View in the JustOut app
X

சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் ட்ரம்ப் உரை நிகழ்த்தினார். அப்போது உச்சி வெயிலில் உட்கார முடியாமல் தவித்து வந்த மக்கள் அனைவரும் மைதானத்தில் இருந்து வெளியேறத் துவங்கினர். மக்களைச் சமாதானப்படுத்தி அமரவைக்க பா.ஜ.க.,வினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணானது.

09:57:02 on 24 Feb

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

காட்ஃபாதர் படம் நட்டி நாயகனாக நடித்திருக்கும் படம். இந்த படத்தை ஜகன் ராஜசேகர் இயக்கி இருக்கிறார். வில்லனாக லால் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

08:55:02 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘திரெளபதி’. இதில் ரிச்சர்டு நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, கருணாஸ், நிஷாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

08:25:02 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் முத்துவேலு. இவர் மீது காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்றிரவு முத்துவேலு தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இவரைக் கொலை செய்த நாகராஜன் துண்டித்த தலையை காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

07:57:02 on 24 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சீனாவில் மருத்துவப் படிப்பு படித்து வந்த ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த விஸ்வநாத் என்ற மாணவர் கடந்த 15-ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கொரனா அறிகுறி இருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மருத்தவமனையில் போதிய வசதிகள் இல்லை என புகார் தெரிவித்துள்ளார்.

07:27:01 on 24 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மதுரை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்புகளில் நடைபெற்ற சில தற்கொலை சம்பவங்களில் பின்னணியிலும் கந்துவட்டி கொடுமை இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் ஆயுதப்படை போலீசாருக்கு கந்து வட்டி மற்றும் ஏலச்சீட்டு உள்ளிட்டவை மூலம் கடும் நெருக்கடியில் இருந்து வருவதாக அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்தது.

06:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

ரஜினிகாந்தின் 168வது படத்துக்கு ‘அண்ணாத்த’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சிறுத்தை சிவா இயக்க, டி இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கான டைட்டில் மோஷன்பிக்சரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

06:30:38 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மாநாடு படத்தின் தயாரிப்பளார் சுரேஷ் காமாட்சி சிம்பு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடையும்படி ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். "மாநாடு படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் சிறப்பாக உள்ளது. யுவன் ஷங்கர் ராஜா சிறந்த இசையை தந்துள்ளார்” என கூறியுள்ளார்.

05:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்வி குழுமத்தின் நட்சத்திர விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நிறையப் பேர் தன்னை பெண்களுக்கு எதிரானவன் என நினைத்திருப்பதாகவும், அது தவறு எனவும் கூறினார். பெண்களுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் தொடர்ந்து குரல் கொடுத்து, அவர்களுக்காக போராடுவேன் எனவும் அவர் கூறினார்.

05:27:01 on 24 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் சென்னையில் நடத்தவும் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது இசை வெளியீட்டு விழாவை கோவையில் நடத்த ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

04:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

டெல்லியில் சி.ஏ.ஏ.,போராட்டத்தில் இன்று (பிப்.24) வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் கோலக்பூரி தலைமை காவலர் ரத்தன்லால் பலியானார். வன்முறையை கட்டுக்குள் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

04:31:34 on 24 Feb

மேலும் வாசிக்க தினமலர்

டெல்லியில் சி.ஏ.ஏ.,போராட்டத்தில் இன்று (பிப்.24) வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் கோலக்பூரி தலைமை காவலர் ரத்தன்லால் பலியானார். வன்முறையை கட்டுக்குள் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

04:28:05 on 24 Feb

மேலும் வாசிக்க தினமலர்

சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் தோன்றியுள்ளதாகத் தெரிகிறது. சைக்கோ படம் வெற்றியடைந்த நிலையில் துப்பறிவாளன் 2 படத்துக்கு மிஷ்கின் கேட்ட சம்பளம் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

04:27:02 on 24 Feb

மேலும் வாசிக்க தினமணி

புது தில்லியில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். தலைநகர் தில்லியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி அவசரமாக புது தில்லி விரைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

