View in the JustOut app
X

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை கூட்டாட்சித் தத்துவதிற்கு எதிராக இருப்பதாகவும் ஒற்றை நாடு - ஒற்றைக் கல்வி முறையை நோக்கி இந்தியாவைத் திருப்புவதாகவும் கூறி தமிழகத்தில் உள்ள கல்வி ஆர்வலர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர்.

09:25:02 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் நிரப்பப்பட உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

08:59:57 on 18 Jul

மேலும் வாசிக்க தினமணி

ஈரோட்டுக்கு டெல்லியில் இருந்து, ஜம்மு தாவி விரைவு ரயிலில் அனுப்பப்பட்ட, ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான எலட்ரானிக் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு ரயில் பார்சல் ஊழியர்கள் உடந்தையா? என விசாரணை நடைபெற்று வருகிறது.

08:40:02 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை நயன்தாரா பிரதான பாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். ஆரம்பகாலத்திலிருந்தே நண்பர்களான நெல்சனும், சிவாவும் இப்படத்தின் மூலம் திரையிலும் இணையவுள்ளனர்.

08:30:06 on 18 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நயன்தாரா நடித்துள்ள ’கொலையுதிர் காலம்’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்தப் படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. இப்படம் வரும் 26ஆம் தேதி ரிலீசாவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:14:48 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவான காஸிரங்கா சரணாலயம் சமீபத்தில் பெய்த கடும் மழை காரணமாக 90% கும் மேல் வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில், பூங்கா அருகே உள்ள வீட்டின் ஒன்றினுள் புலி ஒன்று தஞ்சமடைந்துள்ளதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.

07:59:47 on 18 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரைக் காண குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், மயக்கமடைந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தற்காலிக முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

07:43:28 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஆன்மிக தொண்டாற்றும் ஒருவருக்கு வள்ளலார் பெயரில் விருது வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அறிவித்துள்ளது. தமிழ் தொண்டாற்றி வரும் மகளிருக்கு காரைக்கால் அம்மையார் பெயரில் ஆண்டுதோறும் விருதும், ஆய்வும், தமிழ் ஈடுபாடும் கொண்ட தமிழறிஞருக்கு தேவநேயப் பாவாணர் விருது வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

07:40:03 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகிய இருவரும் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா வெளியேறிய பிறகும் லண்டனில் இருந்தனர். இந்நிலையில் இருவரும் உலகக் கோப்பைக்குப் பிறகு நாடு திரும்பியுள்ளனர். இன்று இருவரும் ஏர்போர்ட்டில் வரும்போது படம் பிடிக்கப்பட்டுள்ளனர்.

07:36:22 on 18 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அசாமில் திங்கள் கிழமை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும்போது கர்ப்பிணி ருமி பதாரி என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது சுகாதாரத்துறை ஊழியர்கள் உதவியுடன் அவர் படகில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். செல்லும் வழியிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. குழந்தைக்கு இந்து கடவுள் கிருஷ்ணா என பெயரிடப்பட்டுள்ளது.

07:27:01 on 18 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் கட்டுப்பாடு இல்லாமல் பொதுவில் பார்க்கக் கூடிய படங்களுக்கு (யு) சான்றிதழும், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பெற்றொர்களின் வழிக்காட்டுதலுடன் பார்க்கக்கூடிய படங்களுக்கு (யு/ஏ) சான்றிதழும், வயது வந்தோர்கள் மட்டும் பார்க்கக் கூடிய படங்களுக்கு (ஏ) சான்றிதழும் வழங்கப்படுகின்றன.

07:17:31 on 18 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 5ஆம் தேதி நடக்கும் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஏன் போட்டியிடவில்லை என்பது குறித்து அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல்களின் மீதும், தேர்தல் ஆணையத்தின் மீதும் மக்கள் நம்பிக்கையின்மை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:09:39 on 18 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் நீதிமன்றக் காவலில் இருந்தபோது மரணம் அடைந்ததால், இதுகுறித்து விசாரிக்க புழல் சிறைத்துறை கண்காளிப்பாளர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

06:56:45 on 18 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தர்பார் படத்தைத் தொடர்ந்து, அடுத்து நடிக்கும் படத்தின் இயக்குநர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரஜினியின் அடுத்த இயக்குநர் அஜித்தின் ஆஸ்தான இயக்குநர் சிறுத்தை சிவா என்பது தெரியவந்துள்ளது.

