View in the JustOut app
X

எல்.ஜி. நிறுவனம் பட்ஜெட் மொபைலை வெளியிட்டுள்ளது. எல்.ஜி. ஹார்மனி 4 என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதில் 3,500 ஆம்ப் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரேயொரு வண்ணத்தில் மட்டும் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.10,100 க்கு இந்த போன் விற்பனை செய்யப்படுகிறது.

10:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் ட்ரூஃவைப் ப்ரோ (Tru5ive Pro) என அழைக்கப்படுகிறது. இது ரூ.2999 விலையில் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

10:00:01 on 30 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

போல்ட் ஆடியோ நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய இயர்பட்ஸ் ட்ரூஃவைப் ப்ரோ (Tru5ive Pro) என அழைக்கப்படுகிறது. இது ரூ.2999 விலையில் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.

09:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

மாற்றுத்திறனாளி பெண் ஒப்பந்த ஊழியரை சரமாரியாக தாக்கியது கேமராவில் பதிவானதை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட ஆந்திர பிரதேச சுற்றுலா துறையின் துணை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

08:55:01 on 30 Jun

மேலும் வாசிக்க சன் நியூஸ்

திருச்சி மாநகர ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது, அதே வழியில் மோட்டார் பைக்கில் வந்த காவலர் வாகனம் மோதியது. சைக்கிள் வந்த முதியவர் காவலரிடம் ஏதோ கூறிய நிலையில், இதனால் ஆத்திரமடைந்த காவலர், பைக்கிலிருந்து இறங்கி முதியவரை தாக்குகிறார்.

08:25:01 on 30 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சமீபத்தில் தேனி நகர காவல் துறையினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறை அலுவலகத்துக்கு விஜய் ரசிகர்கள் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை வழங்கினர். தற்போது நெல்லை மாநகர காவல்துறையினர் பயன்பாட்டிற்காக தடுப்புகளை வழங்கி உதவி செய்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

07:55:01 on 30 Jun

மேலும் வாசிக்க Behind Woods News

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் கரும்பு பாரம் ஏற்றி வந்த கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதில் லாரி ஓட்டுனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

07:25:01 on 30 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சாத்தான்குளம் காவல்நிலைய விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தந்தை-மகன் மரணமடைந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

06:55:01 on 30 Jun

மேலும் வாசிக்க விகடன்

12,000 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினரிடம் எடுக்கப்பட்ட தேசிய அளவிலான ஓர் கணக்கெடுப்பில், முஸ்லிம்கள் இயல்பாகவே குற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது என பாதி காவலர்கள் நினைப்பதாக தெரிய வந்துள்ளது.

06:25:02 on 30 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது இதற்கென 80 கோடி ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இலவச கோதுமை, பருப்பு உள்ளிட்ட தானிய பொருட்கள் வரும் நவம்பர் மாதம் வரை வழங்கப்படும்.” என்று பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் தெரிவித்தார்.

06:09:36 on 30 Jun

மேலும் வாசிக்க தினமலர்

“அரசியல் செல்வாக்கு மிக்கவர்களிடம் பவ்யம் காட்டி, சலாம் போடும் காவல்துறையினரில் ஒரு பகுதியினர், சாமானிய மக்களிடம், அத்துமீறி, அராஜகத்தின் உச்சத்துக்கே சென்று விடுகின்றனர்.” என்று சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடிகர் ராஜ்கிரண் கண்டனம் தெரிவித்துள்ளார்.

05:27:01 on 30 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்பவர் பெண்களை ஏமாற்றி, பணம் பறித்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஒரிஜினல் ஆர்.சி.புக் இல்லாமல் பைக்கை தன் பெயருக்கு மாற்றிய புகாரில், சிபிசிஐடி போலீஸார் வட்டார போக்குவரத்து ஊழியர்களிடமும், சில புரோக்கர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

04:57:02 on 30 Jun

மேலும் வாசிக்க விகடன்

சேலம் ஓமலூர் அருகே பசுபதி மற்றும் சங்கீதா ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் 4 மாத பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் பசுபதி, தனியார் பைனான்ஸ் கம்பெனியில் 15 ஆயிரம் ரூபாயை கந்து வட்டிக்கு வாங்கி உள்ளார். இதனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார்.

