View in the JustOut app
X

உ.வே.சாமிநாதய்யர் படத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கமல் ரஜினி சந்திப்பு கூறித்து பேசியபோது, ரூஸ்வெல்ட் - வின்ஸ்டன் சர்ச்சில் சந்திப்புபோல ரஜினி-கமல் சந்திப்பு பில்டப் செய்யப்படுகிறது. ரஜினி-கமல் சந்திப்பால் நாட்டில் எதுவும் நடக்கப்போவதில்லை என்றார்.

short by ஆ.சங்கர் / 01:25:01 on 19 Feb

Read more at விகடன்

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு என்னை கட்டாயப்படுத்தியே முதல்வர் பதவியை ஏற்றேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். மேலும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பிரச்சனைகளில் திறன்பட கையாண்டு சிறப்பாக ஆட்சி நடத்தினேன். சிறப்பாக ஆட்சி நடத்தியை பொறுக்க முடியாமல் பதவி விலகுமாறு சசிகலா கூறினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

short by புனிதா / 01:10:01 on 19 Feb

உ.பி., ஏழை மாநிலம் என்ற நிலையை மாற்றுவதற்காக நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். உ.பி.,யை குற்றமில்லாத மாநிலமாக மாற்றுவதாக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாள் முதல் சொல்லி வருகிறோம். குற்றவாளிகள் எச்சரிக்கப்பட்டு வருகின்றனர் போலீசாரை தாக்கினால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று உபி முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.

short by ஆ.சங்கர் / 12:55:01 on 19 Feb

மும்பை பங்குச்சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று சுமார் 500 புள்ளிகள் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 33 ஆயிரத்து 794 புள்ளிகளைத் தொட்டது. 160 நிஃப்டி புள்ளிகள் வரை குறைந்து, 10 ஆயிரத்து 379 புள்ளிகளாக சரிந்தது. ஆசியப் பங்குச்சந்தைகளிலும் ஏற்பட்ட சரிவு இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளது.

short by புனிதா / 12:50:01 on 19 Feb

நடிகர்கள் ரஜினியும் கமலும் இணைந்து வந்தாலும் பத்து சதவிகித வாக்குகளை கூட பெற மாட்டார்கள் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். ரஜினி மற்றும் கமல், இருவரும் தனித்தனியாக கட்சி தொடங்கி அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்துள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இப்படி கூறியுள்ளார்.

short by ஆ.சங்கர் / 12:40:01 on 19 Feb

தமது கட்சியின் பெயரையும், கொடியையும் நடிகர் கமல்ஹாசன் வரும் 21-ம் தேதி அறிவிக்கவுள்ளார். தமது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் பல முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார் கமல். இந்நிலையில், இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்து பேசியுள்ளார்.

short by புனிதா / 12:25:39 on 19 Feb

அன்னிய ஆடவர்களிடம், வளையல் அணிந்து கொள்ளக் கூடாது; திருமணம் போன்ற விழாக்களில், ஆடவர்களுடன் அமர்ந்து உணவு உண்ணக் கூடாது' என, முஸ்லிம் பெண்களுக்கு, தாருல் உலும் தேவ்பந்த் எனப்படும், முஸ்லிம் அமைப்பு, 'பத்வா' எனும் தடை விதித்துள்ளது. உ.பி., மாநிலம், சஹாரன்பூரில் இயங்கும் அமைப்பு இத்தடையை விதித்துள்ளது.

short by ஆ.சங்கர் / 12:25:01 on 19 Feb

திரிபுரா மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 79 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 60 இடங்களில், 59 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. 4 மணிக்கு வாக்குப்பதிவுநேரம் முடிந்த பின்னரும், வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

short by ஆ.சங்கர் / 12:10:01 on 19 Feb

'அ.தி.மு.க., அணிகள் இணைப்புக்கு, பிரதமர் மோடியே காரணம்' என்ற, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சர்ச்சைகுரிய பேச்சுக்கும், பிரதமரை, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் விமர்சித்ததற்கும், தமிழக, பா.ஜ., தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். ஓபிஎஸ் அதிமுக இணைப்பு குறித்து பேசிய பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

short by ஆ.சங்கர் / 11:55:01 on 19 Feb

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, கர்நாடக மாநிலம் மைசூருக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாகுபலி மகாமஸ்தாபிசேக உத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு மைசூர் சென்றார். விமான நிலையத்தில் அவரை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வரவேற்றார்.

short by ஆ.சங்கர் / 11:40:01 on 19 Feb

டீ விற்பது, பகோடா விற்பது போன்ற விவகாரங்களை, பா.ஜ.,வினர் பேசுகின்றனர். இதன்மூலம், நாட்டில் நடக்கும் ஊழல், நிர்வாக சீர்கேடு, வேலையின்மை போன்ற பிரச்னைகளில் இருந்து, மக்களை திசை திருப்புகின்றனர். நீண்ட நாளைக்கு மக்களை ஏமாற்ற முடியாது என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டினார்.

