View in the JustOut app
X

”பிரதமர் மோடிக்கும், நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 6வது இடத்தில் இருக்கிறது என்று மோடியும், ஜேட்லியும் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.” என்று பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

04:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

”டெல்லியில் இருந்து அதிகாரிகள் என்னை தொடர்புகொண்டு பேசினர். உங்களுக்கு என்ன பிரச்னை எதற்காகப் பிரதமரை எதிர்த்துப் போட்டியிடுகிறீர்கள் என்றனர். உங்கள் டிமாண்டை எங்களிடம் கூறுங்கள் நாங்கள் அதனைப் பூர்த்தி செய்து வைக்கிறோம் என்றார்கள்.” என அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

03:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க விகடன்

”வரும் மக்களவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும். பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். காங்கிரஸ் 60 இடங்களாக சுருங்கிப் போகும். அவர்கள் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்.” என என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

03:39:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமலர்

”வரும் மக்களவைத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும். பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். காங்கிரஸ் 60 இடங்களாக சுருங்கிப் போகும். அவர்கள் 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்.” என என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

03:36:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமலர்
கவலையில் தோனி...!!

‘‘ஆடுகளம் இந்த அளவிற்கு ஸ்லோவாகவும், அதிக அளவில் பந்து திரும்பும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை.” சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

03:15:02 on 24 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

சமாஜ்வாடி கட்சி தனது நட்சத்திர வேட்பாளர்களின் பட்டியலை இன்று வெளியிட்டு உள்ளது. இதில் அகிலேஷ் யாதவ், ராம் கோபால் யாதவ், ஆசம் கான், டிம்பிள் யாதவ் மற்றும் ஜெயா பச்சன் ஆகியோர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அக்கட்சியின் நிறுவன தலைவரான முலாயம் சிங் யாதவின் பெயர் இடம் பெறவில்லை.

02:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்‘ டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை பூமிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பூஜா என்டெர்டெயின்மென்டுடன் இணைந்து, எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

02:35:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமணி

"ஜெயலலிதாவை நான் அரசியல் ரீதியாக மட்டுமே கடுமையாக விமர்சித்துள்ளேன், தனிப்பட்ட முறையில் ஒருமையில் விமர்சித்தது கிடையாது" என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். மேலும் பெண் சாதனையாளர் என்ற முறையில் ஜெயலலிதா மீது தனக்கு மிகப் பெரிய மரியாதை உள்ளது எனவும் கூறினார்.

02:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் தேர்தல் பறக்கும் படைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், அரசு மற்றும் தனியார் சுவர்களில் செய்யப்பட்டிருந்த 23 ஆயிரம் தேர்தல் விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

01:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கோயமுத்தூரில் மாவட்டம் ஆணைக்கட்டிப் பகுதியில் அமைந்துள்ளது பெரிய நாக்கம்பாளையம். இதன் எல்லைக்கோட்டுப் பகுதியில் மின்சார வசதி இல்லாமல் 17 வருடங்களாக இயங்கி வருகிறது அரசு நடுநிலைப்பள்ளி. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தப் பள்ளிக்கு தற்போதுதான் மின் இணைப்பு கிடைத்துள்ளது.

01:35:01 on 24 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் நகரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தானிய படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இன்று அதிகாலை 4 மணியளவில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார்.

01:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோரை அதிகபட்சமாகக் கலாய்த்தே யு டியூபில் பெரும்பணம் சம்பாதித்து வரும் ‘பாவங்கள் பரிதாபங்கள்’ புகழ் கோபியும் சுதாகரும் தங்களது படத் தயாரிப்புக்கு நிதி திரட்டும் முயற்சியில் ஒரே வாரத்தில் ரூ.1 கோடியே 17 லட்சம் நிதி திரட்டியுள்ளனர்.

12:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

கேரள மாநிலம் எர்ணாகுளம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான முன்னாள் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், தனது தொகுதி வருவதற்கு முன்பாக இருந்த சாலக்குடி தொகுதியில் வாக்கு சேகரித்துள்ளார். அப்போது பாஜக நிர்வாகிகள் அல்போன்சின் காதில் கிசுகிசுத்தனர். இதையடுத்து அவர் காரில் ஏறி எர்ணாகுளம் தொகுதி நோக்கி புறப்பட்டார்.

