View in the JustOut app
X

நாட்டின் முதன்மை கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வாராக்கடன் அளவு கடந்த மார்ச் 2019ஆம் ஆண்டுடன் முடிவடைந்த காலாண்டில், ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட 11,932 கோடி ரூபாய் குறைந்துள்ளது என அவ்வங்கி பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

10:55:01 on 11 Dec

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதி அரம்கோ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக விற்பனை செய்தது. இதன் பங்குகள் இன்று (புதன்கிழமை) அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கு வந்தபோது, 25.6 பில்லியன் டாலர்களை திரட்டி பெரும் சாதனை படைத்துள்ளது.

09:55:01 on 11 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகத்தில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய டிசம்பர் 16ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

08:55:02 on 11 Dec

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் சங்கானாச்சேரியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி வித்யா. இவர்கள் இருவரும் திருப்பணித்துறா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி மனைவி வித்யாவை காணவில்லை என்று பிரேம் குமார் உதயம்பேரூர் போலீசில் புகார் செய்தார்.

08:25:02 on 11 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சிறுமிகள் மற்றும் ஆண்களைக் கூட நித்தியானந்தா தனது சல்லாபத்துக்கு பயன்படுத்துவார் என்று நித்தியானந்தா ஆசிரமத்தில் நடக்கும் லீலைகளை போட்டு உடைக்கிறார் நித்தியின் செயலாளர் ஜனார்த்தன சர்மா.

07:55:02 on 11 Dec

மேலும் வாசிக்க சன் நியூஸ்

பெண்களின் மேக்-அப் லிஸ்ட்டில் தவறாமல் இடம்பெறுவது `லிப்ஸ்டிக்'. எந்தவித மேக்-அப்பும் இல்லாமல், பொருத்தமான நிறத்தில் லிப்ஸ்டிக்கை போட்டுக்கொண்டாலே போதும்... பளிச் தோற்றம் நிச்சயம். இன்னொரு பக்கம், லிப்ஸ்டிக் போடும் வழக்கம் உள்ள பெண்களுக்கு சில பிரச்னைகளும் உண்டு.

07:25:01 on 11 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நித்தியானந்தா இருக்கும் இடம் குறித்த தகவலை வரும் 12ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று போலீசாருக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் கையை பிசைந்து வரும் நிலையில், நித்தியானந்தா மட்டும் யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

06:55:02 on 11 Dec

மேலும் வாசிக்க விகடன்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து திரிபுராவில் மட்டும் 5 ஆயிரம் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். கஞ்சான்பூர் மற்றும் மனு ஆகிய பகுதிகளில் 2 கம்பெனிப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அசாமின் பொங்கைகானிலும் பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

06:35:21 on 11 Dec

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தமிழ்ப்படம் 2 படத்துக்கு அடுத்ததாக சுமோ என்கிற படத்தில் நடித்துள்ளார் சிவா. சிவா கதாநாயகனாக மட்டுமல்லாமல் கதாசிரியராகவும் இப்படத்தில் பணிபுரிந்துள்ளார். எஸ்.பி. ஹோசிமின் இயக்கியுள்ளார். ப்ரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோஷினோரி தஷிரோவும் பங்குபெற்றுள்ளார்.

06:25:02 on 11 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடலூர் முதுநகர் பகுதியில் பக்தவச்சலம் மார்க்கெட்டு முன்பு கடலூர்- சிதம்பரம் சாலையில் வேலு என்பவர் 25 வெங்காய மூட்டைகளை இறக்கி 1 கிலோ வெங்காயம் ரூ.10-க்கு கிடைக்கும் என்று பதாகையில் எழுதி வைத்திருந்தார். இதனை அறிந்ததும் பொதுமக்கள் போட்டிபோட்டு வாங்கினர். ஒருகட்டத்தில் பொதுமக்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

05:57:01 on 11 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

வெங்காயத்தின் விலை இறக்கை கட்டி பறக்கும் நிலையில், அரிசி, கோதுமை, தானியங்கள், பருப்பு, எண்ணெய்,தேயிலை, சர்க்கரை பால், உருளைக்கிழங்கு, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையும் படிப்படியாக உயர்ந்துள்ளதாக. மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

