View in the JustOut app
X

”திருமாவளவனின் பேச்சு காயத்ரி ரகுராமுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால் அவர் தனது கருத்தை அப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். திருமாவளவன் பேசிய நல்ல பல கருத்துகள் எங்களுக்குப் பிடிக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஏன் இப்படி காயத்ரி ரகுராம் பேசினார் எனத் தெரியவில்லை” என விளக்கம் அளித்துள்ளனர்.

09:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சாதுக்கள் என்ற போர்வையில் கஞ்சா வியாபாரம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

08:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க சன் நியூஸ்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை ஒன்றியம் அய்யம்பட்டியில் இயங்கிவரும் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வரும் இந்திரா, இடமாறுதலுக்காக நிகழ்ந்த கவுன்சிலிங்கில், தான் பொறுப்பு வகிக்கும் பள்ளியில் 2 மாணவர்களே வருவதாகவும் அவர்களும் எப்போதாவதுதான் வருகிறார்கள் என்றும் கூறி கதறியுள்ளார்.

08:25:03 on 21 Nov

மேலும் வாசிக்க தந்தி டிவி

ராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில், பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின், வயிற்றில் ஊசியை வைத்து தைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டாக்டர் மற்றும் நர்ஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

07:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஈரானில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் டெஹ்ரான் உள்பட பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இணையவசதி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. குறைந்தது 106 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அம்னெஸ்டி இன்டெர்நேஷனல் நம்புகிறது.

07:25:01 on 21 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தேமுதிக பெண் நிர்வாகியின் காரை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விஜயபுரம் பகுதியில் வசிக்கும் ரெஜினாமேரி, அவரது காரை வீட்டருகே நிறுத்திய நிலையில், மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு காரை திருடியுள்ளனர்.

06:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கெட்டவார்த்தை சொல்லிக்கொடுத்து கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக தங்களை பேசவைத்ததாக நித்யானந்தா மீது சிறுமி பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆசிரமத்தில் வசித்துவந்த தனக்கே, தனது மகளின் நிலை குறித்த தகவலை சொல்லவில்லை என்று சொல்லும் சிறுமியின் தந்தை, நித்யானந்தாவுக்கு தெரியாமல் மடத்திற்குள் எதுவும் நடக்காது என்கிறார்.

06:25:01 on 21 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

பாஜகவின் பெண் எம்.பி சாத்வி பிரக்யா சிங் தாகூரை பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனை குழுவில் சேர்த்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் மகாராஷ்டிரா மாநிலம் மலேகானில் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்த வழக்கில் 8 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர் ஆவார்.

05:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடகா, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னர், சட்டவிரோதமாக தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்க அரசின் விதிகளை மீறுமாறு பிரதமர் அலுவலகம் நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

05:27:01 on 21 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

காஷ்மீர் விவகாரம் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்து மகாசபா அளித்த புகாரின் அடிப்படையில், பேராசிரியர் மீது 153-A , (பகைமை உணர்வை ஊக்குவித்தல்) 505 (2) என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

04:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க தினமலர்

”நான் வாங்கிய சிறப்பு விருதுக்கு தமிழ் மக்கள் தன காரணம் அவ்விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு” என ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், 2021ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிசயத்தை தமிழக மக்கள் அரசியலில் நிகழ்த்துவார்கள் என்றார்.

04:21:55 on 21 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், முல்லைப் பெரியாறு அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பாக இருக்கிறது என்றும், நிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப் பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லை என்று கேரள அரசு நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது.

03:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தெலுங்கில் அசுரன் படத்தை ரீமேக் செய்வதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. தனுஷ் கதாப்பாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார். மஞ்சு வாரியர் கதாப்பாத்திரத்தில் ஸ்ரேயா நடிப்பதாக செய்திகள் வெளிவந்தது. இறுதியில் அனுஷ்காவை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் அவர் இந்தப் படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

03:27:01 on 21 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, சேலம், நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

02:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

சீனாவின் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவின் இளம் வீராங்கனை மனு பாக்கர் (வயது 17), 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், 244.7 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார்.

