View in the JustOut app
X

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை
நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.87
ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 3 காசுகள் குறைந்து
லிட்டருக்கு ரூ.66.12 காசுகளாகவும் உள்ளன.

posted by பா.செ.மீனா / 07:10:01 on 18 Mar

2015 - 16ல் உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசிற்கு
கிருஷி கர்மான் என்ற விருது வழங்கப்பட்டது. டில்லியில் நடந்த
விழாவில், பிரதமரிடமிருந்து இந்த விருதை அமைச்சர் துரைக்கண்ணு
பெற்று கொண்டார். மேலும் இந்த விருதுடன் ரூ.5 கோடி பரிசு தொகையும்
வழங்கப்பட்டது.

posted by புனிதா / 06:55:01 on 18 Mar

இன்னும் 2 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்
என்று நம்பிக்கை உள்ளது. தமிழக மக்கள் எதற்காக எம்.பி.க்களை
தேர்தெடுத்தார்களோ அந்த மக்களின் உரிமைகளை காப்பதற்காகவும்,
ஜீவாதாரத்தை பெருக்குவதற்காகவும் ஜெயலலிதா வழியில்
பாராளுமன்றத்தில் போராடி வருகிறோம் வருகிறோம் என்றும்
தம்பித்துரை கூறியுள்ளார்.

posted by புனிதா / 06:40:01 on 18 Mar

விவசாயிகளின் தானியங்களுக்கு உற்பத்தி விலையில் இருந்து 1.5
சதவீதம் அடிப்படை ஆதார விலையாக அவர்களுக்கு வழங்கப்படும் என்று
பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்காக மத்திய அரசு
அல்லும் பகலும் பாடுபட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான
அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது என்றும் அவர்
கூறியுள்ளார்.

posted by புனிதா / 06:25:01 on 18 Mar

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையிலும் புதிதாக
தாய்பால் வங்கிகள் தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கர் கூறியுள்ளார். மேலும் அடுத்த கல்வி ஆண்டு முதல்
விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பட்ட மேற்படிப்பு
பிரிவு தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

posted by புனிதா / 06:10:01 on 18 Mar

கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராக மாற்றி, அதனை
லிட்டருக்கு 5 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக
மத்திய அமைச்சர் கட்காரி கூறியுள்ளார். மேலும் இதற்கான சோதனை
திட்டம் தமிழகத்தின் தூத்துக்குடியில் செயல்படுத்தப்பட்டு
வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

posted by புனிதா / 05:55:01 on 18 Mar

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்ய தேவைப்பட்டால்,
ராணுவம் எல்லை தாண்டலாம். பாகிஸ்தானுடன் சுமூக உறவை பேணுவதையே
இந்தியா விரும்புகிறது. ஆனால், அந்நாடு இதனை விரும்பவில்லை.
ஐநா.,வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு புகலிடம்
அளித்து வருகிறது என்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
கூறியுள்ளார்.

posted by புனிதா / 05:40:01 on 18 Mar

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 25-ம் தேதி தஞ்சையில்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என டிடிவி தினகரன்
அறிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்குள் மேலாண்
வாரியத்தை அமைக்க வேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார். அம்மா
மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய பின் டிடிவி அறிவித்துள்ள
முதல் போராட்டம் இது ஆகும்.

posted by புனிதா / 05:25:01 on 18 Mar

சென்னையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி
வெங்கையா நாயுடு, மறைந்த கர்நாடக பாடகி டி.கே.பட்டம்மாளின் இசை
சேவைக்கு புகழாரம் சூட்டினார். டி.கே.பட்டம்மாள் கர்நாடக இசை
உலகில் முடிசூடா அரசியாக விளங்கினார். இந்தியா சுதந்திரம்
அடையும் நேரத்தில் தேசப்பற்று மிக்க பல்வேறு பாடல்களை பாடியவர்
என்றும் அவர் கூறினார்.

posted by புனிதா / 05:10:01 on 18 Mar

நீதிமன்றங்களில் காலியாக உள்ள 3,400 பணியிடங்கள் விரைவில்
நிரப்பப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம்
தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து தாலுகாக்களிலும்
விரைவில் நீதிமன்றங்கள் திறக்கப்படும் என்றும் இதற்காக
பட்ஜெட்டில் ரூ.659.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
கூறியுள்ளார்.

posted by புனிதா / 04:55:01 on 18 Mar

விவசாயம் உள்ளிட்ட சில விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த மார்ச்
19, 20ல் டில்லியில் உலக வர்த்தக மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில்
பங்கேற்க, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 50 நாடுகளுக்கு
அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பில்லை
என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

posted by புனிதா / 04:40:02 on 18 Mar

பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான
தும்கா கருவூலம் தொடர்பான கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஞ்சி
சிறப்பு நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கவுள்ளது.
இவ்வழக்கில் மொத்தமுள்ள 31 குற்றவாளிகளில் முன்னாள் முதல் மந்திரி
ஜெகன்னாத் மிஸ்ரா, முன்னாள் மந்திரி வித்யாசாகர் உள்பட பலரும்
அடங்குவர்.

posted by புனிதா / 04:25:01 on 18 Mar

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை மகாராஷ்டிரா நவ்நிர்மான்
சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேற்று சந்தித்து பேசினார். இந்த
சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் அரசியல் தொடர்புடையது
அல்ல என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜ்தாக்கரே
கூறியுள்ளார்.

posted by புனிதா / 04:10:01 on 18 Mar

கூகுளில் மேசர ஆதார் மேரி பெச்சான் Mera Aadhar Meri Pehchan filetype:pdf என்று டைப்
செய்து தேடினால், தனி நபர்களின் ஆதார் அட்டை பிடிஎப் பைலில்
கிடைக்கிறது. இந்த செய்தி வெளிச்சத்துக்கு வர, தற்போது ஒவ்வொரு
லிங்காக முடக்கப்பட்டு வருகிறது. Mera Aadhaar Meri Pehchan என்றால் தமிழில், எனது
ஆதார் எனது அடையாளம் என்று பொருள்.

