View in the JustOut app
X

’2019 உலகக் கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு என்று முத்திரைக் குத்திவிட்டால் வென்று விட முடியுமா? கிரிக்கெட் களத்தில் ஆடப்படுவது பேப்பரில் ஆடப்படுவது அல்ல’ என்று வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கடுப்புடன் தெரிவித்துள்ளார்.

02:25:01 on 24 May

மேலும் வாசிக்க காமதேனு

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

01:56:02 on 24 May

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இதனை கலைந்திட மேலும் மூன்று ஏரிகளை சீரமைக்கும் வேலை நடப்பதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்திருக்கிறது. செங்குன்றம் அருகே உள்ள ரெட்டேரி, அயனம்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகள் தான் சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்காக தயார் செய்யப்படும் நீர் நிலைகள் ஆகும்.

01:26:02 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

மக்கள் விரும்பும் விஷயத்தை வைத்து சுவாரஸ்யமாய் குடும்ப எமோஷன் கெடாமல் கதை பண்ணுவதில் கொரியக்காரர்கள் சமர்த்தர்கள். அப்படியான ஒரு வெப் சீரிஸ் மெமரீஸ் ஆஃப் தி ஆலம்பரா (Memories of the Alambara).

12:55:01 on 24 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம் உதய். ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு இசை சாம்.சி.எஸ். தவிர, உதயநிதியின் ‘சைக்கோ, ஏஞ்சல்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

12:25:02 on 24 May

மேலும் வாசிக்க ie தமிழ்

குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருவுற்ற பெண்கள் தினமும் குங்குமப் பூவை பாலில் கலந்து சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

11:55:01 on 23 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

'தேர்தல் முடிவுகள் வெளியானதும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான வேலை மறைமுகமாக நடந்து வருகிறது என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. அப்படி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கும் நிலை வந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்,' என பகீரைக் கிளப்பியுள்ளர் இயக்குநர் கெளதமன்.

11:25:01 on 23 May

மேலும் வாசிக்க விகடன்

'நட்புன்னா என்னான்னு தெரியுமா' படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் தியேட்டர் உரிமையாளர்கள் குறித்தும், தன் படக்குழு குறித்தும் கடுமையாக தாக்கி பேசினார். மேலும், ‘டிவியில் இருந்து வரவங்க எல்லாம் சிவகார்த்திகேயன் ஆக முடியாது,’ என கூறினார்.

10:56:02 on 23 May

மேலும் வாசிக்க நக்கீரன்

சோனி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தொழிலுக்கு இந்தியாவின் பங்கு இன்றியமையாதது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கெனிசிரோ யோஷிடா தெரிவித்துள்ளார். ஆனால், இழப்புகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்த வேண்டுமென முதலீட்டாளர்கள் வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

10:25:01 on 23 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்யும், அஜித்குமார் மீண்டும் வினோத் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளனர். இந்த 2 படங்களும் அடுத்த வருடம் கோடையில் ஒரே நாளில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

09:55:02 on 23 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ச்சியாக உணவில் கார்போஹைட்ரேட் குறைந்து வந்தால் வயது முதிர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

09:25:01 on 23 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக 350 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்ற கட்சிகள் 102 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

09:12:05 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 6,15,667 பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 1,61,379 வாக்குகள் பெற்றுள்ளார்.

09:05:48 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பேரவையில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிடோர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், ‘தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன’ எனவும் தெரிவித்துள்ளனர்.

08:58:45 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் அதிகளவு கடின உழைப்பைத் தருவதற்கான வலிமையை இந்த வெற்றி தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பி.ஜே.பி கூட்டணி மீது இந்திய மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தலைவணங்கி நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

08:40:02 on 23 May

மேலும் வாசிக்க விகடன்

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆனந்தனை விட 91,011 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சுப்பராயன் 5,05,793 வாக்குகளையும், ஆனந்தன் 4,14,782 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

08:37:59 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், அண்ணா நினைவிடம் அருகே நாற்காலியில் அமர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

08:26:28 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற இடத்தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளிவருகின்றன. இதில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை விட 37,901 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

08:09:01 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2,99,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியில் தயாநிதி மாறன் 447150 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் சாம் பால் 1,46,813 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார்.

