11:15:52 on 24 Feb 2019,Sun
'முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவக்கி வைப்பது அவருக்கு அளிக்கும் உயரிய மரியாதை,' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
11:15:52 on 24 Feb
11:15:02 on 24 Feb 2019,Sun
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.' என தெரிவித்துள்ளார்.
11:15:02 on 24 Feb
10:55:02 on 24 Feb 2019,Sun
அயோத்தியாபட்டணம் அருகே மின்னாம்பள்ளியில் கார் விபத்தில் சிக்கினார் அதிமுக எம்.பி. காமராஜ். டயர் வெடித்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் காமராஜ் காயமின்றி தப்பினார்.
10:55:02 on 24 Feb
10:30:27 on 24 Feb 2019,Sun
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர்.
10:30:27 on 24 Feb
10:15:01 on 24 Feb 2019,Sun
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் பாதுகாப்பு படையினரால் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு AK-47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
10:15:01 on 24 Feb
09:55:02 on 24 Feb 2019,Sun
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 114ஆக உயர்ந்துள்ளது. ஜோர்காட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 36 பேர் பெண்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
09:55:02 on 24 Feb
09:35:02 on 24 Feb 2019,Sun
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டிலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
09:35:02 on 24 Feb
09:15:01 on 24 Feb 2019,Sun
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி வரும் 1ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
09:15:01 on 24 Feb
08:55:01 on 24 Feb 2019,Sun
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் அளித்தப் பேட்டியில், ‘தென்கொரியாவில் இருந்து படைகளை திரும்ப பெறும் திட்டம் இல்லை. எங்கள் பேச்சுவார்த்தைத் திட்டத்திலும் இந்த விவகாரம் இல்லை’ என்று திட்டவட்டமாக கூறினார்.
08:55:01 on 24 Feb
08:35:01 on 24 Feb 2019,Sun
பெங்களூருவில், சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வரும் விமானப்படை தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 300 கார்கள் எரிந்து நாசமாயின. கார்களில் இருந்த ஆவணங்களும் சாம்பலானது.
08:35:01 on 24 Feb
08:15:01 on 24 Feb 2019,Sun
சென்னை கடற்கரை – வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையான ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8:10 முதல் மதியம் 2:10 வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
08:15:01 on 24 Feb
07:55:01 on 24 Feb 2019,Sun
ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர் ஹமீத் ஃபயஸ் மற்றும் ஜே.கே.எல்.எஃப் தலைவர் யாசின் மலிக் உள்பட 200க்கும் மேற்பட்ட பிரிவினைவாத தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களை போலீஸார் சுற்றி வலைத்ததில் இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
07:55:01 on 24 Feb
07:44:21 on 24 Feb 2019,Sun
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ..74.08 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.32ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
07:44:21 on 24 Feb
07:26:01 on 24 Feb 2019,Sun
ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக வந்த மிரட்டலையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை அவசரகால சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
07:26:01 on 24 Feb
07:10:01 on 24 Feb 2019,Sun
'உலக கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டுமா? இல்லையா? என்பதில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடப்போம். இந்த விஷயத்தில் எங்கள் நிலை மிகத் தெளிவானது.' என இந்திய அணி கேப்டன் விராத் கோலி கூறியுள்ளார்.
07:10:01 on 24 Feb
06:55:01 on 24 Feb 2019,Sun
திருமணத்துக்கு பின்னர் கடந்த 15 வருடங்களாக திரைத்துறை பக்கம் திரும்பாமல் இருந்த நடிகை பிரியங்கா மீண்டும் தமிழ்ப் படமொன்றில் நடித்து ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். மஹத், யாஷிகா நடிப்பில் அறிமுக இயக்குநர்கள் மாக்வென் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படமொன்றில் நடிக்க பிரியங்கா ஒப்பந்தமாகியுள்ளார்.
