View in the JustOut app
X

``எங்களுக்கு நிவாரணம் வேண்டும். நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் பணியாற்றும் எங்கள் மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கு ஓய்வு வேண்டும். நீங்கள் தற்போது ஓய்வில் இருக்கிறீர்கள் என்றால், எங்களுக்கு உதவ முன்வாருங்கள். நாங்கள் உங்களுக்கு தேவையானதை செய்வோம்.`` என நியூயார்க் மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

07:25:01 on 31 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அரியலூரை சேர்ந்த 25 வயது பெண் ஒருவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட அந்த பெண்ணோ, சும்மா இல்லாமல் செல்போனில் டிக்டாக் செய்து வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸ்களிடம் ஓடி ஓடி சென்று காட்டி கொண்டிருந்தார்.

06:55:01 on 31 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்படும் என தமிழக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், வீட்டு வாடகை தொகையை 2 மாதம் கழித்து பெற்றுக்கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

06:34:44 on 31 Mar

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லி நிஜாமுதீனில் மத வழிபாடு மாநாடு நடத்தியதில் ஏராளமானோருக்கு கரோனா பாதிப்பு வந்தது. இதனையடுத்து வழக்குப் பதிவுக்கு ஆளாகியுள்ள தப்லிக் ஜமாத் மவுலானா தாங்கள் எந்த சட்டத்தையும் மீறி நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

05:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் விரைவில் 130 கோடி மக்களும் சக்திமானை காண வாய்ப்பு கிடைக்கும். அறிவிப்புக்காக காத்திருங்கள் என வீடியோவுடன் ட்வீட் செய்துள்ளார்.

05:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க Asiavillenews

உலக அளவில் அதிக பட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கொரோனா பரவலை தடுக்க அமெரிக்க அரசு தவறியதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். அதிகப்படியாக நியூயார்க் மாகாணத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

04:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

மக்கள் ஊரடங்கு உத்தரவை சரியாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை விரட்டியடித்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும். இல்லையேல் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது, உயிர் சேதங்கள் தொடர்வது, பொருளாதாரம் பாதிக்கப்படுவது என எதையும் தவிர்க்க இயலாது என மருத்துவத் துறையினர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

04:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

03:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஊரடங்கு உத்தரவால் அடுத்த 3 மாதங்களுக்கு கடன்களுக்கான இ.எம்.ஐ. வட்டி வசூலிக்கப்படாது என்று தமிழக நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் உத்தரவு குறித்த தகவல்கள் அந்தந்த வங்கிகளின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

03:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கேரளாவின் பத்தனம்திட்டா, காசர்கோடு, டெல்லியின் நிஜாமுதீன், தில்சாத் கார்டன், உ.பி.யின் நொய்டா, மீரட், ராஜஸ்தானின் பில்வாரா, அகமதாபாத், மும்பை, புனே ஆகிய 10 மாவட்டங்களை தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர உத்தரவு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

03:08:25 on 31 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

கேரளாவின் பத்தனம்திட்டா, காசர்கோடு, டெல்லியின் நிஜாமுதீன், தில்சாத் கார்டன், உ.பி.யின் நொய்டா, மீரட், ராஜஸ்தானின் பில்வாரா, அகமதாபாத், மும்பை, புனே ஆகிய 10 மாவட்டங்களை தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வர உத்தரவு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

02:59:41 on 31 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பதவி பறிபோன பின் யாருடனும் பேசாமல் மனம் புழுங்கிக் கிடந்த ராஜேந்திர பாலாஜியிடம் ரஜினிக்கு நெருக்கமானவர்கள் பேசியிருக்கிறார்கள். ‘கவலைப்படாதீங்க. உங்களுக்கான நேரம் வரும்னு ரஜினி சார் சொல்லச் சொன்னார்’ என அவரகள் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தகவலால் ராஜேந்திர பாலாஜி உற்சாகமாகியுள்ளார்.

02:29:40 on 31 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் அரவிந்த் கிருஷ்ணா. இவர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக இருந்த படம் 'திருடன் போலீஸ்'. புதுப்பேட்டை படத்துக்கு பின், அதாவது 2006ம் ஆண்டு இப்படத்தை எடுக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் கைவிட்டப்பட்டது.

01:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

அஜித் ரசிகர்கள் என்ற பெயருடன் தன்னை ட்விட்டரில் விமர்சிப்பவர்களுக்கு நடிகை குஷ்பு காட்டமாக பதிலளித்துள்ளார். டுவிட்டரில் தன்னை விமர்சித்த ஒருவருக்கு, “உன்னைப் போன்ற ஒருவரை ரசிகர் என்று சொல்லிக் கொள்வதற்கு அஜித் வெட்கப்படுவார்” என்று காட்டமாக பதிலளித்திருந்தார்.

01:27:02 on 31 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

`ஏழாம் அறிவு டாக்டர் விஜயபாஸ்கர் வெர்ஷன்' என்ற வைரல் வீடியோ எடப்பாடி தரப்பை ஏகத்துக்கும் கொதிக்க வைத்து விட்டதாம். அந்த வீடியோவில், எந்த இடத்திலும் எடப்பாடி பற்றியோ அ.தி.மு.க ஆட்சியைப் பற்றியோ சொல்லாமல் முழுக்க முழுக்க விஜயபாஸ்கரின் புகழ் மட்டுமே பாடப்படும் மீம்ஸாக தயாரிக்கப்பட்டதை ஆளும்கட்சி ரசிக்கவில்லை.

12:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க விகடன்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் துப்பாக்கி. இப்படம் விஜய் திரைப்பயணத்தையே மாற்றியமைத்தது. உண்மையாகவே முருகதாஸ் இப்படத்தின் கதையை சூர்யாவிடம் தான் சொன்னாராம். அவரால் அந்த சமயத்தில் இந்த படத்தை செய்ய முடியாமல் போனதாம்.

12:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

சமுத்திரகனி படங்களில் அவர் அதிகப்படியான அறிவுரை கூறுவார், ஆனால் ட்ரெண்டிங்கில் சமுத்திரகனி இயல்பு மிகவும் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. முன்னதாக சில மீம்ஸ்கள் சமுத்திரகனியின் சில படங்களை வைத்து கொரோனா தொற்றுக்கு ஆறுதல் சொல்ல அதை பிடித்துக்கொண்ட சில மீம்க்ரியேட்டர்ஸ் அவரை அதிகப் படியாக கிண்டல் செய்ய துவங்கினர்.

11:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சர்வதேச அளவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட சமூக பரவல் (Limited Community transmission) என்ற நிலையை அடைந்துவிட்டது என்கிறார் கொரோனா வைரஸ் குறித்த முனைவர் பட்டம் பெற்றுள்ள பவித்ரா வேங்கடகோபாலன்.

11:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஜிகே வாசனுக்கு பாஜகவின் முயற்சியால் ராஜ்யசபா எம்பி பதவி அளிக்கப்பட்டது. அந்த வகையில் மு.க.அழகிரிக்கும் எம்பி பதவி அளிக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தமிழகத்திலிருந்து அதற்கு வாய்ப்பில்லாத நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்து அழகிரியை ராஜ்யசபா எம்பி ஆக்குவது என்பதுதான் பாஜகவின் இப்போதைய திட்டம்.

10:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்த காவலரான சுரேஷ் மற்றும் அவரது நண்பர் அருள்ராஜன் ஆகியோர் மாவட்ட காவல்துறையின் புகார் எண்ணுக்கு அழைத்து, சர்வதேச கும்பல் ஒன்று மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டி வருவதாக புகார் அளித்தனர். விசாரணையில் புகாரளித்த இருவருமே மோசடி கும்பலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

10:25:01 on 31 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகில் உள்ள வீரடிப்பட்டி கிராமத்தில் பூட்டிய டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களைத் திருடிய சூப்பர்வைசர், கடை விற்பனையாளர் மற்றும் அவர்களுக்குத் துணையாக வந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

09:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

டெல்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு, 'கொரோனா' வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டெல்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

09:27:01 on 31 Mar

மேலும் வாசிக்க தினமலர்

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியா உட்பட 183 நாடுகளில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகளவில் நேற்று 33,956 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3824 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,780 ஆக உயர்ந்துள்ளது.

08:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கஸ்தூரிராஜா, செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான படம் துள்ளுவதோ இளமை. இத்திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் ஷெரின். இதன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஷெரின் வெளியிட்டுள்ளார்.

07:57:01 on 31 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது.