02:40:38 on 21 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பொதுத்துறை நிறுவனங்களான பிபிசிஎல், எஸ்சிஐ, கன்கார் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவு மிகப்பெரிய ஊழல் எனக் கூறி காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

02:27:02 on 21 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னை போத்தீஸ் ஜவுளிக்கடை உரிமையாளரின் மகள் வசிக்கும் பங்களாவில் காவலாளியாக வேலைபார்த்த வட மாநில கொள்ளையன் ஒருவன், தாலிச் சங்கிலி மற்றும் வைர நகைகளை திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளான்.

01:57:02 on 21 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணாண கண்ணே பாடல் மக்களிடம் படு ஹிட்டடித்தது. இந்த பாடலை 2019ஆம் வருடம் பாடாதவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். இந்நிலையில் டி.இமான் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார். அதில் நிகழ்ச்சியின் முடிவில் கண்ணாண கண்ணே பாடல் பாடப்பட்டுள்ளது. அதற்கு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்துள்ளது,

01:27:01 on 21 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

சென்னை புளியந்தோப்பு சரகத்திற்கு உட்பட்ட பட்டாளம் பகுதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியை புளியந்தோப்பு காவல் நிலையம் தத்தெடுத்துள்ளது. பள்ளிக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டு, பழுதடைந்த கழிவறைகளில் கதவுகள் மாற்றப்பட்டு, புதிய மேஜை, நாற்காலிகள் வாங்கி தரப்பட்டு பள்ளியை முழுவதுமாக சுத்தம் செய்தனர்.

12:57:02 on 21 Nov

மேலும் வாசிக்க தினகரன்

நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான சித்ரலகரி படம் சூப்பர் ஹிட்டானது. அடுத்து புரோசேவரெவருரா படமும் ஹிட்டானது. இதையடுத்து நிவேதாவுக்கு தெலுங்கில் படங்கள் குவிகின்றன.

12:27:02 on 21 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்கு‌தல் மற்றும் கைது நடவடிக்கைகள் கடந்த 3 ஆண்டு‌ளில் இல்லாத அளவு, ‌இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் 44 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:57:02 on 21 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பொதுத் துறை நிறுவனங்களான பிபிசிஎல், எஸ்சிஐ, கான்கார் ஆகிய நிறுவனங்களில் அரசின் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வருவாய் குறைந்துள்ள நிலையில், வருவாயை உயா்த்தும் நோக்கத்துடன் அரசின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

11:27:01 on 21 Nov

மேலும் வாசிக்க தினமணி

கடலில் மீன்பிடிக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள், சந்திக்கும் சவால்களை உலக அரங்குக்குக் கொண்டுவரவும் அவற்றுக்குத் தீர்வு காணும் பொருட்டும் கடந்த 1997ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி டெல்லியில் ஒன்றுகூடிய 40 நாடுகளைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதிகள் மீனவர் பேரவையை உருவாக்கினர். அந்த நாளே உலக மீனவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

10:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முதல்வர் குறைதீர் முகாம்களில் பெரும்பாலான மனுக்கள், முதியோர் பென்ஷன் கேட்டு வந்தவை. இதனையடுத்து, அனைத்து கிராமங்களிலும், ஒரு மாதத்தில் முதியோர் உதவித்தொகை பெற தகுதியானவர்களின் பட்டியலை தயார் செய்யும் படி, வருவாய் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

10:27:02 on 21 Nov

மேலும் வாசிக்க தினமலர்

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிற்கு 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகள் மற்றும் ராணுவ உபகரணங்களை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:57:01 on 21 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

உள்ளாட்சித் தேர்தலில் இமேஜ் உருவாக்கத்துக்கான மெகா கூட்டணியெல்லாம் தேவையில்லை, மைலேஜ் கொடுப்பதற்காக மினிமம் கூட்டணியே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