12:35:01 on 24 Mar

மேலும் வாசிக்க விகடன்

நடிகர்களும், இயக்குனர்களும் தங்கள் படங்களின் கதை மற்றும் கதாபாத்திரங்கள் வெளியாகாமல் இருக்க எச்சரிக்கையாக இருப்பது உண்டு. இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 63வது படத்தின் கதை வெளியாகிவிட்டதாகப் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

12:15:02 on 24 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

’சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படுவார்’ என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’தமிழகத்துக்கு ராகுல் காந்தியும், பிரியங்காவும் தேர்தல் பிராச்சாரத்துக்கு வருவார்கள்’ எனவும் தெரிவித்துள்ளார்.

11:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட உள்ளது. ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் அ.கணேச மூர்த்தி போட்டியிடுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்தத் தொகுதியில் தனிச் சின்னத்திற்குப் பதிலாக உதய சூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

11:35:02 on 24 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

21 பேர் கொண்ட மகக்ள் நீதி மய்யத்தின் முதல் வேட்பாளர் பட்டியலை கடந்த 18ஆம் தேதி அக்கட்சியின் தலைவர் கமல் வெளியிட்டார். இந்நிலையில், இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் வெளியிட உள்ளார்.

11:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாம்பழம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் பாமக கோரிக்கை வைத்தது. இதையடுத்து புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாமக இருப்பதால் மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கலாம் என தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

10:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமணி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் மோதின. இதில் சென்னை அணி எளிதாக வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி குறித்து சமூக வலதளங்களில் பல்வேறு விதமான மீம்ஸ்கள் வந்து குவிந்தன.

10:35:01 on 24 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி நாளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்கிறார். சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனுதாக்கல் செய்கிறார்.

10:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

கடந்த 10 ஆண்டுகளில் வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் எத்தனை? என மாநில வாரியாக மத்திய அரசும், மாவட்ட வாரியாக மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

09:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வரும் 26ஆம் தேதி அமமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தில் குக்கர் சின்னம் வழக்கு 25ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

09:35:02 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

’மோடி எப்போதும் தன்னை நாட்டின் காவலாளி என்று கூறிக் கொள்கிறார். ஆனால் நடைமுறையில் அவர் சில குறிப்பிட்ட பெரிய நிறுவனங்களுக்கும், அதன் அதிபர்களின் வீடுகளுக்கும் மட்டுமே காவலாளியாக இருக்கிறார்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

09:15:02 on 24 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

கடற்படை தலைமைத் தளபதி சுனில் லாம்பாவின் பதவிக் காலம் வரும் மே மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவைகிறது. அந்தப் பதவிக்கு துணை அட்மிரல் கரம்வீர் சிங் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

08:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமணி

மெக்ஸிகோவில் போபோகேடபெட் (Popocatepetl) எரிமலையில் பெரும் வெடிப்புகள் அடுத்தடுத்து ஏற்பட்டன. இதனால் எரிமலையில் இருந்து சுமார் 6 ஆயிரத்து 562 அடி உயரத்திற்கு சாம்பலும், புகையும் வெளியேறின. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

08:35:01 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆறுமுகத்தை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

08:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

07:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

காங்கிரஸ் பொதுச் செயலாரக பிரியங்கா நியமிக்கப்பட்ட பின், கட்சிக்குள் அவருக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கட்சியின் பெரும்பாலான பொறுப்புகளை, பிரியங்காவிடம் கொடுக்க, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளதாக காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

07:35:02 on 24 Mar

மேலும் வாசிக்க தின மலர்

பெட்ரோல் மற்றும் டீசம் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.67 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.37 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:01 on 24 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் சதீஷை படுகொலை செய்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

06:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க மாலைமுரசு

”ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு காகிதத்தில்கூட விமானம் செய்யத் தெரியாது. அப்படி இருக்கும்போது, விமானப்படை விமானம் செய்வதற்கான காண்ட்ராக்டை எப்படி மோடி அரசு கொடுத்தது?” என்று தேர்தல் பிரச்சாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கேள்வி எழுப்பி வருகிறார்.

