View in the JustOut app
X

சென்னை தரமணி கட்டபொம்மன் தெருவில் தனக்கு சொந்தமான இடத்தில் லிங்கதுரை என்பவர் கடை ஒன்றை கட்டி வருகிறார். இந்த நிலையில் இரவு நேரத்தில் கடையின் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு தகரம், கம்பி, சிமெண்ட், ஜல்லி என கண்ணில் படும் பொருட்களை எல்லாம் வடமாநில இளைஞர்கள் மூன்று பேர் திருடிச் சென்றுள்ளனர்.

09:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தோனிக்கு ஓவியம் வரைவது மிகவும் பிடிக்கும். விளையாட்டு நேரத்தை தவிர மீத நேரங்களை ஓவியம் வரைய செலவழிக்கிறார். சிறுவயதில் இருந்தே தோனிக்கு பிடித்த விளையாட்டு கால்பந்து. கூடவே பேட்மிண்டன் என்றால் அபார விருப்பம். பல ஆண்டு காலம் கால்பந்து அணியில் கோல் கீப்பராக காலம் கழித்தவர் தோனி.

08:57:01 on 22 Sep

மேலும் வாசிக்க தினமணி

வரும் 26, 27 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் தினமும் 48 ஆயிரம் கோடி வரை காசோலை பரிவர்த்தனை பாதிக்கும். இந்த போராட்டத்தில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

08:27:02 on 22 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

நெய்வேலி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30). இவரது மனைவி ஜெயமேரி, கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி மணிகண்டன் கழுத்தில் நாட்டு வெடிகளை கட்டிக்கொண்டு, கையில் பெட்ரோல் கேனுடன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.

07:57:01 on 22 Sep

மேலும் வாசிக்க விகடன்

சென்னை வடபழனியில் வசித்து வரும் குறும்பட நடிகை ஒருவர், தனக்கு திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பக்ரூதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது என்றும், இதனை வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பக்ரூதீன் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

07:27:01 on 22 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரான சத்தியமூர்த்தி என்பவரது வீட்டில் 150 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய்விட்டதாக தெரிவிக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதும், எதிர்வீட்டில் வசிக்கும் முதிய தம்பதியை சிக்க வைக்கும் நோக்கில் புகார் அளிக்கப்பட்டிருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

06:57:01 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள பிரேம்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர், இரண்டு நண்பர்களுடன் அருகிலுள்ள கப்பலால் தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளார். முன்னதாக மூன்று பேரும் தடுப்பணையில் இருந்து பாய்ந்து வரும் நீரில் நின்று டிக் டாக் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

06:27:01 on 22 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த கனடா நாட்டை சேர்ந்த சாரா ஸ்டீபனி லாண்ட்ரி என்ற பெண் வெளியிட்டுள்ள வீடியோவில், நித்தியானந்தா ஆசிரமத்தில், தான் தங்கியிருந்த அனைத்து நாட்களும் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன், ஆனால் அவை அனைத்தும் பொய் எனப் பிறகு தான் தெரிந்துகொண்டேன் என தெரிவித்தார்.

05:57:01 on 22 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கங்கை நகர நாகரிகம் போன்று இரண்டாம் நிலை நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்று கருதப்பட்ட நிலையில் கீழடி ஆய்வுகள், தென் இந்தியாவின் வரலாற்றை, முக்கியமாக தமிழர்களின் வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறது என்று கூறுகிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள்.

05:27:01 on 22 Sep

மேலும் வாசிக்க தினமணி

சென்னையில் பூவுலகின் நண்பர்கள் குழுவுடன் இணைந்து 'Global Strike for future', 'Fridays for future', 'Vettiver collective', 'Reap benefit' ஆகியோர் நடத்திய இந்த போராடத்தில் சென்னையில் இருக்கும் பெரும்பாலான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.

04:57:02 on 22 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எஸ்.பி.ஐ. காலனி விரிவு 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். தொழில் அதிபரான இவரது வீட்டில் 120 சவரன் நகைகள் கொள்ளையடித்த சம்பவத்தில் வடமாநில பவாரியா கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேர் மும்பையில் சிக்கினர். அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

04:25:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

துரித உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். துரித உணவுகள் சுவையாக இருக்க வேண்டுமென்று சுவையூக்கிகள் சேர்க்கப்படுகிறது. இவை நாவின் சுவை மொட்டுகளை செயல் இழக்க செய்வதோடு மூளை செயல்பாடுகளையும் சீர்குலைக்கிறது. துரித உணவுகளை தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்.

