View in the JustOut app
X

ப்ரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் வந்த மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய மூன்று படங்களும் ஹிட்தான். இந்நிலையில் ப்ரியாவின் பேக் ஐடி ஒன்று டுவிட்டரில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறது. இதனால் அவருக்கு பெரும் பிரச்சனையும் ஏற்பட்டு வருகின்றது.

04:57:01 on 24 May

மேலும் வாசிக்க சினி உலகம்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் நீத்து ஷுட்டெர்ன் வாலா. இவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது குடும்பத்தில் மொத்தம் 9 பேர் இருப்பதாகவும், ஆனால் தனக்கு மொத்தமே 5 வாக்குகள் மட்டும் தான் கிடைத்துள்ளது என்றும் கூறி பேசும் போதே அழத் தொடங்கினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

04:39:01 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டவர் நீத்து ஷுட்டெர்ன் வாலா. இவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தனது குடும்பத்தில் மொத்தம் 9 பேர் இருப்பதாகவும், ஆனால் தனக்கு மொத்தமே 5 வாக்குகள் மட்டும் தான் கிடைத்துள்ளது என்றும் கூறி பேசும் போதே அழத் தொடங்கினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

04:36:01 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நீங்க ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயிச்சிருந்த பரவாயில்ல, மொத்தமா வாஷ் அவுட்டான உங்களுக்கு எதுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை கொடுக்கணும்? அதெல்லாம் முடியாது என அதிமுக நினைக்கிறதாம். ஆனால் அன்புமணியோ எடப்பாடி ஓபிஎஸ்ஸுக்கு விவரம் பத்தாது எப்படியாவது ஏமாத்திடலாம்னு பிளான் போட்டுள்ளாராம்.

04:18:02 on 24 May

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

நீங்க ஏதாவது ஒரு தொகுதியில் ஜெயிச்சிருந்த பரவாயில்ல, மொத்தமா வாஷ் அவுட்டான உங்களுக்கு எதுக்கு மாநிலங்களவை எம்பி பதவியை கொடுக்கணும்? அதெல்லாம் முடியாது என அதிமுக நினைக்கிறதாம். ஆனால் அன்புமணியோ எடப்பாடி ஓபிஎஸ்ஸுக்கு விவரம் பத்தாது எப்படியாவது ஏமாத்திடலாம்னு பிளான் போட்டுள்ளாராம்.

04:15:01 on 24 May

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குகள் குறைக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த விவரங்களின் படி, 2017 ஏப்ரல் 1 முதல் 2018 ஜனவரி 31 வரையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சுமார் 41.16 லட்சம் சேமிப்புக் கணக்குகளை மூடியுள்ளது.

03:57:01 on 24 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பெரும்பாலான தொகுதிகளில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம், நாம் தமிழர் கட்சிகளுக்கு நிகராக மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளன. அமமுக 4.8 சதவிகித வாக்குகளும், நாம் தமிழர் கட்சி 3.8%, மக்கள் நீதி மய்யம் 3.7% வாக்குகளையும் பெற்றன. திமுக 32% வாக்குகளையும், அதிமுக 18% வாக்குகளையும் பெற்றுள்ளன.

03:45:56 on 24 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சிதம்பரம் தொகுதியில், திருமாவளவன் பின்னடைவு என திட்டமிட்டு தகவல் பரப்பப்பட்டுள்ளது. தேர்தல் எண்ணிக்கையின்போது, 4 பெட்டிகள் எண்ணப்படவில்லை என்றும் 18வது சுற்றில் திருமாவளவனுக்குக் கிடைத்த ஓட்டுகள், அ.தி.மு.க-வுக்கு கிடைத்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

03:39:02 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

சிதம்பரம் தொகுதியில், திருமாவளவன் பின்னடைவு என திட்டமிட்டு தகவல் பரப்பப்பட்டுள்ளது. தேர்தல் எண்ணிக்கையின்போது, 4 பெட்டிகள் எண்ணப்படவில்லை என்றும் 18வது சுற்றில் திருமாவளவனுக்குக் கிடைத்த ஓட்டுகள், அ.தி.மு.க-வுக்கு கிடைத்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

