View in the JustOut app
X

’மக்களவை, பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றிக்காக சூட்டப்படும் மாலைகள் கருணாநிதிக்கு உரியவை. திமுகவை அழிக்க நினைத்தோரை வாக்கு எனும் கரண்டியால் வாக்காளர்கள் துரத்தியடித்தனர்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

12:27:22 on 25 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாட்டின் 2வது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கும் நிலையில், மோடியின் வெளிநாட்டு பயணத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அவர் ஜூன் 13ஆம் தேதி கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார். ஜூன் 28இல் ஜப்பான் செல்கிறார். ஆகஸ்டில் பிரான்ஸ், செப்டம்பரில் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குச் செல்கிறார்.

12:08:35 on 25 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கோடை விடுமுறை சில நாட்களில் முடிய உள்ள நிலையில், சுற்றுலா பயணிகளால் உதகை களைக் கட்டியுள்ளது. இந்நிலையில், உதகையின் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் இறுதி நிகழ்ச்சியான 61வது பழக்கண்காட்சி தொடங்கியுள்ளது.

11:55:01 on 25 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சமீபத்தில் டயட்டீஷியன் ருஜுட்டா திவாக்கருடன் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர் ஆகிய இருவரும் சந்தித்து உறையாடினார்கள். கரீனா தன் மகன் தைமூரின் உணவு பழக்கத்தை மட்டும் மிகவும் கண்டிப்பாக பின்பற்ற வைக்கிறார் என இந்த உறையாடல் மூலமாகத் தெரியவந்துள்ளது.

11:52:13 on 25 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த கர்ணன் என்பவர் தன் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் தனது குடும்ப பிரச்சனையை மதுரை நகர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

11:40:04 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று 2வது முறை பிரதமராகும் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் புதிதாக பலர் சேர்க்கப்படலாம் என தெரிகிறது. பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இவருக்கு உள்துறை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

11:25:02 on 25 May

மேலும் வாசிக்க தின மலர்

வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்த தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் மக்களின் நலன்கருதி வேலைநிறுத்தத்தை தள்ளி வைப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

11:18:59 on 25 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி., மற்றும் எல்.எல்.ஏ.,க்களுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஊர்வலமாகச் சென்று சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

11:03:00 on 25 May

மேலும் வாசிக்க தின மலர்

இந்தியா சுதந்திரம் பெற்று 72 வருடங்களில் முதல்முறையாக 78 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்பை விட தற்போது 14% அதிகமான பெண்கள் நாடாளுமன்றத்தில் அடியெடுத்துவைக்கவுள்ளனர். இருந்தாலும் 24% கொண்ட உலக அளவையும், 18% கொண்ட தெற்கு ஆசிய அளவையும் இந்திய பெண்களால் முந்த முடியவில்லை என்பது வருத்தம்தான்.

10:53:55 on 25 May

மேலும் வாசிக்க விகடன்

குஜராத் மாநிலம் சூரத் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தில் இருந்து குதித்ததாலும், மேலும் சிலர் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

10:41:58 on 25 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் அடைந்துள்ள படுதோல்விக்கு, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட எதிர்மறை பிரசாரமே காரணம் என கட்சியின் முக்கிய தலைவர்கள் வெளிப்படையாகவே குற்றம்சாட்ட துவங்கியுள்ளனர்.

10:38:24 on 25 May

மேலும் வாசிக்க ie தமிழ்

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரீசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் கட்சியின் தலைவராக மட்டுமின்றி பிரிட்டனின் அடுத்த பிரதமராகவும் பதவி ஏற்பார்கள்.

10:35:00 on 25 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

திண்டிவனத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட அருணாச்சலம், பாண்டியன், வேடியப்பன் ஆகிய மூன்று பேரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 36 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

10:25:18 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நேற்றைய வலை பயிற்சியின் போது உலகக் கோப்பை அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடுவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

10:21:47 on 25 May

மேலும் வாசிக்க நக்கீரன்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தாலும், கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.

09:55:02 on 25 May

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரவீந்திரநாத் குமார், ’அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கனவுகள் எனக்குக் கிடையாது’ என்று கூறியுள்ளார். இவர் இப்படிக் கூறினாலும், பன்னீர்செல்வம் தரப்பு ரவீந்திரநாத்துக்காக கப்பல் போக்குவரத்துத் துறையை பெறும் முனைப்பில் இருக்கிறதாம்.

