View in the JustOut app
X

ரெட் அலர்ட் விடப்படவில்லை, தேவையற்ற பயம் வேண்டாம். 1500 கி.மீ.தொலைவில் தாழ்வுப்பகுதி உள்ளது. அதன் அடுதடுத்த நகர்வை வைத்தே எதுவும் சொல்லமுடியும், அனுமானங்களை கூற முடியாது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

07:42:01 on 25 Apr

மேலும் வாசிக்க காமதேனு

`டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கியவர், சாம் ஆன்டன். தற்போது யோகி பாபுவை வைத்து 'கூர்கா' படத்தை முடித்திருக்கிறார். ஆன்ந்த் ராஜ், லிவிங்ஸ்டன் மற்றும் மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இணையத்தில் நடிகர் தனுஷ் டீசரை வெளியிட்டார்.

07:25:02 on 25 Apr

மேலும் வாசிக்க விகடன்

திருவள்ளூர் மாவட்டம் நல்லூர் சுங்கச்சாவடியில் நடைபெற்ற மோதல் தொடர்பாக சுங்கச்சாவடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் ராஜேஷ்ஷாவ், சமீர் கோஷ் வகோஷ், ஓட்டுநர்கள் சலீம், பாபு, இளையராஜா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

07:10:02 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

நீர் கொழும்பில் உள்ள ஃபாஸுல் மசூதியில் தற்போது சுமார் 200க்கும் மேற்பட்ட அஹமதியா முஸ்லிம்கள் தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் அஹமதியா முஸ்லிம்களுக்கு என செயல்பட்டுவரும் 5 மசூதிகளில் நீர் கொழும்பில் உள்ள இந்த ஃபாஸுல் மசூதியும் ஒன்று. பிற 4 மசூதிகள் கொழும்பு, பேசாலை, புத்தளம், பொலனறுவ ஆகிய இடங்களில் அமைந்திருக்கின்றன.

06:57:01 on 25 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழக்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.

06:39:01 on 25 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மக்கள் தங்கள் உயிர், உடைமைகளை பார்த்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மின்சார சேவை நிறுத்தம், சாலை போக்குவரத்து துண்டிப்பு முதலிய மக்களின் இயல்பு வாழக்கையினை பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வானிலை இருக்கும் என்பதற்கான எச்சரிக்கையாகவே ரெட் அலர்ட் பார்க்கப்படுகிறது.

06:36:01 on 25 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே 2 தெருக்களில் குமார் என்ற இளைஞர், கோழிக்கறியில் விஷம் கலந்து வைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் இருந்த பன்றிகள், நாய்கள், பூனைகள், உள்பட 50க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் இறந்தன. இச்சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

06:18:02 on 25 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக ஒய்வு பெற்ற செவிலியர் அமுதா ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை விற்பனை செய்து வந்தாக அமுதாவிடம் விசாரணை நடத்தி வந்தபொழுது எஸ்.பி. இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

06:16:54 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே 2 தெருக்களில் குமார் என்ற இளைஞர், கோழிக்கறியில் விஷம் கலந்து வைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் இருந்த பன்றிகள், நாய்கள், பூனைகள், உள்பட 50க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் இறந்தன. இச்சம்பவம் குறித்து மேலும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

06:15:01 on 25 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவர், நெல்லை மாவட்டம் ஆவரைக் குளத்தைச் சேர்ந்த ஏசுநேசன் என்பவருடன் பேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். இந்நிலையில், ஏசுநேசன் மாணவியை நேரில் சந்தித்துப் பேச விரும்புவதாகக் கூறியதை அடுத்து, மாணவியும் ஒரு காரில் நாகர்கோவில் வெள்ளமடம் பகுதிக்கு சென்றுள்ளார்.

05:57:01 on 25 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

ஏ.ஆர்.முருகதாசும், ரஜினிகாந்தும் முதன்முறையாக இணைந்துள்ள திரைப்படம் தர்பார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பானது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட ரஜினிகாந்தின் புகைப்படம் கசிந்தது.

05:35:02 on 25 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காது என்றும், மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி அரசு ஆட்சியமைக்கும் என்றும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார்.