03:36:01 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பெய்யாத இடங்களில் வெப்பமானது இயல்பைவிட 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

03:29:08 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேர்தல் நடத்தப்பட்ட 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி 350க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014இல் தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும், பாஜக மட்டும் 282 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் தனியாக ஒரு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

03:18:02 on 24 May

மேலும் வாசிக்க தினமலர்

தேர்தல் நடத்தப்பட்ட 542 தொகுதிகளில் பாஜக கூட்டணி 350க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 2014இல் தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களிலும், பாஜக மட்டும் 282 இடங்களிலும் வெற்றி பெற்றது. கடந்த 30 ஆண்டுகளில் தனியாக ஒரு கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

03:15:01 on 24 May

மேலும் வாசிக்க தினமலர்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், பெரம்பலூர் ஆகிய தொகுதிகளை தவிர்த்து 36 தொகுதிகளில் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான வாக்குளைப் பெற்றுள்ளது. பல இடங்களில் அக்கட்சியின் வேட்பாளர்கள் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர்.

02:57:01 on 24 May

மேலும் வாசிக்க மாலைமலர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் தத்சரா கிராமத்தில் உள்ள திரால் பகுதியில் அன்சர் கஸ்வதுல் ஹிந்த் அமைப்பின் தலைவர் ஜாகீர் மூசா உள்ளிட்ட சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

02:35:02 on 24 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

சேலம் சத்திரம் பகுதியில் மூன்று வயது ஆண் குழந்தையைக் கடத்திய வழக்கில் வேலவன், அவரது மனைவி ரேவதி, மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடன் தொல்லையைச் சமாளிக்க பணம் கேட்டு மிரட்ட, 3 வயது ஆண் குழந்தையை கடத்தியதாக போலீசார் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

02:15:02 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. அந்த பிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

01:55:01 on 24 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தமிழகத்தில் நோட்டாவிற்கு அதிகமான வாக்குகள் பதிவான தொகுதி டி.ஆர்.பாலு போட்டியிட்டு வென்ற ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, 23,343 வாக்குகள் பதிவாகி 1.66% சதவீதமாக உள்ளது. அதேபோல் நோட்டாவிற்கு குறைவான வாக்குகள் பதிவான தொகுதியாக ஹெச்.வசந்தகுமார் போட்டியிட்டு வென்ற கன்னியாகுமரி தொகுதி 6,131 வாக்குகள் பதிவாகி 0.58 சதவீதமாக உள்ளது.

01:47:35 on 24 May

மேலும் வாசிக்க நக்கீரன்

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் கடைவீதியில், மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியதில் அருகில் இருந்த துணி தைக்கும் தையல் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக தொண்டர்கள் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

01:41:36 on 24 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

இங்கிலாந்து அணியுடன் இருதரப்பு தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் தோல்வியத் தழுவியது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அந்நாட்டு வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைக்க தடை விதித்துள்ளது.

01:40:01 on 24 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் இவ்வளவு பெரிய தோல்வியைச் சந்தித்திருக்க வேண்டியதில்லை என்று கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ’எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. அனுமானத்துக்குப் பதில் சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார்.

01:35:39 on 24 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நடிகர் விஜய் சேதுபதி ஏற்கெனவே ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை, ஜூங்கா படத்தை தயாரித்துள்ளார். தற்போது மீண்டும் ‘சென்னை பழனி மார்ஸ்’ என்ற படத்தை தயாரிக்கிறார். டிராவல் ஸ்டோரியாக உருவாகும் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

01:25:01 on 24 May

மேலும் வாசிக்க தின மலர்

தேர்தல் பிரசாரத்தில் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் முன் வைத்துதான் திமுக கூட்டணிக் கட்சிகள் பெற்றுள்ளதாகக் கூறிய தமிழிசை செளந்தரராஜனின் பேச்சு குறித்து திமுக எம்.பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’ஒருவர் வெற்றி பெறாத நிலையில் அவரை விமர்சித்து மேலும் காயப்படுத்த விரும்பவில்லை’ என்று கூறியுள்ளார்.