09:35:01 on 25 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே டி.வல்லகுளத்தில் ராதிகா என்ற பெண்ணை தகாத உறவு காரணமாக அடித்துக் கொலை செய்து எரித்துள்ளனர். இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஆறு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

09:15:01 on 25 May

மேலும் வாசிக்க தினகரன்

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி வரும் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக பயிற்சி போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் அணியை, ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

08:55:01 on 25 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ராமநாதபுரம் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி, தோல்வி மாறி, மாறி அமைந்திருப்பதால் வெற்றிகளைக் கொண்டாட முடியாமல் திமுக, அதிமுகவினர் தவித்து வருகின்றனர்.

08:35:02 on 25 May

மேலும் வாசிக்க தினமணி

புதுச்சேரி முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதியில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாயின. இந்த விபத்தில் ஓட்டலில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

08:15:01 on 25 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று நடைபெற இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதை முறைப்படி அவர் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

07:55:01 on 25 May

மேலும் வாசிக்க மாலை மலர்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற, திமுக எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. அதில் லோக்சபாவில் புதிய எம்.பி.,க்கள் எப்படி செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

07:35:01 on 25 May

மேலும் வாசிக்க தின மலர்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.25 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.37 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:16:53 on 25 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கோடை காலங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுப்பதுடன் வெயில் காலங்களில் சருமத்தில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது.

06:55:02 on 25 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ததை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:25:02 on 25 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

"அரசியலில் கொஞ்சம் ‘முன்ன பின்ன’ இருக்கத்தான் செய்யும். ஆனால், பேச்சில் சுத்தம் இருக்கணும். அதெல்லாம் எங்க கேப்டனோட போச்சு. இப்ப கட்சியில அண்ணியார் எடுக்கிற முடிவால் ரொம்ப ரொம்ப பாதிப்பு ஏற்பட்டிருக்கு.." என்கின்றனர் தேமுதிக நிர்வாகிகள்.

05:55:01 on 25 May

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழ், மலையாளப் படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்திக்கும் செல்கிறார். இந்த வருடம் அவரது தெலுங்குப் படமும் வெளியாக உள்ளது. படத்தின் பெயர் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி. சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ்
நடித்த கனா படத்தை தெலுங்கில் கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

05:25:01 on 25 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆவணங்களை வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மூன்று பேரையும், வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கக் கோரி, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

04:55:01 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ஒரு கண் பார்வை நேராகவும், அடுத்த கண்ணின் பார்வை விலகிய நிலையிலும் காணப்படுவதை மாறுகண் என்கிறோம். மாறுகண் இருப்பவர் அதிர்‌‌ஷ்டசாலி என்ற தவறான கண்ணோட்டம் இருக்கிறது. மருத்துவ ரீதியாக, மாறுகண்ணை குணப்படுத்தவில்லை என்றால், பார்வையை இழக்க நேரிடும்.

04:25:01 on 25 May

மேலும் வாசிக்க மாலைமலர்

இலவசமாக பயன்படுத்தப்படும் குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான வாட்ஸ்ஆப்புக்கு நாளுக்கு நாள் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதன் மூலம் வருமானம் ஈட்ட பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் 2020ஆம் ஆண்டு முதல் வாட்ஸ்ஆப்பில் விளம்பரங்கள் வரவிருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.

03:55:01 on 25 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கர்ப்பகால சர்க்கரைநோயை `ஜெஸ்டேஷனல் டயாபடீஸ்' (Gestational Diabetes) என்று அழைக்கப்படுகிறது. இந்நோய் வருவதற்கு வைட்டமின் டி குறைபாடு ஒரு முக்கியக் காரணியாக இருப்பதை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். இண்டியானா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜின் ஜியா மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

03:25:01 on 25 May

மேலும் வாசிக்க விகடன்

கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்திய விமானங்களில் ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 1.13 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2018 ஏப்ரல் மாத அளவை (1.15 கோடி) விட 2 சதவிகிதம் குறைவாகும்.

02:55:02 on 25 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் பிரதிக் பாபர், தலிப் தாஹில், சுமன், ஆனந்தராஜ் ஆகியோர் வில்லத்தனமான வேடங்களில் வருவதாக கூறப்பட்டது. இப்போது பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

02:25:01 on 25 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும்.

