View in the JustOut app
X

பொங்கலுக்கு தர்பார் படம் வெளியாக இருப்பதாக முன்னமே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் இந்தவருட பொங்கல் ரிலீஸ் செண்டிமெண்டை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் பட்டாஸ் படத்தை ரஜினியின் தர்பார் படத்துடன் வெளியிட திட்டமிட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

04:27:01 on 12 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

நெஞ்சு சளி சார்ந்த நோய் பாதிப்பு எனப்படும் நிமோனியா நோய் பாதிப்பு, வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான்களால் ஏற்படுகிறது. உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம். புற்றுநோயிற்கு அளிக்கப்படும் சில மருந்துகள் போன்றவற்றின் காரணமாகவும் இந்த நெஞ்சு சளி சார்ந்த நிமோனியா வருவதற்கு வாய்ப்புண்டு.

03:57:02 on 12 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விவரங்கள் அறிய https://tamilnadupost.nic.in/rec/MTS%20Notification%2008%2011%2019.pdf என்ற லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

03:33:56 on 12 Nov

மேலும் வாசிக்க தினமணி

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் காந்தி சேவா நிகேதன் பள்ளி உள்ளது. இங்கு மம்தா துபே என்பவர் குழந்தைகள் நல அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, மாணவர்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ஆசிரியர் மம்தாவை தாக்கியுள்ளனர்.

03:27:01 on 12 Nov

மேலும் வாசிக்க தினமணி

சென்னையில் காற்று மாசு 2016ஆம் ஆண்டு முதலே மோசமான நிலையில்தான் இருக்கிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், தொழிற்சாலைகள் அதிகமுள்ள வட சென்னையில் எந்த அளவுக்கு காற்று மாசுபாடு இருக்கிறதோ, கிட்டத்தட்ட அதற்கு நிகராகவே மத்திய மற்றும் தென்சென்னையிலும் இருக்கிறது.

03:25:04 on 12 Nov

மேலும் வாசிக்க விகடன்

சென்னையில் செல்போனில் தொடர்புகொண்டால் இருசக்கர வாகனம் மூலம் கஞ்சா டெலிவிரி செய்யப்படுவதாக போலீசுக்கு புகார் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், கஞ்சா டெலிவரி செய்யும் நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், தரமணியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஐடி ஊழியர் உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

03:16:20 on 12 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் இன்று அதிகாலை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ் உட்பட 5 தொழிலாளிகள் கழிவுநீர் தொட்டியை, இறங்கி சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கழிவு நீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்த ரஞ்சித் குமார் என்பவரை விஷவாயு தாக்கியுள்ளது.

03:03:28 on 12 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் குஷ்பூ. இந்நிலையில் ட்விட்டரில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், ட்விட்டரில் அதிகமான எதிர்மறை கருத்துகள் வந்து கொண்டிருப்பதால் வெளியேறி விட்டதாக விளக்கமளித்துள்ளார்.

02:59:10 on 12 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

அமெரிக்காவில் வசித்துவந்த தினேஷ்வர் புத்திதட் என்பவருக்கும், டோன்னி டோஜோய் என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது. டோன்னி ஹிரித்திக் ரோஷனின் தீவிர ரசிகையாக இருந்தது, திருமணத்திற்குப் பிறகு தினேஷ்வருக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இதனால் மனைவியைக் கத்தியால் குத்தி கொன்றதாகக் கூறப்படுகிறது.

02:50:24 on 12 Nov

மேலும் வாசிக்க Behind Woods

தமிழகத்தில் டிசம்பர் 27, 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்த வசதியாக அரையாண்டு தேர்வை டிசம்பர் 23 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வி துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

02:27:01 on 12 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கேரள மாநிலம் கோழிக்கோட்டை அடுத்த செம்மாங்குழியைச் சேர்ந்தவர் நாராயணன் நம்பியார். இவரது மகள் பிரதியூஷாவிற்கும், பாலாரியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் நவம்பர் 10-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

01:55:01 on 12 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க யாரும் முன்வராத நிலையில், சட்டப்பேரவை பதவிக் காலமும் முடிந்துவிட்டதால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு அம்மாநில ஆளுநர் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

01:53:03 on 12 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்பெயினில் உள்ள மேட்ரிட் பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர், உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவருக்கு டெங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த தனது ஆண் துணையுடன் அவர் பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

12:57:01 on 12 Nov

மேலும் வாசிக்க தினகரன்

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறி அற்புதம்மாள் குடும்பத்தினர் பேரறிவாளனுக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக சிறைத்துறைக்கு விண்ணப்பித்தனர். இதையடுத்து, வேலூர் சிறையில் இருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார்.