06:40:02 on 24 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

1989ஆம் ஆண்டில் இருந்து, காந்திநகர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யக்கூடிய தொகுதியாகவே இருந்து வருகிறது. அடல் பிஹாரி வாஜ்பேயி, எல்.கே. அத்வானி, போன்ற முன்னிலை தலைவர்களோடு, காந்திநகர் முக்கிய பிரமுகர்களின் தொகுதியாக இருந்து வருகிறது.

06:25:01 on 24 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மீடு-வை உக்கிரமாக கையாண்ட பெயர் ஸ்ரீரெட்டி. அது மீடு-வாக இல்லாமல் வீடு வாக – பலர் சம்பந்தப்பட்டு இருந்ததால் ஸ்ரீரெட்டியின் புகார்கள பிசுபிசுத்தன. ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்த ஸ்ரீரெட்டியின் பொய்கள் பலரை காவு வாங்கியிருப்பது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது.

06:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

எப்&ஓ சந்தை பல நடைமுறை சிறப்பு குணங்களும் அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப்பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழு புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

05:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க விகடன்

மாதுளம் பழத்தை தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு முன், காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம். இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம்.

05:40:02 on 24 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சிரியாவில் ஐஎஸ் படைகள் தோற்கடிக்கப்பட்டதாக அமெரிக்கா ஆதரவு பெற்ற அந்நாட்டுப் படைகள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து சிரிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''ஐஎஸ் அமைப்பு தோற்கடிக்கப்பட்டது. ஐஎஸ் தீவிரவாதிகள் சிரியா மற்றும் இராக்கில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள்.'' என்றார்.

05:25:02 on 24 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தேனி மாவட்ட கிராமப் பகுதிகளில் விவசாயத்தை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக அழைத்துச் செல்லப்படுவதால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

05:10:02 on 24 Mar

மேலும் வாசிக்க காமதேனு

ராகியில் கால்சியம், புரோட்டீன்ஸ், இரும்புச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துகள் உள்ளன. இது மனித உடல் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் தேவையானதைக் கொடுக்கிறது. நார்ச்சத்து அதிகமும் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும் சிறப்பான உணவு. உடல் எடை குறைப்புக்கான டயட்டில் இடம் பெற வேண்டியதும் கூட.

04:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

எடியூரப்பாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் ரூ.18,000 கோடி வரை பாஜக முக்கிய தலைவர்களுக்கு கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இதில் இடம்பெற்றிருந்தது. தற்போது இந்த விவகாரத்தையே பிரசார ஆயுதமாக காங்கிரஸ் கட்சியினர் எடுத்துள்ளனர்.

04:40:02 on 24 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேலுக்கு பின்பு நரேந்திர மோடி ஒரு இரும்பு மனிதராக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். டெல்லியில் மோடி பிரதமராக அமர்ந்த பின்பு இங்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

04:26:01 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சமீபத்தில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, “அங்கே நடந்தது தவறுதான் என்பது ஒரு குழந்தைக்குக் கூட தெரியும். வெளியான வீடியோவில் கதறிய பெண்ணின் குரலை என்னால் 10 விநாடிகள்கூட கேட்க முடியவில்லை. மனது கஷ்டமாக இருக்கிறது” என்று கூறினார்.

04:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பேஸ்புக் வலைதளத்தில் லைவ் போட்டோக்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த அம்சம் தற்சமயம் டுவிட்டரிலும் வழங்கப்பட உள்ளது. டுவிட்டர் ஐ.ஓ.எஸ். தளத்தில் லைவ் போட்டோக்களை ஜிப்களாக மாற்றுவதற்கான அம்சம் குறித்து சோதனை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

03:56:02 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகர் சூர்யா நடித்துவரும் காப்பான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. விரைவில் இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தூங்குவதற்கான வேலைகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே சூர்யா என்ஜிகே படத்தின் டப்பிங் பணிகளிலும் பிசியாகியுள்ளார். எனவே வரும் மாதத்தில் சூர்யா ரசிகர்களுக்கு சிறந்த விருந்து காத்திருக்கிறது.