short by ஆ.சங்கர் / 11:25:01 on 19 Feb

தமிழகத்தில் உள்ள கோட்டா மற்றும் தோடா போன்ற தென் திராவிட மொழிகள் உட்பட, 42 மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும்பட்டியலில் உள்ளன. 42 மொழிகள், வட்டார பேச்சு வழக்குகள் மிக விரைவில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது என்று மொழியறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

short by ஆ.சங்கர் / 11:10:01 on 19 Feb

பிரிட்டனின் ஆஸ்கர் விருதுகள் என்றழைக்கப்படும் பாஃப்டா திரைப்பட விருதுகள் நேற்றிரவு லண்டன் நகரில் வழங்கப்பட்டன. இதில் த்ரீ பில்போர்ட்ஸ் படம் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. இப்படம் மேலும் நான்கு பிரிவுகளில் விருதுகளைத் தட்டிச் சென்றது.இப்படத்தில் நடித்த பிரான்சிஸ் சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.

short by ஆ.சங்கர் / 10:55:01 on 19 Feb

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த ஹாசினி எனும் சிறுமி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு, செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுமி ஹாசினி கொலை வழக்கில், செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

short by ஆ.சங்கர் / 10:40:01 on 19 Feb

Read more at விகடன்

2022க்குள், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை, இரு மடங்கு அதிகரிக்கும் திட்டத்தை மத்திய அரசு, கையில் எடுத்துள்ளது. இதற்காக, நாடு முழுவதும் உள்ள வேளாண்துறை வல்லுனர்கள், விவசாயிகள் பங்கேற்கும் 2 நாள் கருத்தரங்கம், இன்று, டில்லியில் துவங்குகிறது. இதில், தமிழக விவசாயிகள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

short by பா.செ.மீனா / 10:26:01 on 19 Feb

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ள கருத்துகளைப் பார்க்கும்போது, அவருக்கும், முதல்வர் பழனிசாமிக்கும் இடையே இன்னும் பிரச்சினை தீரவில்லை என்பதையே காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 10:12:01 on 19 Feb

சீனாவில் நடைபெற்ற நெருப்பு டிராகன் திருவிழா பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. டோங்லியாங் மாகாணத்தில் நடைபெற்ற இந்தத் திருவிழாவில் டிராகன் போன்று வடிவமைக்கப்பட்ட உருவத்தின் மீதும், அதன் சுமந்து வந்தவர்கள் மீதும் கொதிக்கும் நெருப்புக் குழம்புகள் ஊற்றப்பட்டன.

short by பா.செ.மீனா / 10:11:01 on 19 Feb

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில், போராட்டம் தொடர்ந்து 174 நாட்கள் நடந்தது. போராட்டம் தொடங்கி கடந்த பிப். 15ஆம் தேதியோடு ஒரு வருடம் ஆனதால் இன்று மீண்டும் நெடுவாசலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

short by பா.செ.மீனா / 09:56:01 on 19 Feb

காவிரி விவகாரம் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவரும் பங்கேற்பதாக உறுதியளித்ததாகவும் ஸ்டாலின் கூறினார்.

short by பா.செ.மீனா / 09:41:01 on 19 Feb

சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கலைஞரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். இச்சந்திப்பின்போது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், கலைஞருடனான சந்திப்பில் புதிய கட்சியை தொடங்குவதாக கமல்ஹாசன் தெரிவித்தார். அவருக்கு கலைஞர் வாழ்த்துக்களை தெரிவித்தார் எனக் கூறினார்.

short by பா.செ.மீனா / 09:26:01 on 19 Feb

பாகிஸ்தானின் கசூர் பகுதியை சேர்ந்த 7வயது சிறுமி ஷாயினப் அன்சாரி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டார். அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கை 4 நாள்களில் விசாரித்து, குற்றம்சாட்டப்பட்டவருக்கு தூக்குத்தண்டனை விதித்து அந்நாட்டு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

short by பா.செ.மீனா / 09:11:02 on 19 Feb

ரோடோமாக் பென்ஸ் நிறுவனம் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் பெற்ற சுமார் ரூ.800 கோடி கடனை திரும்ப செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. கோத்தாரிக்கு கடன் வழங்குவதற்கான வங்கிகள் விதிகளை சமரசம் செய்துள்ளன. கோத்தாரி கூட எங்கு இருக்கிறார் என இதுவரை கண்டுப்பிடிக்க முடியவில்லை.

short by பா.செ.மீனா / 08:56:01 on 19 Feb

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 3-வது முறையாக நடித்து வருகிறார் விஜய். ‘விஜய் 62’ என இப்படம் அழைக்கப்பட்டு வருகிறது. ஷூட்டிங் பச்சையப்பன் கல்லூரியின் அரங்கில் நடைபெற்றது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளுக்குள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் படப்பிடிப்பிற்கு பேராசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

short by பா.செ.மீனா / 08:40:02 on 19 Feb

சிறுமி ஹாசினி கொலை வழக்கு, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால், தஷ்வந்தே வாதாடினான். இந்நிலையில், சிறுமி ஹாசினி கொலை வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

short by பா.செ.மீனா / 08:25:01 on 19 Feb

பாகுபலி மகாமஸ்தாபிசேக உத்சவ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு மைசூர் சென்றார். விமான நிலையத்தில் அவரை கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா வரவேற்றார். மைசூருக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