12:39:05 on 12 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ரஹ்மானின் இசையில் காதலன் படத்தில் மனோ, சுவர்ணலதா பாடிய முக்காலா முக்கபலா பாடலை கேரள பாரம்பரிய செண்டை மேளமும், பேண்ட் வாத்தியம் இசை குழுவினர் சேர்ந்து வாசித்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

12:25:01 on 12 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

”கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தினர் உண்மைக்குப் புறம்பான தகவல்களை மட்டுமே சொல்லி வருகின்றனர். அணு உலையில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் குமரி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்படும். எனவே, அணு உலை விரிவாக்கப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்" என அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் சுப உதயகுமார் கூறியுள்ளார்.

11:57:01 on 12 Nov

மேலும் வாசிக்க விகடன்

பாஜகவின் ஒற்றை இந்தியாவின் மாபெரும் எதிரி மாநிலங்கள் என்ற அமைப்பே. எழுபதாண்டு கால இடியாப்பச் சிக்கலை தீர்ப்பதாக காஷ்மீரை பிளந்தது போல அனைத்து மாநிலங்களையும் பிளந்து சிதறடிப்பதே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கனவும். ஆனால் அது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதுதான் மாநிலங்களின் தோல்வி நிகழ்வுகள்.

11:27:01 on 12 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஷ்மீரில் 100 நாட்களுக்குப் பின் இன்று முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

10:57:01 on 12 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக இன்றும், நாளையும், தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, துாத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்யலாம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

10:27:01 on 12 Nov

மேலும் வாசிக்க தினமலர்

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை விதித்த மத்திய அரசின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

09:57:01 on 12 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையத்தில் சுற்றித் திரியும் அரிசிராஜா காட்டு யானையை ட்ரோன் மூலம் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யானையை பிடிக்க 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர். யானைக்கு அஞ்சி கிராம மக்கள், மலைமேல் உள்ள கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர்.

09:27:01 on 12 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தனுஷ் நடிப்பில் வரும் நவம்பர் 29இல் வெளியாகவுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். அதே வேளையில் அவர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் ஷூட்டிங் இடைவெளியில்லாமல் லண்டலில் 64 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டடுள்ளது.

08:55:02 on 12 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

தமிழக முதல்வா் வருகையை ஒட்டி அவிநாசி சாலையில் பீளமேடு பகுதியில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புகளில் கட்சிக் கொடிக் கம்பங்கள் நடப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்த வழியாக இளம் பெண் ஒருவா் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலையின் நடுவே கட்டப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாலையில் விழுந்துள்ளது.

08:42:58 on 12 Nov

மேலும் வாசிக்க தினமணி

சிவசேனா குழுவினர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்ததாகவும், அதற்கான ஆதரவு கடிதங்களை அளிக்க 3 நாட்கள் அவகாசம் கேட்டதாகவும், ஆனால் அவகாசம் அளிக்க இயலாது என்று கவர்னர் தெரிவித்து விட்டதாகவும் அம்மாநில ஆளுநர் மாளிகை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

08:38:29 on 12 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கந்தர்பாலில் நடைபெற்று வரும் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கந்தர்பாலின் குந்த் என்ற இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

08:33:52 on 12 Nov

மேலும் வாசிக்க தினகரன்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

07:55:01 on 12 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

1955 முதல் செயலற்ற கணக்குகளின் விவரங்களை சுவிஸ் அரசு வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் சுவிஸ் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை இந்தியர்கள் உரிமை கோராமல் இருக்கும் நிலையில், ரூ.320 கோடியை சுவிட்சர்லாந்து அரசே எடுத்துக்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.

06:55:01 on 12 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

கடந்த சில வருடங்களாக, சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய ஹீரோ படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, சிறு பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்தால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. அப்படியே தியேட்டர் கிடைத்தாலும் மதியக் காட்சி மற்றும் இரவுக் காட்சியை மட்டும் ஒதுக்கிறார்கள்.

