View in the JustOut app
X

குழந்தைகளுக்கு தோல்வி ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில் தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்க வேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை பொறாமை என்னும் இருளில் தள்ளிவிடும். போட்டிக்கும், பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம்.

02:56:02 on 19 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

’ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் எங்களின் முழு அளவிலான நேரடி முதலீட்டை விலக்கி கொண்டுள்ளோம். அந்த வகையில் அளிக்கப்பட்ட பங்கு மூலதனமாக வைத்திருந்த 9.96 சதவீத பங்குகளை முழுவதுமாக விற்று அந்நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளோம்’ என மும்பை பங்குச் சந்தையிடம் பிராமல் எண்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது.

02:26:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினமணி

தர்பூசணி, முலாம்பழம், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி, எலுமிச்சை, ஆரஞ்சு, நாவல் பழம், மாம்பழம், லிச்சி மற்றும் செர்ரி போன்றவை உடலுக்கு ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் வழங்கி பாதுகாக்கிறது.

01:57:01 on 19 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஐபோன் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் என அனைத்தையும் அன்லாக் செய்யும் வகையில் புதிய மென்பொருள் ஒன்றை Cellebrite என்ற இஸ்ரேல் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஆனால், இதை அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்த முடியாது.

01:26:01 on 19 Jun

மேலும் வாசிக்க விகடன்

இயற்கை உணவான தானியங்கள் புரதச்சத்தும் ஊட்டச்சத்தும் நிரம்பியது. அவற்றை முளை கட்டப்படுவதால் செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும் பைரேட்ஸ் என்ற சத்து குறைக்கப்படும், சிக்கலான ஸ்டார்ச்சுகள் உடைக்கப்பட்ட எளிதில் செரிமானம் ஆகிடும்.

12:59:57 on 19 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே முகமூடி அணிந்த மர்மநபர்கள் வீடு புகுந்து பெண்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 25 சவரன் நகைகளை பறித்துச்சென்றது பற்றி போலீசார் விசாரனணை நடத்தி வருகின்றனர்.

12:26:02 on 19 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கர்ப்பிணி பெண்கள் எப்போதும் ஒரு உணவை சாப்பிட்டு, அதை தன் உடல் ஏற்றுக்கொள்ளாவிட்டால் உடனடியாக தவிர்த்துவிட வேண்டியது நல்லது. ஆம், ஒரு சில உணவை நாம் வழக்கமான நாளில் எடுத்துக்கொண்டாலும், கர்ப்ப காலத்தில் தேவையற்ற ஒவ்வாமை பிரச்சனையை அது ஏற்படுத்த அதிக வாய்ப்பிருக்கிறது.

12:00:03 on 19 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

'சென்னையின் குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்காக செயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும்' என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.

11:25:01 on 18 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

10:56:02 on 18 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலகமே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாறி வரும் வேளையில், மேரி மீகர் எனும் நிறுவனம் இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

10:26:02 on 18 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

திருவண்ணாமலை அருகே ரேஷன் கடையில் அரிசி வாங்கச் சென்ற மூதாட்டி வரிசையில் காத்திருந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கிய அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

09:56:01 on 18 Jun

மேலும் வாசிக்க காமதேனு

பயோ கேரிபேக் தயாரிப்பதற்கான உரிமத்தை 24 மணி நேரத்தில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

09:26:01 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகம் முழுவதும் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். காணொளிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ள முதல்வர், தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க போர்கால நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவார் என கூறப்படுகிறது.

