View in the JustOut app
X

வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிக்கு செல்லாமலேயே தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஓட்டளிக்கும் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான புதிய தொழில்நுட்பத்தை இந்திய தேர்தல் கமிஷன், சென்னை ஐஐடி.,யுடன் இணைந்து உருவாக்கி உள்ளது.

10:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க தினமலர்

பாதம் தரையில் படும்படி முழங்காலை மடித்துக்கொண்டு படுத்துக்கொள்ளவும். வயிற்று தசைப்பகுதியை இறுக்கி கொண்டு, முகவாயை மார்பு பகுதி நோக்கி கொண்டு வந்து பக்கவாட்டில் உருளவும். உட்காரும் அளவுக்கு உருளாமல் இருக்க வேண்டும். ஐந்து நொடிகளுக்கு பிறகு பழைய நிலைக்கு வரவும். இதே போல 10 முறை செய்யவும்.

09:55:01 on 17 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என ஆவின் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணி அறிவித்துள்ளார். 4வது நாளாக ஆவின் டேங்கர் லாரிகள் போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது.

09:19:48 on 17 Feb

மேலும் வாசிக்க தினகரன்

தேசிய குடியுரிமைச் சட்ட திருத்தத்துக்கு எதிராக, தி.மு.க. கூட்டணி ஒரு பெரிய கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்துள்ளது. இது பாஜக அரசிற்கும், அதிமுகவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

08:27:01 on 17 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என மதுரை சிறையிலுள்ள யுவராஜ் பரபரப்பு ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில், விஷ்ணுபிரியா தற்கொலைக்கு அப்போதைய நாமக்கல் எஸ்.பி.தான் காரணம். இந்த உண்மையை வெளியே சொல்லிவிடுவேன் என்பதால் என்னைக் கொல்வதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன" என கூறியுள்ளார்.

07:57:02 on 17 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஜாமியா மில்லியா பல்கலைக்கழக நூலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குவதைக் காட்டும் வீடியோ நேற்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. அந்த வீடியோவில் நூலகத்தில் இளைஞர் ஒருவர் முகத்தை மூடிக் கொண்டிருப்பதாகவும், ஒருவர் மூடிய புத்தகத்தைப் படிப்பதாகவும், அது ஏன் என்றும் விமர்சனங்கள் பாஜக தரப்பில் இருந்து வைக்கப்படுகின்றன.

07:27:01 on 17 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

”தமிழகத்தில் எம்.எல்.ஏவே இல்லாமல், பாஜக ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. 'எல்லோரும் பா.ஜ.கவில் சேர்ந்து கொள்ள வேண்டும்' எனக் கூறினால், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என அதிமுகவில் உள்ள அனைவரும் பாஜகவிடம் உறுப்பினர் அட்டை பெற்றுக்கொண்டு, சேர்ந்து கொள்வார்கள். உறுப்பினர் அட்டை வாங்குவதுதான் பாக்கி.” என செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.

06:57:02 on 17 Feb

மேலும் வாசிக்க விகடன்

”பாட்ஷாவாக நடித்தால் மட்டும் போதாது” இஸ்லாமியர்களுக்கு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று கூறிய ரஜினிகாந்த் வண்ணாரப்பேட்டைக்கு வருவாரா? என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

05:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது லைன்ஸ் கிளப், ரோட்டரி கிளப் போன்று ஏதோ ஒரு ரெக்கிரியேஷன் கிளப் ஆகியவற்றில் போட்ட தீர்மானத்துக்கு ஒப்பாகும் என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். ஏற்கனவே இவர் சென்னை உயர் நீதிமன்றத்தைத் தரக்குறைவாகப் பேசியிருந்தார்.

05:25:01 on 17 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பி5 பெட்டியில் 64வது சீட், சிவபெருமானின் சிறு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. கடவுள் படங்களை ஒட்டி மாலையணிவித்து ரயில் ஊழியர்கள் வழிபாடு நடத்தினர். சிவபெருமானுக்காக இந்த சீட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

04:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை மார்ச் 3ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடுவதற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்‌சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேர் குற்றவாளிகளாவர்.

