View in the JustOut app
X

சென்னை கோடம்பாகத்தில் உள்ள முரசொலி வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா முரசொலி வளாகத்தில் வருகிற 7ஆம் தேதி நடக்கிறது. இந்த சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

12:39:34 on 24 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

இன்றைய காலை நேர நிலவரப்படி தங்கம் விலை சிறிது ஏற்றம் காணப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.2 அதிகரித்து ரூ.3,334 ரூபாயாக இருந்தது. அதன்படி பார்த்தால், சவரனுக்கு ரூ.8 அதிகரித்து 26 ஆயிரத்து 672 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 30 பைசா அதிகரித்து ரூ.44.80க்கு விற்கப்படுகிறது.

12:31:44 on 24 Jul

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெறும் பாடல்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை தயாரிப்பு குழுவும் குஷிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அஜித்-வித்யா பாலன் இடம்பெறும் அகலாதே என்ற பாடல் நாளை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக போனி கபூர் தெரிவித்துள்ளார்.

12:27:01 on 24 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், உடுப்பி, கொடகு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

12:14:56 on 24 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கேரளாவில் நாய் ஒன்று கள்ளத் தொடர்பில் இருந்ததாகக் கூறி அதனை சாலையில் அனாதயாக விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன், ‘பொதுவாக நாய்கள் நோய்வாய்ப்பட்டாலோ, அடிப்பட்டாலோ அதன் எஜமானர்களால் கைவிடப்படும். ஆனால் கள்ளத்தொடர்பை காரணமாக கூறி கைவிடப்படுவது இதுதான் முதல் முறை’ என்கிறார்.

12:09:30 on 24 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பாஜக உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக ஹெச்.ராஜாவை அழைத்து நேரடியாக களத்திற்கு சென்று செயல்பட வேண்டும். இல்லையென்றால் மேலிடத்துக்கு தகவல் அனுப்பப்படும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சொன்ன பிறகே ஹெச்.ராஜா தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வருகிறாராம்.

11:53:19 on 24 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

நெல்லை மாநகராட்சியின் மேயராக கடந்த 1996ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் உமா மகேஸ்வரி. இவருடைய கணவர் முருகசங்கரன் நெடுஞ்சாலைத் துறையில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் இருவர் உட்பட மூன்று பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

11:48:50 on 24 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

'அஜித்தின் குணத்தைக் கண்டு தான் வியந்துள்ளேன். அவ்வளவு ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர் என் முன் மிகவும் சாதாரணமாக இருந்தார். அதைக்கண்டு நான் அதிகம் ஆச்சரியப்பட்டேன். யாராவது அவரை புகழும் போது மிகவும் வெட்கப்படுவார்’ என்று நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.

11:38:46 on 24 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

பொதுப்பணித் துறையின் கீழ் இயங்கி வரும், நீர்வளத் துறையின் www.wrd.tn.gov.in என்ற இணையதளத்தில் 2019-20ஆம் ஆண்டு குடிமராமத்து திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நீர்நிலைகள், அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

11:32:55 on 24 Jul

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

வேலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், சத்துவாச்சேரி பகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

11:30:15 on 24 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஆடை திரைப்படத்தில் தனது கதாபாத்திரத்திற்குக் கிடைக்கும் வரவேற்பை நேரடியாகக் காண ஆசைப்பட்டார் அமலா பால். விவேக் பிரசன்னா உள்ளிட்ட குழுவினருடன் திரையரங்குக்கு சென்ற அமலா பால், மீடியா ஆள் போல, கையில் மைக்கைப் பிடித்துக் கொண்டு, அனைவரிடமும் கருத்துக் கேட்டிருக்கிறார்.

11:08:23 on 24 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

சென்னை பாரிமுனையில் திருவிக குறித்து மணவழகர் மன்றத்தின் 63ஆம் ஆண்டு முத்தமிழ் விழா நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ’கருணாநிதி இல்லாதது நாட்டிற்கும், தமிழுக்கும் பெரிய இழப்பு. திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார் என்றால் தாயாக திருவிக விளங்கினார்’ என்று கூறியுள்ளார்.