08:55:01 on 18 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

’ஜெயலலிதாவின் புகழுக்கு புகழ் சேர்க்கும் விதமாக நினைவு மண்டபம் அமைகிறது. இன்னும் 5 மாத காலத்தில் ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நிறைவுபெற்று, பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்படும். சுமார் 60 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது’ என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

08:40:02 on 18 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவின் சார்பாக விண்ணில் ராக்கெட்டுகளை ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் 2 ஏவுதளங்கள் இருக்கின்றன. இந்நிலையில், 3வது ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக தூத்துக்குடி, குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணியினை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

08:25:01 on 18 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

இன்று அரவிந்த் சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை அதிதி ராவ், ’மற்ற பெண்கள் என்னைப் பார்த்து பொறாமை பட்டனர். எப்போதும் என் இதயத்தை திருடியது நீதான்’ எனக் கூறியுள்ளார். அதிதி ராவ் திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

08:10:04 on 18 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

இன்று நடைபெற்ற மக்களவையின் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு விழாவில் தமிழக எம்.பிக்கள் தமிழ் மொழியில் பதவியேற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து தேசிய அளவில் #தமிழ்-வாழ்க என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

08:06:58 on 18 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வடக்கு ஜப்பானில் மாமகட்டாவுக்கு அப்பால் நடுக்கடலில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. ஹென்சு தீவில் இருந்து 85 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து யாமகட்டா, நிகடா, இஷிகாவா, ஆகிய நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

07:55:02 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லி மெட்ரோ ரயிலில் இளம்பெண் ஒருவரைப் பார்த்து இளைஞர் ஒருவர் சுய இன்பம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இளைஞரின் கன்னத்தில் பளார் என்று அரை விட்டிருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் இளம்பெண் விடுத்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஹூடா சிட்டி சென்டர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.

07:47:42 on 18 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

’யோகி பாபு கொஞ்சம் தன் உடம்பைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வெற்றிகள் வந்தவுடன் கொஞ்சம் பொறுப்புகள் வரணும். நல்லா சாப்பிட்டு, தூங்குங்கள் அதற்காகத்தான் வேலை செய்கிறோம். வரும் காலத்தில் இன்னும் உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’ என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

07:26:33 on 18 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

அரபிக்கடலில் உருவான வாயு புயல் 13ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் வாயு புயலின் திசை மாறியது. கடல் பகுதியிலே நீண்ட நாளாக வாயு புயல் நின்றது. வாயு புயல் பலவீனம் அடைந்து, குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறி இன்று காலை கட்ச் கடலோரத்தில் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்தது.

07:13:42 on 18 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

விஜய் சேதுபதி நடித்த ’சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் பாடல்கள் இடம்பெறாத நிலையில், படத்தின் காட்சிகளைப் பயன்படுத்தி பின்னணி பாடலாக ஒலித்த ‘ஐ எம் ஏ டிஸ்கோ டான்ஸர்’ என்ற பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மாண்டாஜ் பாடலாக வெளிவந்துள்ள இந்தப் பாடல் 2 நிமிடம் 28 விநாடிகள் நீளம் கொண்டதாக அமைந்துள்ளது.

06:40:15 on 18 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

2008ஆம் ஆண்டில் உலகின் 6வது பெரும் கோடீஸ்வரராக திகழ்ந்த அனில் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது அதளபாதாளத்திற்குச் சென்றுள்ளது. வெறும் 11 ஆண்டுகளில் அவரது பங்கு மதிப்பு 3,651 கோடி ரூபாயாக (523 மில்லியன் டாலர்கள்) சரிந்துள்ளது. இதில் அடமானத் தொகையும் அடக்கம். இதன் காரணமாக பில்லியனர் என்ற அந்தஸ்தை அவர் இழந்துள்ளார்.

06:33:47 on 18 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி வழக்கறிஞர் சுதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்தியன் பிராட்காஸ்ட் ஃபவுண்டேசனின் (IBF) தணிக்கைச் சான்று பெறாமல் ஒளிபரப்பக் கூடாது என தெரிவித்துள்ளார்.

06:30:27 on 18 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழக எம்.பி.க்கள் அனைவரும் மக்களவையில் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இது குறித்து பாடலாசிரியர் வைரமுத்து, “நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் - மொழி காக்க தமிழையும் ஆட்சிமொழி ஆக்க” என பதிவிட்டுள்ளார்.