04:34:09 on 17 Feb

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தமிழில் வெளிவந்த தாலாட்டு கேக்குதாமா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜ்கபூர். இவருக்கு ஷாரூக் கபூர், ஷமீனா கபூர், ஷானியா கபூர் என் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவரின் மகன் ஷாரூக் கபூர் இன்று காலை உடல் நலம் சரி இல்லாத காரணத்தினால் உயிரிழந்ததாக தெரிவந்துள்ளது.

04:27:02 on 17 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

வண்ணாரப்பேட்டை போராட்டக்களத்தில், ஷயின்ஷா, சுமையா ஆகியோர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். மணமகன் மற்றும் மணமகள் இருவரும் இந்த மணமகளை, மணமகனை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம் எங்களுக்கு பிடிக்கவில்லை என்று பொது மக்கள் மத்தியில் தெரிவித்தனர்.

04:03:27 on 17 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

விக்ணேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கும் முக்கோணக் காதல்கதை கொண்ட திரைப்படத்தில் அப்படி என்ன புதிதாக இருக்கப்போகிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

03:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே சர்தனா பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி டினா சவுத்ரி. உடன் படிக்கும் மாணவரை காதலித்தார். சாதியை காரணம் காட்டி குடும்பத்தினர் எதிர்த்தனர். ஆனால் டினா பிடிவாதமாக இருந்ததால் டினாவின் உறவினர் கிட்டு என்கிற பிரசாந்த் சவுத்ரி நண்பர்களுடன் சேர்ந்து டினாவை சுட்டு கொன்று விட்டார்.

03:25:01 on 17 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

தூத்துக்குடி அருகேயுள்ள குலையன்கரிசல், பொட்டல்காடு, முள்ளக்காடு பகுதி நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், எரிவாயு நிறுவனமும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

02:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ஷாஹீன் பாக்கில் போராட்டம் நடத்தி வருவோருக்கு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அழைப்பு விடுத்துள்ளார். ஷாஹீன் பாக் போராட்டக்கார்களை சந்திக்கத் தயாராக உள்ளதாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

02:35:16 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை பாக்ஸ் ஆபிஸில் சைக்கோ படம் கடந்த 24 நாட்களில் 2.91 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. அதே போன்று 1917 படம் 81 லட்சமும், வானம் கொட்டட்டும் - 74 லட்சமும், சீறு 65 லட்சத்தையும் வசூலித்துள்ளது.

02:27:02 on 17 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, "சில சக்திகளும், விஷமிகளும் போராட்டத்தைத் தூண்டிவிட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. சிறுபான்மையின மக்களுக்குப் பாதுகாப்பாக அரசு இருக்கும். இஸ்லாமியர்களுக்கு அரணாக அதிமுக அரசு இருக்கும். அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட விடமாட்டோம்" என விளக்கம் அளித்தார்.

02:23:39 on 17 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள கூட்டப்புளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 11 பாய்மரப்படகுகள் கலந்துகொண்டன. கடற்கரையில் திரண்ட ஏராளமான பொதுமக்கள் படகுப்போட்டியை கூடி நின்று கண்டு ரசித்தனர்.

01:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

அன்புச் செழியன் எடப்பாடி மூலமாக பா.ஜ.க.வை சரிக்கட்டி தப்பிக்க நினைக்கிறார். அன்புவையும் அவருடன் தொடர்பில் உள்ள அமைச்சர்களையும் மத்திய அரசு தன் பிடியில் வைத்துக்கொள்ளும் என உறுதியாகச் சொல்கிறார்கள் வருமானவரித்துறை அதிகாரிகள்.

01:27:02 on 17 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கொடைக்கானலில் நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிஏஏக்கு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி மூஞ்சிக்கல் பள்ளிவாசல் முன்பு தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

12:59:48 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தாக்கியதற்கு காரணம் ஐ.பி.எஸ். அதிகாரி கபீல் குமார்தான் என தமிமுன் அன்சாரி குற்றச்சாட்டு வைத்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமாக இருந்தவர் தான் கபில் குமார் என்றும் தமிமுன் அன்சாரி புகார் தெரிவித்துள்ளார்.

