View in the JustOut app
X

பிரதமர் மோடியின் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் 'ஒரே தேசம் ஒரே தேர்தல்' திட்டம் நடைமுறையில் சாத்தியமா என்பதை ஆய்வு செய்வதற்கு கமிட்டி விரைவில் அமைக்கப்படவுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த தகவலை தெரிவித்தார்.

08:35:01 on 20 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தடுப்பூசிகள் குறித்த சந்தேகம் நவீன ஊசி மருந்துகள் மீதான சந்தேகம் போன்றே இருந்து வந்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு மத ரீதியான காரணங்களால் பயந்து இருந்தனர்.

08:15:02 on 20 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஹோட்டல்களுக்கு 1,800 ரூபாய் கொடுத்து வாங்கி வந்த லாரித் தண்ணீர், தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட 3,000 ரூபாய்க்கு அதிகமாகக் கொடுத்து வாங்குகிறது. இதுவும் இடத்தைப் பொறுத்து மாறுகிறது. கடந்த ஒரு மாதமாக, இந்தப் பிரச்னைதான் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.

07:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க விகடன்

சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வேலூர் ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற வருபவர்கள் கட்டாயம் 45 நிமிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பில் பங்கேற்க வேண்டும். பங்கேற்று சான்று பெற்றால் தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் என்ற நடைமுறை அமல்படுத்தியுள்ளனர்.

07:35:02 on 20 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.46ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது

07:15:01 on 20 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் சைன்போரா என்ற இடத்தில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை சிலர் தயாரித்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் சக்திவாய்ந்த வெடிபொருளை தயாரித்துக் கொண்டிருந்தனர்.

06:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

ரஞ்சித்துக்கு ஆதரவாக சமூக ஆர்வாலர்கள், பத்திரிக்கை துறை சேர்ந்த நண்பர்கள், எழுத்தாளர்கள் சிலர் ஒன்று திரண்டுள்ளனர். #standwithranjith என்ற ஹாஷ்டேக்கையும் அவர்கள் ட்ரெண்டாக்கினர். இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் மற்றும் திரைக்கலைஞர்கள் கூட்டறிக்கை என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

06:25:01 on 20 Jun

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

கோயிலில் திருடியதாக ஐந்து வயது தலித் சிறுவன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டில், தலித் சிறுவனின் ஆடைகளை நீக்கி சூடான கல்லில் உட்கார வைத்து தண்டனை அளித்துள்ளனர். இந்த சம்பவமானது மகாராஷ்ட்ரா மாநிலம் வர்தா மாவட்டத்தில் நடந்துள்ளது.

05:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உணவில் உப்பினைத் தவிர்க்க வேண்டும். நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரும்புச்சத்துள்ள உணவுப்பொருட்களை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். தாகம் ஏற்பட்டால் மட்டுமே குடிநீர் பருக வேண்டும். தேவையான அளவு மட்டுமே குடிநீர் பருகுவது நல்லது.

05:25:02 on 20 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

மே மாதத்துக்கான விமானப் போக்குவரத்துச் சேவை குறித்த விவரங்களை சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019 மே மாதத்தில் 2.9 சதவிகித உயர்வுடன் மொத்தம் 1.2 கோடிப் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டுள்ளனர். 2018 மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1.18 கோடியாக மட்டுமே இருந்தது.

04:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உலக சுகாதார நிறுவனம் மற்றும் குழந்தைகளுக்கான ஐ.நா. நிறுவனமான யூனிசெப் ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றினை மேற்கொண்டது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையில் குடிநீர், சுகாதாரம் தொடர்பான கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதன்படி உலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீர் வசதியின்றி தவிப்பது தெரியவந்துள்ளது.

04:25:02 on 20 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நீலகிரியில் பருவமழை தாமதமாகும் நிலையில், முக்கிய அணைகளில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்துகொண்டே செல்வதால், மின் உற்பத்திக்காக அணைகளிலிருந்து நீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மின் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

03:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க விகடன்

2020ஆம் ஆண்டில் முகநூல் நிர்வகத்தினர் வெளியிட உள்ள டிஜிட்டல் பணத்திற்கு லிப்ரா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். லிப்ரா - என்ற சொல்லுக்கு நீதி, சுதந்திரம் உள்ளிட்ட அர்த்தங்கள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகின்றன. இந்த லிப்ரா பணத்தைக் கையாள்வதற்காக ’கலிப்ரா’ - என்ற வாலெட்டையும் பேஸ்புக் அறிமுகம் செய்ய உள்ளது.