09:39:38 on 21 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உள்ளாட்சித் தேர்தலில் இமேஜ் உருவாக்கத்துக்கான மெகா கூட்டணியெல்லாம் தேவையில்லை, மைலேஜ் கொடுப்பதற்காக மினிமம் கூட்டணியே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

09:28:39 on 21 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சாம்சங் நிறுவனத்தின் W20 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிவித்தப்படி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய W20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் கிட்டத்தட்ட கேலக்ஸி ஃபோல்டு மாடலில் வழங்கப்பட்டதை போன்றே இருக்கிறது. புதிய W20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

08:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

‘தளபதி 64’ படத்துக்கு ‘டாக்டர்’ என்று பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல்கள், நீட் பிரச்னை உள்ளிட்டவற்றை இந்தப் படம் பேசுமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போது தான் உண்மை தெரியவரும். அதுவரை காத்திருப்போம்.

07:55:02 on 21 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 647 உதவி பேராசிரியர் பணியிடங்களை கவுரவ விரிவுரையாளர்களைக் கொண்டு நிரப்ப அரசு பரிசீலித்து வருகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் விதிகளின் அடிப்படையிலான சிறப்புத் தேர்வு மூலம் இவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

06:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

2019 உலகக் கோப்பைப் போட்டி முடிவை கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதேபோல விநோதமான விதிமுறையால் ஏற்பட்ட தோல்வியை நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனாலும் இன்னமும் மறக்க முடியவில்லை.

05:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க தினமணி

செவ்வாழையில் பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது.

04:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சென்னை சூப்பர் கிங்க்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சென்னை அணி 20 நம்பர்களை பதிவிட்டு இன்று 20ஆம் தேதி 2020ஆம் ஆண்டு அணியில் விளையாடப்போகும் முதல் 20 வீரர்களின் பட்டியல் என அவர்களின் ஜெர்ஸி நம்பர்களை வெளியிட்டுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

03:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க Behind Woods News

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி 117 இந்தியர்களை அமெரிக்க அரசு இந்தியாவிற்கு நாடு கடத்திய நிலையில் தற்போது மீண்டும் 145 பேர் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்தவர்களும் இருந்ததால் முதலில் அவர்களை வங்கதேசத்தில் விட்டுவிட்டு பின்னர் 145 இந்தியர்களை டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விட்டுள்ளனர்.

02:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

வைட்டமின்-சி நிறைந்த ஆரஞ்சு மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவும். உயர் இரத்த அழுத்த நோயாளிகளைப் பற்றிய ஆய்வுகளில், வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தம் மற்றும் கார்டிசோல் அல்லது மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

01:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

‘உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிச்சிடலாம்னு நினைச்சேன். ஆனா, நம்ம கட்சிக்காரங்களுக்கு அதிக பலன் இல்லைன்னா, இப்ப எப்படி நடத்த முடியும்? நம்ம உழைப்பையும், பணத்தையும் செலவழிச்சு கூட்டணிக் கட்சிகளை ஜெயிக்க வைச்சு அப்புறம் பொதுத் தேர்தலுக்குள்ள வேற முடிவு எடுத்துட்டாங்கன்னா என்ன பண்றது?’ என்று கேட்டிருக்கிறார் முதல்வர்.

12:55:01 on 21 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாட்டில் வருமான வரி சோதனையின் போது ரூ,2000 நோட்டுகள் பிடிபடுவது குறைந்துள்ளது. இதே போன்று ரூ.2000 புழக்கமும் நாட்டில் குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தற்போது ரூ.2000 நோட்டுக்களின் புழக்கம் 31 சதவீதமாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

11:55:01 on 20 Nov

மேலும் வாசிக்க தினமலர்

என்ன காரணமோ தெரியவில்லை, பெண்களுக்கு வயதை பற்றி பேசினாலோ அல்லது கேள்வி கேட்டாலோ பிடிப்பதே இல்லை. இளமை குறைகிறது என்ற எண்ணத்தை இது தருவதால், வயதை பற்றி பெண்களிடம் பேசாமல் இருப்பதே நல்லது. ஏன் உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற கேள்வி பல பெண்களை கோபப்பட செய்கிறதாம்.

10:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

நவம்பர் மாத தொடக்கத்துக்கு முன்னர் வரையில் ரஜினி என்றால் பா.ஜ.க ஆதரவாளர் என்ற எண்ணமே அனைவர் மத்தியிலும் இருந்தது. தற்போது அந்தப் பிம்பம் மறைந்து ரஜினி - கமல் இணைந்து செயல்படுவது என்ற மையப்புள்ளியில் வந்து நிற்கிறது. ரஜினியின் இந்தத் திடீர் மாற்றத்துக்குக் கமலுடன் அரசியல்ரீதியாக ஏற்பட்ட நெருக்கமே காரணம் என்கிறார்கள்.

09:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க விகடன்

”தேசிய குடியுரிமை பதிவேடு முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். யாரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அனைவரையும் தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டு வருவது சாதாரண செயல்முறைதான். மதத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்படமாட்டார்கள்.” என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

08:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

குழந்தைகளை கடத்துதல், சட்டவிரோதமாக சிறையில் அடைத்தல் மற்றும் சித்திரவதை செய்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து ஆமதாபாத் அருகே சுவாமி நித்யானந்தா ஆசிரமத்தின் இரண்டு பெண் மேலாளர்களை ஆமதாபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

08:27:01 on 20 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் என முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக இணைவோம் என எந்த அர்த்தத்தில் ரஜினி, கமல் கூறியுள்ளனர் என தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.

07:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ரஜினி-கமல் கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். மேலும் அவர் ரஜினி-கமல் ஒன்று சேர்ந்தாலும் அவர்களது ரசிகர்கள் ஒன்று சேரமாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.

07:25:02 on 20 Nov

மேலும் வாசிக்க தந்தி டிவி

இந்துக்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதாக தனக்கு எதிராக சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பப்படும் இடுகைகளுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப அணியே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.

06:55:01 on 20 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”குடித்து விட்டு கார் ஓட்டுகிற, பெண்களை வைத்து தொழில் செய்கிற தற்குறிகளுக்கு என்ன தெரியும்? ஆடைகளை அவிழ்த்து போட்டு நடிப்பது அவர்கள் தொழில். அதை அவர்கள் கலை என்றும் சொல்லலாம். இதுபோன்றவர்களுக்கு பதில் சொல்லி காலத்தை வீணடிக்க வேண்டாம்” என்று திருமாவளவம் காயத்ரி ரகுராம் குறித்து பேசியுள்ளார்.

06:25:01 on 20 Nov

மேலும் வாசிக்க Behind Woods News

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 31 வயதான மைதம் பிரசாந்த் என்ற மென்பொருள் இன்ஜினீயர், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி காணாமல் போனார். அனைத்து இடங்களிலும் அவரைத் தேடி அலைந்த குடும்பம் இறுதியாக, ஏப்ரல் 29ஆம் தேதி பிரசாந்த் காணாமல் போனதாக மதப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

05:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க விகடன்

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7 ஆயிரத்து 510 கன அடியிலிருந்து 8 ஆயிரத்து 143 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, அணையின் நீர்மட்டம் 120 கன அடியாகவும், நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.

05:27:02 on 20 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளையொட்டி, அகில பாரத இந்து மகாசபையின் தேசிய தலைவரும், நேதாஜியின் மருமகளுமான ராஜ்யஸ்ரீ சவுத்ரி மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள தவுலத்கஞ்ச் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த நாதுராம் கோட்சேவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

04:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 64வது படத்தில் கதாசிரியராக ‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களை இயக்கிய ரத்ன குமார் பணியாற்றி வருகிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜின் செல்போனில் இருந்து ரத்ன குமாருக்கு கால் செய்து “Machi Happy Birthday Da” என லோகேஷை போல் மிமிக்ரி செய்து நடிகர் விஜய் வாழ்த்தியுள்ளார்.

