10:55:01 on 07 Dec 2019,Sat
ரெட் ஒயினுக்காக பயன்படுத்தப்படும் திராட்சைகளில் ரெஸ்வரேட்ரால், கேட்டசின்கள், எபிகேட்டசின்கள் மற்றும் ப்ரோ அந்தோசைனிடின்கள் போன்ற பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் ப்ரீ-ராடிக்கல்களின் தாக்கத்தைத் தடுக்கும்.
10:55:01 on 07 Dec
09:55:01 on 07 Dec 2019,Sat
”நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள். இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே முடியாது.” என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
09:55:01 on 07 Dec
08:55:02 on 07 Dec 2019,Sat
ரஞ்சிக் கோப்பை டெஸ்ட் போட்டி டிச.9ஆம் தேதி தொடங்குகிறது. திண்டுக்கல்லில் நடைபெற உள்ள முதல் போட்டியில் விஜய்சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி கர்நாடகா அணியை எதிர்த்து விளையாடுகிறது.
08:55:02 on 07 Dec
08:25:01 on 07 Dec 2019,Sat
ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா, ”தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள். இதுவே நியாயமான மனிதமிக்க நடவடிக்கை என அழுத்தி சொல்வேன். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் என்பதை அழுத்தமாக மனதில் பதிய வைக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
08:25:01 on 07 Dec
07:55:01 on 07 Dec 2019,Sat
உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்ச்சியில் பெண் நடனக்கலைஞர் சுடப்பட்டது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள காவல்துறையினர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
07:55:01 on 07 Dec
07:25:02 on 07 Dec 2019,Sat
கேளளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஒருவர் ஜாமினில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் அவரை பொதுமக்கள் சிலர் கடுமையாக தாக்கியதில் அவர் மயக்கமடைந்தார்.
07:25:02 on 07 Dec
06:55:01 on 07 Dec 2019,Sat
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை பரவலாகப் பெய்யத் தொடங்கியதை அடுத்து, ராமநாதபுரம் பகுதியில் உள்ள கண்மாய்கள் உடையும் நிலையில் உள்ளன.
06:55:01 on 07 Dec
06:25:01 on 07 Dec 2019,Sat
பரபரப்புகளுக்கு பெயர் போன நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் தனது மகள்கள் மாயமாகி விட்டதாக பெற்றோர் புகாரளிக்க, மீண்டும் அவர் சர்ச்சையில் அடிபட்டார். இதனைத்தொடர்ந்து தற்போது வரை நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை.
06:25:01 on 07 Dec
05:57:48 on 07 Dec 2019,Sat
தமிழகத்தில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
05:57:48 on 07 Dec
05:57:01 on 07 Dec 2019,Sat
கோவாவில் கூலித்தொழில் செய்யும் துக்காராம், அவரது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நீண்டநாட்களாக துக்காராமின் மனைவி உடல் நிலையில் சரி இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவ செலவுகளை செய்ய முடியாமல் கணவன் சிரமப்பட்டு வந்துள்ளார்.
05:57:01 on 07 Dec
05:53:54 on 07 Dec 2019,Sat
தமிழகத்தில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
05:53:54 on 07 Dec
05:51:12 on 07 Dec 2019,Sat
தமிழகத்தில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 9 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜனவரி 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
05:51:12 on 07 Dec
05:27:01 on 07 Dec 2019,Sat
ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய ட்ரூலி அன்லிமிட்டெட் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ. 219 பிரீபெயிட் சலுகையில் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
05:27:01 on 07 Dec
04:57:01 on 07 Dec 2019,Sat
ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து அர்ஜூன் ரெட்டி புகழ் ராகுல் ராமகிருஷ்ணா, “இது நீதியல்ல. சமாளிக்க முடியாத பொதுமக்களின் கோபத்தைத் தணிக்க வைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு வடிவம். குற்றம் நடக்காமல் தடுக்கும் வகையில் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலமாகத்தான் நீதி கிடைக்கும்.” என்றார்.
04:57:01 on 07 Dec
04:27:01 on 07 Dec 2019,Sat
லண்டனிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையொன்றில் கலந்துக்கொண்டவர்களை அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவை குற்றவாளியாக அந்த நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
04:27:01 on 07 Dec
03:57:01 on 07 Dec 2019,Sat
சிறுத்தையிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஒரு குட்டி வரையாடு சிறுத்தையுடன் ஒத்தைக்கு ஒத்தையாக நின்று சண்டையிடுகிறது. இந்த வீடியோ தென்னாப்பிரிக்காவின் க்ரூகர் தேசிய பூங்காவின் வழிகாட்டியான ஆண்ட்ரே ஃபரி என்பவரால் எடுக்கப்பட்டது.