10:52:32 on 24 Jul

மேலும் வாசிக்க ETV BHARAT

நடிகை அமலாபால் தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடனான காதல்தான் தன்னை ஆற்றுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், ’27 வயதான நடிகை அமலாபால் நான் ஒருவரை விரும்புகிறேன். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.

10:46:38 on 24 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே 22 அடியாக உள்ள தடுப்பணைகளை 40 அடியாக உயர்த்திக் கட்டும் பணிகளில் ஆந்திர அதிகாரிகள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10:41:50 on 24 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

’அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையின் அருகில் சமைப்பதில் தவறு என்ன இருக்கிறது? சமைத்த பாத்திரங்களை கழிவறை மேல் வைப்பதொன்றும் தவறு கிடையாது. கழிவறை அருகில் சமயலறை இருப்பதில் தவறு இல்லை’ என மத்திய பிரதேத மாநில அமைச்சர் இமார்த்தி தேவி கூறியுள்ளார்.

10:30:24 on 24 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லக்கூடிய அனந்தபுரி விரைவு ரயிலில் மதுரையைச் சேர்ந்த பூர்ணிமாவும் அவரது இரண்டு குழந்தைகளும் வந்துள்ளனர். இந்நிலையில் மதுரை ரயில் நிலையத்தில் தவறி விழுந்த பூர்ணிமா ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டார்.

10:23:49 on 24 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை - ராமேசுவரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஜூலை 30ஆம் தேதி முழுவதும் முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்ட சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

09:57:01 on 24 Jul

மேலும் வாசிக்க தினமணி

அறிமுக இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டியர் காம்ரேட். இப்படம் வெளியாவதற்கு முன்பே பிரபல பாலிவுட் இயக்குநர் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.

09:39:02 on 24 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அறிமுக இயக்குநர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டியர் காம்ரேட். இப்படம் வெளியாவதற்கு முன்பே பிரபல பாலிவுட் இயக்குநர் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார்.

09:36:02 on 24 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மத்திய கிழக்கு நாடுகளில் விலங்குகளின் கறந்த பாலில் இருந்து மெர்ஸ் எனப்படும் புதிய வைரஸ் பரவுவதாக செய்திகள் வெளிவருகின்றன. இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்குச் செல்லும் இங்கிலாந்து நாட்டவர்கள் ஒட்டகப் பாலை அருந்த வேண்டாம் என்று அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது.

09:18:02 on 24 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் விலங்குகளின் கறந்த பாலில் இருந்து மெர்ஸ் எனப்படும் புதிய வைரஸ் பரவுவதாக செய்திகள் வெளிவருகின்றன. இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவுக்குச் செல்லும் இங்கிலாந்து நாட்டவர்கள் ஒட்டகப் பாலை அருந்த வேண்டாம் என்று அந்நாடு கேட்டுக் கொண்டுள்ளது.

09:15:01 on 24 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆகஸ்டு ஒன்றாம் தேதியிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மொத்தமுள்ள 48 நாள்களில் 24 நாள்கள் சயன கோலத்திலும், எஞ்சிய 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திரவரதர் காட்சி தருவார் என்று தெரிவித்துள்ளார்.

08:55:01 on 24 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன. மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

08:39:01 on 24 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலாவில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி உள்ளன. மொத்தம் உள்ள 23 மாகாணங்களில் 18 மாகாணங்களில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

08:36:02 on 24 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக பள்ளி கல்வி துறையினரின் கருத்தறியும் கூட்டம் சென்னையில் பள்ளி கல்வி தலைமையகம் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று நடக்கிறது. இதில் கல்வி துறை அதிகாரிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

08:18:02 on 24 Jul

மேலும் வாசிக்க தின மலர்

புதிய கல்வி கொள்கை குறித்து தமிழக பள்ளி கல்வி துறையினரின் கருத்தறியும் கூட்டம் சென்னையில் பள்ளி கல்வி தலைமையகம் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இன்று நடக்கிறது. இதில் கல்வி துறை அதிகாரிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர்.

