View in the JustOut app
X

இரண்டு பில்லியன் யுரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 1.6 லட்சம் கோடி ரூபாய் செலவினை குறைப்பதற்காக 15 ஆயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது ரெனால்ட் நிறுவனம். அந்த நிறுவனத்தின் இடைக்கால தலைவரான க்ளோடில்டே, இந்த திட்டம் அத்தியாவசியமானது என கூறி உள்ளார்.

04:27:01 on 31 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் கடந்த சில வருடங்களாக ஒரு ஹிட் படம் கொடுக்க போராடி வருகிறார். அந்த வகையில் இவரின் சூரரைப் போற்று படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் பாண்டிராஜ் விரைவில் சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

03:27:01 on 31 May

மேலும் வாசிக்க சினி உலகம்

‌கரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் ‘பப்ளிக் அதாரிட்டி’ அல்ல எனவே ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி ஆர்டிஐ விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

02:27:01 on 31 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 8 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவை தட்டி எழுப்பிவிட்டது. ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன.

01:30:00 on 31 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 8 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவை தட்டி எழுப்பிவிட்டது. ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன.

01:27:01 on 31 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமைச்சர் வேலுமணி மீது அவதூறு பிரசாரம் செய்ததாக கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

12:27:02 on 31 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் நீதிமன்றங்களை நாளை முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 5 வழக்கறிஞர்களை மட்டுமே நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

11:27:01 on 31 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

எலென் மாஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்த ராக்கெட் மூலம் நாசா விஞ்ஞானிகளை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது. இதன்படி, புளோரிடாவில் உள்ள பால்கன் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் இன்று அதிகாலை 3.22 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

10:27:02 on 31 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மெட்ரோ ரயில், மின்சார ரயில், திரையரங்குகள், ஜிம், நீச்சல் குளங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.

09:53:31 on 31 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜூன் 30 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இதில் நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தொழில் நிறுவனங்கள் 100% ஊழியர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

09:48:26 on 31 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை 1.6.2020 முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது. மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை.

09:41:58 on 31 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

09:41:04 on 31 May

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

09:35:38 on 31 May

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

09:29:40 on 31 May

மேலும் வாசிக்க தினகரன்

கிளவுஸ் அணிந்து கொண்டு பொருட்களை தொடுவது, மற்ற மேற்பரப்புகளை தொடுவதால் அங்கிருக்கும் கிருமிகள் கிளவுஸில் ஒட்டிக்கொள்ளலாம். கிளவுஸ் நழுவி விழும் தன்மை கொண்டது என்பதால் அதை மற்ற இடத்தில் பரவ நாமே காரணமாய் இருப்போம். கிளவுஸ் அணிவதற்கு பதிலாக சானிடைசர் கொண்டு செல்லுங்கள்.

08:57:02 on 31 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

07:57:01 on 31 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

National Institute for Empowerment of Persons with Multiple Disabilities எனப்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம், சென்னை கோவளத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

06:57:01 on 31 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தயிர்ச் சாதம் என்பது பீரியட்ஸ் வலியால் பாதிக்கப்படுபவர்கள் ஒரு மதிய உணவாகச் சாப்பிடலாம். பருப்பு வகைகள் கொண்ட தயிர்ச் சாதம் உடலில் எந்தவிதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் ஒரு சுவையான, சுவையான உணவுக்காக வீட்டில் வறுத்த அப்பளத்துடன் சாப்பிடலாம்.

05:57:01 on 31 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தொலைக்காட்சி பொறுத்தவரை டிஆர்பி என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் எப்போதும் சன் டிவி தான் முதலிடத்தில் இருக்கும். அதனைத்தொடர்ந்து கே டிவி பல வாரங்களாக இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது. தற்போது இதை விஜய் டிவி, அதனை முறியடித்து இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.