posted by புனிதா / 03:55:01 on 18 Mar

Read more at சமயம்

சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து
முடித்திருக்கும் தமன்னா, இந்த படம் தனது சினிமா வாழ்க்கையில் ஒரு
முக்கியமான சிறந்த படமாக இருக்கும் என
தெரிவித்துள்ளார்.இப்படத்தில் உதயநிதி அவர்களின்
கதாபாத்திரத்தையும்,நடிப்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள்
நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

posted by புனிதா / 03:40:02 on 18 Mar

வாடனை உயர்வு, நிலுவைத் தொகை வழங்க கோரி 19-ம் தேதி முதல்
வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. துறைமுக நிர்வாகத்திடம்
பலமுறை முறையிட்டும் பேச்சு நடத்த முன்வராததால்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் தமிழ்நாடு லாரி
உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் சுகுமார்
விளக்கமளித்துள்ளார்.

posted by புனிதா / 03:25:02 on 18 Mar

பெங்களூரு விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம், ஓடுபாதையில்
உள்ள மின் விளக்குகளில் நேற்று இரவு மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமோ, உயிரிழப்போ யாருக்கும் ஏற்படவில்லை என்று
தகவல் வெளியாகியுள்ளது. இதனாஇ ஓடுபாதையில் உள்ள 4 மின் விளக்குகள்
சேதமடைந்துள்ளது. மழை காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என
கூறப்படுகிறது.

posted by ரா. சரண்யா / 03:10:01 on 18 Mar

Read more at சமயம்

பத்மாவத் படத்தில் நடிகை தீபிகா படுகோன் அணிந்திருந்த நகைகள்
விற்பனைக்கு வந்துள்ளாதாகவும் , அவை அதிகமாக விற்பனையாவதாகவும்
மும்பை நகை வியாபாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்கால
பாரம்பரிய வடிவத்தில் அந்த நகைகள் வடிமைக்கப்பட்டு இருந்தது
குறிப்பிடத்தக்கது.

posted by புனிதா / 02:55:01 on 18 Mar

Read more at சமயம்

இங்கிலாந்தின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில்,
ரஷ்யாவும் 23 பிரிட்டன் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக
அதிரடியாக அறிவித்து உள்ளது. அதேபோல், பிரிட்டிஷ் கவுன்சில்
செயல்பாடுகளையும் முடக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்து உள்ளதால், இரு
நாடுகளுக்கும் இடையேயான உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு
பதட்டம் அதிகரித்து உள்ளது.

posted by புனிதா / 02:40:01 on 18 Mar

நடிகர் சல்மான்கான் தமது கணவர் என்று கூறி அவர் வீட்டுக்குள்
ஊடுருவ முயன்ற பெண் ஒருவரை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதனை
தொடர்ந்து அந்த பெண் தனது பையில் இருந்த முள் கரண்டிகளால் தன்னைத்
தானே குத்திக் கொண்டு தற்கொலை செய்யப்போவதாகவும் மிரட்டினார்.
இதையடுத்து அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

posted by புனிதா / 02:25:01 on 18 Mar

நிதி நிலைமைக்கு ஏற்ப தமிழக பட்ஜெட்டில் மின்சார வாரியத்துக்கு
நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நிதி குறைப்பால் வாரியத்துக்கு
பாதிப்பு இல்லை என்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
கூறியுள்ளார். மின்வாரியத்தில் ஏற்பட்ட நட்டம் குறைந்து வருவதால்
பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

posted by புனிதா / 02:10:01 on 18 Mar

சீனாவின் நிரந்தர அதிபராக ஷி ஜின்பிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் அரசியலமைப்பு சட்டப்படி தலா 5 ஆண்டுகள் வீதம் ஒருவர் 2
முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். ஆனால் இந்த ஆண்டு அதிபராக
பதவியேற்றுள்ள ஷி ஜின்பிங் தன் வாழ்நாள் முழுவதும் அதிபராக
நீடிக்கும் வகையில் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது.

posted by புனிதா / 01:55:01 on 18 Mar

தற்போது பென்னு என்ற மிகப்பெரிய எரிகல் சூரியனை சுற்றி வருகிறது.
அது 1600 அடி அகலம் கொண்டது. அது பூமியை தாக்கினால் கடும் பாதிப்பு
ஏற்படும். எனவே கடந்த 1999-ம் ஆண்டு முதல் இதன் செயல்பாடு
கண்காணிக்கப்பட்டு வருகிறது. பென்னு என்ற எரிகல்லை விண்ணிலேயே
அடித்து உடைத்து நொறுக்க நாசா மையம் திட்டமிட்டுள்ளது.

posted by ரா. சரண்யா / 01:40:01 on 18 Mar

விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் E=mc2 கொள்கையை விட வேதங்களில் உயர்ந்த
கொள்கைகள் உள்ளதாக மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்
கூறியுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஸ்வர்தன் தனது டுவிட்டரில்
பக்கத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது.

posted by புனிதா / 01:25:02 on 18 Mar

பவர் பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் அடுத்தாக இயக்கவிருக்கும்
படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க
இருக்கிறது. 400 வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதை இது. இந்தப்
படத்துக்கு ‘நான் ருத்ரன்’ எனப் பெயர் வைத்திருக்கிறார்களாம்.
இந்தப் படத்தில் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

posted by புனிதா / 01:10:01 on 18 Mar

Read more at சமயம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் புதுவை அரசும்,
முதல்-அமைச்சர், அமைச்சர்களும் சரியான பாதையில் சென்றுள்ளனர்.
காவிரி விவாகரத்தில் அரசு எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு
அளிப்பேன் என்றும் புதுவை கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