06:08:32 on 18 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழக எம்.பி.க்கள் அனைவரும் மக்களவையில் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டது குறித்து நாஞ்சில் சம்பத், ”தமிழர்கள் எப்பொழுதும் தனித்துவம் உள்ளவர்கள், எங்களை தவிர்க்கவும் முடியாது, எங்களை தகர்க்கவும் முடியாது என்பதை முதல் நாளிலேயே இன்று முரசு அறைந்ததைப்போலவே அறைந்து நிரூபித்திருக்கிறார்கள்.” என்றார்.

05:41:03 on 18 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடித்திருக்கும் கொலைகாரன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. முதல்வார இறுதியில் ஒரு கோடி வசூலித்த படம் வார நாட்களில் 1.07 கோடியை தனதாக்கியுள்ளது. இரண்டாவது வார இறுதியில் இதன் சென்னை வசூல் 62.50 லட்சங்கள். முதல் பத்து தினங்களில் கொலைகாரனின் சென்னை வசூல் 2.72 கோடிகள். படம் வெற்றி.

05:29:56 on 18 Jun

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நெல்லை- செங்கோட்டை பாசஞ்சர் ரயில் இன்று மாலை 6.25க்கு பதில் இரவு 10.00மணிக்கு புறப்படும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இணை ரயில் தாமதம் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இது குறித்து தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது

05:12:30 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

ஜீவஜோதியின் முதல் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், சரவண பவன் ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இந்த நிலையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்துக்கு ஜீவஜோதி இன்று வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

05:06:27 on 18 Jun

மேலும் வாசிக்க விகடன்

மேயாத மான் பட இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலாபால் நடித்துள்ள 'ஆடை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கோலிவுட்டையே பரபரப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில் அமலா பால் ஆடையில்லாமல் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

04:33:12 on 18 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழக எம்.பிக்களின் ‘வாழ்க தமிழ்’ முழக்கத்திற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பாஜகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் “பாரத் மாதா கி ஜே” என்று புகழ் பாடினர். ஆனால் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது, தமிழக எம்.பிக்கள் தமிழில் பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினர். இந்நிநிலையில் #தமிழ்_வாழ்க ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

04:32:01 on 18 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஒசூர் அருகே கெலமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்.ரத்தினகிரி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 2005ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்துவந்த இந்தப் பள்ளியில் 2012ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ஒரு ஆசிரியரே பாடம் எடுக்கும் நிலை உள்ளது.

04:27:20 on 18 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் 15வது மாநகராட்சியாக ஆவடியை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நகராட்சியாக இருந்த ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆவடி, பூவிருந்தவல்லி, திருவேற்காடு உள்பட நகராட்சிகள் இணைக்கப்பட்டு ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

04:14:39 on 18 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

’முத்தக்காட்சி, பிகினி உடை, இதில் ஏதாவது ஒன்றில் நடிக்க வேண்டும், என்றால் என்ன செய்வீர்கள்?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த ப்ரியா பவானி ஷங்கர், ‘கதைக்கு மிக முக்கியம் என்றால் முத்தக்காட்சி கூட ஓகே தான், ஆனால், பிகினி சான்ஸே இல்லை’ என்று பதில் அளித்துள்ளார்.

04:12:45 on 18 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

அதிமுக சார்பாக வெற்றி பெற்ற தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பதவி பிரமாணம் எடுத்தபோது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு கைதட்டி வரவேற்பு தெரிவித்தனர். ரவீந்திரநாத் குமார் பதவி பிரமாணத்தின்போது, ஜெய்ஹிந்த் மற்றும் வந்தே மாதரம் எனக் குறிப்பிட்டார்.