08:02:06 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தமிழக இடைத்தேர்தலுக்கான முடிவுகளும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன்படி, திமுக 13 இடங்களிலும், அதிமுக 09 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

07:52:30 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 4,43,657 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,34,696 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:48:29 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 3,11,680 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 2,61,844 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:43:47 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி 3,91,380 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி 7,09,599 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் சுதீஷ் 3,18,219 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:39:17 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் 1,81,256 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு ஞானதிரவியம் 5,17,219 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன் 3,35,963 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:33:42 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தல் முடிவுகளோடு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் பூண்டி கலைவாணன் 62,288 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

07:29:27 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சவுகிதார்’ என்பதை நீக்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து சவுகிதார் என்ற பெயர் அகன்றுள்ளது. ஆனால் என்னுடைய மனதில் சவிகிதார் என்பது நீங்காத இடம் பிடித்துள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

07:21:49 on 23 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 1,73,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு சண்முகசுந்தரம் 5,50,905 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 3,77,546 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:15:44 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்; தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்’ என பதிவிட்டுள்ளார்.

07:09:32 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தஞ்சை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் 5,75,295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் 2,17,183 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:07:01 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’மக்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். எது தவறாக போனது என்பதை விவாதிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. தோல்வியைக் கண்டு பயப்படாதீர்கள்; தொடர்ந்து போராடுவோம்’ என கூறியுள்ளார்.

06:54:45 on 23 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன்படி, கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரமேஷ் 4,98,437 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கோவிந்தசாமி 3,61,720 வாக்குகள் பெற்றுள்ளார்.

06:47:49 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணிமாறன் 3,52,330 வாக்குகள் பெற்றுள்ளார்.

06:41:05 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 6,13,390 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏழுமலை 3,85,294 வாக்குகள் பெற்றுள்ளார்.

06:31:29 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வாக்கு எண்ணிக்கை நாளான இன்று வரை திண்டுக்கல்லில் தங்கி இருந்த மன்சூர் அலிகான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டதால் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பி விட்டார். அவர் 49,741 வாக்குகள் பெற்றுள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேலுசாமி 6,72,870 வாக்குகள் பெற்றுள்ளார்.

06:26:16 on 23 May

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நன்றி. மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்’ என பதிவிட்டுள்ளார்.

06:26:12 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, வாரியம் சார்பில், தாம்பரம் அடுத்த, எருமையூரில் உள்ள குவாரிகளில் இருந்து, நீர் எடுப்பதற்கான பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனால், ஜூலை முதல், தினமும், 1 கோடி லிட்டர் நீர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:13:35 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படம் வரும் 31ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

06:10:04 on 23 May

மேலும் வாசிக்க தின மலர்

தற்போதைய நிலவரப்படி சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் 2,92,427 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார் அவரை எதிர்த்துப் போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 2,87,446 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

05:38:46 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து 330க்கும் அதிகமாக இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்துத்துவா, ஊழல் எதிர்ப்புதான் பாஜக வெற்றிக்கு காரணமாக அமையும் என கூறியது சரியாகிவிட்டது. பொருளாதார கொள்கைகள் தகுதியற்றதாக இருந்தாலும் தேர்தலில் தப்பி விட்டோம்’ என கூறியுள்ளார்.

05:33:14 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக கூட்டணி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 2,06,730 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 1,39,591 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.

05:24:55 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி பெற்றுள்ளார்.

05:24:53 on 23 May

மேலும் வாசிக்க தினகரன்

’தமிழக மக்கள் ஊழல் செய்யாத பாஜகவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டார்கள். பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என உணர்வார்கள். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் உணர்ந்து வாக்களித்துள்ளார்கள்’ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

05:10:32 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாளை மாலை 5.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. 16வது நாடாளுமன்றத்தைக் கலைத்து அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

05:05:01 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பெரம்பூரில் 5வது சுற்றில் நிறுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் ராஜேஷ் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சென்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

05:01:55 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேனியில் அதிமுக வேட்பாளர் ரவிந்திரநாத் குமார் 2,03,328 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,71,741 வாக்குகள் பெற்றுள்ளார்.