06:46:01 on 18 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கர்நாடகாவில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என பாஜகவினர் ஆளுநரை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். இதைத்தொடர்ந்து இன்று இரவுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என சபாநாயகருக்கு கர்நாடக மாநில ஆளுநர் வேண்டுகோள் அறிவுறுத்தியுள்ளார்.

06:34:43 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,80,000. ரெட்மி கே20 ப்ரோ சிக்னேச்சர் எடிஷன் ஸ்மார்ட்போன் முற்றிலும் தங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதோடு ஸ்மார்ட்போனின் பின்புறம் K எனும் எழுத்து வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது.

06:31:04 on 18 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி தர்ஷினி, 4 நிமிடம் 49 நொடிகளில் 150 திருக்குறள்களை ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். சாதனைக்கான சான்றிதழை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, தங்க சங்கிலி அணிவித்து பாராட்டினார்.

06:17:18 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’அரசியலில் எனக்கு எப்போதுமே அதிக ஆர்வம் இருந்ததில்லை. அரசியல் செயல்பாடுகளிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. மக்களுக்கு சேவை செய்ய அரசியலில் இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று மெகா ஸ்டார் மம்முட்டி தெரிவித்துள்ளார்.

06:09:47 on 18 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

தமிழில் தபால்துறை தேர்வுகள் என்ற அறிவிப்பு இந்த ஆண்டுக்கு மட்டுமா? வரும் ஆண்டுகளுக்கும் பொருந்துமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திமுக தொடர்ந்த வழக்கில் ஜூலை 23ஆம் தேதி மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

05:57:38 on 18 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புதிய கல்விக்கொள்கை, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து சூர்யாவிற்கு கமல், சீமான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், டிடிவி தினகரன், புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்து நியாயமானது எனவும், அதனை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

05:52:46 on 18 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ரஷ்யாவின் தம்போவ்கா எனும் கிராமத்துக்கு அருகில் சில நபர்கள் வைத்த தீயால் புற்கள் எரிந்து சாம்பலாயின. அப்போது அந்த இடத்தில் உள்ள மின் கோபுரத்தில், நாரை ஒன்று, தனது கூட்டில் உள்ள ஐந்து முட்டைகளையும் பாதுகாத்த வீடியோவை, அமூர் பிராந்திய பொது சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

05:45:08 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சிறுபான்மை என்பது முஸ்லிம்களை மட்டும் குறிக்கவில்லை. சமணர்கள், பவுத்தர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய அறிவிக்கப்பட்ட ஐந்து சிறுபான்மையினர் உள்ளதாக சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.

05:39:09 on 18 Jul

மேலும் வாசிக்க காமதேனு

சென்னை ஐஸ்அவுஸ் பகுதியைச் சேர்ந்த அல்போன்சா மேரி என்பவர். கந்து வட்டி தொழில் செய்து வந்தார். இந்நிலையில், மதுராந்தகம் அருகே உள்ள கிளாவட்டம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிஉள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கந்துவட்டி தகராறில் அவர் கொல்லப்பட்டது தெரிய வந்தது.

05:32:51 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜிம்மி நீஷமின் பள்ளிக்கால பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன், சூப்பர் ஓவரின்போது உயிரிழந்தார். நீஷம் சூப்பர் ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்த அந்த தருணத்தில் கார்டன் உயிர் பிரிந்ததாக அவரது மகள் கூறியுள்ளார்.

05:31:28 on 18 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் திருவிழாவில் கூட்ட நெரிசல் காரணமாக வரிசையில் நின்ற சிலர் மயங்கி விழுந்தனர். இதில் 65 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் மற்றும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

05:21:36 on 18 Jul

மேலும் வாசிக்க தின மலர்

மருத்துவப் படிப்பின் இறுதியாண்டு மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ’நெக்ஸ்ட்’ (National Exit Test) என்ற பெயரில் தேசிய அளவில் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் எதிர்க்கிறோம்’ என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

05:17:11 on 18 Jul

மேலும் வாசிக்க விகடன்

கிருஷ்ணா, பிந்து மாதவி நடித்த கழுகு 2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா, இசையமைத்துள்ளார். செந்நாய்களின் தொல்லையால் அவதியுறும் தேயிலை தொழிலாளர்களின் பாதுகாவலுக்கு வரும் கிருஷ்ணா, காளி வெங்கட் ஆகியோரின் காட்சிகளுடன் மிரட்டுகிறது இப்படத்தின் டீசர்.