05:27:01 on 11 Dec

மேலும் வாசிக்க தினத்தந்தி

குஜராத் சட்டப்பேரவையில் நானாவதி கமிஷன் இறுதி அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரம் திட்டமிட்டு நடந்தது அல்ல என்றும், கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்கு ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:57:01 on 11 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

திருச்சியில் பன்றி இருக்கும் இடத்தைக் காட்டியதால் 12 வயது சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக அரியமங்கலம் வீராச்சாமி, லோகேஷ், சரவணன், கணேசன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

04:25:01 on 11 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அ.தி.மு.க திட்டப்படி உள்ளாட்சித் தேர்தல் நடந்தால், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பாடு திண்டாட்டம்தான். தேர்தலைப் பிரித்துப் பிரித்து நடத்துவதால், வைட்டமின் 'ப'வைக் களமிறக்குவது அ.தி.மு.க-வுக்கு எளிது. கிட்டத்தட்ட இடைத்தேர்தல் பாணிதான் இது. இதனால், ஆளுங்கட்சியே பெரும்பான்மையான உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றிவிடும்.

03:57:01 on 11 Dec

மேலும் வாசிக்க விகடன்

ரிசாட்-2 பிஆர் 1 மற்றும் 9 வணிக ரீதியான செயற்கைகோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி48 ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாயந்துள்ளது. இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். இது, புவிகண்காணிப்பு, விவசாய மேம்பாடு, காடுகள் கண்காணிப்பு மற்றும் வளம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படும்.

03:52:21 on 11 Dec

மேலும் வாசிக்க தினகரன்

நெல்லையை சேர்ந்த ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான திருமாறன் என்பவர், ரஜினி கன்னடர் இல்லை, தமிழர் தான் என்று அடித்து கூறுகிறார். மேலும் இதை நிரூபிக்கும் ஆதாரங்களை திரட்டும் பணியில் இறங்கியுள்ளார். மேலும் அவர் 3 நாள் பயணமாக ரஜினியின் உறவுகளையும் சந்தித்துள்ளாராம்.

03:27:01 on 11 Dec

மேலும் வாசிக்க சினி உலகம்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது குறித்து நடிகர் சித்தார்த், ”எடப்பாடி பழனிசாமி என் மாநிலத்துக்கும் நம்மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது மிகவும் வெட்கமாக இருக்கிறது. என்ன நடந்தாலும் தன்னுடைய பதவியே முக்கியம் என்ற அதிகார பசியும் வெளிப்பட்டுள்ளது.” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

02:57:01 on 11 Dec

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக, மதிமுக உட்பட 5 கட்சிகள் மற்றும் வாக்காளர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்குகள் அனைத்தையும் இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.

02:27:02 on 11 Dec

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

01:57:01 on 11 Dec

மேலும் வாசிக்க தினகரன்

தமிழ்நாடு சடுகுடு பிரிமீயா் லீக் 2020 போட்டிகளுக்கான 8 அணிகளுக்கு 120 வீரா்களைத் தேர்வு செய்யும் முகாம் திருச்சியில் வரும் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த லீக் போட்டியானது திருப்பூா், கோவை, சென்னை, மதுரை, சேலம் ஆகிய 5 ஊா்களில் நடத்தப்படவுள்ளது.

01:27:02 on 11 Dec

மேலும் வாசிக்க தினமணி

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்ற நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவனுடன் முருகனைத் தரிசித்தார். அப்போது, நயன்தாராவை எதேச்சையாகச் சந்தித்த முன்னாள் எம்.பி-யும் பி.ஜே.பி தலைவர்களுள் ஒருவருமான நரசிம்மன், பி.ஜே.பி-யில் இணைய நயன்தாராவுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகத் தகவல் பரவியுள்ளது.

12:57:01 on 11 Dec

மேலும் வாசிக்க விகடன்

ஆந்திர பிரதேசத்தில் ரேஷன் குடும்ப அட்டையில் இயேசு உருவம் அச்சிடப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அமராவதி பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் ஒருவர், ரேஷன் குடும்ப அட்டையில் இயேசு புகைப்படத்தை அச்சிட்டு, அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார்.