06:55:01 on 24 Feb
06:40:02 on 24 Feb 2019,Sun
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ரகுல்பிரீத் சிங். சமீபத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த தேவ் படம் திரைக்கு வந்தது. இந்நிலையில், ஒப்பந்தமான 2 படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
06:40:02 on 24 Feb
06:25:02 on 24 Feb 2019,Sun
5ஜி தொலைத்தொடர்பு சேவை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாகப் பெருகும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது. மேலும், 5ஜி சேவை மக்களின் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
06:25:02 on 24 Feb
06:10:02 on 24 Feb 2019,Sun
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி (69) என்ற கலைஞர், கடந்த 40 ஆண்டு காலமாக பெண் வேடமிட்டு, மனம் தளராமல் பொய்க்கால் குதிரையாட்டம் ஆடி வருகிறார். இந்தக் கலையை இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என முனைப்புடன் வருமானத்தை எதிர்பார்க்காமல் ஆடி வருகிறார்.
06:10:02 on 24 Feb
05:55:02 on 24 Feb 2019,Sun
உடல் பருமனில் தொடங்கி மன அழுத்தம் வரை பெரும்பாலான மனிதர்களைப் பாதிக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது ஸ்கிப்பிங் பயிற்சி. இந்தப் பயிற்சியில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு.
05:55:02 on 24 Feb
05:40:01 on 24 Feb 2019,Sun
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், விரைவில் சென்னையில் 50 குளிர்சாத பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், அத்திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் தொடங்கிவைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
05:40:01 on 24 Feb
05:25:01 on 24 Feb 2019,Sun
விழுப்புரம் மாவட்டம் பாட்டனூரில் நடந்த பாமக சிறப்புக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டதால், சிலருக்கு வயிற்று எரிச்சல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
05:25:01 on 24 Feb
05:10:02 on 24 Feb 2019,Sun
அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.
05:10:02 on 24 Feb
04:55:01 on 24 Feb 2019,Sun
ராஜஸ்தான் மாநிலம் டோங்க் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ’காஷ்மீருக்காகத்தான் நாம் போராடுகிறோம். அம்மாநில மக்களுக்கு எதிராகப் போராடவில்லை. காஷ்மீர் மக்கள் இந்தியாவில் எங்கும் தாக்கப்படாமல் அவர்களைக் காக்க வேண்டியது நமது கடமை’ என்று கூறியுள்ளார்.
04:55:01 on 24 Feb
04:40:01 on 24 Feb 2019,Sun
குஜராத் மாநிலம் நர்மதா நதியின் கரையோரத்தில், சர்தார் சரோவர் அணை அருகே சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை உள்ளது. இந்த சிலைக்கு ‘ஒற்றுமைக்கான சிலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மார்ச் 4ஆம் தேதி முதல் சர்தார் வல்லபாய் பட்டேலின் ஒற்றுமை சிலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என இரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
04:40:01 on 24 Feb
04:26:01 on 24 Feb 2019,Sun
’தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூட்டணிகளைப் பொறுத்தவரை தேமுதிக தலைவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நினைக்கிறோம். தேமுதிக பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்குத்தான் வரும்’ என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
04:26:01 on 24 Feb
04:10:01 on 24 Feb 2019,Sun
தமிழகத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் புதிய திரைப்படத்தில், நடிகர் விக்ரம் பிரபு நடிக்கவுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் பணிபுரிந்த தமிழரசன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
04:10:01 on 24 Feb
03:56:01 on 24 Feb 2019,Sun
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளிடம் காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர், ‘சிறப்பு அந்தஸ்து வழங்காமல் பிரதமர் மோடி ஆந்திராவுக்குள் நுழைய உரிமை இல்லை’ என்று கூறியுள்ளார்.
