண்டனில் பதுங்கி இருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் பதுங்கி இருப்பதாகவும், அமலாக்க துறையினர் தெரிவித்துள்ளனர்.

09:40:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த லாலு பிரசாத் யாதவுக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ காரணங்களுக்காக 6 வார ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. நேற்று லாலுவுக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட சில உபாதைகள் ஏற்பட்டதால் அவர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ பாசோதனை செய்யப்பட்டது.

09:25:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வரும் 23ஆம் தேதியே, தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், லட்சத்தீவு பகுதியில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

09:10:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

நடிகர் தனுஷ் எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பகிர் என்ற படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் காலடியெடுத்து வைக்கிறார். தமிழில், வாழ்க்கையை தேடி நானும் போனேன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ஜூலை மாதம் திரைக்கு வரயிருப்பதாக அப்படத்தை தயாரித்துள்ள லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் அறிவித்துள்ளது.

08:55:01 on 20 May

மேலும் வாசிக்க சமயம்

டில்லியில் உள்ள, இந்திய ரயில்வேயின் தலைமையிடமான ரயில் பவனில், செலவினங்களை கட்டுப்படுத்தும் வகையில், அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த, ரயில் நீரை நிறுத்துவதற்கு, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து ரயில் பவனில், மூன்று குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

08:40:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

ஆக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக முன்னாள் வீரரும், சீனியர் துணைத்தலைவருமான ரஜிந்தர்சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த அவர் இந்திய ஆக்கி அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். அவர், துரோனாச்சாரியா விருது, தயான் சந்த் விருது (2005), மகாராஜா ரஞ்சித் சிங் விருது (1984) ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.

08:25:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. திரைத்துறையில் சிறந்த பணியாற்றிய பெண் கலைஞர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை, அவரது சார்பில் இயக்குனர் சுபாஷ்கய், தயாரிப்பாளர் நம்ரதா கோயல் ஆகியோர் விருதைப் பெற்றுக் கொண்டனர்.

08:10:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

வரும், 2028ம் ஆண்டிற்குள், உலகளவில் அதிக மக்கள் தொகை உடைய நகரங்கள் பட்டியலில், டில்லி முதலிடம் பிடிக்கும் என, ஐ.நா., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆய்வறிக்கையின்படி, தற்போது, மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்கள் பட்டியலில், டோக்கியோ, 3.7 கோடியுடன் முதலிடத்திலும், டில்லி, 2.9 கோடியுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன.

07:55:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

எடியூரப்பா பதவி விலகியதை அடுத்து, கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி புதன்கிழமை (மே.23) அன்று பதவி ஏற்கிறார். மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் 13 பேர், காங்கிரஸ் கட்சி சார்பில் 20 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

07:40:01 on 20 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 35 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.79.13 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 28 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.32 காசுகளாகவும் உள்ளன.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:25:01 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

2018-19ம் சீசன் யுயெஃபா யுரோப்பா கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவே உலகிலேயே மிகப் பழமையான கால்பந்து போட்டியாகும். எப்.ஏ. கோப்பை இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய செல்சி அணி எப்.ஏ. கோப்பையை கைப்பற்றியது. செல்சி அணி கோப்பையை வெல்வது 8-வது முறையாகும்.

07:10:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

ஐதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகளும் மோதின. இறுதியில் கொல்கத்தா அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

06:55:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பொதுமக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஜல்யுக்த் சிவார் திட்டத்தின் மூலம் வறட்சியில் சிக்கியிருந்த கிராமங்களில் நீர் சேமிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 11 ஆயிரம் கிராமங்கள் வறட்சியற்றதாக மாறியுள்ளது என்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

06:40:01 on 20 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

இரும்புத்திரை படத்தின் இயக்குநர் பி.எஸ். மித்ரனின் அடுத்த படம் குறித்து சில தகவல்கள் வெளியாகின. இதுறித்து பேசிய அவர், தற்போது தான் எனது முதல் படத்தின் வெற்றியை கொண்டாடி வருகிறேன். உடனடியாக அடுத்த படம் பற்றி பேசுவது சரியாக இருக்காது. அடுத்த படத்திற்கான கதை தயாரான பிறகு, அதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.