12:57:26 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இமாச்சல பிரதேச மாநிலம் குலு மாவட்டத்தில் உள்ள கடப்பாரில்லி கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் அங்கு போதிய மருத்துவமனை இல்லை. சாலை வசதியும் இல்லாததால், அந்த கிராமத்தினர், கட்டைகளை கொண்டு பல்லக்கு போல செய்து அதில் கர்ப்பிணி பெண்ணை அமர வைத்து 30 கி.மீ.க்கு சுமந்து சென்றனர்.

12:55:01 on 17 Feb

மேலும் வாசிக்க தந்தி டிவி

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள் வாகனங்களை சேதப்படுத்தினர் என பேரவையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். போலீஸ் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதாகவும் காலனி, தண்ணீர் பாட்டில்களை வீசியதாகவும் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

12:53:16 on 17 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சட்டப்பேரவைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் கட்சியில் இணைவதற்கு வாய்ப்புத் தேடும் வகையில், அவருக்கு சில அமைச்சர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருவதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

12:27:03 on 17 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ”கல்வி மற்றும் செல்வத்தின் காரணமாக மக்களுக்கு ஆணவம் வந்துவிடுகிறது. அதன் முடிவு குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போய்விடுகிறது.” என்றார்.

11:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க விகடன்

சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் விவாதம் நடத்த வாய்ப்பில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்தார். சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில் சபாநாயகர் இவ்வாறு அறிவித்தார். வண்ணாரப்பேட்டை சம்பவம் தொடர்பாக மட்டும் பேரவையில் பேச அனுமதி அளிக்கப்படும் என சபாநாயகர் கூறினார்.

11:53:37 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இதில் இடம் பெறுகிறார். டெல்லியிலிருந்து தொடங்க உள்ள நிலையில், அதே நாளில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற உள்ளன.

11:27:01 on 17 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பி.எஸ்.என்.எல்., கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், பயன்பாடு குறைந்த கட்டடங்களை வாடகைக்கு விட நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. வசதி குறைந்த இடத்தில் செயல்படும் மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், பி.எஸ்.என்.எல்., இடங்களை வாடகைக்கு எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றன.

10:57:01 on 17 Feb

மேலும் வாசிக்க தினமலர்

கண்டன பதாகையுடன் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார். இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து பதாகை ஏந்தி வந்துள்ளார். முன்னதாக, சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் கவன ஈர்ப்பு மனு அளித்திருந்தார்.

10:52:18 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 1765 ஆக உயர்ந்துள்ளது. 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

10:27:01 on 17 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக கடலூர் மாவட்டம் மந்தாரகுப்பத்தில் வணிகர்கள் கடை அடைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் சி.ஏ.ஏ. போராட்டத்தில் தடியடி நடத்தியதைக் கண்டித்து 1000-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

10:02:19 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வண்ணாரப்பேட்டை பிரச்சினையை நிச்சயம் கிளப்பும். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று நள்ளிரவு வரை இந்த விவகாரம் தொடர்பாக எஸ்டிபிஐ உள்ளிட்டவைகளுடன் சந்திப்புகள், ஆலோசனைகள் என்று நடத்தியது தமிழ்நாட்டு அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது.

09:57:02 on 17 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் கவன ஈர்ப்பு மனு அளித்துள்ளனர்.

09:48:25 on 17 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிஏஏவுக்கு எதிராக நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், போலீசாரின் தடியடியை கண்டித்தும் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்களின் போராட்டம் 4-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

09:27:01 on 17 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அனுஷ்கா வட இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் டேட்டிங்கில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. அவரைத்தான் அனுஷ்கா மணக்க இருப்பதாகவும் திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது. ஆனால் அனுஷ்கா இதுபற்றி பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றார்.

08:55:02 on 17 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

3,711 பேருடன் ஜப்பான் யோகஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டைமண்ட் பிரின்சஸ் சொகுசுக் கப்பலில் மேலும் 70 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 355ஆக அதிகரித்துள்ளது.

