View in the JustOut app
X

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர், மனைவியை பிரிந்து தனது 8 வயது மகள், தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியின் 8 வயது மகள் நந்தினீஸ்வரி வீட்டிற்குள் சிறுநீர் கழித்து விட, கோபமடைந்த சம்பத் கடுமையான சொற்களால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

05:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உடற்பயிற்சியில் கவனம் செலுத்துபவர்கள் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்படுவது குறைவாகவே உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நல்ல உடற்தகுதியை பேணுவது மூளைக்கு நல்லது என்றும் இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

Redmi Note 5 Pro ஒரு புதிய அப்டேட்டைப் பெறுகிறது. இது நவம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் (November Android security patch) கொண்டுவருகிறது. இந்த போன் ஏற்கனவே கடந்த மாதம் MIUI 11 அப்டேட்டைப் பெற்றது. இப்போது புதிய அப்டேட் சமீபத்திய மென்பொருள் இணைப்பைக் கொண்டுவருகிறது.

04:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கார்டு திருடு போய்விட்டால், உடனே வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் உடனே அந்த கார்டின் மூலம் பரிவர்த்தனைகள் எதுவும் செய்ய முடியாமல் தடுக்க முடியும். நீங்கள் தெரியப்படுத்தும் முன், திருடப்படும் பணத்திற்கு வங்கிகளால் பொறுப்பேற்க இயலாது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் போனில் செய்தி வருவதால், நீங்கள் அலர்ட் ஆகலாம்.

04:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க விகடன்

தொடர்ச்சியாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது தற்போது மிகப்பெரிய மனநோயாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் சுமார் 5%க்கும் மேற்பட்டோர், Buying-shopping disorder என்கிற இந்த புதிய வகை மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

03:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பிரிட்டனைச் சேர்ந்த பிளட்ஹவுண்ட் எனும் கார் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. உலக வரலாற்றில் நிலத்தில் ஓடும் கார்களில் மணிக்கு 965 கிலோமீட்டர் வேகத்தை தாண்டிய ஏழாவது கார் எனும் சிறப்பை இந்த கார் பெற்றுள்ளது.

03:27:02 on 17 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உத்தரப்பிரதேசம் நொய்டா பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், செக்டார் 63 பகுதியிலுள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் பார்க்க சென்ற நபரே, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகத் தெரிகிறது. இதனையடுத்து அந்தப் பெண் அலறி சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த இடத்திற்கு வந்த இருவர் அப்பெண்ணை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

02:57:02 on 17 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பிகில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற படம். இப்படம் விஜய் ரசிகர்கள் தாண்டி அனைவரையும் கவர்ந்து இழுத்துவிட்டது. இந்நிலையில் பிகில் தமிழகத்தில் ரூ.141 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரும் சாதனையை செய்துள்ளது.

02:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

நமீதா திருமணத்திற்கு பிறகும் தற்போது நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இதற்காக கடினமாக உடற்பயிற்சியும் செய்து உடல் எடையை குறைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் புதிய தோற்றத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

01:57:03 on 17 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

சென்னையில் 10 இடங்களில் எடுக்கப்பட்ட குழாய் நீரின் மாதிரிகளில், 11-ல் 9 சோதனை முடிவுகள், தரக்கட்டுப்பாடு அளவீடுகளை தாண்டி, குடிப்பதற்கு தரமின்றி உள்ளதாக அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதேபோல் டெல்லி குழாய் குடிநீரும் பாதுகாப்பானதாக இல்லை என்றும் கூறினார்.

01:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

12:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ஒடிசாவில் உள்ள பாலாசூர் மையத்தில் நேற்று இரவு அக்னி ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது. அக்னி ஏவுகணை நிர்ணயித்த இலக்கை துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் தாக்கியதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

12:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கடந்த 9 ஆண்டுகளாக தமிழகம் மிகப் பெரிய பள்ளத்தில் விழுந்து கிடப்பதாகவும், அதனை மீட்க திமுக போராடும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில், மத்திய - மாநில அரசுகள் மக்கள் பிரச்னையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

11:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இலங்கையின் 8வது அதிபா் தோதலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கோத்தபய ராஜபட்ச செய்தித்தொடர்பாளர் கேலியா ரம்புக்வாலா கூறுகையில், எங்கள் கட்சி 54 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றார்.