01:10:01 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

மக்களவைத் தேர்தலில் பல தொகுதிகளில் கமல் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பதைப் பற்றிப் பேசிய சீமான், ’என்னைவிட அவருக்கு மக்களிடம் நல்ல அறிமுகம் இருக்கிறது. தவிர, அவர் வெள்ளையாக இருக்கிறார். மக்கள் வெள்ளையாக இருப்பவர் பொய் பேச மாட்டார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

12:54:10 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

உச்சநீதிமன்றத்துக்கு நீதிபதிகள் ஆர்.எஸ்.கவாய், சூரியகாந்த், அனிருதா போஸ், போபண்ணா ஆகியோர், புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் 27 பேராக இருந்த உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 31 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய நீதிபதிகள் நால்வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இன்று பதவியேற்றனர்.

12:47:12 on 24 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகின. தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. எனினும் திமுக அணி இமாலய வெற்றி பெறும் என எந்த கருத்துக் கணிப்பும் தெரிவிக்கவில்லை.

12:44:53 on 24 May

மேலும் வாசிக்க காமதேனு

கோடை விடுமுறை முடிகிற சமயத்தில் இன்று ஆறு தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. லிசா, ஒளடதம், ஓவியா, வண்ணக்கிளி பாரதி, பேரழகி ஐஸ்ஓ, நீயா 2 என ஆறு படங்கள் வெளியாகியுள்ளன. ஹிந்தியில் பிஎம் நரேந்திர மோடி படமும் இண்டியாஸ் மோஸ்ட் வாண்டட் ஆகிய இரு படங்களும் வெளியாகியுள்ளன.

12:34:45 on 24 May

மேலும் வாசிக்க தினமணி

உங்களின் கூந்தலுக்கான ஊட்டச்சத்தினை சத்தான காய்கறிகளின் மூலமாக மட்டுமே கொடுக்க முடியும். கேரட் மற்றும் வெங்காயம் முடி உதிர்வைக் குறைத்து வளர்ச்சியை ஊக்குவிக்கும். உறுதியான கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இயற்கையான பொருட்களை சாப்பிட்டாலே போதும்.

12:25:01 on 24 May

மேலும் வாசிக்க மாலை மலர்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ராஜவர்மனிடம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சிவஞானம் வெற்றிச் சான்றிதழை வழங்கினார். இதேபோல் தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி பெற்றார்.

12:12:39 on 24 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

கனடாவின் அல்பெர்டா (Alberta) மாகாணத்தில், சுமார் 97,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள வனப்பகுதியில் கடந்த இரு தினங்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் 300க்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 5000க்கு மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

12:06:16 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் அமெரிக்க - இந்திய உறவில் மகத்தான ஒத்துழைப்பு ஏற்படும் என்றும் டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

12:03:09 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கும்பகோணம் வட்டி பிள்ளையார்கோவில் அருகே மருத்துவர் செல்வராஜ் வீட்டில் 90 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நகைகளைத் திருடியதாக செல்வராஜ், மருத்துவமனையில் பணியாற்றும் கீதா என்பவரிடம் 65 சவரன் நகைகளை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:00:08 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் திமுக எம்.பி கனிமொழி. இந்நிலையில் அவர், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

11:59:19 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

காவிரியில் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டிய 9 புள்ளி 2 டிஎம்சி தண்ணீரை வரும் ஒன்றாம் தேதி முதல் கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் இக்கோரிக்கை எழுப்பப்பட்டது.