03:56:01 on 24 Feb
03:40:01 on 24 Feb 2019,Sun
சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ’மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், தமிழகம் முழுவதும் ஆயிரம் டயாலிசிஸ் மையங்களை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
03:40:01 on 24 Feb
03:26:01 on 24 Feb 2019,Sun
தமிழகக் காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
03:26:01 on 24 Feb
03:10:01 on 24 Feb 2019,Sun
டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதை மோடி அரசு ஒருபோது ஒப்புக் கொள்ளாது’ என்று கூறியுள்ளார். மேலும் அவர், ’என்னுடன் ரஃபேல் ஊழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து விவாதம் நடத்த மோடி தயாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
03:10:01 on 24 Feb
02:56:01 on 24 Feb 2019,Sun
நாம் மொபைல் போனை சார்ஜ் போடும்போது பிளக் பாயிண்ட் சற்று உயரத்தில் இருந்து, சார்ஜர் வயர் சற்று நீளம் குறைவானதாக இருந்தால் செல்போனைத் தரையில் வைக்க முடியாது. இதனை உணர்ந்த யாரோ ஒருவர் செல்போனை சார்ஜ் செய்யும்போது அதனை வைக்க, புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
02:56:01 on 24 Feb
02:40:01 on 24 Feb 2019,Sun
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப் பிள்ளையும், சின்ன தலயுமான ரெய்னா சென்னை அணிக்கு பேட்டிங், பீல்டிங், பவுலிங் என ஆல்-ரவுண்டராகக் கலக்கி வருகிறார். வரும் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடுவதன் மூலம் உலகக் கோப்பை அணியில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார் ரெய்னா.
02:40:01 on 24 Feb
02:26:01 on 24 Feb 2019,Sun
மக்களவைத் தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே திண்டுக்கல் நகரில் பல இடங்களில் தங்கள் சின்னத்தை வரைந்து தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
02:26:01 on 24 Feb
02:10:01 on 24 Feb 2019,Sun
திருச்சி மாவட்டம், தொட்டியம் ஒன்றியம் நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 1 கோடியே 37
லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் முசிறி
சட்டமன்ற உறுப்பினர் செல்வராசு கலந்து கொண்டு பணிகளைத் துவக்கி வைத்தார்.
02:10:01 on 24 Feb
01:55:01 on 24 Feb 2019,Sun
ரபேல் ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு மீதான விசாரணை வரும் வரும் 26ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
01:55:01 on 24 Feb
01:40:02 on 24 Feb 2019,Sun
ஸ்வீடனுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான போர் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. இது முப்படைகளும் நிஜத்தில் மோதிக்கொள்ளும் போரல்ல; ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு தனி மனிதரும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு இசை வெளியீட்டு நிறுவனமும் யூடியூபில் மோதிக் கொள்ளும் போர்.
01:40:02 on 24 Feb
01:26:01 on 24 Feb 2019,Sun
நடிகர் கார்த்தி அடுத்ததாக ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தானா நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.
01:26:01 on 24 Feb
01:10:01 on 24 Feb 2019,Sun
சென்னை - மைசூர், பெங்களூர் உட்பட 10 புதிய வழித்தடங்களில் அதிவிரைவு புல்லட் ரயில்களை இயக்க
ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில் இருந்து மும்பை, கொல்கத்தா, வாரணாசி, போபால்
உள்ளிட்ட வழித்தடங்களிலும் புல்லட் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
01:10:01 on 24 Feb
12:56:01 on 24 Feb 2019,Sun
சோனி நிறுவன ஸ்மார்ட்போன்களில் எக்ஸ்பீரியா 1 முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
12:56:01 on 24 Feb
12:40:01 on 24 Feb 2019,Sun
இந்திய உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகி, அமெரிக்க நிறுவனமான உபர் ஈட்ஸை வாங்குவதற்கு திட்டமிட்டு இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அமெரிக்க ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான உபர், இந்தியா மட்டுமில்லாமல் உலகின் பிற பகுதிகளிலும் உணவு டெலிவரி சேவையை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
12:40:01 on 24 Feb
12:26:01 on 24 Feb 2019,Sun
‘வாகை சூட வா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் நடிகை இனியா. இந்நிலையில், ’நான் எந்தக் குத்துப்பாடலுக்கும் ஒப்புக்கொள்ளவில்லை. இனியும் அப்படிக் குத்துப் பாடல்களுக்கு ஆடக்கூடாது என முடிவெடுத்துவிட்டேன்,’ என்றும் கூறியுள்ளார்.