04:06:29 on 18 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நடிகர் சங்கத் தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதாக இருந்த சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் அதேநேரத்தில் எஸ்.வி.சேகரின் ‘அல்வா’ நாடகம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

04:04:44 on 18 Jun

மேலும் வாசிக்க தினமணி

நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதியிலிருந்த வந்த சிறுத்தை ஒன்று குடியிருப்புப் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளுக்கிடையே நுழைந்து ஆடு ஒன்றைக் கவ்விச் சென்றுள்ளது. இதுவரையில் 25 ஆடுகளைக் கடித்துக் குதறிய சிறுத்தை மனிதர்களைத் தாக்கும் முன் அதனை கூண்டு வைத்துப் பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

03:59:20 on 18 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீதிகளில் குடத்துடன் மக்கள் தண்ணீருக்காக அலைவதற்கு அதிமுகதான் காரணம்’ என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். மேலும் அவர், ‘திருச்சி, ஈரோடு, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது மட்டுமே இதற்கு தீர்வு’ என்றும் கூறியுள்ளார்.

03:55:01 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

செக்கச்சிவந்த வானம் படத்தைத் தொடர்ந்து அரவிந் சாமி கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வனங்காமுடி, நரகாசூரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்களைத் தொடர்ந்து தற்போது பி.ஜெயக்குமார் இயக்கும் புலனாய்வு படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

03:40:02 on 18 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தற்போது ஓ பேபி படத்திற்காக சமந்தாவிற்கு குரல் கொடுத்துள்ளார் சின்மயி. இந்த வாய்ப்புக்காக சமந்தாவுக்கும், இயக்குநர் நந்தினி ரெட்டிக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சின்மயி. இதுகுறித்து அவர், ’இங்கு ஒரு பெண்ணின் வாழ்வை சிறப்பாக்க மற்றொரு பெண்ணால்தான் முடியும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

03:25:01 on 18 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ’தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க, போர்க்கால அடிப்படையில் அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்’ வலியுறுத்தியுள்ளார்.

03:10:02 on 18 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தண்ணீர் பிரச்சனையால் சென்னையில் உள்ள சில பள்ளிகள் மூட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ’தண்ணீர் பிரச்சனையால் எந்த பள்ளிகளும் மூடப்படவில்லை. பள்ளிகளில் தண்ணீர் பிரச்சினை இருந்தால் உடனே சரிசெய்யப்படும்’ என தெரிவித்துள்ளார்.

02:57:01 on 18 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 39 எம்.பி.க்களும் இன்று பதவியேற்றனர். பெரும்பாலான எம்.பி.க்கள் வெள்ளை சட்டை, வேஷ்டியில் பதவியேற்றனர். தருமபுரி எம்.பி. செந்தில்குமார் கருப்புச் சட்டை அணிந்து பதவியேற்றுக் கொண்டார்.

02:40:01 on 18 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ரூமி ஜாப்ரியின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சேரே’ என்ற இந்தி திரைப்படத்தில் அமிதாப் பச்சன் தற்போது நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின், கடைசி நாள் அமிதாப் ஒரே ஷாட்டில் பதினான்கு நிமிட நீள காட்சியை நடித்துள்ளார். அப்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர்.

02:27:02 on 18 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

காஞ்சிபுரம் அருகே கழிவு நார் கால்வாயில் விழுந்து பால் வியாபாரி ஒருவர் உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பால் வியாபாரி கார்த்திக் (32) நிலைதடுமாறி கால்வாயில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

02:11:30 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பிக்கள் தமிழில் பதவி பிரமாணம் ஏற்றனர். அப்போது பெரும்பாலும் 'தமிழ் வாழ்க' என்ற கோஷங்கள் அதிகம் முழங்கின. அதேபோன்று தூத்துக்குடி திமுக எம்.பி கனிமொழி தமிழில் பதவி பிரமாணம் ஏற்று இறுதியில் வாழ்க தமிழ், வாழ்க பெரியார் என குறிப்பிட்டார். அப்போது பாஜக எம்பிக்கள் ஜெய்ஸ்ரீராம் என கூச்சலிட்டனர்.