03:57:02 on 22 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

”கீழடி அகழாய்வு கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கு கீழடி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும். அடுத்த கட்ட ஆய்வுகளை உலக பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதில் 11 தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளோம்.” என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கூறியுள்ளார்.

03:27:01 on 22 Sep

மேலும் வாசிக்க தினமலர்

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். மேலும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும், ஆள்பவர்களுக்கும் இடையில் நடக்கும் ஊழல் நாடகமே இந்த இடைத்தேர்தல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

02:57:01 on 22 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பிரதமர் மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகர் சென்றடைந்தார். விமானத்தில் இருந்து பிரதமர் கீழே இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி ஒருவர் பூங்கொத்துகளை வழங்கினார். அதிலிருந்த சில பூக்கள் சிவப்பு கம்பளத்தில் விழுந்தன. உடனடியாக பிரதமர் மோடி கீழே குனிந்து அந்த பூக்களை எடுத்தார்.

02:25:01 on 22 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆந்திர கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்மேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற வாய்ப்புள்ளதால், 24ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

01:57:02 on 22 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழ்நாடு வலு தூக்கும் சங்கத்தில் ஏற்பட்ட பூசல் காரணமாக அந்த சங்கம் தற்போது இரண்டாக பிளவு பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கோவிந்தசாமி உள்பட 8 வீரர்களுக்கு கனடா நாட்டில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க விசா கிடைக்காமல் தடை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

01:27:01 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நீதிபதி தஹில் ரமாணியின் நீக்கத்திற்கான காரணம் குறித்து 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. அதில், 'நீதிபதி தஹில் ரமாணியை மாற்றுவதற்கு மூன்று காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. முதலில், நீதிமன்றத்தில் தஹில் ரமாணி குறைவான நேரம் வேலை பார்த்தது ஒரு காரணமாக கருதப்படுகிறது.

12:57:01 on 22 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கீரைகள் என்றாலே சத்து டானிக் என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும். அதிலும் கீரைகளின் ராணி என்று ஒரு கீரையை அழைக்கிறார்கள். அது தான் ஆங்கிலத்தில் Kale என்றும் தமிழில் பரட்டைக் கீரை என்றும் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு தலை விரிக் கோலத்துடன் இருப்பதால் இந்த பரட்டை என்ற திருநாமத்தை பெற்றிருக்கலாம்.

12:25:01 on 22 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

”நாங்கள் மிகவும் மாநிறத்தில் இருப்பதாகவோ அல்லது போதிய அளவு மாநிறத்தில் இல்லை என்றோ எங்களிடம் சொன்னார்கள். ஆனால் நமது கலாசாரத்தை மீண்டும் கைப்பற்றி, அதைக் கொண்டு விளையாட இப்போது நமக்கு இன்ஸ்டாகிராம் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது.” என்று 'பிரவுன்கேர்ள்கேங்' இயக்கத்தை உருவாக்கிய சஞ்சனா நாகேஷ் கூறுகிறார்.

11:57:02 on 22 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த ஏழு ஆண்டுகளில் பாகிஸ்தான் ராணுவம் 7 ஆயிரம் முறை எல்லைதாண்டி அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் அறியும் சட்டத்தின்படி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் இந்த விவரத்தை தெரிவித்துள்ளது.

11:27:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினகரன்

'நண்பர் விஜய் என்ன சொன்னாலும் அவர்களுக்கு பிடிக்காது. அவர் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டு போயிறாரு? இவர்கள் பாவம் புலம்புகின்றனர். விஜய் எதுவும் தப்பாக சொன்னதாக எனக்கு தோன்றவில்லை. கண்டிப்பாக நான் விஜய்யின் கருத்தை ஆதரிக்கிறேன்” என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதயநிதி தெரிவித்தார்.

10:57:01 on 22 Sep

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நிக்கோபார் தீவு அருகே மியான்மர் நாட்டில் இருந்து வந்த கப்பலில் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான கெட்டமைன் போதைப் பொருள், இந்திய கடலோர காவல் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

10:27:01 on 22 Sep

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

”காஷ்மீரின் நிலைமை வரும் நாள்களில் இயல்பாக இருக்கும். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சேமிப்பு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இருக்கும்” என்று பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி கூறினார்.