10:57:01 on 30 May

மேலும் வாசிக்க சினி உலகம்

கடந்தாண்டில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் சுவிஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து ரொனால்டோ இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் கோலி 66 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

09:57:02 on 30 May

மேலும் வாசிக்க நக்கீரன்

”சிறுகுறு வியாபாரிகள் பயனடையும் வகையில், ஒவ்வொருவருக்கும் தனி நபர் கடனாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்கு ரேசன் கார்டை ஆவணமாக பயன்படுத்தி கூட்டுறவு வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையை 350 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.” என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

08:57:01 on 30 May

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆர்.எஸ்.எஸ், இந்துத்வா அமைப்புகள் முன்வைக்கும் கோரிக்கைகளின் ஒன்றான இந்தியாவின் பெயரை பாரதம் மற்றும் இந்துஸ்தான் என மாற்றவேண்டும் என்பதுதான். அதன்மூலம் இந்தியாவை இந்துக்களுக்கு உரிய நாடு என்று கூறும்படியாக இருக்கும் என இந்த கோரிக்கையை தொடர்ந்து முன்வைகிறார்கள். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார்கள்.

07:58:35 on 30 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

அடுத்த ஊரடங்கு முக்கியமான தளர்வுகளைக் கொண்டிருக்கும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். இந்தத் தளர்வுகளில், ‘எமர்ஜென்சி பாஸ்’ எனப்படும் அவசரப் பயணத்துக்கான அனுமதி முக்கியமானதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களிடையே சென்று வரை இ பாஸ் முறை ரத்து செய்யப்படலாம்.

07:57:01 on 30 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா, ”யுவனின் மனத்தில் நான் விஷத்தைக் கலக்கவில்லை. என்னைத் திருமணம் செய்யும் முன்பே அவர் இஸ்லாமியராக மாறிவிட்டார். நான் அவரைச் சந்திக்கும் முன்பே நான்கு வருடங்களாக இஸ்லாத்தைப் பின்பற்றி வந்தார்” என்று கூறியுள்ளார்.

07:51:14 on 30 May

மேலும் வாசிக்க தினமணி

இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோதி முதல் முறையாக பிரதமர் பதவியை ஏற்றார். ஐந்தாண்டு ஆட்சிக்கு பிறகு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

07:39:57 on 30 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ ரயில், சர்வதேச விமான சேவை, திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்களுக்கான தடை தொடர்ந்து நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

07:31:36 on 30 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாடு முழுவதும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட தடைவும் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பயணிகள், சரக்கு ரயில் போக்குவரத்துக்கு தடை இல்லை எனவும் அறிவித்துள்ளது.

07:22:09 on 30 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக, UNLOCK 1.0 என்ற பெயரில் புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கவும் அரசு அனுமதி அனுமதி அளித்துள்ளது.

07:15:21 on 30 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அரியலூரில் உள்ள அரசு சிமெண்டு ஆலைக்கு, சுண்ணாம்புக் கல் சுரங்கம் அமைப்பதற்காக 161 விவசாயிகளிடம் இருந்து 270 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த விவசாயிகளுக்கு வேலை தருவதாக கூறப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாகியும் வேலை வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கழுத்தில் கயிற்றை மாட்டி போராட்டம் நடத்தினர்.

07:06:48 on 30 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகத்தில் மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 21,184-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 616 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

06:59:47 on 30 May

மேலும் வாசிக்க தினகரன்

ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் வேலையின்றி தவிக்கும் வட இந்தியர்கள் அதிக அளவில் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில் ரயில் மூலம் சொந்த ஊருக்கு இவர்களை அனுப்பி வைப்பதாக கூறி 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பல இடங்களில் வசூல் நடைபெற்று வருகிறது.

06:57:01 on 30 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கோவை வைசியாள் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் முன்பு. ஒரு நபர் இறைச்சியை வீசிச் சென்றுள்ளார். இதனையறிந்த இந்து அமைப்பினர் காவல் நிலையம் முன் திரண்டனர். இந்நிலையில், இறைச்சி வீசியவர் கவுண்டம் பாளையம் பிருந்தாவன் நகர் பகுதியில் வசிக்கும் ராம்பிரகாஷ் என தெரியவந்தது.