08:15:01 on 24 Jul

மேலும் வாசிக்க தின மலர்

பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தானில் குவெட்டா நகரில் கிழக்கு பைபாஸ் சாலையில் உள்ள மருந்து கடையின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு நள்ளிரவில் திடீரென வெடித்து சிதறியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 25 பேர் காயமடைந்துள்ளனர்.

07:57:01 on 24 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

07:39:01 on 24 Jul

மேலும் வாசிக்க தினகரன்

2018-19 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டித்து நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

07:36:01 on 24 Jul

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ76.24 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:20:49 on 24 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரிட்டனிலுள்ள ஆங்கிலியா ரஸ்கின் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், சிகரெட் துண்டுகள் காணப்பட்ட மண்ணில் வளரும் க்ளோவர் தாவரத்தின் முளைப்பு வெற்றி வீதம் மற்றும் வளர்ச்சி முறையே 27 மற்றும் 28 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.

06:55:01 on 24 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கனடாவில் பாறைகள் சரிந்து விழுந்ததால் எதிர்நீச்சலிட்டு இனப்பெருக்க பகுதிக்கு செல்ல முடியாமல் தவிக்கும் சல்மான் வகை மீன்களை அந்நாட்டு அரசு ஹெலிகாப்டர் மூலம் மீட்டு வருகிறது.

06:25:01 on 24 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் தீண்டாமை கடைபிடிக்காத கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்குவதற்காக கிராமங்களை தேர்வு செய்யும் பணியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை ஈடுபட்டுள்ளது.

05:55:02 on 24 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

செர்ரி பழ வகைகளை சாப்பிட்டு வருவதும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும். தொடர்ந்து இரண்டு வாரங்கள் செர்ரி மற்றும் கிரான்பெர்ரி பழங்களை சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக பாதையில் ஏற்படும் நோய் தொற்று குறைய தொடங்கும்.

05:25:01 on 24 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

விழுப்புரம், காகுப்பம் அருகே பாதாள சாக்கடையில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளி மூச்சுத்திணறி உயிரிழந்தார். பாதாள சாக்கடை குழாயை சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளர் மாரி(38) மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

04:55:01 on 24 Jul

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவில் திருமணத்துக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயரும் ஆண்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ளது. திருமணத்துக்காக அதிகமாக இடம்பெயரும் இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கின்றனர்.

04:25:01 on 24 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நடப்பு ஆண்டில் 92 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வருமான வரிவசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் உள்ளவர்கள், ஜூலை 31க்கு மேல் வருமான வரி கட்டினால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:55:02 on 24 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பெரும்பாலும் நம் ரெளட்டரை நாம் அணைப்பதே இல்லை. மாதத்துக்கு ஒரு முறையாவது ரெளட்டரை ரீஸ்டார்ட் செய்வது பல பிரச்னைகளைத் தீர்க்கும். உங்கள் வீட்டில் வைஃபை ரெளட்டர் எங்கே இருக்கிறது எனப் பாருங்கள். வீட்டின் நடுவில் இருந்தால் நல்லது.

03:26:01 on 24 Jul

மேலும் வாசிக்க விகடன்

’ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் கேப்டனாக அப்படியே இருப்பார். கட்சிக்குள் எந்த நெருக்கடியும் இல்லை. காங்கிரஸ் செயற்குழு (CWC) இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கும், கட்சியில் தலைமை நெருக்கடி இல்லை’ என்று ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் கூறியுள்ளார்.

02:56:01 on 24 Jul

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஜியோ 'ஜிகாபைபர்' (GigaFiber), அதிவேக பைபர்-டு-தி-ஹோம் (FTTH) சேவை, அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 12 அன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த அறிமுகம் ரிலையன்ஸ் நிறுவங்களில் ஆண்டு பொது கூட்டத்தின்போது நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

02:26:02 on 24 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

’டீசல் கார் வெச்சிருக்கீங்களா... இன்னும் சில வருஷத்துல டீசல் கார் விக்க தடைபோட்டுருவாங்க. அதனால டீசல் கார் வெச்சிருந்தா உடனே வித்துடுங்க’ போன்ற தகவல்கள் வாட்ஸ்அப்பில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றன. உண்மையில் டீசல் கார்களை நிறுத்தப்போவதாக மாருதி அறிவிக்க மூன்று முக்கியக் காரணங்கள் இருக்கின்றன.