06:25:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மராட்டியத்தில் 13 திறந்தவெளி ஜெயில்கள் உள்ளன. இதில் 764 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் மாநிலத்தில் மேலும் 6 இடங்களில் திறந்தவெளி ஜெயில்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஜெயில்கள் சிந்துதுர்க், துலே, ரத்னகிரி, யவத்மால், லாத்தூர், வார்தா ஆகிய இடங்களில் அமைய உள்ளது. இதற்கு மாநில உள்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

06:10:01 on 20 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

நடிகை ஹன்சிகா புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதர்வாவை வைத்து `டார்லிங்' பட இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கும் `100' என்ற படத்தில் கதாநாயகி ஆகி இருக்கிறார். இந்த படத்தில் அதர்வா போலீசாக நடிக்கிறார். 100 என்பது காவல்துறைக்கான அவசர எண் என்பதால் அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.

05:55:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தபால் துறை மூலமாக, 'தீன்தயாள் ஸ்பார்ஸ் யோஜனா ஸ்காலர்ஷிப்' என்ற திட்டத்தின் கீழ், 2018 - 19 கல்வியாண்டு முதல், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளை சேகரித்தால், அவர்களுக்கு 8,௦௦௦ ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

05:40:02 on 20 May

மேலும் வாசிக்க தினமலர்

சமீபத்தில் ஜிமெயில் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்டு இயங்கும் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. இவற்றில் ஒன்று தான் நட்ஜ் (Nudge), இந்த அம்சம் வாடிக்கையாளர்கள் செட் செய்த நேரத்தில் குறிப்பிட்ட மின்னஞ்சல் குறித்த நினைவூட்டலை வழங்கும்.

05:25:02 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கும்பகோணம் அருகே கணேசன் என்பவர், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பல்வேறு அரிய வகை பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறார். கையால் இயக்கப்படும் அரவை இயந்திரம், சோழர்கள் பயன்படுத்திய வாள், இரவு நேர விளக்கு, ஜமீன் காலத்தில் பெண்கள் பயன்படுத்திய மேக்அப் செட் என, 500க்கும் மேற்பட்ட பொருட்களை பாதுகாத்து வருகிறார்.

05:10:01 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தேனாம்பேட்டையில் குடிசைப்பகுதியை சேர்ந்த மதன் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர். ஒரு தகராறில் மதன் வெட்டிக் கொல்லப்பட்டார். படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய சிம்பு தனது ரசிகனின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தேனாம்பேட்டையில் ஒட்டினார். சிம்பு போஸ்டர் ஒட்டும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

04:55:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

ஸ்டெர்லைட் ஆலை பாதுகாப்புக்குக் கூடுதல் போலீஸாரை நியமனம் செய்ய வேண்டும், ஆலையை சுற்றி ஒரு கி.மீ. சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியர் மே 21ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் உத்தரவிட்டார்.

04:40:01 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு, வரும் 22ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இது அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூரில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

04:25:02 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சீனாவில் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்த தைய் என்பவர் தனது 4 நாய்க்குட்டிகளுடன் ஸ்கிப்பிங் விளையாடும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. ஒரே நேரத்தில் 5 பேரும் சிறு பிசிறுகூட இல்லாமல் ஸ்கிப்பிங் விளையாடுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றம் செய்த அடுத்த 2 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர்.