11:36:15 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. மேலும் சில இடங்களில் நிலச்சரிவும் மற்றும் தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

வரும் மார்ச் மாதத்திற்குள் ஏர்இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பொருளாதார மந்தநிலை குறித்து அரசு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

10:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினமலர்

”நாட்டில் உண்மையை பேசினால் அழிவு என்பதுதான் போராளிகளின் நிலை. குளித்தலையில் ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை தூா்வார வேண்டும் என்று கேள்வி கேட்டதற்காக பட்டப் பகலில் இரண்டு பேரை கொலை செய்தார்கள். இதுதான் இன்றைய நாட்டின் நிலைமையாக இருக்கிறது.” என முகிலன் தெரிவித்துள்ளார்.

10:27:02 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிபாடு செய்ய வந்த தன்னை கன்னத்தில் அறைந்ததாக தீட்சிதர் தர்ஷன் மீது லதா என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

09:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின்படி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் பிரேமதாசாவுக்கு 10 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.

09:34:56 on 17 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின்படி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் பிரேமதாசாவுக்கு 10 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.

09:31:56 on 17 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஜெய்ப்பூர்-மஸ்கட் செல்லும் இந்திய விமானம் ஒன்று கடந்த வியாழன் அன்று 150 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது மோசமான வானிலை காரணமாக நிலை தடுமாறியுள்ளது. அப்போது “மேடே” எனப்படும் அவசர செய்தியை அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு பைலட் அனுப்பினார்.

09:30:18 on 17 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஜெய்ப்பூர்-மஸ்கட் செல்லும் இந்திய விமானம் ஒன்று கடந்த வியாழன் அன்று 150 பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது மோசமான வானிலை காரணமாக நிலை தடுமாறியுள்ளது. அப்போது “மேடே” எனப்படும் அவசர செய்தியை அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு பைலட் அனுப்பினார்.

09:26:47 on 17 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சாம்சங் கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு ரூ. 7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் ரூ. 42,999 விலையிலும், கேலக்ஸி எஸ்9 ரூ. 29,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

08:57:02 on 17 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி துறையில் காலியாக உள்ள 590க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலா், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து நேரிலோ, அஞ்சல் மூலமோ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

அமேசான் சிஇஓ ஜெஃப் பீசோஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். ஆனால், பீசோஸ் தனது மனைவியை விவாகரத்து செய்ததால் தனது சொத்துகளின் பெரும் பகுதியை தனது மனைவிக்கு ஜீவனாம்சமாக வழங்கினார். இத்தகைய சூழலில்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பங்குகள் உயர மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார் பில் கேட்ஸ்.

06:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சரியான இடைவெளியில் தண்ணீர் எடுத்துக்கொள்கிறோமா என்பதை சிறுநீரின் நிறத்தை வைத்துக்கூட அளவிடலாம். சிறுநீரின் நிறம் வெள்ளையாக இருந்தால், நாம் சரியாக தண்ணீரின் அருந்துகிறோம். மஞ்சளாக இருந்தால், போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை என்று அர்த்தம்.

05:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க விகடன்

சீன ராணுவத்தின் ஹாங்காங் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் ஹாங்காங் நகரில் தற்போது களமிறக்கப்பட்டுள்ளனர். வழக்கமான சீருடையில் அல்லாமல் டி-சர்ட், சாட்ஸ் அணிந்து தடுப்புகள் மற்றும் குப்பைகளை அப்புறப்படுத்தும் பணிகளில் வீரர்கள் ஈடுபட்டனர்.

04:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

உலகிலேயே டைபாய்டை எதிர்க்கும் புதிய தடுப்பூசியை அறிமுகம் செய்த முதல் நாடு என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. 9 மாத காலத்திற்குள் 15 வயதிற்கும் குறைவான 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசியை போட திட்டமிடப்பட்டிருப்பதாக சிந்து மாகாண சுகாதார அமைச்சர் மிர்சா கூறியுள்ளார்.