04:52:05 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரளாவில் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 12,76,945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

04:44:33 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நிறுத்தப்பட்டுள்ளது. பெரம்பூரில் மொத்தம் 22 சுற்றுகள் உள்ள நிலையில் 4 சுற்றுகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. வாக்கு இயந்திரத்தின் எண் வேறுபடுவதாகக் கூறி அதிமுக முகவர்கள் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

04:41:27 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா 5,44,536 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆ.ராசாவை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் 3,41,071 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

04:38:06 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் போட்டியிட்டார். தற்போது வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றுவரும் நிலையில், அவர் இதுவரை 366 ஓட்டுகள் வாங்கியுள்ளார்.

04:28:01 on 23 May

மேலும் வாசிக்க நக்கீரன்

பாஜக தலைமையிலான கூட்டணி 338 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே போன்று, காங்கிரஸ் 95 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 109 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தில் சிதம்பரம், தேனி மக்களவைத் தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் திமுக முன்னிலையில் உள்ளது.

04:25:50 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜக வுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிட்டார். இந்நிலையில் வாக்குபதிவில் மூன்றாம் இடத்தை பிடித்த பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ’என் முகத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்துள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

04:24:12 on 23 May

மேலும் வாசிக்க நக்கீரன்

திமுக பொருளாளர் துரைமுருகனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளரும், நடிகையுமான குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ’நாளை தொலைக்காட்சிகளில் என்னை நீங்கள் பார்க்க முடியாது. ஏனென்றால் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.

04:20:54 on 23 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தற்போதைய நிலவரப்படி கோவை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 3,80,664 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் 2,63,330 வாக்குகளுடனும், மக்கள் நீதி மய்யம் 99,862 வாக்குகளும் பெற்றுள்ளனர். மக்கள் நீதி மய்யம் 12% வாக்குகளைப் பெற்றுள்ளது.

04:14:34 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிட்ட IUML வேட்பாளர் நவாஸ் கனி 1,41,078 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 91,216 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.

04:03:50 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தருமபுரி தொகுதியில் திமுக சார்பில்செந்தில்குமாரும், பாமக சார்பில் அன்புமணி ராமதாசும் போட்டியிட்டனர். இந்நிலையில் திமுக வேட்பாளரைவிட 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் அன்புமணி இருக்கிறார். இதனால் தருமபுரி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

03:53:36 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் லோக்சபா மற்றும் மினிசட்டமன்ற தொகுதியில் தி.மு.க முன்னிலை வகித்தாலும் கனிமொழி பொறுப்பாளராக இருந்த விளாத்திகுளத்தில் அ.தி.மு.க முன்னிலையில் இருப்பது கழக உடன்பிறப்புகளை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

03:43:30 on 23 May

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

தமிழகத்தில் அதிமுக எதிர்ப்பலையில் கூட்டணிக் கட்சிகளும் மூழ்கின. கடைசி நேர ட்விஸ்ட் காரணமாக அதிமுக அணிக்குத் தாவிய பாமக, தேமுதிக கட்சிகள் தோல்வியைத் தழுவின. தருமபுரி மக்களின் அன்புப் பிள்ளையாக இருந்த அன்புமணி ராமதாஸ் தோல்வி முகத்தை நோக்கிச் செல்கிறார்.

03:38:49 on 23 May

மேலும் வாசிக்க காமதேனு

இந்தியா மீண்டும் வென்றுவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், ’அனைத்தையும் உள்ளடக்கிய வளமையான, வலிமையான இந்தியாவை உருவாக்குவோம்’ எனவும் பதிவிட்டுள்ளார்.

03:02:25 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில், பாஜக பெருவாரியான இடங்களில் முன்னிலையில் உள்ளது. தொண்டர்களை டில்லிக்கு வரும்படி மேலிடம் அறிவித்துள்ளது. இன்று மாலை ஆட்சி மன்ற குழுக்கூட்டம் நடக்கிறது. மோடி தொண்டர்களை சந்திக்கிறார். இதன்பின் மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி நிருபர்களைச் சந்திக்க உள்ளார்.

02:46:45 on 23 May

மேலும் வாசிக்க தின மலர்

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கர்நாடகா மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக 23 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

02:35:36 on 23 May

மேலும் வாசிக்க தினமணி

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மெஜாரிட்டியை இழக்கும் நிலை ஏற்பட்டால் ஆட்சியைக் கலைத்து மீண்டும் தேர்தலைச் சந்திக்க அக்கட்சி தலைமை திட்டம் வகுத்துள்ளதாக பாஜகவின் முக்கிய தேசிய நிர்வாகிகள் வட்டாரம் தெரிவித்துள்ளது.

