View in the JustOut app
X

வடக்கு அமெரிக்காவின் எல்லைப் பகுதிக்கும், மெக்ஸிக்கோவின் எல்லைக்கும் அருகில் பாயும் நதியான ரியோ கிரேன்டியின் கரையில் 2 வயது குழந்தையும், அவரது தந்தையின் உடலும் கரை ஒதுங்கியிருந்தது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் தலையும் நீருக்குள் மூழ்கி முகம் தெரியாத நிலையில் இருந்தது.

07:18:01 on 26 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

வடக்கு அமெரிக்காவின் எல்லைப் பகுதிக்கும், மெக்ஸிக்கோவின் எல்லைக்கும் அருகில் பாயும் நதியான ரியோ கிரேன்டியின் கரையில் 2 வயது குழந்தையும், அவரது தந்தையின் உடலும் கரை ஒதுங்கியிருந்தது. நீரில் மூழ்கி உயிரிழந்த இருவரின் தலையும் நீருக்குள் மூழ்கி முகம் தெரியாத நிலையில் இருந்தது.

07:15:01 on 26 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

சென்னை துரைப்பாக்கம் அமிர்தா கல்லூரியில் காதல் தகராறில் மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார் காதலியின் அண்ணன். கல்லூரி வளாகத்திலேயே நடந்த கொலைச் சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

06:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில், மூதாட்டிகளிடம் அன்பாகப் பேசி, அவர்களிடமிருந்து தங்க நகைகளை வழிப்பறி செய்துள்ளார். ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர்தான் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார். நீங்கள் ஆசீர்வாதம் செய்தால், 1000 ரூபாய் கிடைக்கும் என்று கூறி அவர்களை நம்பவைத்து ஏமாற்றியுள்ளார்.

06:56:19 on 26 Jun

மேலும் வாசிக்க விகடன்

சென்னை கோயம்பேடு மெட்ரோ ஸ்டேஷனில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் திடீரென வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை 1:30 மணிக்கு நடைபெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களையும், இணையத்தில் வைரலாகும் வீடியோவையும் பார்த்த மெட்ரோ ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

06:44:09 on 26 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இலங்கையில் பெரும் குற்றங்கள் செய்த குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் சட்டம் நடைமுறையில் இருந்துவருகிறது. இருப்பினும் கடந்த 43 ஆண்டுகளாக இதுவரை யாருக்கும் அங்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதில்லை. இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய நால்வரை தூக்கிலிட இலங்கை உத்தரவிட்டுள்ளது.

06:35:04 on 26 Jun

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

எங்கள் சாதி பையனோடு பேசினால் வெட்டி ஆற்றில் வீசி விடுவோம் என்று கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் தங்களை ஏற்கனவே மிரட்டியதாக, மேட்டுப்பாளையத்தில் சாதியை மீறி காதல் திருமணம் செய்ய முயன்றதால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவரும் பெண்ணின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

06:32:48 on 26 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, தண்டையார்பேட்டை, அண்ணாநகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

06:26:18 on 26 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புவனேஷ் - ஷமி இருவரில் யாரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் எடுக்கலாம் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின், புவனேஷ்வர் குமார்தான் நமது முதன்மையான ஃபாஸ்ட் பவுலர் என்றும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அவரே ஆட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

06:18:02 on 26 Jun

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

புவனேஷ் - ஷமி இருவரில் யாரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் எடுக்கலாம் என மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின், புவனேஷ்வர் குமார்தான் நமது முதன்மையான ஃபாஸ்ட் பவுலர் என்றும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அவரே ஆட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

06:15:02 on 26 Jun

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுத்ததாக அரசு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், ஆலையை மீண்டும் இயக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தவே ஆலையை அரசு மூடியது என்றும் வேதாந்தா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

05:55:17 on 26 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஹிப் ஹாப் தமிழாவை இயக்குநராகவும், நடிகராகவும் மீசையை முறுக்கு படத்தில் அறிமுகப்படுத்தினார் சுந்தர் சி. அடுத்து ஹிப்ஹாப் தமிழா நடித்த நட்பே துணை படத்தையும் சுந்தர் சி. யின் அவ்னி மூவிஸே தயாரித்தது. இரு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் மூன்றாவது படத்தையும் அவ்னி மூவிஸ் தயாரிக்கிறது.