04:27:01 on 30 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நடிகை மீரா மிதுன் தனது டுவிட்டர் பக்கத்தில், “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க உங்களுக்கு என்ன தகுதி உள்ளது?. தமிழ் திரை உலகில் இருக்கும் அரசியலால் உங்களை ஜெயலலிதா வேடத்துக்கு தேர்வு செய்து தவறு செய்துள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

03:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

கிராமங்களில் இருக்கும் சிறிய வழிபாட்டுத்தலங்களைத் திறக்க அரசு அனுமதி அளித்தது. அதாவது ரூ.10,000க்கும் குறைவான ஆண்டு வருமானம் இருக்கும் மசூதி, கோயில்கள், தர்காக்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

03:27:01 on 30 Jun

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கோவிட்-19 தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தடுப்பூசி, மருந்தை நோக்கி உலகமே எதிர்பார்த்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி மருந்து, அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியுள்ள மனிதச் சோதனை அனுமதி, மகிழ்ச்சி செய்தியாகக் கிடைத்துள்ளது.

02:57:02 on 30 Jun

மேலும் வாசிக்க விகடன்

தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்கள் விஜய், விக்ரம். இவர்கள் இருவருமே நல்ல நண்பர்களும் கூட. இந்நிலையில் விஜய் பல மெகா ஹிட் படங்களை தவறவிட்டுள்ளார், அதில் மேலும் ஒரு படம் தான் தூள். ஆம், தூள் கதை முதன் முதலாக விஜய்க்காக தான் தரணி எழுதியுள்ளார், பிறகு தான் தூள் விக்ரமிற்கு சென்றுள்ளது. படமும் மெகா ஹிட் ஆகியது.

02:27:01 on 30 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து, திருச்சி காவல் சரகத்தில், பொதுமக்களிடம் நல்லுறவு பேணாத, 80 காவலர்கள் காவல் நிலைய பணியில் இருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஒரு மாத காலம், 'பொதுமக்களுடன் நல்லுறவு மற்றும் உளவியல் குறித்த சிறப்பு பயிற்சி', உளவியல் நிபுணர்களை கொண்டு அளிக்கப்படுகிறது.

01:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க தினமணி

சேலம் மாவட்டம் ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த சின்னதுரை மற்றும் ஜோதி நகரை சேர்ந்த மோகன்பாபு ஆகிய இருவரும் ஆத்தூர் விநாயகபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு பெண்களை அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

01:25:01 on 30 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

திருச்சியில் மது போதைக்காக மனைவியின் படுக்கையை நண்பனுக்கு பகிர்ந்த கணவரையும், 9 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த நண்பரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கணவரின் தங்கையையும் போலீசார் தேடி வருகின்றனர்.

12:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தஞ்சாவூரில் கணவர் வெளிநாடு சென்ற நேரத்தில் முகநூல் காதலர்களுடன் சேர்ந்து சொத்துக்களை அபகரித்த குற்றச்சாட்டுக்குள்ளான இலங்கை பெண் ஒருவர், ஊர் திரும்பிய கணவரை கூலிப்படையை ஏவி தீர்த்துக் கட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

12:25:01 on 30 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சீனாவில் இன்னொரு விதமான காய்ச்சல் பரவி வருகிறது. அண்மையில் பரவத் தொடக்கியுள்ள இந்த காய்ச்சல், பன்றிகளிடையே பரவி வருகிறது. இப்போது இது உடனடியான பிரச்சனை இல்லை என்றாலும், பின் வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் இது மனிதர்களிடையே பரவும் வாய்ப்புண்டு.

11:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”சமூக வலைதளங்களில் வருவது போல கீழடியில் நடராஜர் சிலை எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. சிலர் தவறான தகவல்கள் பரப்பி வருகின்றனர்” என தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர், இது போன்று போலியான வீடியோக்களை யாரும் பதிவிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

11:27:01 on 30 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தனது சாத்தான்குளம் பயணத்தை பேசுபொருளாக்கி, மக்களின் கவனத்தை திசைதிருப்பி, கொலையாளிகளை தப்பவைக்க அரசு திட்டமிடுவதாக, திமுக இளைஞரணி தலைவர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் இ-பாஸ் பெறாமல் சட்டத்தை மீறி தூத்துக்குடி சென்றுள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருந்தார்.

10:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

சென்னையில் லேசான, மிதமான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. இதற்கு இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கனவே அனுமதியளித்து, வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதை பின்பற்றி மதுரையிலும் அறிகுறியில்லாத, லேசான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் தயாராகிவிட்டது.