05:13:59 on 18 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இன்று உலகம் முழுவதும் நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரின் பிறந்த நாளையொட்டி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ’இந்த உலகத்திற்கு முன்பை விட இப்போதுதான் நெல்சன் மண்டேலா போன்றவர்கள் அதிகமாக தேவை’ என பதிவிட்டுள்ளார்.

05:11:34 on 18 Jul

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயைச் சேர்த்துக் கொள்ளலாம். கோவைக்காயை பீன்ஸ் போல பொரியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். முக்கியமாக முற்றின கோவைக்காய் வாங்கக்கூடாது. பிஞ்சு காயாக பார்த்து வாங்க வேண்டும். பிஞ்சு காய் இளம்பச்சை நிறத்தில் இருக்கும்.

05:07:36 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழில் மட்டும் நடித்து வந்த ராஜ்கிரண் முதல்முறையாக மலையாளத்தில் நடிக்கிறார். இவர் மலையாளத்தில் அறிமுகமாகும் படத்தில் மம்முட்டி – மீனா நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். அஜய் வாசுதேவ் இயக்கும் இந்தப் படத்துக்கு ஸ்கைலாக் என்று பெயர் வைத்துள்ளனர். தமிழை தவிர்த்து ராஜ்கிரண் நடிக்கும் முதல் வேற்றுமொழித் திரைப்படம் இதுவாகும்.

04:47:16 on 18 Jul

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

விஜய் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் நடிக்க அவரது உறவினர் தயாரிக்கிறார். இப்படத்துக்கு பிகில் படத்தின் தமிழ்நாடு உரிமம் விற்ற அளவுக்கு சம்பளம் இருக்க வேண்டும் என கேட்க தயாரிப்பு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் புதிய படத்திற்கு லோகேஷ் படத்தின் சம்பளத்தை விட 30% அதிகமாக கேட்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர்.

04:36:57 on 18 Jul

மேலும் வாசிக்க சினி உலகம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து தெக்கலூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (50). இவர் வடுகபாளையம் அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், இவர், வீட்டின் மாடியில் குழாய் அடைத்திருப்பதை சுத்தம் செய்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடி காட்சிகள் வெளியாகியுள்ளன.

04:36:03 on 18 Jul

மேலும் வாசிக்க ஜெயா டிவி

கிரீஸ் நாட்டில் உள்ள கியாதோஸ் விமான நிலையத்தில், மக்கள் நிற்கும் இடத்திலிருந்து சில அடிகளுக்கு மேல் விமானங்கள் தரையிறங்கும் வீடியோ வெளியாகியுள்ளது. கடற்கரையோரம் இந்த விமான நிலையம் இருப்பதால், மக்கள் பலர் தரையிறங்கும் இடத்துக்குப் பக்கத்திலேயே உள்ளனர்.

04:25:01 on 18 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தேசத் துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

04:22:59 on 18 Jul

மேலும் வாசிக்க தினமணி

வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால் வேலூர் மக்களவைத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

04:18:26 on 18 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிவகங்கை அருகே ஆலவிளாம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராம ஆண்கள் வரதட்சிணை வாங்குவதில்லை. அதேபோல் பெண்களுக்கும் வரதட்சிணை கொடுப்பதில்லை. இதை கல்வெட்டில் எழுதி ஊர் நுழைவாயிலில் வைத்துள்ளனர். மேலும் மது குடித்தாலோ, வரதட்சிணை வாங்கினோ தண்டனை வழங்கப்படும் என்ற எச்சரிக்கையும் இங்கு உண்டு.

04:12:01 on 18 Jul

மேலும் வாசிக்க சன் நியூஸ்

நடிகை சமந்தா ’ஒன் பக்கெட் சேலஞ்ச்’ என்ற ஒன்றை முன்னெடுத்துள்ளார். ஒரு நாள் முழுவதும் ஒரு வாளி தண்ணீரை பயன்படுத்துவது தான் இதன் சவால். இந்த சவாலில் வரும் ஞாயிற்றுக்கிழமை அவர் பங்கேற்கிறார். இதுதொடர்பாக ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், மற்றவர்களையும் இந்த சவாலை ஏற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

04:10:04 on 18 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

நாடு முழுவதும் கடந்த வாரம் 20 சதவீதம் அளவுக்கு மழைப் பொழிவு குறைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சோயா பீன்ஸ், பருத்தி வளரும் இந்தியாவின் மத்திய பகுதியில் 68 சதவீத மழைப் பொழிவு குறைந்திருக்கிறது.மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் குறைவான மழைப்பொழிவை இந்தியா அடைந்திருக்கிறது.