01:56:02 on 25 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில், தண்ணீரைத் தேடி சரணாலயத்தை விட்டு வெளியேறி, பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மூன்று மாத பெண்புள்ளி மான் குட்டியை பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மான் குட்டியை மீட்ட வனத்துறையினர், மீண்டும் வன சரணாலயத்திற்கு கொண்டு வந்து விட்டனர்.

01:26:02 on 25 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சாதி, மத அடையாளத்துடன் உள்ள கட்சிகளின் பெயர்களை மாற்ற உத்தரவிடக் கோரி பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாய தொடரப்பட்ட வழக்கில், தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

12:55:01 on 25 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் மொத்தம் 21.5 லட்சம் கணினிகள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது சென்ற ஆண்டு விற்பனையை விட 8.3 சதவிகிதம் சரிவாகும் என ஆய்வு நிறுவனமான ஐடிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:25:02 on 25 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மண்பாண்டக் கலை மிகவும் புராதானமான கலையாகும். அகழ்வாராய்ச்சிகளில் தோண்டியெடுக்கப்படும் முதுமக்கள் தாழி மண்ணால் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மண் சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோரை மணிமேகலைக் காப்பியத்தில் ‘மண்ணீட்டாளர்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

11:55:02 on 24 May

மேலும் வாசிக்க காமதேனு

பற்களில் படிந்து இருக்கும் கறையைப் போக்க தினமும் பல் தேய்க்கும் முன்பு சிறிது உப்பு தூளை வைத்து பல்லில் தேய்த்துவிட்டு பின்னர், பேஸ்ட் கொண்டு பல் தேய்த்தால் பற்களில் படிந்த கறைகள் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

11:25:01 on 24 May

மேலும் வாசிக்க தினமணி

டூலெட் படத்தின் இயக்குநர் செழியன் அடுத்து த்ரில்லர் கதை ஒன்றை இயக்க உள்ளார் என்றும், இந்தக் கதையில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கினையும், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேசையும் நடிக்க வைத்து இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

10:55:01 on 24 May

மேலும் வாசிக்க தின மலர்

பேஸ்புக்கில் இருந்து கடந்த ஆறு மாதங்களில் 30 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களில் கண்டறிந்து நீக்கி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 6 மாதங்களில் வெறுப்பை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகளை நீக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

10:26:01 on 24 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

இங்கிலாந்தில் அனைத்து கேப்டன்களும் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர்களிடம் மற்ற அணியிலிருந்து உங்கள் அணிக்கு ஒரு வீரர் வேண்டும் என்றால் யாரை எடுப்பீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு விராட் கோலி தென்னாப்பிரிக்காவின் ஃபாஃப் டூப்பெளஸ்ஸிஸ் என பதிலளித்துள்ளார்.

09:56:01 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

மனிதனை நல்ல மனிதனாக்க மதம், கடவுள், தியானம், பக்தி போன்றவை இன்றியமையாததென்பதை இன்னும் பலரால் சரிவரப் புரிந்து கொள்ள முடிவதில்லை. இத்தகைய சக்திகள் யாவும் வாழ்வை நெறிப்படுத்தி, சரியான வழி நடத்தி அவன் வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியையும், இன்பத்தையும் வாரி வழங்கும் மாபெரும் சக்திகளாகவே காலங்காலமாக அமைந்து வந்துள்ளன.

09:26:02 on 24 May

மேலும் வாசிக்க மாலை மலர்

“மகிழ்ச்சி. இந்த வார்த்தையில் அண்ணன் திருமா வெற்றியை அளவிடவே முடியாது, அதே போல் வேர்எவர் வெற்றியுடனும்ஒப்பிடமுடியாது. மிக சுலபமாக அலங்கரிக்கப்பட்ட சின்னத்தில் நின்று வெற்றிபெற்றிருக்க முடியும். ஆனால் எப்போதும் நமக்கு புறக்கணிக்க முடியாத வெற்றி அவசியமாய் இருக்கிறது. ஜெய் பீம்” என வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ராஞ்சித்.