10:49:01 on 30 Jun

மேலும் வாசிக்க தினமலர்

சென்னையில் லேசான, மிதமான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. இதற்கு இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் ஏற்கனவே அனுமதியளித்து, வழி காட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இதை பின்பற்றி மதுரையிலும் அறிகுறியில்லாத, லேசான பாதிப்புள்ளோரை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டம் தயாராகிவிட்டது.

10:27:35 on 30 Jun

மேலும் வாசிக்க தினமலர்

உலகளவில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,04,07,209 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,48,318 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது.

09:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் எஸ்பி குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முன்னதாக சாத்தான்குளம் போலீஸ்காரர் மகாராஜன் உட்பட 3 பேரையும் பணியிட மாற்றம் செய்தால் மட்டுமே இந்த வழக்கு விசாரணை எந்தவித தடையும் இல்லாமல் நடக்கும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

09:27:01 on 30 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான தேசிய கனிம மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://epcm.formflix.com/advertisement என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

08:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.63ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.72ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

08:26:10 on 30 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வீடியோ கேம் கருவிகள், ஆன்லைன் கேமிங்கில் ஏதேனும் இணைய பாதுகாப்பு குறைகள் இருந்தால், அதனை ஹேக் செய்ய சாத்தியம் இருக்கும்பட்சத்தில் அதனை சோனி நிறுவனத்துக்கு தெரியப்படுத்தவேண்டும். அவ்வாறு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்ய தீர்வு கூறினால் இந்திய மதிப்பில் 38 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

07:57:02 on 30 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஃபாசில் சோலார் வாட்ச் 36 மிமீ மற்றும் 42 மிமீ டயல்-ஆப்ஷன்களில் கிடைக்க உள்ளது, இவை இரண்டின் விலையும் ரூ.9,995 ஆகும். இந்த இரண்டு வகை வாட்ச்கைளையும் உலகளவில் வாங்குவதற்கு 1,754 வாட்சுகள் மட்டுமே உள்ளன என்று ஃபாசில் கூறியுள்ளது.

06:57:01 on 30 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகின்றன. கொய்யா இலையின் சாறு எடுத்து அதோடு தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வருவதால் விரைவில் எடை குறைவதை காணலாம்.

05:57:02 on 30 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே சமூக வலைதளத்தில் உள்ளன. இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் சிறந்த நடிகை என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பட்டியலில் ரக்ஷா ஹோல (நாம் இருவர் நமக்கு இருவர்), நித்யா ராம் (நந்தினி) உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

11:00:01 on 29 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடிக்கும் முன்னணி நடிகர் நடிகைகளுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே சமூக வலைதளத்தில் உள்ளன. இந்நிலையில் 2019ஆம் ஆண்டில் சிறந்த நடிகை என்று ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பட்டியலில் ரக்ஷா ஹோல (நாம் இருவர் நமக்கு இருவர்), நித்யா ராம் (நந்தினி) உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர்.

10:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

ஷ்வேத் புரடெக்‌ஷன் ஹவுஸ் சார்பாக நித்தின் சத்யா தயாரிப்பில் வைபவ் நாயகனாக நடித்துள்ள படம் லாக்கப். இதில் வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட உள்ளனர். அதன்படி இப்படம் ஜூலை மாதம் ஜீ5 தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

09:57:02 on 29 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

டிக்-டாக், ஹலோ உள்பட சீனாவின் 59 வகையான செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. shareit, uc browser, wechat, xender, vmate, newsdog, virus cleaner உள்பட 59 வகையான செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

08:57:22 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகை ஸ்ரீபிரியா ‘யசோதா' எனும் குறும்படத்தை, கமீலா நாசர் மற்றும் ‘சிங்கக்குட்டி' புகழ் நடிகர் சிவக்குமார் (சிவாஜி தேவ்) ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ளார். மேலும் இதில் நடிகர் நாசர் மற்றும் சில சீரியல் நடிகர்கள் நடித்துள்ளனர். ‘யசோதா' குறும்படம் முழுவதுமாக மொபைலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படம் இன்று வெளியானது.

08:55:01 on 29 Jun

மேலும் வாசிக்க Behind Woods News

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

08:31:48 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிகில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “அழகுசாதன நிபுணரான ப்ரீத்தி ஸ்ரீ என்பவரை நாங்கள் சந்தித்தோம், அவர் சிச்சோர் படத்திலிருந்து சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் இரண்டு வித்தியாசமான தோற்றங்களின் படங்களை எங்களுக்குக் காட்டினார். அப்போதுதான் விஜய் அவர்களை இரு வேடங்களிலும் நடிக்கச் சொல்ல நினைத்தோம்.” என்று கூறியுள்ளார்.