06:49:30 on 30 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமிழக வேளாண் செயலர் ககன்தீப் சிங் பேடி, தற்போது வடமாநிலங்களில் உள்ள வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் என்றும், அதன் தாக்குதல் ஜூலை வரை இருக்கும் ஆனால் ராஜஸ்தானில்தான் இருக்கும் என்றும் தெரிவித்தார். கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருப்பது உள்ளூர் வெட்டுக்கிளி எனவும் தெரிவித்தார்.

06:22:25 on 30 May

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழக உளவுத்துறை ஐ.ஜி ஆக ஈஸ்வரமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை உளவுத்துறை ஐ.ஜி ஆக இருந்த சத்திய மூர்த்தி ஓய்வு பெற்றதை அடுத்து இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

06:17:17 on 30 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருக்க வேண்டுமென பொருளாதார ஆய்வறிக்கை கூறியது. ஆனால், பொருளாதார வளர்ச்சி அரசின் எதிர்பார்ப்புக்கேற்றபடி இல்லை. 2025ல் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை இந்தியா அடையச் சாத்தியமே இல்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

05:57:01 on 30 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னை புழல் சிறையில் தண்டனை பிரிவில் உள்ள 74 கைதிகள் மற்றும் 19 காவலர்கள் என 93 பேருக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று முந்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில், 31 கைதிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

04:57:01 on 30 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

”சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது. ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது. அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்கிறது.” என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

03:57:01 on 30 May

மேலும் வாசிக்க தினமலர்

`கொரோனா நிவாரண உதவிகள் 1.5 லட்சம் குடும்பங்களுக்குக் கொடுத்த பின்பும், தேவைப்பட்டால், `என் வீட்டை விற்றுகூட கொடுத்துக்கொண்டே இருப்பேன்' என்று சொல்லும் அன்பு அண்ணன் செல்லூரார் வழியில் நாமும் செய்வோம் உதவிகளை....' என்று, அ.தி.மு.க இளைஞரணி சார்பில் மதுரை மாநகர் எங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

02:57:01 on 30 May

மேலும் வாசிக்க விகடன்

பெங்களூருவில் பாஜக எம்.எல்.ஏ.க்களில் சிலர், டின்னருடன் கூடிய ரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார்கள். இதையடுத்து பாஜக முதல்வர் எடியூரப்பாவின் ஆட்சி மீது அக்கட்சிக்குள்ளேயே அதிருப்தியாளர்கள் குழு உருவாகியிருப்பது உறுதியாகிவிட்டது. இது எடியூரப்பாவுக்கு கடும் சவாலை உண்டாக்கியிருக்கிறது.

01:57:02 on 30 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, கோவை - மயிலாடுதுறை, மதுரை - விழுப்புரம், திருச்சி - நாகர்கோவில், கோவை - காட்பாடி ஆகிய ரயில்கள் ஜுன் 1ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

12:57:01 on 30 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். மேலும், சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

11:57:01 on 30 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அனைத்து மொழிகளிலும் கடிதம் எழுதியுள்ளார். அதில், மக்கள் உதவியுடன் அனைத்து வளர்ச்சி பாதையிலும் நாடு வெற்றி நடைபோடுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

10:57:02 on 30 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரை அடுத்த தலைவன் வடலியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் அரசு கல்லூரி மாணவன் சத்தியமூர்த்தி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆத்தூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கொலையாளியை தீவிரமாக தேடிவருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

10:33:44 on 30 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளையுடன் (31ம்தேதி) முடிவடைகிறது. இந்நிலையில், சென்னை மாநகர மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், பேருந்துகளை புதுப்பித்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், பணியாளர்கள் உடனடி பணிக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

09:57:01 on 30 May

மேலும் வாசிக்க தினகரன்

கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 640 கனஅடி வீதம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 40.67 கனஅடியாகவும் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி 640 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றம் செய்யப்படுகிறது.