11:43:44 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 43.86 சதவிகித வாக்குகளைப் பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பட்டியலில் திமுக தேசிய அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

11:38:28 on 24 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

’தமிழக மக்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளோம்; கடமையைச் செய்ய காத்திருக்கிறோம். நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் பேசக்கூடிய அளவுக்கு மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். 'மநீம' என்ற 14 மாத குழந்தையை தமிழக மக்கள் நடக்க, ஓடவிட்டுள்ளனர்’ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

11:32:38 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’எடப்பாடி பழனிசாமியை பாஜக தூக்கிவிட்டு ஓபிஎஸ்சை மீண்டும் தமிழக முதல்வராக்கும். தேனி மக்களவைத் தொகுதியில் மகனை ஜெயிக்கவைத்த ஓபிஎஸ், பெரியகுளம், ஆண்டிபட்டியை கைவிட்டது ஏன்?’ என தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

11:21:26 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கற்றாழையின் சதைப்பகுதி நீரிழிவு, ஆஸ்துமா, வலிப்பு, வாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிறந்த நிவாரணம் தரும். பல்வேறு சரும பிரச்சினைகளுக்கும் இது தீர்வு தருகிறது. கற்றாழைப் பொருட்கள் உடல்சூடு தணிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். உடலின் நச்சுக் கழிவுகளை அகற்றும்.

11:18:40 on 24 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மீண்டும் வெற்றி பெற்று இந்தியாவில் ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் கூறியுள்ளார். மேலும் அவர், மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

10:54:52 on 24 May

மேலும் வாசிக்க மாலை மலர்

’இந்திய அரசியல் களத்தில் பாஜக மிக அழுத்தமாக தனது காலை பதித்துள்ளது. எதிர்தரப்பில் கூட்டணிக் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததையும் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன’ என்று மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான வாஸந்தி கூறியுள்ளார்.

10:38:10 on 24 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இதுகுறித்து பல்வேறு கருத்துகளைப் பல்வேறு கருத்துகளைப் பலரும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரண்டாவது முறை சந்தித்த மோசமான தோல்வி குறித்து ஆய்வு செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று டெல்லியில் கூடுகிறது.

10:26:49 on 24 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

’செல்வராகவனிடம் ஹாம் வொர்க் தேவையில்லை. ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார்’ என்று நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.

09:55:01 on 24 May

மேலும் வாசிக்க நக்கீரன்

அதிமுகவின் கோட்டை என கருதப்படும் மேற்கு மண்டலங்களான கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 8 மக்களவைத் தொகுதிகளையுமே மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அதிமுக இழந்துள்ளது.

09:35:01 on 24 May

மேலும் வாசிக்க தினமணி

மக்களவைத் தேர்தலில் சில மாநிலங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகக் கைகொடுத்திருக்கின்றன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களைப் பெற்றுத் தந்திருக்கும் மாநிலம் கேரளா. அங்குள்ள 20 தொகுதிகளில் காங்கிரஸ் 15 இடங்களில் பெற்றி பெற்றுள்ளது. அடுத்த இடத்தை தமிழகம் பெற்றுள்ளது.

09:15:01 on 24 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. ஏழு இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் இரண்டு இடங்களில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. இதன் மூலமாக, தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ளது.

08:55:02 on 24 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றதாக இன்று அதிகாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76 ஆயிரத்து 319 வாக்குகள் அதிகம் பெற்று ரவீந்திரநாத் குமார் வென்றார்.

08:35:01 on 24 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தமிழகத்தில் பாஜக தோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தைக் கூட பிடிக்காத நிலையில், #TNRejectsBJP என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

08:15:01 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி 350 தொகுதிகள் வரை அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. வாக்கு இயந்திர பதிவுகளையும், ஒப்புகைச் சீட்டு இயந்திர பதிவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் புதிய நடைமுறையால் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தாமதமாகிறது.

07:55:01 on 24 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிதம்மரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவனும், அ.தி.மு.க. சார்பில் சந்திரசேகரும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு வேட்பாளர்களும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில், திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார்.