03:58:21 on 18 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று எம்எல்ஏ தாயகம் கவி, தன் பேச்சைத் தொடங்கும் முன் திமுக இளைஞரணி செயலாளராகப் பதவியேற்றுள்ள உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனைக் கவனித்த அமைச்சர் ஜெயக்குமார், ‘எல்லாரையும் வாழ்த்துறீங்க, உங்க இனமான பேராசிரியர் அன்பழகனையும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்கப்பா’ என கிண்டல் செய்தார்.

03:53:41 on 18 Jul

மேலும் வாசிக்க ETV BHARAT

அத்திவரதர் திருவிழா தொடங்கி 18வது நாளான இன்று, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். அந்தக் கூட்டத்தில் ஒருவரையொருவர் முட்டி தள்ளியபடி சென்றனர். அதனால் முதியவர்கள், குழந்தைகள் என 200க்கும் அதிகமானோர் மயங்கினர். அவர்களுக்கு கோயில் வளாகத்திலுள்ள மருத்துவ முகாம்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

03:49:00 on 18 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

டெல்லி தமிழ் சங்கம் சார்பில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆர்.கே. புரத்தில் உள்ள தமிழ்ச்சங்க வளாகத்தில் நடத்தப்பட்ட இந்த விழாவில், அ.தி.மு.க.சார்பில் நவநீதகிருஷ்ணன், ரவீந்திரநாத் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

03:40:02 on 18 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

நீலகிரி மாவட்டம் உதகை, காந்தல் பகுதியைச் சேர்ந்தவர்கள் கெளதம் மற்றும் டென்னீஸ். இவர்கள் இருவரும் இணைபிரியாத நண்பர்கள். இவர்கள் இருவரும் உதகை படகு இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் மிரட்டியதால்தான் தற்கொலை சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

03:27:02 on 18 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஆரணி அடுத்த புதுப்பாளையம் கிராமம் அருகே தனியார் பள்ளிப் பேருந்தில் 8 அடி நீள சாரைப் பாம்பு புகுந்துள்ளது. இதனால் மாணவ, மாணவியர் பயமுற்றனர். பின்னர் உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பாம்பு வெளியே எடுக்கப்பட்டதால் மாணவர்கள் தப்பித்தனர்.

03:12:01 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

’தமிழில் மணிரத்னம், ‌ஷங்கர் போன்ற இயக்குனர்களுடன் பணியாற்ற வேண்டும் என ஆசை இருக்கிறது. ஆனால் விஜய் சேதுபதியுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும். அவர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் பார்த்த பின்னர் அவரது ரசிகனாகி விட்டேன்’ என விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

02:57:01 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

’அமைச்சர் கடம்பூர் ராஜூ அரைவேக்காட்டுத் தனமாக சூர்யாவின் பிள்ளைகள் எங்கே படிக்கிறார்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் எங்கு படித்தால் உங்களுக்கென்ன?’ திமுகவின் தமிழன் பிரசன்னா கேள்வி கேட்டதுடன் ’பணம் இருப்பவர்கள் எங்கு வேண்டுமானாலும் படிப்பார்கள்’ என கூறியுள்ளார்.

02:42:01 on 18 Jul

மேலும் வாசிக்க நக்கீரன்

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே குடிநீர் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் காலி செய்த கிராமத்தில், தன் மக்கள் என்றாவது ஊர் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஒரே ஒரு முதியவர் மட்டும் தன்னந்தனியாக வசித்து வருகிறார்.

02:25:01 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

படுக்கை வசதியுடைய ஆம்னி பேருந்துகளுக்கு புதிதாக வரி விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாதம் ரூ.2,500 வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை வரி விதிப்பு இல்லாத நிலையில் தற்போது வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால், ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது.