01:56:01 on 24 Jul

மேலும் வாசிக்க விகடன்

சில பெண்களுக்கு தாய்ப்பால் சரியாக சுரப்பதில்லை. இவர்கள் காலையிலும் மாலையிலும் 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். மேலும் வளரும் குழந்தைகளுக்கு கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் அவசியத் தேவை. இந்த சத்துக்கள் பேரிக்காயில் நிறைந்துள்ளன.

01:25:02 on 24 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

’விவோ S1’ ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. விவோ நிறுவனத்தின் இந்த S-தொடர் ஸ்மார்ட்போன் சில நாட்கள் முன்புதான் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ P65 எஸ் ஓ சி ப்ராசஸர், 128GB சேமிப்பு அளவு, 4,500mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

12:55:02 on 24 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12:25:02 on 24 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பேமென்ட் வங்கிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இவை தொடர்ந்து நடைபெற வேண்டுமானால் அரசு மற்றும் ஒழுங்கு முறை ஆணையங்களின் ஆதரவு அவசியம் என்ற குரல் வலுவாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

11:55:02 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆந்திர அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஆந்திர அரசின் இந்த அத்துமீறலை தமிழக அரசு முறியடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

11:25:01 on 23 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கூந்தல் வறட்சியைப் போக்க தினமும் ஷாம்பு பயன்படுத்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும். pH மதிப்பு குறைந்த ஷாம்புகளைத் தேர்வுசெய்து பயன்படுத்த வேண்டும். அதிக வறட்சி உள்ளது எனில் தயிர் மற்றும் முல்தானிமெட்டியை சம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேக் போட்டு கூந்தலை அலசவும். வாரம் ஒரு முறை இதனைச் செய்து வர கூந்தல் வறட்சி நீங்கும்.

10:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

உதகை அருகே கீழ்குந்தா பகுதியில் இருபிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எட்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் ஹெத்தை அம்மன் திருவிழாவை நடத்த வேண்டுமென படுகர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10:25:01 on 23 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் மூத்த அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் பேசிய யோகி, புனித நகரமான அயோத்தியில் 100 ஏக்கர் பரப்பளவில், 251 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமான ராமர் சிலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

09:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ள பேட்டரி கார்களை நாளை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைக்கிறார். கடந்த ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேட்டரி கார்களை தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுந்தானது.

09:25:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

முதல்வர் பதவியில் இருந்து தாம் விலகுவதாகக் கூறி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் குமாரசாமி அளித்துள்ளார். கர்நாடக ஆளுநர் வஜீவாய் வாலாவை சந்தித்து ராஜினாமா கடித்தை குமாரசாமி வழங்கியுள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ்-மதஜ கூட்டணி அரசு தோல்வி அடைந்ததால் குமாரசாமி ராஜினாமா செய்துள்ளார்.

09:14:26 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

தாய்லாந்தில் சர்வதேச தாய்லாந்து குத்துசண்டை போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் வென்ற தீபக் (49 கிலோ), வெண்கல பதக்கம் வென்ற மனிஷா மவுன் (57 கிலோ) உட்பட ஏழு இந்தியா குத்துசண்டை வீரர்கள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

08:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

08:39:01 on 23 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மலேசியாவில் சட்ட விரோதமாகத் தங்கியுள்ள தமிழர்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடியேறிகள் தண்டனை ஏதும் இன்றி வெளியேற ஏதுவாக மீண்டும் ஒருமுறை பொது மன்னிப்பு என்ற சலுகையை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

08:36:01 on 23 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னையில் நாளை பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் காலை 9 மணி முதல் 4 மணி வரை நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், கே.கே.நகர் பகுதியில், அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், ( ஈக்காட்டுதாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாட்ஷ் நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்டவை அடங்கும்.