03:57:01 on 07 Dec
03:27:01 on 07 Dec 2019,Sat
உத்தரபிரதேசம் புலந்தசகர் பகுதியில், 14 வயது மைனர் பெண்ணின் கைகளை கட்டி பிணைக் கைதியாக்கி மூன்று இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் பலாத்காரம் செய்த காட்சியை, அந்த கும்பல் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக ஊடகங்களில் வைரல் செய்துள்ளனர்.
03:27:01 on 07 Dec
02:57:01 on 07 Dec 2019,Sat
நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா நடிப்பில் கடைசியாக 100 படம் வெளியானது. இதில் அதிரடி போலீஸாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அதர்வா அடுத்து நடிக்கவுள்ள படத்தில் மீண்டும் போலீஸாக நடிக்கவுள்ளார். ஆனால் இந்த முறை சாதராண கான்ஸ்டபிளாக நடிக்கிறாராம். இந்த படத்தினை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார்.
02:57:01 on 07 Dec
02:27:01 on 07 Dec 2019,Sat
நித்தியானந்தா புதிதாக வெளியிட்டிருக்கும் வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘யாரும் என்னைத் தொட முடியாது. என்னை ஆஜர்படுத்துவதற்கு எந்த நீதிமன்றமும் கிடையாது’ என்று கூறியுள்ளார். மேலும் அவர், ”நான் உங்களிடம் உண்மையை சொல்கிறேன். நான்தான் பரமசிவன்’ என்றார்.
02:27:01 on 07 Dec
01:55:01 on 07 Dec 2019,Sat
சென்னை அம்பத்தூரில் ஆன்லைன் வர்த்தகமையத்தில் பணிபுரியும் இளைஞர்கள் இருவர், டெலிவரி செய்ய வேண்டிய செல்போன்களை நூதன முறையில் திருடி நண்பர்களுக்கு விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது.
01:55:01 on 07 Dec
01:27:01 on 07 Dec 2019,Sat
கன்னியாகுமரியில் பயங்கர சூறாவளியால் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால், மின்சாரம், போக்குவரத்து துண்டிக்கப்பட்டன. பேச்சிப்பாறை, கோதையாறு, சிற்றாறு போன்ற மலை கிராம பகுதிகளில் சூறைக்காற்று காரணமாக பல இடங்களில் ரப்பர் மரங்களின் கிளைகள் முறிந்தும், சில மரங்கள் வேரோடு சரிந்தும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
01:27:01 on 07 Dec
12:57:01 on 07 Dec 2019,Sat
”எனது மகளின் சாவு குறித்து ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெறும் விசாரணை எனக்கு திருப்தியாக உள்ளது. கோட்டூர்புரம் போலீசார் முதலில் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை. எனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு உள்ளது.” என பாத்திமாவின் தந்தை கூறியுள்ளார்.
12:57:01 on 07 Dec
12:27:01 on 07 Dec 2019,Sat
கடந்த ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 86 பலாத்கார வழக்குகள் பதிவாகியிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தின் உன்னாவ் பலாத்காரங்களின் தலைநகராக மாறியிருக்கிறது. இதே காலக்கட்டத்தில் 185 பாலியல் சீண்டல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் பதிவாகியிருப்பது மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.
12:27:01 on 07 Dec
11:57:02 on 07 Dec 2019,Sat
கடந்த 2ஆம் தேதி சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு வந்துள்ள கடிதத்தில், ஐஐடி மாணவி கொலை வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை எனில் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்றும் இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் எழுதப்பட்டுள்ளது.
11:57:02 on 07 Dec
11:27:01 on 07 Dec 2019,Sat
நித்திக்கு எதிராக வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் சீடர்கள் பலரும் களமிறங்கியுள்ளனர். அந்தவகையில், பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த முன்னாள் சீடர் ஒருவர், 400,000 அமெரிக்க டாலர் மோசடி செய்ததாக நித்யானந்தா மீது அந்நாட்டு அரசிடம் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் பிரெஞ்சு அரசு நித்தி மீது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
11:27:01 on 07 Dec
11:15:48 on 07 Dec 2019,Sat
கூடங்குளம் அணு உலை இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கவலை தெரிவித்துள்ளது. அணு உலை இணையதள முடக்கம் தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று அமெரிக்க கூறியுள்ளது.
11:15:48 on 07 Dec
11:07:08 on 07 Dec 2019,Sat
கூடங்குளம் அணு உலை இணையதளம் முடக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை கவலை தெரிவித்துள்ளது. அணு உலை இணையதள முடக்கம் தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல என்று அமெரிக்க கூறியுள்ளது.