02:13:11 on 18 Jul

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஜப்பானின் க்யோட்டோ, நகரிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் வானளாவிய உயரத்துக்கு புகை எழுந்திருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த தீ விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

02:12:02 on 18 Jul

மேலும் வாசிக்க தினத் தந்தி

தன்னைவிட வயதில் மிக இளையவரான ஜீவ ஜோதியை அண்ணாச்சி மணக்க விரும்பியது ஏன்? மூடநம்பிக்கை என்கிறது இவ்வழக்கின் பழைய வரலாறு. இதைக் காதல் என்பதா? பேராசை என்பதா? பெருந்திணைக் காமம் என்பதா?. ராஜகோபாலின் நினைப்பு இப்படித் தறிகெட்டு ஓட ஆரம்பித்து தற்போது துயரத்தில் முடிந்துள்ளது அண்ணாச்சியின் வாழ்க்கை.

02:00:29 on 18 Jul

மேலும் வாசிக்க தினமணி

திருநெல்வேலி, தேனி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

01:57:02 on 18 Jul

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

தனியார் பள்ளிகளுக்கு இணையான ஸ்கைப் மூலம் ஆங்கிலப் பயிற்சிகள், திருக்குறள் வகுப்புகள், கலை பண்பாட்டு பயிற்சிகள், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகள் எனத் தனியார் பள்ளிகளையே விஞ்சும் அளவிலான மாற்றங்களைத் தாங்கி நிற்கிறது விழுப்புரம் மாவட்டம் கோனேரிகுப்பம் 'அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.'

01:39:02 on 18 Jul

மேலும் வாசிக்க விகடன்

தனியார் பள்ளிகளுக்கு இணையான ஸ்கைப் மூலம் ஆங்கிலப் பயிற்சிகள், திருக்குறள் வகுப்புகள், கலை பண்பாட்டு பயிற்சிகள், தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிகள் எனத் தனியார் பள்ளிகளையே விஞ்சும் அளவிலான மாற்றங்களைத் தாங்கி நிற்கிறது விழுப்புரம் மாவட்டம் கோனேரிகுப்பம் 'அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.'

01:36:01 on 18 Jul

மேலும் வாசிக்க விகடன்

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் லாஸ்லியா மரியநேசன் பிறந்தார். உயர்தர பரீட்சையை எழுதிய லொஸ்லியா, பெறுபேறு வரும் வரை காத்திருந்த சந்தர்ப்பத்தில் இலங்கையிலுள்ள தமிழ் தொலைக்காட்சியான சக்தி டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

01:32:42 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் தென்காசி மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

01:27:24 on 18 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முதல் முறையாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிடபட்டுள்ளது. முதல்கட்டமாக உச்சநீதிமன்றம் வெளியிட்ட 100 தீர்ப்புகளில் 2 தீர்ப்புகள் தமிழில் வெளியாகி உள்ளன. சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவு தமிழில் வெளியாகியுள்ளன.

01:24:56 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

பல்வலி இருக்கும்போது, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி கொப்பளித்து துப்பிவிடவும்.

01:15:07 on 18 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவு பிறப்பிக்கலாம் என சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார். வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பங்கேற்க வைப்பதற்காக சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

01:02:31 on 18 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் மீது விவாதம் துவங்கி நடந்து வருகிறது. ஆளும் கட்சி, பா.ஜ., இடையே காரசார விவாதம் நடப்பதால் சட்டபையில் அமளி ஏற்பட்டுள்ளது.

01:00:15 on 18 Jul

மேலும் வாசிக்க தினமலர்

மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த எட்டாம் தேதி தொடங்கிய நிலையில், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன. இதில் அரசுப் பள்ளியில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஒரேயொரு மாணவிக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.

12:55:33 on 18 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் தமிழகத்தில் அடுத்த 24மணி நேரத்தில சில பரவலான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:48:47 on 18 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஃபேஸ் ஆப் தங்கள் ஸ்மார்ட்போனில் ப்ளாக் செய்யப்பட்டாதாக டிவிட்டரில் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். இதை கேட்ஜெட் 360ம் உறுதி செய்துள்ளது. இந்திய பயன்பாட்டாளர்களை இந்த செயலி ப்ளாக் செய்திருந்தாலும், 'ஃபேஸ் ஆப்' இன்னும் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கப்பெருகிறது.

12:35:48 on 18 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சட்டசபையில் 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’தமிழகத்தில் புதிதாக தென்காசி, செங்கல்பட்டு என 2 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என கூறினார்.

