View in the JustOut app
X

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக, தனது கான்வாய் வாகனத்தை நிறுத்தியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

11:25:01 on 15 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் லொஸ்லியா. இவருக்கு என்று பெரியளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி விட்டது. தற்போது, லொஸ்லியாவை அருள்நிதி நடிக்கும் ஒரு படத்தில் கமிட் செய்யவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை

10:55:01 on 15 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

ஜனநாயக கட்சியை சேர்ந்த காங்கிரஸ் பெண்களுக்கு எதிராக அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்வீட்டுகளை பகிர்ந்ததை அடுத்து, அவர் மீது இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

10:26:01 on 15 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஆரோக்கியமுடன் கூடிய வயதானவர்களில் குறைவான தூக்கமுள்ளவருடன் நல்ல தூக்கம் உள்ளவரை ஒப்பிடும்போது குறைவான தூக்கமுள்ளவரின் மூளையின் அளவு கணிசமாக சிறியதாக இருக்கும் சாத்தியக்கூறு அதிகம் என தெரியவந்துள்ளது.

09:55:02 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை, புளியந்தோப்பில் பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் பிரகாஷ், சந்துரு, சதிஷ், அருண் மற்றும் பிரேமை கைது செய்த போலீசார், 6 கத்திகளையும் பறிமுதல் செய்தனர்.

09:25:02 on 15 Jul

மேலும் வாசிக்க தினகரன்

மதுரையில் குறிப்பிட்ட சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள புத்தகத்தை தடை செய்யக்கோரி, புரட்சிப் புலிகள் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

08:55:02 on 15 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கொழும்புவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.1 கோடி மதிப்புள்ள மூன்று கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யயப்பட்டது. தங்கத்தைக் கடத்தி வந்த 11 பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ள ஒன்பது பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

08:40:01 on 15 Jul

மேலும் வாசிக்க தினகரன்

விஜய் நடிக்கும் பிகில் படத்தில் நாயகி நயன்தாராவுக்கு என்ன வேடம் என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருந்த நிலையில் அவர் மருத்துவ மாணவியாக நடிப்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்தப் படத்தை தவிர நயன்தாரா தற்போது ரஜினிகாந்துக்கு ஜோடியாக தர்பார் படத்தில் நடித்து வருகிறார்.

08:27:01 on 15 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவலில் 40 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் அத்திவரதர் வைபவம் 17வது நாளை எட்டியிருக்கிறது. அத்திவரதரை தரிசிக்க மக்கள் தினமும் அலை கடல் என திரண்டு வருகின்றனர். தற்போது நாளென்றுக்கு ஒன்றரை லட்சம் பேர் வரை அத்திவரதரை வழிபடுவதற்கு வந்து குவிகின்றனர்.

08:12:01 on 15 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திண்டுக்கல் ஆவின் பாலகத்தின் பொதுமேலாளர் முகமது பரூக் ரூ.18 லட்சம் பணம் கையாடல் செய்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆவின் முறைகேட்டில் ஈடுபட்டதாக மேலாளர் தினகரபாண்டியன், விற்பனை பிரிவு மேலாளர் வெங்கடேசன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

07:55:01 on 15 Jul

மேலும் வாசிக்க தினகரன்

அண்ணா முதல்வராக இருக்கும்போது ஒரு நேரத்தில் தமிழகம் வரும் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன், காமராசரை சந்திக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். காமராசருக்கு தகவல் செல்கிறது. அவர் வீட்டை முற்றுகையிடுகின்றனர் பத்திரிக்கையாளர்கள். அப்போது காமராசரோ அதிபர் நிக்சனைச் சந்திக்க நான் விரும்பவில்லை என கூறிவிட்டார்.