05:18:01 on 25 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியாவின் மிகப்பெரிய ஊடக நிகழ்வான என்.ராமுடன் பத்திரிகை சுதந்திரக் கொண்டாட்டம் (Celebrating Journalism With N.Ram) என்னும் நிகழ்ச்சி சென்னையில் வரும் 28ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. பங்குபெற விரும்புபவர்கள் celebratejournalism@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

05:15:24 on 25 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே பெரும்பான்மை கிடைக்காது என்றும், மாநிலக் கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி அரசு ஆட்சியமைக்கும் என்றும் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார்.

05:15:01 on 25 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடவில்லை அங்கு அஜய் ராய் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ப்ரியங்கா காந்தி மோடியை எதிர்த்து போட்டியிடாமல் பின் வாங்கியது ஏன் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

04:57:02 on 25 Apr

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் 29ஆம் தேதி உருவாகவுள்ள அந்தப் புயலுக்கு 'ஃபனி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

04:39:01 on 25 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் 29ஆம் தேதி உருவாகவுள்ள அந்தப் புயலுக்கு 'ஃபனி' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

04:36:01 on 25 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

”மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜகவும் அதிமுகவும் அரசியல் ரீதியாக கூட்டணி வைத்திருப்பதற்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

04:18:02 on 25 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

”மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜகவும் அதிமுகவும் அரசியல் ரீதியாக கூட்டணி வைத்திருப்பதற்கும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சிபிஐ விசாரிப்பதில் ஏற்படும் தாமதத்திற்கும் தொடர்பு இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

04:15:01 on 25 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இலங்கையில் புகழ்பெற்ற மசாலா நிறுவனங்களின் அதிபர் முகமது இப்ராஹிம் என்பவரின் மகன்கள் குண்டுவெடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை மக்களுக்கு இவர்களின் குடும்பம் மிகவும் பரிச்சயமானது. மகவாலே கார்டன் பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் இந்தக் குடும்பத்தினரை நன்கு தெரிந்துள்ளது.

03:57:01 on 25 Apr

மேலும் வாசிக்க விகடன்

பொள்ளாச்சி சம்பவத்தைப் போன்றே பெரம்பலுாரிலும் பாலியல் கொடுமை குறித்த புகார் சமீபத்தில் எழுந்தது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ ஒன்று ரிலீஸ் ஆகி பரபரப்பை கிளப்பியுள்ளது. பெரம்பலுார் கோர்ட் வளாகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், பத்திரிகையாளர் முன்னிலையில் இந்த 2 ஆடியோக்கள் வெளியிடப்பட்டன.

03:39:02 on 25 Apr

மேலும் வாசிக்க தினமலர்

பொள்ளாச்சி சம்பவத்தைப் போன்றே பெரம்பலுாரிலும் பாலியல் கொடுமை குறித்த புகார் சமீபத்தில் எழுந்தது. தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ ஒன்று ரிலீஸ் ஆகி பரபரப்பை கிளப்பியுள்ளது. பெரம்பலுார் கோர்ட் வளாகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில், பத்திரிகையாளர் முன்னிலையில் இந்த 2 ஆடியோக்கள் வெளியிடப்பட்டன.

03:36:02 on 25 Apr

மேலும் வாசிக்க தினமலர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்கள் மனுவில், இதனை நிர்வகிக்கும் உரிமை ஜெ.தீபா, தீபக் ஆகியோருக்கு கிடையாது என கூறியுள்ளனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன்.6இல் நடைபெறவுள்ளது.

03:15:01 on 25 Apr

மேலும் வாசிக்க மாலைமலர்

வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகத்துக்கு சாதகமான நிலைக்கு முன்னேறியுள்ளது. இந்தத் தாழ்வு பகுதி புயலாக மாறி எந்த திசையில் பயணித்தாலும் அங்கு அதிக மழை, மிக அதிக மழை, மிக மிக அதிக மழை பெய்துத் தள்ளும்.