03:40:02 on 24 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் உடல் பல உபாதைகளைச் சந்திக்கிறது. குறிப்பாக உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு ரத்தம் கெட்டிப்பட்டு அதன் ஓட்டம் பாதிக்கிறது. அதனால் மூளைக்கு ரத்தம் செல்வது தடைபடுவதால் சட்டென்று தலைச்சுற்றல், மயக்கம் ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்பும்கூட ஏற்படுகிறது.

03:26:01 on 24 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதில், மத சின்னத்தினை நபரொருவர் துடைப்பம் கொண்டு துரத்துவது போன்று ஓவியம் இடம்பெற்று இருந்தது.

03:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சியை தொடங்கிய மம்தா, 21 ஆண்டுகளுக்கு பிறகு கட்சியின் பெயரில் இருந்த காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். எனினும் தேர்தல் ஆணையத்தின் பதிவில் பழைய பெயரே நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

02:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினமணி

தேனி மாவட்டம் போடி அருகே மேற்குதொடர்ச்சி மலையில் கொட்டகுடி கிராம பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தின் கீழ் குரங்கணி, கொழுக்குமலை, சாலப்பாறை, மேல்மட்டம் முட்டம், டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட 9 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

02:40:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

சினிமாவின் முழுமையான என்டர்டெயினரான சல்மான் கான், எஸ்கே டிவி என்ற பெயரில் சேனல் தொடங்க விண்ணப்பித்திருப்பதாக ஒரு தகவல். சல்மான் கான் என்பதன் சுருக்கமே எஸ்கே. கடந்த சில வருடங்களாக சல்மான் கான் தனது படங்களின் சேட்டிலைட் உரிமையை தன்னிடமே வைத்துள்ளார். யாருக்கும் விற்கவில்லை.

02:25:01 on 24 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவருக்கு எதிராக தமிழக விவசாயிகள் 111 பேர் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர். இதன் மூலமாக தாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அப்பகுதி மக்களுக்கு காண்பிப்போம் என்றும், தங்களுக்கு அனைத்து மாநில விவசாயிகளின் ஆதரவு உள்ளதாகவும் தமிழக விவசாயிகள் கூறியுள்ளனர்.

02:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

திருச்சி விமான நிலையத்தில் வேலை’ என போலியான நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் மோசடி நடைபெறுவதாக, அதன் இயக்குநர் குணசேகரன் எச்சரித்துள்ளார். இந்த விளம்பரங்களை நம்பி ஏராளமானோர் பணத்தை இழந்துள்ளதாகவும், எனவே இதனை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

01:55:01 on 24 Mar

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

தனது வழிகாட்டி ஆசிரியரிடம், 'நான் எங்க வீட்டுல சிட்டுக்குருவி குஞ்சுகள் மூன்றுடன் தினமும் பேசுகிறேன்' என்று சொல்லியது அந்த ஆசிரியரை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. சிறு வயதில் பறவைகள் குறித்தான அந்த மாணவனின் நேசத்திற்கு பலத்த பாராட்டுகளும் குவிகின்றன.

01:40:01 on 24 Mar

மேலும் வாசிக்க விகடன்

இந்தியாவுடன் போரை விரும்பவில்லை என்றும், அமைதியை மட்டுமே விரும்புவதாகவும் பாகிஸ்தான் கூறியிருக்கிறது. போரை முன்னெடுப்பதற்கு பதிலாக, கல்வி மற்றும் சுகாதாரத்துறைகளில் கவனத்தை செலுத்தப் போவதாகவும், பாகிஸ்தான் கூறியிருக்கிறது.