05:55:01 on 26 Jun

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோவில் நடிகை ரேஷ்மா கதறி அழும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. நீங்கள் யாரை மிகவும் இழக்கிறீர்கள்? என நடிகை ரேஷ்மாவிடம் பாத்திமா பாபு கேள்வி கேட்க, தனக்கு பிறந்த குழந்தை உடல் நலக்கோளாரால் இறந்து விட்டது என ரேஷ்மா கூறி கண்ணீர் வடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

05:35:01 on 26 Jun

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

வடக்கு வங்கக்கடலில் வரும் 30ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை வடக்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

05:21:58 on 26 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்துக்களின் புனித தலமான ராமேஸ்வரம் வந்து செல்ல விமானப்போக்குவரத்து செய்யுமாறு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் எம்பியான கே.நவாஸ்கனி கோரியுள்ளார். ராமநாதபுரம் எம்பியான அவர் இதை மக்களவையில் மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

05:18:17 on 26 Jun

மேலும் வாசிக்க காமதேனு

பிக்பாஸ்-3இல் எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் காதல், மோதல் என பிரச்சனைகளும் தொடங்கிவிட்டது, இந்நிலையில் நேற்று மீரா மிதுன் என்பவர் எண்ட்ரீ ஆனார். இவர் குறித்து வரும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது. பேஷன் ஷோ நடத்துகிறேன் என்று பல பெண்களை அவர் ஏமாற்றியுள்ளாராம்.

05:15:02 on 26 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

”தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்று ஓராண்டு கழிந்த பின்னரும்கூட, உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டு 10 மாதங்கள் கழிந்து விட்ட நிலையிலும்கூட சிபிஐ இன்னும் விசாரணையை முடிக்கவில்லை. தனது முதல் தகவல் அறிக்கையில் ஒரே ஒரு போலீஸார் பெயரைக்கூட சேர்க்கவில்லை.” என திமுக எம்.பி. கனிமொழி மக்களவையில் ஆவேசப்பட்டார்.

05:11:15 on 26 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இடம்பிடித்திருக்கும் தவறான தகவல்களால் இன்ஜினீயரிங் கவுன்சலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பம் அடைந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம், சமீபத்தில் 537 கல்லூரிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 92 கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என அறிவித்திருந்தது.

04:57:02 on 26 Jun

மேலும் வாசிக்க விகடன்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 13 ‘லீக்‘ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்நிலையில். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

04:39:01 on 26 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. நேற்றுடன் 32 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 13 ‘லீக்‘ ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இந்நிலையில். நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மட்டுமே அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.

04:36:01 on 26 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

'மோடி பெற்ற வெற்றி, நாடு அடைந்த தோல்வி எனக் கூறுவது ஜனநயாகத்தை அவமானப்படுத்துவதாகும். காங்கிரஸ் தொடர்ந்து இந்திய வாக்காளர்களை அவமதித்து வருகிறது. வாக்காளர்களை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. காங்கிரஸ் கட்சியின் தோல்வியை நாட்டின் தோல்வியாக பார்க்கக்கூடாது.” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

04:15:02 on 26 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மக்களவைக் கூட்டத்தொடரின் போது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மக்களவை உறுப்பினரான பி.கே.குன்ஹாலிகுட்டி ஜார்க்கண்டில் இஸ்லாமிய இளைஞர் கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு விவாதம் மேற்கொள்ளவேண்டும் எனக் கோரி ஒத்திவைப்பு தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.

03:55:01 on 26 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

அணுக்கழிவு சேமித்து வைக்கும் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறைதான் இந்தியாவிலும் பின்பற்றப்படுவதாகவும், கூடங்குளம் மட்டுமல்ல நாட்டின் மற்ற அணு உலைகளிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுவதாகவும், இது பாதுகாப்பானதுதான் என்றும் பதிலளித்துள்ளார்

03:48:32 on 26 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

ரா மற்றம் புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி. அமைச்சரவையில் நியமனக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார் பிரதமர் மோடி. இவர் இன்று, புலனாய்வு பிரிவின் (ஐ.பி.,) புதிய தலைவராக அரவிந்த் குமாரையும், ரா.,வின் புதிய தலைவராக சமந்த் கோயலையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