07:42:01 on 15 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அஸ்ஸாம் மாநிலம் கடுமையான சேதத்தை சந்தித்து வருகிறது. அங்குள்ள 28 மாவட்டங்களை சேர்ந்த 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். அஸ்ஸாம் மாநிலத்தில் இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

07:25:02 on 15 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

’கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும்?’ என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், ’நடிகர் சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதாகவும், நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்குப் பதில் கூறலாம். தெரியாமல் பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்?’ எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

07:14:32 on 15 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இன்று மாலை ஆறு மணிக்கு நேர்கொண்ட பார்வை படம் குறித்து ஒரு முக்கியமான அப்டேட்விடப்பட இருக்கிறது என்று புதிய போஸ்டருடன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி நேர்கொண்ட பார்வை படம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

07:12:01 on 15 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே முன்விரோதம் காரணமாக விவசாயி காஞ்சிவனம் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக தேவேந்திரன் என்பவர் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

06:57:01 on 15 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வடசென்னை படத்தின் 2ஆம் பாகம் கைவிடப்பட்டதாக செய்திகள் பரவின. இந்நிலையில், தனுஷ் ’வடசென்னை 2ஆம் பாகம் உருவாகும். அப்படி ஏதேனும் மாற்றம் இருந்தால் நானே எனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிப்பேன். அதுவரை எனது படங்கள் குறித்த எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்’ என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

06:42:01 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் கைதான 5 பேரின் நீதிமன்ற காவல் ஜூலை 29ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தபாபு, மணிவண்ணன், சதீஷ் ஆகியோரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. சேலம் சிறையில் இருந்து 5 பேரும் காணொளி காட்சி மூலம் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

06:27:01 on 15 Jul

மேலும் வாசிக்க தினகரன்

நீட் தேர்வு தோல்வியால் உயிரிழந்தவர்கள் குறித்து எந்த விதமான தகவலும் அரசிடம் இல்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் தற்கொலை மற்றும் மரணம் குறித்து தகவல்களை சேகரித்து வைப்பது மத்திய சுகாதாரத்துறையின் பணி. ஆனால் தற்போது இதுபோன்ற தகவல்கள் வெளியாகியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

06:12:01 on 15 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சி பணிகளுக்கா பள்ளம் தோண்டியபோது பழங்கால சுரங்கம் இருப்பதை தொழிலாளர்கள் கண்டுள்ளனர். மேலும், குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிக்காகப் பள்ளம் தோண்டியபோது மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகில் பழங்கால சிறைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

05:57:01 on 15 Jul

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

குஜராத்தில் கட்ச் மாவட்டம் மங்குவா பகுதியில் ஆட்டோ ஒன்று டிராக்டர் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் ஆட்டோ உருக்குலைந்தது. அதிலிருந்த பயணிகள் அலறியவாறு சரிந்தனர். இந்த கோர விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

05:53:11 on 15 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

எச்.ஐ.வி., பாதிப்பை காரணம் காட்டி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு தலைமை ஆசிரியர் அனுமதி மறுத்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

05:40:02 on 15 Jul

மேலும் வாசிக்க தின மலர்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்து முன்னணியைச் சேர்ந்த முருகானந்தத்திற்கும் ஜகுபருல்லா என்பவருக்கும் இடையே பேனர் வைப்பது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜகுபருல்லா மற்றும் அவரது நண்பர்கள் முருகானந்தம் மற்றும் அவரது தந்தை கணேசனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.

05:30:09 on 15 Jul

மேலும் வாசிக்க தந்தி டிவி

’நியூசிலாந்து அணி வீரர்களுக்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். என் மகன் பென் ஸ்டோக்ஸின் ஆட்டம் எனக்கு சந்தோஷத்தை அளித்தாலும், நியூசிலாந்துதான் கோப்பையை வெல்ல வேண்டுமென்று நான் நினைத்தேன்’ என இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ்-இன் தந்தை தெரிவித்துள்ளார்.

05:27:01 on 15 Jul

மேலும் வாசிக்க விகடன்

தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ.) அதிகாரம் தொடர்பான சட்ட திருத்த மசோதா மீது விவாதம் மக்களவையில் நடந்தது. 278 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேறியது. காங்கிரஸ் தரப்பில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நாட்டை போலீஸ் அதிகாரம் கொண்டதாக மாற்ற முயற்சிப்பது சரியல்ல என வாதிட்டனர்.

05:16:31 on 15 Jul

மேலும் வாசிக்க தினமலர்

தேசத் துரோக வழக்கில் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத்தயார் என்று கூறிவிட்டு தற்போது மேல்முறையீடு செய்தது ஏன்? என்று செய்தியாளர் வைகோவிடம் கேள்வி எழுப்பினார். இதில் கடுப்பான வைகோ, தங்களிடம் ஆலோசனை கேட்க மறந்து விட்டதாக கிண்டல் செய்தார். அதோடு மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று நான் ஒரு போதும் கூறவில்லை என தெரிவித்தார்.