01:25:01 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பிரியங்காவின் கோயில் தரிசனங்களுடன் தேர்தல் பிரச்சாரம் செய்வது இந்துத்துவா வாக்குகளை பெற்றுத்தரும் எனக் காங்கிரஸ் கருதுகிறது. இந்துத்துவாவிற்கு பெயர் போன உபியில் நலிந்திருக்கும் அக்கட்சிக்கு இந்த கோயில்கள், வாக்குகளைப் பெற்றுத்தருமா என்பது மே 23இல் வெளியாகும் முடிவுகளில் தெரியும்.

01:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஒவ்வொரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியும் ஒரே மாதிரி இருக்காது. பிற குழந்தைகள் அல்லது அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசக் கூடாது. பிற குழந்தைகளின் நல்ல பழக்கங்களை காண்பித்து அதுபோல தானும் வளர்த்துக்கொள்ள குழந்தைகளுக்கு தாய்மார்கள் அறிவுறுத்தலாம்.

12:56:01 on 24 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

கரூர் மாவட்டத்தில் அய்யர்மலையில் கூட்டணிக் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர், விவசாயப் பொருட்களைப் பாதுகாக்க குளித்தலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்கு அமைக்கப்படும் என்றும், குளித்தலை- மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

12:40:01 on 24 Mar

மேலும் வாசிக்க தினகரன்

ரஷ்யாவில் ரோபோ ராணுவ வாகனங்களில் புதிய தொழில்நுட்பத்தை அந்நாடு புகுத்தியுள்ளது. அந்நாட்டின் ராணுவ தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கியுள்ள ஆளில்லா டேங்க் ஜிபிஎஸ் மற்றும் தெர்மல் இமேஜ் மூலம் இயக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.

12:25:01 on 24 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடந்த மக்களவைத் தேர்தலைப் போல இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடி இன்னொரு தொகுதியில் போட்டியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது. மோடிக்கு இன்னொரு தொகுதியைத் தருவதில் ஒடிஷா - கர்நாடகா பாஜக இடையே போட்டி நிலவி வருகிறது.

12:10:01 on 24 Mar

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

பெங்களூருவில் ஓலா கார் சேவையை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக அரசின் போக்குவரத்துத் துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக ‘பைக் டாக்ஸி’க்கள் சேவையை நடத்தியதையடுத்து கர்நாடக அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

11:55:01 on 23 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் தேர்தல் களத்தில், கோடீஸ்வர வேட்பாளர்களில், புதுச்சேரியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம்.ஏ.எஸ் சுப்பிரமணியன் முதலிடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 12 கோடியே 72 லட்சம் ஆகும். அவரது மனைவிக்கு அசையா சொத்துகள் 13 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலும் உள்ளது.

11:40:01 on 23 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் உமா பாரதி போட்டியிட விருப்பம் இல்லை என தெரிவித்திருந்திருந்தார். இந்நிலையில் அவரை பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவராக நியமித்து தேசிய தலைவர் அமித்ஷா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

11:25:01 on 23 Mar

மேலும் வாசிக்க தினமலர்

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 70 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

11:13:51 on 23 Mar

மேலும் வாசிக்க தினகரன்

நெடுநல்வாடை படத்தில் நாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி நாயர். இந்நிலையில், அஞ்சலி நாயருக்கு தற்போது புதிய வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம். சில நாட்களுக்கு முன்பு அஞ்சலியைச் சந்தித்து சில இயக்குனர்கள் அவரைச் சந்தித்துக் கதை சொன்னதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

11:10:01 on 23 Mar

மேலும் வாசிக்க தின மலர்

தேனி தொகுதிக்கு அ.தி.மு.க. சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எதுவும் செய்ததில்லை என்றும் தெரிவித்த அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் அதனைக் கருதி தேர்தலில் மக்கள் முடிவு செய்வார்கள் என்றார்.

10:56:01 on 23 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்தியாவில் கடந்த 1980ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் வெப்பம் அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10:40:02 on 23 Mar

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.91 லட்சம் கோயில் காணிக்கை என்று ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டதால் மீண்டும் வங்கியிடமே அப்பணம் ஒப்படைக்கப்பட்டது.