02:57:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினமணி

சின்னசேலம் ஒன்றியத்தில் கடத்தூர், எலியத்தூர், தெங்கியாநத்தம், நமச்சிவாயபுரம் உள்ளிட்ட 50 கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவதால் மக்கள் காலி குடங்களுடன் காடு காடாக அலைகின்றனர். இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

02:35:02 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மதுரை பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திருப்பரங்குன்றம் பஸ் ஸ்டாப் பகுதியில் நடுரோட்டில் கிடந்த பெரிய கல்லில் மோதி கீழே விழுந்து உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

02:15:02 on 25 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

டெல்லி அணியின் பயிற்சியாளராக பான்டிங்கும், ஆலோசகராக கங்குலியும் இருந்து வருகிறார்கள். இதுகுறித்துப் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், ’அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை வரும் உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்துவேன்’ என்று கூறியுள்ளார்.

01:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க விகடன்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ளா குஷைகுடா பேருந்து நிலையத்தில் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பேருந்தை நிறுத்திவிட்டு உறங்கிய ஓட்டுநர் திடீரென கண் விழித்துப் பார்த்தபோது பேருந்து மாயமாகி இருந்தது. இதைக் கண்ட ஓட்டுநர் அதிர்ச்சியில் உறைந்தார். இதனையடுத்து, மாயமான பேருந்தைக் கண்டுபிடிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

01:35:01 on 25 Apr

மேலும் வாசிக்க தி இந்து

மக்களவைத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்தலாம் என கடந்த சில தினங்களாக பேசப்பட்டது. இந்நிலையில், வாரணாசியில் பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை. அஜய் ராய் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

01:26:00 on 25 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்த குறிவைக்கப்பட்டிருப்பதாக பயங்கரவாதிகளின் பெயர்கள், முகவரி, போன் எண்களுடன் இந்திய உளவுத்துறை ஏப்ரல் 11ஆம் தேதி அன்றே இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்தது தெரியவந்துள்ளது.

01:15:01 on 25 Apr

மேலும் வாசிக்க தின மலர்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகரான சவுரவ் கங்குலி, ’ரிஷப் பன்ட் எதற்காகவும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவரது உலகக் கோப்பை நீக்கம் அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

12:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 36 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில், அது புயலாக மாறும் என்றும் கூறியிருக்கிறது.

12:35:01 on 25 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மதுரையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே கள்ளழகர் வலம் வரும் நேரத்தில் ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னோக்கிச் சென்று கொண்டிருந்த கள்ளழகர் பின்னோக்கி வந்து ஆம்புலன்சுக்கு வழி விடப்பட்டது. இந்த விடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

12:15:02 on 25 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிதம்பரம் அருகே வல்லம்படுகை பெராம்பட்டு கிராமத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற ஜெயமணி என்ற விவசாயி முதலை கடித்துப் பலியாகினார். அந்த முதலையைப் பிடிப்பதற்கு வனத்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.

11:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

ரஷ்ய அதிபர் புதினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, வடகொரியாவின் நேர்மறையான முயற்சிகளுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று புதின் கிம் ஜாங் அன்னிடம் உறுதி அளித்தார்.

11:35:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஒரு பொது பட்ஜெட்டும், ஒரு விவசாய பட்ஜெட்டும் தாக்கல் செய்வோம்’ என அறிவித்துள்ளார்.

11:15:02 on 25 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் குழந்தைகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் ராசிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ராசிபுரம் மகளிர் போலீசார் ஓய்வு பெற்ற நர்சிடம் தற்போது அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

10:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள புகோடா நகரில் இன்று குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்துள்ளனர்.

10:35:01 on 25 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வேலூரில் குறிப்பிட்ட சமுதாயம் குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு கருத்து பரப்பியவர்களைக் கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 250 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

10:15:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துவரும் ஆலியா பட் இப்படத்தில் நடிப்பதற்கு ராஜமெளலியிடம் வாய்ப்பு கேட்ட கதையைப் பகிர்ந்துள்ளார். தற்போது ஆலியா பட் பிரம்மாஸ்திரா என்ற ஃபேண்டஸி படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரன்பீர் கபூருடன் நடித்து வருகிறார்.

09:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நீட் ஹால் டிக்கெட்டில் குழப்பம் இருந்தாலோ அல்லது விவரங்கள் தவறாக இருந்தாலோ திருத்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

09:35:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தென் ஆப்பிரிக்காவில் குவாசுலு நடால் என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொடரும் மழைக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60ஐத் தாண்டியுள்ளதாக அவசரகால மருத்துவக் குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

09:15:01 on 25 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது மக்களவைத் தேர்தலில்தான் அதிகபட்சமாக 36 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதன்பிறகு, சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெறுவது என்பது அரிதான விஷயமாக மாறிவிட்டது.