09:51:09 on 30 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,119 கனஅடியில் இருந்து 2,250 கனஅடியாக உயர்ந்துள்ளது. குடிநீர் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டுர் அணையின் நீர்மட்டம் 100.79 அடியாகவும், நீர் இருப்பு 65.86 டிஎம்சியாகவும் உள்ளது.

09:50:04 on 30 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வடக்கில் உணவுப் பயிர்களை அழித்து வரும் பாலைவன வெட்டுக்கிளிகள் அங்கிருந்து தமிழகத்திற்குள் வர வாய்ப்பில்லை என்று கூறப்பட்டநிலையில், கிருஷ்ணகிரி பகுதிக்குள் குறிப்பிட்ட வகை வெட்டுக்கிளிகள் சாலையோரம் உள்ள எருக்கஞ்செடிகளையும், மற்ற தாவரங்களையும் சாப்பிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

09:25:01 on 30 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு என்ற https://www.annauniv.edu/pdf/JRF%20Recruitment.pdf லிங்க்கில் தெரிந்து கொள்ளலாம்.

08:57:01 on 30 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

2020ஆம் ஆண்டிற்கான இந்திய வனத்துறையிலுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. வனத்துறையில் பணியாற்ற விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம். வேலைக்கு விண்ணப்பிக்க மற்றும் மேலும் இது குறித்து தெரிந்து கொள்ள http://hfri.icfre.org/ என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

07:57:01 on 30 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

உத்தனாசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் மூளைப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மூளைக்கு அமைதி ஏற்பட்டு மனஅழுத்தம் மனப்பதற்றம் குறைகிறது. இதனால் தலைவலியிலிருந்து விடுதலை. சிறுநீரகம் மற்றும் கணையத்தை சீராக்குகிறது. பின் கால் கெண்டைக்கால் மற்றும் இடுப்பு தசைகள் விரிவடைகின்றன.

07:00:00 on 30 May

மேலும் வாசிக்க மாலைமலர்

உத்தனாசனத்தை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் மூளைப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மூளைக்கு அமைதி ஏற்பட்டு மனஅழுத்தம் மனப்பதற்றம் குறைகிறது. இதனால் தலைவலியிலிருந்து விடுதலை. சிறுநீரகம் மற்றும் கணையத்தை சீராக்குகிறது. பின் கால் கெண்டைக்கால் மற்றும் இடுப்பு தசைகள் விரிவடைகின்றன.

06:57:01 on 30 May

மேலும் வாசிக்க மாலைமலர்

உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளிகள் இருப்பதால் ஒருவர் அதிகமாகச் சாப்பிடுவார். அதிகப்படியான உணவைத் தவிர்ப்பதற்கான ஒரு சிறந்த வழி, அடிக்கடி சாப்பிடுவது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம். இது உங்கள் பகுதியின் அளவைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் வீக்கம் மற்றும் அசிடிட்டியைக் தடுக்கும்.

05:57:01 on 30 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் மாளவிகா மோகனன். தற்போது மாஸ்டர் படத்தின் டிரைலர் குறித்து அவர் கூறும்போது, ”மாஸ்டர் டிரைலரை பார்த்தேன். இது நிச்சயம் ஒரு பித்துநிலைதான்... உங்களுக்கும் மெய்சிலிர்க்கும் படியாகத்தான் இருக்கும்” என்றார்.

10:57:01 on 29 May

மேலும் வாசிக்க மாலைமலர்

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், “உள் துறை அமைச்சர் அமித் ஷா என்னைத் தொடர்புகொண்டு ஊரடங்கு தொடர்பாக கருத்து கேட்டார். இன்னும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றே நினைக்கிறேன். எனினும், ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்க வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு." என்றார்.