08:25:01 on 29 Jun

மேலும் வாசிக்க IndiaGlitz Tamil

”இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன். அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை" என்று லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலளித்துள்ளார்.

07:36:43 on 29 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

சென்னையில் ஊடரங்கு அமலில் இருப்பதால் அங்குள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த மதுப்பிரியர்களின் வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற குழுக்களில் மது கிடைக்கும் இடங்கள் பற்றிய தகவல்கள் பரிமாற்றப்பட்டு வருகின்றன.

07:25:01 on 29 Jun

மேலும் வாசிக்க விகடன்

சென்னையில் இன்று மட்டும் 2,167 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,212 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

07:03:42 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் இன்று மட்டும் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86,224-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141ஆக அதிகரித்துள்ளது.

07:02:47 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் கிராமத்துக்குள் புகுந்த குரங்குக் கூட்டத்துக்குப் பாடம் புகட்டுவதற்காக ஒரு குரங்கைப் பிடித்துக் கொடுமைப்படுத்தி, மரத்தில் தூக்கிலிட்டுக் கொன்ற மனிதநேயமற்ற செயல் நடந்துள்ளது.

06:55:02 on 29 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் தாக்கப்பட்டு, கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. காவல்துறையினர் முதன் முதலில் பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையுடன் இந்தக் காட்சிகள் முரண்படுகின்றன.

06:25:01 on 29 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர், மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்ட ஆவின் பால் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா இருக்கிறார்.

05:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நடிகர் சிவகார்த்திகேயன், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

05:27:01 on 29 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

2005ல் ராஜிவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெற்றது தவறெனில் இந்தாண்டு சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமர் மோடியின் PMcares நிதி பெற்றது எப்படி நியாயம் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

04:57:02 on 29 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நாடு முழுவதும் 6 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு ஒரே கல்வித் திட்டம் கொண்டுவரக்கோரி, உச்சநீதிமன்றத்தில், வழக்கறிஞரும், டெல்லி மாநில பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளருமான அஸ்வினி குமார் உபாத்யாயா என்பவரால் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

04:27:02 on 29 Jun

மேலும் வாசிக்க விகடன்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, சீனாவுடனான பதட்டங்களும் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாடு 2 போர்களை வெல்லும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

03:57:02 on 29 Jun

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

சென்னையை சேர்ந்தவர்கள் ஜான் பிரபாகரன் - சுகன்யா தம்பதி. இவர்கள் எம்எல்எம் மூலம் 500 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்து கைதானவர்கள். இந்நிலையில், ஜான் பிரபாகரனை வெறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா, பிரபாகரனைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

03:27:01 on 29 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

யூனிலீவர், கோகோ கோலா, ஹோண்டா, லீவைஸ் ஜீன்ஸ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஃபேஸ்புக்கில் விளம்பரம் கொடுப்பதை நிறுத்தியுள்ளன. இதனால் தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு கிட்டதட்ட 54,000 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

02:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

வெளிநாட்டுத் தாயின் வயிற்றில் பிறந்த ஒருவரால் எப்படி தேசபக்தராக இருக்க முடியும் என்று ராகுல் காந்தியின் பெயரைச் சொல்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் பாஜகவின் எம்பி பிரக்யா தாக்கூர்.

02:27:01 on 29 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தனது ஆதரவாளர் ஒருவர் “வெள்ளை அதிகாரம்" என்று கோஷமிட்ட காணொளியை டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஃப்ளோரிடாவில் டிரம்புக்கு ஆதரவான நடைபெற்ற பேரணியில் டிரம்பின் ஆதரவாளர் ஒருவர் இவ்வாறு கோஷமிட்டுள்ளார். அதன் காணொளியைத்தான் டிரம்ப் மறுபகிர்வு செய்துள்ளார்.

01:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பைட்-டான்ஸ் நிறுவனத்தின் டிக்டாக் செயலி ஐபோன் க்ளிப் போர்டுகளில் இருந்து விவரங்களை தானாக சேகரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐஒஎஸ் 14 வெளியானதில் டிக்டாக்கின் இந்த நடவடிக்கை அம்பலமாகி இருக்கிறது.