07:55:02 on 17 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது உடையால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக எனக்குப் பெருமையாகவும் நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் உறுதியாகவும் உணர்கிறேன்.” என ஏ.ஆர்.ரகுமான் மகள் கதிஜா கூறியுள்ளார்.

06:55:01 on 17 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சிஏஏவை எதிர்த்து சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு மஜத பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி அழைப்பு விடுத்துள்ளார். அதுபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் அன்றைய தினம் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடவும் அழைப்பு விடுத்துள்ளார்.

10:57:02 on 16 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வீட்டை விட்டு நாம் வெளியே செல்கையில் முகத்திற்கு சன்- ஸ்கிரீன் பயன்படுத்தலாம். அது உங்கள்முகத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க செய்யும். வாரத்திற்கு ஒருமுறையாவது உங்கள் முகத்தை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். காரணம் அப்பொழுதான் உங்கள் சருமம் பொலிவுடனும், பளபளப்புடனும் இருக்க செய்யும்.

09:55:01 on 16 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது கைதான காஷ்மீர் இளைஞர்கள், இன்னும் சிறையில்தான் இருக்கிறார்கள். வெளி மாநில சிறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தாய்மார்கள் தங்களது மகன்களை காணாத பரிதிவிப்பில் இருக்கிறார்கள்.

08:55:01 on 16 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ரஜினியை வைத்து பா.ஜ.க நடத்தும் காய் நகர்த்தல்கள் எல்லாமே உளவுத் துறையினர் மூலம் எடப்பாடி தரப்புக்கும் தெரிய வந்திருக்கிறது. ரஜினிதான் வரும் சட்டமன்றத் தேர்தலின் மையப்புள்ளி என்பதால், பேசாமல் அவரிடமே சரண்டர் ஆகிவிடலாம் என்று எடப்பாடியின் ஆட்கள் திட்டம் போட்டிருக்கிறார்கள்.

08:25:01 on 16 Feb

மேலும் வாசிக்க விகடன்

சேலம் ஆத்தூரில், செல்போன் கடை முன் வைத்திருந்த சிசிடிவி கேமராவை திருடியதால் ஆத்திரத்தில் கடை உரிமையாளர் வசந்த் மற்றும் அவரது நண்பர்கள் ராஜா என்பவரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வசந்த் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

07:55:02 on 16 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

“குடியுரிமை திருத்த சட்டம் மனித குலத்திற்கு எதிரானது. இதை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம். இந்த சட்டத்தை திரும்பபெறும் வரை இதை நாம் கைவிட கூடாது.
எனவே நாம் ஒன்றிணைந்து போராடி நம்மை நாம் தற்காத்து கொள்ளவேண்டும். அமைதியாக போராடியவர்களை தடியடி நடத்தியதை ஏற்க முடியாது.” என சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.

07:25:01 on 16 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஞாயிற்றுக் கிழமை விடுமுறை தினத்தில் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மேற்கொண்ட முக்கிய ஆலோசனைகளின் எதிரொலியாக நாளை (பிப்ரவரி 17) சட்டமன்றத்தில் முதல்வர் சிஏஏ குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் போராட்டக் களத்தில் இருப்பவர்கள்.

06:57:02 on 16 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக நூலகத்திற்குள் போலீஸ் உடையில் நுழைந்தவர்கள், அங்கிருப்பவர்களை தாக்குவது போன்ற வீடியோக் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

06:25:01 on 16 Feb

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

"சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது, சிஏஏ கொண்டு வருவது போன்ற முடிவுகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. ஆனால் தேச நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் இவற்றை கையிலெடுத்தோம். மேலும் இவ்விவகாரங்களில் நாங்கள் உறுதியாகவும் இருப்போம்.” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

05:57:01 on 16 Feb

மேலும் வாசிக்க தினமணி

நடிகர் விஜய் மாஸ்டர் படத்துக்காக பாடியிருக்கும் ஒரு குட்டிக் கதை பாடல் வெளியான அதே நேரத்தில், அதே நாளில் இரும்பு மனிதன் படத்துக்காக நடிகர் சிம்பு பாடிய டோன்ட் வொர்ரி புள்ளிங்கோ பாடலும் வெளியாகி இருக்கிறது. இரு பாடல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