04:27:01 on 20 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் நடக்கும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், கடந்த காலங்களில், பொதுத்துறை வங்கிகளில் மட்டும் 95,700 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

03:57:02 on 20 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் 2020இல் நடைபெறும் ஐசிசி டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணியின் கேப்டன்சியில் கவனம் செலுத்திவரும் லஷித் மலிங்கா தன் உடலில் இன்னும் 2 ஆண்டுகள் கிரிக்கெட் ஆடும் தெம்பு உள்ளது என்று ஓய்வு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

03:27:01 on 20 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அதிமுகவின் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா கூறும் போது, ‘முத்தலாக் தடை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ரவிந்திரநாத் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மசோதாவை ஆதரித்து பன்னீர் செல்வமே பேசியிருந்தாலும் அது தவறு தான்’ என கூறியுள்ளார்.

02:57:02 on 20 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

கூடங்குளத்தில் அணுக்கழிவை அகற்றுவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஜிதேந்திர சிங், “அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022க்குள் முழு கொள்ளளவை எட்டும். கழிவுகள் பூமியிலிருந்து 15 மீட்டர் ஆழத்தில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும்.” என்றார்.

02:27:02 on 20 Nov

மேலும் வாசிக்க தினகரன்

பா.ரஞ்சித் தனது டுவிட்டரில், ”உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். இந்துக்கள் என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது.” என பதிவிட்டுள்ளார்.

01:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கரூர் தொழிலதிபர் சிவசாமி வீடு மற்றும் கம்பெனிகளில் நடைபெற்ற நான்கு நாள் சோதனையில் கணக்கில் காட்டாத ரூ.32 கோடி ரொக்கம், வரி ஏய்ப்புச் செய்த ரூ.435 கோடி சொத்துக்களுக்கான ஆவணங்கள், 10 கிலோ தங்கம் என்று அதிகாரிகள் வசம் சிக்க, விவகாரம் விறுவிறுப்பாகி இருக்கிறது.

01:27:01 on 20 Nov

மேலும் வாசிக்க விகடன்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் சுமார் 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

12:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வறட்டி விற்பனைக்கு வந்துள்ளது. இது உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளது. 10 துண்டுகளை கொண்ட ஒரு வறட்டி பாக்கெட்டின் விலை 2.99 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.215) உள்ளது.

12:27:02 on 20 Nov

மேலும் வாசிக்க தினமலர்

சென்னை அடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட மண்ணூர்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் ஆந்திராவைச் சேர்ந்த பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.

11:57:02 on 20 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வளர்ச்சி குறைந்து வருவதால் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இந்த ஆண்டு 30,000 முதல் 40,000 நடுத்தரப் பிரிவு ஊழியர்களை வெளியேற்றக்கூடும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநரான டி.வி.மோகன்தாஸ் பாய் கருத்து தெரிவித்துள்ளார்.

11:27:01 on 20 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காற்றழுத்தத் தாழ்வு நிலை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

10:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க தினமணி

சென்னையிலும் காற்று மாசு இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், 15 வயது சிறுவன் பள்ளிக்கூடங்களில் கருவி கொண்டு காற்று மாசு இருப்பதை ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்த அதுல் மேத்தியூ என்ற சிறுவன் தான் இந்த முயற்சியை செய்துள்ளார்.

10:27:02 on 20 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் பயண செலவை தவிர்த்து பிற செலவுகளுக்காக நிதி உதவி வழங்கப்படும் என ஆந்திர அரசு நிதி அரசாணையை வெளியிட்டுள்ளது. மேலும் ஹஜ் பயணிகளுக்கான உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றிற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

இந்து கோயில் சிலைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்து முன்னணி நகர செயலாளர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

09:31:57 on 20 Nov

மேலும் வாசிக்க தினகரன்

காதல் திருமணம் செய்துகொண்ட கவுசல்யாவும் சங்கரும் 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதியன்று உடுமலையின் கடைவீதியில் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா அதிசயமாக உயிர் பிழைத்தார். இதைப் பற்றி 25 நிமிடம் ஓடும் இந்த ஆவணப்படத்தை எடுத்தவர் சாதனா சுப்பிரமணியம் என்ற தமிழ்ப் பெண்.

