View in the JustOut app
X

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் ஸ்கொயர் பகுதியில் பில்போர்ட் ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. இதனையடுத்து அந்த இடத்திற்கு வந்த 80 தீயணைப்பு வீரர்கள் கிட்டதட்ட ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

01:55:02 on 19 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை லக்ஷ்மிபாம் எனும் பெயரில் இந்தியில் ரீமேக் செய்து வருகிறார் ராகவா லாரன்ஸ். இந்நிலையில், 'சுயமரியாதைக்கு பங்கம் வந்துவிட்டதால் லக்ஷ்மிபாம் படத்தில் இருந்து விலகுவதாக' நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

01:35:01 on 19 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

அரவக்குறிச்சியில் இடைத்தேர்தல் நடைபெறும் 174வது வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்கள் மீது போலீஸ் தாக்குதல் நடத்தியுள்ளது. கூட்டமாக இருந்த வாக்காளர்களை கலைக்க போலீஸ் தடியடி நடத்தியதில் காயமடைந்த இருபெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

01:23:40 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோஷமான கேப்டன் என பெயர் வாங்கியிருக்கும் விராட் கோலி, கிரிக்கெட் விளையாட்டில் சர்வ சாதரணமாக சதமடிப்பதில் வல்லவர்.
இன்னும் சில தினங்களில் உலகக்கோப்பை தொடங்க உள்ள நிலையில் கேப்டன் கோலி சமூக வலைதளங்களில் சதம் அடித்துள்ளார்.

01:15:01 on 19 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தெரிவித்த தேர்தல் ஆணையர் சாஹு 11 மணி நிலவரப்படி சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

01:11:34 on 19 May

மேலும் வாசிக்க மாலை மலர்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி முடிவுகள் பற்றிய முக்கிய ஆலோசனை முடிவுகள் எடுப்பதற்கான ஒரு சந்திப்பாக இது பார்க்கபப்டுகிறது.

01:08:05 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

அணைகளில் நீர் தேக்கம் மிக மோசமான நிலைக்குக் குறைந்து வரும் நிலையில் தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களுக்கு வறட்சி குறித்த எச்சரிக்கையையும் ஆலோசனைகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும்படி இம்மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

12:55:01 on 19 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகத்தில் 100 நாள் வேலைக்கான நிதி ஒதுக்கீடு குறைந்து வருவதால் வேலை நாட்களின் எண்ணிக்கை குறையும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் சென்னை தவிர 31 மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (100 நாள் வேலை) நடைமுறையில் உள்ளது.

12:51:31 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

கொல்கத்தாவில் ரவீந்திரநாத் தாகூர் இல்லம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பதற்றம் நிலவியது. வாக்குப்பதிவின் போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

12:49:38 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி அருகேயுள்ள காலிங்கராயன் கால்வாயில் மீனவர்கள் வலையில் சிக்கிய விநாயகர் மற்றும் நடராஜர் சிலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது

12:35:01 on 19 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மலையாளத்தில் ஏற்கனவே மோகன்லால் நடிப்பில் வெளியாகி இருந்த ‘புலிமுருகன்’ திரைப்படம் தான் 150 கோடி வரை வசூல் செய்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. அந்த சாதனையை, படம் வெளியான 25 நாட்களுக்கு உள்ளாகவே முறியடித்திருக்கிறது ‘லூசிபர்’.

12:15:01 on 19 May

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் மழை பெய்யாதா? என ஏங்கிக் கொண்டிருந்த சென்னை வாசிகளுக்கு ஒரு குட் நியூஸ், சென்னையில் இன்று மிதமாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

12:14:23 on 19 May

மேலும் வாசிக்க ie தமிழ்

அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் 'வாகனத்தின் மூலம் வாக்காளர்களை கொண்டு வந்து வாக்களிக்க திமுக ஏற்பாடு செய்வதாக' அதிமுக புகார் அளித்துள்ளது.

