View in the JustOut app
X

கோபமும் சண்டையும் நிகழ்ந்தபிறகு ஆக்ரோஷமாக செக்ஸ் வைத்துக்கொள்வது, கடமைக்கு உறவு கொள்வது, எந்தவித விளைவுகளுமற்ற செக்ஸை பேணுவது என்றிருக்கும் தம்பதியரில் சிலர் மனநல மருத்துவர்களை நாடுகின்றனர். அதேநேரத்தில் செக்ஸில் திருப்தியை உணரும் ஜோடிகள் இடையே தகவல் தொடர்பில் வெளிப்படைத்தன்மை உள்ளது.

04:15:01 on 16 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

3வது ஓவரை ஆமிர் வீசும் போது ஓடி வந்து பந்தை வீசிவிட்டு வீச்சை முடிக்கும் போது பிட்சிற்குள் ஓடினார். இதனையடுத்து நடுவர் முதல் எச்சரிக்கை விடுத்தார். பிறகு இன்னிங்சின் 5வது ஓவரின் 5வது பந்தை ராகுலுக்கு வீசும்போதும் பந்து வீச்சை முடித்து விட்டு பிட்சிற்குள் ஓடிவந்தார். இப்போது 2வது முறையாக எச்சரிக்கப்பட்டார்.

04:00:09 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

`கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பில் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்தன. இதனால் பசுமையான எங்க பகுதி பாலைவனமாக மாறிவிட்டது மீண்டும் பசுமை பூமியாக மாற்ற வேண்டும்' என பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் மரக்கன்றுகளை இலவசமாக கொடுப்பதுடன், வீட்டுக்கு மரக்கன்றுகளை நட்டு கொடுத்தும் வருகின்றனர்.

03:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க விகடன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி 10 ஓவரின் முடிவில் 53 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா 37 ரன்களுடனும், ராகுல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

03:46:04 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

”பிரதமர் நரேந்திர மோடி துணிவுமிக்கவர். ராமர் கோவில் விவகாரத்தில் மத்திய அரசு துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். எனவே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்” என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

03:35:02 on 16 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த 2019-20ஆம் கல்வியாண்டில் முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

03:18:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினமணி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது பற்றி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். மேலும் அவர் கடந்த 2019-20ஆம் கல்வியாண்டில் முறைகேடான மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

03:15:01 on 16 Jun

மேலும் வாசிக்க தினமணி

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இளைஞர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அண்ணப்பாலம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி இளைஞர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் அங்கு விரைந்து வந்த போலீசார் இளைஞர்களைக் கைது செய்தனர்.

02:55:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில், ஷிகர் தவானிற்கு பதில் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.

02:42:26 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ”வெற்றிக்கு 60 சதவீத மன வலிமையும், 40 சதவீத திறமையும் தேவை என்ற கவாஸ்கரின் கூற்றை ஏற்று கொள்கிறேன். இன்று கிடைக்கும் வெற்றியில் மன வலிமை 60 சதவீதம் பங்கு வகிக்கும்.” என தெரிவித்துள்ளார்.

02:35:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினமலர்

இந்திய அணி வெற்றிபெறுவதற்காக, உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில், கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடத்தினர். இதே போன்று நாடு முழுவதும் 100 இடங்களுக்கு மேல் இந்திய அணியின் வெற்றிக்காக கூட்டுப் பிரார்த்தனையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

02:16:56 on 16 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் தேதி வரும் 20ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியுள்ளார். முன்னதாக பி.இ. படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது ஜூன் 20ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

02:15:02 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் கடந்த 191 நாட்களாக மழை பெய்யவில்லை. இந்நிலையில், தொடர்ந்து ஒரு துளி கூட மழையே பெய்யாத நாட்களின் எண்ணிக்கையில் சென்னை மாநகரம் மோசமான புதிய வரலாறு ஒன்றை படைக்க உள்ளது.

01:57:01 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஈரோடு தாளவாடி பகுதியில் 4 நாட்களாக முடங்கியுள்ள பி.எஸ்.என்.எல் இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இணையதள சேவை இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வங்கிகள்,அரசு அலுவலகங்களின் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

01:35:04 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூரில் இளைஞர்கள் திடீர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அண்ணப்பாலம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தியபடி இளைஞர்கள் முழக்கம் எழுப்பினர். பின்னர் அங்கு விரைந்து வந்த போலீசார் இளைஞர்களை கைது செய்தனர்.