12:26:01 on 24 Feb
12:10:02 on 24 Feb 2019,Sun
மஹிந்திரா, டொயோட்டா, ஸ்கோடா என பல நிறுவனங்கள் தங்களது கார்களை எஸ்.யூ.வி பிரிவில் அறிமுகம் செய்து வருகின்றன. இந்நிலையில், ஃபோர்ட் நிறுவனமும் எண்டிவர் காரில் சில மாற்றங்கள் செய்து எஸ்.யூ.வி பிரிவில் அறிமுகம் செய்துள்ளது.
12:10:02 on 24 Feb
11:55:01 on 23 Feb 2019,Sat
வருசநாடு கிராமத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் வருசநாடு பகுதியில் அவ்வப்போது திடீர் திடீரென்று மின்சாரம் இல்லாமல் போவதால், விவசாயம் மட்டுமின்றி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
11:55:01 on 23 Feb
11:40:01 on 23 Feb 2019,Sat
’இந்தியாவில் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் ஹெலிகாப்டர்களுக்கான தேவை சூடுபிடிக்கும்,’ என ஏர்பஸ் நிறுவனம் முன்கணிப்புத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஹெச்பிசிஎல் நிறுவனம், ஏர்பஸ் ஏஎஸ்365 என் 3 டெளபின்ஸ் உள்ளிட்ட 10 ஹெலிகாப்டர்களைத் தற்போது இயக்கி வருகிறது.
11:40:01 on 23 Feb
11:25:02 on 23 Feb 2019,Sat
’இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்,’ என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். மேலும், ’இதில், அவர்கள் நாட்டின் நலன் கருதி எடுக்கும் முடிவாகத்தான் இருக்கும். எனவே, அதன்படி செயல்படுவோம்,’ என்றார்.
11:25:02 on 23 Feb
11:10:01 on 23 Feb 2019,Sat
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் தனது கணக்கில் இருந்த ரூ.2 லட்சத்து 26 ஆயிரம் மாயமானதால் தொழிலாளி ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
11:10:01 on 23 Feb
10:55:01 on 23 Feb 2019,Sat
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை எந்த மொழி சினிமாப் படங்களையும் ரிலீஸான நாளிலேயே ஆன் லைனில் வெளியிட்டு மிரட்டி வருகிறது தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். நேற்று காலையில் வெளியான ‘எல்.கே.ஜி’ தமிழ் திரைப்படத்தை மாலைக்குள் தனது இணையதளத்தில் வெளியிட்டு சினிமா உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
10:55:01 on 23 Feb
10:40:02 on 23 Feb 2019,Sat
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்துள்ள கொமராயனூர் பிரிவு பகுதியில் வீசிய சூறாவளிக் காற்றால், அறுவடைக்குத் தயாராக இருந்த ஏராளமான வாழை மரங்கள் கீழே சாய்ந்து, சேதம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
10:40:02 on 23 Feb
10:25:01 on 23 Feb 2019,Sat
அமெரிக்காவில் ஹெச்1பி விசா விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதால், அங்குள்ள இந்தியர்களின் வேலைப் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
10:25:01 on 23 Feb
10:10:02 on 23 Feb 2019,Sat
'கல்வியால் தான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்,' என்று ஷார்ஜா நாட்டு இளவரசி ஹெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸிமி தெரிவித்துள்ளார். மேலும், ‘கடவுளுக்கு பயப்படுகிறவர்கள் யாரையும் கொல்லமாட்டார்கள். முட்டாள்கள் தான் தீவிரவாதிகளாக இருப்பார்கள்.’ எனவும் தெரிவித்துள்ளார்.