08:57:02 on 24 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

வாக்கு எண்ணிக்கையின் 11வது சுற்றுகளிலிருந்து திருமாவுக்கு ஏறுமுகம்தான். அதுவும் பெரிய அளவில் இல்லை. 2,000, 3,000 வாக்கு வித்தியாசத்தில்தான் சென்றுகொண்டிருந்தது. அமைதியாக இருந்த வி.சி.க தொண்டர்கள் வெடிச் சத்தம், பேண்ட் மீயூசிக் போட்டு காதைக் கிழிய வைத்தார்கள்.

08:39:01 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

வாக்கு எண்ணிக்கையின் 11வது சுற்றுகளிலிருந்து திருமாவுக்கு ஏறுமுகம்தான். அதுவும் பெரிய அளவில் இல்லை. 2,000, 3,000 வாக்கு வித்தியாசத்தில்தான் சென்றுகொண்டிருந்தது. அமைதியாக இருந்த வி.சி.க தொண்டர்கள் வெடிச் சத்தம், பேண்ட் மீயூசிக் போட்டு காதைக் கிழிய வைத்தார்கள்.

08:36:02 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா பகுதியில் பிரபல பயிற்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 18 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

08:18:01 on 24 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்தானா பகுதியில் பிரபல பயிற்சி மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 15 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 18 வாகனங்களின் உதவியுடன் தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

08:15:02 on 24 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஜெயம் ரவியின் 25 வது படத்தில் தாப்ஸி நாயகியாக நடிப்பதாக இருந்தது. தற்போது கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவருக்கு பதில் வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய உள்ளனர். ஜெயம் ரவியின் 26வது படத்தில் அவர் நடிக்கிறார். 25வது படத்தில் நடிக்க நித்தி அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

07:57:01 on 24 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மே 28, 29, 30 ஆகிய தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் முகாமிடவுள்ளனர். வரும் 30ஆம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

07:35:01 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு 7,90,750 வாக்குகளும், திருவள்ளூரில் போட்டியிட்ட ஜெயக்குமார் 7,64,093 வாக்குகளும், திண்டுக்கல்லில் போட்டியிட்ட பி.வேலுசாமி 7,43,813 வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட கவுதம சிகாமணி 7,16,961 வாக்குகளும், கரூரில் போட்டியிட்ட ஜோதிமணி 6,91,518 வாக்குகளும் பெற்றுள்ளார்.

07:18:01 on 24 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு 7,90,750 வாக்குகளும், திருவள்ளூரில் போட்டியிட்ட ஜெயக்குமார் 7,64,093 வாக்குகளும், திண்டுக்கல்லில் போட்டியிட்ட பி.வேலுசாமி 7,43,813 வாக்குகளும், கள்ளக்குறிச்சியில் போட்டியிட்ட கவுதம சிகாமணி 7,16,961 வாக்குகளும், கரூரில் போட்டியிட்ட ஜோதிமணி 6,91,518 வாக்குகளும் பெற்றுள்ளார்.

07:15:02 on 24 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஐஸ்க்ரீமில் சர்க்கரை, கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக இருக்கின்றன. அதிக கொழுப்புகளை உள்ளடக்கியிருப்பதால் உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத்தைத் தடைசெய்யும். தொடர் சளி, இருமல் போன்ற உபாதைகளால் பாதிக்கப்படும் குழந்தைகள் அடிக்கடி ஐஸ்க்ரீம் சாப்பிடுவதால் ஆரோக்கியம் மேலும் குறையும்.

06:57:01 on 24 May

மேலும் வாசிக்க காமதேனு

குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும் என்றும், தமிழ் மண்ணில் மலராது என்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில், சாதி வெறியர்களும், மதவெறியர்களும் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

06:39:02 on 24 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

குளம் குட்டைகளில்தான் தாமரை மலரும் என்றும், தமிழ் மண்ணில் மலராது என்றும் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில், சாதி வெறியர்களும், மதவெறியர்களும் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

06:36:01 on 24 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. இதன் கூட்டணி கட்சியான பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளதால் அதிமுக கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் கூட்டணியில் விரிசல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

06:18:01 on 24 May

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக தேனி தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது. இதன் கூட்டணி கட்சியான பாமக போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளதால் அதிமுக கூட்டணி அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால் கூட்டணியில் விரிசல் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

06:15:02 on 24 May

மேலும் வாசிக்க நக்கீரன்

ஒப்போ நிறுவனம் தனது புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் AMOLED டிஸ்ப்ளே, புதிய தலைமுறை இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம்ஸ கேம்பூஸ்ட் 2.0, ஆண்ட்ராய்டு பை மற்றும் கலர் ஓ.எஸ். 6.0 வழங்கப்பட்டுள்ளது.