11:07:08 on 07 Dec
10:27:01 on 07 Dec 2019,Sat
வெங்காயம் விலை உயர்வைத் தொடர்ந்து, பூண்டு கிலோ 200 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளி கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கடந்த வாரம் கிலோ 230 ரூபாய்க்கு விற்பனை ஆன முருங்கைக்காய் இந்தவாரம் 550 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
10:27:01 on 07 Dec
09:57:02 on 07 Dec 2019,Sat
டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பவுண்டரிகள் மூலம் குறைவான ரன்களைக் குவித்த அணி வெற்றிபெறுவது எப்போதாவது அரிதாக நிகழும். அந்த அரிதான நிகழ்வு நேற்றைய போட்டியில் நடந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி, பவுண்டரிகள் மூலம் 134 ரன்கள் குவித்தது. இந்திய அணியோ, அதன்மூலம் 120 ரன்களை மட்டுமே எடுத்தது.
09:57:02 on 07 Dec
09:29:18 on 07 Dec 2019,Sat
சென்னை கோயம்பேட்டில் விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.160லிருந்து ரூ.180 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.180லிருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. தொடர்மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு, ஆகியவற்றால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.
09:29:18 on 07 Dec
09:15:35 on 07 Dec 2019,Sat
சென்னையில் அடையாறு, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், கோயம்பேடு, வடபழனி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் இரவு முதலே மிதமான மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாகவே மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09:15:35 on 07 Dec
09:13:35 on 07 Dec 2019,Sat
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
09:13:35 on 07 Dec
09:11:55 on 07 Dec 2019,Sat
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்து எரிக்கப்பட்ட பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். வழக்கு தொடர்பாக ரேபரேலி நீதிமன்றத்தில் ஆஜராகசென்ற பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் தாக்கி, தீவைத்து எரித்தது.
09:11:55 on 07 Dec
09:09:03 on 07 Dec 2019,Sat
ஐதராபாத்தில் குற்றவாளிகள் 4 பேர் எண்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் திங்கள் காலை விசாரணை நடைபெறவுள்ளது. திங்கட்கிழமை விசாரணை நடத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமச்சந்திர ராவ், லட்சுமண ராவ் உத்தரவிட்டுள்ளனர்.
09:09:03 on 07 Dec
08:55:01 on 07 Dec 2019,Sat
குடும்பம், பார்க்கும் வேலை இவை இரண்டுக்கும் சமமான அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இது கடினமானதுதான் என்றாலும் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். உங்களிடம் சேர்ந்து இருந்து பொழுதை போக்குவதற்கு குடும்பத்தினர் எதிர்பார்க்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும். அது குடும்பத்தினர் உங்களுடன் நெருங்கி பழகுவதற்கு வழிவகை செய்யும்.
08:55:01 on 07 Dec
07:55:01 on 07 Dec 2019,Sat
சங்கரமட நிர்வாகத்தில் எந்த வகையிலும் மூக்கை நுழைக்கக் கூடாது என்கிற நிபந்தனையோடு, குருமூர்த்தியுடன் சங்கரமடத் தரப்பு ஒரு ஒப்பந்தத்தை அண்மையில் போட்டிருப்பதாக கூறுகின்றனர். அதன்படி, சங்கரமடத்தின் பிராஞ்சான கலவை மடம், அதன் சொத்து பத்துக்களோடு குருமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்கின்றனர்.
07:55:01 on 07 Dec
06:55:01 on 07 Dec 2019,Sat
Realme XT 730G டிசம்பர் 17ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ரியல்மி வெள்ளிக்கிழமை அனுப்பிய ஊடக அழைப்பின் மூலம் தெரியவந்துள்ளது. Realme XT 730G செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme X2-வின் இந்தியா வேரியண்டாக அறிமுகமாகும்.
06:55:01 on 07 Dec
05:55:01 on 07 Dec 2019,Sat
அரைக்கீரை நரம்பு நோய்களைக் குணப்படுத்தும். அரைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், பசியற்ற நிலையை மாற்றி பசியையூட்டும். பித்தக் கோளாறுகளால் ஏற்படும் தலைச்சுற்று வாந்தி போன்றவற்றை இக்கீரை குணப்படுத்தும். இக்கீரையை தினமும் உணவில் சேர்த்து வந்தால் இருதயம், மூளை வலுப்பெறும்.
05:55:01 on 07 Dec
10:57:01 on 06 Dec 2019,Fri
சிம்புவின் மாநாடு படம் ட்ராப் ஆனதாக கூட கூறப்பட்டது, அதை வெங்கட் பிரபு லாரன்ஸுடன் படம் செய்ய போகிறார் என்ற செய்தியும் உறுதியாக்கியது. ஆனால், மாநாடு கண்டிப்பாக ஜனவரி மாதம் தொடங்கும் என பிரபலம் ஒருவர் கூறியுள்ளார், இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
10:57:01 on 06 Dec
09:57:01 on 06 Dec 2019,Fri
விஜய்யின் 65-வது படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
09:57:01 on 06 Dec
08:55:01 on 06 Dec 2019,Fri
நித்தியானந்தா வெளிநாட்டு தப்பிச் சென்று விட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் அவர் தனியாக தீவு ஒன்றை வாங்கி, அங்கு கைலாஷ் என்ற புதிய நாட்டை உருவாக்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை நித்தியானந்தா, மடகாஸ்கர் தீவில் இருந்து ஹைதி தீவிற்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது.