01:27:02 on 29 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

பிரபல பிண்ணனி பாடகி எஸ்.ஜானகி போனில் பேசிய ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், “இந்த மாதிரி செய்தி எல்லாம் கேட்டால் சிலருக்கு உடல்நிலை பாதிக்கும். இந்த மாதிரி பொய் எல்லாம் சொல்லி என்னை நீங்க கொல்லாதீங்க என்று நல்லா திட்டிவிட்டேன். மறுபடியும் இப்படிச் செய்கிறார்கள்” என்று பேசியுள்ளார்.

12:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

ஹெச்-1பி விசா மற்றும் இந்த விசாதாரர்களின் மனைவிக்கு வழங்கப்படும் ஹெச்-4 விசா ஆகியவற்றுக்கு இந்த ஆண்டு இறுதி வரை தடை விதித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். இதன் மூலம், அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இதனால் இந்திய ஐடி இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

12:27:01 on 29 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.அர்ஜுனன் சுங்கச்சாவடி வந்தபோது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். இதில் அர்ஜுனனுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ளது.

12:25:01 on 29 Jun

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4645 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.37160க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 39,016 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 30 பைசா உயர்ந்து 53.30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

11:57:02 on 29 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஷாஜஹான் (புதியவன்) என்ற பெயரில் உள்ள ஃபேஸ்புக் ஐடியில் வனிதாவின் திருமணம் குறித்த பதிவு ஒன்றைக் காண முடிந்தது. உரையாடல் வடிவில் இருக்கும் இப்பதிவு வனிதாவின் திருமணத்தை குறைகூறுவோருக்கு நெத்தியடி பதிவாக அமைந்திருக்கிறது.

11:27:01 on 29 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,201-ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

11:20:25 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று ஒரு கோடியை தாண்டிய நிலையில் இன்று 1,02,38,232ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55,49,897ஆக உள்ளது. தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,04,078 -ஆக உயர்ந்திருக்கிறது.

11:15:42 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு கிராமத்தில் உணவகம் நடத்தி வரும் ஜோசப் என்பவரை, தாடிக்கொம்பு சார்பு ஆய்வாளர் சேகர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தாக்குதலை கண்டித்தும் சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரியும் கருங்கல்பட்டி கிராம மக்கள் அகரம் பிரிவில் போராட்டம் நடத்தினர்.

11:10:08 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் சதீஷ் முத்து என்பவர், தனது முகநூல் பக்கத்தில் காவல்துறையினரை களங்கப்படுத்தும் விதமாக சாத்தான்குளம் நிகழ்வை பற்றி ஒரு பதிவினை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில், சதீஷ் முத்து தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

10:51:53 on 29 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

கொரோனா நோயை குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்ததாகக் கூறி பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பல்ராம் ஜகத் என்ற வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் பாபா ராம்தேவ் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

10:27:01 on 29 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பரிசோதனையை எளிமையாக வீடுகளிலே செய்து கொள்ளத்தக்க வகையில் ஒரு எளிய கருவியை கண்டுபிடிக்கும் முயற்சியில் டெல்லி ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்களும், புனே தேசிய ரசாயன ஆய்வுக்கூடத்தினரும் இணைந்து முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.

09:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஜூலை 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிடலாம் என கூறப்படுகிறது. இதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன. மாணவர்களுக்கு 'ரேங்க்' பட்டியல் எதுவுமின்றி அவரவர் அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.

09:27:02 on 29 Jun

மேலும் வாசிக்க தினமலர்

திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, நாமக்கல், விழுப்புரம், நாகை, தஞ்சை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

09:04:38 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாகின் குல்ச்சோகர் பகுதியில் அடையாளம் தெரியாத 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் போலீசாரும் பாதுகாப்பு படையினரும் , இணைந்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

08:58:20 on 29 Jun

மேலும் வாசிக்க தினகரன்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 706 கன அடியில் இருந்து 914 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 91.57 அடியாகவும், நீர் இருப்பு 54.56 டிஎம்சி-யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

08:57:33 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறார். ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆறு முறை நடந்த கூட்டங்களிலும் ஊரடங்கு நீட்டிப்பு கட்டாயம் என்ற கருத்தையே மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

08:53:17 on 29 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக 16 மணி நேரம் விசாரணை நடந்தது. மாஜிஸ்திரேட் பாரதிதாசன் முதல்கட்ட விசாரணையை நடத்தினார். குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் மீது வேறு வழக்குகள் உள்ளதா என்றும் விசாரணை நடத்தியுள்ளார்.