02:31:15 on 23 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் கட்சி 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில், தனது முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது பதவியை இன்று மாலை ராஜினாமா செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

02:24:30 on 23 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மகக்ளவைத் தேர்தலில் 300க்கும் மேலான இடங்களில் பாஜக பெரும்பான்மையில் உள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ’மிகவும் மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். நீங்கள் சாதித்துவிட்டீர்கள்’ என பதிவிட்டுள்ளார்.

02:19:36 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மகக்ளவைத் தேர்தலில் 300க்கும் மேலான இடங்களில் பாஜக பெரும்பான்மையில் உள்ள நிலையில், மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

02:13:56 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பொன்.ராதா கிருஷ்ணன், தமிழிசை, ஹெச் ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகிய பாஜக வேட்பாளர்கள் தோல்வி முகத்தில் உள்ளனர். அதேபோன்று ராமநாதபுரம் தொகுதியில் IUML வேட்பாளர் நவாஸ் கனி 86,284 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 46,813 வாக்குகளுடன் பின்தங்கியுள்ளார்.

02:03:45 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

1980க்கு பிறகு தி.மு.க. சேலம் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை. தற்போது 38 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. சேலம் தொகுதியை கைப்பற்றுகிறது. இதனால் தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

01:58:48 on 23 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில், நிலக்கோட்டை, சாத்தூர், சூலூர், மானாமதுரை, விளாத்திகுளம் உள்ளிட்ட 8 தொகுதிகளில் அதிமுகவும், தஞ்சாவூர், ஓசூர், திருப்போரூர், குடியாத்தம், பூந்தமல்லி, ஆம்பூர், திருவாரூர் உள்ளிட்ட 14 தொகுதிகளில் திமுகவும் முன்னிலை வகித்து வருகிறது.

01:39:19 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜக தலைமையிலான கூட்டணி 336 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே போன்று, காங்கிரஸ் 93 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 113 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. டெல்லியில் மொத்தம் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.

01:29:13 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் நிலையில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸூக்கு கடும் போட்டியாக பாஜக உருவெடுத்து வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்தபோதிலும், பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

01:25:44 on 23 May

மேலும் வாசிக்க காமதேனு

மதுரையில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்கு எந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், வாக்கும் எண்ணும் பணி தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு அதிமுக சார்பில் ராஜ்சத்யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வெங்கடேசன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

01:10:28 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி, தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வருகிறார். 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் கனிமொழி 87,358 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் தமிழிசை 28,918 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். 58,440 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலையில் இருக்கிறார்.

01:02:01 on 23 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தொடர்ந்து அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 13 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. அதேபோன்று மக்களவையைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணி 36 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 3 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

12:55:29 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேனி வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளுடன் காங்கிரஸ், அமமுக முகவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி வாக்கு இயந்திரத்தின் எண் 64 என்பதற்கு பதிலாக 54 என உள்ளதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

12:35:19 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. சிவகங்கையில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 96,832 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 39,162 வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

12:25:19 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தற்போதைய நிலைப்படி ஒடிசா சட்டமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் கட்சியான பிஜூஜனதா தளம் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 146 தொகுதிகளில் பிஜூஜனதா தளம் 88 தொகுதிகளில் முன்னிலையிலும், அதற்கு அடுத்து பாஜக 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

12:24:59 on 23 May

மேலும் வாசிக்க நக்கீரன்

17வது பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 300 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

12:23:35 on 23 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா தாக்கூர் போபால் மக்களவைத் தொகுதியில் 27000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். இவர் காங்கிரஸின் திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார்.

12:17:32 on 23 May

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரத்தொடங்கின. மத்தியில் பாஜக அரசு பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. அதே போல் தமிழகத்தில் திமுக அதிமுகவுக்கு கடும் போட்டியாக பல இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த தேர்தல் முடிவுகளால் பாஜக மற்றும் திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்து வருகின்றனர்.

12:08:33 on 23 May

மேலும் வாசிக்க ie தமிழ்

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, நாடு முழுவதும் உஷார் நிலையில் இருக்குமாறு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

12:05:56 on 23 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

'மோடிக்கு 2வது வாய்ப்பு கிடைக்கவில்லையெனில், தனது ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக அழித்து விடுவதாக' நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

12:04:10 on 23 May

மேலும் வாசிக்க காமதேனு

பாஜக தலைமையிலான கூட்டணி 334 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே போன்று, காங்கிரஸ் 96 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 114 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரையில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் உள்ளது.