12:08:50 on 19 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பத்தாண்டுகள் ஆனது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆகியோர் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

12:04:27 on 19 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை ஒருவர் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலதிக அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், தாக்குதல் நடத்திய நபரை அர்னால்டின் பாதுகாவலர்கள் அங்கிருந்து உடனடியாக குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.

12:01:42 on 19 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

'கமல் குடும்பம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளது,' என்று பாஜக தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். மேலும், 'நான் கிறிஸ்தவ மதத்தை பரப்பி வருகிறேன் என கமலே முன்பு ஒருமுறை கூறியுள்ளார்,' என்றும் கூறினார்.

11:57:35 on 19 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட, இந்திய அணி ஆல் ரவுண்டர் கேதார் ஜாதவ் முழு உடல்தகுதியுடன் தயார் என கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆல் ரவுண்டரான கேதார் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் வலு சேர்ப்பதுடன், பந்துவீச்சிலும் சிறப்பாக பங்களிப்பார் என எதிர்பார்க்கலாம்.

11:55:01 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

உத்திரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த 3பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ.500 கொடுத்துச் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

11:35:02 on 19 May

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பேருந்துகளை நிறுத்தி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். வாக்களிக்க வெளியூர்களில் இருந்து அரவக்குறிச்சி தொகுதிக்கு 4 பேருந்துகளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.

11:23:41 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட எலச்சிபாளையம் 37வது எண் உடைய வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுது ஏற்பட்டதால் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

11:20:43 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு, மற்றும் வாழ்வின் மற்ற செயல்களுக்குத் தேவையான அதிகப்படியான ஆற்றலைத் தருவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

11:15:02 on 19 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தேர்தல் விதிகளுக்கு முரணாக பிரதமர் மோடி கேதார்நாத்துக்கு யாத்திரை சென்றுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. கேதார்நாத்தில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் என்று கூறியுள்ளது.

11:06:26 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற 30 அதிகாரிகள், முக்கியத்துவம் இல்லாத பதவியில் இருப்பதாக காவல்துறை இயக்குநர் டி.கே.ராஜேந்திரனுக்கு, டிஜிபி ஜாங்கிட் கடிதம் எழுதியுள்ளார்.

10:55:01 on 19 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடலூர்: திருவதிகை வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதையொட்டி, காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

10:42:16 on 19 May

மேலும் வாசிக்க ETV தமிழ்

7-ம் கட்ட மக்களவை இறுதிக் கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் சதவீதம் குறித்து காலை 9 மணி நிலவரப்படி தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி, பீகார் - 10.65%, இமாச்சல் பிரதேசம் - 0.87%, மத்திய பிரதேசம் - 7.16% வாக்குகள் பதிவாகியுள்ளன.

10:35:02 on 19 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

நாடு முழுவதும் கடந்த 2 மாதமாக நடந்து வந்த மக்களவை தேர்தல், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 'மக்களவைத் தேர்தலை நீண்ட நாட்களுக்கு நடத்தக்கூடாது,' என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

10:21:59 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சிங்காரா வனப்பகுதியில் பெண் புலி உயிரிழந்துள்ளது. புலி இறப்புக்கான காரணம் குறித்து சிங்காரா வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:55:02 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

இன்று மொத்தம் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதில், பீகார்: 8 தொகுதிகள், இமாச்சல பிரதேசம்: 4 தொகுதிகள், ஜார்கண்ட்: 3 தொகுதிகள் உள்ளிட்டவையும் அடங்கும். இன்றுடன் மொத்தம் 542 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைகிறது.

09:35:02 on 19 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

2019ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய இந்தியாவின் 17ஆவது மக்களவைத் தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவு இன்று மே 19ஆம் தேதி நடைபெறுகிறது. இன்றே 2019 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் வெளியாகும். ஆனால் அவை சரியாக கணிக்கப்பட்டுள்ளனவா என்பது வாக்குப்பதிவு அன்று தெரிந்துவிடும்.

