View in the JustOut app
X

மதுரை ராம்நாத் பகுதியில் உள்ள ஒரு பொது கழிவறையில் அப்பகுதியைச் சேர்ந்த கருப்பாயி என்ற மூதாட்டி கடந்த 19ஆண்டுகளாக வசித்து வருகிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகின்றன.

05:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மோட்டோரோலா ஒன் ஆக்‌ஷன் ஸ்மார்ட்போன் டெனிம் புளு மற்றும் பியர்ல் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.13,999 எனநிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஆகஸ்ட் 30ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு ஃப்ளிப்கார்ட் தளத்தில் ஆரம்பிக்கும்.

05:25:02 on 24 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

விமான எரிபொருள் வாங்கியதற்கான தொகையை கூட திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. அரசு எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடமிருந்து எரிபொருள் வாங்கியதற்கான தொகையை ஏர் இந்தியா இதுவரை வழங்கவில்லை.

04:55:02 on 24 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சாஸ்டா கவுன்டியில் உள்ள பெல்லா விஸ்டா என்ற நகருக்கு அருகே உள்ள வனத்தில் தீப்பற்றியது. காற்றின் வேகம் அதிகம் இருப்பதால், இரண்டே மணி நேரத்தில் 600 ஏக்கர் வனப்பரப்பை காட்டுத் தீ நாசமாக்கியது. இதனால் 1,100 வீடுகளை விட்டு 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

04:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடந்த 2015ஆம் ஆண்டு சீன அரசு 2 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது. இந்நிலையில் 18 மாதங்களில் சீனாவில் 50 லட்சம் குழந்தைகள் பிறந்திருப்பது அதிகம் என்றாலும், சீன நாடு மனித வளத்தை இழக்காமல் இருக்க ஆண்டிற்கு 2 கோடி குழந்தைகள் பிறப்பை அரசு எதிர்பார்க்கிறது.

03:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

வீராணம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது. இதனால் கடலூர் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். மேலும் வீராணம் ஏரியிலிருந்து தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பிட முடிவு செய்துள்ளனர்.

03:25:02 on 24 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

இலங்கையில் அவசரநிலை முடிவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், இலங்கை அதிபர் சிறிசேனா எமர்ஜென்சியை நீட்டிக்கக் கோரும் உத்தரவை பிறப்பிக்கவில்லை. இதையடுத்து, இலங்கையில் கடந்த 4 மாதமாக இருந்து வந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்துள்ளது என தெரிவித்தனர்.

02:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ ஆகியவை ஆகஸ்ட் 29ஆம் தேதி அதிகாரப்பூரவமாக சீனாவில் அறிமுகமாகவுள்ளது. இதற்கான முன் பதிவுகள் தொடங்கப்பட்ட ஒரு நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. இந்த தகவலை சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

02:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் பயணத்தில் தமிழ்நாட்டிற்கான முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

01:55:02 on 24 Aug

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

தொண்டைக்கட்டு, வறட்டு இருமல் போன்றவற்றை நீக்கும் குணம் கொத்தமல்லிக்கு உண்டு. செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு ஜீரணம் ஆகச் செய்யும். புளித்த ஏப்பம் நெஞ்செரிச்சல் போன்றவை மாறும்.

01:25:01 on 24 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முடநீக்கியல் துறை மருத்துவர்கள், அரிய வகை அறுவை சிகிச்சையின் மூலம், நடக்க முடியாத 6 வயது சிறுவனை நடக்க வைத்துள்ளனர்.

12:55:01 on 24 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

எக்ஸிம் எனப்படும் Export-Import Bank of India வங்கியில் ஜூனியர் / மிடில் லெவல் பிரிவுகளில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12:25:02 on 24 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாம் அனைவரும் உடனடியாக கவனித்து கவலைப்பட வேண்டிய ஒரு விஷயம், உலகில் மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது. அதுதான் PermoFrost. அறிவியல் உலகம் இதனை அச்சத்துடன் உற்று நோக்குகிறது. இப்போதைக்கு ரஷ்யா, சைபீரியா, கனடா போன்ற துருவப்பகுதிகள்தான் இதன் பாதிப்புகளை அதிகமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

11:55:02 on 23 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள, உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. அகடெமிக் லோமோனோசோவ் Akademik Lomonosov என பெயரிடப்பட்டுள்ள அந்த ஆலையானது, விரைவில் தனது நீண்ட தூர கடல் பயணத்தை ரஷ்யாவின் வடக்கு பகுதியிலிருந்து கிழக்கு நோக்கி தொடங்கவுள்ளது.

11:25:02 on 23 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்தியாவில் நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கை குறைந்திருப்பதாக ஒரு புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்புகள், பொருளாதார எதிர்பார்ப்புகள், முதலீடு, தற்போதைய தனிப்பட்ட நிதிநிலை ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில், நுகர்வோர் மத்தியிலான நம்பிக்கை குறைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10:55:01 on 23 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

அமேசான் நிறுவனமானது, தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு, 30 ஆயிரம் சதுரஅடி பரப்பு கொண்ட பிரம்மாண்ட கட்டிடத்தை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது. இந்த கட்டிடம் உலகிலேயே மிகப்பெரிய பிரம்மாண்ட அமேசான் நிறுவன கட்டிடமாகும்.

10:25:01 on 23 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ரயில்வே துறை ஐ.ஆர்.சி.டி.சி.யின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய ஆயத்தமாகியிருக்கிறது. புதிய பங்கு வெளியீட்டிற்கு அனுமதி கோரி இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் மத்திய அரசு விண்ணப்பித்துள்ளது.