12:02:02 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரப்பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இந்நிலையில், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 1 லட்சத்திற்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

11:59:16 on 23 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தொடர்ந்து அதிமுக 11 தொகுதிகளிலும், திமுக 11 தொகுதிகளிலும் சமநிலையுடன் முன்னிலையில் உள்ளன. சாத்தூர், பாப்பிரெட்டி, அரூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

11:48:19 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜக தலைமையிலான கூட்டணி 326 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே போன்று, காங்கிரஸ் 102 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 115 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 36 இடங்களிலும், அதிமுக கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

11:42:15 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கமல் கட்சிக்கு சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் 3வது இடம் கிடைத்து வருகிறது.

11:32:26 on 23 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பிருதிவிராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சுவாரியர் நடித்து கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்த ‘லூசிபர்’ படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

11:27:53 on 23 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

வாழ்க்கையில் தோன்றும் வெறுமைக்கு இடம் கொடுக்காமல் பணத்தை தேட ஒதுக்கும் நேரத்தில் ஒரு சில துளிகளை நமது மனத்திற்காகவும் ஒதுக்கினால் வாழ்க்கையில் இன்பம் கிடைக்கும். தியானம் மூலம் உங்கள் வாழ்வினை சுகமாக்கி கொள்ளவும் மென்மேலும் அர்த்தமுடையதாக்கி கொள்ளவும் முடியும்.

11:22:24 on 23 May

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவின் மிக முக்கிய மாநிலமாகக் கருதப்படும் உத்தரப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான கூட்டணி 52 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி கூட்டணி 26 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

11:21:07 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் வகித்துக் கொண்டிருக்கின்றன. அதே போன்று 22 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக 11 தொகுதிகளிலும், திமுக 11 தொகுதிகளிலும் சமநிலையுடன் உள்ளது.

11:12:20 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜக தலைமையிலான கூட்டணி 325 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே போன்று, காங்கிரஸ் 104 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 113 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

11:07:33 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் பார்த்திபன், முதல் சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் சரவணனைக் காட்டிலும் 8443 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

10:55:49 on 23 May

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. சுமார் 1240 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 370 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. 68 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை.

10:54:42 on 23 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பாஜக தலைமையிலான கூட்டணி 321 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே போன்று, காங்கிரஸ் 111 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 109 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலையில் வகித்துக் கொண்டிருக்கின்றன.

10:28:02 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆந்திர மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. இங்கு ஆளும் தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும் இடையே ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. வெளியான முன்னணி நிலவரங்கள் அடிப்படையில், 5-ல் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.

10:13:46 on 23 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமேதி தொகுதியில் சர்வர் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்காலிகமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. அமேதி தொகுதியில் பாஜக-வின் ஸ்மிதி இராணி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையே கடுமையான போட்டி நிகழ்கிறது. முதன்முறையாக இத்தொகுதியில் காங்கிரஸ் தற்போதைய சூழலில் பின்னடைவை சந்தித்துள்ளது.

10:10:30 on 23 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பாஜக தலைமையிலான கூட்டணி 320 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே போன்று, காங்கிரஸ் 116 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. மற்றவை 104 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களிலும், அதிமுக இரண்டு இடங்களிலும் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறது.

10:08:32 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாஜக வேட்பாளரான பிரதமர் நரேந்திர மோடி 22,105 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். சமாஜ்வாதி வேட்பாளர் ஷாலினி யாதவ் 11,920 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 3,240 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

09:51:58 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் 18-ல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மற்ற 2 தொகுதிகளில் இடது சாரிகள் முன்னிலையில் உள்ளன. தொடக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூருக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், தற்போது அவர் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

09:46:43 on 23 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

அமேதி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் முதல் கட்ட வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியாகாந்தி முன்னிலை பெற்றுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

09:36:02 on 23 May

மேலும் வாசிக்க காமதேனு

தமிழகத்தில் 33 இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது. அதேபோன்று அதிமுக கூட்டணி மூன்று இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையிலும் உள்ளது.

09:32:23 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க