09:15:01 on 19 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஓட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட அயிரவன்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. திடீரென வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

08:57:29 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'உத்தராகண்ட் கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிஷ்டமாக நினைக்கிறேன்,' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், 'எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுபூர்வமான உறவு உள்ளது,' என்றும் கேதார்நாத் கோயிலில் வழிபாடு செய்த பிரதமர் மோடி பேட்டி அளித்தார்.

08:55:01 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

கருமத்தம்பட்டியில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்காமல் இருந்த நிலையில் வேறு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டுவரப்பட்டு தொடங்கியது.

08:49:46 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இங்கிலாந்து இளவரசி டயானா, தனது 36வது வயதில் 1997ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், 'என் அம்மா டயானா இறந்தபோது பிற எந்த வலியை விடவும் கொடிய மன வலியை அனுபவித்தேன்,' என இளவரசர் வில்லியம் மனம் திறந்து பேசி உள்ளார்.

08:35:01 on 19 May

மேலும் வாசிக்க மாலை மலர்

ராணிப்பேட்டை அருகே அமைந்துள்ள காஞ்சனகிரி மலைக்கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சிறப்பு வாய்ந்த காஞ்சனகிரி மலையின் மீது பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பகுதியும், தட்டினால் சப்தஸ்வரங்களுடன் ஒலி எழுப்பும் இசைப்பாறை, சாம்பிராணி குகை ஆகியன அமைந்துள்ளன.

08:15:04 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.72 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.72 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:01 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட கருமாத்தம்பட்டியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறினால் வாக்குப்பதிவு தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கருமாத்தம்பட்டியில் 116வது வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம், உழைப்பாளி மக்கள் கட்சியின் பட்டன் வேலை செய்யவில்லை.

07:51:28 on 19 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேற்குவங்காள மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்கள் இந்த தேர்தலில் நோட்டாவுக்கே ஓட்டு போடுவோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், 'இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலிலும் பாலியல் தொழிலாளர்கள் நோட்டாவுக்கு தான் ஓட்டுபோட்டோம். இன்று நடைபெறும் இறுதிகட்ட தேர்தலிலும் நாங்கள் நோட்டாவுக்கு தான் ஓட்டு போடுவோம்,' என தெரிவித்துள்ளனர்.

07:35:01 on 19 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உட்பட நாடு முழுவதும் 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள 59 மக்களவை தொகுதிகளில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்துடன், மக்களவை தேர்தல் முடிவுக்கு வருகிறது.

07:15:02 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

கடந்த தேர்தலில் சரத்குமார் அணிக்கு எதிராக போட்டியிட்டு வெற்றி பெற்ற விஷால் அணியின் பதவிகாலம் முடிவடைந்து விரைவில் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது. விஷால் அணியை எதிர்த்து சரத்குமார் அணி போட்டியிடவுள்ள நிலையில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், விஷாலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

06:55:02 on 19 May

மேலும் வாசிக்க சினி உலகம்

ராஜஸ்தான் மாநிலத்தின் 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேசிய பாதுகாப்பு - கலாசாரம் - வீர தீரம் என்ற தலைப்பு உள்ளது. இதில் இந்தியாவின் பாதுகாப்புக்கு போராடிய வீரர்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் அபிநந்தனின் பெயரும், அவரது வீரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

06:25:01 on 19 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

05:55:01 on 19 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

மணிப்பூரில் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நாகா மக்கள் முன்னணி கட்சி வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. கோஹிமாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளது.

05:25:02 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

மதுரையில் நாளுக்கு நாள் வழிப்பறி கொள்ளை அதிகரித்து வரும் வேளையில், அதனைக் கட்டுப்படுத்த காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் 10 கிலோ தங்கச் சங்கிலிகள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன.