09:57:01 on 29 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் மூடியே கிடக்கும் தொழிற்சாலைகளைக் குறிவைத்து பழைய இரும்புக்கடை நடத்திவரும் சிலர், தினமும் 4 டன் என்ற டார்க்கெட் நிர்ணயித்து திருடிவந்துள்ளனர். பெரும்பாலும் காயிலாங் கடை வியாபாரிகள்தான் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

08:57:02 on 29 May

மேலும் வாசிக்க விகடன்

வெட்டுக்கிளிகளை வைத்து பலரும் மீம்ஸ் உருவாக்கி வருகின்றனர். அதில் நடிகர் விவேக் ரன் படத்தில் நடித்த காட்சியை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் அவருக்கு கண்ணுக்கு தென்பட, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒரு படத்தை வச்சிக்கிட்டு என்னவெல்லாம் சொல்றீங்க. மீம்ஸ் பசங்க ஐடியா உள்ள பசங்க” என்று பாராட்டியுள்ளார்.

08:27:01 on 29 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நாமக்கல் அருகே கொடிக்கால்புதூர் ஊராட்சியை சேர்ந்த ராமன்(38) கட்டட வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா(32). இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (35) என்பவருடன் சத்யாவுக்கு முறையற்ற உறவு ஏற்பட்டது.

07:57:01 on 29 May

மேலும் வாசிக்க தினமணி

சென்னை உயர் நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோர், ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என்று தீர்ப்பளித்தது.

07:25:02 on 29 May

மேலும் வாசிக்க விகடன்

வெட்டுகிளிகள் பெரிய அளவில் கூட்டமாக படையெடுத்து வந்து பயிர்களை உண்பது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 150 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை.

06:55:01 on 29 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகத்தில் மேலும் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,246-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 154-ஆக அதிகரித்துள்ளது.

06:25:35 on 29 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தீபா, தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அண்ணன் மகள், மகனை நேரடி வாரிசாக அறிவித்து தீர்ப்பில் திருத்தம் மேற்கொண்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

06:11:07 on 29 May

மேலும் வாசிக்க தினகரன்

லுங்கி உற்பத்தியில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்கள் முதல் இடத்திலும், ஈரோடு இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்நிலையில், பொது முடக்கம் காரணமாக ஈரோட்டில் 500 கோடி ரூபாய் அளவுக்கு லுங்கி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தத் தொழிலை நம்பியுள்ள சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

05:27:01 on 29 May

மேலும் வாசிக்க தினமணி

முகநூலில் அறிமுகமாகி, 5 வருடம் காதலித்து ஊர் சுற்றிய இளம்பெண்ணை ஏமாற்றி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த சிங்கப்பூர் மாப்பிள்ளை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுமனைவியுடன் கழுத்தில் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை காதலிக்கு அனுப்பியதால் காதலி உயிரை மாய்த்துக் கொண்ட சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

04:55:01 on 29 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகைகள் அபர்ணா முரளி, ஷோபனா, அனுபமா பரமேஸ்வரனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கையும் ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். இதையடுத்து தொழில்நுட்ப குழுவினர் உதவியுடன் சில மணிநேரத்தில் அவரது இன்ஸ்டாகிராம் கணக்கு மீண்டும் சரிசெய்யப்பட்டது. இதற்காக உதவிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

04:27:01 on 29 May

மேலும் வாசிக்க மாலைமலர்

'பிகில் படத்தால் தயாரிப்பாளருக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக சில தகவல்கள் ரிபப்ளிக் டிவி நிறுவன இணையதளத்தில் வெளியானது. இது குறித்து பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, தான் அத்தகைய பேட்டி எதுவும் அளிக்கவில்லை என்றும், இத்தகவல் பொய்யானது என்றும் தெரிவித்துள்ளார்.