posted by புனிதா / 12:55:01 on 18 Mar

அரசியல் வாழ்வு ஏற்றம்பெற ஆந்தையை வீட்டில் வளர்ப்பது நல்லது என
கர்நாடக அரசியல் தலைவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது. இதனால்
திடீரென்று ஆந்தைக்கு மாநிலத்தில் கிராக்கி ஏற்பட்டு உள்ளது.
தற்போது ஒரு ஆந்தைக்கு சுமார் ரூ.3 லட்சம் வரை கொடுத்து அரசியல்
தலைவர்கள் வாங்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

posted by புனிதா / 12:40:01 on 18 Mar

Read more at சமயம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல்
கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும் என
சென்னையில் ஐஐடியில் உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால்
பேசியுள்ளார். வரும் காலங்களில் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை 28
நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

posted by புனிதா / 12:25:01 on 18 Mar

லண்­ட­னில், ‘பைனான்­சி­யல் டைம்ஸ் ஆர்­சி­லர் மிட்­டல்
போல்­டு­னஸ்’ அமைப்­பின், ‘மாற்­றத்­திற்கு வித்­திட்­டோர்’
விருது, முகேஷ் அம்­பா­னிக்கு வழங்­கப்­பட்­டது. அப்போது அவர், என்
மகள் இஷா தான், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம் உரு­வாக கார­ணம் என,
பெரு­மை­யு­டன் தெரி­வித்­துள்­ளார்.

posted by பா.செ.மீனா / 12:10:01 on 18 Mar

கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவரது மனைவி அளித்த புகார்
குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரது குடும்ப
பிரச்சனையில் தலையிட மாட்டோம் என பி.சி.சி.ஐ. செயல் தலைவர்
சி.கே.கன்னா தெரிவித்துள்ளார். ஷமி ஐபிஎல் போட்டியில் விளையாடுவது
குறித்து டெல்லி டேர்டெவில்ஸ் அணி முடிவு செய்யும் என்றும் அவர்
கூறினார்.

posted by புனிதா / 11:55:01 on 17 Mar

ஆந்திர மாநிலத்தில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. அதனுடன்
கூட்டணி வைத்து கொள்வதை யாரும் விரும்ப மாட்டார்கள். கடந்த
பாராளுமன்ற தேர்தலில் 12 தொகுதியிலும் எனது கட்சி போட்டியிட்டு
இருக்கலாம் ஆனால் போட்டியிடாமல் பாஜக தெலுங்குதேசம் கூட்டணியை
ஆதரித்தேன்.ஆனால் அவர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர் என்றும் பவன்
கல்யாண் கூறியுள்ளார்.

posted by புனிதா / 11:40:01 on 17 Mar

மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா
தீர்மானத்தை அ.தி.மு.க. ஆதரிக்க வேண்டும் என திருமாவளவன்
தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு தேனி மாவட்டத்தில்
நியூட்ரினோ திட்டத்தை தொடங்கியுள்ளது. இதனை எதிர்த்து எனது
தலைமையில் வரும் 24-ந் தேதி தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்
என்றும் அவர் தெரிவித்தார்.

posted by புனிதா / 11:25:01 on 17 Mar

பகவால்பூர் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து
கொள்வதற்காக அந்நகரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார் ஆயிஷா
குலாலாய். இந்நிலையில், அவர் ஓட்டலிருந்து வெளியே வரும் போது
இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் குலாலாய்க்கு
எதிராக முழக்கமிட்டு அவரை முற்றுகையிட்டனர். முட்டைகள் மற்றும்
தக்காளிகளை வீசியுள்ளனர்.

posted by புனிதா / 11:10:01 on 17 Mar

சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில்
உள்ள ஜபார்வான் மலைகளில் துலிப் தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்று
வருகிறது. துலிப் பூக்களின் தரத்தையும், அளவையும் அதிகரிப்பதற்காக
ஹாலந்திலிருந்து 4 லட்சத்திற்கும் மேற்பட்ட துலிப் பூக்கள்
இறக்குமதி செய்யப்பட்டன.

posted by ரா. சரண்யா / 10:55:01 on 17 Mar

தாய் மொழியில் படித்தால் அறிவு மேம்படும் என்று குடியரசு துணைத்
தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். தாய் மொழி என்பது கண்
போன்றது. பிற மொழிகள் கண் கண்ணாடி போன்றது என்று தெரிவித்த அவர்,
அனைவரும் தாய் மொழி மீது பற்று கொள்ள வேண்டும் என்றும் பிற
மொழிகளைக் கற்பதில் தவறில்லை என்றும் கூறினார்.

posted by ரா. சரண்யா / 10:40:01 on 17 Mar

2015 - 16ல் உணவு தானிய உற்பத்தியில் சாதனை படைத்ததற்காக தமிழக அரசிற்கு
கிருஷி கர்மான் என்ற விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த
விழாவில், பிரதமரிடமிருந்து இந்த விருதை அமைச்சர் துரைக்கண்ணு
பெற்று கொண்டார். நெல், சிறுதானியம் உள்ளிட்ட தானிய உற்பத்தியில்
சாதனை படைத்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

posted by ரா. சரண்யா / 10:25:01 on 17 Mar

பாரீசில் உள்ள ஈபில் கோபுரம் 324மீட்டர் உயரம் கொண்டது.இந்தக்
கோபுரத்தின் அடியில் இருந்து உச்சிக்குச் செல்லும் வரையில்
1665படிகளும் அமைக்கப்பட்டுள்ளன.இந்தக் கோபுரத்தின்
அடிப்பகுதியில் இருந்து உச்சிக்கு விரைவாக யார் செல்கிறார்கள்
என்பதற்குப் போட்டி நடத்தப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும்
தனித்தனியாகப் போட்டி நடைபெற்றது.

posted by பா.செ.மீனா / 10:11:01 on 17 Mar

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாடா பகுதியில் முன்னாள் மாநில அமைச்சர்
மற்றும் பாஜக எம்எல்ஏ ஜீட்மல் கான்ட் ஆகியோர் சுங்கச்சாவடி ஊழியரை
கடுமையாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவர்களின்
ஆதரவாளர்களிடம் சுங்கக் கட்டணம் வசூலித்த காரணத்தால்
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியுள்ளனர்.