05:55:06 on 12 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

எம்பிபிஎஸ் படிப்புக் காலம் என்பது இதுவரை 54 மாதங்களாக இருந்த நிலையில், இது இனி 50 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேப்போல தேர்வு முறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு பாடமும் இனி இரண்டு தாள்களைக் கொண்டிருக்கும்.

04:55:01 on 12 Nov

மேலும் வாசிக்க தினமணி

`ஹலோ நான் வக்கீல் பேசுகிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள்?' என்று தொடங்குகிறது அந்த ஆடியோ. அதற்கு எதிர்முனையில் பேசுபவர், `நான் அமெரிக்காவில் இருக்கிறேன்' என்று சொல்கிறார். `அமெரிக்காவா?' என்று வக்கீல் கேட்கிறார். அப்போது பெண் ஒருவர், `லண்டனில் இருக்கிறோம்' என்று கூறுகிறார். `வண்டலூரா?' என்று வக்கீல் கேட்கிறார்.

03:55:01 on 12 Nov

மேலும் வாசிக்க விகடன்

இந்தியாவில் வாகன விற்பனை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இந்தநிலையில், பயணியர் வாகன விற்பனை கடந்த அக்டோபர் மாதத்தில் உயர்வை சந்தித்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:55:01 on 12 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆக்சன் படத்தின் புரமோசனில் ஈடுபட்டுள்ள விஷால், “இந்த படத்தின் டிரெய்லரைப் பார்த்து விட்டு என்னிடத்தில் சில நண்பர்கள் படத்தின் பட்ஜெட் 200 கோடி இருக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு காரணம் பிரமாண்டம்தான். ஆனால், இந்த ஆக்சன் படம் ரூ.60 கோடிக்குள் தயாரான படம்” என்று தெரிவித்துள்ளார்.

01:55:01 on 12 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

Redmi 8A மற்றும் Redmi 8-க்கான MIUI 11 நிலையான அப்டேட் நவம்பர் 13 முதல் வெளியிடப்படும் என்று ஜியோமி அக்டோபரில் மீண்டும் அறிவித்தது. பயனர்களுக்கு மகிழ்ச்சியான ஆச்சரியமாகத் தெரிந்த நிலையில், Redmi 8 மற்றும் Redmi 8A-க்கான MIUI 11 நிலையான அப்டேட் இந்திய திட்டமிடலுக்கு முன்னதாகவே ஜியோமி தொடங்கியுள்ளது.

12:55:01 on 12 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு ‘ஆயில் ப்ரீ பேஸ் வா‌‌ஷ்’ நல்லது. பருக்கள் இருப்பவர்களுக்கு ‘சாலிசிலிக் ஆசிட்’ உள்ள பேஸ் வா‌‌ஷ் நல்ல நிவாரணம் அளிக்கும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பால், க்ரீம் கலந்த பேஸ் வா‌‌ஷ், காம்பினே‌‌ஷன் சருமம் உள்ளவர்களுக்கு டி ஸோன் பகுதியை கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பிரத்யேக பேஸ் வா‌‌ஷ்.

11:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் பொதுமக்களுக்கு ஏற்பட்டு உள்ள பாதிப்பு பற்றி உலக சுகாதார பார்சிலோனா அமைப்பின் குழுவினர் தலைமையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், ஸ்டிரோக் அல்லது இதய பாதிப்பு போன்ற வியாதிகள் ஏற்படும் ஆபத்து மக்களிடம் அதிக அளவில் உள்ளது தெரிய வந்தது.

10:55:02 on 11 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமெரிக்காவின் கண்டனத்துக்கு இடையே இரண்டாவது அணு உலை கட்டுமானத்தை துறைமுக நகரமான புஷெரில் ஈரான் அரசு தொடங்கியுள்ளது. அணு உலை கட்டுமானத்தின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை கடுமையாக விமர்சித்தனர்.

09:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க தினகரன்

“ரஜினி ஒரு தலைவரா? கட்சி ஆரம்பிச்சிருக்காரா? அவர் ஒரு நடிகர் புரியுதுங்களா. அரசியல் தலைவர்கள் யாராவது சொல்றாங்களா. சம்பந்தம் இல்லாத ஒருத்தர் சொன்னா அதுபத்தி நாம ஏன் கவலைப்படுவானேன்?” என்று ரஜினியை நக்கலடித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

08:57:02 on 11 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஐ.சி.எஸ்.சி பாடத் திட்டத்தின் பத்தாம் வகுப்பு, இந்திப் பாடத்திலிருந்து புகழ்பெற்ற இந்தி எழுத்தாளர் கிருஷன் சந்தரின் `ஜாமுன் கா பேட்' என்ற சிறுகதை தேர்வுகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1960ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்தக் கதை, தற்போதைய அரசின் மீது விமர்சனம் வைப்பதாக கூறப்படுகிறது.