01:16:04 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் சியோமியின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் சாம்சங்கின் 64 எம்.பி. ISOCELL பிரைட் GW1 கேமரா சென்சாருடன் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் மற்றும் இதன் சிறப்பம்சங்கள் பற்றி எவ்வித விவரங்களும் இதுவரை வெளியாகவில்லை.

01:15:01 on 16 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

மகாராஷ்டிர மாநிலம் வாஷி பகுதியில் அப்பா இல்லை என்பதற்காக 2ஆம் வகுப்பு மாணவனுக்கு பள்ளியில் அட்மிஷன் மறுக்கப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதங்களை எழுப்பி வருகின்றது.

01:05:46 on 16 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

உலகக் கோப்பை அட்டவணை வெளியிட்டப்பட்ட அன்று, பலரும் தங்கள் காலண்டரில் குறித்து வைத்த நாள் இதுவாகத்தான் இருக்கும். ஃபைனலின் டிக்கெட்டுகளுக்கு முன்பாக தீர்ந்து போனது இந்தப் போட்டியின் டிக்கெட்டுகள்தான்.

12:58:21 on 16 Jun

மேலும் வாசிக்க விகடன்

துருவைத் தவிர அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரையும் மாற்றி 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் புதிய படம் தயாரிக்கப்பட்டு வந்தது. அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

12:47:19 on 16 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

சரவணா ஸ்டோர் விளம்பரத்தை யாராலும் மறக்க முடியாது. யார் என்ன கலாய்த்தாலும் தனக்கு பிடித்ததை செய்து செம்ம மாஸ் காட்டியவர், இவர் தற்போது சுமார் ரூ 30 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்து நடிக்கவுள்ளதாக ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார். இப்படத்தை உல்லாசம் படத்தை இயக்கிய ஜுடி-ஜெர்ரி இயக்கவுள்ளதாக கூறப்படுகின்றது,

12:40:29 on 16 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகிறதென்றால் அதில் உச்சகட்ட பரபரப்பு இருக்கும். இந்தப் போட்டி, இரு நாடுகளைக் கடந்து உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சமயத்தில், இந்த இரு அணிகளும் உலகக் கோப்பையில் மோதிய போட்டிகளின் சுவாரஸ்யங்கள் பற்றிய கேள்வி-பதில்கள் உங்களுக்காக..

12:32:47 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

காந்தி ஓர் இந்து தீவிரவாதி எனவும் ; கோட்சே ஓர் இந்து பயங்கரவாதி எனவும் பேசியதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

12:26:31 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை விலக்கிக்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் 28 பொருட்களுக்கு, இன்று முதல் அதிக வரி விதிக்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது.

12:22:55 on 16 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பீகாரில் முஷாபர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மூளைக்காய்ச்சல் நோயால் 80 குழந்தைகள் உயிரிழந்த ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

12:09:30 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

இளவரசர் முகமது பின் சல்மான், "நாங்கள் போரை விரும்பவில்லை. ஆனால் எங்கள் மக்களுக்கு, இறையாண்மைக்கு, நலனுக்கு, பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ள எந்த விஷயத்தையும் எதிர்கொள்ள தயங்க மாட்டோம்," என்று அரேபியா முழுவதும் வெளிவரும் நாளிதழான அஷார்க் அல்- அவ்ஸாத்திடம் கூறி உள்ளார்.

11:55:02 on 16 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னையை பொருத்தவரை மேற்கு திசையிலிருந்து காற்று வீசும் போதுதான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். சாதாரணமாக ஜூன் மாதம் தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருந்தால், மேற்கில் இருந்து வீசும் காற்றில் ஓரளவு ஈரப்பதம் இருந்திருக்கும், வெயிலின் தாக்கம் இந்தளவு இருந்திருக்காது என்கிறார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த்.

11:48:01 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே உலகக்கோப்பை போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. இச்சூழலில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து ரசிகர்களிடம் கருத்துகள் கேட்டறியப்பட்டது.

11:24:18 on 16 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் பகுதியில் குடிபோதையில் தமிழக அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரை பயணிகளே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

11:19:25 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே தனியார் வங்கி ஊழியர்கள், கடனை திருப்பி செலுத்தக் கோரி அளித்த நெருக்கடியால், மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11:10:01 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

குடும்பத்தின் நலனுக்காகத் தன் காயங்களை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக்கொள்ளும் உன்னத தந்தையர்கள் நிறைய பேர் உண்டு. தந்தையர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஆய்வில், 'தங்களுடைய குழந்தைகளுக்காக பொருளாதார பலத்தை அடைவதற்காக தங்களது ஆரோக்கியத்தின்மீது கவனம் செலுத்துவதில்லை' என்பது தெரியவந்துள்ளது.