10:25:01 on 23 Mar

மேலும் வாசிக்க ETV BHARAT

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக திருப்பூர்அந்தியூரைச் சேர்ந்த சேக் தாவூத் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரது தேர்தல் அறிக்கையில் குடும்பத்தில் அனைவருக்கும் சாரயம் என்ற வாக்குறுதி இருந்தது அப்பகுதி வாக்களர்களை திக்குமுக்காடச் செய்துள்ளது.

10:12:01 on 23 Mar

மேலும் வாசிக்க ETV Bharat

மக்களவை தேர்தலில் வாக்களிக்காதவர்களின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.350 கழிக்கப்படும் என்று தெரிவிக்கிற செய்தித்தாளில் வெளிவந்த செய்தியின் புகைப்படம் ஒன்று வட இந்தியாவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

09:55:01 on 23 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தெலுங்கானா மாநிலம் செவ்வெல்லா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கொண்டா விஷ்வேஸ்வர் ரெட்டி தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில், தனது குடும்ப ரூ.895 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு கோடி சொத்துகள் இருந்தும் தனக்கோ தனது குடும்பத்தினருக்கோ சொந்தமாக காரோ, வேறு மோட்டார் வாகனமோ இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

09:40:02 on 23 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இப்படத்தை விஜய் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. தலைவி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகி கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

09:25:02 on 23 Mar

மேலும் வாசிக்க தினமணி

தமிழகத்தில் மொத்தம் 30 முதல் 35 தொகுதிகள் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எதிராகவே உள்ளது என உளவுத்துறை ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைத்தாலே ஆச்சரிப்படும் அளவுக்குதான் உள்ளது என்று அந்த ரிப்போர்ட் மூலம் தெரியவந்துள்ளது.

09:15:34 on 23 Mar

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

ஐபிஎல் முதல் போட்டியில் ஆர்சிபி முதலில் பேட் செய்து வருகிறது, முதலில் தோனி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, விராட் கோலி, பார்த்திவ் படேல் தொடக்க வீரர்களாக இறங்கினர். தீபக் சாஹர் முதல் ஓவரை அருமையாக வீசினார். ஆனால் ஷர்துல் தாக்குர் மிட் ஆஃபில் மிஸ் பீல்ட் செய்ய பார்த்திவ் படேலுக்கு பவுண்டரி சென்று நான்கானது.

08:56:28 on 23 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இபிஎப்ஓ செப்டம்பர் 2017ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 2018ஆம் ஆண்டு வரையில் புதிய வேலை உருவாக்க பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முறை சார்ந்த தொழில்களில் கடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:55:01 on 23 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மனிதன்தான் பயன்படுத்தும் அடிப்படை வசதிகளில் மின்சாரம் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்தது. ஏனெனில் கனிணி முதல் உயர்தர சிகிச்சை வரை மின்சாரம் தேவையானது . எனவேதான் அனைத்து வீடுகளிலும் 2020க்குள் மின்சாரம் வசதியை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

08:40:01 on 23 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், விதிமுறைகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வரும் ஷேர் ஆட்டோக்களை, விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓட்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொருளாதாரம் பாதிப்பதாகக் கூறி சிறைபிடித்தனர்.

08:25:01 on 23 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ரைசா. அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இந்நிலையில், அவர் குட்டி நாய்க்கு முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

08:18:38 on 23 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சென்னை திருவான்மியூரில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி ஆணையருமான பிரகாஷ் தொடங்கி வைத்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

08:10:06 on 23 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பாராளுமன்ற தேர்தலையொட்டி சில மாநிலங்களில் போட்டியிடும் 11 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சியின் டெல்லி தலைமை இன்று வெளியிட்டது. கேரளாவின் பத்தனம்திட்டா பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக சுரேந்திரன் போட்டியிடுவார் என இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:08:44 on 23 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகர் ஜெயம் ரவி ஸ்க்ரீன் சீன் நிறுவனத்துடன் மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிறுவனத்தின் மூன்று படங்களில் ஒரு படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டணி பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

07:55:02 on 23 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நடப்பு நிதியாண்டில், அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம் ரூ.80 ஆயிரம் கோடி நிதி திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அந்த இலக்குக்கு மேல் கூடுதலாக ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்து இருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