08:25:01 on 11 Nov

மேலும் வாசிக்க விகடன்

இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள பெகாசஸ் மென்பொருள் மூலம், தலைவர்களின் செல்போன் உளவு பார்க்கப்படுவதாக வாட்ஸ்அப் நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில், பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் வாட்ஸ்அப் உளவு பார்க்கப்படுவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

07:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த சனிக்கிழமை தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் முஸ்லிம்கள் சார்பாக வழக்கை நடத்திய இக்பால் அன்சாரி, அரசு இடம் வழங்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

07:25:01 on 11 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மராட்டியத்தில் சிவசேனை ஆட்சி அமைப்பதால் வெளியில் இருந்து ஆதரவு தர காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. சரத்பவாருடன் தொலைபேசியுடன் பேசிய சோனியா காந்தி வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று கூறியிருந்தார்.

07:12:35 on 11 Nov

மேலும் வாசிக்க தினகரன்

நெல்லையில் ஃபேஸ்புக்கில் அறிமுகமான சிறுமியை, காதல் வலையில் வீழ்த்தி, கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தென்காசியை அடுத்த சொக்கம்பட்டியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

06:55:02 on 11 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த பெண்ணொருவரை ஞாயிற்றுக்கிழமை மாலை, அவரது ஆண்நண்பர் காரில் அழைத்து வந்து அவரது வீட்டருகில் இறக்கி விட்டுச் சென்றுள்ளார். இதனை பார்த்த அந்த பெண்ணின் உறவினர்கள், அந்த நபரை சரமாரியாக தாக்கியதோடு, காரையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

06:25:01 on 11 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் 'வானம் கொட்டட்டும்' படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

06:09:45 on 11 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

விருதுநகர் பெரியவள்ளி குளத்தில் 25 வருடமாக மல்லி மில் நடத்தி வந்தவர் இன்பமூர்த்தி. இவர்களுக்கு மல்லி வியாபாரத்தில் கடன் சுமை அதிகரித்ததால் விரக்தியில் இருந்த இன்பமூர்த்தி தனது மனைவி திலகவதி மற்றும் மகன் கண்ணன் ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

05:57:01 on 11 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

உலகில் அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் 4வது இடத்திலும், எரிவாயு ஏற்றுமதியில் 2வது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி, ஈரானில் புதிதாக மிகப்பெரிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார்.

05:27:01 on 11 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இரு நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து அங்கு பலவித கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன. பலத்த கண்காணிப்பு, கடுமையான பாதுகாப்பு என்று இங்கு உள்ளூர்வாசிகள் அன்றாடம் காவல்துறையினரின் வளையத்திலேயே இருக்கின்றனர்.

04:57:01 on 11 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணத்தை குறைக்க வேண்டும்; ஆடை அணிவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

04:44:15 on 11 Nov

மேலும் வாசிக்க தினமலர்

நாக்பூரில் உள்ள பார்சோனியில் 22 வயதான கால்நடை அறிவியல் மாணவர் ஒருவர் திருமணமான பெண்ணை டேட் செய்ததால், அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவரை கொலை செய்து அவரது உடலை காட்டில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

04:27:01 on 11 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் வார்னர். இவரது மூன்றரை வயது மகள் இண்டி ரே கிரிக்கெட் விளையாடும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் வார்னர் பந்துவீச இண்டி ரே கிரிக்கெட் விளையாடுகிறாள். ஒவ்வொரு முறையும் பந்தை அடித்துவிட்டு ‘நான்தான் விராட் கோலி’ என்று சொல்லியிருக்கிறாள்.

03:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

"இப்ப தெரியுதா மோடிஜி ஏன் தமிழர்களையும், தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், திருவள்ளுவரையும் தூக்கிப் பிடிக்கிறார் என்று. கொஞ்சம் கொஞ்சமாக இந்து மத சாயம் பூசத்தான் இப்படி எல்லாம் செய்து வருகிறார்'' -இப்படிக் கேட்பது கிராமத்து டீக் கடையில் இருந்து தினசரி பத்திரிகையை படித்துக்கொண்டிருந்த வயது முதிர்ந்த விவசாயி.

