View in the JustOut app
X

2019’ நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன் மொழியப்பட்டதில் உடன்பாடில்லை என சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் தெரிவித்திருப்பது எதிர்கட்சிகளின் கூடாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

05:55:02 on 19 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள அரசு மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் பழைய ரேசன் கார்டுகளில் பதிவுசெய்து மண்ணெண்ணெயைப் பொதுமக்களுக்கு வழங்காமல் கள்ளச்சந்தையில் விற்றது மாவட்ட வழங்கல் அதிகாரி நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

05:35:02 on 19 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக மேலும் 11 அதிகாரிகள் டிபிஜி-யிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள், "பணியின்போது பொன்.மாணிக்கவேல் எங்களை சுதந்திரமாக செயல்பட விடவில்லை. சிலை கடத்தல் வழக்குகளில் எந்தக் குற்றவாளிகளையும் கைது செய்யவில்லை.” எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

05:15:01 on 19 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தேனி மாவட்டம் பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி,. ஓ பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

05:07:16 on 19 Dec

மேலும் வாசிக்க தினகரன்

சிறப்பு அதிகாரி என்ற பெயரில் பணி செய்யும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுக்கும் பொன் மாணிக்கவேல் மீது நடவடிக்கைப் பாயுமா என விடுதலை சிறுத்தைகள் கேள்வி எழுப்புகிறது.

04:55:01 on 19 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

திமுக தலைமையின் உத்தரவுப்படி, கொங்கு மண்டலம் முழுவதையும், தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வேலையை, செந்தில் பாலாஜி துவக்கி விட்டார். அதனால்தான், கரூர் மாவட்டத்துக்கு அப்பாற்பட்டு, கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட பிற மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும், கவுண்டர் சமூக பிரபலங்களையும் சந்தித்து வருகிறார்.

04:35:01 on 19 Dec

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

ஜிசாட் -7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி - எப் 11 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. மொத்தம் 2,250 கிலோ எடைகொண்ட ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள், இந்திய விமானப்படை மற்றும் ராணுவப் பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.

04:21:35 on 19 Dec

மேலும் வாசிக்க தினகரன்

வாகன ஓட்டிகள் தங்களது ஓட்டுநர் உரிமம், ஆர்.சி. புத்தகம், காப்பீடு போன்ற ஆவணங்களை டிஜிலாக்கர், எம் பரிவகான் போன்ற செயலிகள் வாயிலாகவும் காட்டலாம் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

04:15:02 on 19 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கர்நாடக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பெண்களின் புகைப்படங்களை போனில் பார்த்துக் கொண்டிருந்த எம்எல்ஏ மகேஷின் செயல், கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்துப் பேசிய மகேஷ், தனது மகனுக்குப் பெண் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.

03:55:01 on 19 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

”80 பத்திரிகையாளர்கள் படுகொலை; வெளிக்கொணர்ந்த உண்மைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட 348 பத்திரிகையாளர்கள்; பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள 60 பத்திரிகையாளர்கள் - பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறைகளின் உச்சம் 2018ஆம் ஆண்டு” என எல்லைகள் கடந்த பத்திரிகையாளர்களுக்கான அமைப்பான ஆர்.எஸ்.எஃப். தெரிவித்திருக்கிறது.

03:35:01 on 19 Dec

மேலும் வாசிக்க விகடன்

திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.7 கோடி மோசடி என உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்திற்கும் அவர்கள் பூட்டு போட்டுள்ளனர். தி.நகர் அலுவலகத்தில் பூட்டு போட்ட நிலையில் அண்ணாசாலையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

03:23:10 on 19 Dec

மேலும் வாசிக்க தினகரன்

ஈரோடு பழையபாளையம் இந்திராகாந்தி வீதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் அந்த பகுதியில் விடுதி நடத்தி வருகிறார். இந்த விடுதியில் 4 மாணவிகள் உள்பட 21 பேர் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளிடம் பால்ராஜ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.