03:25:01 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

அதிமுகவில் ஒற்றை தலைமை, இரட்டை தலைமை பிரச்னையால் உட்கட்சி பூசல் அதிமாகி இருப்பதால் கட்சியினரை சமாளிக்க சீனியர்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலாம் என்று அதிமுக தலைமை திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் ராஜ்யசபா சீட்டின் முடிவால் பாமக தலைமை கோபத்தில் இருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

02:56:01 on 20 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

வேகமாக சாப்பிட்டால், சாப்பிட்டதற்கான திருப்தியே இருக்காது. நிறைவான உணவாகவும் இருக்காது. ஆனால் வயிறு நிறைந்த உணர்வு மட்டும் இருக்கும். இவ்வாறு நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள் எனில், அதற்குக் காரணம், மூளைக்குக் கட்டளையிடப்பட்டு அது வேலை செய்வதற்கு முன்னரே எல்லாம் முடிந்துவிடுவதுதான் காரணம். இதனால் கலோரிகள் அதிகமாகின்றன.

02:26:01 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

தற்போதைய காலகட்டத்தில் பல க்ரிப்டோகரன்சிகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களும் பல க்ரிப்டோகரன்சி திட்டங்களில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளன. பல மாத யூகங்களுக்குப் பிறகு இறுதியாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது சொந்த க்ரிப்டோகரன்சியை அறிவித்துள்ளது.

01:56:01 on 20 Jun

மேலும் வாசிக்க ETV BHARAT

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம்புதூர் மேட்டு தெருவில் உள்ள விவசாயி 6 மாத காலமாக தனது கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார். இதனால் அப்பகுதி மக்கள் அந்த விவசாயியை மனமார பாராட்டி வருகின்றனர்.

01:26:01 on 20 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

செல்போனை நம் பிள்ளைகளிடமிருந்து மொத்தமாகப் பிரிக்க நினைப்பது சரியில்லை. அதற்குப் பதிலாக, அதில் அவர்களுக்குத் தேவையான விஷயங்களைப் பார்க்க வையுங்கள். பிள்ளையின் சிறு வயதிலிருந்து செல்போனை விளையாடக் கொடுத்த பெற்றோர் என்றால், முதலில் அதற்கு ஒரு டைம் லிமிட் வையுங்கள்.

12:55:01 on 20 Jun

மேலும் வாசிக்க விகடன்

நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில், 58 ஆயிரத்து, 200 புதிய வேலைகள் உருவாகும். உற்பத்தி, பொறியியல், உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் இந்த வேலை வாய்ப்புகள் இருக்கும் என டீம்லீஸ் சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

12:25:01 on 20 Jun

மேலும் வாசிக்க தின மலர்

பல இயற்கையான பொருட்களுடன் குங்குமப்பூ, சந்தனம் மற்றும் ரத்தச் சந்தன கலவையும் சேர்த்துச் செய்யப்படுகிற குங்குமாதி தைலம் உண்மையிலேயே நிறத்தை மேம்படுத்த உதவக்கூடியது தான். மங்கு எனப்படுகிற கரும்புள்ளிகளையும் நீக்கும்.

11:55:01 on 19 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் ஆட்டோமொபைல் பிரியரான தனது மனைவி நிலுஃபர் ஷெரிஃப் மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக அவருக்கு விலையுயர்ந்த லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றினை பரிசாக அளித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

11:25:02 on 19 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாளை மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நடைபெறும், அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்க டெல்லி செல்கிறார். டெல்லி பயணத்தின்போது மற்ற முக்கிய அமைச்சர்களையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

10:55:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

பிரதமர் மோடி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாளை இரவு விருந்தளிப்பதாக தெரிவித்துள்ளார். இரவு உணவு தேசிய தலைநகரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெறும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அழைப்பை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவித்தார்.