03:55:02 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மீரா மிதுன் ஆதாரத்துடன் ட்விட் ஒன்றை போட்டுள்ளார். அதாவது, (State Director of Anti-corruption committee) லஞ்ச ஒழிப்பு துறையில் அதிகாரியாக மீரா மிதுன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையின் அலுவலகத்திலிருந்து இவருக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்திருந்த கடிதத்தை பதிவிட்டுள்ளார்.

02:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

”சபரிமலைக்கு சென்றே தீருவேன் என்று அடம் பிடிக்கும் பெண்களை எடுத்துக்கொண்டால்... தீவிர பக்தைகளா என்றால் அதுதான் இல்லை. பகுத்தறிவு வாதிகள், பெண் உரிமை பெரும் போராளிகள். சபரிமலையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை, பாவம் ஐயப்பன் தான் எந்த உரிமையும் கேட்டு போராடாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார்.” என கஸ்தூரி கூறியுள்ளார்.

01:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான மார்க் சூக்கர்பர்க் டிக்டாக் செயலியில் ரகசிய அக்கவுண்ட் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அக்கவுண்ட் வெரிஃபை செய்யப்படவில்லை என்றாலும், இதில் @finkd எனும் பெயரில் இயங்குகிறது.

12:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

4K தொழில்நுட்பத்தில் டிஜிட்டலாக்கப்பட்ட முத்து படத்தை (Dancing Maharaja) இன்று ஜப்பானில் வெளியிட்டிருப்பதாக ட்விட்டரில் ரஜினி ரசிகர் ஒருவர் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

11:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வெளியாகியிருக்கும் படம் “ஆக்‌ஷன்”. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர்.

10:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அனில் அம்பானி இன்று ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவருடன் சாயா விரானிம் ரைனா கரானி, மஞ்சரி காக்கர், சுரேஷ் ரங்காச்சர் ஆகியோரும் இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

09:57:01 on 16 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஹாலிவுட் நடிகர் ஜேக்குவின் பீனிக்ஸ் (Joaquin Phoenix) மனநோயாளியாக நடித்த ஜோக்கர் திரைப்படம் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பேட்மேன் வில்லனை மையப்படுத்திய இந்தப்படத்தின் டிக்கெட் வசூல், நேற்று 1 பில்லியன் டாலரைத் தாண்டியது. இதன் இந்திய மதிப்பு சுமார் 7,163 கோடி ரூபாய்.

08:57:01 on 16 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், தங்களுக்குப் பாடம் எடுப்பதை எதிர்த்து உத்தரப் பிரதேச மாநிலம் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத் துறை மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

08:27:01 on 16 Nov

மேலும் வாசிக்க விகடன்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஜெகன், குமரேசன். வந்துள்ளனர். பின்னர் அனைவரும் வைகை ஆற்றில் குளிப்பதற்காக சென்றபோது ஆற்றில் ஏற்கெனவே குளித்துக் கொண்டிருந்த மூன்று பெண்கள் தங்களை காப்பாற்றுமாறு அலறியுள்ளனர்.

07:57:02 on 16 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வரும் நவம்பர் 22ஆம் தேதி மும்பையில் மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. மாநில ஆட்சியில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருவதால், மேயர் பதவிக்கான தேர்தலிலும் இந்த கூட்டணி நீடிக்குமா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது.

07:27:01 on 16 Nov

மேலும் வாசிக்க தினமணி

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பு உயிரோடு இருந்தால் மட்டும் அல்ல இறந்து கிடந்தால் கூட அதனை பார்த்து நடுங்குவது மனித இயல்பு. இந்நிலையில் வியட்நாமில் இறந்த பாம்பை வைத்து சில சிறுவர், சிறுமியர் ஸ்கிப்பிங் விளையாடியது தொடர்பான வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது.

06:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

"சென்ஷேசனல் நியூஸ் என்றாலே அது "சென்ஸ்லெஸ் நியூஸ்" ஆக தான் உள்ளது. வணிக குழுக்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக டிவி சேனல்கள், செய்திதாள்களை பயன்படுத்துகின்றனர். இதனால் பத்திரிக்கைகளின் நன்மதிப்பு அரிக்கப்பட்டு வருகிறது” என துணை ஜனாதிபதி வெங்ககைய நாயுடு பேசி உள்ளார்.

06:27:01 on 16 Nov

மேலும் வாசிக்க தினமலர்

எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரானில் பெட்ரோல் விலை 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மானியம் முறைகளிலும் கடுமையான கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

05:57:01 on 16 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தூரில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ், 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு சுருண்ட வங்கதேசம், 2வது இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

05:31:48 on 16 Nov

மேலும் வாசிக்க தினகரன்

”சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது நான் புகார் கூறியதை போன்ற பதிவை பார்த்தேன். அது போலியான புகார். அதற்கும் எனக்கும் தொடர்பில்லை. என் பெயரை வைத்து உதயநிதி மீதும் திமுக மீதும் களங்கம் கற்பிக்க முயல்கின்றனர். நான் உதயநிதியை நேரில் பார்த்தது கிடையாது.” என நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

05:27:02 on 16 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியான பிகில் படத்தில் இருந்து ராயப்பனும், பிகிலும் நடித்துள்ள எமோஷனல் காட்சியின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

04:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலக நாடுகள் வாங்கும் கடனின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பதாக சர்வதேச நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகின் 770 கோடி மக்கள் தொகையில், ஒவ்வொருவர் மீதும் 23.40 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு வரையிலான உலக நாடுகளின் மொத்த கடன் 255 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

04:27:01 on 16 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரைட்டராக பணியாற்றுபவர் போலீஸ்காரர் தர்மர். இவர் லஞ்சம் வாங்கியதை, சக போலீஸ்காரர் ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்து, அதனை வாட்ஸ் அப்பில் பதிவிட, அந்த வீடியோ மாவட்டம் முழுமைக்கும் வைரலானது.

03:57:02 on 16 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தில் பல மர்மங்கள் அடங்கி இருப்பதை அவரது பெற்றோர் எழுப்பும் கேள்விகள் உணர்த்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஆதிக்க சக்திகளின் கொடும்பற்கள் தனது கோரத்தாண்டவத்தை நிறுத்தவில்லை என்பதையே பாத்திமாவின் மரணம் காட்டுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

03:27:01 on 16 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட சில பேராசியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐ.ஐ.டி வளாகத்தை விட்டு வெளியேறக்கூடாது என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

02:27:01 on 16 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பாபநாசம் பட இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ’தம்பி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் கார்த்திக்கு அக்காவாக அவரது அண்ணி நடிகை ஜோதிகா நடித்துள்ளார். இவர்களுக்கு அப்பாவாக நடிகர் சத்யராஜ் நடித்துள்ளார்.

01:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் 2 விவசாயிகளின் 1 லட்சம் மதிப்புள்ள விவசாய கடன்களை அடைத்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு நெல்லை விஜய் ரசிகர்கள் மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட 4 இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி கேமராக்கள் மற்றும் மானிட்டர்களை அமைத்து கொடுத்தனர்.

01:27:02 on 16 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் நவ.17,18 ஆகிய இரண்டு நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றும், சில இடங்களில் லேசான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

12:57:01 on 16 Nov

மேலும் வாசிக்க தினமணி

தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா விருப்ப மனு பெற்றுக்கொண்டார். அதேபோல், பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட ஓ.பன்னீர்செல்வத்தின் மச்சான், வழக்கறிஞர் சந்திரசேகர் விருப்ப மனு பெற்றுக்கொண்டார். இச்சம்பவம் அ.தி.மு.க-வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

12:27:01 on 16 Nov

மேலும் வாசிக்க விகடன்

பல தடைகளை மட்டுமல்ல பலரது சங்கடங்களையும் கடந்து ஒரு வழியாக சனிக்கிழமை தமிழகம் முழுவதும் சங்கத்தமிழன் வெளியாகி உள்ளது. பலகோடி சொத்துக்கள் கைவசம் உள்ள பழம்பெரும் நிறுவனத்துக்கே இத்தனை சிக்கல், சிரமம் என்றால் தமிழ் திரை உலகில் வட்டிக்கு பணம் வாங்கி படம் எடுக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் நிலை அந்தோ பரிதாபம் தான்..!

11:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடந்த 11ஆம் தேதி கோவையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து அனுராதா என்ற இளம்பெண் படுகாயமடைந்தார். இரு கால்களிலும் முறிவு ஏற்பட்ட நிலையில் ராயல் கேர் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அனுராதாவின் இடது கால் முட்டிக்கு கீழ் பகுதி அகற்றப்பட்டுள்ளது.

11:27:01 on 16 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிகில் படத்தில் கால்பந்தாட்ட வீரராக கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இவர் நாயகனாக நடித்துள்ள ‘ஜடா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

10:55:02 on 16 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் ஒரு பகுதியில் ஆங்கிலம், இந்தி மொழியில் அச்சடிக்கப்பட்டிருந்தாலும், மற்றொரு பகுதியில் தமிழ் மொழி இடம் பெற்றிருக்கும். இந்த நிலையில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்ட்டரில் வினியோகிக்கப்படும் படிவத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

10:27:02 on 16 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

கேரள சட்டத்துறை மந்திரி பாலன் கூறுகையில், சபரிமலையின் புனிதத்தை கெடுக்க பெண்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூகு, சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ள பெண்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

09:57:01 on 16 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

இலங்கையின் அடுத்த அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் வடமேற்கு பகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் சென்ற பேருந்தை நோக்கி மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

09:27:01 on 16 Nov

மேலும் வாசிக்க தினகரன்

இன்ஸ்டாகிராம் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியயாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற பெயரில் புதிய அம்சத்தை சோதனை செய்ய துவங்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் 15 நொடிகளுக்கு வீடியோக்களை உருவாக்கி, அவற்றில் இசையை சேர்த்து ஸ்டோரிக்களில் பகிர முடியும்.

08:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை "தொல்லியல் ஓர் அறிமுகம்" என்னும் தலைப்பில் சென்னை, தருமபுரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் டிசம்பர் 2019 மற்றும் ஜனவரி 2020 மாதங்களில் தலா ஐந்து நாட்கள் பயிற்சிப் பட்டறை நடத்த திட்டமிட்டுள்ளது.

07:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க தினமணி

டெல்லியில் காற்று மாசு காரணமாக நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறையைஅ சேர்ந்த அதிகாரிகளே வராமல் இருந்த சம்பவம் நடந்துள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய ரூ.1150 கோடி என்ன ஆயிற்று? என்பன உள்ளிட்ட கேள்விகளை மூத்த அதிகாரிகளிடம் கேட்பதற்கே இந்த கூட்டம் கூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

06:55:02 on 16 Nov

மேலும் வாசிக்க தினமலர்

தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனையடுத்து இந்தியாவில் இருக்கும் அனைத்து சைபர் பாதுகாப்பு பிரச்னைகளைக் கண்காணிக்கவும் தாக்குதல்களைத் தடுக்கவும் முதன்மையான ஒரு தனி அதிகார மையம் உருவாக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

05:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க விகடன்

ஒடிசா அரசு, பள்ளி மாணவர்களுக்கு விநியோகித்த கைப்பிரதியில் மகாத்மா காந்தி, தற்செயலான காரணங்களால் தான் உயிரிழந்தார் என கூறப்பட்டிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

04:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 11 மாத வீழ்ச்சிக்குப் பின் கடந்த அக்டோபர் முதல்தான் மெல்ல முன்னேறி வருகிறது. விற்பனையை அதிகரிக்க வோக்ஸ்வேகன் நிறுவனம் குறிப்பிட்ட தனது சில கார்களுக்கு 2.60 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளது.