05:25:02 on 16 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

"நான் வெளியிட்ட புகைப்படத்தில் இருக்கும் நபர் குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர் அல்ல. விபத்தில் சிக்கியவர் என்று எனது நண்பர்களும் சில நலம் விரும்பிகளும் சுட்டிக் காட்டியதன் மூலம் தெரிந்து கொண்டேன். இதைப் பதிவு செய்ததற்காக மன்னிப்பு கோருகிறேன்." என திமுக செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

04:57:01 on 16 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது புங்கவர்நத்தம். இந்த கிராமத்தைச் சேர்ந்த சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் எதிர்வீட்டு ராமமூர்த்திக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இது அரசல் புரசலாக சண்முகத்தின் காதிலும் விழ, மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்கவில்லை.

04:27:01 on 16 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு டாக்டர் என பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான்று டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை காலை 11.03 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:57:01 on 16 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா மற்றும் ஈராக், கூட்டு ராணுவப்படை தளத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் முதல் அமெரிக்காவை குறிவைத்து அரங்கேறிய 19வது தாக்குதல் இது.

03:27:01 on 16 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

வேறு நாடுகளில் இருந்து, இந்திய வரைபடத்தை பார்க்கும் போது, காஷ்மீர் பகுதிகள் சர்ச்சைக்குரிய இடம் என சிவப்பு நிற கோடுகளுடன் கூகுள் மேப்ஸ் காட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

02:57:01 on 16 Feb

மேலும் வாசிக்க தினமலர்

பால் டேங்கர் லாரி ஸ்டிரைக் 3-வது நாளாக நீடிப்பதால் நாளை முதல் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் வெளியிடங்களில் இருந்து சென்னைக்கு பால் கொண்டுவரப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பால் இருப்பு நாளை காலையுடன் முடிந்துவிடும் என்பதால் பால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

02:27:01 on 16 Feb

மேலும் வாசிக்க தினகரன்

மாஸ்டர் படத்திற்காக தன்னம்பிக்கை தரும் விதமாக விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது. Youtube ல் இந்தியாவில் இப்பாடல் பெரும் பல சாதனைகளை தொடர்ந்து செய்து வருகிறது. தற்போது அமெரிக்கா, பஹ்ரைன், குவைத், கத்தார், சிங்கப்பூர், பிரான்ஸ், லண்டன் என பல நாடுகளில் இப்பாடல் ட்ரெண்டிங் செய்துள்ளது.

01:57:03 on 16 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. கோவை, மதுரை விமான நிலையம், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய நகரங்களில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக சேலத்தில் 97 டிகிரி பதிவாகியுள்ளது.

01:27:02 on 16 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஐபிஎல் போட்டிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மார்ச் 29-ம் தேதி மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 13-வது ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி மே 24ம் தேதி மும்பையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:57:01 on 16 Feb

மேலும் வாசிக்க விகடன்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகிலுள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், இயற்கை உபாதையை கழிக்க ஒதுங்கியுள்ளார். அப்போது அங்குள்ள நிலத்தில் களை எடுத்துக்கொண்டிருந்த பெண், இதனை தவறாக நினைத்து கூச்சலிட்டுள்ளார். அப்போது அருகில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் சக்திவேலை துரத்தியுள்ளனர்.

12:27:01 on 16 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பனாமா நாட்டுக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று சீனா, சிங்கப்பூர் வழியே தூத்துக்குடி துறை‌முகத்திற்கு வந்துள்ளதால், கொரோனா பாதிப்பு இ‌ருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. RU YI I என்ற சரக்கு கப்பல் கடந்த 13ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது.

11:57:01 on 16 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

65வது அமேசான் பிலிம்பேர் விருதுகள் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில் நேற்றிரவு வழங்கப்பட்டன. கல்லி பாய் (Gully boy) சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது. இப்படத்தில் நடித்த ரன்வீர் சிங்கும் - ஆலியா பட்டும் சிறந்த நடிகர் -நடிகைக்கான விருதை பெற்றனர்.