short by பா.செ.மீனா / 08:10:01 on 19 Feb

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.58 காசுகளாகவும், டீசல் விலையில் 13 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.65.83 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

short by பா.செ.மீனா / 07:55:01 on 19 Feb

சில மாதங்களுக்கு முன் தொடர் போராட்டங்களை நடத்தி தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைத்த அரசு ஊழியர் ஆசிரியர் கூட்டணி மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

short by பா.செ.மீனா / 07:40:01 on 19 Feb

Read more at விகடன்

இணையதளம் பயன்பாட்டாளர்கள் எந்த ஒரு போட்டோ வேண்டுமானாலும், அதை கூகுளில் தேடி வியூவ் இமேஜ் என்ற ஆப்ஷனை பயன்படுத்தி பதிவிறக்கும் செய்யும் வசதி நேற்று வரை இருந்தது. ஆனால் இன்று முதல் அந்த வசதியை கூகுள் நிறுவனம் நீக்கிவிட்டது. இதனால் இணையதள பயன்பாட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

short by பா.செ.மீனா / 07:26:01 on 19 Feb

பிரதமர் மோடி அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டதாக துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதில் உண்மை இல்லை என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். மேலும், ஒரு சிறிய வார்த்தை கூறினாலும் அது பெரிதாக்கப்படுகிறது. அதுபோன்று தான் பன்னீர்செல்வம் கூறிய வார்த்தையும் பெரிதாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

short by பா.செ.மீனா / 07:10:02 on 19 Feb

டில்லியில் பா.ஜ., புதிய தலைமையகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, பலமிக்க தலைவர்கள் தான் பா.ஜ.,வை முன்னெடுத்து சென்றனர். கொள்கையை முன்னெடுத்து செல்லும் திறமை பா.ஜ.,வுக்கு உண்டு. ஜனநாயக துடிப்புள்ள கட்சி பா.ஜ.,மட்டுமே. நமது தொண்டர்கள் கட்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என கூறினார்.

short by புனிதா / 06:56:01 on 19 Feb

கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கத்தினர் தலைநகர் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் வரும் 21-ந் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

short by புனிதா / 06:40:01 on 19 Feb

பஞ்சாப் நேஷனல் வங்கியை பயன்படுத்தி தொழிலதிபர் நீரவ் மோடி 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு செய்துள்ளது, மிகப்பெரிய ஊழல் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக மத்திய அரசு, உடனடியாக விசாரணை நடத்தி நாட்டு மக்களுக்கு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

short by புனிதா / 06:26:02 on 19 Feb

ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து கமல் அரசியல் பயணம் தொடங்கக் கூடாது என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கலாம் அரசியல் சார்ப்பற்றவர், அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இந்தியாவுக்காக கனவு கண்டவர். எந்த அரசியலுக்குள்ளும் அவரை அடைத்து விடலாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

short by புனிதா / 06:10:01 on 19 Feb

டில்லியில் மாணவர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் தெரியாமல் போனது ஒரு துரதிர்ஷ்டம், தமிழில் பேச முடியாததற்கு வருத்தமும் தெரிவித்துள்ளார் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.எந்த பிரதமரும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது. பிரதமர் மோடி தமிழுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

short by புனிதா / 05:56:01 on 19 Feb

விஜய் 62வது படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தப்பட்டதை யாரோ மொபைலில் வீடியோ எடுத்து வெளியிட்டது படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது விஜய் மீண்டும் ஒரு போட்டோ ஷீட் ஒரு எடுக்க உள்ளார்.இந்த விசயம் லீக்காகி விடக்கூடாது என ஷீட்டிங் ஸ்பாட்டில் யாரும் மொபைல் பயன்படுத்தக்கூடாது என விஜய் கண்டிஷன் போட்டதாக கூறப்படுகிறது.

short by புனிதா / 05:40:01 on 19 Feb

இணையக் குற்றங்கள் மூலம் சிட்டி யூனியன் வங்கியும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த வங்கியின் தலைமைச் செயல் அலுவலர் காமகோடி தெரிவித்துள்ளார்.பன்னாட்டு வங்கிப் பணப்பரிமாற்றத் தகவல்களைத் திருடி 3 பரிமாற்றங்கள் வாயிலாக 13 கோடி ரூபாய் வெளிநாடுகளில் உள்ள வேறு கணக்குகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

short by புனிதா / 05:25:01 on 19 Feb

உயரம் குறித்த பிரச்சனை ஏற்படுவதாக வெளியாகி இருந்த செய்தியை புகைப்படம் எடுத்து அதை தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அமிதாப் தம்முடைய பெயர்,வயது,பிறந்த இடம்,சினிமா அனுபவம்,மொழிதிறன் ஆகியவற்றை பதிவு செய்தார்.தமது உயரம் 6அடி 2அங்குலம்.தம்முடன் நடித்தால் உயரம் குறித்த பிரச்சனை நடிகைகளுக்கு ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.