08:49:41 on 29 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 4 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்கப்படுகிறது. அதேபோல் டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.72 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.

08:45:44 on 29 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஏ.சி.ஐ.ஓ, டி.சி.ஐ.ஓ, எம்.டி.எஸ், உதவியாளர், குக் பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது புலனாய்வுப் பணியகம் (ஐ.பி). ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 19 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

வைரஸ் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதில் ஹோமியோபதி மருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருவருடைய அனைத்து நோய் அறிகுறிகளையும், உடல் மற்றும் மனம் தொடர்பான அனைத்து அறிகுறிகளையும் அலசி ஆராய்ந்து சரியான அளவில் மருந்துகள் கொடுத்து நோயை குணப்படுத்துவது ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்பம்சமாகும்.

06:57:01 on 29 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

இஞ்சி காட்டமான அல்லது காரத்தன்மை உணர்வை நமக்கு கொடுத்தாலும் அது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இஞ்சியை சாறாக்கி காலையில் குடிக்க வேண்டும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்படியே வைத்திருந்தால் அடியில் வண்டல் படியும். அதை அப்படியே விட்டு விட்டு மேலே தெளிஞ்ச நீரை மட்டும் எடுத்து குடிக்கணும்.

05:57:02 on 29 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

தமிழ் சினிமாவில் வெளிவரும் ஒவ்வொரு படத்திலும் பாடல்கள் மிக பெரிய அளவில் அப்படம் வெற்றியடைய உதவுகின்றது. அந்த வகையில் எந்த ஒரு பாடலும் இல்லாமல் வெளிவந்த ஹிட்டான படங்களில் வீடு, குருதிப்புனல், ஆரண்ய காண்டம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், விசாரணை, கைதி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

10:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

யோகிபாபு நாயகனாக நடித்துள்ள படம் `காக்டெய்ல்'. அறிமுக இயக்குனர் முருகன் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்தை திரையரங்குக்கு பதிலாக நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூலை 10-ந் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது.

09:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "முதல்வருக்கு கடிதம் எழுதுவதாக கூறி, எம்.பி வெங்கடேசன் மக்களிடம் பீதியை ஏற்படுத்துகிறார். தவறான தகவல்களை பரப்புவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

08:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியா தனது முதல் பருவநிலை மதிப்பீட்டு அறிக்கையை கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் வெளியிட்டது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பரவிய பிறகு, பொருளாதார இழப்பை மீட்டெடுக்க இந்தியா நிலக்கரியையே நம்புகிறது.

07:52:50 on 28 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தெலங்கானா மாநிலத்தில் கணவர் தன்னை கொடூரமாகத் தாக்கியதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தாக்குதல் வீடியோவை பெண்ணின் பெற்றோர் வெளியிட்டனர். அதில் செல்லப்பிராணியான நாய் தாக்குதலைத் தடுக்க முயற்சி செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.

07:48:02 on 28 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்டு 14-ந் தேதி தண்டனை கைதிகள் பலர் விடுதலை செய்யப்பட உள்ளதாகவும், அதன்படி சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

07:42:11 on 28 Jun

மேலும் வாசிக்க விகடன்

சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் வனிதா. நடிகர் விஜயகுமாரின் மகளான இவர், பீட்டர் பால் என்பவரை நேற்று மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் பீட்டர்பால் மீது அவரின் மனைவி எலிசபெத் ஹெலன், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

07:34:55 on 28 Jun

மேலும் வாசிக்க IndiaGlitz Tamil

வீடுகளில் பயன்படுத்தும் சாதாரண கல் உப்பை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தடுப்புக்கு பயன்படுத்தக்கூடிய சோடியம் ஹைப்போ குளோரைட் கிருமிநாசினியை மத்திய மின் வேதியியல் ஆய்வக (சிக்ரி) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

07:28:22 on 28 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகத்தில் மேலும் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 82,275-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 1,443 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

07:21:28 on 28 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் இன்று மட்டும் 1,992 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,762-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 1079 ஆக உயர்ந்துள்ளது.