05:57:01 on 24 May

மேலும் வாசிக்க மாலைமலர்

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் ஹெச்.ராஜா. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”நடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்து மீண்டும் மோடிஜின் ஆட்சி அமைய வாக்களித்த வாக்களித்த மக்களுக்கு நன்றி.” எனவும் தெரிவித்துள்ளார்.

05:39:01 on 24 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் தனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார் ஹெச்.ராஜா. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”நடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்து மீண்டும் மோடிஜின் ஆட்சி அமைய வாக்களித்த வாக்களித்த மக்களுக்கு நன்றி.” எனவும் தெரிவித்துள்ளார்.

05:36:01 on 24 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேருக்கு எதிராக போயம்புத்தூர் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 5 பேரும் சேர்ந்து பெண்களை பாலியல் கொடுமைப்படுத்தி அதை வீடியோவில் பதிவு செய்து பணம் பறித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

05:35:26 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் வீட்டில் சினிமா நடிகைகள் கலந்து கொள்ள இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து, 90 எம்.எல். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீகோபிகா மற்றும் பூனம் பாஜ்வா ஆகியோரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

05:18:02 on 24 May

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் வீட்டில் சினிமா நடிகைகள் கலந்து கொள்ள இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் ஆல்யா மானஷா, சாக்‌ஷி அகர்வால், மதுமிதா ஆகியோரைத் தொடர்ந்து, 90 எம்.எல். படத்தில் நடித்த நடிகை ஸ்ரீகோபிகா மற்றும் பூனம் பாஜ்வா ஆகியோரும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

05:15:02 on 24 May

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் வந்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய மூன்று படங்களும் ஹிட்தான். இந்நிலையில் ப்ரியாவின் பேக் ஐடி ஒன்று டுவிட்டரில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறது. இதனால் அவருக்கு பெரும் பிரச்சனையும் ஏற்பட்டு வருகின்றது.

04:57:01 on 24 May

மேலும் வாசிக்க சினி உலகம்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் நீத்து ஷுட்டெர்ன் வாலா. இவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது குடும்பத்தில் மொத்தம் 9 பேர் இருப்பதாகவும், ஆனால் தனக்கு மொத்தமே 5 வாக்குகள் மட்டும் தான் கிடைத்துள்ளது என்றும் கூறி பேசும் போதே அழத் தொடங்கினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

04:39:01 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் நீத்து ஷுட்டெர்ன் வாலா. இவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது குடும்பத்தில் மொத்தம் 9 பேர் இருப்பதாகவும், ஆனால் தனக்கு மொத்தமே 5 வாக்குகள் மட்டும் தான் கிடைத்துள்ளது என்றும் கூறி பேசும் போதே அழத் தொடங்கினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

04:36:01 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நீங்க ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயிச்சிருந்த பரவாயில்ல, மொத்தமா வாஷ் அவுட்டான உங்களுக்கு எதுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை கொடுக்கணும்? அதெல்லாம் முடியாது என அதிமுக நினைக்கிறதாம். ஆனால் அன்புமணியோ எடப்பாடி ஓபிஎஸ்ஸுக்கு விவரம் பத்தாது எப்படியாவது ஏமாத்திடலாம்னு பிளான் போட்டுள்ளாராம்.

04:18:02 on 24 May

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

நீங்க ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயிச்சிருந்த பரவாயில்ல, மொத்தமா வாஷ் அவுட்டான உங்களுக்கு எதுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை கொடுக்கணும்? அதெல்லாம் முடியாது என அதிமுக நினைக்கிறதாம். ஆனால் அன்புமணியோ எடப்பாடி ஓபிஎஸ்ஸுக்கு விவரம் பத்தாது எப்படியாவது ஏமாத்திடலாம்னு பிளான் போட்டுள்ளாராம்.

04:15:01 on 24 May

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகள் குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த விவரங்களின் படி, 2017 ஏப்ரல் 1 முதல் 2018 ஜனவரி 31 வரையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சுமார் 41.16 லட்சம் சேமிப்புக் கணக்குகளை மூடியுள்ளது.