03:27:02 on 11 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

தீபாவளி ஸ்பெஷலாக இவ்வருடம் வெளியான படங்கள் பிகில், கைதி. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருகின்றன, விஜய்யை வைத்து பிரம்மாண்ட படத்தை கொடுத்த இயக்குனர் அட்லீக்கு ரூ.6 கோடி சம்பளம் என செய்திகள் வந்தன. கைதி என்ற வித்தியாசமான கதையை இயக்கி வெற்றிக்கண்ட இயக்குனர் லோகேஷிற்கு ரூ.50 லட்சமே சம்பளம் என்கின்றனர்.

02:57:02 on 11 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தேவாரம் கிராமப் பகுதி தோட்டங்களுக்குள் சுற்றித்திரியும் காட்டு யானைக்கு இதுவரை, ஒரு சிறுவன் உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளனர். விளைபொருள்களை நாசம் செய்வதால், பல லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.

02:27:01 on 11 Nov

மேலும் வாசிக்க விகடன்

ஸ்மார்ட் போன்களை ஸ்குரோல் செய்ய நாம் அதிகம் ஆட்காட்டி விரலையும், கட்டை விரலையும் பயன்படுத்துகிறோம். இது தொடர்ந்து செய்யப்படுவதால் விரலின் முனைப்பகுதிகளிலும் முன்கையிலும் வலி உண்டாவதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு 'மொபைல் எல்போ' என்றும் மருத்துவர்கள் பெயரிட்டுள்ளனர்.

01:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இளைஞர் ஒருவர் வீட்டு வாசலில் போலியாக ரத்த வாந்தி எடுத்து கீழே விழுந்து கிடக்க, அவரது குடும்பத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதுவும், இளைஞரின் தாய் அதிர்ச்சியோடு ஓடி வருகிறார். பின்னர், சிரித்துக்கொண்டே இளைஞர் எழுந்திருக்க, அந்தப் பெண், கோபத்தின் உச்சிக்கே செல்கின்றார்.

01:27:01 on 11 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சிவகங்கையில் வயதான தம்பதிகளுக்கு மருந்து, மாத்திரை, மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தல் உள்ளிட்ட பல தேவைகளை நிறைவேற்றி, அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து சரியான தருணம் பார்த்து அவர்களை கொன்று மற்றும் கொள்ளையடித்த இரு வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.

12:57:01 on 11 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 81 வயதாகும் துரைமுருகன், உடல் சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதமும் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார்.

12:44:59 on 11 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அயோத்தி தீர்ப்பு குறித்து சன்னி வக்பு வாரியம், ”எங்களுக்கு தீர்ப்பில் திருப்தி இல்லை. இருப்பினும் மாற்று இடம் கேட்க போவதில்லை. நாங்கள் மசூதிக்காக தான் போராடுகிறோம். நிலத்திற்காக அல்ல. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம்” என தெரிவித்துள்ளது.

12:31:37 on 11 Nov

மேலும் வாசிக்க தினமலர்

திருப்பூர் அருகே ஊத்துக்குளியைச் சேர்ந்த நிசார் என்பவர் தனது முதல் மனைவியை பிரிந்து அசினா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அசினாவைக் கொலை செய்து விட்டு, நிசாரும் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

12:27:01 on 11 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ஜாக் அண்டு ஜில் படத்தில் ’அருவி’ அதிதி பாலன் நடித்து வருகிறார். ஆனால், அவருக்கு வேறு பட வாய்ப்புகள் இல்லாததால், எல்லா நடிகைகளையும் போலவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து, போட்டோ ஷூட்களை நடத்தி அதை வெளியிட்டு, வாய்ப்பு தேடி வருகிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

12:24:55 on 11 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்ய சிவசேனாவும் என்சிபியும் அதிகாரப்பகிர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. ஆதாரங்களின்படி, உத்தவ் தாக்கரே முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் மராட்டிய பிரிவு தலைவர் ஜெயந்த் பாட்டீல் உள்துறை அமைச்சராகவும் வாய்ப்புள்ளது.