04:55:02 on 19 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கும்பகோணம் ஐங்கரன் காபி, உணவகம் என்ற பெயரில், உரிமையாளரை தவிர பிறர் உணவகம் நடத்த தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவகத்தின் பங்குதாரரான ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

04:25:01 on 19 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

`தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்' படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’. இந்த படத்தில் இயக்குநர்கள் சுசீந்திரன், மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் 14ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

03:55:02 on 19 May

மேலும் வாசிக்க மாலை மலர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கீழ்கோத்தகிரி அம்மன் நகரில் உணவு தேடி குடியிருப்புக்குள் புகுந்து கிடைக்கும் பொருட்களை குரங்குகள் தூக்கி செல்வது வழக்கம். இந்த நிலையில் குடியிருப்புக்கு அருகில் உள்ள மரத்திற்கு வந்துள்ளன. நள்ளிரவு திடீரென உச்சியிலிருந்து ஒவ்வொரு குரங்குகளாக கீழே விழுந்துள்ளது.

03:26:01 on 19 May

மேலும் வாசிக்க மாலைமுரசு

அஜித், விஜய் நடித்த திரைப்படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வருவது இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் நிறைந்த ஒன்றாகத் தான் இருக்கும். இந்நிலையில் நடிகர் விஜய்யின் 64வது படமும், அஜித்தின் 60வது படமும் 2020ஆம் ஆண்டின் கோடைவிடுமுறைக்கு வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

02:56:02 on 19 May

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

2020ஆம் ஆண்டு துவக்கம் முதல் இந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என இந்திய வெப்ப மண்டல ஆய்வு மையம் (IITM - Indian Institue of Tropical Meteorology) எச்சரித்துள்ளது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலர் இடம்பெயரும் நிலையும் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளது.

02:26:02 on 19 May

மேலும் வாசிக்க தினமலர்

முன்னதாகவே சியோமி நிறுவனம், சீனாவில் அறிமுகப்படுத்தவுள்ள புதிய ஸ்மார்ட்போனுடன் லேப்டாப் ஒன்றையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்த லேப்டாப் 14-இன்ச் திரையை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:55:02 on 19 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

திருச்சியில் இந்த ஆண்டில் மாம்பழங்களின் விலை ரூ.40 வரையில் உயர்ந்துள்ளதாக மாம்பழ வியாபாரிகள் கூறுகின்றனர். சில மாம்பழ ரகங்களின் விலை ரூ.50 வரையில் உயர்ந்துள்ளது. பூக்கும் பருவத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் விளைச்சல் 70 சதவிகிதம் குறைந்துவிட்டது. கஜா புயல் பாதிப்பும் உற்பத்தி சரிவுக்குக் காரணமாகும்.

01:26:01 on 19 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அமெரிக்க அரசு அந்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில் ஹெச்1பி விசாவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த எக்ஸ்ட்ரா சொலியூசன்ஸ் என்ற மென் பொருள் நிறுவனம் அமெரிக்கா அரசின் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.

12:55:01 on 19 May

மேலும் வாசிக்க நக்கீரன்

குஜராத்தின் ராஜ்கோட்டில் ரொட்டி வங்கி ஒன்று அறக்கட்டளையின் பேரால் செயல்பட்டு வருகிறது. இங்கு அக்கம் பக்கம் உள்ள மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் இவர்கள் உணவு பரிமாறுகின்றனர். இந்த ரொட்டி வங்கி உணவில்லாதவர்களுக்கு உணவு வழங்குகிறது.

12:25:02 on 19 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

உலகிலேயே முதல் முறையாக, குழந்தைகள் பொருத்தி விளையாடும் லெகோ பிளாக்குகளைக் கொண்டு, அதிவேக காரான புகாட்டி சிரோன் (Bugatti Chiron) மாடலில், கார் உருவாக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்துக்கும் அதிகமான லெகோ பிளாக்குகளைக் கொண்டு, எந்தவித பசைகளும் இன்றி இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

11:55:01 on 18 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தற்போது கோடை காலம் நிலவி வருவதால் குடிநீர்க்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சிக்கனமாகப் பயன்படுத்த குளிக்கும்போது ஷவர்பாத்தில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

11:25:02 on 18 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

கொடைக்கானலில் கோடை விழா களை கட்டியுதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுத்துள்ளனர். பிரையண்ட் பூங்காவில் பூத்து குலுங்கும் லட்சக்கணக்கான மலர்களை அவர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

10:55:01 on 18 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

வரும் 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்தும், தேர்தலுக்குப் பிறகான திமுகவின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிப்பதற்காக, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டுவதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

10:25:02 on 18 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஒவ்வொரு பெண்ணும் தனக்கு குழந்தை பிறந்தபிறகு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க முதலில் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நன்கு தூங்க வேண்டும். முடிந்த வரை தினமும் 10 முதல் 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

09:55:01 on 18 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தில் கடந்த மாதம் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது.