short by புனிதா / 05:10:01 on 19 Feb

தமிழக மாணவர்களுக்கு ஆங்கில அறிவு மிகவும் முக்கியம் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். மேலும், ஆங்கில அறிவு இருக்கும் தமிழர்கள்தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொருவரையும் உருவாக்குவது ஆசிரியர்கள் கையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

short by ரா. சரண்யா / 04:55:01 on 19 Feb

கிரிக்கெட் விளையாட்டில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனைகளும், அர்ப்பணிப்பும், இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக் இருக்கிறது என்று இந்தியஅணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிர்மாணி புகழாரம் சூட்டியுள்ளார்.

short by புனிதா / 04:40:01 on 19 Feb

ரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக ராஜு மகாலிங்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதுக்குறித்து பேசிய ராஜு,ரஜினி ரசிகர் மன்றத்தில் யார் விசுவாசத்துடன் உழைத்தார்களோ, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பதவி தரப்படுகிறது. ரஜினியைத் தமிழக முதல்வர் பதவியில் அமர வைப்பதுதான் எனது லட்சியம் என்றும் அவர் கூறினார்.

short by புனிதா / 04:25:01 on 19 Feb

Read more at விகடன்

ஆந்திர மாநிலம் கடப்பா அருகேயுள்ள ஒண்டிமிட்டா ஏரியில் 7 தமிழர்களின் உடலை போலீசார் மீட்டனர். செம்மரம் வெட்ட வந்த அவர்கள், போலீசார் துரத்திய போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அவர்களின் உடலை கைப்பற்றி கடப்பா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

short by புனிதா / 04:10:01 on 19 Feb

சமீபத்தில் பேட்டி அளித்த ஷேவாக்,தோனியை 4வது வீரராக களமிறக்கி அவர் அவுட்டாகி விட்டால் நடுவரிசைக்கு யாரை பயன்படுத்துவது என கோலிக்கு அச்சம் இருப்பதாகவும் அவ்வாறு அஞ்சாமல்,தோனியை முன்கூட்டியே களம் இறக்கி விட்டுவிட்டு,தோனிக்கான பொறுப்பை மணீஷ் பாண்டே,ஜாதவ்,ஹர்திக் ஆகியோரில் ஒருவருக்கு வழங்க வேண்டும் என யோசனை கூறியுள்ளார்.

short by புனிதா / 03:55:01 on 19 Feb

மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.பி ஜனார்தன் மிஸ்ரா,காஜூஹா கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்றார்.அங்கு கழிவறை கோப்பையில் சேரும் சகதியும் இருப்பதை கண்டு அந்த சேற்றை வெறும் கைகளால் அள்ளி சுத்தம் செய்தார்.இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. எம்.பியின் இந்த செயலுக்கு பலர் பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.

short by புனிதா / 03:40:02 on 19 Feb

சந்திரபாபு நாயுடு பிரதமரை சந்திப்பது தமது கட்சியின் நன்மைக்காகவே தவிர,மாநிலத்தின் நன்மைக்காக அல்ல.மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஆந்திர மாநிலத்தில் செய்யப்பட்ட மறு சீரமைப்புகளை விமர்சனம் செய்துகொண்டே அதன் நன்மைகளை மட்டும் சந்திரபாபு எடுத்துகொண்டதாகவும் முன்னாள் மத்தியஅமைச்சர் ஜெயராம் ரமேஷ் குற்றஞ்சாட்டினார்.

short by புனிதா / 03:25:01 on 19 Feb

கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் - பாலத்தீனின் காசா எல்லை அருகில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், 4 இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து பாலத்தீன பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.மேலும் காசா பகுதியில் இஸ்ரேல் நிகழ்த்திய கவசவண்டித் தாக்குதலில் இரு பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

short by புனிதா / 03:10:01 on 19 Feb

ஈரானில் ஏஸ்மேன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஃபிலைட் 3704 எனும் விமானம் தலைநகர் டெஹ்ரானில் இருந்து யாசுஜ் என்ற இடம் நோக்கி பயணிகளுடன் புறப்பட்டது.சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் தொடர்பை இழந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் இந்த விமானத்தில் பயணித்த 66 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

short by புனிதா / 02:55:02 on 19 Feb

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழகத்தில் நீடிக்க வேண்டும் என்பதற்காக திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ததாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கோயில்களில் ஏற்படும் தீ விபத்து குறித்து ஆராய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 02:25:01 on 19 Feb

ஓ.பன்னீர்செல்வம் உண்மை செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது காலம் வெளிப்படுத்தும் என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். அணிகள் இணைப்பை மோடி கட்டாயாப்படுத்தினாரா?. மோடி பெயரை பயன்படுத்தி யாராவது, இடைத்தரகர் கட்டாயாப்படுத்தினாரா? என எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார்.

short by புனிதா / 02:10:01 on 19 Feb

பஞ்சாப் நேஷனல் வங்கியிலிருந்து மோசடி நடந்த சம்பவத்தை தொடர்ந்து வங்கித்துறையில் நடந்த பல மோசடிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பொதுத்துறை வங்கிகள் 2012 மற்றும் 2016ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.22,743 கோடி அளவுக்கான பணத்தை மோசடிகளால் இழந்துள்ளது என பெங்களூரு ஐ.ஐ.எம். தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

short by ரா. சரண்யா / 01:55:01 on 19 Feb

பிரதமர் மோடி சொல்லித்தான் கட்சியில் இணைந்ததாக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். உண்மையை உலறிவிட்டதாகக் கூறியுள்ள ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ. டிடிவி தினகரன், அவர் முகவர் போல செயல்பட்டதாகக் கூறியுள்ளார். மேலும் தங்கள் குடும்பத்தினர் தற்கொலைக்குத் தூண்டியதாக ஓபிஎஸ் கூறிய குற்றச்சாட்டையும் அவர் மறுத்துள்ளார்.