07:20:07 on 28 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுச் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ள தெற்கு ரயில்வே, திருச்சி -செங்கல்பட்டு, மதுரை -விழுப்புரம், அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோயில், கோவை-காட்பாடி ஆகிய வழித்தடங்களில் இயங்கும் சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

06:44:39 on 28 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திமுக எம்பி கனிமொழி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் இது லாக்-அப் மரணம் கிடையாது என்று கூறுகிறார். இந்த அரசிடமிருந்து, கொலையாளிகள் தண்டிக்கப்பட்டு நமக்கு நீதி கிடைக்கும் என்று எப்படி நம்ப முடியும்?” என்று பதிவிட்டுள்ளார்.

06:43:36 on 28 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாத்தாகுளம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை செய்ய இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தெரிவித்து, நீதிமன்ற அனுமதி பெற்றபிறகு சிபிஐ விசாரணை பரிந்துரை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

06:38:21 on 28 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அடுத்த மாதம் 28ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடும் துல்கர் சல்மானிற்கு 30 நாட்களுக்கு முன்பாகவே அட்வான்ஸ் வாழ்த்துக்களை வெளியிட்டு அதற்காக ஒரு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி.

05:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சாத்தான்குளம் லாக்கப் படுகொலையை ஆதரிக்கும் விதமாகவும், வணிகர்களை அச்சுறுத்தும் விதமாகவும் இழிவான வகையில் சமூக வலைதளங்களில் சில போலிஸார், கருத்துக்களை பதிவிட்டு வருவது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.

04:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

''நரசிம்மராவ் உடலைப் பரிசோதித்தபோது, பாபர் மசூதி இடிப்பினால் அவர் இடிந்து போய்விடவில்லை என்று உறுதி செய்துக்கொண்டேன். மனிதர்களின் வாய் வேண்டுமானாலும் பொய் சொல்லலாம் ஆனால் உள்ளுறுப்புகள் பொய் சொல்லாது." என்கிறார் மருத்துவர் ஸ்ரீநாத்.

03:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நாமக்கல் அருகே, மகனின் மருத்துவப் படிப்புக்காக அதிக வட்டிக்கு கடன் மேல் கடன் வாங்கிய கூலித்தொழிலாளியிடம் கடன் கொடுத்தவர் பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி, வீடியோவில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு, பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

02:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

சீனப்டைகள் மீண்டும் அத்துமீறலாம் என உளவுத்துறை தகவல்கள் வெளியாகின. இதையடுத்து லடாக் எல்லையில் 12 ஆயிரம் வீரர்களை இந்தியா தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. விமானப்படை ஹெலிகாப்டர்கள், அதிநவீன பீரங்கிகளும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன. சுகோய் விமானங்கள், மிக் 29 போர் விமானங்களும் எல்லையை கண்காணித்து வருகின்றன.

01:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

“ராமர் கோயில் கட்டும் பணியில் இந்துக்களையும் கரசேவகர்களையும் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம். ராமர் கோயில் கட்டுவதற்கு ஒவ்வொரு இந்துக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதற்காக ஒவ்வொருவரிடமும் ரூ.10 நன்கொடையாகக் கேட்க முடிவு செய்துள்ளோம்.” என விஎச்பி அமைப்பு தெரிவித்துள்ளது.

12:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை மக்கள் வீட்டிலிருந்து 108 முறை ஜெபம் செய்தால், மருந்து, மாத்திரைகள் தேவையில்லை. கொரோனா தானாக ஓடிவிடும் என திருவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆண்டாள் கோயிலில் வழிபட இ-பாஸ் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

11:57:02 on 28 Jun

மேலும் வாசிக்க தினகரன்

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து இருப்பதே நிச்சயமாக தொற்று பாதிப்பு அதிகரித்ததற்கு காரணம் ஆகும். பரிசோதனை செய்து கொள்கிறவர்களில் தொற்று உறுதி செய்யப்படுகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு காரணம், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது ஆகும்.

10:57:01 on 28 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 10 மில்லியனைக் கடந்துள்ளது. கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் கடந்த ஏழு மாதங்களில் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆண்டுதோறும் பதிவு செய்யப்படும் காய்ச்சல் தொடர்பான நோய்களின் எண்ணிக்கையைவிட இந்தக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக உள்ளது.

10:43:09 on 28 Jun

மேலும் வாசிக்க விகடன்

சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவார் என்று இப்போதே தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் பொருளாதார குற்றம் இழைத்தவர்களுக்கு நன்னடத்தை விதிகள் பொருந்தாது என்று சிறைத்துறை விதிமுறைகள் கூறுகின்றன. அதன்படி பார்த்தால், சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

10:25:07 on 28 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

மேலும் வாசிக்க