posted by ரா. சரண்யா / 09:55:01 on 17 Mar

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்பின்
தலைவராக இருக்கும் ஜான் பெய்லி மீது குவியும் பாலியல் புகார்களால்
ஹாலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது. தங்களை பாலியல் ரீதியாக
தொந்தரவு செய்ததாக 3 பெண்கள், இவர் மீது புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்கள் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

posted by ரா. சரண்யா / 09:40:01 on 17 Mar

இயற்கை சீற்றங்களின் போது மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப,
மொபைல் ஆப் தயாரிக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.
இந்த இஸ்ரோ நேவிகேஷன் மொபைல் ஆப், தமிழகம் மற்றும் கேரளா
மீனவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

posted by பா.செ.மீனா / 09:25:01 on 17 Mar

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில்
சேர்ந்து வருகிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 7000 பேர் புதிய
உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கை கடந்த
ஆண்டில் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ்
அமைப்பில் 4 லட்சம் உறுப்பினர்களும், 2 லட்சம் தொண்டர்களும்
உள்ளனர்.

posted by ரா. சரண்யா / 09:10:01 on 17 Mar

2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ்
கட்சியும் சேர்ந்து போட்டியிட வேண்டும். இரு கட்சிகளுக்கும்
இடையில் தொகுதிப் பங்கீடு மரியாதைக் குரிய வகையில் இருக்க
வேண்டும். மாயாவதியின் பலத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று
சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான அசம்கான்
தெரிவித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 08:55:01 on 17 Mar

கட்சிப் பெயரை காரணமாகக் கூறி நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தம்
அளிக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது இடைக்கால
ஏற்பாடு தான். கருப்பு, சிகப்பு நிறம் திமுக கொடியிலும் உள்ளது.
அண்ணா- திராவிடத்தை புறக்கணித்து விட்டதாக கூறுவது தவறு என்று
டிடிவி தினகரன் கூறியுள்ளார்,

posted by ரா. சரண்யா / 08:40:01 on 17 Mar

அ.தி.மு.கவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் எம்.பியுமான
கே.சி.பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கி இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்
அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கட்சியில் 19 அமைப்புச்
செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் நியமிக்கபட்டுள்ளனர்.

posted by பா.செ.மீனா / 08:25:01 on 17 Mar

கமல் நடிப்பில் வெளிவரும் ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு
தணிக்கைத்துறை U/A சான்றிதழ் வழங்கி உள்ளது. இது கமல் ரசிகர்களை
உற்சாகம் அடைய செய்துள்ளது. படத்தின் ட்ரெய்லரும் விரைவில்
வெளியாகும் என தெரிகிறது. அதனையொட்டி கோடைக் கொண்டாட்டமாக படம்
வெளியாக உள்ளது. இச்செய்தியை கமல் ரசிகர்கள் ட்விட்டரில் மிக
வேகமாக பரப்பி வருகின்றனர்

posted by ரா. சரண்யா / 08:10:01 on 17 Mar

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி OfficeOf RG என்ற பெயரில்
அதிகாரப்பூர்வமாக டுவிட்டர் சமூக தளத்தில் இயங்கி வருகிறார். இந்த
நிலையில் அதில் சில மாற்றங்களை செய்யப்பட்டுள்ளது. அதில் ராகுல்
காந்தியின் அதிகாரப்பூர்வ கணக்கு,பாராளுமன்ற உறுப்பினர், தலைவர்,
இந்தியன் நேஷ்னல் காங்கிரஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

posted by ரா. சரண்யா / 07:55:01 on 17 Mar

டி.டி.வி. தினகரன் தொடங்கியது கட்சி இல்லை, அமைப்பு. டெல்லி
உயர்நீதிமன்றம் அறிவுறுத்தலின்படியே தினகரன் புதிய அமைப்பினை
தொடங்கினார். காவிரி மேலாண்மை வாரியத்தினை மத்திய அரசு அமைக்கும்
என்ற நம்பிக்கையில்லை. கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பின்னரே
காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றும் தங்க தமிழ்செல்வன்
கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 07:40:01 on 17 Mar

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர்
நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’. இந்தப் படத்தின் டிரைலரை
இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், வெற்றிமாறன்,
மிஷ்கின், பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமி என
பலர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டனர்.

posted by பா.செ.மீனா / 07:25:01 on 17 Mar

நடிகை ஸ்ரேயா- ரஷ்ய டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் திருமணம்
கடந்த 12-ம் தேதி மும்பை, அந்தேரியில் உள்ள ஸ்ரேயாவின் வீட்டில்
நடந்ததாகவும் இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே
கலந்துகொண்டனர் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.
திரைத்துறையில் இருந்து இந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய், ஷபானா ஆஷ்மி
ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

posted by ரா. சரண்யா / 07:10:01 on 17 Mar

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சிரியா போரில் இதுவரை 3
லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தெற்கு
சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன்
கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து, கடந்த 24
மணிநேரத்தில் மட்டும் சுமார் 50,000 க்கும் அதிகமானோர்
வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

posted by பா.செ.மீனா / 06:55:01 on 17 Mar

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடிபத்வா என்ற புத்தாண்டு பிறப்பு நாளை
கொண்டாடப்படவுள்ளது. இதனைமுன்னிட்டு நேற்று முதலே மகாராஷ்டிரா
மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். குடிபத்வா
கொண்டாட்ட நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக தானே மாவட்டத்தில் 18,000 அடி
நீளமுள்ள ரங்கோலி கோலத்தை 9 மணி நேரமாக சுமார் 70 கலைஞர்கள்
வரைந்தனர்.