short by புனிதா / 01:40:01 on 19 Feb

கமல் அரசியல் களத்தில் குதித்து உள்ளார்.தனது கட்சியின் பெயரை 21ந்தேதி அறிவிக்க உள்ளார்.அதனைதொடர்ந்து அவர் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார்.இதுக்குறித்து பேசிய ஸ்ருதிஹாசன்,எனக்கு அரசியல் தெரியாது. அப்பாவின் அரசியலுக்கு முழு ஆதரவு உண்டு.அவருடன் பயணிக்கும் திட்டம் எதுவுமில்லை என்றார்.

short by புனிதா / 01:25:01 on 19 Feb

மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வழிகாட்ட வேண்டும். குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும். அதேநேரத்தில் தரமான தீர்ப்புகளையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். நீதிபதிகள் தீர்ப்பின் மூலமாக தான் பேச முடியும் என்று இந்திராபானர்ஜி கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 01:10:01 on 19 Feb

Read more at விகடன்

தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில்கள் தமிழகத்தில் துவங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விரும்புவோர்க்கான வாய்ப்புகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

short by ரா. சரண்யா / 12:55:01 on 19 Feb

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், பார்க்லேண்ட் நகரில் உள்ள மெர்ஜாரி ஸ்டோன்மேன் டக்ளஸ் உயர்நிலைப்பள்ளியில் 14-ந் தேதி மதியம் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர்.இதுகுறித்த தகவல் கிடைத்தும் தடுத்து நிறுத்தாமல் கோட்டை விடுவதா? என எப்.பி.ஐ.யை அதிபர் டிரம்ப் டுவிட்டரில் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.

short by புனிதா / 12:40:01 on 19 Feb

ஆழ்கடலின் அடியில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக 2 நவீன மீட்பு நீர்மூழ்கி கப்பல்களை மத்திய அரசு வாங்க முடிவெடுத்தது. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜே.எஃப்,டி நிறுவனத்திடம் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது தற்போது தயாரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

short by ரா. சரண்யா / 12:25:01 on 19 Feb

இந்திய கிரிக்கெட் அணி 2018-19 ஆண்டுகளில் 63 போட்டிகளில் விளையாட ஆயுத்தமாகியுள்ளது. இந்த 63 போட்டிகள் கொண்ட பட்டியலில் 30 ஒருநாள், 12 டெஸ்ட மற்றும் 21 டி20 போட்டிகள் அடங்கும். தற்போது வரவிருக்கும் போட்டியான ட்ரை சீரிஸ் டி20 போட்டி (இலங்கை - வங்கதேசம் - இந்தியா) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

short by புனிதா / 12:10:01 on 19 Feb

சட்டீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் பாரம்பரியமிக்க 3 அரிசி வகைகளான கத்வான்,மகாராஜி,லைச்சா முதலிய அரிசிகளில் புற்று நோயை எதிர்த்து போராடும் திறன் உள்ளதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.மேலும் இவ்வரிசி பல நோய்களை நீக்கும் மருந்தாகவும், தோல் நோய்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என அறிவியலாளர் தீபக் சர்மா தெரிவித்துள்ளார்.

short by புனிதா / 11:55:01 on 18 Feb

தமிழகத்தில் ஆட்சி காட்சியாக உள்ளது.ஆட்சியாக இல்லை.அரசியல்வாதிகள் நடிக்க ஆரம்பித்ததால் நடிகர்கள் அரசியல்வாதியாக மாறிவிட்டனர் என கோவில்பட்டியில் கி.வீரமணி பேசினார்.தமிழகத்தினைவிட கர்நாடகாவிற்கு கண்சாடை காட்டினால் ஆட்சிக்கு வரலாமா என்ற நப்பாசை மத்தியரசுக்கு இருக்கிறது.அந்த எண்ணத்தினை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

short by புனிதா / 11:40:01 on 18 Feb

உ.பி., மாநிலம் சஹாரன்பூரில் இயங்கும் தாருல் உலும் தேவ்பந்த் எனும் இஸ்லாமிய அமைப்பு பல்வேறு பிரச்சனைகளுக்கு மத அடிப்படையில் 'பத்வா' எனும் தடையை விதிக்கிறது. இது அன்னிய ஆடவர்களிடம் வளையல் அணிந்து கொள்ள கூடாது; திருமணம் போன்ற விழாக்களில் ஆடவர்களுடன் அமர்ந்து உணவு உண்ணக் கூடாது என முஸ்லிம் பெண்களுக்கு தடை விதித்துள்ளது

short by ரா. சரண்யா / 11:25:01 on 18 Feb

உ.பி.யில் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாவிற்கு எதிரான கூட்டணி அமைக்கப்படவில்லை எனவும் இங்கு பகுஜன் சமாஜ், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய மூன்றுமே தனித்து போட்டியிடுகின்றன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