03:57:01 on 29 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் வெட்டுக்கிளிகள் தாக்க தொடங்கியுள்ளது. இரண்டு கிராமங்களில் வெட்டுக்கிளிகளை அழிக்க வேளாண்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் வெட்டுக்கிளிகள் ஓய்வெடுக்கும்போது மருந்து தெளித்து அவற்றை அழித்து வருகின்றனர்.

03:27:01 on 29 May

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

கொரானா தொற்றைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக அளவில் 4.9 கோடி பேர் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், அதில் இந்தியாவில் மட்டும் 1.2 கோடி பேர் வறுமையின் உச்சத்துக்கே சென்றுவிடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:57:01 on 29 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சீனா விவகாரம் குறித்து பிரதமர் மோடியுடன் பேசியதாகவும், இந்தியா மகிழ்ச்சியாக இல்லை எனவும் டிரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், கடைசியாக, பிரதமர் மோடியிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி பேசியதாகவும், சமீப காலங்களில் எந்த பேச்சும் நடைபெறவில்லை எனவும், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

02:27:01 on 29 May

மேலும் வாசிக்க தினகரன்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மோடி, முடக்கநிலையை அறிவித்தபோது ஆரம்பத்தில் பாராட்டப்பட்டார். ஆனால், பின்வந்த நாட்களில் இந்திய பெருநகரங்களில் கட்டமைப்பின் தூண்களாக கருதப்படும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பட்ட சிரமங்கள் இந்த அரசின் மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தியுள்ளது.

01:57:01 on 29 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள வண்டல் ஓடல் அணையிலிருந்து டிராக்டரில் மணல் கடத்திய பொட்டலைச் சேர்ந்த ஜான் பீட்டர், பால்ராஜ், சங்கரநாராயணன், சமுத்திரபாண்டி உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஜான் பீட்டர் என்பவர், தனியார் தொலைக்காட்சியின் அம்பை பகுதி நிருபராகப் பணியாற்றி வருகிறார்,

01:27:01 on 29 May

மேலும் வாசிக்க நக்கீரன்

சேலத்தில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற, தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில் லோகநாதன் அவரது மனைவி உள்ளிட்ட அவரது குடும்பமே இச்செயலில் ஈடுபட்ட அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

12:57:01 on 29 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நாமக்கல் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் கேபிபி பாஸ்கர் மீது, திமுக மக்களவை உறுப்பினர் ஏகேபி சின்ராஜ் குற்றச்சாட்டு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆதரவாளர்களிடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

12:25:01 on 29 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

ஓடிடி தளத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. ஆனால் திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில், மொபைல் அப்ளிகேஷனில் வெளியான அதே தரத்தில் வெளிவந்தது.

11:57:02 on 29 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஊட்டியில் தொடர்ச்சியாக 5 குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அதோடு 2 இளைஞர்களும் கொலை செய்யப்படுகின்றனர். படத்தின் முதல் பாதி விறுவிறுவென செல்ல, யார் இந்த கொலைகளை எல்லாம் செய்தது என்ற காட்சிகள் சுவாரஸ்யமாக செல்ல, அதற்கான விடைகள் மெல்ல இரண்டாம் பாதியில் வரவர, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் அதிர வைக்கின்றது.

11:27:02 on 29 May

மேலும் வாசிக்க சினி உலகம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உலகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ரோகித் (19) என்பவர், ஃபேஸ்புக்கில் 4 போலியான கணக்குகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் பெண்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

11:00:00 on 29 May

மேலும் வாசிக்க விகடன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி உலகநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ரோகித் (19) என்பவர், ஃபேஸ்புக்கில் 4 போலியான கணக்குகளைப் பயன்படுத்தி, அதன் மூலம் பெண்களின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து, பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

10:57:01 on 29 May

மேலும் வாசிக்க விகடன்

கடந்த திங்கள் முதல் ஸ்ரமிக் சிறப்பு ரயில்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் 9 பேர், குழந்தைகள் உட்பட வெப்பம், பசி, தாகம் தாளாமல் இறந்துள்ளனர். இந்நிலையில், சொந்த ஊர் திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் மரணங்கள் சிறியதுதான் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

10:27:01 on 29 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நிசாமுதீன் தப்லிக் ஜமாத் தலைவர் மவுலானா சாதிடம் வெளிநாட்டு நிதி மற்றும் ஹவாலா இணைப்புகள் தொடர்பான விஷயங்களில் சிபிஐ விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மவுலானா சாத் வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவிலிருந்து சிபிஐ கேட்டு உள்ளது.