09:55:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினமணி

இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இன்று அதிகாலை 2.53 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4ஆக பதிவாகி உள்ளது.
மலுகு தெங்கரா பராத் மாவட்டத்தில் இருந்து 165 கி.மீ. தொலைவில் கடற்படுகைக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

09:25:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிகளிலும் அங்கம் வகிக்கும் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு நாங்குநேரி தொகுதியை ஒதுக்கிவிட்டு விக்கிரவாண்டியில் மட்டும் கவனம் செலுத்த அதிமுக, திமுக முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

08:57:01 on 22 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியா-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 2வது 20 ஓவர் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது 20ஒவர் போட்டி பெங்களூருவில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியிலும் இந்தியா வென்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

08:27:02 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.52 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.56 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:09:26 on 22 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்படும் இந்தியப் படத்துக்கான தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்ப் படங்களான சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு, வட சென்னை ஆகிய மூன்று படங்கள் இப்போட்டியில் உள்ளன.

06:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

இயக்குநர் செல்வா அய்யாவு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் விஷ்ணு விஷாலின் ஜோடியாக நடிக்கிவிருக்கிறார் பிரியா பவாணி சங்கர். இந்த நாயகன் - நாயகி கூட்டணி இணைந்து பணிபுரியும் முதல் படமாக இது அமைந்துள்ளது. 'மான்ஸ்டர்' வெற்றிக்குப் பிறகு பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

05:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நாங்குநேரி தொகுதியை பாஜக குறிவைத்திருக்கிறது. தென் மாவட்டங்களில் பாஜக வளர்ச்சி பெற்றிருப்பதாக நினைக்கும் பாஜக, அதிமுக கூட்டணியில் தாங்களே நாங்குநேரியில் நின்று மத்திய, மாநில ஆளுங்கட்சி பலத்துடன் வெற்றிபெற்றுவிடலாம் எனத் திட்டமிடுகிறார்கள்.

04:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வாராக் கடன்களால் நஷ்ட்டத்தை சந்தித்து வரும் வங்கிகளில், முதலீடு செய்வதால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. இது பாலிசி தாரர்களின் பணம் என்பதைக் கூட உணராமல், தவறான பொருளாதார கொள்கையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இதை செய்துள்ளது மோடி அரசு.

03:55:02 on 22 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

அதிக சுவை மிக்க ஆப்பிள் என்று கூறப்படும் இமாச்சல பிரதேச ஆப்பிள் பழங்களின் சீசன் தற்போது துவங்கியுள்ளதால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலையும் குறைந்துள்ளதால், ஆப்பிள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

02:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பேக்கிங் சோடா வீட்டை சுத்தம் செய்ய உதவும் நண்பன் எனலாம். அந்தவகையில் சுவர் கறைகளை அகற்ற பேக்கிங் சோடாவைத் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கரைக்கவும். பல் துலக்கும் பிரெஷ் பயன்படுத்தி பேக்கிங் சோடா பேஸ்ட் தொட்டு கறை உள்ள பகுதிகளைத் தேய்த்தால் கறைகள் முற்றிலுமாக அகலும்.

01:55:01 on 22 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரிசனுடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ”பிற எந்த நாடுகளை விடவும் வேகமாக ராணுவ பலத்தை சீனா பன்மடங்கு அதிகரித்து வருகிறது. எனவே, வெளிப்படையாகவே சீனா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.” என்றார்.

12:55:02 on 22 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

காவல்நிலையத்தில் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்த, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கொலை செய்து புதைக்கப்பட்ட நிலையில் இன்று சிவகங்கை மாவட்டம் வடகீழ்குடி ஆற்றுப்படுகையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

11:55:02 on 21 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ என்ற பெயரில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 4ஆம் தேதி நள்ளிரவு வரை சலுகை திட்டத்தை அறிவித்து உள்ளது.

10:57:01 on 21 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 52 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், ஆசிய சாம்பியனான 23 வயது இந்திய வீரர் அமித் பங்கால் உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஷகோபிதின் ஸோய்ரோவை எதிர்கொண்டார். இதில், ஸோய்ரோவ் இந்திய வீரர் அமித் பங்காலை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார்.