12:28:42 on 18 Jul

மேலும் வாசிக்க தினத்தந்தி

சரவண பவன் ஓட்டலில் பணிபுரிந்து வந்த ஜீவஜோதியின் மீது அந்த ஓட்டலின் உரிமையாளரான சரவணபவன் ராஜகோபால் ஆசை வைத்ததும், இதன் தொடர்ச்சியாக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கடத்தி கொலை செய்யப்பட்டதும் அந்த நேரத்தில் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

12:26:16 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

ஏசி, கான்கீரிட் வீடு, கார் உள்ளிட்ட 10அம்சங்களில் ஏதேனும் ஒன்றிருந்தால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, முன்னுரிமைப் பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன.

12:14:44 on 18 Jul

மேலும் வாசிக்க ETV Bharat

இவானோவோ என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் தான் வளர்க்கும் புலியை காரில் வைத்து நகர் வலம் வந்தார். அப்போது நடுச்சாலையில் சிக்னலில் அவரது கார் நின்ற போது புலி திடீரென முரண்டு பிடித்தது. மேலும், சங்கிலியை அறுத்த புலி சாலையில் ஓடத் தொடங்கியது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

12:08:30 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சந்திராயன்-2 விண்கலம் ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த 15 ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட இருந்த சந்திராயன்-2 விண்கலம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.

12:00:49 on 18 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் தியாகராஜனின் காதலியாக கிசுகிசுக்கப்படும் நடிகை சனம் ஷெட்டி, தற்போது தர்ஷனுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும், தர்ஷனால் தான் பெருமைப்படும் விஷயம், அவரது அணுகுமுறை மற்றும் டாஸ்க் ஈடுபாடு பற்றி, தன்னுடைய சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

11:58:13 on 18 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

பீகார் மாநிலத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வெள்ளத்தால் உயிரிழந்த 3 வயது குழந்தையின் புகைப்படம், வெள்ளத்தின் கோர முகத்தை காட்டியுள்ளது. பீகார் மற்றும் அசாம் மாநிலங்களில் வரலாறு காணாத பெருமழை பெய்து வருகிறது.

11:43:33 on 18 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

”சந்திராயன் 2” விண்கலம் விண்ணில் பறப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து “சந்திராயன் 2” விண்கலத்தை அடுத்த வாரம், அதாவது ஜூலை 20 ஆம் தேதியிலிருந்து 23 ஆம் தேதிக்குள், ஒரு நாளில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ கூறியிருப்பதாக தெரியவருகிறது.

11:35:02 on 18 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் கருவியில் தமிழை புறக்கணித்து இந்தி சேர்க்கப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11:26:58 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

டாட்டூவில் அடுத்த நிலையான 3 டி முறையில் வரையப்படுகின்றன. வெஸ்ட் யார்க்சையர் என்ற இடத்தைச் சேர்ந்த சோலோவிவோவ் என்பவர் தனது வாடிக்கையாளர் ஒருவரின் பின் கழுத்துப் பகுதியில் சிலந்தி ஒன்று நிற்பதுபோல வரைந்துள்ளார்.

11:22:41 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சரவணபவன் அதிபர் ராஜகோபால் உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனையில் காலமானார்.

11:05:19 on 18 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ’ஆடை’ திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், அனைத்து அரசியல் மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, "‘ஆடை’ படத்தில் ஆடையின்றி நடித்திருக்கிறார் அமலா பால். சமூகத்தை சீரழிக்கும் இந்த மாதிரி படங்களை ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10:57:12 on 18 Jul

மேலும் வாசிக்க ie தமிழ்

குல்புஷன் ஜாதவ் வழக்கில் ICJ வழங்கிய தீர்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்த வெற்றி என்று அந்நாடு கூறுவதை மத்திய அமைச்சர் கிண்டல் செய்து ICJ-ன் தீர்ப்பு ஆங்கிலத்தில் உள்ளதால் தான், பாகிஸ்தான் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக நினைத்து கொண்டுள்ளதாகவும், அது அவர்களின் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார்.

10:50:53 on 18 Jul

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னர், அந்த நிறுவனம் பற்றித் தெரிந்து கொள்வது போல, அந்நிறுவனம் எந்த வகையான நேர்காணலை நடத்துகிறது என்பதையும் தெரிந்துகொள்வது நல்லது. இன்டர்வியூ அறையில், நேர்முகக் குழுவினரைக் கண்டதும், புன்னகையுடன், முதல் வணக்கத்தைத் தெரிவியுங்கள். உங்கள் புன்னகை இயல்பாக இருக்க வேண்டும்.