03:15:01 on 19 Dec

மேலும் வாசிக்க மாலைமலர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் ஆலோசனைகளை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கால்யுவர் கலெக்டர் (அழையுங்கள் உங்கள் ஆட்சியரை) என்ற புதிய திட்டத்தை கலெக்டர் சந்தீப் நந்தூரி அறிமுகப்படுத்தியுள்ளார்.

02:55:01 on 19 Dec

மேலும் வாசிக்க தினகரன்

2019ஆம் ஆண்டில் இந்தியாவில் 30.2 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்படும் என தொழில்நுட்பம் ஆராய்ச்சி ஆலோசனை நிறுவனமான டெக் ஆர்க் (techARC) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2019இல் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் க்சியாவோமி (Xiaomi) முன்னணி வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

02:35:01 on 19 Dec

மேலும் வாசிக்க தினத்தந்தி

2014 மற்றும் 2015 ஏலங்களில் அதிக விலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யுவ்ராஜ் சிங். இந்த வருடம் அனைவரும் அவரை வினோதமாகப் பார்க்கும் அளவுக்கு அவருடைய நிலை மாறிவிட்டது. 2014ஆம் ஆண்டில் ரூ.14 கோடிக்கும், 2015இல் ரூ.16 கோடிக்கும் தேர்வான அவர், இந்தாண்டில் 1 கோடி ரூபாய்க்கு மட்டுமே தேர்வாகியுள்ளார்.

02:15:01 on 19 Dec

மேலும் வாசிக்க தினமணி

குஜராத் மாநிலத்தில் விஜயரூபானி தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில அரசு குஜராத் கிராம மக்களின் ரூ.650 கோடி மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்கள் ரூ.500 மட்டுமே செலுத்தி தங்கள் இணைப்பை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:56:01 on 19 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

மக்கள் மருத்துவர், சமூக மருத்துவர், 5 ரூபாய் டாக்டர், கைராசி டாக்டர் என்று மக்களால் அழைக்கப்பட்ட டாக்டர் ஜெயச்சந்திரன் இன்று உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவு ராயபுரம், வண்ணாரப்பேட்டை மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

01:35:01 on 19 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பசுபிக் பெருங்கடலின் தென்கிழக்கே அமைந்துள்ள ஈஸ்டர் தீவில், உள்ளூர் நேரப்படி காலை 7.07 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்தும் தகவல் இல்லை.

01:15:02 on 19 Dec

மேலும் வாசிக்க தினத் தந்தி

விஷால் தலைமையிலான நிர்வாகத்தைக் கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக விஷால் முடிவெடுக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, போராட்டம் நடத்தி வருபவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குப் பூட்டுப் போட்டுள்ளனர்.

01:00:59 on 19 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பெல்ஜியம் பிரதமர் மைக்கேல் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மன்னர் பிலிப்பிடம் ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்பதா? இல்லையா? என்பது குறித்து மன்னர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

12:55:01 on 19 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

மாநில பேரிடர் நிவாரண நிதியில் பணம் இருந்தும் நிதி கொடுக்க மத்திய அரசு மறுப்பதாக கஜா புயல் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு வக்கீல் குற்றம் சாட்டியுள்ளார். கஜா புயல் நிவாரணத்தை தாமதிக்க பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.


12:35:01 on 19 Dec

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

12:15:01 on 19 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா தரப்பில் அவரது வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்துள்ளார். முறையீட்டை மனுவாக தாக்கல் செய்ய பாத்திமா தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

11:55:01 on 19 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் திருவுருவப்படத்தை நாடாளுமன்ற வளாகத்தில் அவரது பிறந்த தினமான வரும் 25ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

11:35:01 on 19 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

’பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டபோது புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ரூ.8000 கோடி செலவானது’ என மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’பணமதிப்பு நீக்க சமயத்தில் பணியில் இருந்த 3 எஸ்பிஐ ஊழியர்கள், வாடிக்கையாளர்களில் ஒருவர் உயிரிழந்தனர்’ என்றும் தெரிவித்துள்ளார்.