04:18:23 on 24 Feb

மேலும் வாசிக்க தினமணி

புது தில்லியில் இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். தலைநகர் தில்லியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி அவசரமாக புது தில்லி விரைவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

04:13:55 on 24 Feb

மேலும் வாசிக்க தினமணி

திருநெல்வேலி வட்டாரத்திலுள்ள கிராமத்தின் எல்லையோரம் இருக்கும் மரம்தான் அந்த ஊரின் பேருந்து நிறுத்தம். அவ்வழியாக செல்லும் பேருந்து ஒன்று மற்ற கிராமங்களில் நின்று மக்களை ஏற்றிச் சென்றாலும், குறிப்பிட்ட கிராமத்தில் மட்டும் நிறுத்தாமல் செல்கிறார்கள். இதனை எதிர்த்து தனுஷ் போராடுவதுதான் கதை.

03:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,166-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.53.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

03:42:44 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பீகார் மாநிலம் தர்பங்காவில் நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல் படுத்த மாட்டோம். தேசிய மக்கள் தொகை பதிவேடு கடந்த 2010ஆம் வருடம் நடந்த அதே அடிப்படையில் மட்டுமே நடத்தப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

03:27:01 on 24 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சென்னை மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பலர் மீது பெண் ஒருவர் இ.மெயில் புகார் அளித்து வந்தார். பிரியா, பிரியதர்ஷினி போன்ற பெயர்களில் இந்த புகார் மனுக்கள் அனுப்பப்பட்டன. போலீஸ் விசாரணையில் புகார் அளித்தது பெண் அல்ல என்றும், பெண் வேடத்தில் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஆண் என்பது தெரிய வந்தது.

02:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

”உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அவரது மனைவி மற்றும் மகளை மனதார வரவேற்கிறேன். அமெரிக்க அதிபரின் பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. இந்திய, அமெரிக்க உறவு சாதாரண உறவல்ல, ஆழமான நட்புறவு கொண்டது.” என பிரதமர் மோடி பேசினார்.

02:44:09 on 24 Feb

மேலும் வாசிக்க தினகரன்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கோலா என்ற பகுதியில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர், மேற்குவங்கத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளியிடம் ஆதார் அட்டையைக் காண்பிக்கும்படி கேட்டு மிரட்டுகிறார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

02:25:01 on 24 Feb

மேலும் வாசிக்க விகடன்

டிரம்ப் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் சமர்பதி ஆசிரமம் சென்று அங்கு சுற்றிப் பார்த்தனர். குரங்கு பொம்மைகள் சொல்லும் பாடம் குறித்து ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிரதமர் மோடி விளக்கினார். காந்தியடிகளின் ராட்டையை மனைவியோடு சேர்ந்து சுற்றி மகிழ்ந்தார் டிரம்ப்.

02:10:29 on 24 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே டானா பகுதியை சேர்ந்தவர்கள் அந்தோனி பிரகாஷ் - தீபா தம்பதி. இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருந்தான். தீபாவுக்கு, சொரிமுத்து என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இந்நிலையில் சிறுவன் லோகேஷை சொரிமுத்து கடுமையாக தாக்கியதில் சிறுவன் உயிரிழந்துள்ளான்.

01:55:02 on 24 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகர் சந்தானத்தின் காமெடி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவர் காமெடியனாக நடிப்பதை நிறுத்திய பிறகு அவரது இடத்திற்கு வேறு எந்த நடிகராலும் பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் சந்தானத்தின் மகளும் நடிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

01:25:01 on 24 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் பிரியங்கா என்பவரும், கருங்காலிப்பட்டையைச் சேர்ந்த காவலர் சரத்குமாரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சரத்குமார், தனது முன்னாள் காதலியை திடீரென திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த பெண் போலீஸ் பிரியங்கா விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

12:55:01 on 24 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

அகமதாபாத்தில் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு குஜராத் பாரம்பரிய முறைப்படி சங்கொலி முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க ட்ரம்புக்கு குஜராத் பாரம்பரிய கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர். அகமதாபாத் விமானநிலையம் வந்தடைந்த அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி.