09:57:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினமணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை பெங்களூருவில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் பெங்களூருக்கு விமானம் மூலம் சென்றனர். அப்போது, விமானத்தில் ஷிகர் தவான் தனக்குத்தானே பேசும் வீடியோ ஒன்றை ரோஹித் சர்மா எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

08:55:01 on 21 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதுச்சேரி ரெயின்போ நகரில் நடந்து சென்ற வடமாநில பெண்ணிடம் ஒருவர் அத்துமீறலில் ஈடுபட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மொட்டத்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரிஷி என்பவர், குடிபோதையில் நண்பணிடம் பந்தயம் கட்டி இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.

08:27:02 on 21 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஜூலி சென்றுள்ளார். அப்போது ஜூலி பேச ஆரம்பிக்கும் போது, அங்கிருந்த ரசிகர்கள் ஓவியா வாழ்க, ஓவியா வாழ்க என்று கோஷம் போட்டுள்ளனர். அதற்கு நான் ஒன்றும் உங்களுக்கு சோறு போடவில்லை நீங்களும் எனக்கு சோறு போடவில்லை என்று கூறியபடி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார்.

07:55:02 on 21 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடையை விதித்திருக்கிறது அமெரிக்கா. இது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிஃப், “ஈரான் மீது இவ்வாறு தொடர்ந்து பொருளாதாரத் தடையை விதிப்பது எதனை உணர்த்துகிறது என்றால், ஈரானை அவர்கள் காலுக்குக் கீழே பணிய வைக்கும் முயற்சியில் தோற்றுவிட்டார்கள் என்பதை விளக்குகிறது” என்றார்.

07:27:01 on 21 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்திலுள்ள சனாவால் கிராமத்தில் பட்டேரி பாரா என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மின்சார வசதியே இல்லை. இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இருளில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மின்சார வசதியே இல்லாத பகுதிக்கு அரசு மின்சார கட்டண ரசீது வழங்கியுள்ளது.

06:57:02 on 21 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

`ஹெளடி மோடி!` என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியில், 50,000 பேர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவுக்கு வெளியே மோடியின் ஆதரவாளர்கள் கூடும் ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி இது. இந்த நிகழ்வு மோடிக்கு ஆதரவான ஒரு நிகழ்வாகப் பார்க்கப்பட்டாலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையே வளர்ந்து வரும் உறவின் சாட்சியாகவும் இது அமையும்.

06:27:01 on 21 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நடிகை ஸ்ரீரெட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதில் ஸ்ரீரெட்டி குட்டை உடை அணிந்து இருக்கிறார். கழுத்தில் செயின், மூக்கில் மூக்குத்தியும் அணிந்து இருக்கிறார். கையில் சிகார் சுருட்டு வைத்துக்கொண்டு ஆபாசமாக போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

05:57:01 on 21 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

கிறிஸ்துவ ஜெபக்கூட்டங்களில் ஆவி வந்து ஆடுவதற்கு சிலருக்கு பயிற்சி தந்து ஒத்திகை பார்க்கும் வீடியோ வைரலாக பரவுகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனாலும், ஜெபக்கூட்டத்தில் ஆவிகள் விரட்டப்படுவதாக கூறப்படுவதே ஒரு ‛நாடகம்' என்பது தெளிவாகி உள்ளது.

05:27:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினமலர்

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத் தமிழன் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ராஷிகன்னா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது

05:25:01 on 21 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சாரதி இயக்கத்தில் ஷாம், ஆத்மிகா ஆகியோர் நடித்துள்ள காவியன் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஷ்யாம் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

04:55:01 on 21 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விக்கிரவாண்டி தொகுதியில் தனது அண்ணன் ராதாகிருஷ்ணனை நிறுத்த விரும்பினார் அமைச்சர் சிவி சண்முகம். ஆனால் அண்மையில் தனது மகனுக்கு ஏற்பட்ட விபத்தை அடுத்து மகனுக்கான சிகிச்சைகளில் தீவிரமாக இருக்கும் ராதாகிருஷ்ணன், இந்த நிலைமையில் தன்னால் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டார்.

04:27:01 on 21 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் எனவும் தெரிவித்தார். அதேபோல் புதுவை காமராஜர் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் எனக் கூறினார்.

03:57:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்.21ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ளன. அக்.6ஆம் தேதி நடைபெறவிருந்த தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் நாளை முதல் விருப்பமனு பெறப்படவுள்ளது.