11:15:02 on 19 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாகிஸ்தானில் வெளியாகும் பிரபல உருது நாளிதழ் ஒன்றில் ஹபீஸ் சயீத் எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் மக்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் துணை நிற்க வேண்டும் எனவும் ஹபீஸ் சயீத் கூறியிருந்தார்.

10:55:01 on 19 Dec

மேலும் வாசிக்க தினத் தந்தி

கொடநாடு எஸ்டேட் முன்னாள் உரிமையாளர் பீட்டர் ஜோன்ஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகிறார். இன்று ஆஜராகும் பீட்டர் ஜோன்ஸிடம் கொடநாடு சொத்து விபரங்கள் குறித்து கேள்விகள் எழுப்ப ஆணையம் திட்டமிட்டுள்ளது.

10:35:01 on 19 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படமும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் இப்படத்தின் வெளியீடு தேதியில் மாற்றமிருக்கலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், விஸ்வாசம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது.

10:15:02 on 19 Dec

மேலும் வாசிக்க EENADU

’ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேலை பதவி விலகுமாறு மத்திய அரசு வற்புறுத்தியதாகக் கூறுவது தவறு’ என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும் அவர், ’மத்திய அரவு அப்படி எவரையும் பதவி விலக வேண்டும் என்று வற்புறுத்தவில்லை’ என்றும் கூறியுள்ளார்.

09:55:02 on 19 Dec

மேலும் வாசிக்க தினமணி

சபரிமலை கோயிலில் அமலில் உள்ள 144 தடையை வரும் 21ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிப்பதாக பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பம்பா மற்றும் சன்னிதானம் எக்சிக்யூடிவ் மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட போலீஸ் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

09:35:01 on 19 Dec

மேலும் வாசிக்க தின மலர்

சென்னை எம்.கே.பி.நகர், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையைச் சேர்ந்த இரண்டு பேருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

09:31:02 on 19 Dec

மேலும் வாசிக்க தினகரன்

வெகு விரைவில் இந்தியர்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று நம்புவதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

08:55:01 on 19 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று 4.10 மணியளவில் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-11 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களைத் தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 13வது முறையாக ஏவப்படுகிறது.

08:35:01 on 19 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தென் சென்னை ஆகிய நான்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி காணொளிக் காட்சி மூலம் இன்று உரையாற்ற உள்ளார். மாலை 4.30க்கு நடைபெறும் இந்த உரையாடலில் நான்கு மாவட்ட பாஜக ஓட்டுச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

08:15:01 on 19 Dec

மேலும் வாசிக்க தின மலர்

சீன சீர்த்திருத்தக் கொள்கையின் 40வது ஆண்டு விழாவில் பேசிய அதிபர் ஜின்பிங், அமெரிக்காவுக்கு மறைமுக எச்சரிக்கையாக ’என்ன செய்ய வேண்டும் என்றோ அல்லது என்ன செய்யக்கூடாது என்றோ சீன மக்களுக்கு யாரும் கட்டளையிட முடியாது’ என்று கூறியுள்ளார்.

07:55:01 on 19 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

18-12-2018 அன்று நிஃப்டி சிறியதொரு ஏற்றத்துடன் முடிவடைந்திருந்தது. கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே டிரேடிங் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை இதுபோன்ற சூழ்நிலைகளில் முழுமையாகத் தவிருங்கள்.

07:35:01 on 19 Dec

மேலும் வாசிக்க விகடன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை மாற்றப்படாமல் ரூ.73.29 காசுகளாகவும், டீசல் விலை ரூ.68.14 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:02 on 19 Dec

மேலும் வாசிக்க தினகரன்

யு.ம். மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலையில் கமாண்டோ கிளாசிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய பைக் விலை ரூ.1.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

06:55:02 on 19 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

’அரசு வேலைவாய்ப்பு குறித்த கனவுகளுடன் பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு சிதைப்பது கண்டிக்கத்தக்கது,’ என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

06:40:01 on 19 Dec

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

சென்னையில் இருந்து பெங்களூர் செல்வதற்கு புதிய மார்க்கம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது மாநில அரசுகள். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் வெறும் நான்கு மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூருக்கு சென்றுவிடலாம்.