12:49:14 on 24 Feb

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்காவுக்கு வெளியே உள்ள நாடுகளுள் அதிபர் ட்ரம்புக்கு இந்தியாவில்தான் அதிக சொத்துகள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ட்ரம்ப்பின் முதல் சொத்து புனேவில் உள்ள 23 அடுக்குமாடி கட்டடமான ’ட்ரம்ப் டவர்’ ஆகும். இதுபோல், கொல்கத்தாவில் உள்ள 36 அடுக்குமாடி கட்டடமான ட்ரம்ப் டவர் அந்நகரின் இதயப் பகுதியில் அமைந்துள்ளது.

12:27:02 on 24 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை தந்துள்ளார். இந்நிலையில் டிரம்பை வரவேற்கும் விதமாக #IndiaWelcomesTrump என்ற ஹேஷ்டேக்கும், எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #GoBackTrump என்ற ஹேஷ்டேக்கும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

12:07:03 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், குழாய் மூலம் சமையல், 'காஸ்' வழங்கும் ஒப்பந்தத்தை எதிர்த்து, 'அதானி' நிறுவனம் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னதாக, இந்த ஒப்பந்தத்தை குஜராத்தைச் சேர்ந்த, 'டோரன்ட் காஸ்' என்ற நிறுவனத்துக்கு பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு கட்டுப்பாடு வாரியம் வழங்கியிருந்தது.

11:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க தினமலர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார். அதிபரை வரவேற்க அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் மோடி தயாராக இருக்கிறார். குஜராத் முதல்வர் மற்றும் ஆளுநரும் அகமதாபாத் விமான நிலையத்தில் டிரம்பை வரவேற்க தயாராக உள்ளனர்.

11:53:32 on 24 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே தங்க விலை வரலாற்றில் புதிய உச்சம் ஆகும். நேற்று ரூ.4000ஐ தாண்டிய கிராமின் விலை இன்று ரூ.28 உயர்ந்து கிராமுக்கு ரூ.4,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11:37:56 on 24 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.32 ஆயிரத்து 800க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே தங்க விலை வரலாற்றில் புதிய உச்சம் ஆகும். நேற்று ரூ.4000ஐ தாண்டிய கிராமின் விலை இன்று ரூ.28 உயர்ந்து கிராமுக்கு ரூ.4,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11:32:40 on 24 Feb

மேலும் வாசிக்க தினகரன்

திரை உலகில் ஜெயலலிதா கொடி கட்டிப்பறந்து கொண்டிருந்த நேரம். அப்போது அவருடைய பேட்டி ஒரு பத்திரிக்கையில் வெளிவந்தது. அதில் அவர், என்னை சிலர் கன்னட நாட்டிலிருந்து வந்தவள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம். அது தவறான செய்தி நான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தமிழ்ப்பெண். தமிழ்தான் என் தாய்மொழி; கன்னடமல்ல" என்று கோரியிருந்தார்.

11:27:01 on 24 Feb

மேலும் வாசிக்க தினமணி

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ரஜினி ஆஜராக வரும் பட்சத்தில் தற்போதைய அவரது கருத்துகளால் சிஏஏ எதிர்ப்பாளர்கள் தனக்கு எதிராகப் போராட்டம் நடத்தவும் வாய்ப்பிருப்பதாக ரஜினி சந்தேகப்படுகிறார். எனவேதான் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்கிறார்.

10:27:02 on 24 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவுபிக் இருவரும் பாத்திமா வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

09:57:01 on 24 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

'அம்மா' என்று அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தார். அப்போது அந்த பகுதி மைசூர் மாகாணத்தில் இருந்தது. அவருடைய பாட்டியின் பெயரான 'கோமளவல்லி' என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது.