12:21:13 on 11 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

கோவையில் இருந்து டெல்லி நிஸாமுதீன் செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாத் அருகே உள்ள கச்சிகுடா ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்திற்காக நின்று கொண்டிருந்தது. இன்று காலை 10 மணியளவில் அதே தண்டவாளத்தில் வந்த புறநகர் மின்சார ரயில் கொங்கு எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

12:17:25 on 11 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள், வீடுகளுக்குள் புகுந்து அரிசியை மட்டும் தின்றுவிட்டு சென்றுவிடுவதால் காட்டு யானைக்கு பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதி மக்கள் அரிசி ராஜா என பெயர் வைத்துள்ளனர். இந்த ஒற்றை காட்டு யானை அரிசி ராஜாவை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

12:13:15 on 11 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கன்னியாகுமரி மேல்புறத்தில் சாலமன் என்பவரின் மகளான 19 வயது கல்லூரி மாணவி சைமா உடல் நலமின்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையின் மீது கற்வீசி தாக்கியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

11:57:02 on 11 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கோவில் கட்டும் பணி அடுத்த ஆண்டு (2020) ஏப்ரல் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. ராம நவமி தினம் ஏப்ரல் மாதம் கொண்டாடப்படுவதால், அதையொட்டி கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படும் என தெரிகிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளில் இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

11:27:01 on 11 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 14,784 கனஅடியில் இருந்து 24,021 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 14,600 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119.61 அடியாகவும், நீர்இருப்பு 92.85 டிஎம்சி.,யாகவும் உள்ளது.

10:25:02 on 11 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்த நிலையில் மத்தியிலும் கூட்டணி முறிந்தது. மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறினால், ஆதரவு குறித்து முடிவு என தேசியவாத காங்கிரசின் நிபந்தனை எதிரொலியாக மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் அறிவித்துள்ளார்.

09:57:01 on 11 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

நேர்மையான வெளிப்படையான தேர்தல்களை இந்தியாவில் நடத்த முடியும் என்று நிரூபித்துக் காட்டிய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் நேற்று (நவம்பர் 10) இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.

09:27:01 on 11 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வங்கதேச அணிக்கெதிரான 3வது டி20 போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்தப் போட்டியில், சர்வதேச டி20 போட்டிகளில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற பெருமையை சஹார் பெற்றுள்ளார்.

09:13:01 on 11 Nov

மேலும் வாசிக்க விகடன்

ரிஷிகேஷில் செய்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள 372 செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

08:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க தினமணி

சென்னையில் தொடர்ந்து ஏழாவது நாளாக காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மழை பெய்யாத பட்சத்தில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்துக் கொண்டு தான் போகுமே தவிர குறைவதற்கு வாய்ப்புகள் இல்லை.

08:43:26 on 11 Nov

மேலும் வாசிக்க தினகரன்

நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன்படுத்துங்கள். இவை கையாளுவதற்கு எளிமையானதாகவும், கால் நகங்களுக்கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து, கால் நகங்களை அழகாக தோற்றமளிக்கச் செய்கின்றன.

07:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

சாம்சங் கேலக்ஸி எஸ்11 ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. புதிய விவரங்கள் ஒன் யு.ஐ. 2.0 பீட்டாவில் இருந்து வெளியாகியுள்ளது. அதன்படி குவால்காம் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் இதுவரை அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 865 மற்றும் எக்சைனோஸ் 9830 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

06:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

காலம் சென்ற 2 ஸ்ட்ரோக் சேட்டக்கை நினைவுகூரும் விதமாக, ரெட்ரோ டிசைனுடன்கூடிய ப்ரீமியம் தயாரிப்பாக எலெக்ட்ரிக் சேட்டக்கைப் பொசிஷன் செய்திருக்கிறது பஜாஜ். யமஹாவின் ஃபேஸினோவைப் போலவே, 6 கலர்களில் கிடைக்கும் சேட்டக்கிலும் இந்த பாணி வடிவமைப்பு செமையாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

05:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க விகடன்

அதிக சத்தம் என்பது மிக சத்தமாக ஒலிக்கும் பாடல், கட்டிட ரிப்பேர், மிக்ஸி சத்தம் இப்படி பல சத்தங்கள் உள்ளன. இவை அநேகருக்கும் எரிச்சலையும், கோபத்தினையும் கடும் சொற்களையும், அழிவுப் பூர்வமான சிந்தனைகளையும் ஏற்படுத்துகின்றன என விஞ்ஞானிகளின் ஆய்வுகள் கூறுகின்றன.

04:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும். பின்னர் அந்த பாதியில் கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது. வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை இருக்காது.

