View in the JustOut app
X

ஐந்தாண்டுத் திட்டங்கள் நினைவிருக்கிறதா? இங்கே அது பிரபலமாகப் பேசப்படுவது வழக்கம். ஐந்தாண்டுகளில் உங்களால் பொருளாதாரத்தை மாற்றிக் காட்ட முடியும் என்பதைக் கம்யூனிஸ்ட் ரஷ்யா செய்து காட்டியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் கிரெம்ளின் பொருளாதாரம் மட்டும் வளரவில்லை, மாஸ்கோவின் அரசியல் செல்வாக்கும் அதிகரித்துள்ளது.

02:30:17 on 19 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகம் மற்றும் புதுவையில் அக்டோபர் 23ஆம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:00:09 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பழங்களை பிரஷ்ஷாகவும், பழங்களில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உப்பு உதவும். சிட்ரஸ் பழங்களுடன் உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை சமநிலையாக்குவதோடு, செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

01:27:01 on 19 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சென்னையில் மட்டும் 60 இடங்களில் கொள்ளையடித்ததாக முருகன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். அதைத்தொடர்ந்து தமிழக போலிஸார் முருகனிடம் நடத்திய விசாரணையில், சென்னையின் முக்கியப் பகுதியான அண்ணாநகர், கே.கே.நகர், திருமங்கலம், அமைந்தகரை போன்ற பகுதிகளில் முருகன் கைவரிசையைக் காட்டியது தெரியவந்துள்ளது.

12:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் அணிக்கான கேப்டனாக செயல்பட்ட சர்ஃபராஸ் அகமதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திடீரென நீக்கியுள்ளது. தொடர் தோல்வியின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

12:27:02 on 19 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் அமிர்கத் தாலுகாவில் உள்ளது கட்டிசித்தாரா என்ற கிராமத்தில் யாராவது மது குடித்தது தெரியவந்தால் அவர்களுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், மது குடித்தவர் அந்த கிராமத்துக்கே மட்டன் பிரியாணி விருந்து அளிக்க வேண்டும்.

11:57:02 on 19 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தற்போது வைரலாகும் போலி 1000 ரூபாய் நோட்டின் புகைப்படம் பல மாதங்களுக்கு முன்பிருந்தே சமூக வலைதளங்களில் உலவியதுதான். இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்படுகிறது என்ற தகவலால் மீண்டும் பலரால் பரப்பப்பட்டு வருகிறது. புதிய 1000 ரூபாய் நோட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை.

11:30:24 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஐநா.சபையின் தலைமை அலுவலகம் வார இறுதியை முன்னிட்டு மூடப்பட்டு விட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிதிப் பிரச்சினை காரணமாக அலுவலகம் இயங்காது என்று ஐநா.சபையின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:00:26 on 19 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”நாங்கள் கொண்டு சென்ற மனுவை அமைச்சர் வாங்கியே பார்க்கவில்லையே? நாங்கள் அதிமுகவும் கிடையாது திமுகவும் கிடையாது. எங்களுக்கு எந்த கட்சியும் கிடையாது. அமைச்சரை முன்ன பின்ன நாங்கள் பார்த்தது கூட கிடையாது. அன்றுதான் முதல்முறையாக பார்க்கிறோம்” என்கிறார் நாங்குநேரி கேசவனேரி ஜமாத் தலைவர்.

10:27:01 on 19 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்பீர்களா? என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இந்துக்களுக்கு சாதகமாக வரும் என நாங்கள் நம்புகிறோம்’ என்று கூறினார்.

09:57:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

”நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. எனவே, இன்று மாலை 6 மணிக்குள் தொகுதிக்குள் இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரும் வெளியேற வேண்டும்.” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்தார்.

09:27:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மோட்டோ இ6 பிளே ஸ்மார்ட்போன் பார்க்க மோட்டோ இ6 போன்றே காட்சியளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 16:9 டிஸ்ப்ளே, நாட்ச் இல்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

08:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

சென்னையை அடுத்த ஆவடி சுற்றுவட்டாரத்தில் மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், பூவிருந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் மர்மக்காய்ச்சலால் இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

08:38:25 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ்-ஐ’ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் அந்நோய்த் தொற்று மற்றவர்களுக்கும் எளிதாகப் பரவும்.

07:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினமணி

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், ராமர் கோயில் கட்டும் வாய்ப்பு இரண்டு இந்து அமைப்புகளில் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி நீடிக்கும். சன்னி வக்பு வாரியத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தாலும், அந்த நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முஸ்லிம் அறிவுஜீவிகள் குழுவினர் கூறியுள்ளனர்.

06:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கும் திரைப்படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டு படபூஜையை நடத்தியிருக்கிறார்கள். நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய டீம் அப்படியே வலிமை திரைப்படத்திலும் பணியாற்றுகிறது. யுவன் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இத்திரைப்படத்தில் ஹீரோயின் இல்லை என்கின்றனர் படக்குழுவினர்.

05:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் வெளியான நோக்கியா 105 போனின் அப்டேட் வெர்ஷனாக நோக்கியா 110 உள்ளது. MP3s, எப்ஃஎம் ரேடியோ, ஸ்நேக் கேம், ரியர் கேமிரா என ஒரு நாஸ்டாலஜிக் பேக்கேஜ் ஆகவே நோக்கியா 110 வெளியிடப்பட்டுள்ளது. 1,599 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

04:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சீனாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2% ஆக இருந்தது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் இது 6% ஆக குறைந்துள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகப் போரின் விளைவாக, கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது.

03:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஜுரம் வரும் ஸ்வட்டர் கண்டிப்பாக போடக்கூடாது. ஏனெனில் இது உடல் சூட்டை தக்கவைத்து ஜூரத்தை இன்னும் அதிகரிக்க செய்யும். எனவே கண்டிப்பாக ஸ்வட்டர் போட கூடாது. இதனால் சில குழந்தைகளுக்கு சுர வலிப்பு எனப்படும் febrile fits வர வாய்ப்பு உண்டு. எடை குறைவான குழந்தைகளுக்கு உடல் வெப்ப இழப்பு ஏற்படாமல் இருக்க ஸ்வட்டர் பயன்படுத்தலாம்.

02:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

வழக்கமாக ஆர்.ஏ.சி மற்றும் காத்திருப்பு பயண டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகள் இருக்கைக்காக டி.டி.இ-யைத் தேடுவார்கள். அதற்குப் பதிலாக சூப்பர்ஃபாஸ்ட் ரயிலில் பயணிக்கும் பயணிகள் டி.டி.இ.வை சந்திக்க ஏ-1 கோச்சில் உள்ள பெர்த் எண் 5க்கு செல்ல வேண்டும்.

01:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

OnePlus 5T மற்றும் OnePlus 5-க்கான OxygenOS 9.0.9 அப்டேட் அக்டோபர் 2019-ல் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது. மென்பொருள் பதிப்பு விரிவாக்கப்பட்ட Screenshots அம்சத்துடன் ஒரு சிக்கலை சரிசெய்கிறது. மேலும், பொதுவான பிழை திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் உள்ளன.

12:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

#Switch_To_BSNL என்ற ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் டிரெண்டாகி வருகிரது. இதற்கு முன்னர் மைக்ரோ பிளாகிங் தளத்தில் பிஎஸ்என்எல் 4ஜி பிரபலமானதை தொடர்ந்து இப்போது டிவிட்டரில் பிஎஸ்என்எல் டிரெண்டாகி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

11:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

குவாண்டாஸ் போயிங் 787 ரக விமானம் உலகிலேயே முதல் முறையாக 20 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட தூரம் பயணிக்கும் விமான சேவையை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது. இது ஐம்பது பயணிகளுடன் நியூயார்க் நகரிலிஇருந்து சிட்னி நகருக்கு தொடர்ந்து 20 மணி நேரங்களுக்கு மேலாக பயணிக்க உள்ளது.

11:00:04 on 18 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சமீபத்திய காலகட்டங்களில், நகர்ப்புறத்துடன் ஒப்பிடும்போது கிராமப்புற வளர்ச்சி மிக வேகமாக குறைந்துள்ளது. கிராமப்புற எஃப்.எம்.சி.ஜி வளர்ச்சி குறைந்துள்ளதாகவும், நகர்ப்புறத்துடன் ஒப்பிடும் போது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லறை விற்பனை சரிந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

09:57:01 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சாதனை மேல் சாதனைகளை புரிந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமம், ரூ.9 லட்சம் கோடி சந்தை மதிப்பை கடந்த முதல் இந்திய நிறுவனம் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த 2018 ஆகஸ்டில் 8 லட்சம் கோடியை கடந்தது.

08:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பாபர் மசூதி அமைந்திருந்த ஒட்டுமொத்த இடத்தைப் பங்கு போடாமல், முழுமையாகத் தங்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்பது முஸ்லிம், இந்து ஆகிய இரு தரப்பினரின் வாதமாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆனால், ஒரு தரப்பினருக்கே ஒட்டுமொத்த நிலத்தையும் கொடுத்துவிட வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

08:27:02 on 18 Oct

மேலும் வாசிக்க விகடன்

ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் நிறுவனங்களுக்கு அபராதம் போட வேண்டும் என டிராய்க்கு (TRAI) ஜியோ கடிதம் எழுதியுள்ளது. அதில், ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல் செய்யும் மோசடியால் ஜியோ நிறுவனத்துக்கு நிமிடத்துக்கு 52 காசுகள் இழப்பு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது.

08:00:09 on 18 Oct

மேலும் வாசிக்க Behind Woods News

”சிம்பு ஒரு நல்ல கலைஞன். இப்போ அசுரன் படம் பார்த்தேன், தனுஷை பாராட்டாம இருக்க முடியாது. யோசித்துப் பார்க்கும் பொழுது எனக்கு சிம்பு மேல் கோபம்தான் வருகிறது. இவ்வளவு திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்துகிடப்பதை பார்த்து கோபம்தான் வருகிறது.” என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியுள்ளார்.

07:27:01 on 18 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

பாஜக பிரமுகர்கள் பிரச்சாரம் செய்வதை அதிமுக விரும்பவில்லை என்றும், அதனால்தான் பாஜக தலைவர்கள் பிரச்சாரத்தைத் தடுக்கிறார்கள் என்றும் டெல்லிக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. அதிமுக பாஜக இடையே இடைத்தேர்தல் விவகாரத்தில் ஆரம்பத்தில் ஏற்பட்ட விரிசல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

06:57:01 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே கணவரை மனைவி வேறொரு பெண்ணிடம் விற்ற சம்பவம் நடந்துள்ளது. சில ஆண்டுகளாகவே கணவர் தனது வீட்டை விட்டு வெளியேறி, அந்த பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இது தெரிந்திருந்தும் மனைவி அடிக்கடி சென்று கண்டித்து வந்துள்ளார். மேலும், தன்னுடன் வந்துவிடுமாறும் கணவரை கேட்டுள்ளார்.

06:29:54 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு லாரிகளில் வழங்கும் தண்ணீருக்கான கட்டணத்தை குடிநீர் வாரியம் உயர்த்தியுள்ளது. லாரியில் வழங்கும் 9000 லிட்டர் தண்ணீருக்கு ரூ.700 கட்டணம் வசூலித்த நிலையில் 735ஆக உயர்த்தியுள்ளது. மேலும் 6 ஆயிரம் லிட்டர் லாரி குடிநீரின் விலை 435லிருந்து 499ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

06:00:14 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் இந்து மகா சபா தலைவர் கமலேஷ் திவாரி படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் கமலேஷ் திவாரி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

05:30:23 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தப்படுவதோ, மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள், மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.

04:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

அரசு துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்களை, பிரதமர் மோடி தனியாருக்கு விற்று வருவதாகவும், இதனால் மிகப் பெரிய முரண்பாடு ஏற்பட்டு முதலாளித்துவம் அதிகரித்து வருவதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

04:30:13 on 18 Oct

மேலும் வாசிக்க தினமலர்

விழுப்புரம் மாவட்டம் அரோவில் அருகே உள்ள குயிலாம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடன் பிரச்சினையால் தனது மனைவி மற்றும் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

03:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

இஸ்லாமியர்களிடம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரங்கெட்ட முறையில் பேசியதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. வடநாட்டு பா.ஜ.க அமைச்சர் போல தன்னை நினைத்துக் கொண்டு செயல்படும் ராஜேந்திரபாலாஜியை அ.தி.மு.கவின் தலைமை கட்டுப்பட்டுத்த வேண்டும் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.

03:30:00 on 18 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

இந்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் புல்வாமா மற்றும் ஷோபியான் மாவட்டங்களில் புதன்கிழமை நடந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் சட்டீஸ்கரில் இருந்து வந்திருந்த தொழிலாளி ஒருவரும், பஞ்சாபில் இருந்து வந்திருந்த ஆப்பிள் வியாபாரி ஒருவரும் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

03:00:06 on 18 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் லாபம். விவசாயிகளின் பொருளாதார சூழல் பற்றி பேசுகிறது இப்படம். இதனையடுத்து, விஜய்சேதுபதி படத்திற்காக பயன்படுத்தபோகும் விவசாய சங்க கட்டடத்தை செட்டாக அமைக்காமல் உண்மையான கட்டிடம் ஒன்றை கட்ட சொல்லி உள்ளார்.