07:35:01 on 24 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு ரூ.74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து ரூ.70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

07:17:42 on 24 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி இந்து நாடார்கள் விக்டோரியா மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06:55:02 on 24 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

foodpanda நிறுவனம் மூலம் உணவு டெலிவரி வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ola தற்போது இந்த உணவு வர்த்தகத்தில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உணவு டெலிவரி துறையில் இருந்து வெளியேறினாலும் அதன் பிரத்யேக கிளவுட் கிச்சன் சேவையை மட்டும் ola தொடர உள்ளதாக தெரிகிறது.

06:25:02 on 24 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. இந்நிலையில், கண்காணிப்பு வீடியோ கருவிகளை விற்பனை செய்து வரும் சீன நிறுவனம், அமெரிக்க பொருட்களை வாங்குவதற்கு தடை விதிக்க அதிபர் டிரம்ப் அரசு பரிசிலிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

05:55:01 on 24 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள ஆச்சாள்புரத்தில் ஆச்சாள்புரத்தில் திருஞானசம்பந்த சுவாமிகள் திருக்கல்யாணப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

05:25:01 on 24 May

மேலும் வாசிக்க விகடன்

மழைக் காலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும். நெய் கெடாமல் இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத் துண்டை போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும். பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்.

04:55:01 on 24 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசர் அறிவித்துள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது.

04:25:01 on 24 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

வேலைவாய்ப்பு பெறும் பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், தற்போது சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமன்றி தேசிய அளவிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பது அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏஐசிடிஇ) புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

03:55:02 on 24 May

மேலும் வாசிக்க தினமணி

நடிகர் அஜித் தற்போது மீண்டும் வினோத் இயக்கும் 60வது படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக தனது உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார் அஜித். இப்படம் ஆக்சன் கதையில் உருவாகியிருப்பதால் உடல் எடையைக் குறைத்திருக்கிறாராம்.

03:25:01 on 24 May

மேலும் வாசிக்க தின மலர்

கடன் வாங்க அனைத்து ஆவணங்களையும் கொடுத்து விட்டு எதிர்பார்த்து நிற்பவர்கள், பிராசசிங் கட்டணத்தைக் கவனிப்பதில்லை. வீட்டுக் கடன், கல்விக் கடன்கள் சில சமயம் குறைந்த பிராசசிங் கட்டணத்திலும், பிராசசிங் கட்டணம் இல்லாமலும் கிடைக்கின்றன. இவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

02:55:01 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

’2019 உலகக் கோப்பையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு என்று முத்திரைக் குத்திவிட்டால் வென்று விட முடியுமா? கிரிக்கெட் களத்தில் ஆடப்படுவது பேப்பரில் ஆடப்படுவது அல்ல’ என்று வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கடுப்புடன் தெரிவித்துள்ளார்.

02:25:01 on 24 May

மேலும் வாசிக்க காமதேனு

உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும். துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.

01:56:02 on 24 May

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இதனை கலைந்திட மேலும் மூன்று ஏரிகளை சீரமைக்கும் வேலை நடப்பதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்திருக்கிறது. செங்குன்றம் அருகே உள்ள ரெட்டேரி, அயனம்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகள் தான் சென்னையின் குடிநீர் ஆதாரத்திற்காக தயார் செய்யப்படும் நீர் நிலைகள் ஆகும்.

01:26:02 on 24 May

மேலும் வாசிக்க தினகரன்

மக்கள் விரும்பும் விஷயத்தை வைத்து சுவாரஸ்யமாய் குடும்ப எமோஷன் கெடாமல் கதை பண்ணுவதில் கொரியக்காரர்கள் சமர்த்தர்கள். அப்படியான ஒரு வெப் சீரிஸ் மெமரீஸ் ஆஃப் தி ஆலம்பரா (Memories of the Alambara).