03:55:02 on 16 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

ஃபேஸ்புக் நிறுவனத்திடம் பயனர்களின் தரவுகள் கேட்டு அவசர கோரிக்கைகள் விடுக்கும் அரசுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2ஆம் இடத்தில் இந்தியா உள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி, 2019ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு இந்திய அரசு 22,684 அவசர கோரிக்கைகளை அனுப்பியுள்ளது.

02:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலியாக சுத்தமான காற்றை சுவாசிக்க கட்டணம் வசூலிக்கும் ஆக்சிஜன் பார் தொடங்கப்பட்டுள்ளது. பத்து முதல் 15 நிமிடங்களுக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க ரூ.299 வசூலிக்கப்படுகிறது. சாதாரணமாக உள்ளிழுக்கும் ஆக்சிஜன் அளவை விட நான்கைந்து மடங்கு ஆக்சிஜன் உள்ளிழுக்க அனுமதிக்கப்படும்.

01:55:02 on 16 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்த தோனி தற்போது மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் விளையாட உள்ள டி20 மற்றும் ஒருநாள் தொடரில் தோனி விளையாடுவார் என்ற நம்பிக்கையும், உற்சகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

12:55:02 on 16 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

விவோ எஸ்5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய எஸ்5 ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா, ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் இந்திய மதிப்பில் ரூ.30,715 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

11:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜூலை மாதம் வெளியான பட்ஜெட் அறிக்கையின் போது, வரி வருவாயின் இலக்கை 1.35 லட்சம் கோடி ரூபாயாக மோடி அரசு குறைத்தது. இலக்குகளை குறைத்து வந்தாலும் ஒவ்வொரு மாதமும் வசூலிக்கப்படும் வரி வருவாய் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவிலேயே வசூலாகியுள்ளது.

10:57:02 on 15 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

திருச்சி கே.கே.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த ஜெப்ரா பர்வீன், கல்லூரி வளாக விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு அறிவியல் பாடப்பிரிவின் கீழ் உணவியல் துறையில் பயின்று வந்துள்ளார். இவர் திடீரென தான் தங்கியிருந்த அறை எண் 100ல் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

09:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க Behind Woods

தமிழ்நாடு இசை, கவின், கலை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த ரோஹிணி மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மத்திய உயர்கல்வித்துறை இணைச்செயலாளராக ரோஹிணி நியமிக்கப்பட்டுள்ளார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியராகவும் 2 ஆண்டுகளுக்கு மேல் ரோஹிணி பணியாற்றியுள்ளார்.

08:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அடிக்கடி நடிக்க வேண்டும் என்றாலும் செல்வராகவன் கூட்டணியையும் ரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள். தனுஷ் ரசிகர்கள் அப்படி ஒரு செய்திக்காக நீண்ட வருடங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது வந்த தகவல் என்னவென்றால் தனுஷ்-செல்வராகவன் இணையும் புதிய படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் தானாம்.

08:27:01 on 15 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

தனது மகளின் மரணம் தொடர்பாக விசாரிக்க சி.சி.டி.வி காட்சிகளையோ தூக்கில் தொங்கிய கயிறு தொடர்பான விவரங்களையோ ஐ.ஐ.டி நிர்வாகம் தராமல் மழுப்புவது ஏன் எனவும் தனது மகளுக்கு தூக்கில் தொங்க கயிறு எப்படி கிடைத்தது எனவும் பாத்திமாவின் தந்தை கேள்வி எழுப்பினார்.

07:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க தந்தி டிவி

ஆர்.எஸ்.எஸ் இரண்டு விஷயங்களைக் கையிலெடுக்க உள்ளது. ஒன்று, காசி விஸ்வநாதர் ஆலயத்தை ஒட்டியுள்ள மசூதி இட விவகாரம். மற்றொன்று, மதுராவில் கிருஷ்ணர் ஆலயத்தை ஒட்டியுள்ள மசூதி இட விவகாரம். ஆலயங்களை இடித்தே இவையும் கட்டப்பட்டன என்கிற வாதத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு முன்வைக்கக் கூடும்.