05:10:02 on 15 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

அரசியலில் திமுக - அதிமுக பரம எதிரிகளாக பார்க்கப்பட்டு வந்தாலும், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் மகள் செல்வியின் பேத்திக்கும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் அக்கா பேரனுக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமண நிச்சயதார்தத்தை திமுக தலைவர் ஸ்டாலின் முன்னின்று நடத்தி வைத்தார்.

04:58:59 on 15 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

இந்தியாவில் இன்று ரியல்மீ எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. அதனுடன் ரியல்மீயின் 3ஐ ஸ்மார்போனும் வெளியாகியது. டையமண்ட் ப்ளூ, டையமண்ட் ப்ளாக் மற்றும் டையமண்ட் ரெட் ஆகிய மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. 3GB RAM மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ.7,999 ஆகும்.

04:57:01 on 15 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

ஒரு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் டையில் முடியும்போது, சூப்பர் ஓவர். சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால..? பவுண்டரி அடிப்பது தான் கிரிக்கெட்டா? குறைந்தது கோப்பையைப் பகிர்ந்தாவது கொடுத்திருக்கலாம் எனப் பல்வேறு ரசிகர்களும் ஐசிசி-யின் விதிக்கு எதிராகத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

04:43:41 on 15 Jul

மேலும் வாசிக்க விகடன்

அமெரிக்காவின் பாதுகாப்புத் தொடர்பான விஷயங்களை அந்நாட்டின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பு கண்காணித்து வருகிறது. எஃப்.பி.ஐ. எனப்படும் அமெரிக்காவின் உள்நாட்டுப் புலனாய்வு அமைப்பு, சமூக வலைதளங்களைக் கண்காணிக்க பிரத்யேக மென்பொருள் கருவிகளைத் தயாரித்துக் கொடுக்குமாறு முன்னணி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

04:42:02 on 15 Jul

மேலும் வாசிக்க ETV BHARAT

சீனாவில் இருக்கும் ஹேஃபேய் விலங்கியல் பூங்காவில் உள்ள யாங் யாங் என்கின்ற சிம்பன்ஸி மனிதக் குரங்கு திடீரென கூட்டை விட்டு வெளியே வந்து பூங்கா ஊழியர் ஒருவரை ஓங்கி உதைத்ததில், நிலைதடுமாறி கீழே விழுந்தார். தொடர்ந்து யாங் யாங், பூங்காவில் இருக்கும் ஓர் கட்டடத்தின் மேற்குரையின் மீது ஏறி, விளையாட்டு காட்டியது.

04:25:02 on 15 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் வட சென்னை வெற்றியடைந்தாலும், தங்களை தவறாக சித்தரித்திருப்பதாக, வட சென்னை மக்கள் போராட்டம் நடத்தியதோடு தங்களது எதிர்ப்பையும் தெரிவித்தனர். இந்தக் காரணத்தினால் வட சென்னை 2 படத்தை கைவிட்டுவிடலாம் என ஆலோசித்து வருகிறார்களாம் படக்குழுவினர்.

04:12:01 on 15 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜிம்மி நீசம், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற பிறகு மன வருத்தத்துடன் உள்ளார். போட்டியில் தோற்ற பிறகு நீசம் குழந்தைகளிடம் விளையாட்டை வேலையாக எடுத்துகொள்ள வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

04:07:37 on 15 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

குமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ராகவன் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஐ.டி.பிரிவில் 4ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாடியில் இருந்து குதித்து மாணவன் ராகவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

04:04:34 on 15 Jul

மேலும் வாசிக்க தினகரன்

விக்ரம் தமிழ் சினிமாவின் ஹேட்டர்ஸ் என்றே இல்லாத நடிகர். இவர் நடிப்பில் இந்த வாரம் கடாரம் கொண்டான் படம் திரைக்கு வரவுள்ளது. விகரம் மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகின்றது. இந்நிலையில், விக்ரமின் கடாரம் கொண்டான் படத்திற்கு அஜித் ரசிகர்கள் பேனர் அடித்துள்ளனர்.