02:00:08 on 18 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஊத்துக்கோட்டை பகுதியில் ஹெல்மெட் இல்லாதவர்களுக்கு பெட்ரோல் கிடையாது என்று பங்க் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். அதே போல் லைசென்ஸ் இல்லாமல் வந்தாலும், மது குடித்து வந்தாலும் பெட்ரொல் வழங்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

01:55:01 on 18 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

நடிகர் பாக்யராஜ் உள்ளிட்டோரிடம் பணியாற்றிய, முன்னாள் ஒப்பனை கலைஞர், சாலை மேம்பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். திண்டுக்கல்லுக்கு அவர் ஏன் வந்தார் இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

01:35:02 on 18 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டிண பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நில அளவீடுகள் செய்யும் பணியினை வருவாய்த்துறையினர் தொடங்கியுள்ளனர்.

01:15:03 on 18 Jun

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீத் கடந்த ஏப்ரல் மாதம் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். இந்நிலையில் ஐஎஸ்ஐயின் தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனிர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரலாக பியாஸ் ஹமீது ஐஎஸ்ஐ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

01:14:31 on 18 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

நாங்குனேரி தொகுதியில் காங்கிரசுக்குப் பதில் தி.மு.க. போட்டியிட்டால், உதயநிதிக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் வகையில் களமிறக்கி ஜெயிக்கலாம். அதன்பின் தி.மு.க. இளைஞரணி பொறுப்பைத் தரலாம் என மேல்மட்ட பேச்சுகள் விறுவிறுப்பாகியுள்ளன.

01:11:56 on 18 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னை பயச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறிக்கொண்டு அட்டகாசத்தில் ஈடுபட்டனர். அப்போது பேருந்தின் முன்னே பைக்கில் கூச்சல் எழுப்பிக்கொண்டே சென்ற மாணவர்கள் திடீரென பிரேக் போட பேருந்து ஓட்டுனரும் பிரேக் போட்டார். இதனால் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து ரகளை செய்த 20க்கும் மேற்பட்வர்கள் கீழே விழுந்தனர்.

01:04:20 on 18 Jun

மேலும் வாசிக்க சன் நியூஸ்

சில நாட்களுக்கு முன்னர் கிரிஸ் இவான்ஸின், 38வது பிறந்தநாள் வந்தது. அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ராபர்ட், “உங்களது சீக்-ல் (cheek) முத்தம் கொடுக்க வேண்டும்” என்று ட்விட்டர் மூலம் பதிவிட்டிருந்தார்.

01:01:51 on 18 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நிலவேம்பு முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. கசப்புச் சுவை அதிகமான தாவரங்களில் நிலவேம்பு முக்கிய இடம் வகிக்கின்றது. இந்தத் தாவரத்தில் மெத்தைல் சாலிசிலிக் அமிலம் காணப்படுகின்றது.

12:56:22 on 18 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும். முடி கொட்டுவதும் நிற்கும். வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

12:53:12 on 18 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

அணு ஒப்பந்த்தில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி, யுரேனியத்தை அதிகளவில் செரிவூட்டி, அணு ஆயுத மூலப்பொருள் தயாரிக்கவுள்ளதாக ஈரான் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், ஈரான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

12:50:04 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

கொல்கத்தாவில் மேஜிக் செய்ய முயன்ற நபர் கங்கையில் மூழ்கி விட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. 4 நீச்சல் வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடியும் கிடைக்காததால் காவல்துறை, மேஜிக் மேன் நீரில் மூழ்கி விட்டதாக அறிவித்தனர்.