06:25:01 on 19 Dec

மேலும் வாசிக்க ie தமிழ்

ஜம்மு-காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை ராட்சத பலூனில் பயணம் செல்லும் ராணுவ வீரர்கள் காஞ்சிபுரம் முகாமிற்கு வந்துள்ளனர். இந்திய ராணுவ வீரர்கள் 60 பேர் மேஜர் அனுருத் தலைமையில் இந்த பயணத்தை மேற்கொள்கின்றனர்.

06:10:01 on 19 Dec

மேலும் வாசிக்க தினகரன்

நரிக்குறவர்கள் விற்கும் ஊசி, பாசி, சங்கம் மணி விற்க தனி கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த கடை திறப்பு விழாவானது நரிக்குறவர் இன தலைவர் பொண்ணையன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாட்டிலேயே நரிகுறவர்களுக்கு கடை திறக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

05:55:02 on 19 Dec

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கோயில் முறைகேடுகள் தொடர்பாக, பொது நல வழக்கைத் தொடுத்த ஓய்வு பெற்ற சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ் பேசுகையில், ‘தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி, 452 என்ற ஒரே சர்வே எண்ணில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட இடங்கள் விற்கப்பட்டுள்ளன. இதனால் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகள் இழப்பைச் சந்தித்துள்ளது.’ என கூறினார்.

05:40:01 on 19 Dec

மேலும் வாசிக்க விகடன்

அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் வளர்க்கும் நாய் அவருக்கு பல்வேறு உதவி செய்து, பட்டம் பெறுவதற்கு துணையாக இருந்தமைக்காக அந்த நாய்க்கு பல்கலைக்கழகம் கவுரவ பட்டம் வழங்கியுள்ளது.

05:26:01 on 19 Dec

மேலும் வாசிக்க காமதேனு

நாகை, மயிலாடுதுறை, செம்பனார்கோயில், தரங்கம்பாடி, பொறையாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால், சம்பா நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

05:10:01 on 19 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் பாகிஸ்தானுக்கு மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கவுள்ளது. இதையடுத்து லண்டன் முதல் இஸ்லாமாபாத் வரை அந்நிறுவனத்தின் விமான சேவை மீண்டும் நடைபெறவுள்ளது.

04:56:01 on 19 Dec

மேலும் வாசிக்க தினமணி

இந்திய தொலைத்தொடர்பு துறை செயலர் அருணா சுந்தர்ராஜன் அளித்த பேட்டியில், ’மாநிலங்கள் முறையாக தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்த டவர்களை அமைப்பதில்லை. மேலும், கிராமப்புறங்களில் உள்ள தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தி நடைமுறைப்படுத்தவில்லை,’ என கூறினார்.

04:40:02 on 19 Dec

மேலும் வாசிக்க நக்கீரன்

காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி மஹ்பூபா முஃப்தி செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ‘பசுக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பாஜக வழங்கவில்லை, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்,’ என தெரிவித்துள்ளார்.

04:26:02 on 19 Dec

மேலும் வாசிக்க தினத்தந்தி

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு மாற்றும் நடவடிக்கை எடுத்தால் ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சரியும் என்று ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

04:10:01 on 19 Dec

மேலும் வாசிக்க தி இந்து

2017 -18ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து ரூ. 24,907 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.20,536 கோடி தமிழகத்திற்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி. மைத்ரேயன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

03:55:01 on 19 Dec

மேலும் வாசிக்க தினகரன்

பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு பயந்து தமிழகத்தின் மிக முக்கிய சுவாமிகளில் ஒருவரான நித்யானந்தா இந்தியாவை விட்டு தப்பியோடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