08:57:02 on 20 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வாட்ஸ்அப் செயலியில் யாரேனும் எம்.பி.4 தரவினை அனுப்பினால் அதனை டவுன்லோடு செய்ய வேண்டாம். வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். செயலியில் பகிரப்படும் எம்.பி4 தரவினை டவுன்லோடு செய்தால் சாதனத்தில் டிடாஸ் (டினையல் ஆஃப் சர்வீஸ்) தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருக்கிறது.

07:57:01 on 20 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழ்நாடு சிவில் சப்ளை கழகத்தில் 100 உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியத் தொகை ரூ. 20,600 முதல் 65,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

06:55:01 on 20 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பாஸ்டேக் திட்டத்தில் இணையாமல், 'பாஸ்டேக்' (FASTag) வழியை வாகனங்கள் பன்படுத்துவதை தடுக்க அதிக கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி, 'பாஸ்டேக்' (FASTag) திட்டத்தில் இணையாமல், 'பாஸ்டேக்' வழியை பயன்படுத்தும் வாகனங்கள் டிசம்பர் ஒன்று முதல் இரண்டு மடக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

05:55:01 on 20 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

தமிழ் சினிமா நடிகைகளில் ஒரு சிலர் மட்டும்தான் ஃபேஷன் மூலம் தனது தனித்துவத்தை வெளிப்படுத்துவார்கள். அந்தப் பட்டியலில் சமந்தாவிற்கும் பெரிய இடம் இருக்கிறது. இவர் அணியும் ஒவ்வொரு ஆடையும் ’வாவ்’ என மெய் மறக்க வைக்கும். கைத்தறி ஆடைகள் தொடங்கி டிசைனர் ஆடைகள் வரை இவர் அணிந்து பார்க்காத ஆடைகளே இல்லை.

04:55:02 on 20 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலிஸாகமல் கிடைப்பில் இருந்து வருகின்றது. தற்போது இப்படத்தின் பிரச்சனைகள் எல்லாம் முடிந்து விரைவில் படம் திரைக்கு வந்துவிடும், அதுவும் கண்டிப்பாக வரும் என இப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

03:55:01 on 20 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

செரிமானத்திற்கு பட்டை உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்சனை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்சனைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் பட்டை உதவுகிறது.

02:55:01 on 20 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஜியோ வருகையால் ஏர்டெல், வோடபோன் இரு நிறுவனங்களும் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. அந்த வரிசையில் 2-வது காலாண்டில் இரண்டு நிறுவனங்களும் கூட்டாக 74 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளன. இதனால் தங்களது கட்டணத்தை உயர்த்த போவதாக இரண்டு நிறுவனங்களும் அறிவித்து உள்ளன.

01:55:01 on 20 Nov

மேலும் வாசிக்க Behind Woods News

கைதி பட ரிலீசுக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்துக்கு கமலின் விருமாண்டி படத்தை ரெஃபெரன்ஸாக எடுத்துக்கொண்டதாகவும், தனக்கு கமலை பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதனை வைத்து, விஜய் 64 படம் நம்மவர் படத்தின் ரீமேக்காக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

12:55:01 on 20 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

உணவுப் பொருட்களில் கெட்டுப் போகாத ஒன்று தான் தேன். தேனின் நிறம் மாறலாம் மற்றும் சர்க்கரையாக மாறலாம். ஆனால் அதை சாப்பிடலாம். உங்கள் வீட்டில் உள்ள தேன் சர்க்கரையாக இருந்தால், அந்த தேன் பாட்டிலை சர்க்கரை கரையும் வரை வெதுவெதுப்பான நீரில் வையுங்கள்.