12:55:01 on 24 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஜூன் 1ம் தேதி முதல் மீண்டும் படபிடிப்பில் கலந்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறாராம் உதய். ஆத்மிகா, சதீஷ் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு இசை சாம்.சி.எஸ். தவிர, உதயநிதியின் ‘சைக்கோ, ஏஞ்சல்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு ரெடியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

12:25:02 on 24 May

மேலும் வாசிக்க ie தமிழ்

குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கருவுற்ற பெண்கள் தினமும் குங்குமப் பூவை பாலில் கலந்து சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் சுகப்பிரசவத்துக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

11:55:01 on 23 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

'தேர்தல் முடிவுகள் வெளியானதும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான வேலை மறைமுகமாக நடந்து வருகிறது என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. அப்படி மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கும் நிலை வந்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்,' என பகீரைக் கிளப்பியுள்ளர் இயக்குநர் கெளதமன்.

11:25:01 on 23 May

மேலும் வாசிக்க விகடன்

'நட்புன்னா என்னான்னு தெரியுமா' படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் தியேட்டர் உரிமையாளர்கள் குறித்தும், தன் படக்குழு குறித்தும் கடுமையாக தாக்கி பேசினார். மேலும், ‘டிவியில் இருந்து வரவங்க எல்லாம் சிவகார்த்திகேயன் ஆக முடியாது,’ என கூறினார்.

10:56:02 on 23 May

மேலும் வாசிக்க நக்கீரன்

சோனி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தொழிலுக்கு இந்தியாவின் பங்கு இன்றியமையாதது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கெனிசிரோ யோஷிடா தெரிவித்துள்ளார். ஆனால், இழப்புகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்த வேண்டுமென முதலீட்டாளர்கள் வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

10:25:01 on 23 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய்யும், அஜித்குமார் மீண்டும் வினோத் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளனர். இந்த 2 படங்களும் அடுத்த வருடம் கோடையில் ஒரே நாளில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

09:55:02 on 23 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தொடர்ச்சியாக உணவில் கார்போஹைட்ரேட் குறைந்து வந்தால் வயது முதிர்ச்சி மற்றும் அறிவாற்றல் திறன் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

09:25:01 on 23 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக 350 இடங்களிலும், காங்கிரஸ் 90 இடங்களிலும், மற்ற கட்சிகள் 102 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

09:12:05 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் 6,15,667 பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் 1,61,379 வாக்குகள் பெற்றுள்ளார்.

09:05:48 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பேரவையில் அதிமுகவின் பெரும்பான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிடோர் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், ‘தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன’ எனவும் தெரிவித்துள்ளனர்.

08:58:45 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு மேலும் அதிகளவு கடின உழைப்பைத் தருவதற்கான வலிமையை இந்த வெற்றி தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பி.ஜே.பி கூட்டணி மீது இந்திய மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு தலைவணங்கி நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

08:40:02 on 23 May

மேலும் வாசிக்க விகடன்

திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆனந்தனை விட 91,011 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். சுப்பராயன் 5,05,793 வாக்குகளையும், ஆனந்தன் 4,14,782 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

08:37:59 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் நடைபெற்ற 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், அண்ணா நினைவிடம் அருகே நாற்காலியில் அமர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

08:26:28 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற இடத்தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளிவருகின்றன. இதில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில் நாதனை விட 37,901 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

08:09:01 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மத்திய சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2,99,513 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தொகுதியில் தயாநிதி மாறன் 447150 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக வேட்பாளர் சாம் பால் 1,46,813 வாக்குகள் வெற்றி பெற்றுள்ளார்.

08:02:06 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தமிழக இடைத்தேர்தலுக்கான முடிவுகளும் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன்படி, திமுக 13 இடங்களிலும், அதிமுக 09 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

07:52:30 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் 4,43,657 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 4,34,696 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:48:29 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் 3,11,680 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 2,61,844 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:43:47 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி 3,91,380 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கௌதம் சிகாமணி 7,09,599 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளர் சுதீஷ் 3,18,219 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:39:17 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஞானதிரவியம் 1,81,256 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு ஞானதிரவியம் 5,17,219 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன் 3,35,963 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:33:42 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தல் முடிவுகளோடு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் பூண்டி கலைவாணன் 62,288 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

07:29:27 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சவுகிதார்’ என்பதை நீக்கியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர், ‘என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து சவுகிதார் என்ற பெயர் அகன்றுள்ளது. ஆனால் என்னுடைய மனதில் சவிகிதார் என்பது நீங்காத இடம் பிடித்துள்ளது’ என பதிவிட்டுள்ளார்.