08:55:01 on 06 Dec
08:25:01 on 06 Dec 2019,Fri
பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
08:25:01 on 06 Dec
07:55:01 on 06 Dec 2019,Fri
தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொடூரமான முறையில் எரித்துக் கொன்றவர்களை என்கவுன்டர் செய்ததை வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார்
07:55:01 on 06 Dec
07:25:01 on 06 Dec 2019,Fri
சென்னை கிண்டியில் ரயில்வே பெண் ஊழியரை கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டார். கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பெண்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
07:25:01 on 06 Dec
06:56:02 on 06 Dec 2019,Fri
அதிகாலை நான்கு மணி. முகாம் அமைதியாய் இருக்கிறது. பாரியும் சுஜய்யும் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. மாவூத்துகள் மட்டும் வன ஊழியர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் காட்டுக்குள் இருந்து மதம் பிடித்த காட்டு யானை ஒன்று முகாமிற்குள் நுழைகிறது. அதன் சத்தம் வனத்தையே மிரட்டுமளவிற்கு இருந்தது.
06:56:02 on 06 Dec
06:55:01 on 06 Dec 2019,Fri
அதிகாலை நான்கு மணி. முகாம் அமைதியாய் இருக்கிறது. பாரியும் சுஜய்யும் கட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. மாவூத்துகள் மட்டும் வன ஊழியர்கள் தூக்கத்தில் இருக்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் காட்டுக்குள் இருந்து மதம் பிடித்த காட்டு யானை ஒன்று முகாமிற்குள் நுழைகிறது. அதன் சத்தம் வனத்தையே மிரட்டுமளவிற்கு இருந்தது.
06:55:01 on 06 Dec
06:25:01 on 06 Dec 2019,Fri
தெலங்கானாவில் குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டது எப்படி என சைபராபாத் காவல் ஆணையர் விஸ்வநாத் சஜ்ஜனார் விளக்கம் அளித்துள்ளார். பாதுகாப்புக்கு 10 போலீஸார் உடனிருந்த நிலையில், காவலர்களிடமிருந்து திடீரென துப்பாக்கியை பறித்ததாகவும், சரணடையுமாறு எச்சரித்தபோது, போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார்.
06:25:01 on 06 Dec
05:58:51 on 06 Dec 2019,Fri
படத்தில் முதல் பாதியில் தேவையில்லாத இடங்களில் ரொமான்ஸ் காட்சிகள் வந்து செல்லும், அட இப்ப எதற்குடா இது என்றாலும், அதை வைத்து காட்சிகளை நகர்த்தியது அந்த ரொமான்ஸ் காட்சிகளை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம். அதிலும் கிளைமேக்ஸ் அப்படியே கான்ஜுரிங் இரண்டாம் பாகத்தை பார்த்தது போல் உள்ளது.
05:58:51 on 06 Dec
05:57:02 on 06 Dec 2019,Fri
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்கள் அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்தக்கோரும் புளூ கார்னர் நோட்டீஸை நித்தியானந்தாவுக்கு வழங்க வேண்டும் என மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.
05:57:02 on 06 Dec
05:25:01 on 06 Dec 2019,Fri
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் ஆலோசகராக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை வழங்குவதற்காகவே விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு ஆண்டு அவர் இந்த பணியில் இருப்பார்.
05:25:01 on 06 Dec
04:55:02 on 06 Dec 2019,Fri
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் மலைக் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மெட்டுக்கல் என்ற பகுதியில் தேயிலை தோட்டத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பூமி 5 அடி அளவிற்கு உள்வாங்கியது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.
04:55:02 on 06 Dec
04:27:02 on 06 Dec 2019,Fri
கிட்டத்தட்ட 2010ஆம் ஆண்டு வரை நித்தியின் பெரும்பாலான பொருளாதார ஈட்டுதல்கள் என்பது அவரது சத்சங்கம்தான். அதாவது நித்தியின் சொற்பொழிவுகள்தான். வேதங்கள், உபநிஷத்துகள் பற்றி அடர்த்தியான, நீரோட்டமான ஆங்கிலத்தில் அவர் அளிக்கும் சத்சங்கத்தில் பங்கேற்பவர்கள் மூலம் கட்டணம் பல கோடி ரூபாய்களுக்கு வசூலாயின.