02:29:52 on 18 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

நடிகை ஆண்ட்ரியா, திருமணமான ஒருவருடன் தான் தவறான உறவில் இருந்ததாகவும் உடலளவில் அவர் காயப்படுத்திவிட்டதாகவும் கூறியிருந்தார். அவர் யார் என்பதை கூறாத ஆண்ட்ரியா முறிந்த சிறகுகள் என்ற கவிதை புத்தகம் மூலம் அவர் யார் என கூற இருந்தார். புத்தகமும் நேற்று வெளியாவதாக இருந்தது, ஆனால் வரவில்லை.

02:00:28 on 18 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி, பேட்ரிக் டே என்ற வீரருக்கும் சார்லஸ் என்ற வீரருக்கும் இடையே நடைபெற்றது. அப்போது சார்லஸ் விட்ட சரமாரியான குத்துகளில் பேட்ரிக் டே நிலைகுழைந்து கீழே சாய்ந்தார். அவரது தலையில் குத்துகள் விழுந்ததால் சுயநினைவை இழந்தார்.

01:27:02 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

”அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஜெயலலிதாவை மனதில் வைத்துக்கொண்டு சசிகலா குறித்து கருத்து சொல்லியிருக்கிறார். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை நான் மனதாரப் பாராட்டுகிறேன். விரைவில் சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா, டிடிவி தினகரனின் கட்சிக்கெல்லாம் போகமாட்டார்.” என புகழேந்தி தெரிவித்தார்.

12:57:02 on 18 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

11:57:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினமணி

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நலக் குறைவு காரணமாக மும்பை சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இணையான தனி அறையில், கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

11:30:05 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

டெல்லியில் இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.45-க்கு விற்பனையாகி வந்த நிலையில், நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டது. அதுவும் தக்காளியின் தரம் மற்றும் விற்பனை செய்யப்படும் இடங்களை பொறுத்து ரூ.80 வரை கொடுக்க வேண்டி இருப்பதாக டெல்லிவாசிகள் குமுறுகின்றனர்.

11:00:18 on 18 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

டெல்லியில் இருந்து, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூலுக்கு சென்ற பயணியர் விமானத்தை, பாகிஸ்தான் போர் விமானங்கள் நடுவானில் வழிமறித்த சம்பவம் நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

10:27:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினமலர்

அயோத்தி வழக்கு குறித்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் கூடிய அரசியல் சாசன அமர்வின் நீதிபதிகள், சுமார் 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், விசாரணையில் முன்வைக்கப்பட்ட வாதங்கள், அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

09:57:02 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

‘பிஜேபியை கண்ணை மூடிட்டு எல்லோரும் எதிர்த்துட்டு இருக்காங்க. அவங்க நல்லது பண்ணினால் பாராட்டலாம். தப்பு செஞ்சா தட்டிக் கேட்கலாம்’ என்று சொல்லியிருக்கிறார் ரஜினி. அதன்பிறகு முருகதாஸ் கொஞ்சம் அடக்கியே வாசிக்க ஆரம்பித்ததாகச் சொல்கிறார்கள்.

09:27:01 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கூகுள் நிறுவனம் பிக்சல் பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்பட்ஸ் இயர்டிப் மாற்றும் வசதி கொண்டிருக்கிறது. இது காதுகளில் சவுகரியமாக பொருந்தி கொள்ளும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 179 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.12,790) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

08:57:01 on 18 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில், மறுசீரமைப்பு சட்டம் விதி 54-ன் படி, ஜம்மு-காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை கலைப்பதற்கான உத்தரவை பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது.

08:25:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.09, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.04 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:18 on 18 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மதுரை மாவட்டம் பாலமேட்டிற்கு அருகில் உள்ள கிராமத்தில் பள்ளிக்கூட மாணவன் ஒருவனின் முதுகை சக மாணவன் பிளேடால் கிழித்த சம்பவம் ஜாதி தொடர்பான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பாலமேடு காவல்நிலையத்தில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

07:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தொலைதூர தம்பதிகளுக்கான முதல் வில்லன், பரஸ்பரம் நம்பிக்கையின்மைதான். 'நம்ம பக்கத்துல இல்லாததால நமக்குத் துரோகம் பண்ணிடுவாளோ/னோ' என்று இருவருமே மனதைப்போட்டு வருத்திக்கொள்ள எக்கச்சக்க வாய்ப்பிருக்கிறது. இதற்கு உங்கள் துணையை நம்புவதைத் தவிர வேறு வழியேயில்லை.

06:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க விகடன்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது. இதனை போரிஸ் ஜான்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதில், ”கட்டுப்பாட்டை திரும்பப் பெறும் ஒரு புதிய ஒப்பந்தம் எங்களுக்கு கிடைத்துள்ளது.”, என பதிவிட்டிருந்தார்.

05:55:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினமலர்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே மீண்டும் போட்டிகள் நடத்துவதற்கு இரண்டு நாடுகளின் அரசுகளும் அனுமதியளிக்க வேண்டியது அவசியம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

04:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

‘மெட்ராஸ் ஐ’ நோய் சென்னையில் அதிகமாக பரவியநிலையில் தற்போது தென் மாவட்ங்களில் இந்த நோய் பரவத்தொடங்கியுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ‘மெட்ராஸ் ஐ’ நோயாளிகள் சிகிச்சைக்கு வர ஆரம்பித்துள்ளனர்.

03:55:02 on 18 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அக்டோபர் 18 முதல் அக்டோபர் 31 வரை வாடிக்கையாளர்கள் ரூ.101 செலுத்தி Vivo போனை வாங்கலாம். Vivo V17 Pro, Vivo V15 Pro, Vivo Z1x 8GB RAM, Vivo V15, Vivo S1, Vivo Y17, Vivo Y15 மற்றும் Vivo Y12 ஆகிய தேர்ந்தெடுக்கப்பட்ட Vivo போன்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.

02:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உலகில் உள்ள நாடுகளில் ஒரே ஒரு நாட்டில் மட்டுமே பெட்ரோல், டீசல் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுகின்றது. அந்த நாடு வெனிசுலா!. ஆனால் இந்த இலவச பெட்ரோலால் அந்நாட்டு மக்களின் வாழ்வு எந்த வகையிலும் மேம்படவில்லை - என்பதுதான் ஆச்சர்யமான உண்மை!.

01:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

தமிழ் சினிமா மெல்ல பாலிவுட்டிற்கு நிகராக வளர்ந்து வருகின்றது. படங்களின் தரம் வைத்து பார்த்தால் பாலிவுட்டையே மிஞ்சும் நிலையில்தான் உள்ளது. இந்த வருடம் ஆரம்பத்திலேயே பேட்ட, விஸ்வாசம் சேர்த்து தமிழகத்தில் மட்டுமே ரூ.240 கோடி வசூலை கொடுத்தது, இது ஆல் டைம் ரெக்கார்ட் என்றே கூறப்படுகின்றது.

12:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

முகம் மிருதுவாகவும், ரோஸ் நிறத்துடனும் இருக்க ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால், பச்சை பயிறு மாவு, மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளக்கும். கரும்புள்ளி உள்ள இடத்தில், பச்சை பயிருடன் தயிர் சேர்த்து தடவ வேண்டும்.

11:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

புதிய ரெட் மேஜிக் 3எஸ் ஸ்மார்ட்போனில் 6.65 இன்ச் FHD+ HDR AMOLED 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, ஹெச்.டி.ஆர். வசதி, ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் வழஙஅகப்பட்டுள்ளது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ.35,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. இவர் மொத்தமாக மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், உக்னே பெரவேரி செவைத் என்ற 22 வயது இளம் பெண்ணுடன் நெருக்கமாக பழகி, அவரை கர்ப்பமாக்கியுள்ளார்.

09:57:02 on 17 Oct

மேலும் வாசிக்க Behind Woods

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளான இன்று, அவரது புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ’பெண்குயின்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண் வேடத்தில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு, கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது.

08:57:02 on 17 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

கிரேக்க கணித விகிதத்தின் அடிப்படையில் சூப்பர் மாடலான பெல்லா ஹடிட், உலகிலேயே அழகான பெண் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை லண்டனின் மிகப் பிரபலமான முக ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் ஜூலியன் டி சில்வா சோதித்துப் பார்த்து தெரிவித்துள்ளார்.