12:27:01 on 11 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மக்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். திரிபுரா மாநிலத்தில் 48 மணி நேரத்துக்கு இணையச் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

11:57:02 on 11 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து, சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மசோதா இது இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டால், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதன்மை தலைவர்கள் மீது, அமெரிக்க அரசு தடை கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:27:01 on 11 Dec

மேலும் வாசிக்க தினமலர்

2,000 ரூபாய் நோட்டு தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என மத்திய அரசின் சார்பில் நிதித்துறை ராஜாங்க மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”இதுதான் (ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை) இப்போது உருவாகி உள்ள உண்மையான கவலையாக அமைந்துள்ளது. இதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை என்று கருதுகிறேன்.” என்றார்.

10:25:01 on 11 Dec

மேலும் வாசிக்க மாலைமலர்

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஹட்சன் ஆற்றுப்பகுதியை ஒட்டி பல்பொருள் அங்காடி உள்ளது. இந்த பல்பொருள் அங்காடிக்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில், போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலியாகினர். பலியானவர்களில் 3 பேர் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.

09:55:01 on 11 Dec

மேலும் வாசிக்க தினத்தந்தி

மகாகவி பாரதியாரின் 138வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, மீனவர் பிரச்சினை, இலங்கை மலையகத் தமிழர் துன்பங்கள், இதழியல், கேலிச்சித்திரம் என தமது காலத்திற்கு முன்னே சென்று சிந்தித்த பாரதி இன்றும் தமிழக மக்களுக்கு ஒரு அழியா சொத்துதான்.

09:27:02 on 11 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திருநெல்வேலியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்துவிசை வளாகத்தில் காலியாக உள்ள பல்வேறு தொழில்பழகுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் இளைஞர்கள் டிசம்பர் 14ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையவும்.

08:57:01 on 11 Dec

மேலும் வாசிக்க தினமணி

சென்னையில் பாஜக அலுவலத்துக்குள் பெண் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், இளம்பெண்ணை பிடித்து தனியார் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் பாஜக அலுவலகத்துக்குள் நுழைய முயன்றவர், ராஜபாளையத்தைச் சேர்ந்த காவியா என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

08:48:59 on 11 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடலூர் உழவர் சந்தையில் ஐந்து கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடலூரில் நேற்று 4 கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் வேலும் விலை குறைந்துள்ளது.

08:47:01 on 11 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் கிலோ தலா 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எகிப்தில் இருந்து வெங்காயம் சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதால் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.

08:44:48 on 11 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.97 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.81ஆகவும் உள்ளது. நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி இன்றும் அதே விலையில் பெட்ரோல் விலை தொடர்கின்றது.

08:42:37 on 11 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நேபாளத்தில் நடைபெற்றுவந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்தியா 174 தங்கப் பதக்கங்களுடன் 312 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 1984இல் தெற்காசிய போட்டிகள் தொடங்கியதில் இருந்து பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை வகித்த போதிலும், தற்போதுதான் இந்தியா அதிகப் பதக்கங்களை வென்றுள்ளது.

08:37:48 on 11 Dec

மேலும் வாசிக்க தினகரன்

நேபாளத்தில் நடைபெற்றுவந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டி நிறைவடைந்த நிலையில், இந்தியா 174 தங்கப் பதக்கங்களுடன் 312 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. 1984இல் தெற்காசிய போட்டிகள் தொடங்கியதில் இருந்து பதக்கப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை வகித்த போதிலும், தற்போதுதான் இந்தியா அதிகப் பதக்கங்களை வென்றுள்ளது.

08:34:33 on 11 Dec

மேலும் வாசிக்க தினகரன்

ரெட்மி கே30 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 5ஜி வசதி கொண்ட ரெட்மி கே30 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 64 எம்.பி. சோனி IMX686 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.20,140 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

07:55:01 on 11 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

2019ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட திரைத்துறையைச் சேர்ந்த பெண் ஆளுமைகள் பட்டியலை ட்விட்டர் வெளியிட்டுள்ளது. இதில் சோனாக்சி சின்கா முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை அனுஷ்கா சர்மா பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தை பாடகி லதா மங்கேஷ்கர் பிடித்துள்ளார்.

06:55:02 on 11 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

2019-ம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் சிறந்த விளையாட்டு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் ட்விட்டர் பக்கங்களை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் வீரர்களில் கோலிக்கு முதலிடமும், தோனிக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.