11:03:36 on 16 Jun

மேலும் வாசிக்க விகடன்

நியூசிலாந்து அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை.

10:52:29 on 16 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்நிலையில் இப்படம் சென்னையில் மட்டும் இரண்டு நாட்களில் ரூ 32 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

10:39:01 on 16 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

டாப்ஸி நடிப்பில் கேம் ஓவர் படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்நிலையில் இப்படம் சென்னையில் மட்டும் இரண்டு நாட்களில் ரூ 32 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

10:36:01 on 16 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

'டெல்லியில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் வாஷிங்டன் சென்ற 360 பயணிகளின் பொருட்கள் மாயம்' என தகவல் வெளியாகியுள்ளது. 12ம் தேதி டெல்லியில் இருந்து வாஷிங்டன் நகருக்கு சென்ற விமானத்தில் பொருட்கள் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:15:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தமிழ்நாடு அரசுப் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

09:59:55 on 16 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சான்யோ நிறுவனம் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது. சான்யோவின் நெபுளா சீரிசில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட் டி.வி.க்கள் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டி.வி. அளவுகளில் கிடைக்கின்றன.

09:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை மாதவரத்தில் போலீஸ்காரர்களை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

09:39:02 on 16 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னை மாதவரத்தில் போலீஸ்காரர்களை தாக்கிய பிரபல ரவுடியை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

09:36:01 on 16 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

திருநங்கைகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காத இந்த சமூகத்தில், நலிவடைந்த திருநங்கை இருவரை கரம் தூக்கி உயர்த்தும் நோக்கில் இலவச கல்வி வாய்ப்பினை லயோலா கல்லூரி வழங்கியுள்ளது.

09:18:02 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திருநங்கைகளுக்கு முறையான அங்கீகாரம் கிடைக்காத இந்த சமூகத்தில், நலிவடைந்த திருநங்கை இருவரை கரம் தூக்கி உயர்த்தும் நோக்கில் இலவச கல்வி வாய்ப்பினை லயோலா கல்லூரி வழங்கியுள்ளது.

09:15:02 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் போட்டி உலகக் கோப்பையின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக பார்க்கப்படுகிறது. இதனை போட்டியாக பார்ப்பதைவிட உணர்ச்சிப்பூர்வமாக பார்ப்பவர்களே அதிகம். மற்ற போட்டிகளில் எப்படியிருந்தாலும் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது.

08:57:05 on 16 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கோவையை தொடர்ந்து மதுரையிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரை வில்லாபுரம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொச்சியில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

08:55:04 on 16 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உலககோப்பை போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வருகின்ற நிலையில், இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில், வெதர்மேன், 'இன்று மழைப் பொழிவின் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாட இருக்கும் மேட்ச்சின் போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருப்பதாக' அறிவித்துள்ளார்.

08:49:34 on 16 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

2018 ஆசியக் கோப்பை போட்டிக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. மான்செஸ்டரில் உள்ள ஓல்டு ட்ரஃப்போர்டு மைதானம் 23,000 பார்வையாளர்கள் அமரும் வசதி கொண்டது. ஆனால், ஏழு லட்சம் பேர் இந்த டிக்கெட்டுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

08:44:23 on 16 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.52 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

08:42:34 on 16 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 55 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மேலும் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

06:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே, மங்களம் எனும் பகுதியைச் சேர்ந்த சிலரது வெள்ளாடுகளை, அப்பகுதியில் உள்ள சில நாய்கள் கடந்த சில நாட்களாக கடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆடுகளின் உரிமையாளர்கள், ஆட்டு இறைச்சியில் விஷத்தைக் கலந்து, கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் அவற்றை வீசிச் சென்றதாக கூறப்படுகிறது.