10:10:02 on 23 Feb
09:55:02 on 23 Feb 2019,Sat
கலிபோர்னியாவில் உள்ள மஜோவ் விமானத் தளத்தில் இருந்து புறப்பட்ட WhiteKnightTwo என்ற விமானத்தில் விமானி, துணை விமானியுடன் சுற்றுலாப் பயணிகளுக்கு பயிற்சி அளிக்கவிருக்கும் பெத் மோசஸ் ((Beth Moses)) என்பவரும் உடன் சென்றார்.
09:55:02 on 23 Feb
09:40:01 on 23 Feb 2019,Sat
இரக்க குணமுள்ள எஸ்தோனிய தொழிலாளர்கள் ஆற்றில் பனிக்கட்டியில் சிக்கி இருந்த 'நாய்' ஒன்றை விரைந்துச் சென்று காப்பாற்றினர். ஆனால், தங்களின் காரில் ஓநாய் ஒன்றை கொண்டு சென்று காப்பாற்ற இருப்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
09:40:01 on 23 Feb
09:26:01 on 23 Feb 2019,Sat
ஹரிஸ் கல்யாண் கதாநாயகனாக நடிக்கும் படம் தான் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்'. இந்த படத்தின் டிரைலர் மற்றூம் பாடல்கள் ஏற்கனவே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் வெளியிட்டு தேதியைப் படக்குழுவினை அறிவித்துள்ளனர். மார்ச் 15ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.
09:26:01 on 23 Feb
09:10:02 on 23 Feb 2019,Sat
'கிரிக்கெட்டை விட கபடியையும், கால்பந்தையும் அதிகம் ஊக்குவிக்க வேண்டும்,' என்று பிகார் துணை முதல்வர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார். மேலும், ‘இன்று கிரிக்கெட்டை விளையாடும் பெரும்பாலான நாடுகள் ஒருகாலத்தில் இங்கிலாந்தின் காலனிகளாக இருந்தவை.’ எனவும் தெரிவித்துள்ளார்.
09:10:02 on 23 Feb
08:55:01 on 23 Feb 2019,Sat
தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்த துணியை அகற்றக் கூடாது. தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக் கூடாது.
08:55:01 on 23 Feb
08:40:01 on 23 Feb 2019,Sat
இதுவரை 9 வழக்குகள் பழங்குடி மக்களின் வன உரிமைகளைப் பறிக்கும் நோக்கத்தில் போடப்பட்டுள்ளன. அந்த வழக்குகளைப் பதிவு செய்தவர்கள் பழைய ஜமீன்தார்களும் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரிகளும் சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் ஆகும். இந்தச் சதிவேலையில் மத்திய ஆளும் அரசும் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
08:40:01 on 23 Feb
08:25:01 on 23 Feb 2019,Sat
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வில் திருநெல்வேலியைச் சேர்ந்த பீடி சுற்றும் தொழிலாளியின் மகள் சரோஜா வெற்றிபெற்று டிஎஸ்பியாக தேர்வு பெற்றுள்ளார்.
08:25:01 on 23 Feb
08:10:02 on 23 Feb 2019,Sat
தலைமைச் செயலகத்தில், வீட்டு வாடகை முறைப்படுத்துதல் சட்டம் தொடர்பான விதிகள், நடைமுறைகளை பொது மக்கள் எளிதாக அறிந்துக் கொள்ள www.tenancy.tn.gov.in என்ற தனி இணையதளத்தை துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
08:10:02 on 23 Feb
07:55:01 on 23 Feb 2019,Sat
'இடைத்தேர்தலில் அதிமுக தோற்றால் ஆட்சி கவிழும், 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அதிமுக அரசு நடத்துமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது,' என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ‘மக்களுக்குப் பணியாற்ற திமுக காத்திருக்கிறது,’ எனவும் தெரிவித்துள்ளார்.