posted by ரா. சரண்யா / 06:40:01 on 17 Mar

சைபிரியா விமான நிலையத்தில் இருந்து நிம்பஸ் நிறுவனத்தின் சரக்கு
விமானம் புறப்பட்டது. விமானத்தில் 9 டன் தங்கம், பிளாட்டினம்
போன்றவை இருந்தன. விமானம் ஓடுதளத்தில் இருந்து பறக்க ஆரம்பித்த
போது திடீரென அதன் அடிப்பாகத்தை பொத்துக்கொண்டு சில தங்கம்
மற்றும் வெள்ளி பொருட்கள் விழுந்துள்ளது. காவலர்கள்
இந்தப்பொருட்களை சேகரித்தனர்.

posted by பா.செ.மீனா / 06:25:01 on 17 Mar

அமெ­ரிக்கா, சமீ­பத்­தில், இந்­திய இறால்­கள் இறக்­கு­ம­திக்கு
விதித்த, அதிக பொருள் குவிப்பு வரியை, 0.84 சத­வீ­தத்­தில் இருந்து, 2.34
சத­வீ­த­மாக உயர்த்­தி­உள்­ளது. இத­னால், இந்­திய இறால்
ஏற்­று­ம­தி­யா­ளர்­களின் லாப வரம்பு குறை­யும் என, ‘இக்ரா’
நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

posted by பா.செ.மீனா / 06:11:02 on 17 Mar

சீன அதிபராக ஷி ஜிங்பிங் பதவி வகித்து வருகிறார். கடந்த சில
நாட்களுக்கு முன்னர் ஷி ஜிங்பிங், இரண்டு முறைக்கு மேல் ஆயுள்
முழுவதும் அதிபர் பதவி வகிக்கலாம் என்ற வகையில் சட்ட திருத்தம்
செய்யப்பட்டது. இந்நிலையில், பெய்ஜிங்கில் நடக்கும் கட்சி
மாநாட்டில், இரண்டாவது முறையாக ஷி ஜிங்பிங் தேர்வு
செய்யப்பட்டார்.

posted by ரா. சரண்யா / 05:55:01 on 17 Mar

காங்கிரஸ் கட்சியின் வெற்றி நமது தேசத்தின் வெற்றி என முன்னாள்
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பேசியுள்ளார். ராகுல்காந்தியுடன்
அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அவர் கோரிக்கை
விடுத்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவந்த நல்ல திட்டங்களை
மோடி அரசு அழித்து வருகிறது எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

posted by புனிதா / 05:40:01 on 17 Mar

மத்திய அரசின் கொள்கையே தனியார் மயத்தை ஊக்குவிப்பது தான். சேலம்
இரும்பாலையை தனியர் மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
தனியார் மயமாக்குவதை தடுப்பதற்கு மாநில அரசு மத்திய அரசுக்கு
போதிய அழுத்தம் தரவில்லை என்று மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.
டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 05:25:02 on 17 Mar

இந்தியர்கள் தினமும் புகைப்பிடிக்க சுமார் ரூ.2 கோடி செலவு
செய்கிறார்கள். இந்தியாவில் புகைப்பிடிக்கும் பழக்கம் சிறுவர்,
சிறுமியர்களிடமும் பரவியுள்ளது. தினமும் 6.25 கோடி சிறார்கள் புகை
பிடிக்கிறார்கள் என்று ஆய்வு நடத்திய அமெரிக்க புற்று நோய் கழகம்
தெரிவித்துள்ளது.

posted by ரா. சரண்யா / 05:10:02 on 17 Mar

பிரதமர் மோடி அரசு எதிர்கட்சியினரை அழித்து வருகிறது. மீடியாக்களை
நசுக்க நினைக்கிறது. மோடி வாக்குறுதிகள் மட்டும் கொடுப்பவராகவே
உள்ளார். மோடியின் ஏமாற்று வேலையை தோலுரிப்போம் என்றும்
டில்லியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய
சோனியா காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்.

posted by புனிதா / 04:55:01 on 17 Mar

கொள்கை முடிவுகளை தனி நபர் எடுக்க முடியாது. கொள்கை முடிவுகளை
மீறியதால் கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பான விவகாரத்தில்
கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். கே.சி.பழனிசாமி
உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார்
தெரிவித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 04:40:01 on 17 Mar

மத்திய அரசுக்கு பயந்து என்னை கட்சியில் இருந்து நீக்கி உள்ளனர்.
அனைவரும் கூறுவது போல அ.தி.மு.க. கடந்த ஒரு வருடமாக பாரதிய ஜனதாவின்
கைப்பாவையாக உள்ளது என்பது முற்றிலும் உண்மையே. எடப்பாடி
பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவிடம் பேசிக்கொண்டு தான்
உள்ளனர் என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 04:25:01 on 17 Mar

சக்கர நாற்காலி மூலம் செல்வதற்கு வசதியான வழித்தடங்களையும்
காண்பிக்கும் வசதியை கூகுள் மேப் அறிமுகப்படுத்தியுள்ளது. முதல்
கட்டமாக லண்டன், நியூயார்க், டோக்கியோ, மெக்சிகோ சிட்டி, பாஸ்டன்,
சிட்னி உள்ளிட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இவ்வசதி,
விரைவில் மற்ற நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

posted by பா.செ.மீனா / 04:11:01 on 17 Mar

வாக்குப்பதிவு எந்திரத்துக்கு பதிலாக வாக்குசீட்டு முறையை
மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்தை
வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடப்பதாக
அரசியல் கட்சிகள் பொது மக்களிடையே சந்தேகம் உள்ளது
குறிப்பிடத்தக்கது.

posted by புனிதா / 03:55:01 on 17 Mar

சினிமாவில் நடைபெற்றுவரும் ஸ்டிரைக் குறித்துப் பேசுவதற்காக
நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் இயக்குநரும், பெப்சியின்
தலைவருமான ஆர்.கே.செல்வமணி. தயாரிப்பாளர் சங்கத்தின் வேலை
நிறுத்தப் போராட்டத்திற்கு பெப்சி ஆதரவு தரும் என்று தெரிவித்த
அவர், திரைத்துறையை தமிழக அரசு ஒழுங்கமைக்க வேண்டும் என்று
கோரிக்கை விடுத்தார்.