06:25:01 on 16 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நேத்ரோ தோம் தேவாலயம் பிரான்ஸில் உள்ள பழமைவாய்ந்த தேவாலயம் ஆகும். இந்த தேவாலயத்தில் அண்மையில் தீவிபத்துக்குள்ளானது. இதனையடுத்து இரு மாதங்களுக்குப் பின் இந்த தேவாலயத்தில் ஆராதனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

05:55:02 on 16 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

மஞ்சளில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மை இருக்கிறது. மேலும் சிறந்த வலி நிவாரணியாகவும் மஞ்சள் பயன்படுகிறது. அல்ஸீமர் நோயால் பாதிக்கப்பட்டோர்க்கு மஞ்சள் கொடுத்தால் மூளை செயல்பாட்டு திறன் சிறப்பாக இருக்கும். சரும பராமரிப்பிற்கு உகந்தது மஞ்சள்.

05:25:02 on 16 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ரத்த தானம் வழங்குவதற்காகவே நாம் தமிழர் கட்சியின் சார்பில் `குருதிக் கொடை பாசறை' என்ற பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ரத்தப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் ரத்தத்தை நாம் தமிழர் கட்சியினர் தானமாக வழங்கியுள்ளனர்.

04:55:01 on 16 Jun

மேலும் வாசிக்க விகடன்

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தைவான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டம் தொடர்பான மசோதாவை ஹாங்காங் அரசாங்கம் கைவிடுவதாக அதன் நிர்வாக தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.

04:25:01 on 16 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”திங்கட்கிழமை முதல் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பொருட்களை தயாரித்தால் முதல் தடவை ரூ.1 லட்சம், மீண்டும் செய்தால் ரூ.2 லட்சம் மூன்றாவது தடவையும் செய்தால் ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அந்த நிறுவனம் தயாரித்தால் அந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்படும்.” என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

03:55:02 on 16 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அசுரன். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாகவும், படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாள் அன்று வரும் என கூறப்படுகின்றது. இப்படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிப்பதாக முன்னமே பல செய்திகள் வெளிவந்துள்ளன.

03:26:02 on 16 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

த்ரிஷா நடித்த நாயகி மையப்படங்களான நாயகி மற்றும் மோகினி இரண்டும் பிளாப்பாயின. கர்ஜனை, பரமபதம் விளையாட்டு உள்பட பல நாயகி மையப் படங்கள் அவர் கைவசம் உள்ளன. முதலில் கர்ஜனை வெளியாகிறது. சுந்தர் பாலு கர்ஜனையை இயக்கியுள்ளார். இதன் தமிழக திரையரங்கு விநியோக உரிமை நல்ல விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.

02:56:01 on 16 Jun

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மலேசியா நாட்டை சேர்ந்தவர் சோபியா. இவர் அந்த பிரபல பாடகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த செல்லப்பிரானியை சிலர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வெளியானதில் இருந்து இணையதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், சோபியாவின் வீட்டுக்கதவை தட்டியுள்ளனர்.

02:25:01 on 16 Jun

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறை குறித்து விளக்கினார்.

01:57:02 on 16 Jun

மேலும் வாசிக்க விகடன்

சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

01:26:02 on 16 Jun

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

காசினிக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, மற்றும் வைட்டமின் ஏ, பி, சி ஆகியவைகள் உள்ளன. ஜீரண கோளாறு, பித்தப்பை நோய், கல்லீரல் நோய்கள், இரத்த சோகை, சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், வாத நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் வல்லமை உடையது.

12:59:52 on 16 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

'Mi 9T' ஆசியாவில் அறிமுகமாகும் தேதிகள் வெளியாகியுள்ளது. சியோமி மலேசியாவின் அறிவிப்பின்படி இந்த ஸ்மார்ட்போன், அந்த நாட்டில் ஜூன் 20 அறிமுகமாகும் எனக் கூறியுள்ளது. இந்த அறிமுகத்தின் பொழுது மற்ற ஆசிய நாடுகளில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற அறிவிப்பையும் எதிர்பார்க்கலாம்.

12:25:01 on 16 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நிலங்களில் வீட்டுமனை திட்டங்கள் உருவாக்கப்பட்டு அவற்றை பொதுமக்கள் வாங்கினாலும், அதற்கு அரசு அளிக்கும் நில உரிமை ஆவணமான பட்டா பெறுவது இயலாது. அதனால், வீட்டு மனை, தோட்டம் அல்லது காலி இடம் ஆகியவை BIL நிலமாக இருந்தால் வாங்காமல் தவிர்த்துவிடுவதே பாதுகாப்பானது என்று ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

11:59:49 on 15 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

'தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை அதிகரித்துள்ளதால், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்' என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 'தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுப் பெற வேண்டும்,' என்று கூறினார்.