09:25:01 on 18 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

டெல்லி விரும்பியபடி சகலத்தையும் எடப்பாடி செஞ்சிக்கிட்டுதானே இருக்கார் அப்படி இருந்தும் என்ன கோபம் என்று பார்த்தபோது துணை முதல்வரான ஓ.பி.எஸ்.க்கு கூடுதல் அதிகாரத்தையும் அதிகப்படியான மதிப்பையும் கொடுக்கணும்னு மோடி பலமுறை சொல்லியும் அதை எடப்பாடி பொருட்படுத்தவே இல்லையாம்.

08:57:02 on 18 May

மேலும் வாசிக்க நக்கீரன்

பிஜு விஸ்வநாத்-விஜய் சேதுபதி இணைந்து எழுதும் கதைக்கு சென்னை பழநி மார்ஸ் எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது. இப்பிறப்பின் வெற்றி என்பது சென்ற பிறவியில் நாம் அந்த நோக்கத்திற்காக எடுத்த முயற்சியின் விளைவே என்ற கருத்தை மையமப்படுத்தி உருவாகியிருக்கிறது.

08:42:01 on 18 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தமிழில் ஹிட் அடித்த திரைப்படம் 'காஞ்சனா'. இந்தப் படம் மூன்று பார்ட்டுகளைத் தாண்டி ஹிட் அடித்தது. மேலும், பேய் படங்களில் புதிய ஜானரை இந்தப் படம் உருவாக்கியது. தற்போது இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் லாரன்ஸ். இதில் ஹீரோவாக நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

08:27:01 on 18 May

மேலும் வாசிக்க விகடன்

சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் மே 17-ம்தேதி வெளியான படம், மிஸ்டர் லோக்கல். ரொமாண்டிக் காமெடியான இந்தப் படத்தை குடும்பத்தினர் சென்று பார்க்கலாம் என்றும் விமர்சனங்கள் வந்தன. இந்தச் சூழலில் படம் ரிலீஸான தினமே தமிழ் ராக்கர்ஸ் தனது இணையதளத்தில் திருட்டுத்தனமாக மிஸ்டர் லோக்கல் படத்தை வெளியிட்டிருக்கிறது.

08:12:02 on 18 May

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் வங்கியில் காலியாக உள்ள புரோபஷனரி அதிகாரிகளுக்கான (PO) இடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தும். அப்படி இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வு, ஜூன் மாதத்தில் 8, 9, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. அந்த தேர்வு எழுதுவதற்கான அட்மிட் கார்டுகள் இன்று வெளியாகியுள்ளன.

07:59:50 on 18 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு மட்டுமே எஞ்சி இருக்கிறது. யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்று மே 23ஆம் தேதி தெரியவரும். இந்நிலையில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம், ஒரு சரிவை சந்திக்கும் என்று தெரிகிறது.

07:42:01 on 18 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பலரும் ஸ்விம்மிங் பூல் பயன்படுத்துவதால் மனிதத் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க குளோரின் அதிகமாகச் சேர்க்கப்படுகிறது. இதனால் கண்கள், காதுகள், தொண்டை தொற்று போன்ற பிரச்னைகளும் வரும். இந்த நீர் வாய்க்குள் செல்வதால்தான் வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுகின்றன என மருத்துவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

07:25:01 on 18 May

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் சொத்து தகராறில் தாய், தந்தை, தம்பியை கொன்றவர் கைது செய்யப்பட்டார். மூவரும் ஏசி வெடித்து பற்றிய தீயால் உயிரிழந்ததாக நாடகமாடியதும் அம்பலமாகி உள்ளது.