09:25:07 on 24 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

'அம்மா' என்று அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பெறும் ஜெயலலிதா, 1948ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி மாண்டியா மாவட்டத்தில் உள்ள மெலுகோடேவில் பிறந்தார். அப்போது அந்த பகுதி மைசூர் மாகாணத்தில் இருந்தது. அவருடைய பாட்டியின் பெயரான 'கோமளவல்லி' என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது.

09:21:24 on 24 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மாம்பழம், எலுமிச்சை பழங்களில் உள்ள வைட்டமின் சி சரும பளபளப்பை தரும். மேலும் எலும்பு, மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க உதவும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். கொழுப்பின் அளவையும் கட்டுப்படுத்தும். இளமையை தக்க வைக்கவும் உதவும். மஞ்சள் நிற உணவுகளுக்கு மனநிலையை மேம்படுத்தும் சக்தி இருக்கிறது.

08:55:01 on 24 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.

08:40:51 on 24 Feb

மேலும் வாசிக்க தினகரன்

திருவள்ளூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

07:55:01 on 24 Feb

மேலும் வாசிக்க தினமணி

பொதுத்துறை வங்கிகள் தங்களது நிதி செயல்திறன் மேம்பட்டுள்ளதாக அறிக்கை அளித்தன. இதனால் வங்கிகள் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பி விட்டன என நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கையை பொசுக்கும் வகையில், வங்கிகளின் மொத்த வாராக் கடன் அதிகரித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

06:55:02 on 24 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வெந்தயத்தில் உள்ள காலக்டோமேனன் என்ற கரையும் நார்ச்சத்தானது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. வெந்தயத்திலுள்ள சயோனின் என்ற வேதிப்பொருள் ஆண் ஹார்மோன் உற்பத்தியில் பெரும் பங்கு வகித்து ஆண்கள் பிரச்சனைகளை போக்குகிறது.

05:55:01 on 24 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சமூக வலைதளத்தில் விஜய்யின் மாஸ்டர் படம் தொடர்பான புகைப்படம் ஓன்று தீயாய் வைரலாகி வருகிறது. இதில் ஒரு கார் பிரிட்ஜ் மேல் நிற்பதுபோல் தெரிகிறது. இந்த புகைப்படம் மாஸ்டர் படத்தின் Climax காட்சி என்று பலரும் சமூக வலைதள பக்கங்களில் பரப்பி வருகின்றனர்.

10:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

உப்பு பற்களில் உள்ள கறைகளை போக்க மிகச்சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகின்றது. தினமும் நாம் பல் துவக்குவதற்கு முன் உப்பு தூளை வைத்து பல் துலக்க வேண்டும். பின்பு பேஸ்ட் கொண்டு துலக்கிக் கொள்ளலாம். இதை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்துவிடும்.

09:55:01 on 23 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 47 ஆயிரத்து, 300 கோடி டாலராக இருந்தது. தற்போது 309 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து, 609 கோடி டாலராக அன்னிய செலாவணி இருப்பு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

08:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவை சேர்ந்தவர் குருநாதன். இவர் சமத்துவ மக்கள் கட்சியில் ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். நடிகை மைனா நந்தினி என்ற பெயரில் போலி முகநூல் கணக்கை உருவாக்கி, அதில் குருநாதனின் செல்ஃபோன் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது.

08:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கொரோனா பாதிப்பால் சீனாவில் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக அதிகரித்துள்ள நிலையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

கொல்லம் மாவட்டத்தின் குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜோஷி மற்றும் அஜீஸ். நண்பர்களான இவர்கள், திருவனந்தபுரம் - தென்மலை நெடுஞ்சாலையை ஒட்டிய காட்டுப்பகுதியில் சென்றபோது, பிளாஸ்டிக் கவரில் ஏதோ ஒரு பொருள் கீழே கிடப்பதை நேற்று மாலை 3 மணியளவில் பார்த்திருக்கிறார்கள்.

07:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க விகடன்

வனவிலங்கு ஆராய்ச்சி நிறுவனம் பதிவிட்டுள்ள பேஸ்புக் பதிவில், ஓர்லாண்டோவிற்கு((Orlando)) வடக்கே 47 மைல் தொலைவில் உள்ள ஓக்காலா வனப்பகுதியில் டிரேசி கவுதென் என்பவர் நடைபயணம் மேற்கொண்டபோது வண்ணமயமான 4 அடி நீள வானவில் பாம்பை கண்டதாக குறிப்பிட்டுள்ளது.