11:27:01 on 16 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 1600ஆக உயர்ந்துள்ளது. 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என கூறப்படுகிறது.

10:57:02 on 16 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

“பட்ஜெட் தயாரிப்புக்காக முதல்வர் எடப்பாடி பல ஆலோசனைகளை நடத்தினார். அமைச்சர்களிடம் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆனால் பட்ஜெட் வாசிக்கும்போது முதல்வர் என்று குறிப்பிட்டுச் சொல்லாமல், முதல்வரை இருட்டடிப்பு செய்வதுபோல் சட்டமன்றத்தில் நடந்துகொண்டார் ஓபிஎஸ். அதனால்தான் முதல்வரின் இந்த வெளிநடப்பு” என்கிறார்கள்.

10:27:01 on 16 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக 3 ஆவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்து மதுரை, திருப்பூரில் போராட்டம் தொடர்கிறது.

09:57:02 on 16 Feb

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்பிஆர், என்ஆர்சி க்கு எதிரான போராட்டத்தை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்ட-ஒழுங்கு பாதுகாப்பு, முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகளை டி.ஜி.பி. நியமித்துள்ளார்.

09:41:16 on 16 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ20எஸ் மற்றும் கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகமான கேலக்ஸி ஏ20எஸ் 3 ஜி.பி. ரேம் + 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம் + 64 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் வெளியிடப்பட்டது.

08:55:01 on 16 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

சாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியை ஜெயமேரி. தம் பள்ளியில் 1 முதல் 5 வரை பயிலும் பட்டாசு தொழிலாளர்களின் குழந்தைகளை பல்வேறு வகையில் ஊக்குவித்து வருகிறார். அதன்படி திருக்குறள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ஒப்புவித்தலுக்கு ஈடாக ஒரு ரூபாயும், குறளோடு விளக்கமும் சொன்னால் இரண்டு ரூபாயும் கொடுக்கிறார்.

07:55:02 on 16 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கரன்சி மூலம் வைரஸ் பரவலை தடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சீன மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புற ஊதா ஒளி அல்லது அதிக வெப்பநிலையை பயன்படுத்தி யுவான் நோட்டுகளில் உள்ள கிருமிகளை நீக்கிய பின்பு தனிப்பெட்டிகளில் அடைத்து சீல் வைத்து 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

06:55:02 on 16 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

விருதாச்சலத்தை அடுத்த கொம்மனாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் விக்னேஷ் (23). பொறியியல் பட்டதாரியான இவர் சமூக வலைதளங்களில் பல பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வதாக கூறி மிரட்டி அவர்களை பாலியல் தொந்தரவு செய்து வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறைக்கு புகார் வந்தது.

10:55:02 on 15 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பொதுவாக படுக்கையில் ஓய்வு எடுக்கும் போது தலையணையை தலைக்கு மிக உயரமாக வைத்து படுக்க கூடாது, தாழ்வாகவும் வைத்து படுக்க கூடாது. உங்கள் இரண்டு கைகளையும் வணக்கம் கூறுவது போல கைகூப்பினால் எவ்வளவு உயரம் வருமோ அவ்வளவு உயரமே தலையணையின் உயரம் உங்கள் கழுத்துக்குப் போதுமானது.

09:57:01 on 15 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா திரைப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்துக்கு ‘பகீரா’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். காதலர் தினத்தன்று தமிழ் சினிமாவே கொண்டாடிக்கொண்டிருக்க, திடீரென இப்படி ஒரு போஸ்டரை ரிலீஸ் செய்து, அதில் ‘நோ மோர் வேலண்டைன்ஸ் டே’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

08:57:01 on 15 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

முஸ்லிம்கள் மீது சிறு துரும்பும் படாமல் அதிமுக அரசு பாதுகாத்து வருவதாக, தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், பொய்யான பிரச்சாரத்தை, கோயபல்ஸ் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

08:27:02 on 15 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

டெல்லியில் தமிழ்நாடு இல்லம் முன்பு போராட்டம் நடத்திய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் போராடியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து டெல்லியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

07:57:02 on 15 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூரைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரகாஷ். இவரது மனைவி பிரியா. இந்நிலையில், பால் வியாபாரியான சின்னதுரை என்பவருடன் பிரியாவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.