03:40:02 on 19 Dec

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படத்தின் இரண்டாவது பாகமாக ‘மாரி 2’ உருவாகியுள்ளது.இப்படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை சாய் பல்லவி புடவை அணிந்து வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

03:26:01 on 19 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சீனா மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து ஹேக்கர்கள் பல்வேறு நபர்களின் ட்விட்டர் கணக்குகளில் ஊடுருவியிருக்கலாம் என தகவல் வெளியான நிலையில், அந்நிறுவன பங்குகள் சுமார் 7 சதவீதம் அளவுக்கு சரிவைச் சந்தித்தன.

03:10:01 on 19 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

2017-18 நிதியாண்டில் தொழில்முனைவோரின் சுய வேலைவாய்ப்புகளுக்காக 36,437 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திறன் மேம்பாடு மற்றும் சுய வேலைவாய்ப்பு தொடர்பான நிகழ்ச்சிகளைத் தேசிய சிறு தொழில் கழகம் ஏற்பாடு செய்கிறது.

02:56:01 on 19 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஓசூர் அருகே குடும்ப தகராறு காரணமாக குடிபோதையில் இருந்த மகன் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

02:40:01 on 19 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்திய நடிகர் அமிர்கான் பங்குபெறும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு முறையான அனுமதி பெறாததால் சீன பல்கலைக்கழகம் ரத்து செய்தது. பின்னர், அந்த நிகழ்ச்சி, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது.

02:26:01 on 19 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

99 சதவீத பொருட்களை 18 சதவீத ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

02:10:02 on 19 Dec

மேலும் வாசிக்க தினமலர்

அலெக்ஸா எக்கோ எனும் உபகரணம் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து அசத்தி வருகிறது ஒரு அற்புதக் கிளி. அமேசான் அலெக்ஸாவுடன் நட்பு பூண்டு தனக்கு என்னென்ன பிடிக்குமோ அத்தனையையும் தனது உரிமையாளரின் குரலில் பேசி ஆர்டர் செய்துள்ளது.

01:56:01 on 19 Dec

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பைக்கை வாடகைக்கு விடும் நிறுவனமான வோகா நிறுவனம் தன்னுடைய ஸ்டார்ட்-அப்பை ஓலாவுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்துள்ளது. 100மில்லியன் டாலரை வோகா நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளது. ஓலா நிறுவனம் தன்னுடைய வணிக எல்லைகளை அதிகரிக்கவே வோகாவுடன் இணைந்துள்ளது.

01:40:01 on 19 Dec

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஆஸ்கரின் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் பிரிவில் தேர்வாகியிருந்து 'வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' என்ற அசாம் மொழி இந்திய திரைப்படம் கடைசி சுற்றில் பரிந்துரை பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

01:26:01 on 19 Dec

மேலும் வாசிக்க EENADU

கோபங்களை குறைத்துக்கொள்ள ஆன்மிகம், யோகா, தியானம் போன்ற ஞான மார்க்கத்தில் ஈடுபட்டால் கோபம் வருவது குறையும். ஆனால் இதிலும் மனதை அடக்க தெரிந்தவர்களுக்கே சாத்தியம். அதே போல் மறதி பல உறவுகளுக்கு பாதையை அமைக்கும்.

01:10:01 on 19 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

’வரும் 2019ஆம் ஆண்டு ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் 5ஜி சேவை தொழில்நுட்பத்திற்கான கட்டமைப்புத் தயாராக இருக்கும். மேலும் 5ஜி சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் விடுவதற்கான நடைமுறைகளும் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும்’ என்று இந்தியாவின் தொலைத்தொடர்பு துறை செயலர் அருணா சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

12:56:02 on 19 Dec

மேலும் வாசிக்க நக்கீரன்

தற்காப்புக் கலையில் 9 கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ளார் மதுரை கொக்கிகுளத்தைச் சேர்ந்த நாராயணன் என்ற இளைஞர். இதுகுறித்து அவர், மேலும் அடுத்தடுத்து கின்னஸ் சாதனைகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

12:40:01 on 19 Dec

மேலும் வாசிக்க தினமணி

நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என எக்சிம் பேங்க் மதிப்பிட்டுள்ளது. கடந்த நவம்பரில் ஏற்றுமதி வளர்ச்சி 0.8 சதவீதமாகக் குறைந்திருந்தது. இது அக்டோபரில் 17.86 சதவீதமாக இருந்தது.