11:25:01 on 15 Jun

மேலும் வாசிக்க தினகரன்

நாகை மாவட்டம், குத்தாலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கும், தஞ்சை நீடாமங்கலத்தைச் சேர்ந்த முரளிக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில், குடிப்பதற்கு மனைவியிடம் பணம் வாங்கிச் சென்ற முரளி பைரவா நகர் அருகே இறந்து கிடந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, திவ்யா, திவ்யாவின் நண்பர் சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

10:56:01 on 15 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

கடாரியா சமூகத்தை சேர்ந்தவர்கள் தனது குழந்தைகளை பயன்படுத்தி உணவு பெறும் அதிர்ச்சிகுரிய தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 6 வாரங்களில் இது குறித்த தகவல்களை அனுப்பும் படி ராஜஸ்தான் அரசுக்கு என்.எச்.ஆர்.சி, நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

10:25:01 on 15 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கேரள மாநிலத்தின் மாவேலிக்காரா மாவட்டத்திற்குட்பட்ட வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வந்த ஒருவர் இன்று பிற்பகல் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து காரில் வந்த ஒருவர் பெண் காவலர் மீது திடீரென்று பெட்ரோலை ஊற்றி தீவைத்து கொளுத்தினார்.

09:55:02 on 15 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

சந்திரயான் - 2 செயற்கைக்கோளின் மொத்த கமாண்ட்களும் இரண்டு பெண்களின் கையில் இருப்பது இதன் இன்னொரு சிறப்பம்சமாகும். சந்திராயனின் மிஷன் இயக்குனர் ரிது கரிதல் இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என அழைக்கப்படுகிறார்.

09:25:02 on 15 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

டாட்டூவில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று நிரந்தரமானது. இன்னொன்று தற்காலிகமானது. டெம்ரவரி டாட்டூஸ் ஒரு வாரத்தில் அழிந்துவிடும். பெர்மனென்ட் டாட்டூஸ் என்பது நம் வாழ்நாள் முழுவதும் கூடவே வரும். உடல் புதைக்கப்பட்டு மக்கினாலும் நம் எலும்பில் டாட்டூவின் பதிவு இருப்பதற்கான ஆதாரங்களும் உண்டு.

08:57:01 on 15 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

வேலூரில், குடும்பத் தகராறில் மனம் உடைந்த தாய் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாமும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டார். போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

08:35:01 on 15 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்பவர்கள் முதன்முறை பிடிபடும்போது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

08:15:01 on 15 Jun

மேலும் வாசிக்க தினகரன்

குறை மாதங்களில் பிறக்கும் குழந்தைகளின் சரும பாதுகாப்பு அம்சங்கள் முழுமையாக வளர்ச்சியடையாததால் அவர்களுடைய சருமத்தை சரியாக பராமரிக்க வேண்டியது கட்டாயம். இந்த குழந்தைகளுக்கு சருமத்தின் மீது தடவப்படும் பொருட்களை உள்ளே உறிஞ்சும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் கிரீம்களை குழந்தையின் மீது தடவக்கூடாது.

07:57:02 on 15 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

ஊதிய உயர்வு, பணியிடத்தில் சமத்துவம், பாலியல் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு போன்றவற்றை வலியுறுத்தி சுவிட்சர்லாந்து பெண்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

07:35:02 on 15 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

சென்னையில் கார் ஏசி வெடித்து தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பூர் ஜமாலியா பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவமானது நடந்துள்ளது. இதையடுத்து காரை ஓட்டிச் சென்ற சட்ட கல்லூரி மாணவர் சுயத் காரிலிருந்து தப்பித்து உயிர் தப்பினார்.

07:15:01 on 15 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சொயிப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது மழை நீர் மைதானத்தில் நிரம்பி வழிவது போலவும், இந்தியா - பாகிஸ்தான் கேப்டன்கள் அதற்குள் இருப்பதுபோலவும் காட்சி உள்ளது. இந்த மீம்சை வெளியிட்டு நாளைய போட்டி இப்படித்தான் இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.

07:01:31 on 15 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தமிழ்நாட்டில் 44.4% கர்ப்பிணி பெண்கள் (Anaemia in Pregnancy) ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரத்தசோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாக இருக்கவும் நோய்கள், தொற்றுக்கள் வருவதுமான பிரச்னைகள் அதிகமாக இருக்கும்.