07:27:02 on 15 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் 4266 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படும். அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தினசரி ஒரு லட்சம் கிலோ லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படும். இதனால் நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை ஏற்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:57:01 on 15 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரனும், மத்திய பிரதேச மாநில பாஜக தலைவராக விஷ்ணு தத் சர்மா மற்றும் சிக்கிம் மாநில பாஜக தலைவராக தல் பகதூர் சவுகான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தமிழக பாஜக தலைவர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

06:27:01 on 15 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 10 மணிக்கு தொடங்கும் தேர்வுக்கு 9 மணிகே தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 மணிக்கு மேல் வரும் தேர்வர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:55:01 on 15 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

அமெரிக்க அதிபர் டிரம்ப் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் 3 மணி நேரம் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக ரூ.100 கோடி மாநில அரசு சார்பில் செலவிடப்பட உள்ளது. அகமதாபாத் நகரை மலர்கள் உள்ளிட்டவைகளால் அழகுபடுத்த ரூ.6 கோடி செலவிடப்படவுள்ளது.

05:27:02 on 15 Feb

மேலும் வாசிக்க தினமலர்

ஓரியன் விண்மீன் கூட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சிவப்பு நிற நட்சத்திரமான பெட்டல்ஜியூஸ், சூப்பர்நோவாவுக்கு முந்தைய கட்டத்திற்குள் நுழைந்து உள்ளது. பூமியிலிருந்து 642.5 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த நட்சத்திரம். விரைவில் வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

04:55:02 on 15 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

முஸ்லீம்களுக்கு ஒன்னுன்னா முதல் ஆளா குரல் கொடுப்பேன்னு சொன்னீங்களே.. இப்போ வீதிக்கு வாங்க ரஜினி” என்று சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு எதிரான கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் டிவிட்டரில் இந்திய அளவில் முதலிடத்தில் #வீதிக்குவாங்கரஜினி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

04:27:02 on 15 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மாஸ்டர் பட பாடலில் அனிமேசன் காட்சிகளில் Dont be the person spreading hatred என்ற வாசகத்துடன் தலையில் காவி நிற தலையுடன் மேடையில் ஒருவர் பேசுவது போலவும், கூட்டத்தில் இருப்பவர்கள காவி உடையுடன் இருப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

03:55:01 on 15 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்திருந்தார் நடிகை ஷாலு. இந்நிலையில் ஷாலு தற்போது காதலர் தினத்திற்காக எடுத்த போட்டோஷூட்டை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ரோஜா பூக்களை மட்டுமே உடலை மறைத்துகொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் அவர்.

03:27:01 on 15 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நீடித்து வருகிறது. இந்தப் போராட்டங்களில் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

02:55:01 on 15 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

"நடிகர் விஜயிடம் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை. விஜய், ரஜினிக்கு நிகரானவர் இல்லை. ரஜினிக்கு நிகர் அஜித்துதான். 'ரஜினி மலை, அஜித் தலை' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

02:27:02 on 15 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

”தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதுகுறித்து புகாரளித்தாலும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இந்த அரசாங்கம் எங்களை மனிதர்களாகவே மதிப்பதில்லை. அதனால்தான், அம்பேத்கர் சொன்னபடி, `இந்து மதத்திலிருந்து விடுதலை பெறுவது” என்று முடிவெடுத்தோம்.

01:57:01 on 15 Feb

மேலும் வாசிக்க விகடன்

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சென்னை ஆவடியில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார் ஜெயக்குமார். போதிய வருவாய் இன்றி தவித்தபோதுதான், பள்ளிக் கல்வித்துறைக்காக ஆவணங்கள் நகல் எடுக்க வந்த டிஎன்பிஎஸ்சி ஊழியரான ஓம்காந்தனுடன் ஜெயக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது.