posted by பா.செ.மீனா / 03:41:01 on 17 Mar

Read more at சமயம்

நான் இ்னி எந்த அரசியலிலும் இல்லை. நான் இதற்காக எதிர்வினை ஆற்ற
போவதும் இல்லை. டிடிவி தினகரன் பச்சைப் படுகொலையை
செய்திருக்கிறார். இந்த அநியாயத்தை என்னால் தாங்கிக் கொள்ள
முடியவில்லை. அதனால் அரசியல் தமிழில் இனி அடைபட்டு
கிடக்கமாட்டேன். இனி தமிழ் இலக்கிய மேடைகளில் என்னை பார்க்கலாம்
என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 03:25:01 on 17 Mar

தங்களுடைய பணிக்காலத்தில் எந்த தண்டனையும் பெறாமல் சிறப்பாக
பணியாற்றிய 298 போலீசாருக்கு இன்று பதக்கங்கள் வழங்கப்பட்டது.
விழாவில் பேசிய போலீஸ் கமிஷனர், காவல் பணி கடினமானது, மக்களுக்கு
சேவையாற்றும் பணி, சவாலான காலத்திலும் பெண் போலீசார் சிறப்பாக
பணியாற்றி வருகின்றனர். காவலர்கள் ஒழுக்கத்துடன் பணியாற்ற
வேண்டும் என்றார்.

posted by ரா. சரண்யா / 03:11:01 on 17 Mar

தற்போது பல படத்தில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை வரலட்சுமி
சரத்குமார். இவர், அடுத்தாக வெல்வெட் நகரம்’ என்ற படத்திலும்
நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் வரலட்சுமி. இப்படத்தை அறிமுக
இயக்குனர் மனோஜ் இயக்குகிறார். கதாநாயகியை மையப்படுத்திய
சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக இதை உருவாக்க
இருக்கிறார்கள்.

posted by பா.செ.மீனா / 02:55:01 on 17 Mar

Read more at சமயம்

சிரியாவின் கிழக்கு குவாட்டா நகரில் 70% பகுதிகளை
போராளிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக அரசுப் படைகள்
தெரிவித்துள்ளன. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில்
அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தி
வருகிறது. கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1,500க்கும்
மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

posted by பா.செ.மீனா / 02:41:01 on 17 Mar

தைவான் அதிகாரிகளை சந்திக்க அந்நாட்டுக்கு அமெரிக்க அதிகாரிகள்
பயணிக்க அனுமதிக்கும் சட்டத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட்
டிரம்ப் கையெழுத்திட்டார். தைவானை துரோகியாக கருதும் சீனாவின்
வெளியுறவு அமைச்சகம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு,
தைவான் உடனான அதிகாரப்பூர்வ பரிமாற்றங்களை நிறுத்த வேண்டும்
என்றும் வலியுறுத்துகிறது.

posted by பா.செ.மீனா / 02:25:01 on 17 Mar

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி
மைய வளாகத்தில் நடைபெறும் வருடாந்திர வேளாண் வளர்ச்சித்
திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். முன்னதாக, இந்திய
வேளாண் ஆராய்ச்சி மைய வளாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட
கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

posted by ரா. சரண்யா / 02:10:01 on 17 Mar

காவிரி மேலாண்மை வாரியம் அமைய வேண்டுமென்ற உணர்வு பூர்வமான
எண்ணமிருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்.
இதனை ஆதரிக்க முதல்வர் துணிச்சலான முடிவு எடுக்க வேண்டும்.
கர்நாடக தேர்தலை மனதில் வைத்து வாரியம் மத்திய அரசு
தாமதபடுத்துகிறது. வாரியம் அமைக்க முதல்வர் அழுத்தம் தர வேண்டும்
என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

posted by ரா. சரண்யா / 01:55:01 on 17 Mar

அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் சில இடங்களிலும் தென்
தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளளது
என்று வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார். தென்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலம் மழை பெய்துள்ளது. அதிகமாக
திருப்பத்தூரில் 8 செ.மீ., ஓமலூரில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்று
தெரிவித்துள்ளார்

posted by ரா. சரண்யா / 01:40:01 on 17 Mar

குரங்கணி தீ விபத்தில் பலியான நிஷா மற்றும் அனு வித்யா
வீட்டுக்குச் சென்று நடிகர் கமல் ஆறுதல் தெரிவித்துள்ளார். இந்த
காட்டுத் தீ விபத்து சம்பவத்தை பாடமாக கொள்ள வேண்டும் என்றும்
எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும்
வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
என்று கமல் தெரிவித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 01:25:01 on 17 Mar

Read more at சமயம்

ரைசிங் இந்தியா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். மத்திய
அரசை குடிமக்களே வழி நடத்துகின்றனர் என்று பேசினார். இதற்கு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நீங்கள் பேசிய பேச்சு ஆடம்பரமான
பேச்சு என்றும் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியா எழுகிறது எனவும்
தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

posted by ரா. சரண்யா / 01:10:01 on 17 Mar

ஆட்சியாளர்களால் நாட்டு மக்கள் துண்டாடப்படுவதாக ராகுல் காந்தி
குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் பேசிய அவர்,
நாட்டு மக்களிடையே வெறுப்பு உணர்வை ஆட்சியில் இருப்போர் பரப்பி
வருவதாக கூறியுள்ளார். மேலும், நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவது
நமது கடமை என்றும் கூறியுள்ளார்.

posted by ரா. சரண்யா / 12:55:01 on 17 Mar

கடந்த 2001-ல் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா, அங்கு
தலிபான்களின் ஆட்சியை அகற்றியது. அதன்படி ஆப். அரசுக்கும்,
தலிபான்களுக்கும் இடையே 16 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடைபெற்று
வருகிறது. இந்நிலையில், இந்த போருக்கு தீர்வு காண அமைதிப்
பேச்சுவார்த்தையில் தலிபான்கள் பங்கேற்க வேண்டும் என்று ஐ.நா
அறிவுறுத்தியுள்ளது.