06:55:01 on 23 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பிப்.25ஆம் தேதி ட்ரம்புக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் விருந்தில் கலந்து கொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

06:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் லேசான வன்முறை வெடித்தது. சட்டத்தை எதிர்ப்போர் மற்றும் ஆதரிப்பவர்கள் என இரு பிரிவினராக மோதிக்கொண்டனர். போலீசார் மீதும் கல்வீசப்பட்டது. தொடர்ந்து போலீசார் லேசான தடியடியும், கண்ணீர் புகையும் வீசி கூட்டத்தினரை கலைத்தனர்.

06:21:05 on 23 Feb

மேலும் வாசிக்க தினமலர்

வெளிநாட்டு மதுபான வகைகளை ஆன்லைன் முறையில் வீடு தேடிச் சென்று வழங்கும் திட்டத்தை மத்தியப்பிரதேச அரசு ஏற்படுத்தியுள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கான மத்தியப்பிரதேச அரசின் புதிய கலால் கொள்கையின் கீழ், ஆன்லைனில் மதுபானம் வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

05:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க தினமணி

திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இதில் திரிஷா கலந்துகொள்ளவில்லை. இதனையடுத்து, விளம்பரத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று திரிஷாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

05:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அருண் மிஷ்ராவின் கருத்து இந்தாண்டின் மிக சிறந்த நகைச்சுவை எனவும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சாவந்த் தெரிவித்துள்ளார்.

04:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆயிரம் போட்டிகளில் விளையாடி ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார். 35 வயது ஆகும் ரொனால்டோ இதுவரை 724 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

04:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க தினகரன்

1997ல் நடிகர் விஜய்யின் அப்பா பிரபல தயாரிப்பாளர் கலைஞானம் அவர்களை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்தாராம். 'விஜய்யை ஹீரோவாக வைத்து தான் எடுத்த இரண்டு படங்களும் ஓடவில்லை. இரண்டு வீடுகளை விற்றுவிட்டேன். தற்போது மூன்றாவது முறையாக படம் எடுத்துள்ளேன். அதை விற்கவேண்டும்' என கூறினாராம் எஸ்ஏ சந்திரசேகர்.

03:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

பாரத் புகைவிதி 6 - என்பதன் சுருக்கமே பி.எஸ்.6 ஆகும். வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து இந்தியாவில் பாரத் புகைவிதி 6 அமலாகின்றது. இதனால் பழைய பாரத் புகைவிதி 4ன்படி செயல்படும் பி.எஸ்.4 ரக வாகனங்களை ஏப்ரல்1ஆம் தேதியில் இருந்து விற்கவோ, பதிவு செய்யவோ முடியாது.

03:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானதால், சாலையோரம் கேட்பாரற்று தூங்கும் பிச்சைக்காரர்களை குறிவைத்து கொலை செய்து, அவர்களிடம் இருந்த பணத்தை எடுத்துச்சென்று கஞ்சா வாங்கியதாக, சேலத்தை பதற வைத்த சைக்கோ கொலையாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

02:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக, இங்கு சீன மொழியையும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டையும் வீகர்கள் கற்கிறார்கள் என்று சீனா கூறுகிறது. ஆனால் பிபிசி பார்க்க நேர்ந்த கசிந்த ஓர் ஆவணம், மத நடைமுறைகள் மீதான விரிவான ஒடுக்குமுறை இந்த முகாம்களில் நடைபெறுவதை காண்பித்தன.

02:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காவிரி டெல்டா மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்திருப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

01:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

Society for Applied Microwave Electronics Engineering & Research (SAMEER) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை வருகிறார். இப்பயணத்தில் பிரதமர் மோடியுடன் நடத்தும் பேச்சுவார்த்தையின்போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உட்பட மத சுதந்திரம் தொடர்பான விவகாரங்கள் குறித்து பேச டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.

12:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க தினகரன்

உத்திரபிரதேசத்தில் தங்க சுரங்கம் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்திய புவியியல் ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக, உத்தரபிரதேச மாநிலம் சோன்பகதி, ஹார்தி கிராமங்களில் சுமார் 3,350 டன் தங்கம் இருக்கும் 2 தங்க சுரங்கள் கண்டுபிடிக்கப்படதாக தகவல்கள் வெளியானது.

12:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணி முடிவடையும் வரை, அங்குள்ள ராமர் சிலை தற்காலிகமாக வேறு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும் என, ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அறிவித்துள்ளது.

11:57:02 on 23 Feb

மேலும் வாசிக்க தினமலர்

சமீபத்தில் கேலி கிண்டலால் மிகவும் உடைந்துபோன குவாடனுக்கு ஆதரவாகப் பலரும் பேசிவருகின்றனர். பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல, ஹூக் ஜாக்மேன் ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி உள்ளூர் பிரபலங்கள் வரை பலரும் இதுகுறித்து பேசிவருகின்றனர். #iStandWithQuaden என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் வைரலானது.

11:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க விகடன்

உத்தரபிரதேசத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடைபெறும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியில் மட்டும் இதுதொடர்பான போராட்டங்கள் நடைபெறவில்லை. இதன் பின்னணியில், அங்கு துணை ஆட்சியராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.

10:57:01 on 23 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தனக்கும் தமிழ் நாட்டிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், இனிமேல் தமிழ்நாட்டிற்கு வரபோவதில்லை என்றும் சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். மேலும் அவர், கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகள் தொடங்கி விட்டதாகவும் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

10:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்றார். டெல்லியில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் தஜகிஸ்தான் வீரர் Vohidovவை வீழ்த்திய ரவிகுமார், தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

09:55:01 on 23 Feb

மேலும் வாசிக்க தந்தி டிவி

ஓபிஎஸ்ஸின் சொத்து, பணப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் யார் யார் என்று பட்டியலிட்ட ஐ.டி., அதில் முக்கியமான நபராக அன்புச்செழியனை டிக் செய்திருந்தது. ஏற்கனவே கிடைத்த தகவல்களால் ஓபிஎஸ் தரப்பு இதில் எச்சரிக்கையாக இருந்து டெல்லியில் தட்ட வேண்டிய ஜன்னலைத் தட்டி, திறக்க வேண்டிய கதவைத் திறந்து தற்காலிகமாக தப்பித்துக் கொண்டது.

09:27:01 on 23 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 8 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.74.81 ஆகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.68.32 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

09:05:54 on 23 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. மது அருந்திவிட்டும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.

07:55:02 on 23 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

சைபிரியா பிரதேசத்தில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹார்ன்ட் லார்க் (horned lark) பறவையினுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவீடன் ஆய்வாளர்கள் நிகோலஸ் டஸக்ஸ், லவ் டேலன் ஆகியோர் ஆய்வு செய்தபோது, இந்த விவரம் தெரியவந்தது.

06:55:01 on 23 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

டிஎன்பிஎல் என அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முழுமையான விவரங்கள் அறிய https://www.tnpl.com/uploads/careers/27bda6ec78a84f01684aba9de0230cf9.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

05:55:02 on 23 Feb

மேலும் வாசிக்க தினமணி

நடிகை சமந்தா ஜானு பட வெற்றிக்காக திருப்பதி கோவிலுக்கு படி வழியாக நடந்து சென்றுள்ளார். அவரை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர் அவருடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அதற்கு சமந்தா நடப்பது என்றால் ஒழுங்காக நட என்று கோபமாக கூறியுள்ளார். மேலும் இந்த இடத்தில் போட்டோ எடுக்குற வேலையெல்லாம் இங்கு வேண்டாம் என கடுமையாக கூறியுள்ளார்.