05:57:02 on 31 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

”கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை. பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள். அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள். பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். குழந்தைகள் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள்.” என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

10:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

ஜப்பான் நாட்டை சேர்ந்த காமெடி நடிகர் Ken Shimura கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது காலமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 70. Ken Shimura 1970 முதல் சினிமா, தொலைக்காட்சிகளில் அவர் காமெடி நடிகராக வலம் வந்தார்.

09:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

கொரோனா எதிரொலியால் சென்னை முழுவதும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் சூழலில், சென்னை நகராட்சி அதிகாரிகள் நடிகர் விஜய் வீட்டிற்கு சென்று அவர்களின் பயண விவரங்களை சோதித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

08:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க Asiavillenews

21 நாள் லாக்-டவுனுக்கு மத்தியில், நகரங்களில் வேலை செய்த ஏழை தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மாநில எல்லைகளில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தூரத்தை கடந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப முயற்சித்து வருகின்றனர். தற்போது அவர்களில் பலர் இறந்துவிட்டனர்.

08:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

“கேரளத்தில் எந்த வகையிலும் உணவுப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் அஞ்ச வேண்டாம். உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாது. அனைவருக்கும் உணவுடன் பலசரக்குப் பொருட்களையும் அரசு வழங்கும்.” என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

07:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

டெல்லி வெளிமாநிலத் தொழிலாளர்களின் நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, `இது கொரோனா வைரஸை விடப் பெரிய பிரச்னை' என மத்திய அரசை எச்சரித்த உச்சநீதிமன்றம், `தொழிலாளர்கள் இடப்பெயர்வு தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

07:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க விகடன்

கொரோனா பாதிப்பால் உலகமே முடங்கி இருக்கும் நிலையில், இது தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்ற ஒரு கலைஞனின் கற்பனை ஓவியம், ரசிக்கும் வகையில் இருந்தாலும், அது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

06:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழகத்திற்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும், அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும் செய்தி வெளியானது. இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய ராணுவம், இத்தகவலில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது.

06:27:02 on 30 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

டோக்கியோவில் நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது.

05:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க தினகரன்

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் சொந்த ஊர் திரும்பிய ஆயிரகணக்கானவர் மீது கொரோனா அச்சத்தால் கிருமி நாசினி அடிக்கப்படுகிறது. இது தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளிவந்துள்ளது.

05:25:02 on 30 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவிரைவில் முடிவுக்கு வந்துவிடும் என நோபல் பரிசு வென்ற அறிவியல் ஆய்வாளர் மைக்கேல் லெவிட் கூறியுள்ளார். மேலும் அவர், சீனாவை போன்று அமெரிக்காவும் விரைவில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டும் வரும். ஆனால் அதிக உயிரிழப்புகள் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.

04:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

“உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டின் முன்பும் லஷ்மணன் கோட்டை வரைய வேண்டும்” என்றும் பிரதமர் மோடி பேசியுள்ளார். வீடு இல்லாதவர்கள், வீட்டுக்கு திரும்பமுடியாதவர்கள் என்ன செய்வது என்பதை மட்டும் அவர் சொல்ல மறந்துவிட்டார்.

04:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தீனா படம் அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். இப்படத்திற்கு பிறகு தான் முருகதாஸ் மார்க்கெட் உயர ஆரம்பித்து. அஜித்தையும் எல்லோரும் தல என்று அழைப்பார்கள், அந்த அளவிற்கு அவர் மீது அன்பு வர இந்த படமே காரணம். இப்படத்திற்காக முருகதாஸிற்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை ரூ 1000 தானாம்.

03:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க கபசுரக் குடிநீரை கொடுக்கலாம் என்று சித்த மருத்துவர்கள், பிரதமர் நரேந்திர மோடியிடம் பரிந்துரைத்துள்ளனர். கடந்தகாலத்தில் கரோனா வைரஸ் மாதிரி, ஒரு நோய்த் தொற்று ஏற்பட்டபோது கபசுரக் குடிநீர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்கின்றனர்.

03:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது மேலும் கூடுதலாக 17 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 1.5 கோடி முகக்கவசங்கள், N95 ரக முகக்கவசம் 25 லட்சமும், PP பாதுகாப்பு கவசம் 11 லட்சமும் வாங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

02:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவையே, அச்சத்தில் ஆழ்த்தி இந்திய மக்கள் அனைவரையும் கட்டிப் போட்ட கொரோனா வைரஸ் தொற்று வடசென்னை மக்களை தொடவில்லை. உப்புக் காற்றை சுவாசிக்கும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பாக இருப்பதால் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்களாக இப்பகுதி மக்கள் இருப்பார்கள் என்பது இதற்கான காரணமா என்ற சந்தேகம் எழுகிறது.