08:27:01 on 17 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

''எல்லோரையும் போல களத்தில் எனக்கும் கோபமும், விரக்தியும் ஏற்படும். ஆனால் அதிகப்படியான விரக்தியை வெளிப்படுத்தினால் அது அணியின் தவறான போக்கிற்கு வழிவகுக்கும். சில நேரங்களில் கோபமாக உணர்வேன், சில நேரங்களில் ஏமாற்றமடைவேன்.” என தோனி கூறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

07:57:02 on 17 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

மெக்ஸிகோ எல்லை வழியாக அமெரிக்காவில் ஊடுருபவர்கள் குறித்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வற்புறுத்திய நிலையில், அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 311 இந்தியர்கள் மெக்ஸிகோவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாபை சேர்ந்தவர்கள்.

07:27:01 on 17 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் போதும். இப்போதெல்லாம் சிறிய மற்றும் பெரிய தொகை லோன்கள் ரொம்ப ஈசியாகவே கிடைத்துவிடுகிறது. இது மிகப்பெரிய பலம் என்றாலும் ஆனால் இந்த "லோன் ஆப்"கள் மூலம் மிகப்பெரிய மோசடியும் நடைபெற்று வருகிறது என்பது பலருக்கு தெரியாது.

06:55:04 on 17 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை, அமலாக்கப்பிரிவு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரத்தை 15 நாள் விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில் 7 நாள் விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

06:29:37 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் மாற்றியுள்ளது.

06:25:02 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, யோகி பாபு, விவேக், கதிர், வர்ஷா பொல்லாமா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிகில்'. இப்படம் இம்மாதம் 25ஆம் தேதி வெளியாகும் என அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

06:19:16 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

குர்து போராளிகளை எதிரியாக கருதும் துருக்கி, வான் மற்றும் தரை வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இப்போரை நிறுத்த குர்து- சிரியா ராணுவம் இணையும்படி அண்மையில் ரஷ்யா கூறியது. இதைத்தொடர்ந்து, வடக்கு சிரியா முழுவதும் ரஷ்யா, சிரியா மற்றும் குர்து ஜனநாயகப்படையின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

05:57:01 on 17 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நாங்குநேரி களக்காடு ஒன்றியம் கேசவனேரி பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் ஜமாத்தினர், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைச் சந்திக்கச் சென்றுள்ளனர். அப்போது அவர்களை ராஜேந்திர பாலாஜி உதாசினப்படுத்தி பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

05:25:01 on 17 Oct

மேலும் வாசிக்க தந்தி டிவி

பிக்பாஸ் 3வது சீசன் கலகலப்பாக சென்றதுக்கு காரணம் சாண்டி. பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடக்க இருப்பதால் நடன பயிற்சியில் போட்டியாளர்கள் உள்ளார்கள். அண்மையில் சாண்டி நடன ஸ்டூடியோவில் ஷெரின் டான்ஸ் பயிற்சி பெற்றுள்ளார். அப்போது இருவரும் காமெடி வீடியோ ஒன்று செய்துள்ளனர்.

04:57:01 on 17 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

”நீங்களும் ஓட்டுப் போட மாட்டீங்க. கிறிஸ்டினும் எங்களுக்கும் ஓட்டுப் போட மாட்டாங்க. அப்புறம் ஏன் உங்களுக்கு நான் செஞ்சு தரணும்? ஜம்மு காஷ்மீர்ல உங்கள ஒதுக்கிவச்ச மாதிரி இங்கயும் ஒதுக்கி வக்க வேண்டியிருக்கும். வெறும் 5% இருக்குற உங்களால என்ன செய்ய முடியும்?” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாகக் கூறப்படுகிறது.

04:27:02 on 17 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டிசம்பர் 6ஆம்தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கும் என்று பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் கூறியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் முயற்சியால் இது சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

03:57:01 on 17 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பஜாஜ் நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. எல்இடி லைட், டிஜிட்டர் மீட்டர் என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் தயாராகி உள்ள செடாக் மின்சார இருசக்கர வாகனம், அடுத்தாண்டு முதல் விற்பனைக்கு வருகிறது. 5 மணி நேரம் ரீசார்ஜ் செய்தால், 85 - 95 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:57:01 on 17 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

தென்கிழக்கு அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், தஞ்சை, திருவாரூரில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அதிகபட்சமாக 14.செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