06:57:02 on 15 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 230 கோடிக்கும் மேல் நஷ்டம் ஆகும். இது ஒட்டு மொத்த வருமானத்தில் பெரிய பாதிப்பாக இருக்கும். 2019 உலகக்கோப்பை தொடரின் மூலம் 1250 முதல் 1350 கோடி வரை வருமானம் கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

06:39:23 on 15 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடிநீர் தொட்டியில் இருந்த கொடிய விஷம் கொண்ட நாகப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டு அதனை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

06:35:01 on 15 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற ரோலில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை நந்தினி. அவர் விரைவில் 2வது திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் சமீபத்தில் பரவியது. இந்நிலையில் தற்போது மைனா நந்தினி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அதில் அவர் முகம் முழுவதும் கரியை பூசி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.

06:25:18 on 15 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

1996ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் கால் இறுதி போட்டியில் இந்திய பந்துவீச்சாளார் வெங்கடேஷ் பிரசாத் வீசிய ஒரு பந்தை பவுண்டரிக்கு விளாசிய அமீர் சோஹேல் வெங்கடேஷ் பிரசாத்தை பார்த்து பேட்டை காட்டி, 'போய் அந்தப் பந்தை எடுத்துவா' என்று கூறினார். இதனையடுத்து இந்தப் போட்டியில் பரப்பரப்பு போட்டி நிலவு தொடங்கியது.

06:15:24 on 15 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் ஜிப்ரான் இசையமைத்து வரும் 'சிக்சர்' என்ற படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை பாடிக்கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு நன்றி என்று ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.

06:15:01 on 15 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

வீரத்தைத் தொடர்ந்து வேதாளம் படத்தையும் இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இந்தப் படத்தையும் சிவாவே இயக்கியிருந்தார். இதன் இந்தி ரீமேக்கில் ஜான் ஆபிரஹாம் நடிக்கிறார். அஜித் இந்தி ரீமேக்கான பிங்கில் நடிக்க, அவரது படங்களோ இந்தியில் ரீமேக் செய்யப்படுகின்றன.

06:02:00 on 15 Jun

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மதுரை-சென்னை இடையில் இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் நாளை பிற்பகல் 3 பதிலாக மாலை 4.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதேபோன்று மதுரையிலிருந்து புறப்படும் வைகை எக்ஸ்பிரஸ் காட்டாங்குளத்தூர் ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும் எனவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

05:55:01 on 15 Jun

மேலும் வாசிக்க தினகரன்

'காவிரியின் குறுக்கே அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை எனவும், மத்திய அரசு, தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அனுமதி கொடுக்க வேண்டும்' என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

05:35:01 on 15 Jun

மேலும் வாசிக்க தினமலர்

'தமிழ்நாடு பாட புத்தகத்தில் இருந்து ரஜினியின் வரலாற்று பாடத்தை உடனே நீக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதி மன்றத்தில் வழக்கு போடுவோம்' என தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் கோவைக்கிளை தெரிவித்துள்ளது.

05:15:02 on 15 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்து மரணித்தவர்கள் பற்றி கேலி செய்யும் விதமாக பதிவு செய்யப்படும் போஸ்ட்களை நியூஸ் ஃபீடில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

04:55:01 on 15 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, 'சென்னைக்கு போதிய அளவு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. கிராமப்புறங்களிலும் லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.' என்றார். மேலும், ’சென்னையில் 9,100 லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.’ என்றார்.

04:35:02 on 15 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

அடோப் நிறுவனமும் UC Berkeley யைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் கைகோத்து ஏ.ஐ. ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிஷின் லேர்னிங் அடிப்படையில் இயங்கும் இந்த ஏ.ஐ, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடித்துவிடும்.

04:18:01 on 15 Jun

மேலும் வாசிக்க விகடன்

அடோப் நிறுவனமும் UC Berkeley யைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் கைகோத்து ஏ.ஐ. ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மிஷின் லேர்னிங் அடிப்படையில் இயங்கும் இந்த ஏ.ஐ, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடித்துவிடும்.