posted by பா.செ.மீனா / 12:41:01 on 17 Mar

காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,
நாடு முழுதும் மக்களின் கோபம் அதிகரித்துள்ளது. அதனை பாஜக
பயன்படுத்துகிறது. நாம் அன்பை வழங்குகிறோம். நாடு அனைவருக்கும்
சொந்தமானது. மக்களின் நன்மைக்காகவே காங்., பாடுபடும். தற்போதைய
ஆட்சியின் கீழ் நாடு தளர்ச்சியடைந்துள்ளது. அதிலிருந்து விடுபட
விரும்புகிறது என்றார்

posted by ரா. சரண்யா / 12:25:02 on 17 Mar

அம்பிகா மகன் ராம் கேசவ், கலாசல் படம் மூலம் ஹீரோவாக
அறிமுகமாகிறார். அவரது காதலியாக லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா
நடிக்கிறார். இதுபற்றி ‘கலாசல்’ பட இயக்குனர் அஸ்வின் மாதவன்
கூறும்போது,’காதல், கமர்ஷியல் இரண்டும் கலந்த கதை. கார்ப்பரேட்
நிறுவனங்களால் அப்பாவி மக்கள் மீது எப்படி திணிக்கப்படுகிறது
என்பதே கதைக்கரு என தெரிவித்தார்.

posted by பா.செ.மீனா / 12:11:01 on 17 Mar

Read more at சமயம்

டெல்லியில் நடைபெற்று வரும் கட்சியின் தேசிய மாநாட்டின் இரண்டாம்
நாளான இன்று ராகுல் காந்தி உரையாற்றி வருகிறார். காங்கிரஸ் தலைவர்
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் கூட்டத்தில் முன்னாள்
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

posted by ரா. சரண்யா / 11:55:01 on 17 Mar

உகாதி பண்டிகையை கொண்டாடும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு
தமிழக கவர்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார். உகாதி பண்டிகையை
மகிழ்ச்சிகரமாக கொண்டாடும் வேளையில் நாட்டின் வளர்ச்சிக்காகவும்
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நம் முயற்சிகள் அனைத்தும்
நாட்டின் அமைதி, வலிமை,ஒளிமயமான வளர்ச்சிக்காகவும் உதவ வேண்டும்
என குறிப்பிட்டுள்ளார்

posted by ரா. சரண்யா / 11:40:01 on 17 Mar

டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த
ஆலோசனை கூட்டத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மன்மோகன் சிங்
உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர், காங்கிரஸ் கட்சியில் செயல்
திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.

posted by ரா. சரண்யா / 11:25:01 on 17 Mar

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி
கிளிண்டன். இவர் தேர்தலில் தான் தோல்வியடைந்த காரணத்தையும்,
டிரம்ப் வென்றார் என ஹிலாரி கிளிண்டன் ஒரு புத்தகமாக எழுதி
உள்ளார். இந்த புத்தகத்தின் அறிமுக நிகழ்ச்சிக்காக இந்தியா
வந்தார். அப்போது அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.

posted by பா.செ.மீனா / 11:10:01 on 17 Mar

Read more at சமயம்

பாக். மாஜி அதிபர் முஷரப் மீது தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை
தொடர்ந்துள்ளது. இதையடுத்து கடந்த 2014-ம் ஆண்டு துபாய் சென்றார்.
பின்னர் நாடு திரும்பில்லை. இந்நிலையில், முஷரப்பின் பாஸ்போர்ட்
மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி
வைக்குமாறு பாக் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

posted by பா.செ.மீனா / 10:55:01 on 17 Mar

சூர்யாவின் 37வது படத்திற்காக, சூர்யாவை 10 நாடுகளுக்கு அழைத்து
செல்ல இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். லைகா புரொடக்‌ஷன்ஸ்
தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு வருகிற ஜூலை மாத இறுதியில் துவங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

posted by பா.செ.மீனா / 10:40:01 on 17 Mar

Read more at சமயம்

கொழும்புவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில், முதலில்
விளையாடிய இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள்
எடுத்தது. பின்னர், களமிறங்கிய வங்கதேசம் இலங்கையை வீழ்த்தியது.
இதையடுத்து நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன்,
வங்கதேசம் மோத உள்ளது.

posted by பா.செ.மீனா / 10:25:01 on 17 Mar

ரஜினியின் அரசியலுக்கும் என் அரசியலுக்கும் வேறுபாடு தவிர்க்க
முடியாதது. எனக்கு எந்த மதமும் கிடையாது. அனைத்து மதங்களையும் நான்
சமமாக மதிக்கிறேன். திரைப்படங்களில் தனியாக செயல்பட்டது போல்
அரசியலிலும் செயல்படுகிறேன். பல விஷயங்களில் ரஜினி கருத்து
கூறாமல் இருப்பதற்காக அவரை கண்டிப்பது சரியல்ல என கமல்ஹாசன்
தெரிவித்துள்ளார்.

posted by பா.செ.மீனா / 10:10:01 on 17 Mar

Read more at சமயம்

கடந்த, 2016 நவம்பரில், புழக்கத்தில் இருந்த, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள்
செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, புதிய, 500 - 2,000
ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த 2,000 ரூபாய் நோட்டுகளை
திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை' என, மத்திய அரசு
தெரிவித்துள்ளது.

posted by பா.செ.மீனா / 09:55:01 on 17 Mar

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தொடர்ந்து
நிலவிவருவதால், வட மாவட்டங்களில் 24 மணிநேரத்தில் அநேக இடங்களில்
மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று
தெரிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை
மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை
பெய்துவருகிறது.