07:12:44 on 18 May

மேலும் வாசிக்க தினகரன்

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில், கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில், நேற்றிரவு பலத்த சூறாவளிக்காற்றுடன் ஒருமணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. இதில், பட்டக்காரனூர், ஆனைப்பள்ளிபுதூர், சென்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.

06:55:01 on 18 May

மேலும் வாசிக்க நியூஸ் 7

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அஸ்வதி என்ற 10 வயதுச் சிறுமி, கோடை விடுமுறையைக் கொண்டாட சென்னை அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இந்த நிலையில் தொட்டில் கட்டப்பட்ட சேலையில் கழுத்து இறுக்கி அஸ்வதி இறந்து கிடந்தார். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

06:42:01 on 18 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”சோறு போடுகிற விவசாயம் ஏற்கனவே நலிவடைந்துள்ளது. இந்நிலையில், அதனை மேலும் அழிக்கும் இத்தகைய வேலைகளைச் செய்வது ஏன்?” என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிற இந்தப் பணியை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

06:27:01 on 18 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

எப் & ஓ சந்தை, பல நடைமுறை சிறப்புக் குணங்களும், அதிக ரிஸ்க்கும் கொண்டது. தாங்கும் சக்தி மற்றும் ரிஸ்க் குறித்த முழு புரிதலுக்குப் பின்னரே டிரேடர்கள் வியாபாரத்தில் இறங்கவேண்டும். ஒருபோதும் ரிஸ்க் குறித்த முழுப்புரிதல் இல்லாமல் வியாபாரம் செய்யக்கூடாது. டிரேடிங் முடிவுகள் முழுக்க முழுக்க உங்களுடையதே.

06:12:01 on 18 May

மேலும் வாசிக்க விகடன்

பானி புயலால் வீடு, வாசல்களை இழந்து நிற்கதியாக நிற்பவர்களில் ரகுதெய்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலியான கிரோட் ஜேனா(58) என்பவரும் ஒருவர். வசித்துவந்த வீடு மண்மேடாகிப்போன நிலையில் கழிப்பறையில் சுமார் 15 நாட்களாக குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.

05:55:01 on 18 May

மேலும் வாசிக்க மாலை மலர்

சீருடை, லஞ்ச் பேக் போன்ற பொருட்களுக்கு பெற்றோர்களிடம் பள்ளி நிர்வாகம் பணம் கேட்பது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இது போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக்கூடாது என்றும், பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் தவிர பிற பொருட்களை வாங்கும்படி நிர்ப்பந்திக்க கூடாது என அறிவுறுத்தியது.

05:42:01 on 18 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

புதுச்சேரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஏனாம் பிராந்தியத்தில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

05:27:02 on 18 May

மேலும் வாசிக்க தினகரன்

கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள குகைக்கோயிலுக்கு நடந்து சென்றார். பின்னர் அங்கு தியானம் மேற்கொண்டார். பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேதார்நாத்தில் இன்று தங்கும் அவர் நாளை அங்கிருந்து பத்ரிநாத் புறப்பட்டுச் செல்கிறார்.

05:12:01 on 18 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நாகர்கோவில் பெரிய ராசிங்கன் தெருவைச் சோ்ந்த சுப்ரமணியன் (52) எனபவர் மொத்த வியாபாரம் தொழில் செய்து வருகிறார். ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு தொழிலில் பெரிய அளவு லாபம் வராததால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனை சரி கட்ட முடியாமல் திணறி வந்த சுப்ரமணியன் அதிக வட்டிக்கு பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

04:57:02 on 18 May

மேலும் வாசிக்க நக்கீரன்

சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வின் முன்னாள் அதிகாரி ஒருவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25,000 அமெரிக்க டாலர்கள் பெற்றுக்கொண்டு அமெரிக்க அரசின் ரகசியத் தகவல்களை அவர் சீனாவுக்கு விற்றதற்காக அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

04:42:01 on 18 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோட்சே குறித்து பேசியது வரலாற்று ரீதியாக உண்மைதான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். மேலும் அவர், கமல்ஹாசனின் கருத்தை வைத்து சுயலாபதிற்காக அரசியல் செய்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.