04:15:01 on 15 Jun

மேலும் வாசிக்க விகடன்

முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அதிகாரிகள் ’சிறப்பு சலுகைகள் தர முடியாது மக்களோடு மக்களாக பஸ்சில் செல்லுங்கள்’ என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

03:44:26 on 15 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

இந்திய அணியின் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவ் கடவுளிடம் வித்தியாசமாக பிரார்த்தனை ஒன்றை வைத்துள்ளார். அவர், "மழையே போ.. போ.. எங்க நாட்டுக்கு போ..! கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன்... மழையில்லாமல் எங்கள் மஹாராஷ்டிரா வறண்டு கிடக்கிறது... மழையே நீ அங்கே போ..." என்று வானத்தை நோக்கி பிரார்த்தனை செய்தார்.

03:26:30 on 15 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

நேர்கொண்ட பார்வை இன்னும் 10 மில்லியனை கூட தொடவில்லை, லைக்ஸும் தற்போது வரை 8 லட்சம் தான் வந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இது மற்ற அஜித் படங்களை போல் மசாலா படம் இல்லை, மேலும், காலை அறிவித்துவிட்டு, மாலையே ட்ரைலர் விட்டதும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது.

03:17:25 on 15 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

சிவகார்த்திகேயனின் புது படத்தில், அவருக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகாவை நடிக்க ஒப்பந்தம் செய்தனர். இந்நிலையில், 'சிவா படத்தில் தன் கதாபாத்திரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் இல்லை’ என்பதால் ராஷ்மிகா விலகியுள்ளதாக புதிய தகவல் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

03:09:39 on 15 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஹைதராபாத்தில் பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு பணிகளை காவல்துறையினர் மேற்கொண்டனர். கடந்த இரண்டு நாட்களில் வாகனத்தின் தாங்கு திறனை விட கூடுதலாக குழந்தைகளை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் வாகனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீதும் 521 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

03:04:11 on 15 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் 12 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றவர்களை சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

02:57:59 on 15 Jun

மேலும் வாசிக்க சன் நியூஸ்

குஜராத்தில் விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் 7 பேர் பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஓட்டலின் உரிமையாளர் தலைமறைவானார்.

02:40:38 on 15 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

கோடை வெப்பம் காரணமாக மக்களிடையே தேவை அதிகரித்துள்ளதால் ஏசி உள்ளிட்ட குளிர்சாதன வீட்டு உபயோகப் பொருட்களுக்கான விற்பனை இருமடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி. செக்யூரிட்டீஸ் நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ஏசி உபகரணங்களுக்கான சந்தை மதிப்பு 20 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

02:26:30 on 15 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

'தமிழகத்தில் 11 மாவட்டங்களில் ஒரு வாரத்திற்கு அனல் காற்று வீசும்' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 'சென்னையில் வெப்பநிலை 106 டிகிரி வரை அதிகரிக்கும்' எனவும் தெரிவித்துள்ளது.

02:12:37 on 15 Jun

மேலும் வாசிக்க தினகரன்

உளுந்தூர்பேட்டை அருகே பல்லவாடி கிராமத்தில் மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து சிலிண்டர் வெடித்து பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையானது. இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. எலவனாசூர்கோட்டை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

01:59:43 on 15 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னையில் மிகப்பெரிய கிரிக்கெட் பேட்டுக்கான கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சாதனையைப் படைத்துள்ளனர். 51 அடி நீளமுள்ள இந்த பேட்டின் எடை 6600 கிலோ கிராமாகும். இந்த மிகப்பெரிய பேட்டை, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ், திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பல கிரிக்கெட் ஆர்வலர்களும், ரசிகர்களும் கலந்துக்கொண்டனர்.

01:47:53 on 15 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நெட்டிசன்கள் தவிக்கும்தமிழ்நாடு என்ற ஹேஷ்டேகின் கீழ் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினை குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மண்டலங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை பற்றிய விவாதங்கள் பகிரப்பட்டு வருகின்றன.

01:42:01 on 15 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியா - பாகிஸ்தான் போட்டியை உலகளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இது குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், இந்திய அணி வலுவானதாக இருந்தாலும் உலக கோப்பையை பொறுத்தமட்டில் எந்த அணி நெருக்கடியை சிறப்பாக கையாள்கிறதோ அந்த அணிதான் வெல்லும் என தெரிவித்தார்.

01:27:01 on 15 Jun

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

வாயு புயல் திசையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அது மீண்டும் குஜராத் மாநிலத்தை நோக்கி நகர்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த புயல் வருகிற 17, 18 தேதிகளில் கட்ச் பகுதியை தாக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:12:01 on 15 Jun

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க