03:27:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

ராமநாதபுரம் மாவட்ட மதிமுக இளைஞரணி அமைப்பாளர் அரு.சுப்ரமணியன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதைத் தான் நானும் எதிர்பார்த்தேன் என்கிற வகையில், அரு.சுப்பிரமணியன் ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அதில், கடனாளி ஆக்காமல் கட்சியை விட்டு என்னை நீக்கியதற்கு வைகோவுக்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

02:57:01 on 21 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடி மாவட்டத்துக்கு 'முத்து மாவட்டம்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து துறை சார்பில் நடைபெறும் திட்டப்பணிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் என்னென்ன திட்டங்கள் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

02:27:02 on 21 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

டெல்லியில் தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விக்கிரவாண்டி - நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேர்தல் நாள்: அக்டோபர் 21 ; வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 24 நடைபெறும் என அறிவித்தார்.

02:08:32 on 21 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

பெண்களுடன் பாலியல் ரீதியில் பேசியது, உடலை மசாஜ் செய்ய சொன்னது உள்ளிட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உத்தரப் பிரதேச மாநில பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுவாமி சின்மயானந்த் ஒப்புக் கொண்டுள்ளார். புகார் கூறிய பெண்ணுக்கு அவரது தொலைபேசியில் இருந்து 200 முறை அழைத்து பாலியல் ரீதியில் பேசியுள்ளார்.

01:57:02 on 21 Sep

மேலும் வாசிக்க தினமணி

விருதுநகர் மாவட்டம் பாலவநத்தம் நடுப்பட்டி தெருவை சேர்ந்தவர் சித்ரா. இவரிடம் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நகையை பாலீஸ் செய்து தருவதாகக் கூறி தங்க நகைக்குப் பதிலாக கவரிங் நகையை கொடுத்துள்ளார். அந்தப் பெண் உடனடியாக சத்தம் போட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த ஆட்கள் அந்த வடமாநில நபரைப் பிடித்து தாக்கினர்.

01:27:01 on 21 Sep

மேலும் வாசிக்க விகடன்

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குளியை சேர்ந்த திவான் முஜிபூர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக துபாயில் பணியாற்றி வந்தார். 3 மாதங்களுக்கு முன் முஜிபூர் சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். இந்நிலையில், அவரது வீட்டில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

12:57:01 on 21 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய், தாடியுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் ‘தளபதி 64’ படத்தின் கெட்டப் என வைரலானது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைலாகி வருகிறது.

12:27:02 on 21 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து 3,603-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

11:57:01 on 21 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கோவை மாவட்டம் தடாகத்தில் கே.என்.என் என்ற செங்கல்சூளையில் பணிபுரியும் தொழிலாளி சின்னக்காளை என்பவர் கஞ்சா செடியை செங்கல் சூளையின் மறைவான பகுதியில் வளர்த்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சின்னகாளை என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

11:27:01 on 21 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

‘இந்தியை எதிர்க்காமல் விட மாட்டோம். சில ஊடகங்கள் திட்டமிட்டு திமுக ஏதோ பயந்து ஒதுங்கிவிட்ட மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. திமுக பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்சாது’ என்று பேசியிருக்கிறார் ஸ்டாலின். அப்படியென்றால் இந்த விவகாரத்தில் பயந்து ஒதுங்கியது மோடியா என்ற கேள்விகளும் முன் வைக்கப்படுகின்றன.

10:57:02 on 21 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோவை சூலூர் பகுதியில் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் இருவரும் மாயமாகினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பப்ஜி விளையடிய மாணவர்களை பெற்றோர் கண்டித்ததால், இருவரும் பள்ளிக்குள் செல்லாமல், வெளியே சென்று விட்டதும் தெரிய வந்துள்ளது.

10:55:02 on 21 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமாணியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதை அடுத்து, மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:27:02 on 21 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், பெரம்பலுார், அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேலுார், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில், சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

10:00:03 on 21 Sep

மேலும் வாசிக்க தினமலர்

“பங்குச்சந்தையை உயர்த்துவதற்கு, பிரதமர் மோடியின் மோடி நலமா நிகழ்ச்சியையொட்டி இப்படியெல்லாம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிடுவது வியப்பு அளிக்கிறது. ஹூஸ்டன் நிகழ்ச்சிக்காக ரூ.1.4 லட்சம் கோடி ... இதுதான் இதுவரை உலகிலேயே மிகவும் ஆடம்பரமான நிகழ்ச்சி.” என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். உள்ளார்.