08:55:02 on 25 Apr

மேலும் வாசிக்க தினமணி

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சேவை, வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேசினார். அப்போது டிரம்ப், ட்விட்டரில் தன்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.

08:35:01 on 25 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இந்திய வீரர்-வீராங்கனைகள் மூன்று தங்கம் உள்பட 17 பதக்கங்களை வென்றுள்ளனர். பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

08:15:01 on 25 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மக்களவைத் தேர்தல் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உ.பி., மாநிலம் வாரணாசியில் மே 19ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று வாரணாசி வரும் அவர், அங்கு மாபெரும் பேரணியில் கலந்து கொள்கிறார்.

07:55:03 on 25 Apr

மேலும் வாசிக்க தின மலர்

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹரா பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர்.

07:35:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.79 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.26 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:15:02 on 25 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

செங்கல்பட்டு கோட்டாட்சியருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்கக் கோரிய வழக்கில் நில உரிமையாளரை அலையவிட்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

06:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கை கிரிக்கெட் வீரர் தசன் ஷனகா இலங்கை தொடர் குண்டுவெடிப்பிலிருந்து அதிர்ஷடவசமாக உயிர்தப்பியுள்ளார். ஈஸ்டர் அன்று நடந்த தாக்குதலில் 320 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல், ஷனகாவை தெருவில் கால் வைக்கவே அச்சுறுத்துவதாக கூறியுள்ளார்.

06:41:01 on 25 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஐசிஐசிஐ-வீடியோகான் பணமோசடி வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அலுவலர் சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகியோர் அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

06:25:01 on 25 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் சேவையுடன் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகள் ஒரே கட்டணத்தில் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.600 எனும் மாத கட்டணத்தில் ஜியோ இத்தனை சேவைகளை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

06:11:01 on 25 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

பல வருடங்களாக டைனோசர்கள் பற்றின ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இராட்சத டைனோசர்களின் விரல் அடையாளங்கள் சிலவற்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

05:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மணிப்பூரை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர், உலக அளவில் நடைபெறும் ஐநா பொதுக்கூட்டத்தில் உரையாற்றப்போவது இந்தியர்களுக்கு கூடுதல் பெருமை சேர்த்துள்ளது. மிக இளம் வயதிலேயே உலக அரங்கில் உரையாற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறார் என்பதற்காக சிறுமிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

05:40:01 on 25 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வாக காணப்படுகிறது. எனவே, வயிறு கோளாறுகளை எந்த வடிவத்தில் அனுபவிக்கும் போதும், கொத்தமல்லி இலைகளால் டீ செய்து குடித்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

05:25:02 on 25 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய படம் தான் 'தேவி'. இந்த படத்தின் இரண்டாம் பாகமான தேவி 2 படத்தின் டீசர் மற்றும் சிங்கள் டிராக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

05:10:01 on 25 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கல்லூரியின் விடுதி வாழ்க்கை குறித்து கிரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது மயூரன் திரைப்படம். இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் நந்தன் சுப்பாராயன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் மயூரன் திரைப்படத்தில் அஞ்சன் தேவ் கதாநாயகனாக நடிக்க, ஆஸ்மிதா கதாநாயகியாக நடிக்கிறார்.

04:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாம் பூமியை கையில் ஏந்தி நிற்கும் காற்றடைத்த பந்தைப்போல் கவனமாகக் கையாளவேண்டும். இல்லையேல் காலநிலை மாற்றம், உலகவெப்பமயமாதல் போன்ற பேராபத்துகள் அந்தப் பந்தை உடைக்க வெகுநேரம் எடுக்காது.

04:40:01 on 25 Apr

மேலும் வாசிக்க விகடன்

ஹிந்தியில் எடுக்கப்பட்ட 'பட்லா'வை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும். அதில் டாப்ஸி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

04:26:02 on 25 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் அளித்தப் பேட்டியில், ’தேர்தல் நேரத்தில் போட்டி இருந்தால்தான் நன்றாக இருக்கும்,’ என தெரிவித்தார்.