07:21:49 on 23 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் 1,73,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அங்கு சண்முகசுந்தரம் 5,50,905 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 3,77,546 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:15:44 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்; தேர்தல் அரசியலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. ஜெயலலிதா கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம்’ என பதிவிட்டுள்ளார்.

07:09:32 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தஞ்சை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் பழனிமாணிக்கம் 5,75,295 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் 2,17,183 வாக்குகள் பெற்றுள்ளார்.

07:07:01 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலில் பாஜக 300க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ’மக்களின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். எது தவறாக போனது என்பதை விவாதிக்க வேண்டிய நேரம் இதுவல்ல. தோல்வியைக் கண்டு பயப்படாதீர்கள்; தொடர்ந்து போராடுவோம்’ என கூறியுள்ளார்.

06:54:45 on 23 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மக்களவைத் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதன்படி, கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரமேஷ் 4,98,437 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கோவிந்தசாமி 3,61,720 வாக்குகள் பெற்றுள்ளார்.

06:47:49 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணிமாறன் 3,52,330 வாக்குகள் பெற்றுள்ளார்.

06:41:05 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் 6,13,390 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஏழுமலை 3,85,294 வாக்குகள் பெற்றுள்ளார்.

06:31:29 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வாக்கு எண்ணிக்கை நாளான இன்று வரை திண்டுக்கல்லில் தங்கி இருந்த மன்சூர் அலிகான் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டதால் அங்கிருந்து சென்னைக்கு கிளம்பி விட்டார். அவர் 49,741 வாக்குகள் பெற்றுள்ளார். இத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் வேலுசாமி 6,72,870 வாக்குகள் பெற்றுள்ளார்.

06:26:16 on 23 May

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நன்றி. மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம். தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்’ என பதிவிட்டுள்ளார்.

06:26:12 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில், குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, வாரியம் சார்பில், தாம்பரம் அடுத்த, எருமையூரில் உள்ள குவாரிகளில் இருந்து, நீர் எடுப்பதற்கான பணிகள், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதனால், ஜூலை முதல், தினமும், 1 கோடி லிட்டர் நீர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:13:35 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்ஜிகே படம் வரும் 31ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

06:10:04 on 23 May

மேலும் வாசிக்க தின மலர்

தற்போதைய நிலவரப்படி சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவன் 2,92,427 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார் அவரை எதிர்த்துப் போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் 2,87,446 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

05:38:46 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலில் பாஜக தொடர்ந்து 330க்கும் அதிகமாக இடங்களில் முன்னிலையில் இருக்கும் நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்துத்துவா, ஊழல் எதிர்ப்புதான் பாஜக வெற்றிக்கு காரணமாக அமையும் என கூறியது சரியாகிவிட்டது. பொருளாதார கொள்கைகள் தகுதியற்றதாக இருந்தாலும் தேர்தலில் தப்பி விட்டோம்’ என கூறியுள்ளார்.

05:33:14 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் திமுக கூட்டணி 38 இடங்களிலும், அதிமுக கூட்டணி ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளது. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 2,06,730 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் 1,39,591 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.

05:24:55 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சின்னப்பன் வெற்றி பெற்றுள்ளார்.

05:24:53 on 23 May

மேலும் வாசிக்க தினகரன்

’தமிழக மக்கள் ஊழல் செய்யாத பாஜகவுக்கு வாக்களிக்காமல் தவறு செய்துவிட்டார்கள். பாஜகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என உணர்வார்கள். மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர மக்கள் உணர்ந்து வாக்களித்துள்ளார்கள்’ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

05:10:32 on 23 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேலும் வாசிக்க