03:39:02 on 26 Jun

மேலும் வாசிக்க தினமலர்

ரா மற்றம் புலனாய்வு பிரிவிற்கு புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி. அமைச்சரவையில் நியமனக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார் பிரதமர் மோடி. இவர் இன்று, புலனாய்வு பிரிவின் (ஐ.பி.,) புதிய தலைவராக அரவிந்த் குமாரையும், ரா.,வின் புதிய தலைவராக சமந்த் கோயலையும் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

03:36:01 on 26 Jun

மேலும் வாசிக்க தினமலர்

கடந்த சில தினங்களாக கடுமையாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்துள்ளது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் 304 ரூபாய் வரை அதிகரித்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை, நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு 336 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் சவரன், 26,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

03:18:01 on 26 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடந்த சில தினங்களாக கடுமையாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்துள்ளது. தங்கம் விலை நேற்று ஒரே நாளில் மட்டும் 304 ரூபாய் வரை அதிகரித்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை, நேற்றைய விலையிலிருந்து சவரனுக்கு 336 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் சவரன், 26,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

03:15:02 on 26 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்குகின்றன. அதே பாணியில் இந்தியாவிலும் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக டெல்லி - லக்னோ, மும்பை - ஷீரடி, சென்னை - பெங்களூரு, திருவனந்தபுரம் - கண்ணுர், மும்பை- அகமதாபாத் மார்க்கங்களை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

02:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க விகடன்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களும், சொந்த மைதானம் எனும் கூடுதல் சலுகையுடன் இங்கிலாந்து அணி தொடரைச் சந்திப்பதால் பலரும், இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற கடுமையாக போராட வேண்டிய சூழல் உள்ளது.

02:39:01 on 26 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய வீரர்களும், சொந்த மைதானம் எனும் கூடுதல் சலுகையுடன் இங்கிலாந்து அணி தொடரைச் சந்திப்பதால் பலரும், இங்கிலாந்து கோப்பையை வெல்லும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அந்த அணி அரையிறுதிக்கு தகுதிபெற கடுமையாக போராட வேண்டிய சூழல் உள்ளது.

02:36:02 on 26 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வரும் 28ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தக் கூட்டம் காலை 11.30 மணிக்கு நடைபெறும் என்றும், தவறாமல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:27:59 on 26 Jun

மேலும் வாசிக்க தினமணி

இந்துத்துவா கும்பல் எழுப்பும் 'ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எதிர்வினையாற்றும் விதத்தில் ட்விட்டரில் மக்கள் #NoToJaiShriRam என்ற ஹாஸ்டேக்கை பயன்படுத்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ஹாஸ்டோக் தற்பொழுது டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் பா.ஜ.க ஆட்சிக்கு எதிராக கருத்துக்களை மக்கள் பதிவு செய்து வருகின்றனர்.

02:18:23 on 26 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள போதிலும் நெல்லை, தூத்துக்குடியில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கி வருகிறது. குடிநீர் பிரச்னையை முழுமையாக தீர்க்க போதிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

02:18:02 on 26 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள போதிலும் நெல்லை, தூத்துக்குடியில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கி வருகிறது. குடிநீர் பிரச்னையை முழுமையாக தீர்க்க போதிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

02:15:01 on 26 Jun

மேலும் வாசிக்க தினகரன்

சேலம் மாவட்டம் ஆத்தூரில், மழை வேண்டி இஸ்லாமிய சமூகத்தினர் சிறப்பு தொழுகை நடத்தினர். இந்தத் தொழுகையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னத்தம்பி, மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

02:05:28 on 26 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தெற்கு ரெயில்வேயின் புதிய கால அட்டவணை வருகிற 1ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் சென்னை - மதுரை இடையே சுமார் 10 ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய கால அட்டவணை நடைமுறைக்கு வரும்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 முதல் 30 நிமிடம் வரை பயண நேரம் குறைய உள்ளது.

01:59:51 on 26 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

டெல்லியில் நடந்த தேசிய யோகா போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக மாணவர்கள், மாணவிகள் தலா நான்கு தங்கப் பதக்கங்களைப் பெற்றனர்.