10:25:02 on 19 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கிரீன் கார்டு எனும் அமெரிக்காவின் நிரந்தரக் குடியுரிமையை நாடு வாரியாக குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மட்டும் வழங்கும் சட்டத்திருத்த மசோதா அமலாகிறது. எனவே, தகுதி திறன் அடிப்படையில் இனி ஆட்களை எடுக்கும் போது, அதிகமக்கள் தொகை உள்ள இந்தியா, சீனா போன்ற நாட்டவரின் திறமையானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

09:55:02 on 19 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை தன்டையார்ப்பேட்டையில் உள்ள நகைக் கடையில் ஒரு கிலோ தங்க நகைகள் திருடு போனது. நகைக்கடை ஊழியர் இந்திரசாந்த், சுனில் சிறிது சிறிதாக நகைகளை திருடி வந்ததாக கடையின் உரிமையாளர் புகார் தெரிவித்துள்ளார்.

09:25:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினகரன்

குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பொதுமக்களை திரட்டி வரும் 22ஆம் தேதி முதல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். குடிநீர் பஞ்சமே தமிழகத்தில் இல்லையென பொய்யான பிரச்சாரத்தை தமிழக அரசு செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

08:57:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மர்லின் மன்றோவின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலையைக் கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். 25 வருடத்திற்கு முன்பு அந்த சிலை அங்கு நிறுவப்பட்டது.

08:39:01 on 19 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான மர்லின் மன்றோவின் சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலையைக் கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணர்கள், லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸார் அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். 25 வருடத்திற்கு முன்பு அந்த சிலை அங்கு நிறுவப்பட்டது.

08:36:01 on 19 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கட்சித் தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அமைச்சரான சி.வி.சண்முகத்தை முதல்வர் எவ்வாறு அனுப்பிவைத்தார் என்ற கேள்வி எழும் அதே நேரத்தில், கட்சித் தலைவரின் பிரதிநிதி என்ற அடிப்படையிலாவது அனுமதித்திருக்கலாம் அல்லவா என்ற குரலும் டெல்லி வட்டாரங்களில் எழுந்துள்ளது.

08:15:01 on 19 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 818 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்த அப்துல் காதர் ஜெயலானி, அராஃபத், சபிஃபுல்லா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:55:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கையில் பிடித்திருக்கும் பேனரில், ‘எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை எங்களிடம் கொடுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில், படத்தில் இருக்கும் பேனர் உண்மை தான் என்பதும், அதில் இருக்கும் வாசகம் மட்டும் மாற்றப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

07:39:01 on 19 Jun

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கையில் பிடித்திருக்கும் பேனரில், ‘எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை எங்களிடம் கொடுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. இந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில், படத்தில் இருக்கும் பேனர் உண்மை தான் என்பதும், அதில் இருக்கும் வாசகம் மட்டும் மாற்றப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

07:36:02 on 19 Jun

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

குழந்தையைப் பாதுகாக்க நாய் செய்த செயல் தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. அதில், நீர்நிலையில் உள்ள பந்தை எடுக்க தண்ணீர் அருகே குழந்தை செல்கிறது. இதனைக் கண்ட வளர்ப்பு நாய் ஒன்று, உடனடியாக சென்று குழந்தையை இழுத்து வந்து கரையில் தள்ளி விடுகிறது. இதன் பின்னர் அந்த நாய், தானே நீருக்குள் சென்று பந்தை எடுத்து வருகிறது.

07:15:01 on 19 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டிபன் பாத்திரத்தை யார் முதலில் கழுவுவது என்பது தொடர்பாக விமானிக்கும், விமான பணிக்குழுவை சேர்ந்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், இனி விமான பணியாளர்கள் யாரும் உணவை எடுத்து வரக்கூடாது என ஏர்இந்தியா நிர்வாகம் தடை விதித்துள்ளது.

07:06:11 on 19 Jun

மேலும் வாசிக்க தினமலர்

எடப்பாடி இன்னும் சசிகலாவை நம்பிட்டுதான் இருக்கார்னு அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. இது பற்றி விசாரித்தபோது சசிகலாவுக்கான முதல்வர் எடப்பாடியின் மெசேஜை சிறைக்குப் போய் சொல்லியிருப்பவர் எடப்பாடியின் மனைவி ராதா. சசிகலாவும் எடப்பாடியும் இன்னமும் பரஸ்பர நம்பிக்கையோடுதான் இருக்காங்கன்னு அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