04:27:02 on 06 Dec
03:57:01 on 06 Dec 2019,Fri
கடந்த 2 ஆண்டுகளில் 629 பாகிஸ்தான் பெண்கள், சீன ஆண்களுக்கு மணப்பெண்களாக பணத்துக்காக விற்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 629 பெண்கள் விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.
03:57:01 on 06 Dec
03:27:01 on 06 Dec 2019,Fri
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் பேண்ட் 5 ஃபிட்னஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக ஏழு நாட்கள் பேட்டரி பேக்கப், 22 நாட்களுக்கு ஸ்டான்ட்பை வசதியை கொண்டுள்ளது இந்த மாடல். இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5 மாடலின் விலையைப் பொறுத்தவரை ரூ.17,999-ஆக நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது.
03:27:01 on 06 Dec
02:55:02 on 06 Dec 2019,Fri
குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02:55:02 on 06 Dec
02:27:02 on 06 Dec 2019,Fri
பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் என்கவுண்டரை நடத்தியது சைபராபாத் காவல் அதிகாரியான சாஜ்னார் என்பவர் தான். இவர் நடத்தியது முதல் என்கவுண்டர் கிடையாது. ஏற்கனவே இவர் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பாகவே பெண் மீது ஆசிட் வீசிய மூன்று நபர்களை என்கவுண்டர் செய்துள்ளார்.
02:27:02 on 06 Dec
01:57:02 on 06 Dec 2019,Fri
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள கிராமத்திற்குள் 50க்கும் மேற்பட்ட பனிக்கரடிகள் நுழைந்துள்ளதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுகோட்கா பிராந்தியத்தில் உள்ள ரிர்காப்பி கிராமத்தில் அனைத்து பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
01:57:02 on 06 Dec
01:27:01 on 06 Dec 2019,Fri
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார், தான் ஒரு சைவ உணவுப்பிரியர் என்பதால் ஒருபோதும் வெங்காயத்தை சாப்பிட்டதே இல்லை என்றார். ஆகையால், தனக்கு எப்படி வெங்காயத்தின் விலை உயர்வு பற்றி தெரியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
01:27:01 on 06 Dec
12:57:01 on 06 Dec 2019,Fri
உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி நகரில் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லகுராபிர் என்ற பகுதியில் உள்ள செல்போன் கடையில், ஸ்மார்ட்போன் வாங்கினால், ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை அறிவிப்புக்கு பின்னர் கடையில் கூட்டம் அதிகரித்துள்ளதாக கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
12:57:01 on 06 Dec
12:27:01 on 06 Dec 2019,Fri
அஜித் நடித்து, வி.சி.குகநாதன் டைரக்டு செய்த படம், `மைனர் மாப்பிள்ளை.' 1995ஆம் ஆண்டில் தயாராகி வெளிவந்த இந்த படம், 24 வருடங்களுக்குப்பின், டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரைக்கு வர இருக்கிறது. இதில் அஜித்துடன் ரஞ்சித், வடிவேல், விவேக், அஜய்ரத்னம், கீர்த்தனா, சுபாஸ்ரீ, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்து இருந்தார்கள்.
12:27:01 on 06 Dec
11:57:01 on 06 Dec 2019,Fri
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் சோளக்காடு பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, சோளக்காடு சுடுகாட்டு பகுதியில் உள்ள ஒரு முள் புதரில் 35 நாட்டுத்துப்பாக்கிகளை மர்ம நபர்கள் வீசிச்சென்றிருப்பது தெரிய வந்தது. வாழவந்திநாடு காவல்துறையினர் அவற்றை கைப்பற்றி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
11:57:01 on 06 Dec
11:32:32 on 06 Dec 2019,Fri
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான #hyderabadpolice, #Encounter, #JusticeForDisha, #justiceforpriyanakareddy ஆகிய ஹேஸ்டாக்குகள் டுவிட்டரில் இந்தியா அளவில் டிரண்டாகி வருகின்றன.
11:32:32 on 06 Dec
11:27:02 on 06 Dec 2019,Fri
இன்று அதிகாலை 3 மணி அளவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சட்டான்பள்ளி பாலத்துக்கு 4 பேரையும் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது திடீரென முதல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆரிஃப், ஒரு காவலரின் கையிலிருந்த துப்பாக்கியைப் பறித்துள்ளார். உடனடியாக அலர்ட் ஆன மற்ற மூவரும் தப்பிக்கத் தயாராகியுள்ளனர்.
11:27:02 on 06 Dec
11:24:15 on 06 Dec 2019,Fri
பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற 4 குற்றவாளிகள் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ”சாமான்ய குடிமகன் என்ற அடிப்படையில், என்கவுன்டர் சம்பவம் மகிழ்ச்சியை தருகிறது. இதனை தான் அனைவரும் விரும்பினோம்.” என்றார்.