08:15:02 on 23 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னை மாதவரத்தில் ஐந்து ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மாதவரத்தை சேர்ந்த பிரபல ரவுடி நாகராஜ் கைது செய்யப்பட்டார். 2014ம் ஆண்டில் முருகன் என்பவரும் 2015 ம் ஆண்டு போத்தீஸ் முரளி என்பவரும் வெட்டிக் கொல்லப்பட்னர். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான மாதவரத்தை சேர்ந்த நாகராஜ் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

07:55:01 on 23 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 105 பேரும் வாக்களித்ததால், குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. இதனால் பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், சட்டசபையில் ஒருவரை ஒருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டு, கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

07:50:38 on 23 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஒன்பது மணி நேர விவாதத்துக்குப் பின் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் குமாரசாமிக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 105 பேரும் வாக்களித்ததால், குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது.

07:43:44 on 23 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும். கசகசா உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. கோடை காலத்தில் உண்டாகும் வாய்புண்களை நீக்கும் சக்தி இதற்கு இருக்கிறது.

07:39:01 on 23 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஒன்பது மணி நேர விவாதத்துக்குப் பின் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. தற்போது குரல் வாக்கெடுப்பு முடிந்தநிலையில், பகுதி வாரியாக எம்.எல்.ஏ.க்களைப் பிரித்து அமர வைத்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

07:37:43 on 23 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும். கசகசா உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கக்கூடியது. கோடை காலத்தில் உண்டாகும் வாய்புண்களை நீக்கும் சக்தி இதற்கு இருக்கிறது.

07:36:02 on 23 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

திமுக சார்பில் நெல்லை மாநகர மேயராக இருந்தவர் உமா மகேஸ்வரி. இந்நிலையில், ரெட்டியார்பட்டியில் உள்ள தனது வீட்டில் உமா மகேஸ்வரி தனது கணவர் மற்றும் வீட்டுப் பணிப்பெண்ணுடன் இருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவர்களை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

07:33:14 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தில், 'தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 75% பணியிடங்களை ஆந்திர மாநிலத்தவர்க்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:18:02 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

ஆந்திர சட்டமன்றத்தில் அம்மாநில இளைஞர்களுக்கான சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தில், 'தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் 75% பணியிடங்களை ஆந்திர மாநிலத்தவர்க்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:15:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

ஜப்பானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தங்கள் நாட்டில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை பறைசாற்ற ஒலிம்பிக்கை ஜப்பான் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

06:57:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோவில் உண்டியலை பெயர்த்து எடுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இரும்பு கம்பி உதவியுடன் கோவில் உண்டியலை பெயர்ந்து எடுத்த கொள்ளையர்கள் அதனை கையோடு தூக்கிச் சென்றுள்ளனர்.

06:39:01 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோவில் உண்டியலை பெயர்த்து எடுத்து தூக்கிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். இரும்பு கம்பி உதவியுடன் கோவில் உண்டியலை பெயர்ந்து எடுத்த கொள்ளையர்கள் அதனை கையோடு தூக்கிச் சென்றுள்ளனர்.

06:36:02 on 23 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இங்கிலாந்தின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவரை தீர்மானித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:18:01 on 23 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இங்கிலாந்தின் புதிய பிரதமராக முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கன்சர்வேட்டிவ் கட்சியின் 1 லட்சத்து 60 ஆயிரம் உறுப்பினர்களின் தபால் ஓட்டுகள் தான் கட்சியின் புதிய தலைவரை தீர்மானித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:15:02 on 23 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களுருவில் தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பெங்களுருவில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் குமாரசாமி பேசியுள்ளார்.

05:58:12 on 23 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சிறு குழுந்தையுடன் இருக்கும் இரண்டு புகைப்படங்களை பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அதில், மிகவும் சிறப்பான நண்பர் தன்னை நாடாளுமன்றத்தில் சந்திக்க வந்தார் என்று மட்டும் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

05:57:02 on 23 Jul

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஷங்கர் அடுத்து இந்தியன் 2 படத்தை எடுக்கவுள்ளார், இப்படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க ஆர் ஜே பாலாஜியை ஷங்கர் அனுகியுள்ளார். அவர் முதலில் ஓகே சொன்னாலும், LKG ஹிட்டிற்கு பிறகு பாலாஜி சோலோவாக சில படங்களில் ஹீரோவாக நடிக்கவுள்ளார், அதன் காரணமாக இந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.