03:57:17 on 15 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

குமாரி மாவட்டத்தைச் சேர்ந்த ராகவன் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஐ.டி.பிரிவில் 4ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாடியில் இருந்து குதித்து மாணவன் ராகவன் தற்கொலை செய்து கொண்டார். மாணவன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

03:57:01 on 15 Jul

மேலும் வாசிக்க தினகரன்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே 2017-18ஆம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் வடிவேல் பட காமெடியாக ‘கிணறு வெட்டிய ரசீது இருக்கு, கிணற்றைக் காணவில்லை’ என்பது போல சாலை அமைக்கப்பட்டதாக பணி விபரத்தின் பலகை மட்டுமே உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.

03:48:51 on 15 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இமாசல பிரதேசம் சோலான் மாவட்டத்தில் உள்ள 4 மாடிகள் கொண்ட சொகுசு விடுதி ஒன்று உள்ளது. அங்கு பெய்துவரும் கனமழையால் அந்த விடுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 12 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என இதுவரை 13 பேரது உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. ஒருவர் இன்னும் சிக்கியிருக்கிறார் என அஞ்சப்படுகிறது.

03:40:04 on 15 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

அர்ஜுன் ரெட்டி படம் இந்தியில் ’கபீர் சிங்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு திரைக்கு வந்துள்ளது. இந்த படம் வெளியாகி 23வது நாளில் 250 கோடி என வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்திய அளவில் அதிக வசூல் குவித்த படங்களின் பட்டியலில் கபீர் சிங் படம் 10வது இடத்திற்குள் நுழைந்துள்ளதால், படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

03:27:02 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தட்டப்பாறை கிராமத்தில் உள்ள சாலையில் தேங்கிய மழைநீர் இரண்டு நாட்கள் ஆகியும் வடியாததால், நடவடிக்கைக் கோரி அப்பகுதி மக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

03:12:01 on 15 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகர் அஜித்தின் வாழ்க்கையையே மாற்றிய மற்றும் தேசிய விருது பெற்ற காதல் கோட்டை படத்தில் முதலில் விஜய்யை தான் நடிக்க கேட்டார்களாம். சில மாதங்கள் காத்திருங்கள் விஜய் நடிப்பார், என்று சொல்ல, தயாரிப்பாளர் உடனே படத்தை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அஜித்துடன் இணைந்து இப்படத்தை உருவாக்கினாராம்.

02:57:01 on 15 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

திமுகவில் எத்தனையோ அணிகள் இருந்தும் இளைஞரணிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தா எப்படி? மற்ற அணிகளையும் பலப்படுத்தினால்தானே கட்சியின் வாக்கு வங்கி பரவலா ஸ்ட்ராங் ஆகும்ன்னு சீனியர்கள் தரப்பில் இருந்து முணுமுணுப்பும் கேட்குது. அவங்க தரப்பில் அதிர்ச்சி தெரியுது.

02:42:01 on 15 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இப்படியெல்லாம் நடக்கும் என்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன்பே கணித்தது எப்படி என்று ஆச்சர்யத்துடன் விவாதிக்கிறார்கள் ட்விட்டர்வாசிகள்.

02:27:01 on 15 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஐசிசி தொடர்களில் நாக் அவுட் போட்டிகளில் பெரும்பாலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை விராத் கோலி வெளிப்படுத்தியதில்லை. கடந்த 11 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் காலிறுதி போட்டிகள், அரை இறுதி போட்டிகள், இறுதி போட்டிகள் போன்றவற்றில் 15 முறை களம் கண்டிருக்கிறார். ஆனால் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை என்பதே வரலாறு.

02:16:27 on 15 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உலகின் பெரும் பணக்காரர்கள் பற்றி ஆண்டுதோறும் கணக்கெடுப்பு நடக்கும். அதன்படி, உலகின் பெரும் பணக்காரர்கள் 15 நாடுகளில் தான் அதிகம் குவிந்துள்ளனர். அதன்படி, அமெரிக்காவில் 705 பில்லியனர்கள் உள்ளனர். சீனாவில் 285 பில்லியனர்கள் உள்ளனர். ஜெர்மனியில் 146 பில்லியனர்கள் உள்ளனர்.