05:55:01 on 11 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அமெரிக்காவில் கன்சாஸ் சிட்டியில் வசிக்கும் மேரி என்ற பெண் அனைவரையும் கட்டிப்பிடித்து உறங்க ஒரு மணி நேரத்திற்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் வசூல் செய்கிறார். இதுகுறித்து அவர், ”இவ்வாறு கட்டிப்பிடித்து உறங்கினால், உடலில் இருந்து ஆக்சிடோசின் என்ற ஹார்மோன் வெளியாகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது” என்று தெரிவித்தார்.

10:57:01 on 10 Dec

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

நடிகை நித்யாமேனன், ”சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர். நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக கூறினேன். என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும்.” என கூரியுள்ளார்.

09:57:01 on 10 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

துருவங்கள் பதினாறு திரைப்படத்தியடுத்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம் மாஃபியா : சாப்டர்-1. இப்படத்தில் முன்னணி கதாப்பத்திரங்களில் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடித்துள்ளனர். பிரியா பவானி சங்கர் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

08:55:01 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து, "சபாக்" என்ற பெயரில், ஹிந்தியில் படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

08:25:01 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சினிமாவிற்குள் நுழைந்தவுடனேயே சரவணா ஸ்டோர்ஸ் அருண் சரவணனுக்கு ரசிகர் மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரசிகர் மன்றத்தில் உறுப்பினர் சேர்க்கும் பணியும் நடைபெற்று வருவதாகவும், விருப்பம் உடையவர்கள் சம்பந்தப்பட்ட எண்ணை அணுகுமாறும் சென்னையில் ஆங்காங்கே போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

07:57:02 on 10 Dec

மேலும் வாசிக்க நக்கீரன்

லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த சிவசேனா, தற்போது திருத்தம் செய்யவில்லை எனில் ராஜ்யசபாவில் ஆதரவு அளிக்க மாட்டோம் என 'பல்டி' அடித்துள்ளது.

07:27:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினமலர்

ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டு கணக்கின் படி 180 நாடுகளில் இந்தியா 78 வது இடத்தில் இருக்கிறது. 2017ஐ காட்டிலும் ஊழல் குறைந்தே காணப்படுகிறது. ஆனால் ஆசிய நாடுகளை பொறுத்துவரை இந்தியா முதலிடத்தில் தான் உள்ளது,

06:55:01 on 10 Dec

மேலும் வாசிக்க விகடன்

சென்னையில் மூதாட்டிகளை குறி வைத்து திருடி வந்த ஆந்திராவை சேர்ந்த ஆட்டோ ராணிகளில் ஒருவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டை மட்டுமே தொழிலாக கொண்ட ஆட்டோ ராணிகளின் ஊரில் சிக்கிக் கொண்ட தமிழக போலீசார் ஒருவழியாக ஒருவரை மட்டும் சென்னைக்கு பிடித்து வந்துள்ளனர்.

06:25:01 on 10 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

டிடிவி தினகரனைப் பொதுச் செயலாளராகக் கொண்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவு வேறு யாரையும்விட அதிகமாக அதிர்ச்சியளித்திருப்பது அதிமுகவுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும்தான். சில அமைச்சர்கள் தினகரனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

05:57:01 on 10 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மத அடிப்படையில் குடியுரிமையில் முன்னுரிமையோ, பாகுபாடோ காட்டப்படுவது குறித்த விவாதம் ஒருபுறம் இருந்தாலும், இலங்கையின் சிங்கள - பௌத்த பேரின வாதத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி அகதிகளாக இந்தியாவில் இருக்கும், இந்துக்களாக அடையாளம் காணப்படும் இலங்கைத் தமிழர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வி பலராலும் முன்வைக்கப்படுகிறது.

05:27:01 on 10 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

எஸ்பிஐ வங்கி அதன் டெபிட் கார்டுகளை, வருகிற டிசம்பர் 31, 2019க்குள் ஈ.எம்.வி-சிப் கார்டிற்கு (EMV-chip Card) மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி அதன் அனைத்து மேக்னட் ஸ்ட்ரைப் கார்டுகளை அட்டைகளையும் டிஆக்டிவேட் செய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

04:57:01 on 10 Dec

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மதுரையைச் சோந்த மொத்த வியாபாரிகள் எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்துள்ளனா். இதில் கடந்த சில நாள்களுக்கு எகிப்தில் இருந்து கப்பல் மூலமாக வந்த 50 டன் வெங்காயம் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் மூலமாக மதுரைக்கு கொண்டு வரப்பட்டது

04:27:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினமணி

ஈஸ்வர் கைது செய்யப்படுவதற்கு சில தினங்கள் முன்பு, குடும்ப நண்பரும் காவல்துறையின் உயரதிகாரியுமான ஐ.ஜி சேஷசாயியைச் சந்தித்துப் பேசியுள்ளார், ஜெயஶ்ரீ. இதை வைத்தே `அந்தச் சந்திப்பின் தொடர்ச்சியே என் மீதான கைது நடவடிக்கை' என்றார் ஈஸ்வர்.