11:55:02 on 19 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநல, சந்தர்ப்பவாத அறிக்கைகளை பரபரப்புக்காக விடுவதை விட்டுவிட்டு எமது தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறையுடன் செயல்படுங்கள் என ராஜபக்ச மகன் நமல் ராஜபக்ச விமர்சனம் செய்துள்ளார். வைகோ, திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன் ஆகியோர் பெயரைக் குறிப்பிட்டு நமல் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

10:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அஜித்தின் அடுத்த படத்தை ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளதாக புதிய தகவல் தற்போது கசிந்துள்ளது. ஏற்கனவே ஏ.எம் ரத்னம் தயாரிப்பில் அஜித் நடித்த ஆரம்பம், வேதாளம் ஆகிய படங்கள் நல்ல வெற்றிபெற்றிருந்தாலும் இவர்கள் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த என்னை அறிந்தால் படம் போதிய வரவேற்பை பெறவில்லை.

09:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

ஹரிஷ் கல்யான் நடிக்கும் ‘தனுசு ராசி நேயர்களே' படத்தின் டீசர் வெளியாகி வைரலாகிவருகிறது. இப்படம் முழுக்க முழுக்க இளைஞர்கள் விரும்பத்தக்கதாக இருக்கும் என்பது இந்த டீசரின் மூலம் தெரிகிறது. தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த டீசர், இப்படத்தின் வருகைக்காக இளைஞர்களை பெரிதும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

08:55:01 on 19 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாருக்கான். இவருக்கு ஆர்யன் கான், அப்ராம் கான் என்ற மகன்களும், சுஹானா கான் என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் தற்போது ஷாருக்கான் மகள் சுஹானா கான் தி கிரே பார்ட் ஆப் ப்ளூ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.

08:25:01 on 19 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று முதல் 26.11.2019 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியில் சமர்ப்பிக்கலாம்.

07:57:02 on 19 Nov

மேலும் வாசிக்க தினகரன்

தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி டிசம்பர், 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், டிச.13ஆம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான விபரங்கள், நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

07:25:02 on 19 Nov

மேலும் வாசிக்க விகடன்

பரிசோதனை முயற்சியாக நடைபெற்ற சமீபத்திய சோதனையில், டிக்-டொக் கிரியேட்டரிகளின் அக்கவுண்டில் உள்ள ‘Bio' பகுதியில், வணிக நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான லிங்க்(Link)களை சேர்க்கும் விதத்தில் தனது அப்ளிகேஷனை மாற்றியமைத்திருக்கிறது டிக்-டொக்.

07:06:40 on 19 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை, வேலை வாங்கித் தருவதாக திருப்பூர் அழைத்துச் சென்று அங்கு கல்பனா, சந்தானம் மேரி, பிரதாப், சிவக்குமார், மணி ஆகியோருடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

07:02:23 on 19 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, பாபுநகரைச் சேர்ந்த பெண் தேவி (24). இவர் மீது எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் 17 வழக்குகளும் தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் 16 வழக்குகளும், செங்கல்பட்டு ரயில்வே காவல் நிலையத்தில் 4 வழக்குகளும் உள்ளன. மொத்தம் 57 திருட்டு வழக்குகள் உள்ளன.

06:55:01 on 19 Nov

மேலும் வாசிக்க தினமலர்

மார்த்தாண்டம் இம்மானுவேல் அரசர் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பதற்றம் நீடிப்பதால் போலீசாரின் அறிவுறுத்தலின் படி மறு உத்தரவு வரும்வரை வளாகத்திலுள்ள அனைத்து கல்லூரிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

06:54:01 on 19 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மகாராஷ்டிராவில் பாஜகவை வளர்த்துவிட்டதே நாங்கள்தான். இன்று நாடாளுமன்றத்தில் எங்களை இடம் மாற்றி அமர வைக்கிறார்கள். இதற்கு நிச்சயம் விலை கொடுப்பார்கள் என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் வேதனை தெரிவித்துள்ளார்.

06:51:58 on 19 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய முறையில், மேயர் பதவியை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டு வரும் அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

06:50:30 on 19 Nov

மேலும் வாசிக்க தினமலர்

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்யப்பட்டதையடுத்து, கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட காரணத்துக்காக இதுவரை 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே ஜனவரி 1, 2019 முதல் ஆகஸ்ட் 4, 2019 வரை 361 வழக்குகள் பதிவாகியுள்ளது.