01:42:01 on 26 Jun

மேலும் வாசிக்க தினகரன்

குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கான அபராத தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் பல திருத்தங்களை செய்துள்ள மத்திய அரசு, அதனை இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது.

01:27:01 on 26 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தமிழகத்தில் 26 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மகேஷ்குமார் அகர்வால் ஏடிஜிபி பதவி உயர்வு பெற்று போலீஸ் ஆபரேசன் துறைக்கும், வெங்கட்ராமன் ஏடிஜிபபி பதவி உயர்வுடன் சைபர் கிரைம் துறைக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

01:10:01 on 26 Jun

மேலும் வாசிக்க தின மலர்

ஆடை படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ரத்னகுமார் தன் ட்விட்டர் பக்கத்தில் சிந்துபாத் படம் குறித்து சில கருத்துக்களைக் கூறியுள்ளார். இதில், ‘மனைவியைத் தேடி கடல் கடந்து, தடைகள் தாண்டி எதிரிகளை துவம்சம் செய்யும் மரண மாஸ் படமே சிந்துபாத்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

12:59:08 on 26 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா வெளியிட்ட புகைப்படத்தில், ஒரு புறம் ரஜினிகாந்தும், மற்றொரு புறம் தனது மகன் வேத் இருக்கிறார். அந்த புகைப்படத்திற்கு மேல், "தனது தாத்தாவை போல பேரன்" என்று பதிவிட்டிருந்தார். இதற்கு ரஜினியின் ரசிகர்கள் ரஜினியை தாத்தா என குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சௌந்தர்யாவின் பதிர்விற்கு கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

12:40:49 on 26 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அபிராமி, கவினை தொலைக்காட்சியில் பார்த்து ஒரு க்ரஷ் வந்ததாகக் கூறினார். இதுக்குறித்து அபிராமியின் அம்மா, ’க்ரஷ் யார் மேல் கூட வரலாம், அது வேற.. லவ் வேற, லவ்-வில் கூட நிறைய வித்தியாசம் உள்ளது, நாயை கூட லவ் பண்ணலாம்’ என்பது போல் பேசியுள்ளார். இது பலருக்கும் செம்ம கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

12:34:06 on 26 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி மறுப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராகுலே தலைவராக இருக்க வேண்டுமென டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தியுனர்.

12:28:57 on 26 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்க வைப்பது ஒரு தனி கலைதான். கதை சொல்வது, நடித்துக் காண்பிப்பது என மாணவர்கள் விரும்பும் முறையை ஆசிரியர்கள் கையாள்வதைப் பார்த்திருப்போம். ஆனால், மதுரையில் உள்ள கல்லூரிப் பேராசிரியர் பாண்டிக்குமார் மீம்ஸ் மூலமே பாடம் நடத்தி அசத்துகிறார்.

12:21:09 on 26 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தங்கதமிழ் செல்வனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அனல் அடிக்கும் வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் கட்சிக்கு துரோகம் செய்த தங்கதமிழ்செல்வனை கழகத்தில் இணைக்காதே… ஜெயலலிதா ஆட்சியை மழிக்க நினைத்த துரோகி தங்கதமிழ் செல்வன்… தெரிவிக்கப்பட்டுள்ளன.

12:15:12 on 26 Jun

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

பாகிஸ்தான் செய்தி சேனலில் ஒரு விவாதநிகழ்ச்சி மல்யுத்த போட்டியாக மாறியது. இந்த சம்பவம் ஒரு நேரடி செய்தி நிகழ்ச்சியில் நடந்ததுள்ளது. இந்த சம்பவம், ’நியூஸ் லைன் வித் அப்தாப் முகேரி’ என்ற சேனலில் நேரலையில் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் இது வைரலாக பரவியுள்ளது.