03:57:02 on 10 Dec

மேலும் வாசிக்க விகடன்

திருச்சி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடவோ, யாருக்கும் ஆதரவாக வாக்குசேகரிக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

03:27:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினத்தந்தி

இயக்குநர் ஷங்கரிடம் மீண்டும் விஜய்யுடன் பணியாற்றுவது எப்போது என எழுப்பப்பட்ட கேள்விக்கு “நானும் ரெடி; அவரும் ரெடி. எப்போது வேண்டுமானாலும் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளது. அதற்கு அறிவிப்பு விரைவில் வெளியாகும்” எனக் கூறியுள்ளார்.

02:57:02 on 10 Dec

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச கட்டமாக, 10வது நாளான இன்று மாலை 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்தும், அண்டை மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர்.

02:35:16 on 10 Dec

மேலும் வாசிக்க மாலை மலர்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து வடகிழக்கு மாணவர்களின் அமைப்பான நெசோ (NESO) சார்பில் அஸ்ஸாமில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அஸ்ஸாமின் சோனித்பூர், லக்ஷிம்பூர் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

02:29:47 on 10 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சபரிமலை மண்டல பூஜைக்காக நடை திறந்த கடந்த 16ஆம் தேதி முதல் இதுவரை கோயிலுக்கு கிடைத்த மொத்த வருமானம் ரூ.73 கோடி ஆகும். கடந்த வருடம் இதே காலத்தில் ரூ.35.76 கோடி வருமானம் கிடைத்தது. கடந்த ஆண்டு இடைக்கால கட்டத்தில் 43 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்த நிலையில் இந்த ஆண்டு அதன் அளவு ஏறக்குறைய இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

02:27:02 on 10 Dec

மேலும் வாசிக்க தினகரன்

மனைவியிடம் நான் உன்னுடைய தங்கையை விரும்புகிறேன் என்று கூறிய கணவனுக்கு விரும்பிய பெண்ணை மனைவியே திருமணம் செய்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில், பிந்த் என்ற மாவட்டம் உள்ளது. அங்கு நடந்த ஒரு திருமண விழாவில் இரு பெண்களை ஒரே மணமகன் திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

01:57:01 on 10 Dec

மேலும் வாசிக்க நக்கீரன்

”முதல்வர் கனவோடு தான் ஸ்டாலின் உள்ளார். எனவே நித்தியானந்தா போன்று ஒரு தீவை வாங்கி அங்கு வேண்டுமானால் முதல்வராக ஸ்டாலின் ஆகலாம். தமிழகத்தில் ஒரு போதும் ஸ்டாலினால் முதல்வராக முடியாது” என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

01:27:01 on 10 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகே வசிக்கும் தாய் ஒருவர், கல்வி கற்க ஆசைப்படும் இரு குழந்தைகளையும் பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டு பிச்சை எடுக்க வைத்து வருகிறார். போதைக்கு அடிமையான அந்த தாயால், இரு குழந்தைகளும் எதிர்காலத்தை தொலைத்து நிற்பதாக தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

12:57:01 on 10 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மதுரை சின்னசொக்கி குளம் பகுதியில் 'டேக்வாண்டோ' என்று சொல்லக்கூடிய கொரியன் தற்காப்புக் கலையை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறார் நாராயணன். இவர் இந்தக் கலையை வளர்க்க வேண்டும் என முற்பட்டு கடந்த 2 வருடங்களில் 14 கின்னஸ் சாதனை படைத்து டேக்வாண்டோ கலைக்குப் பெருமையைத் தேடித்தந்துள்ளார்.

12:27:01 on 10 Dec

மேலும் வாசிக்க விகடன்

அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அகில பாரத இந்து மகாசபா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முஸ்லீம்கள் தங்களுக்கு வேறு இடம் வேண்டும் என்று கேட்காத நிலையில் அவர்களுக்கு நிலம் ஒதுக்கியது தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது.