03:55:02 on 11 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஹிந்தியில் பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தில் நடிக்க பரத் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பரத் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை குறித்து பரத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

02:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

‘கைதி’ படத்தின் நல்ல வசூல் காரணமாக, ‛பாபநாசம்’ பட டைரக்டர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகாவுடன் இணைந்து கார்த்தி நடித்து வரும் படம் மற்றும் சுல்தான் ஆகிய இரண்டு படங்களையும் வாங்குவதற்கு தமிழ், தெலுங்கில் விநியோகஸ்தர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறதாம்.

01:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நடிகை நிவேதா தாமஸிடம் ரசிகர் ஒருவர் நீங்க வெர்ஜினா என கேள்வியை கேட்க நடிகை கடுப்பாகியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் ”முதலில் நீங்கள் ஒரு சக மனுஷியிடம் பேசுகிறீர்கள் என்பதை புரிந்துகொண்டு பேசுங்கள். மரியாதையையும், கண்ணியத்தையும் கொடுங்கள். உங்களின் நேரத்தை எனக்காக செலவழித்தற்காக நன்றி.” என கூறியுள்ளார்.

12:55:01 on 11 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

மனித முகத்தில் இருக்கும் கண், மூக்கு, வாய் உள்ளிட்ட சாயல்களுடன் கூடிய பெரிய மீன் ஒன்று வேகமாக நீந்தி வரும் வீடியோ இணையத்தில் ஹிட் அடித்து வருகிறது. சீனாவின் மியோவா கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் இருக்கும் மீன் வழக்கமான மீனல்ல என்பதால், வீடியோவை பார்த்தவர்கள் பரவசமாக பகிர்ந்து வருகின்றனர்.

11:55:01 on 10 Nov

மேலும் வாசிக்க Behind Woods News

சூரரைப் போற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, “சூரரைப் போற்று படத்தின் தனது கதாப்பாத்திரத்தின் பெயரை (மாறா) குறிப்பிட்டு, ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கனவு” என பதிவிட்டுள்ளார்.

10:55:01 on 10 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மகாராஷ்டிரா பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டில், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார். மேலும் அவர், “சிவசேனாவுடன் இணைந்து பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ்-என்சிபியுடன் சிவசேனா ஆட்சியமைத்தால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்தார்.

09:57:01 on 10 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிவசேனா கட்சியின் எம்.பியும் சாம்னா நாளேட்டின் ஆசிரியருமான சஞ்சய் ராவத், ”ஹிட்லர் கூட ஒரு நாள் இறந்துவிட்டார் என்பதையும், அடிமைத்தனத்தின் மேகங்கள் மறைந்துவிட்டன என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது.” என பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.

08:57:01 on 10 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பரத் நடிப்பில் உருவாகிவரும் படம் காளிதாஸ். சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில், பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஒரே விதமாக நடைபெறும் கொலைகளை கண்டுபிடிக்கும் மர்மங்கள் நிறைந்த திரைக்கதையை கொண்ட படத்தின் டிரெய்லராக வந்துள்ளது காளிதாஸ்.

08:25:01 on 10 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், தனது 16வது வயதில் முதல் அரை சதம் அடித்து சாதனை படைத்தார். இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் இருந்தது. தற்போது இந்த சாதனையை இந்திய வீராங்கனை சஃபாலி வர்மா முறியடித்துள்ளார்.

07:57:01 on 10 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

எச்-1பி விசா வைத்திருப்போரின் மனைவி அல்லது கணவர் அமெரிக்காவில் பணிபுரிய ஒபாமா ஆட்சி காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த உத்தரவினை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், எச்1பி விசா வைத்திருப்பவர்களின் மனைவி மற்றும் கணவர், அமெரிக்காவில் பணிபுரிவதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

07:27:01 on 10 Nov

மேலும் வாசிக்க தினமலர்

அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் அயோத்தியில் முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. அந்த நிலத்தை ஏற்பது குறித்து வரும் 26ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று சன்னி மத்திய வக்பு வாரியம் இன்று தெரிவித்துள்ளது.