04:10:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

‘காலா’ படத்தில் ரஜினிக்கு மூன்று மகன்கள். ஏதாவது ஒரு மகன் வேடத்தில் நடிப்பதற்கு நிச்சயமாய் தன்னை ரஞ்சித் அழைப்பார் என்று நம்பிக்கையோடு காத்துக்கொண்டிருந்தார் தனுஷ். இதுபற்றி நீண்டநேரம் யோசித்த ரஜினி, ’தனுஷ் தயாரிப்பாளராக மட்டும் இருக்கட்டும். நடிக்க வேண்டாமே!’ என்று தவிர்த்துவிட்டாராம்.

03:55:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கியும், உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பதவியை வட்டாரக் கல்வி அதிகாரி என பெயர் மாற்றம் செய்தும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

03:40:01 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக நடிகைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகை அஸ்சா மைகா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாடா கபின், ரேச்சல் கான் உள்ளிட்ட 16 நடிகைகள் பங்கேற்றனர். இனவெறி இன்றி நிகழ்ச்சியை நடத்த வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.

03:25:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

தமிழகத்தில் சமீப காலமாக பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் சற்று குறைந்து கலை அறிவியல் படிப்புகள் மீது மாணவர்களின் பார்வை திரும்பத் தொடங்கியுள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கிவிட்டது. ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

03:10:01 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த நாஞ்சில் சம்பத் சினிமாவில் நடிக்கிறார். காமெடி நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசியலை கிண்டல் செய்யும் படம் ஒன்றில் நடிக்கிறார். எல்.கே.ஜி. என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்க பிரபு என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.

02:55:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மத்திய அரசின் வரைவு செயல்திட்டம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்துள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்தின் இறுதி உத்தரவை எதிர்த்து அரசியல் சாசன அமர்வுக்கு தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

02:40:01 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கொடைக்கானல் மலர் கண்காட்சியை தொடங்கிவைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பேணி காக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார். மேலும் பேசிய அவர், ”சிறுமலையை சுற்றுலாதலமாக மாற்ற பரிசீலனை நடைபெறுகிறது” எனவும் கூறினார்.

02:25:01 on 20 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ரயில்களிலும் பயோ–கழிவறை வசதி ஏற்படுத்தப்படும். ரயில் விபத்துகளைத் தடுக்கும் நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு கருவி தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனைகள் முடிந்தவுடன் இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வே வாரிய தலைவர் அஸ்வானி லோஹானி தெரிவித்துள்ளார்.

02:10:02 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன் தான் எனது ரோல்மாடல். இவங்க 2 பேருமே ஹீரோயின்கறதை தாண்டி சர்வதேச அளவுல இந்தியாவுக்கு ஒரு சினிமா அடையாளமாகத் திகழ்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கூட 2 பேருக்கும் அவர்களின் புகழ் சிறிதுகூட குறையவில்லை. ஹீரோயின் என்றால் அப்படி இருக்கணும் என்று அமைரா தஸ்தூர் கூறியுள்ளார்.

01:55:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

டுவின்டெக் அகாடமி மற்றும் வணிக மேலாண்மை தீர்வு மையம் இணைந்து நடத்தும் மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் படிப்பின் மூலம் பயிற்சி பெறும் மாணவர்கள் தங்களது தலைமைப் பண்புகளையும், குழு மனப்பாங்கினையும் ஏற்படுத்தி மேம்படுத்தவும் தயார்படுத்துகிறது.

01:40:02 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 26-5-2014 அன்று மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. வரும் 26ஆம் தேதியுடன் இந்த அரசின் நான்காண்டு கால ஆட்சி நிறைவடையும் நிலையில் ஒடிசா மாநிலம், கட்டாக் நகரில் வரும் 26ஆம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.

01:25:02 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகிய இருவரும் இன்று காலை திருச்சிக்கு ஒரே விமானத்தில் வந்தனர். இருவரையும் வரவேற்க அவர்களது கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது இரு கட்சி தொண்டர்களுக்கு இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது.

01:10:01 on 20 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

வையம் மீடியாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எழுமின்’. இந்த படத்தில் விவேக், தேவயானி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் வருகிற மே 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்த டிரைலரை நடிகர் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி இணைந்து வெளியிடுகின்றனர்.