12:04:10 on 26 Jun

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

’ரிங் மாஸ்டர் போல் செயல்பட நினைத்த தினகரன் மீது அவரது கட்சியினர் சீற ஆரம்பித்து விட்டனர். சசிகலா, தினகரன் தவிர்த்து அமமுகவில் இருந்து யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். கொள்கை, கோட்பாடு, லட்சியம் என மூன்றும் இல்லாத தினகரனுக்கு மூன்று நாமம்தான் கிடைக்கும்’ என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

11:51:09 on 26 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

எல்.ஜி நிறவனம், இந்தியாவின் புது டெல்லியில் இன்று நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அமேசான் நிறுவனம், இந்த தகவலை இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிகழ்வில் எல்.ஜி W-தொடரின் 'எல்.ஜி W30' ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

11:46:36 on 26 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கோவை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயந்தி என்பவர் அப்பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவர்களை சாதியின் பெயரால் இழிவுபடுத்துவதாகவும், கழிப்பறைகள் சுத்தம் செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து ஜெயந்தி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

11:41:51 on 26 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள அக்கரை வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ராஜலெட்சுமி. இவர் பி.எஸ்.சி. 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 3 நாட்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் தானே நெற் பயிர்களை நடவு செய்தார். இவரது முயற்சியை அனைவரும் பாராட்டினர்.

11:34:25 on 26 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

ரஜினிகாந்த் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக எடுத்து தர்பார் படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து புகைப்படங்கள் லீக் ஆகி வருவது அனைவரும் அறிந்ததே. அப்படி செம்ம மாஸ் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆனது, படக்குழுவினர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

11:29:54 on 26 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

காவிரிப் படுகையில் மேலும் 104 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், மத்திய - மாநில அரசுகள் விபரீதத்தை விதைக்காமல், ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

11:25:33 on 26 Jun

மேலும் வாசிக்க காமதேனு

2015-16ஆம் ஆண்டில் 15.54 கோடி டன்னாக இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி 2017-18ஆம் ஆண்டில் 17.63 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய 2016-17 நிதியாண்டில் 16.54 கோடி டன் பால் உற்பத்தி செய்யப்பட்டிருந்ததாக மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சரான சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.

11:25:02 on 26 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வெப்பச்சலனம், தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11:09:48 on 26 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

குன்னூர் அருகே நாளுக்கு நாள் காட்டெருமை கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் குடியிருப்புவாசிகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோர் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், காட்டெருமைகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்டும்படி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

11:04:23 on 26 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

’18 எம்.எல்.ஏக்கள் வழக்கிலும் தோல்வி. இறுதியாக தேர்தலிலும் தோல்வி. ஸ்லீப்பர் செல் ஸ்லீப்பர் செல் என்று கூறி டிடிவி தினகரன் இதுவரை சாதித்தது என்ன?’ என்று தன் தரப்பு நியாயங்களையும் குற்றச் சாட்டுகளையும் முன்வைத்துள்ளார் தங்க தமிழ்ச்செல்வன்

10:51:43 on 26 Jun

மேலும் வாசிக்க ie தமிழ்

மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவுக்கு மும்பையில் உள்ள மருத்துவமனையில் ஆன்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் மருத்துவ பரிசோதனைகள் செய்தவுடன் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:44:38 on 26 Jun

மேலும் வாசிக்க தினமணி

பிபிசியில் வெளிவந்த சென்னை வறட்சி குறித்த செய்தியைப் படித்த பின்பு பிரபல பாலிவுட் நடிகரும், டைட்டானிக் படத்தின் கதாநாயகனுமான லியானார்டோ ட் காப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மழையால் மட்டுமே சென்னையைக் காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

10:38:04 on 26 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து வந்த கனகராஜ் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அவரது அண்ணன் வினோத்குமார் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

10:33:28 on 26 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வறட்சியான சருமத்தினர் தங்களது சரும வறட்சியைத் தடுக்க ஒருசில பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடலாம். தர்பூசணியை விதையுடன் சேர்த்து விழுதாக அரைத்து, அதோடு 1/2 டீஸ்பூன் அரிசிமாவு, 1/4 டீஸ்பூன் கடலை மாவு, 1/4 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம், கை கால்களில் பேக் மாதிரி போட்டு 1/2 மணிநேரம் கழித்து முகத்தைக் கழுவலாம்.