05:53:29 on 23 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

பெங்களுருவில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. பெங்களுருவில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த வீட்டை முற்றுகையிட சென்ற போது காங்கிரஸ்-பாஜக கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

05:50:50 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வரும் திராவிட பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் படிக்க யாரும் விண்ணப்பிக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 1997ம் ஆண்டில் திராவிட பல்கலைக்கழம் துவங்கப்பட்டிருந்தாலும், 2006ம் ஆண்டுமுதலே, அங்கு தமிழ்த்துறை துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

05:49:06 on 23 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

'அரசு நிர்வாகத்தில் நடப்பவற்றை பொதுமக்களும் தெரிந்து கொள்ள உதவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது' என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

05:43:22 on 23 Jul

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

சென்னை, காசிமேட்டில் ஸ்விகி ஊழியரைக் கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு ஓடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காசிமேடு மீன்பிடித் துறைமுகம் சென்ற அவர்கள் அங்கிருந்து ஒரு இரு சக்கர வாகனத்தையும் திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

05:41:30 on 23 Jul

மேலும் வாசிக்க ETV Bharat

தமிழகத்தில் நடந்த 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தை மேற்கோள் காட்டி கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா பேசினார். அரசுக்கு அளித்த ஆதரவை 18 எம்.எல்.ஏக்கள் விலக்கி கொண்டு ஆளுநரிடம் கடிதம் அளித்ததும், சபாநாயகர் அவர்களை தகுதிநீக்கம் செய்தார் என்பதை சுட்டிக்காட்டி சித்தராமையா கர்நாடக சட்டப்பேரவையில் பேசினார்.

05:31:17 on 23 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, ராயப்பேட்டை ஆகிய இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

05:21:56 on 23 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவு தினத்தையொட்டி, நெல்லை தாமிரபரணி ஆற்றில் அரசியல் கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் 20வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

05:17:34 on 23 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

புதுச்சேரி ஊசுட்டேரி சேற்றில் சிக்கி இறந்த பசுவை விட்டு விலகாமல் அதன் கன்றுக்குட்டி காத்திருந்த சம்பவம் காண்பவர்களை கண் கலங்கச் செய்தது. புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான ஊசுட்டேரி வறண்டுபோனது. இதனால் சுற்றுப்பகுதி கிராமங்களில் இருந்து கால்நடைகள் மேய்ச்சலுக்கு ஏரிக்குள் வருகின்றன.

05:13:32 on 23 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் லாஸ்லியா தமிழ் மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருப்பவர். தற்போது இவரது ரசிகர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை, அவருக்கு என்று ரசிகர் மன்றம் தொடங்கிவிட்டனர், பஸ்களில் அவரது புகைப்படங்கள் ஒட்டுவது என கொஞ்சம் ஓவராக தான் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

05:10:05 on 23 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

மார்வெல் சூப்பர் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று தனக்கு மிகுந்த ஆசை உள்ளதாக பாலிவுட்டில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம்வரும் டாப்சி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கேம் ஓவர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

04:58:19 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

துபாயில் கஷ்டப்படும் மகனை காப்பாற்றக் கோரி, ராஜபாளையத்தைச் சேர்ந்த பன்னீர் செல்வி என்பவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். உயிரை மாய்த்துக் கொள்வதாக கூறும் தனது மகனை மீட்டு, சொந்த ஊர் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

04:52:48 on 23 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சத்யராஜ் சூர்யாவை வாழ்த்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

04:40:13 on 23 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

முகிலனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்ட சிபிசிஐடி-யின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்து விட்டார். மேலும் 3 மணி நேரம் மட்டுமே விசாரிக்க வேண்டும் அதுவும் இன்றே விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

04:37:43 on 23 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

குஜராத் மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளிகள் ஒரு வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளதன. பள்ளிக்கல்வித் துறையை சீர்திருத்தும் நடவடிக்கையான பிராக்னா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு தொடக்கக் கல்வி பயிலும் குழந்தைகள் பள்ளிகளுக்கு ஸ்கூல் பேக் கொண்டு செல்ல தேவையில்லை.