04:27:01 on 18 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரஜினியின் 167வது படமாக உருவாகவிருக்கிறது தர்பார். அண்மையில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

04:12:02 on 18 May

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

தன்னைக் கொல்ல சதி நடப்பதாக டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். இது குறித்து அவர், ”இந்திராவைக் கொன்றதை போல் என்னையும் பாரதிய ஜனதா கட்சி, பாதுகாவலர்களால் கொல்ல நேரிடும். எனது பாதுகாவலர்கள் மோடிக்குத்தான் ஓட்டளித்துள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

03:55:02 on 18 May

மேலும் வாசிக்க தினமலர்

மஹிமா சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். அதை தொடர்ந்து குற்றம்-23 படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. தற்போது இவர் விக்ரம் பிரபு நடித்திருக்கும் அசுரகுரு படத்தில் முக்கியமான ரோல் ஒன்றில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி தைரியமாக புகைப்பிடிக்கும் காட்சியில்கூட நடித்துள்ளார்,

03:42:02 on 18 May

மேலும் வாசிக்க சினி உலகம்

கமல்ஹாசனின் ப்ரமோ வீடீயோ வெளியானது முதலே பிக் பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர் யார் என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இந்நிலையில், பிக் பாஸ் 3வது சீசனில் ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளர் `ஓ.கே. ஓ.கே.' படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்த காமெடி நடிகை `ஜாங்கிரி’ மதுமிதா.

03:27:01 on 18 May

மேலும் வாசிக்க விகடன்

பின்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஸ்னொக் ஹர்கிரன்ஜே என்பவர் மெக்காவைப் பற்றியும், அங்கு வாழும் மக்களைப் பற்றியும் கடந்த 1889ஆம் ஆண்டில் புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்திற்காக மெக்காவை முதன்முதலில் அப்துல் கபார் என்பவர் புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படம் இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

03:12:02 on 18 May

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ திடீரென்று மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவுக்கு மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர், 2005-2008 கால கட்டங்களில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்தார்.

02:45:10 on 18 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 724 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் காங்கிரசில் உள்ள 54 பெண் வேட்பாளர்களில் 14 பேரும், பா.ஜ.க.வில் 53 பேரில் 18 பேரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் 23 வேட்பாளர்களில் 6 பேரும், தங்கள் மீது கிரிமினல் வழக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

02:40:43 on 18 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரத்தில் கோவில் நிர்வாகியான முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் புகாரின் பேரில் 3 பிரிவுகளில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.

02:18:22 on 18 May

மேலும் வாசிக்க தினகரன்

பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மீதான தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் தேர்தல் ஆணையர் லவாசா கூறியுள்ளார். இதனால் தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு வெடித்துள்ளது.

02:08:42 on 18 May

மேலும் வாசிக்க தினமணி

கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து சமாளிக்க மண்பானையில் இருக்கும் குளிர்ந்த நீரைப் பலரும் பருகி வருகின்றனர். இதற்காக மண்பானையை மக்கள் நாடுவதால் தற்போது வெயிலைப் போல மண்பானை விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

01:55:01 on 18 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

நான்கு தொகுதிகளிலுமுள்ள பூத்துகளில் உட்காரவைக்கப்படும் பிரதான கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் பட்டியலையும் எடுத்துள்ள அ.தி.மு.க. தலைமை, அவர்களை வளைப்பதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளது. இதற்கான அசைன்மெண்டுகளை மூத்த அமைச்சர்கள் கண்காணித்து வருகின்றனர்.