09:57:01 on 29 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.61 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 103,330 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்த எண்ணிக்கை 4,534 ஆகவும், தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 145 ஆகவும் அதிகரித்துள்ளது.

09:27:02 on 29 May

மேலும் வாசிக்க தினகரன்

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மந்த நிலையை இந்தியப் பொருளாதாரம் சந்தித்துக் கொண்டு இருப்பதாக ‘கிரிசில்’ நிறுவனம் கூறியுள்ளது. 1958 1966, மற்றும் 1980 ஆகிய நிதியாண்டுகளில் இந்தியா மந்த நிலையை எதிர்கொண்டு இருக்கிறது. அதற்குப்பின், இப்போதுதான் 2020-இல் மீண்டும் பொருளாதார மந்தத்தை இந்தியா சந்தித்து வருகிறது.

08:57:01 on 29 May

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பட்ஜெட் பிரிவில் களமிறங்க இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட் லௌ தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்திய சந்தைக்கென புதிய திட்டமிடல் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

07:57:01 on 29 May

மேலும் வாசிக்க மாலைமலர்

விழுப்புரம் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி / சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06:57:01 on 29 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்திய சந்தையில் டட்சன் ரெடி-கோ ஃபேஸ்லிஃப்டை அறிமுகமாகியுள்ளது. இதன் விலை டெல்லியில் ரூ.2.83 லட்சம் முதல் ரூ.4.77 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் D, A, T, T(O) 800 cc, T(O) 1.0, and T(O) 1.0 AMT ஆகிய 6 வகைகளில் இந்த காரை கிடைக்கச் செய்துள்ளது.

05:57:02 on 29 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் டிக்கிலோனா. இந்நிலையில் படத்தின் இன்று செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் அவர் ஆடையில்லாமல் 2 தவாவை மட்டும் வைத்து மானத்தை மறைத்தபடி போஸ் கொடுத்திருக்கிறார்.

10:57:01 on 28 May

மேலும் வாசிக்க சமயம் டாட் காம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி இன்று (மே 28) காங்கிரஸ், ‘ஸ்பீக் அப் இந்தியா’ என்ற பிரச்சாரத்தை சமூக தளங்களில் முன்னெடுத்துள்ளது. இதன் எதிரொலியாக இன்று ட்விட்டரில், #speakupinida என்ற ஹேஷ்டேக் டிரண்டிங் ஆகியுள்ளது.

09:57:01 on 28 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரொனா வைரஸ் பாதிப்புக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக குணமடைந்தவர்களை வீட்டிற்கு செல்ல ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிக்கொண்டு இருக்கும் போது, சிகிச்சையிலிருந்து தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த ஒருவர் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார்.

08:57:01 on 28 May

மேலும் வாசிக்க தினமணி

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அதன்படி தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சென்னையில் இன்று 559 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

08:27:01 on 28 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

கடலூரில் ஓடும் தென்பெண்ணை ஆறு மறுபுறம் புதுவையில் முடிகிறது. இந்த ஆற்றுக்கு மறுபுறம் வரை சுமார் அரை கிலோமீட்டர் தூரம் நீந்திச் சென்று, அங்கு சாராயத்தை குறைந்த விலைக்கு வாங்கி குடிக்கின்றனர் மதுப்பிரியர்கள். பின்னர் போதையுடன் அங்கிருந்து திரும்ப ஆற்றில் நீந்தி வருகின்றனர்.