04:10:01 on 25 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்க நிறுவனம் ஒன்று ஸ்பீட் கிராப்ட் ஏர் கிளாஸ் என்னும் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்ணாடிகளை அணிந்துக் கொண்டால் மூச்சு விடும் சிரமம் குறைகிறதாம். அணிந்து கொள்வதற்கு மிகவும் லைட் வெயிட்டாகவும் இருக்கிறது.

03:56:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

வார நாளில் வியாக்கிழமை மட்டும் சென்னையில் இருந்து வயநாடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நீங்கள் இந்த சிறப்பு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் மாலை 6 மணிக்கு புறப்படும் ரயிலில் பயணிகள் செல்ல வேண்டும்.

03:40:02 on 25 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

அவகாடோ க்ரீமியான பழம் மட்டும் கிடையாது. இதில் ஏராளமான ஆரோக்கிய பயன்களும் இருக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அவகாடோ டீ அருந்தலாம். அவகாடோவில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

03:26:02 on 25 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இருமல் ஏற்பட்டால் அது மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதில் நெஞ்செரிச்சலும் ஒரு காரணமாக இருக்கலாம். விழுங்குவதில் சிரமம் இருந்தாலும் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

03:10:02 on 25 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள குணங்குளத்தில் பூச்சி மருந்து கலந்த நீரை அருந்தி 4 பசுமாடுகள் உயிரிழந்துள்ளன. பருத்திக்காட்டுக்கு பாய்ச்சும் தண்ணீரில் பூச்சி மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரியாமல் மாடுகள் நீரை அருந்தியதால் உயிரிழந்துள்ளன.

02:56:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் இர்பான் பதான் அரசியலில் களமிறங்க ஆர்மாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தனது இணை ஆட்டக்காரர் கவுத்தம் கம்பீரின் அரசியல் பிரவேசதிதற்கு தனது வாழ்த்துகளையும் அவர் பகிர்ந்துக்கொண்டார்.

02:40:01 on 25 Apr

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்த புத்தகக் கண்காட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்து மகிழ்ந்தனர்.

02:26:02 on 25 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ரவுடி பேபி, சண்டக்காரா பாடல்களை பாடிய தீ , சூரரைப் போற்று படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். கலக்கலான பாட்டு விரைவில்’ என்று பதிவிட்டுள்ளார்.

02:10:02 on 25 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

வெறும் வயிற்றில் 10-15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

01:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பிரதமர் நரேந்திர மோதி தன்னை பதானின் மகன் என்றி விளிக்கும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக வருகிறது. இது தவறான நோக்கத்துடன் இந்த காணொளி தொகுக்கப்பட்டு, தவறான செய்தியை பரப்புவதற்காக இந்த காணொளி பகிரப்பட்டு இருக்கிறது என பிபிசி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

01:40:02 on 25 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

விஜய் - அட்லி இணைந்து, விஜய்யின் 63வது படமாக உருவாகி வரும் படம் ‘தளபதி 63 ' என்று அழைக்கப்படுகிறது. இந்தப்படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாக பல தகவல்கள் வந்த நிலையில், ஷாருக்கான் தளபதி 63 படத்தில் முக்கிய வில்லன் ரோலில் நடிக்க இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது.

01:25:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினமணி

ரெட்மி Y3-யின் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 9,999 ரூபாய்க்கு கிடைக்கும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் 11,999 ரூபாய்க்கு கிடைக்கும். போல்டு ரெட், எலிகன்ட் ப்ளூ, ப்ரைம பிளாக் உள்ளிட்ட வண்ணங்களில் ரெட்மி Y3 சந்தையில் கிடைக்கும்.

01:10:01 on 25 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கர்ப்பிணித் தாய்மார்கள் போஷாக்கான மிதமான உணவையே உட்கொள்ளவேண்டும். சராசரியாக இவர்களுக்கு 2500-லிருந்து 2800 கலோரி வரையுள்ள சக்தி உடைய உணவு தேவை. குண்டாக இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்க்குச் சிறிது குறைந்த அளவு சக்தி உடைய உணவு அளித்தால் போதுமானது.