12:45:53 on 18 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உலகம் முழுவதும் 300 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், உலக அளவில் இந்திய இளைஞர்கள்தான் அதிக மனஅழுத்தத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

12:42:10 on 18 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ள குப்பன்னாபுரம் கிராமத்தில் வசிக்கும் மாணவி ஒருவர், ஆசிரியர் பட்டயத் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீட்டில் நடந்த குளறுபடிகள் காரணமாக வாழ்க்கையை இழந்ததாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

12:34:38 on 18 Jun

மேலும் வாசிக்க ETV Bharat

17வது மக்களவையின் முதற்கூட்டம் நேற்று கூடியது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், நேற்று பதவியேற்றுக்கொண்டனர். இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக எம்.பி.க்கள் இன்று தமிழில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

12:29:58 on 18 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

பிக்பாஸ் நிகழ்ச்சி 3வது சீசன் எப்போது தொடங்கும் என அனைவரும் காத்திருக்கின்றனர். அந்த வகையில் நமக்கு கிடைத்த தகவல்படி மதுமிதா மற்றும் இசைக்கலைஞர் மோகன் வைத்யா ஆகியோர் இந்த வீட்டிற்குள் செல்வது உறுதியாகியுள்ளது.

12:27:21 on 18 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

கேரளாவில் நிபா வைரஸ் உறுதியானதை தொடர்ந்து கேரள- தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனாலும் தற்போது கடலூரில் ராமலிங்கம் என்பவருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

12:25:24 on 18 Jun

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

’ஒரு நாயின் கண்கள் உங்களுக்கு ஏதாவது சொல்வதை போன்றோ அல்லது உங்களது கவனத்தை பறிக்கும் வகையிலோ தோன்றினால், அது உங்கள் உணர்வுகளை கையாளும் பரிணாம வளர்ச்சியின் வழியாக இருக்கலாம்’ என பிரிட்டன் மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய கூட்டு ஆராய்ச்சியின் ஊடாக தெரியவந்துள்ளது.

12:24:05 on 18 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

2050ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஐ.நா. ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய ஐ.நா. கணிப்புகள் 2022ஆம் ஆண்டிலேயே இந்தியா, சீனாவை உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மிஞ்சும் என்று மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

12:21:46 on 18 Jun

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

'ஹானர் 20i' ஸ்மார்ட்போன் முதன் முறையாக இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. 4GB RAM மற்றும் 128GB செமிப்பு அளவு என ஒரே வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இந்தியாவில் 14,990 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது.

12:20:00 on 18 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஆந்திராவின் ராயல்சீமா பகுதியில் இருந்து வறண்ட காற்று வீசுவதாலும், தென்மேற்கு பருவமழை இன்னும் தமிழக – கேரள எல்லைப்பகுதியிலேயே நிலை கொண்டிருப்பதாலும், கடல்காற்று வீசாமல் இருப்பதாலும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அனல் காற்று வீசிவருகிறது.

12:18:33 on 18 Jun

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் வகைகள் பயன்படுத்தியதற்காக நேற்று ஒருநாள் மட்டும் ரூ. 1.58 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், உள்ளாட்சி அமைச்சகம் சார்பில் அபராதம் விதிக்கும் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

12:16:49 on 18 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

நெய்வேலியில் கஞ்சா வியாபாரி ஒருவர் கஞ்சா விற்பதாகவும், தன் மீது 28 வழக்குகள் உள்ளன, முடிந்தால் காவல்துறை கைது செய்யட்டும் எனச் சவால் விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

12:13:05 on 18 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

’பெண் போலீஸ் அதிகாரி செளமியா என்னைத் திருமணம் செய்யாமல் உதாசீனப்படுத்தியதால் பெட்ரோல் உற்றி எரித்துக் கொலை செய்தேன். பின்னர் என் உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன்' என காவலர் அஜாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

12:08:00 on 18 Jun

மேலும் வாசிக்க விகடன்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற, சுமார் 500 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார், சுமார் 100 பேருக்கு தலைக்கவசங்களை இலவசமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

12:03:40 on 18 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக 6 முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதிக மழை பெய்தால் பள்ளி விடுமுறை அளிக்கப்படும். இதனிடையே தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

11:50:50 on 18 Jun

மேலும் வாசிக்க காமதேனு

சென்னையில் பணிபுரியும் பெண்களில் பலர் விடுதிகளில் தங்கியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர்களில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பெண்கள் தங்கும் விடுதிகள் உள்ளன. இந்நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதால் 15 பெண்கள் தங்கும் விடுதிகள் மூடப்பட்டு விட்டன.