09:57:01 on 22 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

ரியோ டி ஜெனிரோவில் கடந்த 13ஆம் தேதி பிறந்த இசபெலா என்ற பெண் குழந்தை அமைதியாக இருந்ததால், மருத்துவர் அழ வைக்க முயற்சிக்கிறார். அப்போது புருவங்களை சுருக்கி கண்களால் கோபத்தை வெளிகாட்டுவது போல் பார்த்த குழந்தை, தொப்புள் கொடியை துண்டித்தவுடன் வீல் என்று அழுகிறது.

08:55:01 on 22 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் அரசியல் கதைக்களத்தில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு என்ற படத்தில் த்ரிஷா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மறைந்த முதலவர் ஜெயலலிதாவின் இறப்பின் மரமங்களை காட்சி படுத்தும் விதத்தில் அதன் ஸ்னீக் பீக் காட்சி உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

08:25:01 on 22 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழ் யூ-ட்யூப் சேனல்களில் பிரபலமான சேனல் டெம்பிள் மங்கீஸ். இந்த சேனலின் மூலம் பிரபலமடைந்து, சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் விஜய் வரதராஜன். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம்தான் பல்லு படாம பாத்துக்க.

07:55:01 on 22 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை காசிமேட்டில் கஞ்சா விற்றதை தட்டிக்கேட்ட தி.மு.க. பிரமுகர் 4 பேர் கொண்ட கும்பலால் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியான ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

07:25:02 on 22 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னை அடுத்த செம்பரம்பாக்கத்தில் பெட்ரோல் நிலையத்தில் டீசல் நிரப்பும் போது கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் உடலில் தீப்பற்றி எரிந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உத்திரபிரதேச மாநிலம் கேராய் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் சிங் என்பது தெரியவந்துள்ளது.

06:55:02 on 22 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள காக்டெய்ல் திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. டீசர் ஆரம்பமாகும் போதே, ‘டான்-னுன்னா ஓஸி குடி, டானு வாங்கிட்டு வர்ற சரக்க எடுத்து அடி’ என்பதாக யோகிபாபுவுக்கு இண்ட்ரோ தரப்படுகிறது. முருகர் சிலை ஒன்றை மையமாக வைத்து காமெடி ஜானரில் உருவாகியுள்ளது இந்தப் படம்.

06:25:01 on 22 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை சென்னை காவல்துறையால் நேற்று நடத்திக்காட்டப்பட்டது. இதில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

05:57:01 on 22 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிரதமர் நரேந்திர மோடி உலகளவில் சிந்திக்கிறார், அதனை தேசிய அளவில் செயல்படுத்துகிறார் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் ஓர் உன்னத மனிதர் நாட்டின் பிரதமராக இருப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா கூறியுள்ளார்.

05:44:13 on 22 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தேச விரோத போராட்டங்களை கண்டித்து பிப்ரவரி 28-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் என 3 திட்டங்களை பற்றியும் பொய்யான செய்திகளை எதிர்க்கட்சிகள் பரப்புகின்றன என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:35:09 on 22 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மரைக்காயர்களின் வரலாற்றை கூறும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் ‘மரைக்காயர்-அரபிக்கடலின் சிங்கம்’. மோகன்லால், பிரபு உட்பட பல கலைஞர்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். மரைக்காயர்களில், போர்ச்சுக்கீசிய படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நான்காம் குஞ்சலி மரைக்காயராக மோகன்லால் நடிக்கிறார்.

04:27:01 on 22 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அமெரிக்காவில் சாக் மெக்வொர்டெர் என்ற இளைஞர், டிக் டாக் வீடியோவில் தனது திறமையைக் காட்டுவதற்காக, போல் வால்ட் (ஒருவர் கையில் நீண்ட ஊன்று கோலுடன் ஓடி வந்து உயரத்தை தாண்டுவது) என்ற விளையாட்டை விளையாடினார். தாண்டிய போது, அந்தக் கோல் அவரது விதைப்பையில் பட்டு படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

03:57:01 on 22 Feb

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

"இந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. எத்தனைக் கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்?. அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்கக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது" என சிம்பு கூறியுள்ளார்.