short by புனிதா / 11:10:02 on 18 Feb

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.நேற்று டெல்லி வந்த அவரை வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் கனடா நாட்டு தூதர்கள் வரவேற்றனர். தனது சுற்றுப்பயணத்தை ஒரு பகுதியாக தாஜ்மஹாலை தனது குடும்பத்தினருடன் சுற்றிப்பார்த்து தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

short by புனிதா / 10:55:01 on 18 Feb

பெங்களூருவில் கிளப்பில் உணவருந்தி கொண்டிருந்தவரை துரத்தி துரத்தி தாக்கிய எம்எல்ஏ மகன் மற்றும் அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முகமது நலபாட் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். மேலும் முகமது காங்கிரசிலிருந்து 6 வருடம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

short by புனிதா / 10:40:01 on 18 Feb

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மிரட்டுவதற்காக மோடி பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார் என்று டி.டி.வி.தினகரன் அணி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். மோடிதான் அதிமுகவை இயக்குகிறார் என்று நாங்கள் அப்போதே கூறினோம். மோடி பேச்சை கேட்டதால்தான் ஆர்.கே.நகரில் அவர்களுக்கு தோல்வி ஏற்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

short by புனிதா / 10:25:01 on 18 Feb

பாலவாக்கத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றிருந்தார். அப்போது அவரை வரவேற்ற தொண்டர்கள், வருங்கால முதலமைச்சரே என முழக்கமிட்டனர். அப்போது, கூட்டணியில் இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா என தொண்டர்களை பார்த்து வைகோ சிரித்துக் கொண்டே கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

short by புனிதா / 10:10:01 on 18 Feb

பஞ்சாப் வங்கி முறைகேடு விவகாரத்தில் பிரதமரும், நிதி அமைச்சரும் மவுனம் காப்பது ஏன்? என்று டி.ராஜா கூறியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் இவ்வளவு பெரிய ஊழல் நடைபெறும் வரை ரிசர்வ் வங்கி என்ன செய்தது?. தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை; கறுப்புப் பணமும் பறிமுதல் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

short by புனிதா / 09:55:01 on 18 Feb

டெல்லியில் நடைபெற்று வந்த சண்டக்கோழி - 2 படப்பிடிப்பில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான நடிகர் விஷாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் விஷால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

short by புனிதா / 09:40:01 on 18 Feb

கரூர் மாவட்டம் காதப்பாறையில் அதிமுக உறுப்பினர் சேர்ப்பு, உறுப்பினர் அட்டை புதுப்பிப்பு முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் , டிடிவி தினகரன் அணியினர் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி ஆள்சேர்க்க முயன்று வருவதாகவும், அதை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.

short by புனிதா / 09:25:02 on 18 Feb

நாட்டில் பல கட்சிகள் இருப்பது ஜனநாயகத்திற்கு அழகு சேர்ப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்களில் ஜன சங்கம் மற்றும் பாஜக தலைவர்கள் முன்னணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தங்களது கட்சி தேசப் பக்தியுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

short by புனிதா / 09:10:01 on 18 Feb

அரசியல் களம் இறங்க உள்ள கமல் பிப்.21 முதல் கலாம் இல்லத்திலிருந்து சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார்.இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து கமல் வாழ்த்து பெற்றார்.அப்போது அவர் உங்களை சந்தித்தது மகிழ்ச்சி.எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.பத்திரிகையாளர்களுக்கு அசைவ,சைவ பிரியாணி விருந்தளித்தார்.

short by புனிதா / 08:55:01 on 18 Feb

காவிரியில் இழந்த 14.75 டி.எம்.சி. தண்ணீரை பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட செயல்பட்டது திமுக தான் எனவும் அதிமுக அரசின் திறனற்ற வாதத்தால் 14.75 டி.எம்.சி. தண்ணீர் பறிபோய் உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

short by புனிதா / 08:40:01 on 18 Feb

தேர்வில் வெற்றி பெறுவது எப்படி என மாணவர்களிடம் பிரதமர் மோடி 2 மணி நேரம் பேச முடிகிறது. ஆனால் ரூ.22 ஆயிரம் கோடி வங்கி ஊழல் குறித்து 2 நிமிடம் கூட பேச முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

short by புனிதா / 08:25:02 on 18 Feb

காவிரி விவகாரம் குறித்து அறியாமல் முதல்வர் அறிக்கை வெளியிட்டிருப்பது வேதனை அளிக்கிறது.காவிரி ஒப்பந்தம் 1974ல் மறுஆய்வு செய்யப்படாததால்தான் தமிழக உரிமை பறிபோய்விட்டது என முதல்வர் கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. காவிரி விவகாரத்தில் திமுக அரசின் சாதனையை அதிமுக சாதனையாக அபகரிப்பது அழகல்ல என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

short by புனிதா / 08:10:01 on 18 Feb

கமல், ரஜினி அரசியல் பயணம் வேகம் எடுத்துள்ள நிலையில் நடிகர் சத்யராஜ் அவர்கள் இருவரையும் மக்கள் ஒரு போதும் நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர்கள் அரசியலில் தோற்றால் அது பெரிய தோல்வி அல்ல. வெற்றி பெற்றால் மக்கள் நிலைமை என்னவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

short by புனிதா / 07:55:01 on 18 Feb

அதிமுக ஆட்சி விரைவில் கவிழும் என கூறிய ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ள அமைச்சர்கள்,12 அமாவாசைகளை தாண்டி இந்த ஆட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இன்னும் 3 ஆண்டு ஆட்சியையும் பூர்த்தி செய்வோம்.ஜெயலலிதா செயல்படுத்திய பெண்களுக்கான திட்டங்களை பழனிசாமி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்றும் குறிப்பிட்டார்கள்.