11:57:02 on 10 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னையில் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 3,596 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 28,752 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 46.40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

11:27:38 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருநெல்வேலியில் இருந்து வரும் ஜனவரி 16ஆம் தேதி இரவு 9 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 11.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். திருநெல்வேலியில் இருந்து டிசம்பா் 29, ஜனவரி 19 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணிக்கு சிறப்புக்கட்டண ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.30 மணிக்கு தாம்பரத்துக்கு வந்து சேரும்.

11:25:01 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாதி கிராம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தேர்தலில் மோதலை தவிர்ப்பதற்காகவே பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்து உள்ளதாக ஊர் மக்கள் விளக்கமளித்துள்ளனர்.

11:23:12 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மஹாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதில், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே நினைவிடத்துக்காக மரங்கள் வெட்டப்பட உள்ளதாக செய்திகள் வெளியாயின. இந்த நிலையில், 'மரங்களை வெட்டக் கூடாது' என முதல்வர், உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுஉள்ளதாக, சிவசேனா தெரிவித்துள்ளது.

10:57:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினமலர்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பூமியை கண்காணிப்பதற்காக ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, இறுதிக்கட்ட பணியான ‘கவுண்ட்டவுன்’ இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

10:27:02 on 10 Dec

மேலும் வாசிக்க மாலைமலர்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயம், நாகாலாந்து, மிஸோரம், மணிப்பூா், திரிபுரா ஆகிய மாநிலங்களில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

09:57:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினத்தந்தி

கடந்த எட்டு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. மழையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக கடந்த 2ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை நிறுத்தப்படடது. ரயில் பாதை சீரமைக்கப்பட்டதை அடுத்து உதகை மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.

09:52:50 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கான நீர்திறப்பு 5,000 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 750 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,993 கனஅடியில் இருந்து 5,000 கனஅடியாக குறைந்துள்ளது.

09:50:34 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சேலத்தில் லட்சுமி ஓட்டல் கிளைகளில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கிளை உணவகங்கள் மற்றும் வீடு உட்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

09:48:25 on 10 Dec

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ள நிலையில், அடுத்தாண்டுக்கான மத்திய பட்ஜெட் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரிகள் பணியிடம் காலியாக உள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

09:27:01 on 10 Dec

மேலும் வாசிக்க தினகரன்

சிறுநீரை அதிக நேரம் வெளியேற்றாமல் இருப்பதால் முதலில் உடலில் சிறுநீரக கல் பிரச்சினை ஏற்படுகிறது. சிறுநீரகப்பை அதிக நேரம் நிறுத்துவது சிறுநீரக பையில் அழுத்தத்தை அதிகரித்து கடுமையான வலியை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து சிறுநீரகத்தை வெளியேற்றாமல் இருப்பதால் சிறுநீரகப்பை விரிவடைவது மட்டுமன்றி, அதன் சதையும் விரிவடைகிறது.

08:55:02 on 10 Dec

மேலும் வாசிக்க மாலைமலர்

விஜயவாடாவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டியில் விதர்பா - ஆந்திரா அணிகள் மோதின. இதில் பேட்டிங் செய்ய ஆந்திரா அணி வீரர்களும், ஃபீல்டிங் செய்ய விதர்பா அணி வீரர்களும் உற்சாகமாக மைதானத்துக்குள் நுழைந்தனர். ஆனால் இரு அணி வீரர்களுக்கும் மைதானத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு அவர்களுக்கு முன்பாகவே பாம்பு ஒன்று நுழைந்தது.

07:55:01 on 10 Dec

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடிகளில் படித்து வந்த 7248 மாணவர்கள் பி.டெக்(தகவல் தொழில்நுட்பம்) படிப்பிலிருந்து விலகியுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத் துறை, அண்மையில் மக்களவையில் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

06:55:02 on 10 Dec

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தற்போதைய பொருளாதார வளர்ச்சிக் குறைவின் முக்கியக் காரணம் நுகர்வோர் சந்தை வீழ்ச்சிதான் என்பதால், தனிநபர் வருமான வரி விகிதங்களையும் வெகுவாகக் குறைக்க வேண்டும். சரிந்துவரும் ரூபாயின் தற்போதைய உண்மையான மதிப்பைக் கருத்தில்கொண்டு, வரி வரம்புகளை வெகுவாக உயர்த்த வேண்டும்.