posted by பா.செ.மீனா / 09:40:01 on 17 Mar

Read more at விகடன்

அரசியலுக்கு வந்துள்ள நடிகர்கள் கமல், ரஜினி இருவரையும் ஒரே
சமமாகத்தான் பார்கிறேன். இருவருமே என்னை பிரசாரத்துக்கு
அழைத்தால் நான் செல்வேன். இருவருக்கும் பிரசாரம் செய்வேன். எனது
ஆதரவு இருவருக்கும் எப்போதும் இருக்கும். ரஜினி, கமல் இருவருமே
திறமையானவர்கள்; வித்தியாசமானவர்கள் என வேலூரில் நடிகர் பிரபு
பேட்டியளித்துள்ளார்.

posted by பா.செ.மீனா / 09:25:02 on 17 Mar

Read more at விகடன்

டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத்
அறிவித்துள்ளார். இவர் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர் ஆவர். நேற்று
ஓ.பி.எஸ் அணியிலிருந்து கே.சி. பழனிசாமியை நீக்கிய நிலையில், இவர்
இன்று டிடிவி அணியிலிருந்து விலகுவது அரசியல் வட்டாரத்தில்
பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

posted by பா.செ.மீனா / 09:04:47 on 17 Mar

சத்தீஸ்கர் மாநிலத்தில், ஏழை தொழிலாளர்களுக்காக, ஏப்., 1 முதல், ஐந்து
ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டம் துவங்கப்படும். இத்திட்டத்தில்,
பயனடைய விரும்பும் தொழிலாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்,
தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என, அம்மாநில முதல்வர்
அறிவித்துள்ளார்.

posted by பா.செ.மீனா / 08:55:02 on 17 Mar

கடந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழரது தலையிலும் ரூ.45 ஆயிரம் கடனை
சுமத்தப்பட்டுள்ளதாக தமிழக பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் கடும்
கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், நிதிநிலை அறிக்கையை விமர்சித்து
அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இந்த நிதிநிலை அறிக்கை,
பெரும்பாலும் சென்ற ஆண்டுகளின் நகலே என பல்வேறு விமர்சனங்களை
எழுப்பியுள்ளார்.

posted by பா.செ.மீனா / 08:40:01 on 17 Mar

பிரிட்டன் கோர்ட்டில் நடைபெற்று வரும், மல்லையாவை இந்தியாவுக்கு
நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையில் அவர்
நேரில் ஆஜரானார். இவ்வழக்கில் மே மாதத்தில் தீர்ப்பு வழங்கப்படும்
என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தீர்ப்பை எதிர்த்து அவர்
மேல்முறையீடு செய்யவும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

posted by பா.செ.மீனா / 08:25:01 on 17 Mar

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம்
கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில்,
மக்களவையில் உள்ள பாஜக கூட்டணியில் பலம் குறைந்துள்ளது.324
உறுப்பினர்களை கொண்டிருந்த ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இருந்து
தெலுங்கு தேசம் வி‌லகியுள்ளதால் தற்போது 308 உறுப்பினர்களாக
எண்ணிக்கை குறைந்துள்ளது.

posted by பா.செ.மீனா / 08:10:02 on 17 Mar

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால்,
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என்று
அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி, கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட
அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அ.தி.மு.க அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.

posted by பா.செ.மீனா / 07:55:02 on 17 Mar

புழல் மத்திய சிறையில் நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வில் 67 வயது
கொலை வழக்குக் கைதி ஒருவர் தேர்வெழுதினார். தமிழ் முதல் தாள்
தேர்வை மாணவர்கள் தவிர்த்து 186 கைதிகள் மற்றும் 5 திருநங்கைகளும்
தேர்வெழுதினர். இதற்காக புழல், திருச்சி, பாளையங்கோட்டை, கோவை
மத்திய சிறைகளில் சிறப்பு தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

posted by பா.செ.மீனா / 07:40:01 on 17 Mar

தேசிய கீதத்தில் உள்ள ‘சிந்த்’ என்ற வார்த்தையை திருத்தம்
செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தீர்மானம் கொண்டு
வந்துள்ளது. ‘சிந்த்’ என்ற வார்த்தைக்கு பதிலாக வடகிழக்கு
இந்தியாவை குறிக்கும் ‘உத்தர்புர்வ்’ என திருத்தம் செய்ய
வேண்டும் என்று தீர்மானத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

posted by பா.செ.மீனா / 07:25:01 on 17 Mar

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை
நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.74.95
ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் குறைந்து
லிட்டருக்கு ரூ.66.15 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி
முதல் அமலுக்கு வந்தது.

posted by பா.செ.மீனா / 07:10:01 on 17 Mar

வட கொரியா தலைவர் கிம் ஜோங்உன், அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்
ஆகியோர் மே மாதம் சந்திக்க உள்ளதாக கூறப்படும் நிலையில் வடகெரியா
வெளியுறவு அமைச்சர் ரீ யோங்க், சுவீடன் பிரதமர் ஸ்டெபான் லோபென்னை
சந்தித்தார்.இதன் மூலம் இரு நாட்டு தலைவர்களும் சுவீடனில்
சந்திப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

posted by புனிதா / 06:55:01 on 17 Mar

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வால் முன்பு இருந்ததைபோல் 280
இடங்களை பிடிக்க முடியாது. 100 முதல் 110 இடங்களில்தான் வெற்றி பெறும்.
நண்பர்களை கைவிட்டு, பொய்யான பாதையில் நடப்பவர்களுக்கு தோல்வி
நிச்சயம். வீழ்ச்சி ஆரம்பித்து விட்டால் எந்த சாணக்கியனாலும் அதை
தடுக்க முடியாது என்றும் சிவசேனா கூறியுள்ளது.

posted by புனிதா / 06:40:01 on 17 Mar

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய தெலுங்கு தேசம்
கட்சிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர்
பக்கத்தில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் நாட்டை
பேரழிவில் இருந்து காக்க தேவையான நடவடிக்கை இது என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.

posted by புனிதா / 06:25:01 on 17 Mar

More