07:55:01 on 28 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கொரோனா அதிகம் பாதித்த அரபு நாடுகளில் குவைத் நான்காம் இடத்தில் உள்ளது. இந்நிலையில் குவைத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க அந்நாடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

07:25:02 on 28 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழ், தெலுங்கு சினிமா படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்தவர் மாயா. இவரது மகன் விக்னேஷ்குமார். இவர் சென்னை, சாலிகிராமம் தசரதபுரம் 8-வது தெருவில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். விக்னேஷ் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் விக்னேஷ் வீட்டிற்கு வந்த 8 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

06:55:01 on 28 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் இவ்வாண்டு கோடையின் அக்னி நட்சத்திரம் நிறைவுபெறும் நாளில் பல்வேறு இடங்களில் இடியுடன் மழை பெய்தது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், ரெட்டியார்பட்டி, வீரகேரளம்புதூர் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது.

06:47:59 on 28 May

மேலும் வாசிக்க தினகரன்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறையின் தகவலை அடுத்து அங்கு காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வாகன சோதனையின் 20 கிலோ வெடிமருந்துகள் நிரப்பிய கார் ஒன்று பிடிக்கப்பட்டது.

06:25:02 on 28 May

மேலும் வாசிக்க விகடன்

கபசுரக் குடிநீர் மூலம் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்று ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்தது. அதன்படி, தமிழக அரசு சார்பில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கபசுரக் குடிநீா் பலனளிக்காது என்று தேசிய நோய் பரவியல் நிறுவன இயக்குநா் தெரிவித்த கருத்து விமா்சனங்களுக்கு வித்திட்டுள்ளது.

05:57:01 on 28 May

மேலும் வாசிக்க தினமணி

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் 20 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டித் தர முன்வர வேண்டும் என்றும், பொது மக்கள் மற்றும் தனியார் பங்களிப்பாக 10 லட்சம் கோடி ரூபாய் திரட்டி மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி புதிய யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.

05:27:01 on 28 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் துளசிமாதன். இவருக்கு திருமணம் ஆகி 11 வயதில் மகன் உள்ள நிலையில் இரண்டாவதாக கடந்த 2 மாதத்திற்கு முன்பு இவரது மனைவிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் துளசிமாதன், அந்த பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்ததை கண்டு மனைவி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

04:57:02 on 28 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சைப்ரஸுக்கு வந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் விடுதி கட்டணம், மருத்துவம் மற்றும் உணவு செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மீண்டும் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

04:27:02 on 28 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தெலுங்கு நடிகையான சாய் சுதா, தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில், ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

03:57:01 on 28 May

மேலும் வாசிக்க மாலைமலர்

மதுரை மாவட்டம் பாலமேடு வலையபட்டி சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ATM சென்டரில், பணம் எடுக்க வரும் முதியவர்கள், பெண்களிடம், பணம் எடுத்து தருவது போல், அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் நடித்து, அவர்களிடமிருந்து ATM பின் நம்பரை தெரிந்து கொண்டு மோசடி செய்துள்ளார்.

03:27:01 on 28 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த குணசேகரன், அதே பகுதியில் வசிக்கக்கூடிய பூமிநாதன் என்பவரின் டீக்கடையை நெருப்பு வைத்து எரித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடனுக்கு சிகரெட் தர மறுத்த, ஆத்திரத்தில் பூமிநாதனின் கடைக்கு தீ வைத்தது தெரியவந்துள்ளது.

02:57:01 on 28 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா போலி இணையதளங்கள் உங்களிடமிருந்து முக்கிய தகவல்களைத் திருடும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். coronavirusstatus.space, coronavirus-map.com, blogcoronacl.canalcero.digital, coronavirus.zone என இப்படிப் பல மோசடி இணையதளங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

02:27:01 on 28 May

மேலும் வாசிக்க விகடன்

மேலும் வாசிக்க