07:40:01 on 23 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் நடிகை ரெபா மோனிகா ஜான் நடிப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ‘ஜருகண்டி’ படத்தில் ஜெய் ஜோடியாக நடித்த இவர், பெண்கள் கால்பந்து அணி வீராங்கனைகளில் ஒருவராக இந்தப் படத்தில் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

07:25:02 on 23 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை வரும் 27ஆம் தேதி தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடங்க உள்ளார். அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 16ஆம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

07:10:01 on 23 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கிரைஸ்ட்சர்ச்சின் இருவேறு மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 24 வயதான அன்சி அலிபாவாவின் வாழ்க்கை பயணம் மிகவும் வித்தியாசமானது. கேரளாவைச் சேர்ந்த அன்சி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். சவுதியில் பணிபுரிந்துகொண்டிருந்த தந்தை உயிரிழக்க, தனது 18 வயதிலேயே குடும்பத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

06:56:01 on 23 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நோக்கியா நிறுவனம் தயாரித்த மொபைல் போன்களிலிருந்து சீனாவுக்கு தகவல்கள் அனுப்பப்பட்டதாக அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று ஃபின்லாந்து நாட்டின் தகவல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

06:35:01 on 23 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், பாஜக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ஹெச்.ராஜாவை வெற்றிபெற வைக்கவில்லை என்றால், முதலமைச்சர் முகத்தில் முழிக்க மாட்டோம் என்று சபதம் ஏற்றிருப்பதாகக் கூறினார்.

06:15:01 on 23 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஓசூர் அருகே குறுப்பட்டி கிராமத்தில் குட்டை தண்ணீரில் மூழ்கி 3 வட மாநில சிறுவர்கள் உயிரிழந்தனர். ரோஜா தோட்டத்தில் வேலை பார்த்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் சிறுவர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

05:55:01 on 23 Mar

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள பிரியாணி கடையில் நேற்றிரவு இரண்டு நபர்கள் சிக்கன் கேட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடையின் மேலாளர் அப்துல்லா பணம் கேட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அப்துல்லாவின் செல்போனை தட்டிவிட்டு அப்துல்லா முகத்தில் ஓங்கி குத்தியதாக கூறப்படுகிறது.

05:35:02 on 23 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

''இங்கு நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு இருக்கின்றீர்களே. இதில் கால்வாசிக் கூட்டம்கூட அங்கு இல்லை. திறந்த வேனில் காலியாக இருக்கக்கூடிய ரோட்டில் முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமி போய்க் கொண்டிருக்கக் கூடிய காட்சிகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் வந்து கொண்டிருக்கின்றன.” என ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.

05:15:01 on 23 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சமீபத்தில் ஃபேஸ்புக் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தங்கள் தளத்தில் இருந்த கோளாறு ஒன்று சரி செய்யப்பட்டுவிட்டதாக தெரிவித்தது. அது 2 கோடிக்கும் மேலான கணக்குகளின் பாஸ்வேர்டுகள் எந்த ஒரு என்கிரிப்ஷனும் இல்லாமல் பிளைன் டெக்ஸ்ட்டாக மட்டுமே சேமிக்கப்பட்டிருந்தது என்பதுதான். இவற்றை 20,000 ஃபேஸ்புக் ஊழியர்கள் பார்த்திருக்கமுடியும்.

04:57:02 on 23 Mar

மேலும் வாசிக்க விகடன்

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து பண நடமாட்டங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. இதனால் ரஜினிகாந்த் படப்பிடிப்பு செலவுகளுக்கான தொகையைக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை தேர்தல் முடிந்த பிறகு அடுத்தமாதம் இறுதியில் தொடங்கலாம் என்று தள்ளிவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

04:39:01 on 23 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்து பண நடமாட்டங்கள் தடுக்கப்பட்டு உள்ளன. இதனால் ரஜினிகாந்த் படப்பிடிப்பு செலவுகளுக்கான தொகையைக் கொண்டு செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை தேர்தல் முடிந்த பிறகு அடுத்தமாதம் இறுதியில் தொடங்கலாம் என்று தள்ளிவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

04:36:01 on 23 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

இளம் சூடான லெமன் வாட்டர்.....விலையும் குறைவு மற்றும் ஈஸியாகவும் நீங்களே செய்யக்கூடியது. இது நிச்சயம் உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் உங்களை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும். செரிமானத்தைத் தூண்டி பசியெடுக்க வைக்கும்.