12:55:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பொதுவாக, 35 வயதுக்குமேற்பட்டோர் ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, ரத்தப் புற்றுநோய், சர்க்கரைநோய் போன்ற ஏதாவது மரபு வழி நோய்கள் இருந்தால் அந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் 35 வயதுக்கு முன்பாக இந்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

12:40:02 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

சிறந்த மேனி பராமரிப்புக்கு, நம் தினசரி பழக்க வழக்கங்களில் சின்னச்சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. வெதுவெதுப்பான நீரில் குளிப்பது உங்கள் சருமத்தில் சுரக்கும் இயற்கையான எண்ணெய்ப் பதத்தைத் தக்கவைக்கும். அதிக நேரம் குளிப்பதால், அந்த எண்ணெய்ச் சுரப்புத் தடைப்படும். எனவே 10 நிமிடங்கள் குளிப்பதே போதுமானது.

12:25:01 on 20 May

மேலும் வாசிக்க சமயம்

செல்லப்பிராணிகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க, கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய காலத்தில் தடுப்பூசிகள் போட வேண்டும். அவற்றின் உமிழ்நீர் நம்மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களைச் சுத்தமாக வைத்திருந்தாலே போதும், அவற்றுக்கும் நோய்கள் ஏற்படாது; அவற்றால் நமக்கும் நோய்கள் ஏற்படாது.

12:10:01 on 20 May

மேலும் வாசிக்க விகடன்

பெரிய இயக்குநர்களை தேடி தன்னை வைத்து படம் எடுக்க கோரிக்கை வைக்கும் ஹீரோக்கள் மத்தியில் திறமையான இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகர் அதர்வா. இவரின் செம போத ஆகாதே படம் வரும் 25 தேதி ரிலீஸாக உள்ளது.

11:55:01 on 19 May

மேலும் வாசிக்க சமயம்

ஒவ்வொரு வருடமும் தனக்கு பிடித்த புத்தகங்களைப் பற்றி, ‘கேட்ஸ் நோட்ஸ்’ என்ற தனது ப்ளாக்கில் பதிவிடுவதை வழக்கமாகவும் கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டு அவர் பரிந்துரைத்த புத்தகம், “ஃபேக்ட்புல்நஸ்”. உலகம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் உண்மையில் மக்கள் இந்தப் புத்தகத்தை வாசித்தால் போதும் என குறிப்பிட்டுள்ளார்.

11:40:01 on 19 May

மேலும் வாசிக்க விகடன்

எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்து, 5 மாதங்கள் கடந்தும் இன்னும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. விடுதலைக்கான கோப்பில் ஆளுநர் கையொப்பமிட தாமதித்து வருவதால்,1850 கைதிகளின் விடுதலை கேள்விக்குள்ளாகி வருகிறது.

11:25:01 on 19 May

மேலும் வாசிக்க விகடன்

‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கே.சரவணின் அடுத்த படத்தில் ஹீரோவாக அதர்வா நடிக்கிறார்.‘எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இதுதவிர, ‘8 தோட்டாக்கள்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகணேஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் அதர்வா.

11:10:02 on 19 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, திருநங்கை அஞ்சலி அமீர், சுராஜ் வெஞ்சரமூடு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பேரன்பு’. இந்தப் படம் இப்போது, ஜூன் 16 முதல் 25-ம் தேதி வரை நடைபெறவுள்ள 21-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வாகியுள்ளது. அங்கு, ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாகத் திரையிடப்பட இருக்கிறது.