10:00:08 on 26 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்கும் சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகி நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கொண்ட இந்தப் படத்தில் நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

09:39:01 on 26 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடிக்கும் சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகி நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு கொண்ட இந்தப் படத்தில் நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

09:36:01 on 26 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மராட்டிய மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள ரெயில்களில் வந்த காங்கிரஸ், சிவசேனா எம்.எல்.ஏ.க்களிடம் மர்மநபர்கள் கைவரிசை காட்டி சென்று உள்ளனர். எம்.எல்.ஏ.க்களிடமே மர்ம நபர்கள் திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

09:15:02 on 26 Jun

மேலும் வாசிக்க தினத் தந்தி

ரஷ்யாவில் நடந்த ராணுவத் தளவாடக் கண்காட்சியில் ஆந்தை வடிவிலான உளவு விமானத்தை அந்நாடு அறிமுகம் செய்துள்ளது. துல்லியம் போன்றவை இந்த விமானத்தின் முக்கிய மந்திரமாக இருக்கும் என ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி சோய்கு தெரிவித்துள்ளார்.

08:59:56 on 26 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

டிடிவி தினகரன் குற்றச்சாட்டுக்கு தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம் அளித்துள்ள தங்க தமிழ்ச்செல்வன், ’நான் உண்மை பேசியதால் என்னை ஊடகங்கள் பெரிதுப்படுத்தின. எனது அடுத்த கட்ட நடவடிக்கை அமைதியாக இருப்பதுதான். கூவத்தூர், புதுச்சேரி, கர்நாடகாவில் எங்களை அடைத்து வைத்தது ஏன்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

08:36:02 on 26 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் 14 உறுப்பு கல்லுாரிகள் 27 இணைப்பு கல்லுாரிகளில் 10 பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை 'ஆன்லைன்' பதிவு பணிகள் மே 8இல் துவங்கி ஜூன் 17ஆம் தேதி நிறைவு பெற்றது. இன்று 3:30 மணிக்கு ஆன்லைனில் மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

08:15:01 on 26 Jun

மேலும் வாசிக்க தின மலர்

நிதி ஆயோக் அமைப்பு, தனது இரண்டாவது சுற்று சுகாதார தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் சிறந்த மாநிலங்களில் முதல் இடத்தை கேரளா பிடித்துள்ளது. இரண்டாவது இடம் ஆந்திராவுக்கும், மூன்றாவது இடம் மராட்டிய மாநிலத்துக்கும் கிடைத்துள்ளது.

07:56:46 on 26 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

விமான நிலையம் - தங்கநல்லூர் இடையேயான உயர் மின் அழுத்த மின் கம்பியில் பழுது சரி செய்யப்பட்டு மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்க தொடங்கின. இன்று அதிகாலை 4.30 மணி முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

07:52:49 on 26 Jun

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.77 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.59 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:49:26 on 26 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்றுநோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம்.

06:59:52 on 26 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

'பரியேறும் பெருமாள் படத்தில் எண்சுவைகளும் சிறப்புற பதிவாகியுள்ளன' என்று அச்சிட்டு கோனார் தமிழ்உரை அப்படத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. பா. ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பரியேறும் பெருமாள்.

06:25:02 on 26 Jun

மேலும் வாசிக்க ETV Bharat

கோடையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் உடற்பயிற்சியில் ஈடுபட கூடாது. அந்த ஒரு மணி நேரத்திலும் இடைவெளி எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யும் போது உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். அதுவே வெய்யில் காலம் என்றால் சொல்லவே தேவையில்லை. அதனால் சம்மரின் போது ஜிம் செல்பவர்கள் இதையெல்லாம் தவறாமல் பின்பற்றவும்.

05:57:01 on 26 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

ஒட்டன்சத்திரம் மாட்டுச்சந்தைக்கு கொண்டு வரப்படும் பெரும்பாலான கால்நடைகளை விற்க முடியாமல் திரும்ப அழைத்துச் செல்வதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம் விலை குறைப்பு என்பதே ஆகும்.

05:25:01 on 26 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

கார்போஹைரேட் குறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய பயன்கள் உண்டு. உடல் எடை குறைப்பு துவங்கி இரத்த சர்க்கரை வரை அனைத்தையும் சரிசெய்ய கூடிய தன்மை இந்த லோ-கார்ப் டயட்டிற்கு உண்டு.