02:12:02 on 15 Jul

மேலும் வாசிக்க தினமணி

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான யாஷ் சோப்ரா நிறுவனம் தயாரிக்கும் ’வார்’ படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்க, வாணி கபூர் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியாகிய சற்று நேரத்தில் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. வருகிற அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

02:11:55 on 15 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01:59:58 on 15 Jul

மேலும் வாசிக்க தினமணி

கிரெடிட், டெபிட் கார்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018ஆம் ஆண்டின் மார்ச்-மே மாதங்களில் 92.4 கோடியாக இருந்த டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை இந்தாண்டின் மார்ச்-மே மாதங்களில் 92.4 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது இந்த 3 மாதங்களில் 10 கோடி டெபிட் கார்டுகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

01:56:58 on 15 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தை சூர்யா தயாரிக்கிறார். இப்படத்தை ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

01:51:33 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கும்பளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், அர்ஜூன். 20 வயதான இவர், காணாமல் போன எட்டு நாட்களுக்குப் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான நிபின், ரோனி ராய் அஜித், அனந்து சிவன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

01:40:36 on 15 Jul

மேலும் வாசிக்க விகடன்

செங்கற்றாழை பசுமை கலந்த செம்மை நிறத்தில் நல்ல சதைபற்றுடன் இருக்கும். செங்கற்றாழையை உட்கொள்ளும் போது தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும். (நரை, திரை) மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும்.

01:39:02 on 15 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

செங்கற்றாழை பசுமை கலந்த செம்மை நிறத்தில் நல்ல சதைபற்றுடன் இருக்கும். செங்கற்றாழையை உட்கொள்ளும் போது தலை முடி கருக்கும், பார்வைத்திறன் அதிகரிக்கும். (நரை, திரை) மாறும். உடலில் முழுதும் பிராணன் நிரம்பும்.

01:36:02 on 15 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேலஞ்ச் ட் ரெண்டாவது வழக்கும். தற்போது ட் ராண்டாகி வருவது ‘பாட்டில் கேப் சேலஞ்ச்'. இந்த சேலன்ஞ்சை பலரும் செய்து காட்டி வருகின்றனர். இதைத் தொடர்ந்து சல்மான் கான் இந்த சவாலை கேலியாக எடுத்து செய்து வீடியோ ஒன்றை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

01:27:20 on 15 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அஜித் நடிப்பில் கடைசியாக வந்த விஸ்வாசம் மெகா ஹிட் ஆனது, இப்படத்தின் ரீச் வேற லெவல் தான். அந்த வகையில் தற்போது ஒரு பஸ் முழுவதும் விஸ்வாசம் படத்தை வரைந்துள்ளனர், அந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

01:20:00 on 15 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

ஓசூர் அருகே பேரண்ட பள்ளி வனப்பகுதியில் கூட்டம் கூட்டமாக வாழும் குரங்குகள் உணவைத் தேடி சாலையோரத்தில் குட்டிகளுடன் காத்திருக்கின்றன. குரங்குகளின் பசியை போக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

01:06:39 on 15 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாருடன் காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, சிவகுமார் உள்ளிட்டோர் சந்தித்தனர். சபாநாயகரை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சந்தித்ததை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

01:02:21 on 15 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதிய கல்வி கொள்கை பற்றி திமுகவினர் தான் பேசுகிறார்கள் என்றால் நடிகர் சூர்யாவும் பேசுகிறார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார். மேலும், புதிய கல்வி கொள்கையை பற்றி தெரியாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள் என்றும் விமர்சித்தார்.

12:48:23 on 15 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நீலம் (Thunder Blue), சாம்பல் (Platinum Grey), மற்றும் பச்சை (Aurora Green) என மூன்று வண்ணங்களில் அறிமுகமான எல்.ஜி W30 ஸ்மார்ட்போனில் பச்சை (Aurora Green) நிறம் கொண்ட ஸ்மார்ட்போன் மட்டும் அமேசான் ப்ரைம் டே சேலில் விற்பனையாகிறது.