03:57:01 on 24 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பெரும்பாலான தொகுதிகளில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு நிகராக மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன. அமமுக 4.8 சதவிகித வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 3.8%, மக்கள் நீதி மய்யம் 3.7% வாக்குகளையும் பெற்றன. திமுக 32% வாக்குகளையும், அதிமுக 18% வாக்குகளையும் பெற்றுள்ளன.

03:45:56 on 24 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சிதம்பரம் தொகுதியில், திருமாவளவன் பின்னடைவு என திட்டமிட்டு தகவல் பரப்பப்பட்டுள்ளது. தேர்தல் எண்ணிக்கையின்போது, 4 பெட்டிகள் எண்ணப்படவில்லை என்றும் 18வது சுற்றில் திருமாவளவனுக்குக் கிடைத்த ஓட்டுகள், அ.தி.மு.க-வுக்கு கிடைத்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

03:39:02 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

சிதம்பரம் தொகுதியில், திருமாவளவன் பின்னடைவு என திட்டமிட்டு தகவல் பரப்பப்பட்டுள்ளது. தேர்தல் எண்ணிக்கையின்போது, 4 பெட்டிகள் எண்ணப்படவில்லை என்றும் 18வது சுற்றில் திருமாவளவனுக்குக் கிடைத்த ஓட்டுகள், அ.தி.மு.க-வுக்கு கிடைத்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

03:36:01 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யாத இடங்களில் வெப்பமானது இயல்பைவிட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

03:29:08 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேர்தல் நடத்தப்பட்ட 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி 350க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014இல் தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும், பாஜக மட்டும் 282 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் தனியாக ஒரு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

03:18:02 on 24 May

மேலும் வாசிக்க தினமலர்

தேர்தல் நடத்தப்பட்ட 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி 350க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014இல் தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும், பாஜக மட்டும் 282 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் தனியாக ஒரு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

03:15:01 on 24 May

மேலும் வாசிக்க தினமலர்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குளைப் பெற்றுள்ளது. பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

02:57:01 on 24 May

மேலும் வாசிக்க மாலைமலர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் தத்சரா கிராமத்தில் உள்ள திரால் பகுதியில் அன்சர் கஸ்வதுல் ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகீர் மூசா உள்ளிட்ட சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

02:35:02 on 24 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

சேலம் சத்திரம் பகுதியில் மூன்று வயது ஆண் குழந்தையைக் கடத்திய வழக்கில் வேலவன், அவரது மனைவி ரேவதி, மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடன் தொல்லையைச் சமாளிக்க பணம் கேட்டு மிரட்ட, 3 வயது ஆண் குழந்தையை கடத்தியதாக போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

02:15:02 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

01:55:01 on 24 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தமிழகத்தில் நோட்டாவிற்கு அதிகமான வாக்குகள் பதிவான தொகுதி டி.ஆர்.பாலு போட்டியிட்டு வென்ற ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, 23,343 வாக்குகள் பதிவாகி 1.66% சதவீதமாக உள்ளது. அதேபோல் நோட்டாவிற்கு குறைவான வாக்குகள் பதிவான தொகுதியாக ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வென்ற கன்னியாகுமரி தொகுதி 6,131 வாக்குகள் பதிவாகி 0.58 சதவீதமாக உள்ளது.

01:47:35 on 24 May

மேலும் வாசிக்க நக்கீரன்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் கடைவீதியில், மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதில் அருகில் இருந்த துணி தைக்கும் தையல் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக தொண்டர்கள் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

01:41:36 on 24 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

இங்கிலாந்து அணியுடன் இருதரப்பு தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியத் தழுவியது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை விதித்துள்ளது.

01:40:01 on 24 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை என்று கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ’எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அனுமானத்துக்குப் பதில் சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார்.

01:35:39 on 24 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கெனவே ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை, ஜூங்கா படத்தை தயாரித்துள்ளார். தற்போது மீண்டும் ‘சென்னை பழனி மார்ஸ்’ என்ற படத்தை தயாரிக்கிறார். டிராவல் ஸ்டோரியாக உருவாகும் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

01:25:01 on 24 May

மேலும் வாசிக்க தின மலர்

தேர்தல் பிரசாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் முன் வைத்துதான் திமுக கூட்டணிக் கட்சிகள் பெற்றுள்ளதாகக் கூறிய தமிழிசை செளந்தரராஜனின் பேச்சு குறித்து திமுக எம்.பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’ஒருவர் வெற்றி பெறாத நிலையில் அவரை விமர்சித்து மேலும் காயப்படுத்த விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.