12:26:01 on 19 Dec

மேலும் வாசிக்க தின மலர்

கோவை, சேலம், ஈரோடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களை மறுசீரமைத்து புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்றியம் துவக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் துவக்கப்பட்டன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

12:10:01 on 19 Dec

மேலும் வாசிக்க தினகரன்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் 27ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, ஐயப்பனுக்குத் தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி ஆரன்முளாவில் உள்ள பார்த்தசாரதி கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

11:56:02 on 18 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு ஓராண்டில் மட்டும் ரூ.1,000 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் ரூ. 750 கோடி 2017-18ஆம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:40:01 on 18 Dec

மேலும் வாசிக்க NDTV தமிழ்

புத்தாண்டு கொண்டாட்டத்தைக் குறிவைத்து சென்னையில் போதை மாத்திரைகளை சப்ளை செய்யத் திட்டமிருந்த நைஜீரிய நாட்டு வாலிபரை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடமிருந்து 518 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. தொடர்ச்சியாக அவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11:26:02 on 18 Dec

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

மாலத்தீவு அதிபர் சீனாவுடன் மேற்கொண்ட கட்டுமான ஒப்பந்தங்கள் மூலம் சீனாவிற்கு 20 ஆயிரம் கோடி கடன் தர வேண்டிய நிலையில் இருந்தது மாலத்தீவு. இதற்கு உதவும் பொருட்டு மாலத்தீவிற்கு ரூ.10 ஆயிரம் கோடி இந்தியா சார்பில் வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி மற்றும் மாலத்தீவு அதிபர் இடையிலான சந்திப்பிற்குப் பின் தெரிவிக்கப்பட்டது.

11:10:01 on 18 Dec

மேலும் வாசிக்க நக்கீரன்

நூற்றாண்டைக் கடந்து கடல் பரப்பில் ரயிலைச் சுமந்து சென்று கொண்டிருந்த பாம்பன் ரயில் பாலத்திற்கு முதன் முறையாக நீண்ட ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு பாலத்தின் மீது கப்பல் மோதியபோது 7 நாட்கள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது காலவரையின்றி ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

10:56:02 on 18 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

HHTs என்ற புதிய டேப்லட் செயலி ஒன்றை இந்தியன் ரயில்வேத்துறை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி பொருத்தப்பட்ட டேப்லெட்டை டிடிஇ-களிடம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம், ரயில் எங்கே இருக்கிறது என்ற விவரத்துடன் இணைந்து வெயிட்டிங் லிஸ்ட் குறித்தும் கண்டறியப்படும்.

10:41:02 on 18 Dec

மேலும் வாசிக்க ie தமிழ்

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று ஓராண்டிற்குள் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிப்பெற்றுள்ளது. இது அவருக்கு கிடைத்த ஒரு சிறந்த பரிசு 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியின் உள்ளேயும் வெளியேயும் ஆதரவுகளை ராகுலால் பெற முடியும்.