06:39:01 on 19 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

எடப்பாடி இன்னும் சசிகலாவை நம்பிட்டுதான் இருக்கார்னு அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன. இது பற்றி விசாரித்தபோது சசிகலாவுக்கான முதல்வர் எடப்பாடியின் மெசேஜை சிறைக்குப் போய் சொல்லியிருப்பவர் எடப்பாடியின் மனைவி ராதா. சசிகலாவும் எடப்பாடியும் இன்னமும் பரஸ்பர நம்பிக்கையோடுதான் இருக்காங்கன்னு அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

06:36:02 on 19 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

தளபதி 63 படத்தைப் பற்றிய படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கும், இரண்டாவது லுக் 22ஆம் தேதி நள்ளிரவிலும் வெளியாகும் என்று படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

06:33:42 on 19 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொல்கத்தாவில் கடந்த திங்களன்று நள்ளிரவு பணி முடிந்து உபர் வாடகை டாக்ஸியில் திரும்பிக்கொண்டிருந்த முன்னாள் மிஸ் இந்தியா பட்டம் வென்றவரும் நடிகையுமான உசோஷி சென்குப்தாவை இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத இளைஞர் கும்பல் காரிலிருந்து இழுத்து, அவருக்கு கடும் இன்னல் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

06:15:02 on 19 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சினிமா ரசிகர்கள் பிரியங்கா மீது மதச்சாயம் பூசி ட்ரோல் செய்துவருகின்றனர். தற்போது இந்தியா முழுவதும் இதுதான் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. பிரியங்கா சோப்ரா, தனது கணவருடன் காக்கி ஷார்ட்ஸ் அணிந்து நடந்து செல்லும் புகைப்படம் வைரலானது. தற்போது இப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவர் ஆர்எஸ்எஸ்-இல் இணைந்துவிட்டதாகக் கூறிவருகின்றனர்.

06:11:54 on 19 Jun

மேலும் வாசிக்க ETV Bharat

சென்னை நெசப்பாக்கம் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், கூலித்தொழிலாளி. இவரின் மனைவி சுமித்ரா. கார்த்திக் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அசோக்நகர் காவல் நிலையத்துக்கு நேற்றிரவு கார்த்திக் வந்தார். திடீரென பிளேடால் கழுத்தை அறுத்தார். அதைப்பார்த்த போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

06:06:28 on 19 Jun

மேலும் வாசிக்க விகடன்

சைதாப்பேட்டை மேற்கு பகுதியின் கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், பாரி நகர், பள்ளிக்கூட சாலை, அஞ்சுகம் நகர், ஆர்.ஆர்.காலனி, வி.எஸ்.எம். கார்டன், சைதாப்பேட்டை மேற்கு முழுவதும், 7, 11-வது அவென்யு, எல்.ஐ.சி.காலனி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

05:57:01 on 19 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

ராட்சசன் படத்திற்குப் பிறகு அமலாபால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2.5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேயாத மான் படத்தை இயக்கிய ரத்ன குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

05:45:00 on 19 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’’தமிழகத்தில் மக்களை வாட்டி வதைத்து வரும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால், ஆட்சியாளர்கள் விதவிதமான சல்ஜாப்புகளை சொல்லி பொறுப்புகளை தட்டிக்கழித்து வந்தனர்.” என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

05:39:02 on 19 Jun

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

’’தமிழகத்தில் மக்களை வாட்டி வதைத்து வரும் வரலாறு காணாத குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால், ஆட்சியாளர்கள் விதவிதமான சல்ஜாப்புகளை சொல்லி பொறுப்புகளை தட்டிக்கழித்து வந்தனர்.” என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

05:36:01 on 19 Jun

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை கேலி செய்யும் விதமாக ஹோட்டல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ‘அளவுத் தண்ணீர் ரூ 150 மற்றும் அளவில்லாத் தண்ணீர் 200 ரூ .. சாப்பாடு இலவசம்’ என அறிவித்துள்ளது. இதற்கு அமைச்சர் வேலுமணி என்ன பதில் சொல்லுவாரோ எனத் தெரியவில்லை.