02:29:58 on 30 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

தனது பெண் குழந்தை பிறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக, மூன்று மணி நேரத்துக்குள்ளாக கொரோனா வைரஸுக்கான கிட்டைக் கண்டுபிடித்துள்ளார் மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த வைராலஜி நிபுணர் மினல் தகாவே போஸ்லே.

02:27:02 on 30 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இந்தியாவையே, அச்சத்தில் ஆழ்த்தி இந்திய மக்கள் அனைவரையும் கட்டிப் போட்ட கொரோனா வைரஸ் தொற்று வடசென்னை மக்களை தொடவில்லை. உப்புக் காற்றை சுவாசிக்கும் கடல் சூழ்ந்த நிலப்பரப்பாக இருப்பதால் எதிர்ப்பு சக்தி நிறைந்தவர்களாக இப்பகுதி மக்கள் இருப்பார்கள் என்பது இதற்கான காரணமா என்ற சந்தேகம் எழுகிறது.

02:24:56 on 30 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, ஒரு வால்வு வழியாக அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் செலுத்தப்படும் ஹுட்ஸ் ரக கருவிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவை மூச்சு காற்றிலுள்ள திரவ துளிகளின் மூலமாக வைரஸ் காற்றின் வழியே பரவும் அபாயத்தை குறைக்கின்றன.

01:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பீகார் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த அமித் என்பவரை, ஐந்து பேர் அடங்கிய கும்பல் துப்பாக்கி முனையில், அருகேயுள்ள கிராமத்திற்கு கடத்திச் சென்று, அங்கிருந்த இளம் பெண்ணுக்கும் அமித்துக்கும், கட்டாய திருமணம் செய்து வைத்தனர். நாடு முழுவதும் கொரோனா பீதி நிலவும் நிலையில், இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

01:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க தினமலர்

மத்திய அரசின் ஊரடங்கால் நாடு முழுவதும் அச்சமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு, கொரோனா உயிரிழப்புகளை மேலும் அதிகப்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

12:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகள் வருகிற 31-ந்தேதியில் இருந்து பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும் என்றும், இது அரசு உத்தரவு என்றும், ஏதோ செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது போன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனை டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

12:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

உலகமெங்கும் மிகுந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள ஒன்று உண்டென்றால் அது சந்தேகத்திற்கிடமின்றி N95 முகக்கவசம்தான். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள தருணத்தில் மருந்து நிறுவனமாக 34 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிறுவனம் இப்போது லாபகரமான தொழிலாக முகக்கவசம் உற்பத்தியை மாற்றி பணத்தை சம்பாதித்து வருகிறது.

11:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க விகடன்

வெளிமாநிலங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதை தடுக்க அனைத்து மாநில, யூனியன் பிரதேச எல்லைகளையும் மூட வேண்டும் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.

10:57:02 on 30 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மதுரை திருமங்கலம் வாகைக்குளத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மனைவி செல்விக்கும் அதே ஊரைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டு, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி 10 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் ஊர் திரும்பிய இருவரையும், அவர்களது உறவினர்கள் கடுமையாக தாக்கியதில் செல்வி உயிரிழந்தார்.

10:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 2 வாரங்களில் மேலும் அதிக அளவில் இருக்கும் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு ஏப்ரல் 12ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது அதிகமாக இருக்கும் என கூறினார்.

09:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கொரோனா தாக்குதலால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்த கவலையால், ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாகாண நிதியமைச்சர் தாமஸ் ஷாபர் (54) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ஹெஸ்ஸி மாகாணத்தில்தான் டெட்சே வங்கி மற்றும் காமர்ஸ் பேங்க் தலைமையகங்கள் உள்ளன.

09:27:01 on 30 Mar

மேலும் வாசிக்க தினகரன்

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.94 அடியாகவும், நீர் இருப்பு - 21.8 டிஎம்சியாகவும் உள்ளது. அணையின் நீர்வரத்து 832 கன அடியாகவும் பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு 2850 கன அடியாகவும் உள்ளது.