04:18:01 on 23 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இளம் சூடான லெமன் வாட்டர்.....விலையும் குறைவு மற்றும் ஈஸியாகவும் நீங்களே செய்யக்கூடியது. இது நிச்சயம் உங்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் உங்களை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்கும். செரிமானத்தைத் தூண்டி பசியெடுக்க வைக்கும்.

04:15:01 on 23 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடியை எதிர்த்து நிற்க பிரவீன் தொகாடியா விருப்பம் தெரிவித்திருக்கிறார். தான் புதிதாகத் தொடங்கிய ’இந்துஸ்தான் நிர்மான் தளம்’ கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போது அவர் இதை தெரிவித்தார். பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷாவை எதிர்த்து தம் கட்சி சார்பிலும் வேட்பாளரை அறிவித்துள்ளார்.

03:57:01 on 23 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

உத்தர பிரதேச மாநிலம் சம்பால் நகரில் பாஜக சார்பில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் முக்கிய நிர்வாகிகள் சிலர் உரையாற்றினர். அப்போது நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில், மேடை பாரம் தாங்காமல் திடீரென சரிந்து விழுந்தது. மேடையில் நின்றிருந்த அனைவரும் விழுந்தனர்.

03:35:01 on 23 Mar

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

சூர்யா தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தைக் கொண்டவர். இவர் நடிப்பில் வரும் படங்கள் சமீபத்தில் எதுவும் பெரியளவில் ஹிட் இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் முதல் நாளில் அஞ்சான் 9.5 கோடி ரூபாயும், 7ஆம் அறிவு 8 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

03:18:02 on 23 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

சூர்யா தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தைக் கொண்டவர். இவர் நடிப்பில் வரும் படங்கள் சமீபத்தில் எதுவும் பெரியளவில் ஹிட் இல்லை. இந்நிலையில் தமிழகத்தின் முதல் நாளில் அஞ்சான் 9.5 கோடி ரூபாயும், 7ஆம் அறிவு 8 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

03:15:01 on 23 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

இங்க என்ன பண்றீங்க?..போய் பாகிஸ்தானில் விளையாடுங்கள்.. ஹரியானா மாநிலம் தமாஷ்பூர் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடிய இஸ்லாமிய சிறுவர்களை சிலர் கடுமையான சொற்களால் வசைபாடியுள்ளனர். தட்டிக்கேட்ட சிறுவர்களின் உறவினரை சாலையில் வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

02:55:02 on 23 Mar

மேலும் வாசிக்க விகடன்

இதுவரை கேரளாவில் பாஜக சார்பில் ஒருவர்கூட நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. 2004ஆம் ஆண்டு பாஜக கூட்டணி கட்சியாக இருந்த இந்திய பெடரல் ஜனநாயக கட்சிக்கு ஒரு இடம் கிடைத்ததே தவிர பாஜகவுக்கு கிடைத்தது இல்லை. இம்முறை அந்த குறையை நீக்கி கால் பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களம் இறங்கி இருக்கிறது.

02:39:01 on 23 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

இதுவரை கேரளாவில் பாஜக சார்பில் ஒருவர்கூட நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. 2004ஆம் ஆண்டு பாஜக கூட்டணி கட்சியாக இருந்த இந்திய பெடரல் ஜனநாயக கட்சிக்கு ஒரு இடம் கிடைத்ததே தவிர பாஜகவுக்கு கிடைத்தது இல்லை. இம்முறை அந்த குறையை நீக்கி கால் பதித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களம் இறங்கி இருக்கிறது.

02:36:01 on 23 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடத்த தயார் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். மேலும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டால் தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறினார்.

02:15:01 on 23 Mar

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க