10:43:34 on 18 Jul

மேலும் வாசிக்க விகடன்

1969 ஜூலை 20 ஆம் தேதி மனிதன் நிலவில் கால்வைத்த மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப சாதனை நிகழ்ந்த நாள். ஆனால் அது நம்முடைய தினசரி வாழ்வைப் பாதித்த முக்கியமான மைல்கல்லாகவும் உள்ளது.

10:39:02 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

1969 ஜூலை 20 ஆம் தேதி மனிதன் நிலவில் கால்வைத்த மாபெரும் அறிவியல் தொழில்நுட்ப சாதனை நிகழ்ந்த நாள். ஆனால் அது நம்முடைய தினசரி வாழ்வைப் பாதித்த முக்கியமான மைல்கல்லாகவும் உள்ளது.

10:36:02 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னை புறநகரில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களில் ஆட்களை ஏற்றி சென்ற 38 மோட்டார் சைக்கிள்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை ஒட்டி வந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

10:33:02 on 18 Jul

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மஜத தலைமையிலான அரசின் பெரும்பான்மையை சோதிக்கும் வகையில் இன்று, அம்மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏ-வான ராமலிங்க ரெட்டி, தனது ராஜினாமாவைத் திரும்ப பெற உள்ளதாக கூறியுள்ளார்.

10:27:59 on 18 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பறவைகள் கூடு கட்டும் இடங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பதால், பறவைகள் மனிதர்களை தாக்கும் சம்பவம் அமெரிக்காவில் சாதாரணமாகிவிட்டதாக கானுயிர் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

10:17:50 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கள்ளக்குறிச்சி மற்றும் தூத்துக்குடி அருகே நிகழந்த சாலை விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே சென்னை நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து, சரக்கு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

10:10:27 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

தனுஷ் நடிக்கும் புதிய படம் மூலம் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

09:55:02 on 18 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தரையில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரமுள்ள எதிரியின் இலக்குகளை துல்லியமாக தாக்கும் எஸ் - 400 ரக ஏவுகனைகளை 2023 ஏப்ரலுக்குள் ரஷ்யா வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

09:35:02 on 18 Jul

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ‘லிப்ட்’ என்ற நிறுவனம் ஒற்றை நபர் மட்டும் பயணிக்கக்கூடிய விமானத்தை தயாரித்துள்ளது. ஒற்றை என்ஜின் கொண்ட ‘ஹெக்சா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்துக்கு உள்நாட்டு விமான ஒழுங்காற்று அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.

09:15:02 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

"கடவுளை தரிசிப்பதில் அனைவரும் சமம். யார் வேண்டுமானாலும் கடவுளை தரிசிக்கலாம். அங்கு காத்து நிற்கும் பக்தர்களின் கூட்டம் சீக்கிரமாக நகரச் செய்யும் நடவடிக்கையைதான் எடுக்க வேண்டும்." என்கிறார் சரன் என்ற பக்தர்.

08:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீகாரிலிருந்து ஆலப்புழா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டுவந்த 110 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

08:35:01 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்திலேயே முதல் முறையாக சேலம் மாவட்டத்தில் கால்நடை விவசாயிகளுக்கு பசுந்தீவனம் வளர்க்க உதவும் ஹைட்ரோ போனிக்ஸ் கருவிகள் வழங்கப்பட உள்ளன. இதில் 75 சதவிகிதமான 16,875 ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. மீதமுள்ள 25 சதவிகிதமான 5,125 ரூபாயை மட்டுமே விவசாயிகள் கட்டினால் போதும்.

08:15:01 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.18, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.96ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:05:30 on 18 Jul

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஃபேஸ்புக் நிறுவனம் விரைவில் வாட்ஸ்அப் பேமன்ட் சேவையை இந்தியாவில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் பேமன்ட் சேவைக்கான வெளியீடு இந்திய அரசு கட்டுப்பாடுகளால் தாமதமாகி வந்தது. குறிப்பாக இதுகுறித்த அனைத்து விவரங்களும் இந்திய சர்வெர்களில் சேமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