05:34:23 on 19 Jun

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக ஷிகர் தவான் நீக்கப்பட்டுள்ளார். இதுகு றித்து பிசிசிஐ, ‘‘தவான் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கப் பதிலாக ரிஷப் பந்தை அணியில் சேர்க்க அனுமதியளிக்க வேண்டும்’’ என்று ஐசிசிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

05:20:16 on 19 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தெருவில் அநாதையாக கைவிடப்பட்ட காளை மாடு ஒன்று தெருவில் நடந்து செல்வர்களை ஆவேசமாக முட்டியது. அந்த வழியாக நடந்து சென்ற பாதசாரிகள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையம் முட்டித்தள்ளியது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

05:15:01 on 19 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக மதிமுக தலைவர் வைகோ மீது தொடர்ந்த வழக்கில் ஜூலை 5ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னதாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக வைகோ மீது ஆயிரம்விளக்கு போலீசார் கடந்த 2009ஆம் ஆண்டில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

05:06:00 on 19 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

“காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய தடைக்கல் என்னவெனில் வெகுஜன மக்கள் தொடர்பை இழந்ததுதான். எனவே மதக் கொள்கை இல்லாமல் ஆர்.எஸ்.எஸ். வழிமுறையைப் பின்பற்றி மக்களுடன் மறுதொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் 2021 சட்டப்பேரவை தேர்தலில் 80 இடங்களை வெல்ல முடியும்” என்றார் அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகய்.

04:55:01 on 19 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நந்தா, ரமணா இருவரும் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் இல்லை என்ற போதும் இளையராஜா பாராட்டு விழாவுக்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்கான பொறுப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் லாபமடைய விஷால் காரணமாக இருந்தார்.

04:35:02 on 19 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடந்த 12ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில்தான் பருவமழை தீவிரம் அடைய மிகவும் தாமதம் ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு வாயு புயல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை வாயு புயல் எடுத்துச் சென்றது பருவமழை தீவிரம் அடைவதை தாமதப்படுத்தி விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

04:18:01 on 19 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடந்த 12ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டில்தான் பருவமழை தீவிரம் அடைய மிகவும் தாமதம் ஏற்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு வாயு புயல் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. காற்றில் இருந்த ஈரப்பதத்தை வாயு புயல் எடுத்துச் சென்றது பருவமழை தீவிரம் அடைவதை தாமதப்படுத்தி விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

04:15:01 on 19 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்த பெண்ணைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி வி.வி.ராஜேஷை போலீஸார் கைது செய்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை அதிகாரி முன்னிலையில் தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்றும், அவரை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

03:55:01 on 19 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய மசோதாவை நிறைவேற்ற இன்று அனைத்து கட்சி கூட்டத்தை மோடி கூட்டுகிறார். இதனை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில், இடதுசாரிகள் பங்கேற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

03:39:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினமலர்

'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முக்கிய மசோதாவை நிறைவேற்ற இன்று அனைத்து கட்சி கூட்டத்தை மோடி கூட்டுகிறார். இதனை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கும் நிலையில், இடதுசாரிகள் பங்கேற்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

03:36:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினமலர்

சென்னை புரசைவாக்கத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணப்பெண்ணின் கைப்பையைத் திருடிய திருடன், நகைகளை எடுத்துக்கொண்டு வெறும் பையை திரும்பக் கொடுத்துள்ளான். சி.சி.டி.வி கேமரா உதவியால் அந்தத் திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

03:18:01 on 19 Jun

மேலும் வாசிக்க விகடன்

சென்னை புரசைவாக்கத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மணப்பெண்ணின் கைப்பையைத் திருடிய திருடன், நகைகளை எடுத்துக்கொண்டு வெறும் பையை திரும்பக் கொடுத்துள்ளான். சி.சி.டி.வி கேமரா உதவியால் அந்தத் திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

03:15:02 on 19 Jun

மேலும் வாசிக்க விகடன்

பஸ், விமானம், கப்பல் சேவைகளில் அரசு மட்டுமின்றி தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ரயில்வே போக்குவரத்தில் மட்டும் தனியாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ரயில் சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று தனியாருக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

02:55:02 on 19 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

எகிப்து முன்னாள் அதிபர் மரணம் குறித்து விசாரணை அவசியம் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னாள் அதிபரான மோர்சிக்கு அந்நாட்டு ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான மோர்சி, அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

02:39:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

எகிப்து முன்னாள் அதிபர் மரணம் குறித்து விசாரணை அவசியம் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்னாள் அதிபரான மோர்சிக்கு அந்நாட்டு ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜரான மோர்சி, அங்கேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

02:36:02 on 19 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

பெரம்பலூர் அருகே பாடாலூரில் நேற்றிரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