07:55:01 on 23 Feb
07:40:01 on 23 Feb 2019,Sat
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரசவத்துக்காக வந்த இளம்பெண் அங்குள்ள கழிப்பறையில் குழந்தையைப் பெற்றெடுத்தார். இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என அந்தப் பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
07:40:01 on 23 Feb
07:25:02 on 23 Feb 2019,Sat
தமிழகத்தில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி ஸ்டார் தொகுதியாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே, திமுக சார்பில் இத்தொகுதியில் முன்னாள் எம்.பி. கனிமொழி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் அங்குப் போட்டியிட இருப்பதாகக் கூறப்படுகிறது.
07:25:02 on 23 Feb
07:10:01 on 23 Feb 2019,Sat
ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான சூடானில் போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சூடானில் ஒரு வருட காலத்திற்கு அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு அதிபர் ஒமர் அல் பஷீர் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
07:10:01 on 23 Feb
06:55:54 on 23 Feb 2019,Sat
திருச்சி, பொன்மலைப்பட்டியில் பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பாக அதிமுக மற்றும் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் காயமடைந்துள்ளார். இதுதொடர்பாக திமுகவின் பொன்மலைப்பட்டியின் பொதுச் செயலாளர் தர்மராஜ், பிரபாகரன் ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
06:55:54 on 23 Feb
06:55:01 on 23 Feb 2019,Sat
’தேர்தல் என்பது அக்கினிப் பரிட்சை போன்றது. ஒருபுறம் எதிரியுடனும், ஒருபுறம் துரோகியுடனும் போராடிக் கொண்டிருக்கிறோம்’ என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால் எதிரிக்கும், துரோகிக்கும் இனி இங்கு வேலை இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.
06:55:01 on 23 Feb
06:35:01 on 23 Feb 2019,Sat
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம், ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்ள உள்ளார்.
06:35:01 on 23 Feb
06:15:02 on 23 Feb 2019,Sat
அரசு வேலை பெறுவதற்குப் பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அதற்கான நடவடிக்கையை உடனே எடுக்குமாறும் தெரிவித்துள்ளது.
06:15:02 on 23 Feb
05:55:02 on 23 Feb 2019,Sat
கிருஷ்ணகிரியில் கிராம சபை கூட்டத்தை நடத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’திமுக சுட்டிக்காட்டுபவரே நாட்டில் அடுத்த பிரதமராக முடியும். தமிழகத்தில் 21 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் இன்றி அனாதையாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.
05:55:02 on 23 Feb
05:45:15 on 23 Feb 2019,Sat
முகிலனைக் காவல் துறையினர்தான் கண்டுபிடித்து தர வேண்டும் என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’7 பேரின் விடுதலையிலாவது தமிழக மக்களின் எண்ணத்தை முதல்வர் நிறைவேற்ற வேண்டும். அதிமுக கூட்டணியை ஜெயலலிதாவின் தொண்டர்கள் எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என தெரியவில்லை’ என்றும் கூறியுள்ளார்.
05:45:15 on 23 Feb
05:35:01 on 23 Feb 2019,Sat
'மக்கள் பிரச்சினைகளைக் கவனிக்காமல் ரஜினிகாந்த் முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப்படுவது ஏன்?' என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
05:35:01 on 23 Feb
05:18:09 on 23 Feb 2019,Sat
டெல்லிக்கு மாநில அந்தஸ்து கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மார்ச் 1ஆம் முதல் காலவரம்பற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர், ‘டெல்லியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசிற்கு அதிகாரம் எதுவும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.
05:18:09 on 23 Feb
05:15:01 on 23 Feb 2019,Sat
திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ’சூழலியலாளர் முகிலன் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூடு திட்டமிட்ட அரசின் சதி என்பதை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட பின்னர், கடந்த ஒரு வாரமாகக் காணவில்லை. விரைவில் அவரை வெளிக் கொண்டுவர காவல்துறை துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்‘ என பதிவிட்டுள்ளார்.