07:25:01 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் அமைந்துள்ள வீட்டில் இருந்து கழிவுகளை வெளியேற்றாமல், மறுசுழற்சி செய்து ஆண்டு முழுவதும் பயன்படுத்தும் சூழலியலாளர் ஸ்னெஹன் படேல். மின்சாரமும் சோலார் கருவிகள் மூலம் வீட்டிலேயே தயாரிக்கிறார்.

06:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மகாராஷ்டிர மாநிலத்தில், 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 6 வயது சிறுவன், பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டான். ஆறு வயது சிறுவன் என்பதால் அவனது கைகளில் சுருக்கு கயிற்றை மாற்றி மீட்பு படையினர் பத்திரமாக மேலே தூக்கினர்.

06:30:20 on 15 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரோகித்துக்குப் பிறகு முத்துகிருஷ்ணன், பாயல் கடந்து தற்போது ஃபாத்திமா வரை நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறைக்கு பலி கொடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை நின்றுவிடுமா, நிலைமை சீராகிவிடுமா என்கிற கேள்விகளுக்குப் பதில் தேட ஆரம்பித்தால், இல்லை என்பதே நம்முன் பதிலாக வந்து நிற்கும்.

05:57:02 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

அயோத்தியில் மசூதிக்கு மாற்றாக உலகில் எதை கொடுத்தாலும் அதை ஏற்க தயாராக இல்லை என அயோத்தி வழக்கில் முக்கிய மனுதாரரான ஜமாத் உலமா இ ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட செயல்பாடு குறித்து முடிவு செய்யவுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

05:27:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினமலர்

ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவத்தை பார்க்கும் போது தற்கொலை இல்லை என தெரிகிறது என்றும், பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை பார்த்து என் மகள் அச்சமடைந்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

05:14:52 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

வாட்ஸ் ஆப்பில் 3 புளூ டிக்குகள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என தகவல் வெளியாகி வருகிறது. 2 புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல் அனைத்தும் பொய்யானவை இதை நம்ப வேண்டாம் என வாட்ஸ் ஆப் தெளிவுபடுத்தியுள்ளது.

04:57:02 on 15 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

செம்பருத்தி சீரியலில் வில்லியாக நடிப்பவர் மித்ரா என்கிற பாரதா நாயுடு. இவரது போட்டோ ஷுட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஒருவருடன் புடவையில் கல்யாண கோலத்தில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர்தான் பாரதா திருமணம் செய்யப் போகும் நபரோ என பேச ஆரம்பித்துவிட்டனர்.

04:27:01 on 15 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதமடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் தனது 2வது இரட்டை சதத்தை மயங்க் பதிவு செய்துள்ளார். இந்தூரில் நடக்கும் இப்போட்டியில் 303 பந்துகளில் 25 பவுண்டரி, 5 சிக்சருடன் மயங்க் இரட்டை சதம் அடித்துள்ளார்.

04:17:26 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவதில் காற்று மாசு காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் பேர் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. லான்செட் என்ற அமைப்பின் ஆய்வறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டில் இறந்த 5 லட்சம் பேரில் 97 ஆயிரம் பேர் நிலக்கரி புகையால் இறந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.

03:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

முஸ்லீம் என்பதற்காக பேராசிரியர்கள் கொடுத்த மன உளைச்சலால் பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை அப்துல் லத்தீப் குற்றம்சாட்டும் நிலையில், அவரது தோழிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளிவந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

03:55:07 on 15 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆக்‌ஷன் படத்தில் இஷ்டத்திற்கு பல லாஜிக் மீறல் காட்சிகள். படம் ஆரம்பித்து கதைக்குள் செல்லும் வரை கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. மொத்தத்தில் படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் தூளாக இருந்தாலும், இரண்டாம் பாதி எங்கெங்கோ சென்று கொஞ்சம் தலை சுற்ற வைக்கின்றது.

03:50:17 on 15 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் நாளை கவர்னரை சந்திக்க முடிவு செய்து உள்ளனர். விவசாயிகள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க சிவசேனா,தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் நாளை சந்திக்க கவர்னரிடம் நேரம் கேட்டு உள்ளனர்.