02:15:02 on 19 Jun

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் சுரேந்தர் என்பவர் தான் 3 வருடங்களாக காதலித்ததாக கூறப்படும் தேன்மொழி என்பவரை அறிவாளால் வெட்டினார். பின்னர், தானும் ரயிலில் மோதி பலத்த காயமடைந்தார். இதுபோன்ற சம்பவங்கள் பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பு உள்ளதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

01:55:01 on 19 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வருகின்ற 22ஆம் தேதி தனது 45வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாட இருக்கும் நடிகர் விஜய் தற்போது இயக்குநர் அட்லி இயக்கத்தில் தனது 63 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் அவரது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடும் ரசிகர்கள் நலதிட்ட உதவிகள், இரத்த தானம், வழங்கி கொண்டாடத் துவங்கி விட்டனர்.

01:48:00 on 19 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சென்னையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சங்க தலைவராக இயக்குநர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வான நிலையில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது.

01:41:50 on 19 Jun

மேலும் வாசிக்க தினகரன்

ஸ்ருதி ஹாசன் தற்போது ஹாலிவுட் சீரிஸ் ஒன்றில் முக்கிய ரோலில் நடிக்க தேர்வாகியுள்ளார். உலகப்புகழ் பெற்ற Jason Bourne universeன் Treadstone சீரிஸில் தான் ஸ்ருதி நடிக்கிறார். டெல்லியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்துகொண்டே மற்ற நேரங்களில் கொலை செய்பவராக ஸ்ருதி நடிக்கிறார்.

01:32:38 on 19 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

இந்தியா முழுவதும் உள்ள கிராம வங்கிகளில் உள்ள குரூப் ஏ அதிகாரி மற்றும் குரூப் பி அலுவலக உதவியாளர் (பல்நோக்கு) பணியிடங்களை நிரப்ப வங்கிப் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

01:29:42 on 19 Jun

மேலும் வாசிக்க தினமணி

இந்திய அணியுடனான போட்டிக்கு முன் சாகிப் மாலிக் தனது மனைவி சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் வஹாப் ரியாஸ், இமாம்-உல்-ஹக் ஷிஷா பாருக்கு சென்ற வீடியோ வெளியானது. இதைத்தொடர்ந்து இணையத்தில் பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் சானியா மிர்சா ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளார்.

01:24:18 on 19 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மக்களவையில் இன்று நடைபெற்ற சபாநாயகருக்கான தேர்தலில் ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார். அதைத்தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட எம்.பிக்கள் முன்மொழிந்தனர். இதையடுத்து 17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அனைத்து கட்சி எம்.பி.க்களும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

01:19:44 on 19 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தை டிடிவி தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்களும் பங்கு போட்டு மக்களை ஏமாற்றுகின்றனர். இந்த பணத்தை வாங்கிக்கொண்டு 18 பேரும் திமுகவில் இணைந்தால், அடுத்து ஸ்டாலின் முதல்வராகவும், தினகரன் துணை முதல்வராகவும் இருப்பார்கள் என திட்டம் போட்டுள்ளனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

01:13:10 on 19 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் டிக்கெட்டைப் பெற பயணிகள் வரிசையில் நின்றனர். அப்போது வரிசையில் நிறகாமல் வரிசையின் நடுவில் நுழைய முயன்ற இருவரை ரயில்வே காவலர் வரிசையில் நிற்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்படவே இருவரும் சேர்ந்து ரயில்வே காவலரைத் தாக்கியுள்ளனர்.

12:59:31 on 19 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். 2017-18 உறுப்பினர் பட்டியலை ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் சங்கத்தில் முறைகேடாக நீக்கப்பட்டதாக 61 பேர் அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

12:52:11 on 19 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு வேண்டும் என்றே உருவாக்கப்பட்ட ஒன்று என்றும், இதன் பின்னணியில் வாட்டர் மாஃபியாக்கள் உள்ளதாகவும் நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவ அரசு உதவி வருவதாக விமர்சித்துள்ளார்.