short by புனிதா / 07:40:01 on 18 Feb

அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார். ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம்,உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா கோயிலில் ரஜினிகாந்த் சாமி தரிசனம் மற்றும் பூஜை செய்தார்.

short by புனிதா / 07:25:01 on 18 Feb

கூலித்தொழிலாளர்களுக்கு நிலம் வழங்கக்கோரி தலித் போராளி பானுபாய் வங்கர் தற்கொலை செய்து கொண்டதற்கு மாநில அரசே காரணம் என பந்த் அறிவித்திருந்த சுயேட்சை எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் 25-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

short by புனிதா / 07:10:01 on 18 Feb

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் பெருமாள்சாமி. ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு எங்கிருக்கிறார் என தெரியவில்லை என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முதல்வர் வருகைக்கான ஆய்வுகளை மேற்கொண்ட பெருமாள்சாமி, இன்று மீண்டும் முதல்வர் பாதுகாப்பிற்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

short by ரா. சரண்யா / 06:55:01 on 18 Feb

இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையே சாபஹார் துறைமுகத்தின் முதல்கட்டமான ஷாகித் பெஹேஷ்டி துறைமுகத்தில் தற்போதுள்ள வசதிகளை அடுத்த 18 மாதங்களுக்கு இயக்குவது மற்றும் கையாள்வது தொடர்பான ஒப்பந்தம், ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்புக்கும், இந்தியாவின் போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.

short by ரா. சரண்யா / 06:40:01 on 18 Feb

திரிபுரா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 65விழுக்காட்டுக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுரா மாநிலத்தில் 59தொகுதிகளில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.வன்முறை ஏதுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மாலை 4மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

short by புனிதா / 06:25:01 on 18 Feb

அதிமுகவை அழிக்கும் நோக்குடன் பிரதமர் மோடி செயல்படுகிறார் என டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.பாஜகாவின் முகவராக ஓபிஎஸ் மாறிவிட்டார். ஜெயலலிதா இறந்தவுடன் சசிகலா முதல்வர் ஆகியிருந்தால் யாரும் தடுத்திருக்க முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியவர் சசிகலா தான் என்றும் தினகரன் பேட்டியளித்துள்ளார்.

short by புனிதா / 06:10:01 on 18 Feb

தூங்கி எழுந்தாலே ஆட்சி நீடிக்காது என்றுதான் ஸ்டாலின் கூறுவார். அவர் கனவுலகில் வாழ்பவர். 6 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற அவரது கூற்று பலிக்காது. முதல்வர் ஆக வேண்டும் என்ற கனவுலகில் வாழும் அவர் ஒரு மாய மனிதர். கட்டப் பஞ்சாயத்து போன்ற வழிகளில் இருந்துதான் அவர் வந்துள்ளார் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 05:55:01 on 18 Feb

பிரான்ஸில் கால்களால் பெடல் செய்யும் ஏர்பலூன் எனப்படும் இலகு ரக விமானம் ஒன்று தயாரித்தும், நீண்ட தூரம் அதனை இயக்கியும் ஸ்டீபன் ரவ்ஸன் என்பவர் சாதனை படைத்துள்ளார். ஹீலியம் வாயுவால் நிரப்பப்பட்ட 20 மீட்டர் நீளமுள்ள பலூன் ஒன்றை விமானம் போலாக்கி அதனை பெடல்களால் இயக்கியுள்ளார்.

short by ரா. சரண்யா / 05:40:02 on 18 Feb

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் குறித்து 15 நகரங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்துவருகிறது. ரூ.11.400 கோடி மோசடி தொடர்பாக 45 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. வைரவியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.

short by புனிதா / 05:25:01 on 18 Feb

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் உள்ள 1½ கோடி தொண்டர்களையும் ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டில் தொடர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சி நடைபெற வேண்டும். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தான் இணைந்தார்களே தவிர பிரதமர் மோடி சொன்னதால் அல்ல என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 05:10:01 on 18 Feb

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தூதுவர் மற்றும் கிரிக்கெட் விவகாரங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரின் ஆலோசகர் என 2 முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜாம் சேதி வெளியிட்டார்.

short by ரா. சரண்யா / 04:55:01 on 18 Feb

Read more at விகடன்

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற விவகாரத்தில் பொறுமை இழந்துவிட்டதாகவும், ஆந்திராவுக்காக எந்த தியாகம் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஆந்திராவுக்கு அநீதி இழைத்து வருவதை தொடர்ந்தால் நாங்கள் அமைதியை தொடர முடியாது என்று தெரிவித்தார்.