05:15:01 on 23 Feb
04:56:01 on 23 Feb 2019,Sat
சமூக செயல்பாட்டாளர் முகிலன் மாயமானதில் அரசு மீது சந்தேகம் இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், ’சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்போர் முகிலனை மீட்க வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
04:56:01 on 23 Feb
04:35:01 on 23 Feb 2019,Sat
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமூகச் செயற்பாட்டாளர் முகிலனைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
04:35:01 on 23 Feb
04:15:01 on 23 Feb 2019,Sat
’மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் 25ஆம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு விநியோகம் செய்யப்படும். போட்டியிட விரும்புவோர் ரூ.1000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்’ என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
04:15:01 on 23 Feb
03:55:01 on 23 Feb 2019,Sat
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சி நடந்து வருகிறது. இதில், கார் பார்க்கிங் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட கார்கள் சாம்பலாகின. இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
03:55:01 on 23 Feb
03:35:02 on 23 Feb 2019,Sat
விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க நாளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வருவதாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் அவர், ’தேமுதிக கூட்டணியில் இணைய இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.
03:35:02 on 23 Feb
03:15:02 on 23 Feb 2019,Sat
சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் இன்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை குறித்தும், மேலும் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்தும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
03:15:02 on 23 Feb
02:55:01 on 23 Feb 2019,Sat
பாகிஸ்தானுடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில் இதுகுறித்துப் பேசிய விராட் கோலி, ’நாடு என்ன செய்ய நினைக்கிறதோ, பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் துணை நிற்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
02:55:01 on 23 Feb
02:35:02 on 23 Feb 2019,Sat
கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், ’மத்தியில் திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
02:35:02 on 23 Feb
02:15:01 on 23 Feb 2019,Sat
கோலாகாட் பகுதியில் உள்ள ஒரு கடையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கள்ளச்சாராயம் அறிந்துயுள்ளனர். அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இதுவரை 69 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
02:15:01 on 23 Feb
01:55:01 on 23 Feb 2019,Sat
தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், ‘கிளையை ஒடிக்காமல் திருடவும்’ என மரத்தின் மீது எழுதி தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும், அதில், ’2 காய் மட்டுமே திருடவும்’ என்ற மற்றொரு அட்டையையும் அதில் வைத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
01:55:01 on 23 Feb
01:35:01 on 23 Feb 2019,Sat
பெங்களூரில் நடைபெறும் சர்வதேச விமானக் கண்காட்சி அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 வாகனங்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்தை அடுத்து விமான கண்காட்சியைக் காண வந்தவர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
01:35:01 on 23 Feb
01:15:01 on 23 Feb 2019,Sat
'சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போனதற்கு அரசே காரணம்,' என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், ‘தேர்தல் பரபரப்புகளில் முகிலன் விவகாரத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. முகிலன் உயிருக்கு ஆபத்து என்றால் அதற்கு தமிழக அரசே பொறுப்பு,’ எனவும் தெரிவித்தார்.
01:15:01 on 23 Feb
12:55:02 on 23 Feb 2019,Sat
'தேமுதிக உடனான பேச்சுவார்த்தையில் இழுபறி எதுவும் இல்லை. அதிமுக தலைமையில் மெகா கூட்டணியாக, இயற்கையான கூட்டணியாக, மக்கள் நலக் கூட்டணியாக அமைத்துள்ளது,' என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே என வெற்றிக் கனியை பறிப்போம்,’ எனவும் தெரிவித்துள்ளார்.
12:55:02 on 23 Feb
12:35:01 on 23 Feb 2019,Sat
ராமநாதபுரம், பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கைக் கடற்படை சிறைபிடித்த 5 மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
12:35:01 on 23 Feb
12:15:02 on 23 Feb 2019,Sat
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே டிக் டாக் வீடியோ காரணமாக இளைஞர் ஒருவர் தன் நண்பனைக் கொலைச் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் கொலைச் செய்தவரைக் கைதுச் செய்து விசாரித்து வருகின்றனர்.