12:48:08 on 19 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பெட்ரோல் நிரப்புவதற்கான நிலையங்கள் போதுமானதாக இல்லாததால், பொதுமக்கள் வெகுதூரம் பயணிக்கவும், வரிசையில் காத்திருக்கவும் வேண்டியிருக்கிறது. எனவே, இதனை எளிமைப்படுத்துவதற்காக பெட்ரோல், டீசலை சூப்பர் மார்க்கெட்டுகளிலும் விற்பனைக்குக் கொண்டுவருவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

12:36:38 on 19 Jun

மேலும் வாசிக்க விகடன்

விழுப்புரம், வளவனூர் கிராமத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரைத் துரத்திச் சென்று இளைஞர் ஒருவர் தாக்கியுள்ளார். இதுதொடர்பாக வளவனூர் கிராமத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட மாணவி நேரில் வந்து புகார் அளித்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையுனர் தெரிவித்துள்ளனர்.

12:32:56 on 19 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் முதல்வர் நாராயணசாமி தங்கத்தேர் இழுத்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ.,க்களும் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தினர்.

12:19:12 on 19 Jun

மேலும் வாசிக்க தின மலர்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பிறகு பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய தெரிவித்துள்ளது. இந்த மழை தெற்கு கர்நாடகா, கோவா, ஆந்திரா, சிக்கிம், ஒடிசா ஆகிய பகுதிகளில் பெய்யும் என தெரிவித்துள்ளது.

12:16:41 on 19 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கோவை மாநகராட்சியில் உள்ள பல வார்டுகளில் தண்ணீர் முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக அங்கு பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாலை மறியலையும் பெண்கள் நடத்தியுள்ளார்கள்.

12:10:46 on 19 Jun

மேலும் வாசிக்க சன் நியூஸ்

கடந்த 2008ஆம் ஆண்டு இயக்குநர் பேரரசு இயக்கிய ‘பழனி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் இன்று தனது 34வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

12:04:56 on 19 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

தமிழ்நாடு கல்வித் துறையின் சார்பில் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட பாடப் புத்தகத்தில் தேசிய கீதம் பிழையுடன் அச்சிடப்பட்டிருப்பதைக் கண்டு கல்வியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

11:55:19 on 19 Jun

மேலும் வாசிக்க ETV BHARAT

நேற்று இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் உலகக் கோப்பைப் போட்டியை விளையாடியது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் நட்சத்திர பவுலர் என்று புகழப்படும் சூழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான், 9 ஓவர்களில் 110 ரன்களை வாரி வழங்கினார். இதைத் தொடர்ந்து அவரைக் கேலி செய்யும் விதத்தில் இணையத்தில் மீம்ஸ்கள் பறந்தன.

11:53:06 on 19 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களிலும் நடித்து சர்வதேச அளவில் ரசிகர்களைப் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது மெழுகு சிலை லண்டனில் உள்ள புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

11:46:05 on 19 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அடுத்து ஹவுஸ் ஓவர் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ட்ரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் லட்சுமி கொடுத்த பேட்டியில் சமீபத்தில் ட்ரெண்ட் ஆகும் மணி டிக்-டாக் குறித்து சூப்பர் பதில் மற்றும் ரியாக்ஸன் கொடுத்துள்ளார்.

11:43:49 on 19 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த வாரம் ’கொலையுதிர் காலம்’ வருவதாக இருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஹிந்தியில் தமன்னா, பிரபுதேவா நடித்திருந்தனர். அப்படம் அங்கு படுதோல்வியை சந்தித்துள்ளது. இதனால், தமிழிலும் இப்படம் ஓடவில்லை என்றால், நயன்தாரா தன் மார்க்கெட் இறங்கிவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளாராம்.

11:37:21 on 19 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

சேலத்தில் உள்ள பழமையான ஏரியை ஆக்கிரமித்து அரசே, அடுக்குமாடி கட்டடத்தை எழுப்பி வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தக் கட்டுமானத்தை உடனே நிறுத்த வேண்டும் என்ற குரல்கள், அதிகமாக ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

11:33:10 on 19 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மானாமதுரை அருகே உள்ளது கல்லூரணி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ச்சியாக 100% தேர்ச்சி பெற்று வருகிறது. இதனை கவுரவிக்கும் வண்ணம் கிராம மக்கள் பள்ளியில் பணியாற்றும் ஏழு ஆசிரியர், ஆசிரியைகளுக்கும் தலா அரை பவுன் தங்க மோதிரம், சால்வை, மலர் மாலை அணிவித்துப் பாராட்டினர்.