04:29:25 on 23 Jul

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

கால்பந்து வீராங்கனையும் அவரின் குட்டி ரசிகரும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் புகைப்படம் இணையத்தை வட்டமடித்து வருகிறது. கார்சன் பிக்கெட் (Carson pickett) அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஆவர்.

04:18:25 on 23 Jul

மேலும் வாசிக்க விகடன்

ஏப்ரல் 21ஆம் தேதி அன்று கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் பெரிய விடுதிகளைக் குறிவைத்து இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 290 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு இலங்கை முஸ்லிம்கள் சமூகத்தில் பெரிய பின்னடைவைச் சந்தித்தனர். இது 2009ல் இலங்கையில் முடிவுக்கு வந்த உள்நாட்டு போருக்கு பிறகு நடத்திய மிகப் பெரிய தாக்குதல் ஆகும்.

04:13:30 on 23 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுவேந்தர சஹால், இன்று தன்னுடைய 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சஹாலின் பிறந்தநாளுக்கு ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் என பலரும் ட்விட்டரில் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

04:02:30 on 23 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் என சித்தராமையா உறுதி அளித்துள்ளார். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்குத் தீர்மானத்தின் மீது காங்கிரஸ் சட்டமன்ற கட்சித்தலைவர் சித்தராமையா பேசி வருகிறார்.

03:51:30 on 23 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை அருகம்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இருதரப்பு கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டதில் 7 பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. ரவுடி போல் ஒருவரை ஒருவர் அடித்திக்கொண்டதை பார்த்து மற்ற மாணவர்கள் அலறி அடித்து ஓடினர்.

03:40:51 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் வித்தியசமான பாராட்டை இஸ்ரோவிற்கு தெரிவித்துள்ளது. அதில், ‘சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு வாழ்த்துகள்.’ என ட்விட்டரில் தெரிவித்தது. மேலும், ‘நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் முதலில் நீங்கள் யாருக்கு சொல்ல வேண்டுமென்பது உங்களுக்கு தெரியும்’ என்றது.

03:39:02 on 23 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் வித்தியசமான பாராட்டை இஸ்ரோவிற்கு தெரிவித்துள்ளது. அதில், ‘சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு வாழ்த்துகள்.’ என ட்விட்டரில் தெரிவித்தது. மேலும், ‘நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் முதலில் நீங்கள் யாருக்கு சொல்ல வேண்டுமென்பது உங்களுக்கு தெரியும்’ என்றது.

03:36:01 on 23 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

குழந்தைகளுக்கான ஃபேஸ்புக் செயலியில் சில குறைகள் இருப்பதாகவும் பெற்றோர் ஒப்புதல் இல்லாமலேயே குழந்தைகள் முகம் தெரியாத நபர்களோடு நட்பு கொண்டு வருவதாகவும் பெற்றோர்கள் மத்தியிலிருந்து புகார்கள் வருகின்றன.

03:18:01 on 23 Jul

மேலும் வாசிக்க விகடன்

குழந்தைகளுக்கான ஃபேஸ்புக் செயலியில் சில குறைகள் இருப்பதாகவும் பெற்றோர் ஒப்புதல் இல்லாமலேயே குழந்தைகள் முகம் தெரியாத நபர்களோடு நட்பு கொண்டு வருவதாகவும் பெற்றோர்கள் மத்தியிலிருந்து புகார்கள் வருகின்றன.

03:15:02 on 23 Jul

மேலும் வாசிக்க விகடன்

பொறியியல் கலந்தாய்வின் மூன்று சுற்றுக் கலந்தாய்வுகள் நிறைவு பெற்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என தகவல் தெரியவந்துள்ளது.

02:57:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். இந்நிலையில், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

02:39:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார். இந்நிலையில், புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

02:36:01 on 23 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் சமரசம் செய்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தை அமெரிக்கா வாபஸ் பெற்றது. இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையை தீர்க்க அமெரிக்கா தயார் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கருத்தை மாற்றிக்கொண்டது.

02:18:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையில் சமரசம் செய்வதாக அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்தை அமெரிக்கா வாபஸ் பெற்றது. இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையை தீர்க்க அமெரிக்கா தயார் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கருத்தை மாற்றிக்கொண்டது.

02:15:01 on 23 Jul

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க