12:15:02 on 23 Feb
11:55:24 on 23 Feb 2019,Sat
’1998இல் ஜெயலலிதா அமைத்தது போல தேசநலன் காக்கும் வெற்றிக்கூட்டணியை உருவாக்கியுள்ளோம்’ என அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், ’மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதி, பெண்களுக்கு முக்கியத்துவம், சமூக பொருளாதார பாதுகாப்பு, தமிழின எழுச்சி ஆகியவற்றில் உறுதியோடு அரசியல் பயணம் தொடரும்’ எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
11:55:24 on 23 Feb
11:55:01 on 23 Feb 2019,Sat
தமிழகத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11:55:01 on 23 Feb
11:53:27 on 23 Feb 2019,Sat
விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் அதிமுக எம்.பி. ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் நேரில் அஞ்சலி செலுத்தினார். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள ராஜேந்திரன் உடலுக்கு முதல்வர் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
11:53:27 on 23 Feb
11:35:01 on 23 Feb 2019,Sat
சென்னை அயனாவரம் அருகே நெடுஞ்சாலையில் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து 3 மாத ஆண் குழந்தை யோகேஷ் ராஜ் உயிரிழந்தது. இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க ஆட்டோவைத் திருப்பிய போது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்தது.
11:35:01 on 23 Feb
11:32:33 on 23 Feb 2019,Sat
கொடைக்கானலில் சத்துணவு பணியாளர்களுக்கு தீத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து, சுமார் 50க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
11:32:33 on 23 Feb
11:23:21 on 23 Feb 2019,Sat
ஜப்பானில் நாடாளுமன்ற கூட்டத்துக்கு மூன்று நிமிடங்கள் தாமதமாக வந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கான அமைச்சர், அவரின் பதவிக்கு அவமரியாதை செய்துவிட்டார் என்று கூறி, நடைபெறவிருந்த பட்ஜெட் கமிட்டி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கெடுக்காமல் ஐந்து மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர், பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
11:23:21 on 23 Feb
11:15:03 on 23 Feb 2019,Sat
காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், ’தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தொடர்பான முடிவை தேமுதிகதான் எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
11:15:03 on 23 Feb
11:10:50 on 23 Feb 2019,Sat
புகையிலை உட்செலுத்தப்படுவதால் நிறப்பார்வைக் குறைபாடு மற்றும் பார்வை மங்களாகத் தெரிவது போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சமீபத்தில் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்துள்ளது.
11:10:50 on 23 Feb
11:09:18 on 23 Feb 2019,Sat
கோவையில் எச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு மீண்டும் சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அரசு மருத்துவமனையில் இன்று விசாரணை நடத்த உள்ளார்.
11:09:18 on 23 Feb
10:55:01 on 23 Feb 2019,Sat
காஷ்மீர் மாநிலம் புல்மாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை அரசு திரும்பப் பெற்றது. இந்நிலையில், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் உட்பட பலர் நள்ளிரவில் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
10:55:01 on 23 Feb
10:36:24 on 23 Feb 2019,Sat
சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். எம்.பி. ராஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
10:36:24 on 23 Feb
10:24:14 on 23 Feb 2019,Sat
விவோ நிறுவனத்தின் துணை பிராண்டான ஐகூ 12 ஜி.பி. ரேம் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை மார்ச் 1 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
10:24:14 on 23 Feb
10:15:51 on 23 Feb 2019,Sat
நாள் முழுவதும் எத்தனை வேலைகள் செய்தாலும் நமக்காக குறைந்தது அரை மணி நேரம் ஒதுக்கி நமக்குப் பிடித்த ’ஹாபி’ எனப்படுகின்ற பொழுதுபோக்கு வேலைகளைச் செய்தால், அது நமக்கு மனதளவில் நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கும். மேலும், இவை உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும் என பல ஆய்வறிக்கைகளின்மூலம் தெரியவந்துள்ளது.
10:15:51 on 23 Feb