09:25:02 on 21 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

பெரு நிறுவனங்களுக்கு அதிரடியாக சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இது நாட்டில் முதலீடுகளையும், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் 4-வது நடவடிக்கையாக அமைந்துள்ளது.

08:55:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. தற்போது இதன் நீர்மட்டம் - 96.06 அடி, நீர் இருப்பு 25.7 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 3650 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

08:27:01 on 21 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.24 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.33 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:01 on 21 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை எம்.எம்.டி.ஏ வில் செயல்பட்டுவந்த ட்ரான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை அணுகியவர்களிடம் இருந்து தலைக்கு 7500 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

06:55:01 on 21 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கூகுள் பே தளத்தின் பயனாளர்கள் கடந்த 12 மாதங்களில் பயனாளர்களின் எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்துள்ளதை உறுதி செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகமான இரண்டே ஆண்டுகளில் 67 மில்லியன் பயனாளர்களுடன் டிஜிட்டல் பேமண்ட் தளங்களுள் முதலிடத்தைப் பெற்றுள்ளது கூகுள் பே.

05:55:01 on 21 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சாம்சங் நிறுவனம், தனது A வரிசை போன்களை மிகப் பெரிய அளவுக்கு இந்தியாவில் சந்தைப்படுத்த முயன்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மாத இறுதிக்குள் 64 மெகா பிக்சல் கேமரா கொண்ட சாம்சங் கேலக்ஸி A70s ஸ்மார்ட் போனை, அந்நிறுவனம் வெளியிடும் என்று தெரிகிறது.

04:55:01 on 21 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஹிந்தி எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு மக்களை திசை திருப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேடி வருவதாக குற்றம்சாட்டினார்.

03:55:01 on 21 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மன இறுக்கம், மன அழுத்தம் இருந்தால் இதயம் சுருங்கி விரிவடைவதில் மாற்றம் ஏற்படும். அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும். சினமும் ஒரு காரணம். ஆம் பொதுவாக கோபப்படுபவர்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பதைப் பார்க்கிறோம். கோபம் அடையும் பொழுது மன அலைச்சுழல் விநாடிக்கு 25 முதல் 30 வரை அதிகரிக்கும்.

02:55:02 on 21 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

விவோ நிறுவனம் அதன் V17 ப்ரோ ஸ்மார்ட் போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய போனில் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா உள்ளது. அதில் 32 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமராவும், 8 மெகா பிக்சல் கொண்ட வைட் ஆங்கில் கேமராவும் அடங்கும். V15 ப்ரோ-வின் அடுத்த வெர்ஷனாக வந்துள்ள V17 ப்ரோவில் 4 பின்புற கேமரா உள்ளது.

01:55:01 on 21 Sep

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கடந்த 66 மில்லியன் ஆண்டுகளிலேயே பூமியின் மிகவும் மோசமான நாள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் திரட்டியுள்ளார்கள். மெக்ஸிகோ வளைகுடாவிலிருந்து குடைந்து எடுக்கப்பட்ட 130 மீட்டர் அளவுள்ள பாறையின் வாயிலாக அந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

12:55:02 on 21 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சவுதி அரேபியாவில் இந்தாண்டில் மட்டும் சுமார் 134 பேருக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 6 சிறுவர்களும் அடக்கம். மேற்கொண்டு 24 பேருக்கு கூடிய விரைவில் மரணதண்டனை நிறைவேற்றப்படும் என ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

11:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க விகடன்

உலகம் முழுவதும் போலிச் செய்திகளைப் பதிவிட்ட ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. எகிப்து, ஹாங்காங், சீனா, ஸ்பெயின், இக்வேடார், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளில் போலிச் செய்திகள் பரப்பிய கணக்குகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தமிழகத்தில் கடந்த புதன்கிழமை பரவலாக மழை வெளுத்து வாங்கியது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே போல இந்த வாரம் முழுக்க தமிழகத்தில் மழை வாய்ப்பு அமோகமாக இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

09:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினமணி

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ, கோவை ரகு மரணத்திற்கு அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப்போக்கே காரணம் என கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.