09:04:15 on 30 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலகளவில் கொரோனா உயிரிழப்பு 34 ஆயிரத்தை நெருங்குகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இத்தாலியில் மட்டும் 10,700-க்கும் மேற்பட்டோரும். ஸ்பெயினில் 6,800க்கும் மேற்பட்டோரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

08:59:31 on 30 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பைச் சேர்ந்த விமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் எப்படி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றதோ, அதே போல் தோளில் ஒரு எந்திரத்தை தூக்கி வைத்துக் கொண்டு இளைஞர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு தெருவாக சென்று கிருமி நாசினி தெளித்தார்.

07:55:01 on 30 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியாவில் மக்கள் நலனுக்காக அரசு 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை கடுமையான நடவடிக்கைகளுடன் விதித்துள்ளது. இதனால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் ஹிந்தி சினிமாவை சேர்ந்த நடிகர் ரிஷி கபூர், மதுக்கடைகளை தினமும் சில மணி நேரமாவது திறந்து வைக்க வேண்டுமென அரசுக்கு வேண்டுக்கோள் வைத்துள்ளார்.

06:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

தேசிய அலுமினிய நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://nalcoindia.com/ என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

05:57:01 on 30 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 100 மணி நேரம்தான் கடந்துள்ளது. ஆனால், இந்த 10 மணி நேரத்துக்குள்ளாக மதுபானம் கிடைக்காததன் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஒருவர் நெஞ்சுவலியால் உயிரிழந்துள்ளார். மேலும், ஷேவிங் செய்யும் திரவத்தைக் குடித்து உயிரிழந்துள்ளார்.

10:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார். இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

09:55:01 on 29 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்திய ஆயுதப்படைகளுக்கு ரூ.880 கோடி மதிப்பில் இலகு ரக துப்பாக்கிகள் வாங்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், இஸ்ரேல் ஆயுத விற்பனை நிறுவனம் இடையே வியாழக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தானது. மோடி அரசின் இந்த நடவடிக்கை எதிராக பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

08:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் 14-ம் தேதி வரை மின் கட்டணமும் செலுத்தவில்லை என்றாலும் துண்டிப்பு இருக்காது என்றார்.

07:55:01 on 29 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஊரடங்கு உத்தரவால் அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகள், ரயில் சேவை, ஆட்டோ மற்றும் ஷேர்ஆட்டோ சேவைகளும் நிறுத்தப்பட்ட நிலையில் போக்குவரத்து இன்றி மதுரை மாநகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

07:25:01 on 29 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் தலைநகர் டெல்லியில் வேலைவாய்ப்பை இழந்த ஆயிரக்கணக்கானோர் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் நடந்தே செல்லும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.

06:55:01 on 29 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தாய்லாந்து நாட்டில் 1200க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், அந்நாட்டு அரசர் மகா வஜிரலொங்கோன், ஜெர்மனியின் ஜூக்ஸ்-ஸ்ப்லிட்ஸ் மலையடிவாரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில், 20 அழகிகளுடன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.

06:35:08 on 29 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8 பேரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், அதில் 4 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.

06:07:48 on 29 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தேனி உழவர் சந்தையில் புதிய முயற்சியாக 18 வகையான பொருள்களைக் கொண்டு, காய்கறித் தொகுப்புப் பை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

05:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க விகடன்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் வாட்ஸ்ஆப் சர்வர் வேகத்தைக் குறைக்க அதன் வசதிகளைத் தளத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவை பதிவேற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டின்படி வாட்ஸ்ஆப்பில் 16 வினாடிகளுக்கு மேல் உள்ள வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியாது.

04:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினமலர்

ஆணுறை தயாரிப்பில் மலேசியா மிகப்பெரிய அளவில் உற்பத்தி மேற்கொள்ளும் நாடாக விளங்குகிறது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மலேசியாவில் பல ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்னும் சில மாதங்களில் உலக அளவில் அனைத்து நாடுகளிலும் ஆணுறை தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

04:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் உயிரிழக்கும் வாய்ப்பு 0.5% - 1% இருப்பதாக பிரிட்டன் அரசாங்கத்தின் அறிவியல் ஆலோசகர்கள் நம்புகின்றனர். கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டவர்களின் இறப்பு விகிதத்தை விட இது குறைவாக உள்ளது.

03:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து தொழில்கள் போலவும் சினிமா, சின்னத்திரை வேலைகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் டிவி சானல்களும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட தொடர்களை முக்கிய பகுதிகளாக கட் வெர்சனாக ஒளிபரப்ப தொடங்கிவிட்டன. இதனால் வருமானம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

03:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

ஒன்பிளஸ் 8 ப்ரோ ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஆன்லீக்ஸ் மற்றும் ஐகீக்ஸ் பிளாக் மூலம் வெளியாகி இருக்கும் ரென்டர்களின் படி புதிய ஒன்பிளஸ் போனில் பன்ச் ஹோல் கேமரா டிஸ்ப்ளேவின் இடதுபுற ஓரத்தில் வழங்கப்படுகிறது.

02:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கொரோனா பாதிப்பை விட ஏழைகளின் வாழ்வாதார பாதிப்பு மிகப்பெரிய பேரிழிவை ஏற்படுத்தும் என்றும் கண் எதிரே பெருந்துயரம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, பிரதமரும் மத்திய நிதியமைச்சரும் எதற்காக காத்திருக்கின்றனர்.? என கேள்வி எழுப்பியுள்ளார்.

02:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ளார். 86 வயதான ஸ்பெயின் நாட்டின் இளவரசி மரியா தெரசா உயிரிழந்துள்ள செய்தியை அந்நாட்டு அரசு உறுதிபடுத்தியுள்ளார். உலகளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்த முதல் அரச குடும்ப இளவரசி மரியா தெரசா என்பது குறிப்பிடத்தக்கது.

01:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சென்னை மாநகராட்சி சார்பில்வெளியிட்டுள்ள அறிவிப்பில், வணிகம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பொதுப் பயன்பாடுகள், ஊடக சேவை, சுகாதார மருத்துவ சேவைகளில் ஈடுபடுபவர்களும் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மக்கள் நலன் கருதி, மளிகை பொருள்களை வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளும் வகையில் உள்ளூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள், முன்னணி மளிகைக் கடைகளுடன் இணைந்து சேலம் மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

12:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து சிகிச்சை மூலம் மீண்டு வருபவர்களிடமிருந்து பிளாஸ்மாவை எடுத்து கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைக்கு நல்ல பலன்கள் தெரிவதாக ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை ஒன்று தெரிவிக்கிறது.

12:27:02 on 29 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

காய்கறி சந்தை, பிற காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியன காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடு தேவையின்றி மக்கள் வெளியே நடமாடுவதை கட்டுப்படுத்த எடுக்கப்படுகிறது.

11:57:02 on 29 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கொள்ள பிரதமரின் நிவாரண நிதிக்கு அனைத்து பா.ஜ.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமாத ஊதியத்தை வழங்க வேண்டும் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தி உள்ளார். இதேபோன்று எல்லா பாஜக எம்.பி.க்களும் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

11:27:01 on 29 Mar

மேலும் வாசிக்க தந்தி டிவி

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 979-ஆக உயர்ந்துள்ள நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 86 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:02:47 on 29 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லியில் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருக்கின்றனர். முகக்கவசம் மற்றும் கைக்குட்டைகளை முகத்தில் கட்டிக்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர். போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுக் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6.6 லட்சத்தை தாண்டியது. பலியானவர்கள் எண்ணிக்கை 30,800-ஐ கடந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா பாதிக்கப்பட்டவர்களில் முதலிடத்தில் உள்ளது. அதேபோன்று இத்தாலியும் மிக மோசமான நிலையில் உள்ளது. இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை 10,000-ஐ தாண்டியுள்ளது.

10:25:01 on 29 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று (மார்ச் 29) மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 76. இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

09:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினமலர்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 42 பேரில் 17 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்திலேயே சென்னை தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று உள்ளவர்களின் வீடுகளை சுற்றிலும் 8 கி.மீ. தனிமைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

09:27:02 on 29 Mar

மேலும் வாசிக்க தினகரன்

திருச்சியில் செயல்பட்டு வரும் ஐஐஎம்-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, மேலும் விவரங்களுக்கு https://www.iimtrichy.ac.in/sites/default/files/upload/23Mar2020154856_20200323154842Detailedadvt-Contractposts-Mar2020-Final-20.03.pdf என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.

08:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி நிதியுதவி அளிப்பதாக ரத்தன் டாடா அறிவித்தார். இந்நிலையில், தற்போது டாடா சன்ஸ் நிறுவனம் சார்பில் மேலும் ரூ.1000 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தினமணி

பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா சஞ்சய் மிஷ்ராவுடன் இணைந்து காஞ்ச்லி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் தன்னார்வலராக இணைந்து செவிலியர் பணி செய்து வருகிறார்.

06:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். சம அளவு வெங்காயச் சாறு வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி குறையும்.

05:57:01 on 29 Mar

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் நபர்களுக்கு உணர்த்தும் வகையில், நடிகர் ஜீவா என்று இருந்த தனது டுவிட்டர் ஐடியையே உள்ளே போ என்று பெயர் மாற்றியிருக்கிறார்.

10:57:02 on 28 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

சத்திய மங்கலம் எல்லை அருகில் தங்க வைக்கப்பட்டிருந்த 150க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை கமுதியிலுள்ள தனியார் கல்லூரிக்கு அழைத்து வந்தது மாவட்ட நிர்வாகம். தகவலறிந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து, மீனவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க மாட்டோம் என பேருந்துகளை வழிமறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

09:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாக ஆண்களே பாதிக்கப்படுவதாக புதிய சர்வதேச அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களில் 60 வீதமானவர்கள் ஆண்கள் என்பதுடன், இறந்தவர்களில் 70 சவீதமானவர்களும் ஆண்கள் என தெரியவந்துள்ளது.

08:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

இந்திய மக்கள் கடந்த 10 நாட்களாக பெரும் பிரச்சினைகளைச் சந்தித்து வரும் நிலையில் இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா எந்தவித பதிலோ அறிவிப்போ வெளியிடாமல் இருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் பலரும் அமித்ஷா எங்கே என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

08:27:01 on 28 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குநரக வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, சமூக விலகலை உறுதி செய்வதற்கான எந்த ஏற்பாடும் செய்தியாளர்கள், அதிகாரிகளுக்குச் செய்து தரப்படவில்லை.

08:10:37 on 28 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குநரக வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, சமூக விலகலை உறுதி செய்வதற்கான எந்த ஏற்பாடும் செய்தியாளர்கள், அதிகாரிகளுக்குச் செய்து தரப்படவில்லை.

08:01:35 on 28 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கொரோனாவை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவை இயக்குநரக வளாகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, சமூக விலகலை உறுதி செய்வதற்கான எந்த ஏற்பாடும் செய்தியாளர்கள், அதிகாரிகளுக்குச் செய்து தரப்படவில்லை.

07:54:01 on 28 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த மூன்று வருடங்களாக சென்னை கே.கே.நகர் அசோக் பில்லர் பகுதியில் 108 வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை இவர் ஆம்புலன்ஸ் வாயிலாக அழைத்து வந்ததாக தெரிகிறது.

07:25:01 on 28 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கொரோனாவால் உலகம் முழுவதும் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளதால் மாசுபாடு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் நைட்ரஜன் டை ஆக்ஸைட் அளவு வியக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது. படிம எரிபொருளின் காரணமாக ஏற்படும் மாசுபாடு இது.

06:54:16 on 28 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஏப்ரல் 3ஆம் தேதியான வெள்ளிக்கிழமை அன்று ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும் என்று கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு 3ஆம் தேதிக்கான விடுப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

06:38:51 on 28 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனா தொற்றில் தற்போது 2-வது கட்டத்தில் தமிழகம் நுழைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் இருந்து வந்தோர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு பரவியதே 2ஆம் கட்ட நிலையாகும், சமூகத்திற்கு இடையே கொரோனா தொற்று பரவினால் அது 3ஆம் நிலையாகும் என தெரிவித்தார்.

06:34:12 on 28 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜகவின் எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “19க்கு பிறகு ஷூட்டிங் நிறுத்தப்பட்ட பிறகு அத்தனை சானல்களிலும் ஒரு எபிசோட் கூட தடைபடாமல் சீரியல் வருகிறது. முன்பே எடுக்கப்பட்டதா? ஊரடங்கு தடை மீறி எடுக்கிறார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

05:27:02 on 28 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

கொரோனா பரவாமல் தடுக்க தமிழகத்திற்கு ரூ.9 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுவதாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர், மாநில அரசுகள் கூடுதல் கடனுதவியாக ரூ.1 லட்சம் கோடி கடன் பெற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

04:57:01 on 28 Mar

மேலும் வாசிக்க தினமலர்

மேலும் வாசிக்க