10:55:01 on 19 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

2016-2017-ம் ஆண்டில், வறட்சியால் பயிர் பாதிப்பு அடைந்த விவசாயிகளுக்கு இதுவரை ரூ.3,265 கோடியே 39 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்தது. தமிழ்நாடுதான் மிக அதிகபட்சமான இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தந்து இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

10:40:01 on 19 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

பிரபுதேவா அடுத்ததாக ஏ.சி.முகில் இயக்கத்தில் முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபுதேவா தற்போது `சார்லி சாப்ளின்-2' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

10:25:02 on 19 May

மேலும் வாசிக்க மாலை மலர்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.எல்லை பாதுகாப்பு படை துணை சப்–இன்ஸ்பெக்டர் உள்பட 12 பேர் காயமடைந்தனர்.அவர்கள் அனைவரும் அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இத்தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

10:10:01 on 19 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

வனஷாக்ஷி கிரியேசன்ஸ் பெருமையுடன் வழங்க, தமன்குமார், மியாஸ்ரீ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கண்மணி பாப்பா’ திரைப்படம் திகிலான திருப்பங்களுடன் உருவாக்கி இருக்கிறார்கள். நேரெதிர் எண்ணம் கொண்ட கணவன் -மனைவி மற்றும் அவர்களது செல்ல மகள் இவர்களைச் சுற்றி நடக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்புகாக இப்படம் உருவாகியுள்ளது.

09:55:02 on 19 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 1227 கனஅடியில் இருந்து 806 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 33.36 அடியாகவும், நீர்இருப்பு 8.92 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து 1500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

09:40:02 on 19 May

மேலும் வாசிக்க தினமலர்

வீர தீர சாகசங்களைப் புரிகிறவர்களுக்கு ஸ்பைடர்மேன் என்ற செல்லப்பெயர் வழங்குவது வழக்கம். அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இப்படி பெயர் பெற்ற நபர் ஒருவர் மார்வல் காமிக்ஸ் ஹீரோவான ஸ்பைடர் மேன் ஆடை அணிந்து, ஓடும் ரயிலில் தலைகீழாகத் தொங்கியபடி புதிய சாகசத்தில் ஈடுபட்டார்.இந்த விடியோ தற்போது டிவிட்டரில் வைரலாகி வருகின்றது.

09:25:02 on 19 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள லிபுளோர் பள்ளியின் மாணவி சிந்தியா பெட்வே. இவர் பள்ளிப்படிப்பை முடித்திருந்த நிலையில், பெரும்விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே பள்ளி பட்டமளிப்பு விழாவில், மாணவிக்கு பதிலாக ரோபோ பட்டம் பெற்ற நிகழ்ச்சி, பார்வையாளர்கள் அனைவரையும் கவர்ந்தது.

09:10:01 on 19 May

மேலும் வாசிக்க தினமலர்

ரஜினியின் காலா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாக்ஷி அகர்வால், தனக்கு முதலில் ரஜினி படம் என்று தெரியாது, தலைவர் பெயரை சொன்னதும் தலை சுற்றிவிட்டது. என்னது தலைவர் கூடவே நடிக்க போறோமான்னு என்னால நம்பவே முடியலை எனக் கூறியுள்ளார்.

08:55:01 on 19 May

மேலும் வாசிக்க மாலை மலர்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கண்காணிப்புக் குழு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் துணைசபாநாயகர் தம்பிதுரை, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, விவசாயிளுக்கும் தமிழக அரசுக்கும் கிடைத்த வெற்றி என கூறியுள்ளார்.

08:40:01 on 19 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

ஐபிஎல் தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில் ராயுடு 49 ரன்கள் எடுத்தபோது ஐபிஎல் போட்டிகளில் 3 ரன்களை கடந்தார். இதுவரை 127 போட்டிகளில் விளையாடியுள்ள அம்பதி ராயுடு 3001 ரன்கள் எடுத்துள்ளார்.