01:27:01 on 15 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தனுஷ் தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில், இந்தப் படத்தின் கதாசிரியரான விசு, தன்னிடம் உரிமம் பெறாமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

12:57:01 on 15 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ராம பிரானுடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரெயிலின் தொடக்க விழாவை அடுத்த மாத இறுதிக்குள் நடத்த ரெயில்வே முடிவு செய்துள்ளதாக ரெயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்தார்.

12:25:01 on 15 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

கோடை வெயில் அதிகரிப்பதால், வனப்பகுதியில் தீ பற்றும் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ள தேனி மாவட்ட வனத்துறை, மலையேற்றம் செல்ல விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. தடையை மீறி மலையேற்றத்தில் ஈடுபடுவோர், வனப்பகுதியில் தீ வைக்க முற்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

11:57:01 on 15 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா எருமை மாட்டுப் பந்தயத்தில், ஸ்ரீநிவாச கவுடா (28) என்ற இளைஞர் முதல் பரிசை வென்றார். அவர் தனது எருமை மாடுகளுடன் 142.50 மீட்டர் தொலைவை வெறும் 13.62 வினாடிகளில் கடந்தார். இதன் மூலம், கம்பாளா பந்தயத்தில் 30 ஆண்டுகளாக இருந்து வந்த சாதனையை அவர் முறியடித்ததாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

11:27:01 on 15 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மாஸ்டர் படத்தின் குட்டிக்கதை பாடலை “சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன்“ என்ற பாடலுடன் இணைத்து ட்ரோல் செய்தும் வருகின்றனர். தர்பார் படத்தின் சும்மா கிழி பாடலையும் ஐயப்பன் பாடலுடன் இணைத்து ட்ரோல் செய்தனர். அதேப் போன்று குட்டிக்கதை பாடலையும் தற்போது ட்ரோல் செய்து வருகின்றனர்.

10:57:01 on 15 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி மேலும் 139 பலியாகியுள்ளனர். இதுவரை சுமார் 1,523-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க கூடும் என கூறப்படுகிறது.

10:27:01 on 15 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஆவின் ஒப்பந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் சார்பில் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. 2018 ஆம் ஆண்டுடன் ஆவின் பால் சப்ளை செய்வதற்கான ஒப்பந்தம் முடிவடைந்தும் தற்போது வரை புதிய ஒப்பந்தம் போடாததை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

09:57:01 on 15 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வண்ணாரப்பேட்டையில் சிஏஏக்கு எதிராக போராடிய பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அமைதி வழியில் போராடியவர்கள் மீது திட்டமிட்டு கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

09:27:01 on 15 Feb

மேலும் வாசிக்க தினகரன்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதற்கு டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

08:59:20 on 15 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்து திருவாரூரில் நள்ளிரவில் இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 450 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

08:57:17 on 15 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிஎம்டிஏ என அழைக்கப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்புமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

08:55:01 on 15 Feb

மேலும் வாசிக்க தினமணி

வண்ணாரப்பேட்டையில் சிஏஏ போராட்டத்தில் முதியவர் உயிரிழந்ததாக கூறப்படுவது பொய்யான செய்தி என்றும், போராட்டத்தில் பங்கேற்றவர்களின் உடல்நலம் குறித்து வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்றும், முதியவர் இறந்ததற்கும், சிஏஏ போராட்டத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் சென்னை காவல்துறை டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

08:54:45 on 15 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வண்ணாரப்பேட்டையில் பெண்கள் மீதான போலீஸ் தடியடியைக் கண்டித்து போராடிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிஏஏ-வை எதிர்த்து போராடிய பெண்களை தாக்கிய போலீஸை கண்டித்து தமிழகம் முழுவதும் இரவு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

08:52:03 on 15 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். டெல்லி போராட்டத்தைப் போலவே சென்னையிலும் பெண்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். வண்ணாரப்பேட்டையில் தொடங்கியிருக்கும் இந்தப் போராட்டத்துக்கு `சென்னையின் ஷாஹீன் பாக்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

08:46:00 on 15 Feb

மேலும் வாசிக்க விகடன்

மேலும் வாசிக்க