12:55:01 on 25 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜப்பானில் கடந்த சில தினங்களாக டப்பாக்களில் அடைக்கப்பட்ட 'காற்று' விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜப்பானின் தெருவோரக் கடைகள் தொடங்கி, ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து விற்பனைச் சந்தைகளிலும் தளங்களிலும் இந்தக் 'காற்று' வலம் வந்து கொண்டிருக்கிறது.

12:40:01 on 25 Apr

மேலும் வாசிக்க விகடன்

திருச்சியில் கல்லூரி மாணவியைக் காதலிக்குமாறு மிரட்டி வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பிய இளைஞருக்கு ஆறு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது. திலகர் தெருவைச் சேர்ந்த இளைஞர் அஜித் குமாருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

12:25:01 on 25 Apr

மேலும் வாசிக்க தினகரன்

ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதை அவரது சாதி நிர்ணயம் செய்யும் நிலை சற்று மாறியுள்ளது என்றாலும், சாதியின் பிடி முற்றிலுமாகத் தளர்ந்துவிடவில்லை. குறைவான வருமானம் ஈட்டித்தரும் வேலைகளில், பட்டியலின சாதி மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பங்கு, மொத்த தொழிலாளர்களில் அவர்கள் வகிக்கும் பங்கைவிட மிகவும் அதிகம்.

12:10:01 on 25 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த முட்டையைக் காலையில் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. ஒரு நாளுக்கான முதல் உணவைச் சத்து நிறைந்ததாக மாற்ற நீங்கள் முட்டை மற்றும் கீரையை உண்ணலாம். கீரைகள் மற்றும் முட்டையில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது.

11:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

செங்கம் ஜவ்வாது மலை அடிவாரத்தில் சூறைக் காற்றால் இரண்டு லட்சம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதற்கான பயிர் காப்பீட்டு தொகையினை உடனே வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

11:40:01 on 24 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தவர் முனிரா அப்துல்லா 1991ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். தற்போது அவர் அதில் இருந்து மீண்டு சகஜ நிலைக்குத் திரும்பியுள்ளார்.

11:25:01 on 24 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகள், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கக் கூடாது. தினம் ஒரு காய், ஒரு பழம் உண்ணும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.

11:10:01 on 24 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பிரதமர் மோடியின் வாழ்க்கை படமான பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்தை மே 19ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், இப்படத்தின் பல காட்சிகளில் முக்கிய எதிர்க்கட்சி ஊழல் கட்சி எனவும், தாங்கள் ஏழைகளுக்கான கட்சி எனவும் காட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

10:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க தின மலர்

இங்கிலாந்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஜார்ஜ் பனயிட்டோவும், எமி ஜாக்சனும் இணைந்து அவர்களது திருமணத்திற்கான இடத்தைப் பார்த்து உறுதி செய்துள்ளனர். 2020ஆம் ஆண்டு கிரீசில் எமி ஜாக்சன் ஜோடி திருமணம் செய்ய உள்ளது.

10:40:02 on 24 Apr

மேலும் வாசிக்க விகடன்

மாருதி சுஸூகி இந்தியாவின் புதிய ஆல்டோ 800 கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய ஆல்டோ 800 காரில் பிஎஸ்-6 மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையிலான எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

10:25:02 on 24 Apr

மேலும் வாசிக்க தினமணி

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழரின் பாரம்பரியக் கலைகளை கற்பிக்க பயிற்சி நிறுவனங்களை அமைக்கக் கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இதுகுறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு பிரப்பித்துள்ளது.

10:11:01 on 24 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் ஆண்டுதோறும் கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்துவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ள நீச்சல் பயிற்சி வகுப்பில் ஆறு வயது சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை ஏராளமனோர் கலந்து கொண்டுள்ளனர்.

09:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க ETV BHARAT

சாம்சங் நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் போனாக வெளிவரவிருக்கிறது கேலக்ஸி M40. இந்த போனில் 5000 எம்.ஏ.எச் பேட்டரி, 128 ஜிபி சேமிப்பு வசதிகள் போன்றவை இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. அதேபோல M வரிசை போன்களில் இந்த போன்தான் முதன்முதலாக ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள் கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

09:41:02 on 24 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தமக்குச் சொந்த மான மண்ணில் தனியாக விவசாயம் செய்ய நினைக்குன் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு எஸ்.பி.ஐ வங்கி மிகக் குறைந்த கட்டணத்தில் கடன்களை வழங்குகிறது.