04:59:55 on 26 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

விஜய் இரு வேடங்களில் நடித்துவரும் பிகில் படத்தின் தமிழக மற்றும் வெளிநாடு திரையரங்கு விநியோக உரிமை விற்கப்பட்டுள்ளது. தமிழக திரையரங்கு விநியோக உரிமையை ஸ்க்ரீன் சீன் என்டர்டெயின்மெண்ட் வாங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

04:25:01 on 26 Jun

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

சில வருமான வரித்துறை அதிகாரிகள், முகேஷின் கடைக்குச் சென்றும் அருகில் மறைந்திருந்து கடையின் வியாபாரத்தைக் கண்காணித்துள்ளனர். அவர்களின் சோதனை முடிவில், வெறும் கச்சோரி, சமோசா விற்றே முகேஷ் வருடத்துக்கு 60 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதிக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.

03:55:02 on 26 Jun

மேலும் வாசிக்க விகடன்

கள்ளக்குறிச்சி அருகே முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவர், தன்னுடன் சக மாணவிகள் பேசவில்லை எனக் கூறி, உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் மாணவி தற்கொலைக்கு வேறு காரணம் இருக்கிறதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

03:26:01 on 26 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உருளைக்கிழங்கை ஃபோர்க் கொண்டு ஆங்காங்கு குத்தி வேக வைத்தால் மிக எளிதில் வெந்துவிடும். ஆனால் அதன் தோல் உறிக்க தேவையில்லை. நறுக்கிய உருளைக்கிழங்கை பயன்படுத்துவது என்று எண்ணினால், உருளைக்கிழங்கை தோல் நீக்கி நறுக்கி வேக வைக்கவும்.

02:56:01 on 26 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இந்தியாவில் கடந்த 2018-19 நிதியாண்டில் மட்டும் மொத்தம் 66,169 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வாறாக 1,44,783 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 3,021 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

02:26:01 on 26 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

காலையில் எழுந்தவுடன் பல்துலக்கி, காலைக்கடன் முடித்துவிட்டு, வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்ட பிறகு, சில யோகாசன பயிற்சிகள் செய்வது நல்லது. பழங்கள், காய்கள் மற்றும் சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அளவான உடல் எடையுடன் இருக்க வேண்டும்.

01:56:01 on 26 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்திற்கான வரியை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

01:26:01 on 26 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இயக்குநர் எழில் தனது அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை இயக்க இயக்குநர் எழில் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நடிகர் பார்த்திபனை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

12:55:01 on 26 Jun

மேலும் வாசிக்க காமதேனு

சென்னையின் பல பகுதிகளுக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்த போரூர் ஏரி தற்போது குப்பைக்காடாக மாறியுள்ளது. ஏ.என்.இ. என்ற தனியார் லாரி சர்வீஸ் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்புகளிடமும், தனியார் மருத்துவமனைகளிடமும், உணவு விடுதிகளிலும் பணத்தை பெற்று அவர்களிடம் இருந்து பெறப்பட்ட குப்பைகளை ஏரியில் கொட்டி செல்கின்றன.

12:25:02 on 26 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

11:55:02 on 25 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பின்னி பன்சால் பிளிப்கார்ட்டில் தன் வசம் இருந்த பங்குகளைக் கணிசமாக வால்பாட்டுக்கு விற்றுள்ளார். இதன்மூலம் அவருக்கு ரூ.531 கோடி வருமானமாகக் கிடைத்துள்ளது. இந்தத் தகவலை பிளிப்கார்ட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

11:25:02 on 25 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அஜீரணக் கோளாறை சில நொடிகளில் போக்கக்கூடிய பானமாக கோலி சோடாவைக் கடந்த தலைமுறையினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தாகம் தீர்க்கும் குளிர்பான தொழிலில் கொடிகட்டிப் பறந்த கோலி சோடா உற்பத்தி, தமிழகத்தில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது காட்சிப் பொருளாக ஆகும் நிலையில் உள்ளது கோலி சோடா.

10:59:53 on 25 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 48 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனை ஆனது. இந்நிலையில், வெளி சந்தையை விட வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூட்டைக்கு கூடுதலாக 3 ரூபாய் வரை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

10:25:01 on 25 Jun

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு படுக்கவும். மேக்கப்புடன் தூங்க செல்ல கூடாது. இது சருமத்தை பாதிப்படையச்செய்யும். தினமும் ஆலிவ் எண்ணெய் பூசி முகத்தை சுத்தப்படுத்தலாம். நீங்கள் உண்ணும் உணவே உங்கள் அழகை தீர்மானிக்கும். எனவே பழங்கள், வைட்டமின் சி, சர்க்கரை அளவு கம்மியாக உள்ள உணவுகள் உண்ண வேண்டும்.