01:10:01 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் கமல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதைப் பற்றிப் பேசிய சீமான், ’என்னைவிட அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. தவிர, அவர் வெள்ளையாக இருக்கிறார். மக்கள் வெள்ளையாக இருப்பவர் பொய் பேச மாட்டார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

12:54:10 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகள் ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா ஆகியோர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 27 பேராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 31 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய நீதிபதிகள் நால்வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர்.

12:47:12 on 24 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. எனினும் திமுக அணி இமாலய வெற்றி பெறும் என எந்த கருத்துக் கணிப்பும் தெரிவிக்கவில்லை.

12:44:53 on 24 May

மேலும் வாசிக்க காமதேனு

கோடை விடுமுறை முடிகிற சமயத்தில் இன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. லிசா, ஒளடதம், ஓவியா, வண்ணக்கிளி பாரதி, பேரழகி ஐஸ்ஓ, நீயா 2 என ஆறு படங்கள் வெளியாகியுள்ளன. ஹிந்தியில் பிஎம் நரேந்திர மோடி படமும் இண்டியாஸ் மோஸ்ட் வாண்டட் ஆகிய இரு படங்களும் வெளியாகியுள்ளன.

12:34:45 on 24 May

மேலும் வாசிக்க தினமணி

உங்களின் கூந்தலுக்கான ஊட்டச்சத்தினை சத்தான காய்கறிகளின் மூலமாக மட்டுமே கொடுக்க முடியும். கேரட் மற்றும் வெங்காயம் முடி உதிர்வைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும். உறுதியான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கையான பொருட்களை சாப்பிட்டாலே போதும்.

12:25:01 on 24 May

மேலும் வாசிக்க மாலை மலர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ராஜவர்மனிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஞானம் வெற்றிச் சான்றிதழை வழங்கினார். இதேபோல் தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி பெற்றார்.

12:12:39 on 24 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

கனடாவின் அல்பெர்டா (Alberta) மாகாணத்தில், சுமார் 97,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதியில் கடந்த இரு தினங்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் 300க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 5000க்கு மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

12:06:16 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அமெரிக்க - இந்திய உறவில் மகத்தான ஒத்துழைப்பு ஏற்படும் என்றும் டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

12:03:09 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கும்பகோணம் வட்டி பிள்ளையார்கோவில் அருகே மருத்துவர் செல்வராஜ் வீட்டில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நகைகளைத் திருடியதாக செல்வராஜ், மருத்துவமனையில் பணியாற்றும் கீதா என்பவரிடம் 65 சவரன் நகைகளை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:00:08 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திமுக எம்.பி கனிமொழி. இந்நிலையில் அவர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

11:59:19 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

காவிரியில் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டிய 9 புள்ளி 2 டிஎம்சி தண்ணீரை வரும் ஒன்றாம் தேதி முதல் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் இக்கோரிக்கை எழுப்பப்பட்டது.

11:43:44 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 43.86 சதவிகித வாக்குகளைப் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பட்டியலில் திமுக தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

11:38:28 on 24 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

’தமிழக மக்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளோம்; கடமையைச் செய்ய காத்திருக்கிறோம். நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசக்கூடிய அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். 'மநீம' என்ற 14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர்’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

11:32:38 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’எடப்பாடி பழனிசாமியை பாஜக தூக்கிவிட்டு ஓபிஎஸ்சை மீண்டும் தமிழக முதல்வராக்கும். தேனி மக்களவைத் தொகுதியில் மகனை ஜெயிக்கவைத்த ஓபிஎஸ், பெரியகுளம், ஆண்டிபட்டியை கைவிட்டது ஏன்?’ என தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

11:21:26 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கற்றாழையின் சதைப்பகுதி நீரிழிவு, ஆஸ்துமா, வலிப்பு, வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். பல்வேறு சரும பிரச்சினைகளுக்கும் இது தீர்வு தருகிறது. கற்றாழைப் பொருட்கள் உடல்சூடு தணிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். உடலின் நச்சுக் கழிவுகளை அகற்றும்.

11:18:40 on 24 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மேலும் வாசிக்க