07:35:01 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

‘ஸ்டோர்ம் ஏரியா 51: நம் அனைவரையும் அவர்களால் தடுக்க முடியாது’ என சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், ‘செப்டம்பர் 20ம் தேதி அதிகாலை 3 மணிக்கு ‘ஏரியா 51’ பகுதிக்கு செல்வோம். அமெரிக்க ராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளை விட வேகமாக முன்னேறிச் செல்வோம்’ என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

07:15:02 on 18 Jul

மேலும் வாசிக்க தினகரன்

காரம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளும்போது, சிலருக்கு வாய்ப்புண் ஏற்படக்கூடும், அவர்கள், கடுக்காய்த் தூளை, படிகாரத்தூளில் கலந்து, அவற்றை, வெதுவெதுப்பான நீரில் இட்டு நன்கு கலக்கி, அந்த நீரில் வாயைக் கொப்புளித்துவர, வாய்ப்புண் பாதிப்புகள் விலகிவிடும்.

06:56:02 on 18 Jul

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பயணியர் வாகன விற்பனை ஜூன் மாதத்தில் 4.6 சதவீதம் சரிந்து மொத்தம் 2.25 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 2.36 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்தன என எப்.ஏ.டி.ஏ., எனும் வாகன முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

06:25:02 on 18 Jul

மேலும் வாசிக்க தின மலர்

தயிரை பகல் நேரத்தில் உட்கொள்வது தான் நல்லது. ஆப்பிளை சாப்பிட சிறந்த நேரம் காலை தான். பருப்பு வகைகளை இரவில் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நிறைந்த உணவுகளை காலையில் சாப்பிடலாம். வாழைப்பழங்களை மதிய வேளையில் சாப்பிடுவது என்பது சிறந்தது. மதிய வேளையில் இறைச்சியைச் சாப்பிடுவது நல்லது.

05:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க மாலை மலர்

அமெரிக்காவில் சாலையோரம் நின்றிருந்த காரிலிருந்து ஜன்னல் வழியாக வெளியேறிய 15 அடி நீளம் பாம்பை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இந்நிலையில், இதுதொடர்பாக டுவிட்டரில், தீயணைப்பு துறையினர், வாகன ஓட்டிகள் செல்லபிராணியான பாம்பு உள்ளிட்ட விலங்குகளுடன் பயணிக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

05:25:01 on 18 Jul

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இண்டிகோ நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகேஷ் கங்வால், அந்நிறுவனத்தின் பங்குகளை விற்க தயாராக இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் அவர், தற்போது இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

04:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் இந்திய சீரிஸ்களில் பாலிவுட் நட்சத்திரங்கள் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஷாருக் கானும், அனுஷ்கா ஷர்மாவும் நெட்ஃப்ளிக்ஸில் புதிய சீரிஸ்களைத் தயாரிக்கவுள்ளனர்.

04:25:02 on 18 Jul

மேலும் வாசிக்க மின்னம்பலம்

புதுக்கோட்டை விவசாயி ஒருவர், தன் வீட்டில் தூர்ந்து போய்க்கிடந்த கிணற்றைச் சீரமைத்து, வீட்டின் மேற்கூரையில் விழும் ஒரு துளி மழைநீரையும் வீணாக்காமல் சேகரித்து, அதைக் குடிநீராகவும், மரங்கள் வளர்க்கவும் பயன்படுத்தி அசத்தி வருகிறார்.

03:55:01 on 18 Jul

மேலும் வாசிக்க விகடன்

மோடி 2.0இன் அடுத்த பெரிய இலக்கு, அடுத்த 100 நாட்களுக்குள் எட்டு கோடி இல்லத்தரசிகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்கு (பிபிஎல்) குடும்பத்திற்குக் கீழே வாழும் பெண்கள் உறுப்பினர்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

03:25:01 on 18 Jul

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, சொட்டுநீர்ப் பாசன முறை மூலம் பந்தல் காய்கறி வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர் விவசாயிகள். மடத்துக்குளம் வட்டாரத்துக்கு உட்பட்ட விவசாயிகள், திருமூர்த்தி, அமராவதி அணைகளின் நீரை நம்பி உணவு தானியங்களை உற்பத்தி செய்கின்றனர்.

02:55:02 on 18 Jul

மேலும் வாசிக்க காமதேனு

தனியார் வங்கியான பெடரல் வங்கி நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.384 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தை விட 46 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டு (2018-19) ஜூன் காலாண்டில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.262 கோடியாக இருந்தது.

02:25:02 on 18 Jul

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மேலும் வாசிக்க