03:41:08 on 15 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. 4 அடி உயரம் கொண்ட சிலையின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிலை திருட்டு குறித்து கோவில் நிர்வாகி கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

03:27:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

மத்தியப்பிரதேசம் சத்புரா புலி ரிசர்வ் என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். அங்குள்ள மஹுவா என்ற மரத்தை தொடுவதற்கு திரண்டிருந்த அந்த மக்களை காவல்துறையினர் கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் போலீசாரை கீழே தள்ளிவிட்டு மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு மரத்தை தொட முயன்றதால் 12 போலீசார் காயம் அடைந்தனர்.

02:57:02 on 15 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் அர்ச்சகர்களுடன் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இது குறித்து எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நிறைய அசிங்கமான பொம்மைகள் இருக்கிற இடத்தை ஆசையோட பாக்க வந்த அண்ணனுக்கு ஒரு ஓ போடுங்க" என்று கருத்து தெரிவித்துள்ளார்.

02:27:01 on 15 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் வருகிற 18ஆம் தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுவதாகவும், இது கடலோரம் வரை பரவி வரும் போது மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உருவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02:26:05 on 15 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பத்து முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு வந்தால் பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடம்கம்பள்ளி சுரேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீதிமன்ற அனுமதி வாங்கி வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

02:20:02 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

விஎச்பி பெயரை நேரடி யாகக் குறிப்பிடாமல் தற்காலிக ராமர் கோயிலின் தலைமை பூசாரியான ஆச்சார்யா சத்யேந்தர்தாஸ் கூறும்போது, ‘‘ஜம்முவின் மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் இருப்பது போன்ற அறக்கட்டளை இங்கு ராமருக்கும் அமைய வேண் டும். அறக்கட்டளை எனும் பெயரில் அயோத்தியில் ஒரு அமைப்பு பல வருடங்களாக ஊழல் செய்து வருகிறது.’’ என்றார்.

01:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஆண்டுத்தோறும் நவம்பர் 16-ஆம் தேதி தேசிய பத்திரிக்கை தினமாக கொண்டாப்படுகிறது. நாட்டின் நான்காவது தூணாக திகழும் பத்திரிக்கைத்துறையை அடையாளப்படுத்தும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாளை தேசிய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

01:27:01 on 15 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ராசிபுரம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள கொங்களம்மன் கோவில் அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர் சுரேஷ், என்பவர் பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டியதுடன் பாலியல் தொந்தரவும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஜாதி பெயரை சொல்லியும் திட்டியுள்ளார்.

12:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த போது சிறுவனின் மூக்கில் மீன் சென்றுள்ளது. மூச்சு விட முடியாமல் சிறுவன் தவித்ததை அடுத்து, அன்னவாசல் அரசு மருத்துவர்கள், கத்தரிக்கோல் மூலம், லாவகமாக மீனை உயிருடன் வெளியே எடுத்து அகற்றினர்.

12:25:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினமலர்

நவம்பர் 9ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நிலப் பிரச்னை பற்றிய தீர்ப்பை அளித்தது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு, சர்வதேச ஊடகங்களைக் கவனிக்க வைத்தது. இந்தத் தீர்ப்பைப் பற்றி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தலைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

11:57:03 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழை பெய்துள்ள நிலையில், வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11:27:01 on 15 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை கிண்டி காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் ஒன்றை இந்து முன்னனி சார்பில் தென் சென்னை மாவட்ட செயலாளர் வே.நித்தியானந்தம் கொடுத்துள்ளார். இந்து தெய்வங்களை இழிபடுத்தி பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தென்கொரியாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முயற்சியாக சுமார் 47 ஆயிரம் பன்றிகளை அந்த நாட்டு அதிகாரிகள் கொன்று குவித்தனர். கொல்லப்பட்ட பன்றிகளின் உடல்களை இம்ஜின் ஆற்றுக்கு அருகில் புதைத்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இம்ஜின் ஆற்றங்கரையோர பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

10:27:01 on 15 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தோனேசியாவின் மொலுக்கா தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வடமேற்கு நகரமான டெர்னேட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

09:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

மேலும் வாசிக்க