11:28:41 on 19 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஒரிசாவில் ராஜேஷ் தல்வார் என்ற பயணி ஓடும் ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது கால் இடறி ரயிலுக்குள் விழுந்தார். அப்போது சக பயணிகள் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவர் ரயிலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் ரயில் சென்றவுடன் பார்க்கும்போது நடைமேடைக்கும், ரயிலுக்கும் சிக்கிய ராஜேஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

11:24:32 on 19 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டால் தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணணவர்கள் கழிவறையைப் பராமரிக்க தண்ணீர் இல்லாததால் அரைநாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

11:16:56 on 19 Jun

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த குமார் என்ற இளைஞர் டிக் டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்ய முயற்சித்துள்ளார். அப்போது அவரது தலையில் காயம் ஏற்பட்டதோடு, முதுகெலும்பு முறிந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

11:12:18 on 19 Jun

மேலும் வாசிக்க சத்தியம் நியூஸ்

நாமக்கல் பகுதியில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட நிவேதிதா, பாலாஜி ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சென்னை உயர்நீதிமன்ற ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். அப்போது பேசிய நீதிபதி, ’கலப்பு திருமணம் மட்டுமே சாதி துவேசத்தை ஒழிக்கும்’ என்று கூறியுள்ளார்.

11:04:25 on 19 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு இன்று தனது 49வது வயது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்று காலை சமூக வலைத்தளங்களில், “ஹேப்பி பெர்த்டே ராகுல் காந்தி” என்பது டிரெண்டிங் ஆக மாறியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10:58:14 on 19 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

தளபதி 63 படத்தின் அப்டேட்டிற்காக கடந்த சில நாட்களாக போராடி வந்த தளபதி ரசிகர்களுக்குத் தீர்வாக இன்று மாலை 6 மணிக்கு அப்டேட் அறிவிக்கப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

10:55:30 on 19 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் அனைத்தும் வறண்டுவிட்டன. இதனால், சென்னை மெட்ரோ வாட்டர் குழாய்களில் வழங்கும் தண்ணீரை சுமார் 40 சதவீதம் நிறுத்தியுள்ளது.

10:45:57 on 19 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை, உள்ளூர் நீர்த்தேக்கத்திலுள்ள தண்ணீரும், இறக்குமதி செய்யப்பட்ட தண்ணீரும் சிங்கப்பூரின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்த நிலையில், தற்போது 'நான்கு தேசிய குழாய்கள்' எனும் திட்டத்தின் அடிப்படையில் கூடுதலாக 2 திட்டங்கள் சேர்க்கப்பட்டு அந்நாட்டின் நீர் மேலாண்மை திட்டடங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

10:42:32 on 19 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மத்திய வாகன சட்டம் 1989, பிரிவு 8இன் படி, நாடு முழுவதும் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்த குறைந்தபட்ச கல்வித் தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

10:38:04 on 19 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இங்கிலாந்தில் புகழ்பெற்ற எம்சிசி யங் கிரிக்கெட்டர்ஸ் அணிக்காக விளையாடிவரும் அர்ஜுன் டெண்டுல்கர் வீசிய பந்தில், சர்ரே 2வது லெவன் அணியின் நாதன் டைலி க்ளீன் போல்டான வீடியோப் பதிவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு தலை வணங்குகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:27:24 on 19 Jun

மேலும் வாசிக்க தினமணி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உசேன் என்பவர் தனது மனைவி அம்மாஜியின் நடத்தையில் சந்தேகப்பட்டுள்ளார். இதனால் அம்மாஜியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளார் உசேன். பின்னர் அவர் போலீஸில் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10:16:34 on 19 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கு, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி அழைப்பு அனுப்பி உள்ளார்.

09:55:01 on 19 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேர்முகத்தேர்வு மூலமாக இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

09:35:02 on 19 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

4 டேபிள் ஸ்பூன் பால், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாகக் கலந்து, சருமத்தில் வெயில்படும் இடத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையானது எண்ணெய் பசை சருமத்திற்கு சிறந்தது.

09:15:02 on 19 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

வடக்கு சைபீரியப் பகுதீயில் உள்ள நகரமான நோரில்ஸ்க் என்ற இடத்தில் குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில் பனிக்கரடி ஒன்று சுற்றி வந்தது. இதுகுறித்து வன உயிரின ஆர்லர்கள் உணவைத் தேடி குறிப்பிட்ட பனிக்கரடி நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் அலைந்து, திரிந்து இறுதியில் நோரில்ஸ் வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

08:55:02 on 19 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

மேலும் வாசிக்க