11:24:15 on 06 Dec
11:23:31 on 06 Dec 2019,Fri
பெண் டாக்டரை எரித்துக் கொன்ற இடத்தின் அருகிலேயே, 4 குற்றவாளிகளையும் போலீசார் சுட்டுக்கொன்றனர். இது குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, இந்த விஷயத்தில் உ.பி. காவல்துறையும், டெல்லி காவல்துறையும் ஐதராபாத் போலீஸ் போன்று உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.” என்றார்.
11:23:31 on 06 Dec
11:15:37 on 06 Dec 2019,Fri
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டன்ர். இது குறித்து நிர்பயாவின் தாயார், "4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தவிஷயத்தில் நீதி வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
11:15:37 on 06 Dec
11:12:05 on 06 Dec 2019,Fri
வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு பாடம் என 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி நடிகர் விவேக் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கடுமையான நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு தலைவணங்குகிறேன் என நடிகர் விவேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
11:12:05 on 06 Dec
10:57:57 on 06 Dec 2019,Fri
நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10:57:57 on 06 Dec
10:57:01 on 06 Dec 2019,Fri
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான குற்றச்சாட்டுகளை பிரதிநிதிகள் சபை பதிவு செய்யும் என்று அதன் சபாநாயகர் நான்சி பெலோசி நேற்று அறிவித்திருக்கிறார். இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது முழு பதவிக்காலத்தையும் முடிப்பாரா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.
10:57:01 on 06 Dec
10:53:44 on 06 Dec 2019,Fri
புதிய மாவட்டங்களை வரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கூடாது என்று திமுக உள்ளிட்ட 12 தரப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 9 மாவட்டங்களை தவிர்த்து தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது.
10:53:44 on 06 Dec
10:27:01 on 06 Dec 2019,Fri
உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சில செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிறது. கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.
10:27:01 on 06 Dec
09:57:01 on 06 Dec 2019,Fri
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படும் என சில ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், அரசு ஊழியர்கள் ஓய்வு குறித்து ஆணையிட பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு மட்டுமே அதிகாரமுண்டு எனவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
09:57:01 on 06 Dec
09:27:01 on 06 Dec 2019,Fri
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இருந்து புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தோதலை நிறுத்திவைக்கத் தயாராக உள்ளதாக தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திமுக தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
09:27:01 on 06 Dec
09:06:31 on 06 Dec 2019,Fri
பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். இது குறித்து அந்த பெண்ணின் தந்தை ஸ்ரீதர், 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றதால் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும் என்றும், 4 பேரையும் சுட்டுக் கொன்ற போலீஸ், மற்றும் தெலங்கானா அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
09:06:31 on 06 Dec
08:55:01 on 06 Dec 2019,Fri
ப்ளிப்கார்ட் மற்றும் நோக்கியா இணைந்து நோக்கியாவின் முதல் ஸ்மார்ட் டி.வி. மாடலை இந்தியாவில் வெளியிட்டுள்ளன. மேக் இன் இந்தியா திட்டத்தின் அங்கமாக வெளியிடப்பட்டு இருக்கும் புதிய ஸ்மார்ட் டிவி. 55 இன்ச் 4K அல்ட்ரா ஹெச்.டி.ஆர். டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.41,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
08:55:01 on 06 Dec
08:42:33 on 06 Dec 2019,Fri
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.83 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.53 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
08:42:33 on 06 Dec
08:40:14 on 06 Dec 2019,Fri
வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு 2ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றுக்கு கொண்டுசெல்லவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியுள்ளது.
08:40:14 on 06 Dec
08:31:19 on 06 Dec 2019,Fri
ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற 4 பேரையும் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்துள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பியோட முயன்ற 4 பேரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர்.
08:31:19 on 06 Dec
07:55:01 on 06 Dec 2019,Fri
மோட்டோரோலாவின் முதல் 64-மெகாபிக்சல் போனான மோட்டோரோலா ஒன் ஹைப்பர் அதன் ஒரே வேரியண்டிற்காக $399.99 (சுமார் ரூ.29,000) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய சந்தைகளில் ஏற்கனவே கிடைக்கிறது. ஆனால், அது இந்திய சந்தைகளுக்கு எப்போது வரும் என்பது குறித்த விவரங்கள் இல்லை.
07:55:01 on 06 Dec
06:55:01 on 06 Dec 2019,Fri
பொது நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு கைகொடுக்க ஏங்கிய சிறுமியை அபுதாபி இளவரசர் கவனிக்காததால், சிறுமி ஏமார்ந்துபோனார். பின்னர் இந்த வீடியோ இணையதளங்களில் வலம் வந்ததை அடுத்து, அந்த சின்னஞ்சிறிய சிறுமியின் வாடிய முகத்தைக் கண்டு பலரும் வாடியதைப் போல் அபுதாபி இளவரசரும் ஒரு கணம் உருகித்தான் போய்விட்டார்.