11:42:50 on 18 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

பூந்தமல்லி மற்றும் திருவேற்காடு நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், சம்மந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

11:36:38 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தி, உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தபோது அதன் விளக்கு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உயர்கோபுரம் அருகே சென்றாலே உடலில் மின்சாரம் பாய்ந்து டெஸ்டர் விளக்கு எரிந்ததை புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

11:23:04 on 18 Jun

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

சென்னை மாதவரத்தில் வல்லரசு என்ற 19 வயது இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர். போலீசாரை வல்லரசு தாக்கியதால், அவர் நெஞ்சில் 2 குண்டுகளையும் காலில் 1 குண்டையும் போலீசார் பாய்ச்சினர். இந்த சம்பவத்தை NCHRO அமைப்பின் தலைவரான மார்க்ஸ் மற்றும் ‘நான் வடசென்னைக்காரன்’ என்ற புத்தகத்தை எழுதிய பாக்கியம் சங்கர் ஆகியோர் கண்டித்துள்ளனர்.

11:16:07 on 18 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர், 125 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 70 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

11:05:46 on 18 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்ப காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் உருவாகியுள்ள வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை ஆகிய இடங்களில் 3 நாட்களுக்கு வெப்ப காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

11:04:06 on 18 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

செங்கத்தில் பட்டப்பகலில் காய்கறி மார்க்கெட்டில் கொள்ளையடித்த கும்பல் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளனர். அவர்கள் வண்டியில் இருந்த ரூ. 30 ஆயிரத்தை திருடினர். இந்த சிசிடிவி காட்சிகளை வைத்துப் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10:44:12 on 18 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அளித்தப் பேட்டியில், 'தண்ணீர் தட்டுப்பாட்டால் உணவகங்கள், ஐடி நிறுவனங்கள் மூடப்படுவதாக சிலர் தவறான பிரசாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டிய எஸ்.பி.வேலுமணி, ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதே காலம்காலமாக இருந்து வருவதாகவும், இவை தண்ணீர் தட்டுப்பாட்டிற்காக இல்லை' என விளக்கமளித்தார்.

10:36:45 on 18 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரி , பிரசிடென்சி கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் கோடை விடுமுறைக்குப் பின்னர் நேற்று திறக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் முக்கிய சாலைகளில் பஸ்டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னையில் நேற்று மட்டும் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

10:34:04 on 18 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பீகாரில் மூளைக் காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்கக் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குழந்தைகள் உயிரிழப்பு 104 ஆக உயர்ந்துள்ள நிலையில், கடும் வெப்பம் காரணமாக பீகாரில் மட்டும் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

10:15:02 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் கடந்த மூன்றே மாதங்களில் 200 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த, பீரோ புல்லிங் திருடனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 177 சவரன் நகைகளை மீட்டுள்ளனர். இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

09:55:02 on 18 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஒளிபரப்பு உரிமங்களில்தான் முதலில் பெருமளவிலான பணம் பார்க்கப்படுகிறது. ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலான பார்க்கின் தகவல்படி சுமார் 700 மில்லியன் மக்கள் கடந்த வருடம் கிரிக்கெட் போட்டியை பார்த்தனர். இந்த வருடம் அந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

09:35:02 on 18 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்ட முகமது மோர்சி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். எனினும், முகமது மோர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

09:15:02 on 18 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு போலீஸ் தெரிவித்துள்ளது.