10:26:01 on 18 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மத்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி (Administrative Officer- Scale-I) பதவியில் 245 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

10:10:01 on 18 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முயன்றதாக பெண் உட்பட 4 பேரை மாதவரம் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.68 ஆயிரத்துக்கான 137 ஐநூறு ரூபாய் நோட்டுகள், கள்ள நோட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட லேப்டாப், பிரின்டர், கட்டிங் மெஷின் மற்றும் 4 பேப்பர் பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

09:56:02 on 18 Dec

மேலும் வாசிக்க காமதேனு

ஹாங்காங்கிலுள்ள முக்கிய பகுதியில், மழைப் போல் திடீரென உயர்ந்த கட்டிடத்தில் இருந்து பணம் (சுமார் 64 அமெரிக்க டாலர்களுக்கு நிகராண பணம்) கொட்டிக்கொண்டே இருந்ததைக் கண்டு, வானை நோக்கி வியப்பில் பார்த்த மக்கள், மகிழ்ச்சியில் மூழ்கினர்.

09:41:01 on 18 Dec

மேலும் வாசிக்க EENADU

மும்பை பல்கலைக்கழகத்தில், 2016-17ஆம் கல்வியாண்டில் 6.19 கோடி ரூபாய், 2017-18ஆம் கல்வியாண்டில் 6.58 கோடி ரூபாய் மறுமதீப்பிடு செய்த பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. 2018-19ஆம் கல்வியாண்டில் இதுவரை 2.72 கோடி ரூபாய் மறுமதிப்பீட்டுக்கான ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

09:26:01 on 18 Dec

மேலும் வாசிக்க விகடன்

ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

09:10:02 on 18 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சுகாதாரமான ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மெத்தனாலை சமையல் எரிவாயுவாகப் பயன்படுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது. பெட்ரோலுடன் 15 சதவிகிதம் மெத்தனாலைக் கலந்து பயன்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

08:56:02 on 18 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இங்கிலாந்தில் உள்ள செஸ்டர் விலங்கியல் பூங்காவில் இந்த ஆண்டு பிறந்த டாப் 10 உயிரினங்கள் வரிசைப்படுத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. மிகவும் அரிய வகை உயிரினங்கள், அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் என அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

08:41:01 on 18 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஐபிஎல் ஏலத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, அக்சர் படேல், ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோர் அதிக விலை போய் உள்ளனர். வீரர்கள் ஏலம் பகல் 2.30 மணிக்கு தொடங்கியது. கடந்த 11 வருடமாக ஐபிஎல் ஏலத்தை நடத்தி வந்த ரிச்சர்ட் மேட்லி இந்த முறை நடத்தவில்லை. ஹக் எட்மீட்ஸ் என்பவர் இந்த வருட ஏலத்தை நடத்துகிறார்.

08:29:11 on 18 Dec

மேலும் வாசிக்க தினத் தந்தி

எண்ணூரில் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த இரண்டு யானைத் தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், யானைத் தந்தங்களை வைத்திருந்த சின்ராஜைக் கைது செய்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

08:26:01 on 18 Dec

மேலும் வாசிக்க தினகரன்

'ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவோம், ஒரே தவணையில் அல்ல, மெல்ல மெல்ல,' என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். மேலும், 'இது குறித்து ஆர்.பி.ஐயிடம் கேட்டிருக்கிறோம் ஆனால் தர மறுக்கிறார்கள்,' என்றும் கூறியுள்ளார்.

08:16:11 on 18 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், விதிகளை மீறி பேனர் வைத்தால் ஒரு வருடம் சிறை என சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேனர் குறித்த புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

08:12:25 on 18 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஐக்கிய அரசு எமிரேட்சின் துபாயில் வேலை பார்த்து வந்த 3 இந்தியத் தொழிலாளர்கள் இடையே, ஏற்பட்ட தகராறில், ஒருவரைக் கொன்றதாக 26 வயது தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மன்னிப்பு கேட்டு அவர் முறையீடு செய்திருந்தார். அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

08:10:01 on 18 Dec

மேலும் வாசிக்க தின மலர்

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாகவும், அந்த படம் சர்கார் படம் மாதிரி அரசியல் சம்பந்தப்பட்ட படம் இருக்காது என்றார். மேலும் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் விளக்கினார்.