06:55:01 on 06 Dec
05:57:01 on 06 Dec 2019,Fri
ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து, பின்னர் அதனுடன் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவேண்டும். இதனை தினமும் குடித்து வந்தால் பலவகையான நோய்கள் குணமடைகிறது. சளியினால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க இந்த பானத்தை குடித்து வந்தால் நல்ல நிவாரனம் கிடைக்கும்.
05:57:01 on 06 Dec
10:57:02 on 05 Dec 2019,Thu
சமீபத்தில் கைதி படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை போனில் அழைத்து ரஜினி பாராட்டினார். அப்போதே ரஜினி - லோகேஷ் கனகராஜ் இணைவதாக செய்திகள் வெளியாகின. தற்போது அந்த படத்தை அந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
10:57:02 on 05 Dec
09:57:01 on 05 Dec 2019,Thu
அமெரிக்காவைச் சேர்ந்த 8 மாத குழந்தை லூனாவுக்கு முகத்தில் நெற்றி மற்றும் கண்களைச் சுற்றி கறுப்பு நிறத்தில் மச்சம் போன்று காணப்படுகிறது. இதற்கு காரணம் மெலனின் எனப்படும் நிறமி இந்த இடங்களில் அடர்ந்து காணப்படுவதால் லூனாவுக்கு இப்படி உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
09:57:01 on 05 Dec
08:57:01 on 05 Dec 2019,Thu
இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட ஆராய்ச்சி நிறுவனமான யூரோமானிட்டர் இன்டர்நேஷனல், சுற்றுலா பயணிகள் விரும்பும் பிரபலமான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், பல மாதங்களாக போராட்டம் நடந்துவந்தாலும் ஹாங்காங் நகரம் முதலிடத்தை பிடித்தது. சென்னை 36வது இடத்திலும், மும்பை 14வது இடத்திலும் உள்ளது.
08:57:01 on 05 Dec
08:27:02 on 05 Dec 2019,Thu
சாருகேஷ் சேகர் என்ற இயக்குநரின் திரைப்படத்தில் அடுத்ததாக நடிக்கும் அறிவிப்பை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வாணி போஜன், சுவாரசியமான தகவல் என்னவென்றால், வாணி போஜன் குறிப்பிட்டிருக்கும் சாருகேஷ் சேகர், கார்த்திக் சுப்பராஜின் பெஞ்ச் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்ட குறும்படங்களில் ‘புழு’ என்ற குறும்படத்தை இயக்கியவர்.
08:27:02 on 05 Dec
07:55:01 on 05 Dec 2019,Thu
சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க இருட்டு என்ற பெயரில் புதிய பேய் படம் தயாராகி உள்ளது. இப்படத்தினை வி.இசட் துரை இயக்கி உள்ளார். சாக்ஷி சவுத்ரி, வி.டிவி. கணேஷ், விமலா ராமன், யோகிபாபு, சாய் தன்சிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.
07:55:01 on 05 Dec
07:25:02 on 05 Dec 2019,Thu
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரியம்மன் தொழில் நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த இளம் ஆராய்ச்சி மாணவ மாணவிகள் 6 பேர் கூட்டாக சேர்ந்து தங்களது ஆய்வகத்தில், 5 கிலோ எடையில் சிறிய வடிவிலான, ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளில் தத்தளிப்பவர்களை மீட்கும் இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர்.
07:25:02 on 05 Dec
06:55:01 on 05 Dec 2019,Thu
அரசுக்கே ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறார் நித்தியானந்தா. இவரை கைதுசெய்ய நீதிமன்றமே உத்தரவிட்டும் அதைப் பற்றி கவலையின்றி ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு பொழுதுக்கு ஒரு கெட்டப்பும், நாளுக்கு ஒரு வீடியோவுமாக உல்லாச மோடில் இருக்கிறார்.
06:55:01 on 05 Dec
06:25:02 on 05 Dec 2019,Thu
சமையலுக்கு தினந்தோறும் பயன்படும் வெங்காயம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். பொதுமக்கள் வழக்கத்தை விட குறைந்த அளவே வெங்காயம் வாங்கி செல்கின்றனர். இந்த விலை உயர்வு மேலும் ஒரு மாதம் வரை நீடிக்கும்.
06:25:02 on 05 Dec
05:57:03 on 05 Dec 2019,Thu
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கருத்துக் கூறியது. தொடர்ந்து. இது தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
05:57:03 on 05 Dec
05:27:01 on 05 Dec 2019,Thu
உத்திரப்பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் 23 வயது இளம் பெண்ணை கடந்த மார்ச் மாதம் 2 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டு, இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக சென்ற போது, நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் அந்த பெண் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளார்.