08:55:01 on 18 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 3.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.9 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08:35:02 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடியதாலேயே அணிக்கு சிறப்பான பங்களிப்பை தர முடிந்தது என இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

08:15:02 on 18 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.52-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:01 on 18 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விவோ நிறுவனத்தின் புதிய இசட்1 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்திய வெளியீட்டை விவோ டீசர்களின் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய விவோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் வழங்கப்படுகிறது.

07:35:02 on 18 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

தொழிற்சாலைகளில் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்தி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஊழியர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில், சிறுகுறு தொழில் நிறுவனங்களும் மறைமுகமாக தண்ணீர் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளது.

07:15:02 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

06:59:59 on 18 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சேலம் ரயில்வே கோட்டத்தில் ’ஆபரேஷன் தண்டர்’ சோதனை நடவடிக்கையில் இணையத்தில் முறைகேடாகப் பயணச் சீட்டுகளை எடுத்து அதிக விலைக்கு விற்ற ஐந்து போலி முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

06:25:02 on 18 Jun

மேலும் வாசிக்க விகடன்

மோட்டார் வாகனங்கள் 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புகை விதி 6 தரத்துடன் இருக்க வேண்டும் என்ற கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த உள்ளது. இந்தப் புதிய தரச் சான்றிதழ் கொள்கையால் லாரி பாடி கட்டுமானத் தொழில் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதா இந்தத் தொழிலில் ஈடுபடுவோர் கவலை தெரிவிக்கின்றனர்.

05:55:01 on 18 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

குழந்தைகள் பள்ளிக் கூடத்தில் பாடங்களை படிப்பது என்பதைத் தாண்டி, சமூகம், அரசியல், பொருளாதாரம் மற்றும் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ளவும் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்து வெளியே செல்லும்போது வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்கவும், வெற்றி பெறவும் முடியும்.

05:25:02 on 18 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

நாம் காலையில் உடற்பயிற்சி செய்வதைவிட மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதுதான் உடலுக்கு மிகவும் நல்லது என ஆய்வுகள் கூறுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட ஆய்வில், உடற்பயிற்சி செய்யும் கால நேரத்தைப் பொறுத்து அதன் நன்மைகளும் வேறுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

04:59:43 on 18 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மகிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் மிகவும் பிரபல காரான ‘தார்’, இந்த மாதத் தொடக்கத்தில் சாலைகளில் பயணம் செய்ததைப் பார்க்க முடிந்தது. இந்நிலையில் மிகவும் பிரபலமான ‘ஸ்கார்பியோ' காரின் சில புகைப்படங்கள் தற்போது லீக் ஆகியிருக்கின்றன. இந்தக் கார் 2020ஆம் ஆண்டு சந்தைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

04:25:02 on 18 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இஞ்சியை அதிகமாக சாப்பிடுவதால், அது அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை ஏற்படுத்தும். இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு. பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை அதிகப்படுத்திவிடும்.

04:00:04 on 18 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

நடிகர் தனுஷ் தற்போது துரை செந்தில் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்திற்கு யார் ஜோடியாக நடிப்பது என்பதை படக்குழு அறிவிக்காத நிலையில் தற்போது மெஹ்ரின் பிர்ஸாடா நடிப்பதை உறுதிசெய்துள்ளனர்.

03:26:01 on 18 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிராமத்தில் அமைந்துள்ள எத்தையம்மன் கோயிலில் பணிபுரிந்த பூசாரிகள் பணியை விட்டு விலகியதால் புதிய பூசாரிகளை நியமிப்பதில் பிரச்சனை உருவானது. இந்தநிலையில் புதிதாக பூசாரிகளை நியமிக்க வலியுறுத்தி கோத்தகிரி-குன்னூர் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

02:56:01 on 18 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

நாமக்கல் மாவட்டம் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.4.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையை நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

02:26:01 on 18 Jun

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க