08:55:02 on 20 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

கொள்ளையர்கள் எல்லாம் தற்போது வேற லெவலில் பணியாற்றி வருகிறார்கள் என்பதற்கு உதாரணமாக வேலூரில் திருடிய வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்ட திருடர்கள் காவல்துறையிடம் வசமாக சிக்கினர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தந்தை மகன் உட்பட 4 கொள்ளையர்களை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

08:27:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினமணி

சாமியார் நித்யானந்தா மீது சிலைக்கடத்தல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பாலவாடியில் உள்ள ஜலகண்டேசுவரர் ஆலயத்திற்கு சொந்தமான மூலவர் லிங்கத்தை நித்யானந்தா திருடிச் சென்றதாகவும் அதனை மீட்டுத்தரும்படி பாலவாடியைச் சேர்ந்த வேலுசாமி, சக்திவேல் ஆகியோர் புகார் செய்துள்ளனர்.

07:57:02 on 20 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மேற்கு வங்கத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் நுஸ்ரத் கான் மற்றும் மிமி சக்ரபர்த்தி ஆகியோர் வண்ணமிகு உடையில் ‘Ashey Maa Durga Shey’ என்ற பாடலுக்கு நளினத்துடன் நடனமாடியுள்ளனர். மேலும் அசுரனை வதம் செய்யும் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி நடமானமாடி பார்வையாளர்களை கட்டிப்போட்டுள்ளனர்.

07:27:01 on 20 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

“பத்தாயிரம் பேர் தான் உட்கார முடியும்னா, எதுக்கு இத்தனை பேருக்கு டிக்கெட் கொடுக்கணும்” என விஜய் ரசிகர்கள் போலீஸிடம் எகிற, ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களை கலைக்க தடியடி நடத்தியது போலீஸ். இதனால் காயமடைந்த பல ரசிகர்கள், மற்ற ரசிகர்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

06:57:01 on 20 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கிராமத்தில் வசிக்கும் கதிர் (சூர்யா) ஒர் ஆர்கானிக் விவசாயி. ஆனால், உண்மையில் அவர் ராணுவ உளவுப் பிரிவைச் சேர்ந்தவர். அவர் பிறகு, இந்தியப் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படையில் இணைகிறார். பிரதமருக்கு வரும் ஆபத்துகள், அதிலிருந்து அவரைக் காப்பாற்ற கதிர் செய்யும் சாகசங்கள்தான் மீதிப் படம்.

06:27:01 on 20 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

செம்பருத்தி எண்ணெய் தலை முடி உதிர்வுக்கு, பொடுகு தொல்லைக்கு, முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர, கூந்தல் அடர்த்தியாக வளர, கூந்தல் ஆரோக்கியத்திற்கு என்று பலவகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு செம்பருத்தி எண்ணெய் (hibiscus oil) நல்ல தீர்வினை வழங்குகிறது.

05:57:02 on 20 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

நடிகை பானுப்பிரியா அவரது தம்பி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் மீது சிறார் நீதி சட்டங்கள், அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, நடிகை பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமி, தன்னை பானுப்பிரியா கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்திருந்தார்.

05:27:02 on 20 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

”அவளுக்கும் எனக்கும் திருப்பூரில் பழக்கம் ஏற்பட்டது. சின்ன வாக்குவாதம், ஆத்திரத்தில் கொலை செய்து உடலை ரயில் தண்டவாளத்தில் வீசிவிட்டேன்” எனப் பெண்ணின் காதலன் கூறியதைக் கேட்டு திருச்சி சமயபுரம் போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள்.

05:00:14 on 20 Sep

மேலும் வாசிக்க விகடன்

மேட்டூர் அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 12,700 கன அடியில் இருந்து 8,700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் வெளியேற்றமும் குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி, அணையின் நீர் இருப்பு 93.470 டிஎம்சியாகவும் உள்ளது.

04:57:49 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பிக் பாஸ் வீட்டில் வெளியே அமர்ந்து மழையை ரசித்தவண்ணம் இருக்கிறார்கள் போட்டியாளர்கள். கவினும் லொஸ்லியாவும் ஒன்றாக இருக்க சாண்டி குடையை எடுத்து அவர்கள் முன்னர் வைக்கிறார். அதற்கு லாஸ்லியா சாண்டி உன்னை பற்றி ஒன்னு நினைச்சேன் அதை நீங்க உறுதி செஞ்சிட்டிங்க என சொல்லும் விறுவிறுப்பான ப்ரோமோ ஒன்று வந்து இருக்கிறது.