05:55:01 on 10 Dec

மேலும் வாசிக்க விகடன்

டிசம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தமாக 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி 2வது சனிக்கிழமையும், 28ஆம் தேதி 4வது சனிக்கிழமையும் வருகின்றன. இதனிடையே 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறை வருகிறது.

10:57:02 on 09 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நாடு முழுவதும் வெங்காய விலை கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.

09:57:01 on 09 Dec

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் நந்தியால என்கிற இடத்தில் மோகன் கிருஷ்ணா என்பவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் தமது மகளுடன் நிச்சயார்த்தம் செய்துவிட்டு இன்னொரு பெண்ணுக்கு தாலி கட்டுவதுதா என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

08:55:02 on 09 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள நெல்லிக்குப்பத்தில் விமல் சந்த் ஜெயின் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு இவரது கடையில் நுழைந்த முகமூடி அணிந்த 3 இளைஞர்கள் துப்பாக்கியைக் காட்டி கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றனர்.

08:25:02 on 09 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இந்த பஞ்சாயத்தில் 1,900 ஓட்டுகள் உள்ளன. மொத்தம் 8 வார்டுகள் உள்ள இந்த கிராம பஞ்சாயத்தில், உள்ளாட்சி தேர்தல் அறிவித்த உடனேயே ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மற்றும் துணை தலைவர் பதவி ஏலம் போனதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

07:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஆந்திராவில் 16 வயது சிறுமிக்கு லிப்ட் தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

07:25:01 on 09 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிசம்பர் 12க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா 44 முறை வாய்தா வாங்கியுள்ளார்.

07:05:48 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிசம்பர் 12க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா 44 முறை வாய்தா வாங்கியுள்ளார்.

07:01:44 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

புதிய 5ஜி நெட்வொர்க் அதிவேகமானதாக இருக்கப் போகிறது. ஆனால், 5ஜி ஆன்டனாக்கள் முந்தைய செல்போன் நெட்வொர்க்குகளைவிட அதிக ரேடியோ கதிர்வீச்சுகளைக் கொண்டதாக இருக்கும். இதனால் உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படும் என்று பிரிட்டனைச் சேர்ந்த சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

06:55:01 on 09 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நித்தியானந்தா எங்கே இருக்கிறார் என்பதை கண்டறிந்து டிசம்பர் 12க்குள் தெரிவிக்க காவல்துறைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லெனின் கருப்பன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராம்நகர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் நித்தியானந்தா 44 முறை வாய்தா வாங்கியுள்ளார்.

06:52:59 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

நீட், ஜிஎஸ்டி, உணவு பாதுகாப்பு சட்டம், உதய் மின் திட்டம் இது போன்ற மத்திய அரசு கொண்டு வந்த மசோதாக்களை மறைந்த முதல்வர் ஜெயலலிதாக கடுமையாக எதிர்த்திருந்தார். ஆனால் இரண்டு தலைமைகளைக் கொண்ட தற்போதைய அதிமுக அரசு, பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டு, மாநில உரிமைகளை இழந்து வருகிறது.

06:25:01 on 09 Dec

மேலும் வாசிக்க விகடன்

”ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமான கோயிலை நாங்கள் கட்டிய பிறகு, அயோத்தி முழுவதுமாக புதிய பொலிவு பெறும். புதிய அயோத்தியை நீங்கள் காண்பீர்கள். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் பெருமளவு மேம்படுத்தப்படும்” என்று இரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான ராம்விலாஸ் வேதாந்தி கூறினார்.

05:57:01 on 09 Dec

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதத்தைவிட குறைவாகவே இருக்கும் என சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஐஎச்எஸ் மார்க்கிட்’ தெரிவித்துள்ளது. 8 முக்கிய ஆதார தொழில்துறைகளின் உற்பத்தி 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை கடும் சரிவை சந்தித்து உள்ளது.

05:27:01 on 09 Dec

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் 30 வயது இளம் பெண் மீது 4 பேர் ஆசிட் வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 30 சதவீதம் தீக்காயங்களுடன் மீரட் மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் பலாத்கார புகாரை வாபஸ் பெற மறுத்ததால், அவரது வீட்டுக்குள் நுழைந்த 4 ஆண்கள் அப்பெண் மீது ஆசிட் ஊற்றியதாக கூறப்படுகிறது.