06:29:26 on 19 Nov

மேலும் வாசிக்க தினமணி

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.25 சதவிகித வாக்குகளைப் பெற்று, முன்னாள் ராணுவ அமைச்சரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ளார். இவர், தமிழர்களை அரவணைப்பாரா? ஒடுக்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

06:25:01 on 19 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இந்தியாவில் காதல் விவகாரங்கள் கொலைக்கான முக்கிய காரணங்களில் 3வதாக உள்ளன என்று தேசிய குற்ற பதிவு ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 395 பேர் காதல் விவகாரங்களுக்காக கொலை செய்யப்படுகிறார்கள். நாட்டில் இதுதான் உயர்ந்த விகிதமாகும்.

06:23:41 on 19 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணத்துக்கு நீதி கேட்டு திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

06:18:37 on 19 Nov

மேலும் வாசிக்க தினகரன்

மத்திய பிரதேசம் மாநிலம், டாட்டியா பகுதியை சேர்ந்த சுஷில் ஜாதவ் (வயது 24) என்ற இளைஞர் கோபால்தாஸ் மலைப்பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரை மீட்ட போலீசார் அவரது குடும்பத்தார்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

05:57:02 on 19 Nov

மேலும் வாசிக்க தினமலர்

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக என்சிஏஇஆர் எனப்படும் பொருளாதார ஆராய்ச்சி அமைப்பைச் சார்ந்த தேசிய கவுன்சில் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9 சதவீதமாக குறையக்கூடும் என்று இந்த அமைப்பு கணித்துள்ளது.

05:27:01 on 19 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீய சக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

04:57:02 on 19 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “பொருளாதார மந்த நிலைக்கு சில உண்மைகளே சாட்சிகளாகியுள்ளன. குறிப்பாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. 15 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே சரிந்துள்ளது. அதனால் வேலையின்மை 45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு அதிகமாகியுள்ளது.” என கூறியுள்ளார்.

04:27:02 on 19 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தன்னுடைய விலையுயர்ந்த காரை விட்டுவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. தற்போது 46 வயதாகும் இந்த நடிகை, தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார்.

03:57:02 on 19 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது. 13 ஆண்டுகள் பலன் தரும் இந்த ஆண்களுக்கான கருத்தடை ஊசி, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

03:27:01 on 19 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நவம்பர் 19 அன்று ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாக பயனாளர்கள் புகார் அளித்து உள்ளனர். 63% பேர் மொத்த இருட்டடிப்பு செய்ததாகக் கூறினாலும், 16% பேர் தங்கள் செய்திகளை பதிவிடுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் கூறி உள்ளனர்.

02:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஆண்களின் உரிமையை போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ’பெண்கள் நம் நாட்டின் கண்கள்’ என்று பாடும் நாம், ஆண்களை பாராட்ட எந்த ஒரு கவிதைகளையும் பாடுவதுவில்லை. பெண்களை போலவே ஆண்களுக்கும் அழுகை வரும்.ஆனால் ‘ஆண் பிள்ளை அழுகலாமா’ என்று கேட்டு அழுகும் உரிமையை கூட பரித்து வைத்திருக்கிறோம்.

02:27:02 on 19 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சுமார் முப்பது லட்சம் பேர் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் இந்தியாவில் தோராயமாக ஏழு கோடி துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளத் துப்பாக்கிகளின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

01:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க விகடன்

இந்திய பேட்ஸ்மேன் ரஹானே ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரலாற்றுச் சிறப்புமிக்க இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் குறித்து கனவு காண்கிறேன் என்று எழுதி ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் படுக்கையில் உள்ள ரஹானே, இளஞ்சிவப்பு பந்தை அருகில் வைத்துக்கொண்டு உறங்குவதாக அந்தப் புகைப்படம் உள்ளது.

01:27:01 on 19 Nov

மேலும் வாசிக்க தினமணி

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சும்சுல்லா ரஹ்மானி, செயலாளர் முகமது உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

12:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க