12:39:25 on 15 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சென்னை தாம்பரம் அருகே ஆலப்பாக்கம் பெட்ரோல் பங்கிற்கு கஞ்சா போதையில் வந்த ரவுடிக் கும்பல் ஒன்று, பட்டாக்கத்திகளுடன் அங்கிருந்தவர்களை தாக்கி அச்சுறுத்திய பதைபதைப்பூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ரவுடிகளின் அட்டகாசத்தை அங்கிருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:34:36 on 15 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

12:32:09 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தில் உள்ளாட்சிதேர்தலை நடத்த அக்டோபர் 31 வரை மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டுள்ளது. அவகாசம் கேட்க்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் வரை உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

12:24:21 on 15 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாம் அன்றாடம் வீணாக்கும் அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால், பல பிரச்சனைகள் தடுக்கப்படுகிறது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

12:21:22 on 15 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பனை ஓலை மூலம் வழக்கமாகப் பெட்டிகள் உள்ளிட்ட கைவினைப் பொருள்கள் செய்து வருபவர்கள் மத்தியில் பனை ஓலையில் காமராஜர் உருவத்தைச் செய்து அசத்தியுள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த பனைத் தொழிலாளி பால்பாண்டி.

12:18:33 on 15 Jul

மேலும் வாசிக்க விகடன்

அஞ்சல்துறைத் தேர்வை தமிழில் நடத்தக்கோரி சட்டமன்றத்தில் தி.மு.க வலியுறுத்தியுள்ளது. இந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்காததால் சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது, மேலும் காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளும் வெளிநடப்பு செய்தன.

12:16:35 on 15 Jul

மேலும் வாசிக்க தினகரன்

கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து வந்த ஹிருத்திக் ரோஷன் டைகர் ஷெரப்புடன் இணைந்து 'வார்' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீஸர் வெளியாகிய சற்று நேரத்தில் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.

12:13:54 on 15 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

இங்கிலாந்து அணியின் சார்பாக யார் சூப்பர்ஓவரை வீசுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கிறிஸ் வோக்ஸ், பிளங்கட் போன்ற அனுபவம்வாய்ந்த பந்துவீச்சாளர்களைவிட இங்கிலாந்தின் கேப்டன் மோர்கனின் தேர்வு ஜோஃப்ரா ஆர்ச்சராக இருந்தது.

12:01:06 on 15 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

IRCTC மூலம் ஒருவர் ஒரு மாதத்திற்கு ஆறு டிக்கெட்கள் வரை முன்பதிவு செய்யமுடியும்.IRCTC அக்கவுண்ட் உடன் ஆதார் எண்ணை இணைக்கும்பட்சத்தில் கூடுதலாக 6 டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.

11:53:47 on 15 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

மும்பை போலீஸ் அதிகாரிகளுடன் விவாதம் செய்து சவால் விடுத்ததால் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் முகம் தொலைக்காட்சி மூலம் நாட்டில் பிரபலமாகி உள்ளது. நிறைய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர் முதல்வர் ஆவார் என நம்புகின்றனர். அவர் அரசியலில் நுழையும்போது 12வது படித்திருந்தார்.

11:51:50 on 15 Jul

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

கிளாட்னோ தடகள போட்டியில் இந்தியாவின் தடகள வீராங்கனையான ஹீமா தாஸ் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தினார். கடந்த இரண்டு வாரங்களில் ஹீமா தாஸ் வெல்லும் மூன்றாவது சர்வதேச தங்கம் இதுவாகும்.

11:44:24 on 15 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் கரடியை மக்கள் கண்டதாக புகார் கூறிவந்தனர். இந்நிலையில் அப்பகுதி வீடுகளில் வைத்திருந்த CCTV கேமராவை பரிசோதனை செய்தபோது கரடி ஒன்று குடியிருப்பு பகுதியில் நடந்து வருவதும் வேகமாக ஓடிச்செல்வதும் பதிவாகியுள்ளது.

11:36:44 on 15 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்த உலகக் கோப்பையே, ரன் அவுட்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம். அந்த அளவுக்குப் பல போட்டிகளின் முடிவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன இந்த ரன் அவுட்கள். சில இன்ச்களில் பல போட்டிகளின் முடிவுகள் மாறியிருக்கின்றன.