04:57:01 on 09 Dec

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தருவதாக அதிமுகவை சக்திவேல், மற்றும் தேமுதிகவை சேர்ந்த முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

04:29:50 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தொடர்ந்து கவர்ச்சியான மாடர்ன் உடைகளை அணிந்து வருவதுடன் அதனை சமூக வலைத்தளத்திலும் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால், சற்று வழக்கத்திற்கு மாறாக புடவை அணிந்து ஓவர் கவர்ச்சியில் ஒய்யாரமாக அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.

04:27:01 on 09 Dec

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே நடுக்குப்பம் கிராம பஞ்சாயத்து அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.50 லட்சமும், துணைத்தலைவர் பதவிக்கு ரூ.15 லட்சமும் தருவதாக அதிமுகவை சக்திவேல், மற்றும் தேமுதிகவை சேர்ந்த முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

04:25:51 on 09 Dec

மேலும் வாசிக்க தினகரன்

தயாரிப்பாளர் போனி கபூர், ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13ஆம் தேதி தொடங்கும் என்றும், 2020ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வலிமை படம் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து #ValimaiStartsOnDec13 #ValimaiDiwali2020 என்ற ஹேஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

03:57:01 on 09 Dec

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் மணிகண்டன் என்பவரை ராஜேஸ்வரியின் தம்பி பாண்டீஸ்வரனும் அவரது மனைவி நிரஞ்சனாவும் அரிவாளால் வெட்டியதில் மணிகண்டன் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், நிரஞ்சனாவுக்கு மணிகண்டன் தொலைபேசியில் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது.

03:27:01 on 09 Dec

மேலும் வாசிக்க Behind Woods News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு, 2688 அடி உயரமுள்ள மலை உச்சியில் கார்த்திகை மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2600 சிறப்பு பஸ்களும், 22 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

02:57:02 on 09 Dec

மேலும் வாசிக்க தினமலர்

தென்னாப்பிரிக்காவின் சோசிபினி துன்சி 2019ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அட்லாண்டாவில் நடந்த இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்சி 2019 மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்டுள்ளார்.

02:27:02 on 09 Dec

மேலும் வாசிக்க விகடன்

செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்து பின் நடிகராக களமிறங்கியுள்ளார் ரங்கராஜ் பாண்டே. அவர் முதன்முதலாக நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இந்நிலையில், திருட்டுப் பயலே 2 படத்தை இந்தியில் இயக்கவுள்ளார் இயக்குனர் சுசி கணேசன். இதில் தமிழில் சுசி கணேசன் நடித்த வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறாராம்.

01:57:01 on 09 Dec

மேலும் வாசிக்க சினி உலகம்

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் உருவத்தை வெள்ளி நாணயத்தில் பதித்து சுவிட்சர்லாந்து அரசு கவுரவித்துள்ளது. வாழும் காலத்திலேயே இத்தகைய சிறப்பு பெற்ற வீரர் இவர் ஒருவர்தான். 20 ஸ்விஸ் பிராங்க் நாணயங்களில் பெடரரின் உருவம் அச்சிடப்பட்டு அடுத்த மாதம் புழக்கத்துக்கு விடப்படுகிறது.

01:27:02 on 09 Dec

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்கு குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்.

01:16:19 on 09 Dec

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஏதோ இஸ்லாமியருக்கு மட்டும்தான் பிரச்னை என்று தமிழகத்தில் இருப்போர் நினைக்கக் கூடாது. இலங்கையில் நடந்த போரால் பாதிக்கப்பட்டு இங்கு வந்த தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் கூட இந்த சட்ட திருத்தத்தால் பாதிக்கப்படுவார்கள்.” என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

01:02:08 on 09 Dec

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தும் தீா்மானத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி. பிரமீளா ஜெயபால் அறிமுகப்படுத்தினார். சாதாரண வகையைச் சோந்த அந்தத் தீா்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டாலும், மேலவையான செனட் சபையில் அதனை வாக்கெடுப்புக்கு விட முடியாது.

12:57:01 on 09 Dec

மேலும் வாசிக்க தினமணி

மேலும் வாசிக்க