07:55:01 on 18 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

துபாயில் 2011ஆம் ஆண்டு பாடகி சித்ராவின் மகள் நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தாள். அதன்பிறகு சித்ரா, மகள் நினைவாக சமூக சேவை பணிகள் செய்து வந்தார். இப்போது கேரள மாநிலம் பருமுலாவில் உள்ள சர்வதேச புற்றுநோய் மைய ஆஸ்பத்திரியில் கீமோ சிகிச்சை பிரிவையும் மகள் நினைவாக கட்டி கொடுத்துள்ளார்.

07:40:02 on 18 Dec

மேலும் வாசிக்க தினத் தந்தி

விருதுநகர் மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளைத் திறக்க வலியுறுத்தி, சிவகாசி மற்றும் திருத்தங்கலில் வரும் 21ஆம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:25:02 on 18 Dec

மேலும் வாசிக்க தினமணி

’இடைத்தேர்தல் நடந்தாலும், நீங்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். வேட்புமனு தள்ளுபடியாகலாம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்புமனு தள்ளுபடியானதை நினைச்சு பாருங்க’ என்ற வகையில் டிடிவி ஆதரவாளர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

07:10:02 on 18 Dec

மேலும் வாசிக்க ஏசியாநெட்

பாகிஸ்தான் சிறையில் இருந்து ஹமீத் அன்சாரி விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட அன்சாரி இன்று விடுதலை செய்யப்பட்டு, அட்ரிரி-வாகா எல்லையில் இந்தியா வந்தடைந்தார்.

06:55:01 on 18 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க பரிசீலிக்கப்படும் என தமிழக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சிலைத்தடுப்புப் பிரிவில் இருந்த காவலர்கள் பொன்.மாணிக்கவேல் மீது டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

06:50:34 on 18 Dec

மேலும் வாசிக்க தினகரன்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் விஜய் 63 படத்தில் நயன்தாராவை தொடர்ந்து மேலும் இரு பிரபலங்கள் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிரும், மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜாவும் விஜய்யுடன் நடிக்கிறார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.

06:42:24 on 18 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் குழந்தைகள் திருமணம் நடப்பதில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 5,480 குழந்தை திருமணம் நடந்துள்ளது என மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எம்.பி.நிர்மலா தெரிவித்துள்ளார்.

06:41:00 on 18 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அசாம் மாநிலத்தில் ரூ. 600 கோடிக்கு விவசாயக்கடன் ரத்து செய்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

06:35:02 on 18 Dec

மேலும் வாசிக்க தினகரன்

ஆளுநருக்கு எதிராக செய்தி வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நக்கீரன் பத்திரிக்கை ஊழியர்கள் 34 பேருக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

06:30:55 on 18 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மத்திய பிரதேசத்தில் வட இந்தியர்களின் வருகையால் உள்ளூர்வாசிகளின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக, மாநில முதல்வர் கமல்நாத் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இது குறித்து பேசிய ராகுல் காந்தி, அந்த கருத்துக்களை தான் பார்க்கவோ, கேட்கவோ இல்லை என்றார்.

06:15:01 on 18 Dec

மேலும் வாசிக்க தினமணி

இடது கை வேகப்பந்து வீச்சாளர் உனத்கட்டை ஏலம் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிக அளவில் விரும்பியது. இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அதேபோன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ரூ.8.40 கோடிக்கும், முகமது ஷமியை 4.8 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுத்தது.

06:05:07 on 18 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நேபாளம் நாட்டின் பிரதமராக இருமுறை பதவி வகித்த துல்சி கிரி (93) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் சர்மா ஒலி, முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் டியூபா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

05:55:01 on 18 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுடைய இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தியுள்ளார்.

05:35:02 on 18 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் முன்னாள் அமைச்சர் பொன்னையன் கோரிக்கை வைத்துள்ளார்.

05:15:02 on 18 Dec

மேலும் வாசிக்க தினகரன்

அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தோரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு பட்டா வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சுற்றறிக்கையை 4 வாரங்களுக்குள் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

05:01:38 on 18 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க