03:27:01 on 22 Feb

மேலும் வாசிக்க சினி உலகம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், சங்கராப்பாளையம் கிராம ஊராட்சியில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நடந்தே செல்கின்றனர். இது அடர்ந்த வனப்பகுதி யானை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் உள்ளது. இதனால் அச்சத்தோடு நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

02:27:02 on 22 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

கடலூர் மாவட்டம் வடலூரில் தனியார் பேருந்தின் ஓட்டுனர் இருக்கை அருகே அமர்ந்து பயணிப்பதை வாடிக்கையாக்கிய திருமணமான பெண்ணை காதல் கீதத்தால் மயக்கிய நடத்துனர் ஒருவர், தனது வேலை பறி போனதால் பழகுவதை நிறுத்திய அந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

01:55:01 on 22 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உருது மொழி வளர்ச்சிக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் என்.சி.பி.யு.எல். செயல்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனத்தை தமது துறைக்கு மாற்ற சிறுபான்மை நலத்துறை அமைச்சரான முக்தார் அப்பாஸ் நக்வி, பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார். இதற்கு உருது அறிஞர்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

01:27:01 on 22 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பிரதமர் மோடி தன்னை வரவேற்க 70 லட்சம் பேர் வருவார்கள் என்று தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால் அகமதாபாத் போன்ற நகரில் ஒரே இடத்தில் 70 லட்சம் பேர் கூடுவார்கள் என்று எவராலும் கூற முடியாது என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

12:57:01 on 22 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு அளிக்கும் நிதியை பெற மாட்டோம் எனவும், பொது மக்கள் அளிக்கும் பங்களிப்பில் மட்டுமே இக்கோயில் கட்டப்படும் என ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாஸ் மகராஜ் தெரிவித்துள்ளார்.

12:27:01 on 22 Feb

மேலும் வாசிக்க தினமலர்

கடலுார் குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் ரம்யா. இந்நிலையில் இவர், பள்ளி வகுப்பறைக்குள் சடலமாகக் கிடந்துள்ளார். இது தொடர்பான விசாரணையில், ரம்யாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது அவரை ஒருதலையாகக் காதலித்த ராஜசேகர் என்ற இளைஞர்தான் என்பது தெரியவந்துள்ளது.

11:57:02 on 22 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அதிமுகவின் ஐடி விங்குக்குள் புகைச்சல்களும் கரைச்சல்களும் கிளம்பியிருக்கின்றன. ஏனெனில் ஐடி விங்குக்குள் ஏற்கனவே ஓ.பன்னீர் அணி, எடப்பாடி அணி என இரு அணிகள் இருக்கின்றன. எடப்பாடிக்கு ஆதரவாக களமிறங்கியிருக்கும் ‘டெமோஸ் புராஜக்ட்’ நிறுவனத்தின் பணிகளால் அதிமுகவுக்குள் ஓபிஎஸ் அணியினர் முகம் சுளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

11:27:01 on 22 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகம் மற்றும் புதுவையில் இன்று லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த வரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

10:57:01 on 22 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

”2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரை இல்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை” என ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10:27:01 on 22 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

சீனாவை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பாதிப்பால் நாளுக்கு நாள் மக்கள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் இதுவரை 2 ஆயிரத்து 345 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75,567 ஆக குறைந்தது.

09:55:01 on 22 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற தகவலையடுத்து, ராணுவ வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினருக்கும் நடந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

09:27:02 on 22 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சிவபெருமானுக்கு உரிய விரதங்களில் மகா சிவராத்திரி விரதம் மிகவும் சிறப்பானது. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் மகா சிவராத்திரி விழா நேற்று இரவு கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

09:15:41 on 22 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி, 18 வயது முதல் 64 வயதுக்குட்பட்டவர்கள் ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியோ அல்லது 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியோ அல்லது அதற்கு ஈடான உடல் உழைப்பையோ கொண்டிருக்க வேண்டும்.

08:57:01 on 22 Feb

மேலும் வாசிக்க மாலைமலர்

மேலும் வாசிக்க