11:13:41 on 15 Jul

மேலும் வாசிக்க விகடன்

உலகக்கோப்பை போட்டியில், அதிக பவுண்டரிகளை வைத்து வெற்றி பெற்ற அணியை தீர்மானித்ததற்கு முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், ‘இந்த அதிக பவுண்டரி விதியை ஜீரணிப்பது கடினமானது’ என தெரிவித்துள்ளார்.

11:07:27 on 15 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். 'மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் பென் ஸ்டோக்ஸ், அவரது பங்களிப்பு அளப்பரியது' என்று இங்கிலாந்தின் கேப்டன் இயான் மோர்கன் புகழ்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் அவர் குறித்த பாராட்டுகளை பரவலாக காணமுடிகிறது.

11:04:05 on 15 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இமைக்கா நொடிகள் பட புகழ் நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப், 'பவுண்டரியை மட்டும் கணக்கில் எடுத்து கொண்டு விதிகள் உள்ளது, ஆனால் குறைந்த விக்கெட்டுகள் இழந்தது நியூசிலாந்து. பௌலிங்கை ஏதோ கீழ்ஜாதி போல கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றனர். நியூசிலாந்து தான் வெற்றியாளராக இருந்திருக்கும்,' என கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

11:01:15 on 15 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

பெருந்தலைவர் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது திரு உருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார்,பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

10:57:50 on 15 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

காமராஜரின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் கல்வித் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், 'தமிழக மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,' பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10:47:25 on 15 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து, வன்முறையை தூண்டும் விதமாக உள்ளதென, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், இந்தி படிக்க கூடாது என கூறும் திமுகவினர், வீடுகளின் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், ஹெச்.ராஜா தெரிவித்தார்.

10:44:48 on 15 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அன்சுருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில் டெல்லியில் 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். நாகை, சென்னையில் நடந்த சோதனை அடிப்படையில் 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

10:43:01 on 15 Jul

மேலும் வாசிக்க தினகரன்

அடுத்த தலாய் லாமா சீனாவில் இருந்துதான் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் சீனா அறிவித்துள்ளது. திபெத் புத்த மத தலைவராக தலாய் லாமா உள்ளார்.

10:41:33 on 15 Jul

மேலும் வாசிக்க தினமணி

பிக்பாஸ் தமிழ், தெலுங்கு என பிஸியாக ஒளிபரப்பாகும் ஒரு பெரிய நிகழ்ச்சி. தெலுங்கில் மூன்றாவது சீசனை நடிகர் நாகர்ஜுனா தான் தொகுத்து வழங்குகிறார். அவருக்கு ஒரு எபிசோட் மட்டும் ரூ. 12 லட்சம் சம்பளம் என்கின்றனர்.

10:37:02 on 15 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

ஹெலோ ஆப் மற்றும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என RSS அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளர் அஷ்வானி மகாஜன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த இரண்டு சீன சமூக ஊடகப் பயன்பாடுகளும் "தேச விரோத" உள்ளடக்கத்திற்கான மையமாக மாறிவிட்டதாகக் கூறி வலியுறுத்தியுள்ளார்.

10:18:56 on 15 Jul

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றியை நிர்ணயிப்பதற்கு பவுண்டரி எண்ணிக்கை விதியை பயன்படுத்தியதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக சாடியுள்ளார்.

10:02:43 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

டென்னிஸ் ரசிகர்களுக்கு பிரமாண்ட விருந்தளித்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிக் முன்னிலை வீரர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். மொத்தம் 4 மணி 57 நிமிடம் நீடித்த இந்த ஆட்டம் டென்னிஸ் ரசிகர்களை த்ரில் மழையில் நனையச் செய்தது.

09:59:51 on 15 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எடுத்த தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மரண தண்டனை நாட்டுக்கு அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

09:55:02 on 15 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 38 பேர் காயம் அடைந்த நிலையில் காணாமல் போன 30 பேரை தேடி வருகின்றனர். நேபாளத்தில் 22 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதுவரை 1,146 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

09:53:45 on 15 Jul

மேலும் வாசிக்க தினகரன்

மருத்துவப் படிப்புகளுக்காக, 'நீட்' எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில், முதுநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான, நீட் தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

09:35:02 on 15 Jul

மேலும் வாசிக்க தின மலர்

புதிய கார் மாருதி எர்டிகா கிராஸ் என அழைக்கப்படும் என தெரிகிறது. புதிய மாடலில் பல்வேறு கிராஸ்ஒவர் அம்சங்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இது தற்சமயம் விற்பனையாகும் மாடலை விட அழகிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என தெரிகிறது.