03:55:01 on 20 Sep

மேலும் வாசிக்க சினி உலகம்

அக்.1 முதல் உள்நாட்டில் தொழில் துவங்குபவர்களுக்கான கார்ப்பரேட் வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக டுவீட் செய்துள்ள பிரதமர் மோடி, கார்ப்பரேட் வரி குறைப்பு நடவடிக்கை வரலாற்று முக்கியத்துவமானது என குறிப்பிட்டுள்ளார்.

03:27:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினமலர்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு 89வது நாளுக்கான புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில், சாண்டியிடம் பேசும் லாஸ்லியா, கவின் உன் நண்பன் தானே அவன் வெற்றியை குறித்து உனக்கு அக்கறை இல்லையா? அவனுக்கு நீ ஏன் குறைவான மதிப்பெண் கொடுத்த என்று சண்டையிடுகிறார்.

03:25:01 on 20 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அதிகரித்துள்ளது. நிறுவன வரிக்குறைப்பு அறிவிப்பை அடுத்து சென்செக்ஸ் ஒரே நாளில் 2,260 புள்ளிகள் உயர்ந்து 38,354 புள்ளிகளை தொட்டு வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு உயர்ந்ததால் பங்கு வர்த்தகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

02:57:01 on 20 Sep

மேலும் வாசிக்க தினகரன்

உலக வரலாற்றையே மாற்றியமைக்கப் போகும் கீழடி அகழாய்வு பணிகளை விரிவுபடுத்துவதும், விரைவுபடுத்துவதும் மத்திய, மாநில அரசுகளின் முதன்மைக் கடமையாகியுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பார்வைக்கு வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

02:29:52 on 20 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

நியூஸிலாந்து அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடியது. இப்போட்டியில் இலங்கை வீரர் அகிலா தனஞ்செயா விதிகளுக்கு புறம்பாக பந்து வீசியது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அகிலா தன்ஞ்செயா பந்துவீச ஒரு வருடம் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

02:00:12 on 20 Sep

மேலும் வாசிக்க Behind Woods News

சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அப்பெண்ணை மிரட்டி வந்ததாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் சுவாமி சின்மயானந்த் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றத்தில் மாணவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்மயானந்த் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

01:30:19 on 20 Sep

மேலும் வாசிக்க தினமலர்

ஆஸ்திரேலியாவில் பல்வேறு வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், உலகிலேயே அதிக மக்களால் பேசப்படும் மொழிகளை பள்ளிப் பாடத் திட்டத்தில் 2வது மொழியாகச் சேர்த்து வருகின்றனர். தற்போது தமிழ் மொழியை, முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை பள்ளிகளில் பயிற்றுவிக்க நியூ சவுத் வேல்ஸ் மாகாணம் முடிவு செய்துள்ளது.

12:59:55 on 20 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாட்டிற்கு பொதுவான மொழி அவசியம் என்று நடிகர் ரஜினி காந்த் கூறுகிறாரே என்று கேட்டபோது, பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது இந்தி எதற்கு என்று அவர் பதிலடி கொடுத்தார்.

12:25:01 on 20 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

கொல்கத்தாவின் ஜாதவ்புர் பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய விஷ்வ பரிஷத் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை மாணவர்கள் கன்னத்தில் அறைந்து, இழுத்துச் சென்று உதைத்தனர். பலமணி நேரம் மாணவர்கள் அவரை வெளியேற விடாமல் வழிமறித்தும் நின்றனர்.

11:55:02 on 20 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷரீப்பிடம், “சவுதியில் நடந்த தாக்குதலுக்காக அமெரிக்காவோ, சவுதியோ உங்கள் மீது தாக்குதல் நடத்தினால் விளைவு என்னவாக இருக்கும்?” என சி.என்.என். நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “போர் மூளும். எங்கள் நாட்டை காப்பதற்கு நாங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்க மாட்டோம்” என பதில் அளித்தார்.

11:30:11 on 20 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

கடந்த ஓரிரு தினங்களில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அத்தனை பூத்களுக்கும் அதிமுகவில் தலா 20 ஆயிரம் ரூபாய் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக அதிமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள். இந்தத் தொகை என்பது பூத் அளவில் கூட்டங்கள் போடுவது, சுவர்களுக்கு வெள்ளையடிப்பது போன்ற ஆயத்தப் பணிகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கிறது.

11:00:16 on 20 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மேலும் வாசிக்க