02:25:01 on 17 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

”2024ம் ஆண்டிற்குள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வெளியேற்றப்படுவார்கள். 1990 முதல் காங்., ஆட்சியில் இருந்தபோது மட்டும், 40 ஆயிரம் மக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். ஆனாலும், அவர்கள் 370வது பிரிவை நீக்கவில்லை.” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

01:57:02 on 17 Oct

மேலும் வாசிக்க தினமலர்

“மகாத்மா காந்தியை கொலை செய்ய சதி செய்ததாக மட்டுமே சாவர்க்கர் மீது குற்றச்சாட்டு உள்ளது. அதேவேளையில், நாதுராம் கோட்சே தான் கொலையை அரங்கேற்றினார். காந்தியின் 150வது பிறந்த தினத்தை கொண்டாடிய இந்த ஆண்டு, நாதுராம் கோட்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்” என காங்கிரஸ் சாடியுள்ளது.

01:25:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஆள்மாறாட்டம் மூலம் நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைதான மாணவன் உதித் சூர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஜாமின் வழங்கியது. அதே சமயம், உதித் சூர்யாவின் தந்தை வெங்கடேசன் ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

12:57:02 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

குர்திஷ் பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ”குர்திஷ்கள் ஒன்றும் ஏஞ்சல்கள் இல்லை. துருக்கியில் குர்திஷ் தன்னாட்சிக்காகப் போராடி வரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி, பயங்கரவாத ஐ.எஸ் அமைப்பைவிட மிகவும் மோசமானது” எனக் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

12:27:01 on 17 Oct

மேலும் வாசிக்க விகடன்

கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் திமுக அணி 51.22% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதிமுக அணி 30.62% பெற்றிருக்கிறது. வரவிருக்கும் இடைத்தேர்தலில் இரு அணிகளின் வாக்குப் பங்கீடும் இதே விகிதத்தில் இருக்குமா அல்லது மாற்றங்கள் ஏற்படுமா என்பதை தேர்தல் முடிவு சொல்லும்.

12:08:57 on 17 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதிக்கு உட்பட்ட நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் திமுக அணி 51.22% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. அதிமுக அணி 30.62% பெற்றிருக்கிறது. வரவிருக்கும் இடைத்தேர்தலில் இரு அணிகளின் வாக்குப் பங்கீடும் இதே விகிதத்தில் இருக்குமா அல்லது மாற்றங்கள் ஏற்படுமா என்பதை தேர்தல் முடிவு சொல்லும்.

12:00:21 on 17 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் சிக்கிய சுரேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக கூறப்படுகிறது. அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

11:30:09 on 17 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

கோஸ்டாரிகா நாட்டின் பாஹியா பல்லேனா என்ற இடத்தில் உள்ள டொமினிகல் கடற்கரையில், 8 அடி நீளம் கொண்ட உப்பு நீர் முதலை ஒன்று கரையில் விரித்து வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கிக் கொண்டது. இதனைக் கண்ட சுற்றுலாப் பயணிகளில் சிலர் துணிச்சலுடன் அதன்மீது துணியைப் போட்டு பிடித்தனர்.

10:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

36 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலிக்கு விமான சேவை துவங்கியது. சென்னையில் இருந்து ஏர் இந்தியாவின் அலைன்சர் விமானம், யாழ்ப்பாணம் கிளம்பி சென்றது. இலங்கையில் 1983இல் நடந்த உள்நாட்டு போர் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

10:27:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினமலர்

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்தில் தொடா்ந்து 73வது நாளாக புதன்கிழமையும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. பிரதான சந்தைப் பகுதியில் உள்ள கடைகள் மூடியிருந்ததாகவும், பொதுப் போக்குவரத்து வாகனங்கள் முற்றிலுமாக இயங்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

09:57:01 on 17 Oct

மேலும் வாசிக்க தினமணி

அசுரன் படம் மட்டுமல்ல பாடம் என திமுக தலைவர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் 'பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்!” எனத் தெரிவித்துள்ளார்.

09:27:01 on 17 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சவுதி அரேபியாவின் மதினா அருகே நிகழ்ந்த பேருந்து விபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 35 பேர் உயிரிழந்துள்ளனர். சவூதி அரேபியாவின் மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது பேருந்து மோதியது.