06:57:02 on 10 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

"ஒவ்வொரு நாளும் சட்டமும் சனநாயகமும் *ஒரு* சார்புடையதாக மாறிக்கொண்டே போனால்... தீர்ப்புகள் அதிகாரத்தின் மனநிலையை பிரதிபலிக்கிறது என்றால்... "சட்டத்தின் முன் எப்படி எல்லோரும் சமம்???" என்று இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

06:27:01 on 10 Nov

மேலும் வாசிக்க தினமணி

கருப்பு மிளகு கூந்தலுக்கு பிரகாசத்தை தருவது மட்டுமல்லாமல், முடி தொடர்பான பல சிக்கல்களையும் நீக்குகிறது. எனவே மிளகினை கவனமாக பயன்படுத்தப்பட வேண்டும், ஏனெனில் நீங்கள் தேவையானதை விட அதிகமாக பயன்படுத்தினால், அது உங்கள் உச்சந்தலையில் எரிச்சல் அல்லது அரிப்பு போன்ற உபாதைகளை ஏற்படுத்தும்.

05:57:01 on 10 Nov

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் காஃபி ஷாப்பின் கழிவறையில் ரகசிய கேமராவை கண்டுபிடித்தது தொடர்பாக புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவு தற்போது சமூகவலைதளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. அந்த பதிவு பல பெண்களை அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

05:27:01 on 10 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நாகை மாவட்டத்தில் சீர்காழி அருகே சித்தன்காத்திருப்பு பகுதியைச் சேர்ந்த மாணவியைக் கொன்றதாக, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்பு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

04:57:02 on 10 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் ராமர் கோவில் கட்டுவதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகு, இது பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் கூறியுள்ளார்.

04:27:01 on 10 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பொதுக்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அரசியல் சட்ட அடிப்படை பண்புகளை சிதைத்திட திமுக ஒப்புக் கொள்ளாது என்றார். இட ஒதுக்கீட்டு கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்யும் மத்திய அரசு சட்டதிருத்தத்தை கைவிட வேண்டும் என்றார்.

03:57:01 on 10 Nov

மேலும் வாசிக்க தினகரன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் பல பெற்றோர்களின் அபிமானியாக மாறிவர் சேரன். தற்போது அவரை ஆவண பட இயக்குனர் அருண்மொழியின் மறைவு செய்தி சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ருத்ரய்யாவின் அவள் அப்படித்தான் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர்தான் அருண் மொழி.

03:27:01 on 10 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

ஆரணி அடுத்த மல்லிகாபுரம், கமண்டலாபுரம் கிராமங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த சின்னக்குழந்தை என்பவர் காலமானார். இதையடுத்து அவரது உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல உரிய பாதை இல்லாததால், கமண்டல ஆற்றில் இறங்கி உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சடலத்தை தூக்கிச் சென்றனர்.

02:57:01 on 10 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ராமர் கோயில் அறக்கட்டளை அமைப்பதற்கான பணிகளை மத்திய அரசு விரைவில் மேற்கொள்ளும் என்று தெரிகிறது. சோம்நாத் கோயில் அறக்கட்டளையைப் பின்பற்றி, ராமர் கோயில் விவகாரத்தில் அதேபோன்றதொரு அறக்கட்டளையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

02:27:01 on 10 Nov

மேலும் வாசிக்க விகடன்

சூரியனை 88 நாட்களுக்கு ஒருமுறை புதன் கிரகம் சுற்றி வருகிறது. ஆனால் சூரியன், புதன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது மட்டுமே புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வை நம்மால் காண முடியும். அந்த வகையில் சூரியனை புதன் கிரகம் கடந்து செல்லும் அரிய நிகழ்வு நாளை நிகழவுள்ளது.

01:57:01 on 10 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

”ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். அவருக்கு மக்கள் செலவாக்கு உள்ளது. அவரது சமீபத்திய படங்கள் வரை அனைத்தையும் பார்த்து இருகி்றேன். ஆனால், அரசியலில் அவர் எப்படி செயல்படுவார் என்பது குறித்து என்னால் கணிக்க முடியாது” என்று மேற்கு வங்காள மாநில கவர்னர் ஜெகதீப் தன்கார் தெரிவித்துள்ளார்.

01:27:01 on 10 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈராக் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் பாக்தாத் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

12:57:02 on 10 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கராச்சியில் உள்ள பாகிஸ்தான் விமான படை அருங்காட்சியகத்தில் அபிநந்தனின் உருவ பொம்மை வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் அபிநந்தனை சிறைப்பிடித்து அழைத்து செல்வது போன்று அது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்வர் லோதி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

12:27:02 on 10 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

மேலும் வாசிக்க