05:27:01 on 05 Dec
04:57:01 on 05 Dec 2019,Thu
இரும்பு கடையில் லாரி ட்ரைவராக வேலைப்பார்க்கும் தினேஷ், டீச்சராக இருக்கு ஆனந்தியை காதலிக்கின்றார். ஆனால், ஆனந்தி வீட்டில் சாதி ரீதியாக பிரச்சனை இருக்க எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், இதைவிட பெரிய பிரச்சனை அந்த இரும்பு கடைக்கு இரண்டாம் உலகப்போரில் இருந்து மிஞ்சிய குண்டுகளில் ஒன்று கரை ஒதுங்கி இவர்கள் கடைக்கு வருகிறது.
04:57:01 on 05 Dec
04:27:01 on 05 Dec 2019,Thu
பாலியல் வழக்கு, குஜராத் ஆசிரமத்தில் சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட புகார்களில் நித்யானாந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். அதேபோன்று இச்சாதரி சந்த் சுவாமி பீமானந்த், பாலியல் வழக்கில் 2 முறை கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை போரிவலி பகுதியில் உள்ள ஸ்ரீ ராதே மா, ஆபாசமாக பேசியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
04:27:01 on 05 Dec
03:57:02 on 05 Dec 2019,Thu
உலக செஸ் கூட்டமைப்பின் துணைத்தலைவர் நிகேல் சார்ட், ”சென்னையில் செஸ் விளையாடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கிரிக்கெட்டிற்கு முக்கியத்துவம் தரப்படுவதுபோல், செஸ் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் தரவேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கிரிக்கெட்டை போல் செஸ் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த திட்டமிட்டோம்” என்றார்.
03:57:02 on 05 Dec
03:27:01 on 05 Dec 2019,Thu
புதிய வீடியோவை நித்தியானந்தா யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார். அதில், நான் ஒரு புறம்போக்கு, பரதேசி எனக் கூறும் நித்தியானந்தா என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என கூறியுள்ளார். நான் ஜாலியா இருப்பதை பார்த்து ஏன் வயிறு எரிய வேண்டும், முடிந்தால் நீங்களும் ஜாலியாக இருங்கள் என்றும் நித்தியானந்தா பேசியுள்ளார்.
03:27:01 on 05 Dec
02:57:01 on 05 Dec 2019,Thu
எம்.பி. சுப்ரியா சூலே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “நான் அதிகமாக வெங்காயமோ அல்லது பூண்டோ சாப்பிடுவதில்லை. வெங்காயம் மற்றும் பூண்டு பற்றி அதிகம் அக்கறை கொள்ளாத ஒரு குடும்ப பழக்கத்தில் இருந்து நான் வந்திருக்கிறேன்”என்று கூறினார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
02:57:01 on 05 Dec
02:27:01 on 05 Dec 2019,Thu
”பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய மோசமான முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் பாதித்துள்ளது. பொருளாதாரம் குறித்து வழக்கத்திற்கு மாறாக பிரதமர் மவுனம் காத்து வருகிறார். பொருளாதார நிபுணர் கூறியது போல், அரசாங்கம் பொருளாதாரத்தின் ‘திறமையற்ற மேலாளராக’ மாறிவிட்டது.” என ப.சிதம்பரம் குற்றச்சாட்டியுள்ளார்.
02:27:01 on 05 Dec
02:03:02 on 05 Dec 2019,Thu
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அவரது கணவர் ஈஸ்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வர், ”ஜெயஸ்ரீ கூறுவது முற்றிலும் பொய். பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் என் மீது வீண்பழி சுமத்துகிறார்.” என குற்றம் சாட்டினார்.
02:03:02 on 05 Dec
02:00:01 on 05 Dec 2019,Thu
சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு அவரது கணவர் ஈஸ்வர் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈஸ்வர், ”ஜெயஸ்ரீ கூறுவது முற்றிலும் பொய். பணம் பறிக்கும் நோக்கத்தில் அவர் என் மீது வீண்பழி சுமத்துகிறார்.” என குற்றம் சாட்டினார்.
02:00:01 on 05 Dec
01:49:29 on 05 Dec 2019,Thu
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துகொண்டார் பா.ஜ.க மாநில துணைத் தலைவராக இருந்த பி.டி.அரசகுமார். இது குறித்து அவர் ``ஸ்டாலின் குறித்து பேசியதற்காக, என் வாழ்நாளில் கேட்கக்கூடாத வார்த்தைகளை எதிர்கொண்டேன்." என்றார்.
01:49:29 on 05 Dec