08:25:01 on 19 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கர்நாடக மாநில முதலமைச்சராக மஜத கட்சியின் குமாரசாமி மே -21ல் பதவியேற்கிறார். பதவியேற்பு விழா மே- 21ம் தேதி மதியம் 12 முதல் 1 மணிக்குள் நடைபெறும் என்றும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராகுல்காந்தி, சோனியாகாந்தி மற்றும் அனைத்து மாநில தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றும் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

08:18:56 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். சன்பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கிறார். மேலும் இந்தப்படத்தில், தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

08:10:01 on 19 May

மேலும் வாசிக்க மாலை மலர்

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம், த்ரிஷா நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் "சாமி". இப்படத்தின் இரண்டாம் பாகமான "சாமி ஸ்கொயர்" தற்போது தயாராகி வருகிறது. படத்தின் படபிடிப்பு வேலைகள் 80% முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது இரண்டாவது மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

07:55:02 on 19 May

மேலும் வாசிக்க ஜீ நியுஸ் தமிழ்

கர்நாடக முதலமைச்சராக மஜத கட்சியின் குமாரசாமி மே -21ல் பதவியேற்கிறார். கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். முதலமைச்சராக பதவியேற்றபின் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்திரவிட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

07:54:43 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட்டை ஒருநாள், டி20 போன்று மார்க்கெட் செய்வதில்லை. ஈடன் கார்டன்சில் ஒரு டெஸ்ட் போட்டி எனக்கு நினைவிருக்கிறது. மே.இ.தீவுகளுக்கு எதிராக. முதல் நாளில் இந்தியா பேட் செய்கிறது. சேவாக், சச்சின், லஷ்மண் விளையாடுகின்றனர், முதல் நாள், ஆனால் 1000 பேர்களே இருந்தனர் கவுதம் கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார்.

07:40:01 on 19 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க ராஜ்பவன் சென்றார் மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி. கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து, காங்கிரஸ் ஆதரவுடன் மஜத ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநரிடம் மீண்டும் உரிமை கோருகிறார் குமாரசாமி.

07:33:14 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இன்ஜினியரிங் மற்றும் மற்ற பட்டப் படிப்பு முடித்த பட்டதாரிகள், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., - எம்.பிளான் - எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை நடத்தும் டான்செட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான டான்செட் நுழைவு தேர்வு இன்று தமிழகம் முழுவதும், 27 மையங்களில் நடக்கிறது.

07:25:01 on 19 May

மேலும் வாசிக்க தினமலர்

அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கர்நாடகாவில் பாஜகவின் குதிரைபேர அரசியலுக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தென்னிந்தியாவில் காலூன்றிவிடலாம் என்ற பாஜகவின் எண்ணம் நிறைவேறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

07:19:20 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வடிவுடையான் இயக்கத்தில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் வீரமாதேவி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் பொன்சே.ஸ்டீபன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அம்ரேஷ் கணேஷ் இசையமைக்கிறார்.

07:10:01 on 19 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி இன்று இரவு 7. 30 மணிக்கு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் ஆதரவுடன் மஜத ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநரிடம் குமாரசாமி மீண்டும் உரிமை கோரவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

07:03:16 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் டி.ராஜேந்தர். இப்படத்தை அவரே தயாரித்து இயக்கவுள்ளார். இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை நமீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்டத்தில் முக்கிய வேடங்களில் ராதாரவி, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர்.

06:55:02 on 19 May

மேலும் வாசிக்க ஜீ நியுஸ் தமிழ்

கர்நாடக முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்ததை அடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் , கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் என்று கூறியுள்ளார். மேலும் வாழிய பாரத மணித்திருநாடு என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

06:46:43 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிலி நாட்டைச் சேர்ந்த 34 பிஷப்புகளும் தங்களின் ராஜினாமா கடிதத்தை போப் பிரான்சிஸிடம் வழங்கியுள்ளனர். பாலியல் குற்றங்களை மறைத்ததாகவும், பொதுமக்களை குற்றங்களிலிருந்து பாதுகாக்க தவறியதாகவும் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனினும் ராஜினாமா கடிதங்களை ஏற்பது குறித்து போப் இது வரை முடிவு செய்யவில்லை என வாடிகன் கூறியுள்ளது.

06:40:01 on 19 May

மேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்

மேலும் வாசிக்க