short by ரா. சரண்யா / 04:40:01 on 18 Feb

என்னுடைய பாணி வேறு, கமல் பாணி வேறு என கமலின் சந்திப்புக்குப் பின் ரஜினி செய்தியாளர்களிடம் கூறினார்.அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கும் நண்பர் கமலுக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள்.பணம்,புகழ்,பெயர் சம்பாதிக்க கமல் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எண்ணத்தில் வந்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

short by புனிதா / 04:25:01 on 18 Feb

தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிட தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கூற்று பெருமிதம் தருகிறது. மகிழ்ச்சி. மூத்த மொழிக்கான முன்னுரிமையையும், பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

short by ரா. சரண்யா / 04:10:01 on 18 Feb

கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்த கோரி 3-வது நாளாக தனியார் பேருந்து நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.10 ஆக உயர்த்த வேண்டும் எனக்கோரியும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சலுகை கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

short by ரா. சரண்யா / 03:55:02 on 18 Feb

அரசியல் பயணம் தொடங்குவது பற்றி சொல்வதற்காக ரஜினியை சந்தித்தேன் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.தமது அரசியல் பயணத்தில் பங்கேற்க ரஜினியை அழைத்தேன்.ரஜினி தமக்கு வாழ்த்து தெரிவித்தார்.ரஜினிக்கும் தமக்கும் 40 ஆண்டுகால நட்பு உள்ளது என்றும் ரஜினி உடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது அல்ல என்றும் கமல் கூறியுள்ளார்.

short by புனிதா / 03:40:01 on 18 Feb

காவிரி ஆறு எந்த மாநிலத்திற்கும் சொந்தமானது அல்ல. பொதுவானது என கூறியிருப்பது போன்ற பல அம்சங்கள் வரவேற்கும் விதமாக உள்ளது. வழக்கின் தீர்ப்பை முழுவதுமாக படித்த பிறகு, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து, மேல்முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 03:25:01 on 18 Feb

தமிழகத்தில் 500 ரோபோ கணினி செயல் விளக்க மெஷின்கள் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் ஆட்சி இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளதால் பொறுக்க முடியாத சிலர் ஆட்சியை குறை சொல்லி கொண்டுள்ளனர் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 03:10:01 on 18 Feb

Read more at விகடன்

ரஜினியும் , கமலும் அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்துள்ளார்கள். அதற்கான இயக்கத்தை தனித்தனியாக உருவாக்கும் பணிகளையும் இருவரும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் ரஜினியை சென்னையில் உள்ள அவரது போயஸ் இல்லத்தில் கமல் திடீரென்று இன்று சந்தித்தார். கமலின் இந்த சந்திப்பு அரசியல் அரங்கில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

short by புனிதா / 03:09:37 on 18 Feb

வருகிற பிப்ரவரி.21-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். மேலும் ஜனநாயக ரீதியில் கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் ஜனநாயக ரீதியில்நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதே சரியான முறை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

short by புனிதா / 02:55:01 on 18 Feb

ஆட்சியில் இருக்கிறவர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் அவர்களுக்கும் நல்லது. தமிழ்நாட்டுக்கும் நல்லது. பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் ஏன் சுட்டிக் காட்டுகிறார் என்று தெரியவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். யார் யார் எங்கு வந்து சேரப் போகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 02:40:01 on 18 Feb

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் திரிபுராவில் 1.00 மணி நிலவரப்படி 45.86% வாக்குகள் பதிவாகியுள்ளது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

short by புனிதா / 02:25:01 on 18 Feb

மக்களுக்கு யார் உதவி செய்தாலும், அவர்களை மதிக்க நான் கடமைப்பட்டு இருக்கிறேன். நான் மதிக்கும் மனிதரிடம் விடைபெற்று செல்வதற்காக இப்போது நல்லக்கண்ணுவை சந்தித்து இருக்கிறேன். நான் போகும் பணி மக்கள் பணி. அதில் சிறந்து விளங்கி, நேர்மையாக வாழ்ந்த மனிதர்களின் அறிவுரை எனக்கு பலம் சேர்க்கும் என்று கமல் கூறியுள்ளார்.

short by ரா. சரண்யா / 02:10:02 on 18 Feb

மெக்ஸிகோவின் பினோடோபா பகுதியில் நேற்று முன்தினம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவதற்காக அந்நாட்டு உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஹெலிகாப்டரில் சென்ற போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர்.

short by ரா. சரண்யா / 01:55:01 on 18 Feb

அதிமுக ஆட்சி கவிழ்ந்து விடும் என எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் அறிவித்து வந்தன. ஆனால் அவர்களின் விமர்சனங்களையும், எண்ணங்களையும் கானல் நீராக்கி வெற்றிகரமாக ஓராண்டை நிறைவு செய்துள்ளோம். தொடர்ந்து மக்களின் ஆட்சியாகவே அதிமுக தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

short by ரா. சரண்யா / 01:40:01 on 18 Feb

திரிபுரா மாநிலத்தில் இன்று 59 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இதில் இளம் வாக்காளர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் முன் வந்து ஓட்டளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

short by ரா. சரண்யா / 01:10:01 on 18 Feb

More