08:57:41 on 17 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பிரிட்டனைச் சேர்ந்த பிரிட்டிஷ் சைபர் பாதுகாப்பு அமைப்பு ஒன்று ஆபத்துத் தரும் 15 செயலிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ‘image editor’, ‘background cutout’, ‘autocut photo’ மற்றும் ‘autocut picture’ ஆகியன போட்டோ எடிட்டிங் சார்ந்த பெயர் கொண்ட செயலிகளின் பெயர்களைக் கண்டாலே அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

08:57:01 on 17 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

07:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கருப்பையின் உள்ளே உள்ள குழந்தையைச் சுற்றி அம்நியோட்டிக் திரவம் இருக்கிறது. இது குழந்தையை பல விதங்களில் பாதுகாக்கிறது. அமுக்க விசைகளில் இருந்து குழந்தையைப் பாதுகாக்க இது உதவுகிறது. இந்தத் திரவத்தைச் சுற்றி அம்நியோட்டிக் மென்சவ்வு உள்ளது. இந்த மென்சவ்வு எனப்படும் உறை பிரசவம் ஆரம்பித்த பின்னே உடையும்.

06:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், கவிஞர் அல்லாமா இக்பாலின் 'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' என்னும் புகழ்பெற்ற வரிகளை பாடினர். இதை அறிந்த உள்ளூர் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தலைவர்கள் புகார் அளித்தனர்.

05:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்தியாவில் Tecno Camon 12 Air-ன் விலை ரூ. 9,999-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஆஃப்லைன் சில்லறை கடைகள் வழியாக கிடைக்கிறது. இந்த போன் Bay Blue மற்றும் Stellar Purple நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இது 4,000mAh பேட்டரியில் இயங்குகிறது.

04:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய ஓபிஎஸ், அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து அதிமுக ஆட்சியில் பொங்கல் பண்டிகைக்கு 1000 வாங்கினீர்களா? இல்லையா...என்று கேட்டார். அதுக்கு பொதுமக்கள் வாய்திறக்காததால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ், பணம் வாங்கிவிட்டு வாயே திறக்க மாட்டீங்களே என்றார்.

03:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

ஒன் பிளஸ்(OnePlus) நிறுவனம் தனது ஒன் பிளஸ் டிவி கியூ 1(OnePlus TV Q1) மற்றும் ஒன் பிளஸ் டிவி கியூ 1 ஃப்ரோ ( OnePlus TV Q1 Pro) தொலைக்காட்சிகளுக்கான சலுகைகளை அமேசான் இந்தியா வழங்குகிறது. நோ கோஸ்ட் இ.எம்.ஐ(no-cost EMI), எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் மற்றும் வங்கி சலுகைகள் ஆகியவை இவற்றில் அடங்கும்.

02:55:02 on 17 Oct

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கீரைகளில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சீராக இருக்கும். அடிக்கடி உணவில் கீரை சேர்த்து கொள்வதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் தடுக்கப்படுகிறது. கீரைகளில் லூடின் என்னும் ஊட்டச்சத்து இருப்பதால் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும்.

01:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரச்சனைகளை சந்தித்து வருபவர் மீரா மிதுன். இப்போது அவர் பீச்சில் நின்றுகொண்டு சேரனைப் பற்றி சில விஷயங்களை கூறியுள்ளார். அவர் எப்படி தன்னிடம் நடந்துகொண்டார், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஆண்கள் கோழைகள் என நிறைய பேசியுள்ளார்.

12:55:01 on 17 Oct

மேலும் வாசிக்க சினி உலகம்

கடன் சுமையால் தவித்து வரும் ஏர் இந்தியா (Air India) நிறுவனத்திற்கு மீண்டும் ஒரு சுமையாக, எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருள் வழங்கமாட்டோம் என அறிவித்துள்ளன. இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு மட்டும், 2 ஆயிரத்து 700 கோடி ரூபாயை ஏர் இந்தியா நிறுவனம் செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

11:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க Behind Woods

ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘ராஜீவ் காந்தியின் படுகொலைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பில்லை’ என விளக்கி விடுதலைப் புலிகள் அமைப்பு முன்னர் வெளியிட்ட அறிக்கை வைரலாகி வருகிறது.

10:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

விஜய் ஹசாரே டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடரின், மும்பை - ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையேயான போட்டியில், 17 வயது ஆகும் ஜெய்ஸ்வால் 154 பந்தில் 203 ரன்கள் குவித்தார். இதன் மூலம் ‘லிஸ்ட் ஏ’ (50 ஓவர் கிரிக்கெட்) போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

09:55:01 on 16 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

மேலும் வாசிக்க