09:17:01 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே, வீட்டின் கதவை உடைத்து, 100 சவரன் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே வீடுகளில் பீரோவில் தங்க நகை, பணம் வைத்து இருப்பவர்கள், தகுந்த பாதுகாப்பு வசதிகள் செய்யவேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

08:55:02 on 15 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்கிறார்.

08:35:01 on 15 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.03 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:15:01 on 15 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சந்திராயன் - 2 விண்கலம் இன்று அதிகாலை ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காராணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரயன் 2 விண்ணில் செலுத்தப்படவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது.

08:00:40 on 15 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டி 'டை'யில் முடிந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது. இந்நிலையில் முதல்முறையாக உலகக்கோப்பையை வென்று இங்கிலாந்து அணி சாதனை படைத்தது.

07:35:01 on 15 Jul

மேலும் வாசிக்க தினகரன்

நிலவுக்கு மனிதர்களை அனுப்பியுள்ள ஒரே நாடு அமெரிக்காதான். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, 1969-ம் ஆண்டில் முதன்முதலாக, நிலவுக்கு மனிதன் செல்லும் விண்கலத்தை அனுப்பியது.

07:15:02 on 15 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

வரி செலுத்துவோரை சமூக வலைதளங்களில் வருமான வரித் துறை கண்காணித்து வருவதாக வெளியான செய்திகளுக்கு, “கணக்கில் வராத பணத்தை கண்காணிக்க சமூக ஊடகங்களில் நாங்கள் உளவு பார்க்கிறோம் என்பது தவறான கருத்து. நாங்கள் ஏன் சமூக வலைதளங்களில் கண்காணிக்க வேண்டும்?” என மத்திய நேரடி வரிகள் வாரியம் கேள்வி எழுப்பியுள்ளது.

06:55:01 on 15 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த செந்தில் குமார் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து, யூரோப்பியன் ஃபண்ட் என்ற பெயரில் ஐரோப்பிய நிறுவனங்களில் முதலீடு செய்வதாகக் கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

06:25:01 on 15 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உலகில் ஆபத்தான இடம் என பட்டம் கொண்ட செர்னோபில் சில ஆண்டுகளுக்கு முன் திகில் அனுபவம் தரும் சுற்றுலா தலமாக மாறியுள்ளது. அங்கு செல்பவர்கள் மிகுந்த பாதுக்காப்புடன்தான் செல்ல முடியும். தினமும் கதிர்வீச்சின் அளவை ஆராய்ந்த பிறகுதான் அங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அதுவும் சில மணி நேரத்தில் அங்கிருந்து வெளியேர வேண்டும்.

05:55:01 on 15 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தமிழக - கர்நாடக சாலையில் தட்டக்கரை எனும் இடத்தில், காட்டு யானை ஒன்று சாலையில் சுற்றித்திரிந்ததால், அந்த வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

05:25:02 on 15 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7

’நான் ஈ’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நானி. தற்போது இவர் 'கேங் லீடர்' என்னும் படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் கே குமார் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 15ஆம் தேதியும், முதல் பாடல் ஜூலை 18ஆம தேதியும், டீசர் ஜூலை 24ஆம் தேதியும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

04:55:02 on 15 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

சிதம்பரம் அருகே ஓமக்குளம் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இங்கு வாங்கப்பட்ட மதுபாட்டில்களில் விஷப் பூச்சிகள், இரும்புத் துகள்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை கண்டு வாடிக்கையளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கேட்டபோது ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததால் வாக்குவாதம் முற்றியது.

04:25:01 on 15 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ரியால்டி ஷோவான பிக் பாஸ் தெலுங்கு மூன்றாவது சீசன் தொடங்கவுள்ள நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவதற்கு ஈடாக பாலியல் ரீதியாக உதவிகளைக் கேட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

03:55:01 on 15 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் சனிக்கிழமை காவல் அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்து கொள்ளையடித்ததாக ஒரு பெண் அவரது காதலனுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரையும் கொள்ளை வழக்கின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

03:25:01 on 15 Jul

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

மேலும் வாசிக்க