09:59:59 on 25 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவைச் சேர்ந்த குப்தா குடும்பத்தின் நிறுவன இல்லத் திருமண நிகழ்வு உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆலியில் (Auli), கடந்த 18 முதல் 22ஆம் தேதிவரை நடைபெற்றது. அந்தத் திருமண நிகழ்வில் உற்பத்தியான குப்பைகளை அப்புறப்படுத்த முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறது அந்த நகராட்சி நிர்வாகம்.

09:25:01 on 25 Jun

மேலும் வாசிக்க விகடன்

ஆண்கள் பெரும்பாலும் விளையாடுவதில், விளையாட்டு சேனல்கள் பார்ப்பதிலும் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பர்; இது அவர்களின் அடிப்படை குணாதிசயம். இதை யாராலும் மாற்ற இயலாது என்ற உண்மையை மனைவிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

08:59:57 on 25 Jun

மேலும் வாசிக்க மாலை மலர்

இந்தியாவில் எப்சிஏ நிறுவனம் இன்றும் நிலைத்திருக்கிறது எனில் அதற்கு முக்கிய காரணம் ஜீப் காம்பஸ் கார் தான். எப்சிஏ நிறுவனத்தின் சிறந்த காரான ஜீப் காம்பஸ் புது மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜீப் காம்பஸ் ட்ரையல்ஹாக் காரின் விலை 26.8 லட்சம் ரூபாயாக நிர்ணைக்கப்பட்டுள்ளது.

08:35:02 on 25 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உயிரிழந்த ஐதராபாத்தைச் சேர்ந்த ஓட்டுநரின் உடலை இந்தியா கொண்டு வர நிதி திரட்டப்படுகிறது. கலிஃபோர்னியாவின் ஃப்ரமான்டில் வசித்து வந்த ஐதராபாத்தைச் சேர்ந்த 26 வயதான ஓட்டுநர் சையத் வசீம் அலி Lyft என்ற டேக்ஸி சேவை நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தார்.

08:15:01 on 25 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முருங்கை இலையின் பொடியானது பல்வேறு அழற்சிகளில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு, கார்டிவாஸ்குலர் இதய நோய், ஆர்த்தரிட்டிஸ், உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது.

07:59:57 on 25 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சென்னையில் செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட ராகேஷ் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஸ்குருடிரைவர் மூலம் கொலை செய்வதே ராகேஷின் ஸ்டைல் என்கின்றனர் போலீஸார்.

07:35:01 on 25 Jun

மேலும் வாசிக்க விகடன்

தொலைக்காட்சியில் திகில் தொடர் பார்த்த பயத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

07:18:01 on 25 Jun

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

தொலைக்காட்சியில் திகில் தொடர் பார்த்த பயத்தில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

07:15:01 on 25 Jun

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று நாகப்பட்டினம், மதுரை மாவட்டடங்களில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

06:57:13 on 25 Jun

மேலும் வாசிக்க தினகரன்

2019 உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் மோதிய போட்டி அன்று, 100 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பதிவாகியுள்ளார்கள். இந்த தகவலை ஹாட்ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது. இந்த போட்டியின் போது அதிகபடியாக ஒரே நேரத்தில் 15.6 மில்லியன் பார்வையாளர்கள் பதிவாகியுள்ளனர்.

06:57:01 on 25 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ‘சென்ஸரி நியூரல் லாஸ்‘ எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். அதிக நேரம் ஹெட் போனை பயன்படுத்துவதனால் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படும்.

06:54:26 on 25 Jun

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

'மக்களின் நம்பிக்கையை வெல்வதை தவிர மிகப்பெரிய வெற்றி ஏதும் இல்லை’ என ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி பேசினார். மேலும், ’அனைத்து சவால்களையும் நம்மால் எளிதாக முறியடிக்க முடியும், விவாதத்தில் பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி,’ என்றார்/

06:43:18 on 25 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

மேலும் வாசிக்க