01:40:01 on 18 May

மேலும் வாசிக்க நக்கீரன்

மயிலாடுதுறை அருகே காளகஸ்திபுரம், முடிகண்டநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதித்து வருகிறது. இந்நிலையில் கெயில் நிறுவனத்துக்கு எதிராகப் போராடிய நிலம் நீர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரணியன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், விவசாயிகள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

01:21:09 on 18 May

மேலும் வாசிக்க தினகரன்

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனமான ஐசிசி, கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அதிகாரபூர்வப் பாடலை வெளியிட்டுள்ளது. லோரீன் என்கிற கலைஞர் மற்றும் பிரிட்டிஷ் பேண்ட் ருடிமென்டல் ஆகியோர் இணைந்து உலகக் கோப்பைப் பாடலை கம்போஸ் செய்துள்ளனர்.

01:11:07 on 18 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

திருச்சியை அடுத்த திருவெறும்பூரில், சர்க்கார் பாளையம் - கல்லணை சாலை அருகே காவிரி ஆற்றுப்படுகை உள்ளது. இந்தப் பகுதியில் நீர் நாய்கள் போன்ற உருவமுடைய மூன்று மிருகங்கள் சாலையைக் கடக்க முயல்வதும், பின்னர் திரும்பிச் செல்வதும் போன்ற வீடியோ வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது.

01:06:00 on 18 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் கல்வெட்டு விவகாரத்தில் முன்னாள் காவலர் வேல்முருகன் மீது ரவீந்திரநாத் அளித்த புகாரின் பேரில் மூன்று பிரிவுகளில் சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

01:02:41 on 18 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பச்சை நிறத்தை உடைய மரகதக் கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கத்தையே மக்கள் ‘மரகத லிங்கம்’ என அழைக்கின்றனர். மரகத தனிமம் ’கல்’ என்று அழைக்கப்பட்டாலும், அது கண்ணாடி போன்றது, எளிதில் உடையக் கூடியது. ஒளியை உமிழும் தன்மையும் இதற்கு உண்டு. நவரத்தினங்களில் ஒன்றான மரகதம் வைரத்திற்கு அடுத்த அதிக விலை கொண்ட ரத்தினம் ஆகும்.

12:45:07 on 18 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி என பெயர் பொறித்த கல்வெட்டு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் தர மறுத்துள்ளார்.

12:34:08 on 18 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

அடங்க மறு படத்திற்கு பிறகு ஜெயம் ரவி, நடித்து வரும் கோமாளி படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி வருகிறார். காமெடி படமான இதில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

12:25:40 on 18 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

இன்று சர்வதேச அருங்காட்சியக தினம். மனிதர்களின் வரலாறு, கண்டுபிடிப்பு, கலாச்சாரம், மரபுகள், பண்பாடு போன்றவற்றை பாதுக்காத்து எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அமைப்பதற்கு உதவியாக இருப்பது அருங்காட்சியங்கள் மட்டும் தான்.

12:20:22 on 18 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சென்னை அயனாவரம் ரயில்வே காலனியில் தொட்டிலில் விளையாடிய 11 வயது சிறுமி உயிரிழந்துள்ளது. விளையாடியபோது தொட்டில் கயிறு கழுத்தை இறுக்கியதில் அசுவதி என்ற சிறுமி உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:16:04 on 18 May

மேலும் வாசிக்க தினகரன்

’கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’தேர்தல் முடிவு வெளிவராத நிலையில், எம்.பி. என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது’ எனவும் கூறியுள்ளார்.

12:11:42 on 18 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சி மாவட்டத்தில் திருமண நாளன்று மணமகளின் தந்தை இறந்துள்ளார். இந்நிலையில், மணமகளின் அண்ணன் தனது தந்தை இறந்ததை சகோதரியிடம் சொல்லாமல் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். பின்னர் அந்த செய்தியை மற்றவர்கள் சொல்லவே மணமகளுக்குத் தெரியவந்தது. அண்ணனின் இந்த செயல் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11:58:54 on 18 May

மேலும் வாசிக்க மாலை மலர்

அமெரிக்காவின் தென் மேற்கு பகுதியான அரிசேனாவைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் விமானம் ஓட்டுகிறார். அந்தப் பெண்ணுக்கு இரண்டு கைகளும் இல்லை. தன்னுடைய கால்களால் விமானத்தை ஓட்டி உலக பெண்களுக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

11:35:39 on 18 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மேலும் வாசிக்க