09:25:01 on 24 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

தமிழகத்தில் நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

09:17:38 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை ’உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘மீத்தேன் உள்ளிட்ட எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் விருப்பம் இல்லையெனில் நிறைவேற்றப்படாது’ என்று கூறியுள்ளார்.

09:11:01 on 24 Apr

மேலும் வாசிக்க காமதேனு

சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பின் பலனை மக்களுக்கு அளிக்காமல் ரூ.250 கோடி வரை பி & ஜி நிறுவனம் அளிக்காதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரி தொடர்பாக உரிய விவரங்களை அளிக்க தங்கள் நிறுவனம் தயார் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

08:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கர்நாடகா மாநிலம் பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் இன்போசிஸ் நிறுவனம் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 24,016 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கி வரும் டிசிஎஸ் நிறுவனம் சுமார் 29,287 ஊழியர்களை பணியில் அமர்த்தியுள்ளது.

08:41:02 on 24 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

புகழ்பெற்ற மலர் சந்தையான குமரி, தோவாளையில் நடைபெற்ற முத்தாரம்மன் கோயில் திருவிழாவில் மலர் அலங்காரப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில், பூ விற்பனையாளர்கள் மற்றும் பூ கட்டும்
கலைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் தேர் மாலை, தோரண மாலை என 20 ஆயிரம் கிலோ எடை கொண்ட, பூக்கள் மூலம் அலங்காரம் செய்யப்பட்டது.

08:25:02 on 24 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான புதிய பொறியியல் படிப்பு மற்றும் தொலைதூரக் கல்வியை விரிவுபடுத்துவது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன், இந்த ஆண்டு ஆன்லைன் கவுன்சிலிங்கை கடைபிடிப்பதாகக் தெரிவித்துள்ளார்.

08:11:02 on 24 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அறிமுக இயக்குநர் தீரன் இயக்கத்தில் உருவாகும் தீர்ப்புகள் விற்கப்படும் படத்தில் நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடிக்கிறார். மகளுக்கு நடந்த அநீதியைத் தட்டிக் கேட்கும் அப்பாவின் கதையான இப்படத்தில் தடம் படத்தில் அறிமுகமான மகளாக ஸ்மிருதி வெங்கட் நடித்து வருகிறார்.

07:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இசைப் பிரியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகத் திகழ்கிறது கார்வான். இந்நிறுவனம் சமீபத்தில் கையில் எடுத்துச் செல்லக் கூடிய ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் எடை வெறும் 88 கிராம் மட்டுமே. இதன் விலை ரூ.3,990 ஆகும்.

07:40:01 on 24 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

கடுமையான உழைப்பினால் கரியமில வாயு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்கள் அதிகளவு ரத்தத்துடன் கலந்து ஒருவரை விரைவில் களைப்படையச் செய்கின்றன. ஜலதோஷம், நீரிழிவு, புற்றுநோய் இவற்றின் அறிகுறிகள் இருந்தாலும், அவை உடலை களைப்படையச் செய்துவிடும்.

07:25:01 on 24 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

’அனைத்து வாக்காளர்களையும் ஒரே கோணத்தில் பார்த்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்’ என தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மேலும் அவர், ‘பிரபலமானவர், வசதி படைத்தவர், அரசியல்வாதி என பார்க்காமல் உரிய ஆவணம் இருந்தால் நியாயமான முறையில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

07:10:01 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தருமபுரியில் நல்லம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களில் போதிய மழை இல்லாததால் அப்பகுதியிலுள்ள லட்சக்கணக்கான தென்னை மரங்கள் காய்ந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

06:55:01 on 24 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கின்றன. பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகளை சிலர் தவிர்ப்பார்கள். ஆனால் அது சரியல்ல. காரணம், அக்காய்கறிகளில் நிறைய மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.

06:35:02 on 24 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சென்னை விமான நிலையத்தில் 150க்கும் மேற்பட்ட விமான பயணிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். சென்னை - சீரடி செல்லும் தனியார் விமான சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

06:31:56 on 24 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மேலும் வாசிக்க