09:55:02 on 23 Aug

மேலும் வாசிக்க தினகரன்

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது SUV காரான Kia Seltos காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அந்த காரின் விலையானது ரூ. 9.69 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரை நிர்ணைக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் முதல் வாரம் வரையில் 23,000 முன்பதிவுகள் பெற்ற கியா செல்டோஸ் கார், ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்த்பூர் தயாரிப்பு ஆலையில் தயாரிக்கப்படுகிறது.

09:25:01 on 23 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

பிரியா ஆனந்த் கொசுவலை போன்ற உடை அணிந்து, ஓவர் கவர்ச்சி காட்டி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாக படவாய்ப்பைப் பெற, நடிகைகள் கவர்ச்சி என்கிற ஆயுதத்தை கையில் எடுப்பது போல் இவரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

09:07:45 on 23 Aug

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

பொருளாதார நிலை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக பின்வாங்கியுள்ளார் ராஜிவ் குமார்.

08:55:02 on 23 Aug

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி ஹெட்டிங்க்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், 27.5 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 67 ரன்களில் ஆல் அவுட் ஆகி சுருண்டது. இதற்கு முன்னர் 1948ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 52 ரன்களில் இங்கிலாந்து அணி ஆட்டமிழந்துள்ளது

08:54:07 on 23 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தங்க நகைக் கடைகளில் சீட்டுக் கட்டி நகை வாங்கும் போது, நகைக் கடைகள் தரப்பில் கொடுக்கப்படும் ரொக்கம் என்பது உண்மையில் ஒரு ரொக்கமே அல்ல. அது ஒரு கண்கட்டு வித்தை என்பதுதான். அனைத்து தங்க நகைக் கடைகளிலும் இப்படி செய்வார்களா என்று தெரியாது. உண்மையில் சில அல்ல பல நகைக் கடைகளில் நடக்கும் ஒரு மாயாஜால வித்தை.

08:39:01 on 23 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தங்க நகைக் கடைகளில் சீட்டுக் கட்டி நகை வாங்கும் போது, நகைக் கடைகள் தரப்பில் கொடுக்கப்படும் ரொக்கம் என்பது உண்மையில் ஒரு ரொக்கமே அல்ல. அது ஒரு கண்கட்டு வித்தை என்பதுதான். அனைத்து தங்க நகைக் கடைகளிலும் இப்படி செய்வார்களா என்று தெரியாது. உண்மையில் சில அல்ல பல நகைக் கடைகளில் நடக்கும் ஒரு மாயாஜால வித்தை.

08:36:01 on 23 Aug

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

அமெரிக்காவில் இயந்திர கோளாறால் கடலுக்குள் விழுந்த விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தான் கடலுக்குள் விழுந்ததையும் பொருட்படுத்தாமல் அனைத்து காட்சிகளையும் செல்ஃபி வீடியோவாக எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

08:29:33 on 23 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை நம்பி, திண்டுக்கல்லுகு வந்த அந்த சிறுமி, பஸ் ஸ்டாண்டில் தனியாக நிற்பதை பார்த்த சிலர், அவரை அழகி என நினைத்து தவறாக அணுகியுள்ளனர்.

08:18:01 on 23 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை நம்பி, திண்டுக்கல்லுகு வந்த அந்த சிறுமி, பஸ் ஸ்டாண்டில் தனியாக நிற்பதை பார்த்த சிலர், அவரை அழகி என நினைத்து தவறாக அணுகியுள்ளனர்.

08:15:01 on 23 Aug

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்திற்குள் தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை அதிகாரிகள் விடுத்த எச்சரிக்கையடுத்து இந்திய - இலங்கை கடல் எல்லைப் பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஸ்கோடி, மன்னார் வளைகுடா, பாக் நீரிணை, குருசடைத்தீவு உள்ளிட்ட பகுதியில் தமிழக கடலோர குழும காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

07:55:01 on 23 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மதுரை புதூரில், ரியல் எஸ்டேட் அதிபர் ராஜாவை கடந்த 21-ம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவத்தின் சிசிடிவி பதிவுகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

07:35:01 on 23 Aug

மேலும் வாசிக்க விகடன்

மத்திய அமைச்சர் கிரண்ரிஜிஜூ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒரு நபரில் ஜீன்ஸ் பேண்டில் தேனிக்கள் கூடு கட்டியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் இது எப்படி இங்கு கூடுகட்டும் என்று குழம்பி வருகின்றனர்.

07:15:01 on 23 Aug

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம் குமார் என்னும் விவசாயி, பிரதான் மந்திரி கவுசல் விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், பால் பண்ணை குறித்து பயின்று அதற்கானச் சான்றிதழும் பெற்றுள்ளார். தொடர்ந்து, அருகில் உள்ள வங்கியில் தனியே பால் பண்ணை தொடங்குவதற்கு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

06:57:01 on 23 Aug

மேலும் வாசிக்க தினமணி

சிறு வயது முதலே சினிமாவில் நுழைந்து வெற்றிநடைபோடும் நடிகைகளில் ஒருவர் மீனா. இவரது மகள் நைனிகாவும் விஜய்யின் தெறி படத்தில் நடித்து சினிமாவில் நுழைந்துவிட்டார். 42 வயதாகும் மீனா, தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் செம ஹாட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

06:42:18 on 23 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

சிறு வயது முதலே சினிமாவில் நுழைந்து வெற்றிநடைபோடும் நடிகைகளில் ஒருவர் மீனா. இவரது மகள் நைனிகாவும் விஜய்யின் தெறி படத்தில் நடித்து சினிமாவில் நுழைந்துவிட்டார். 42 வயதாகும் மீனா, தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் செம ஹாட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

06:39:22 on 23 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

”உலக அளவில் பொருளாதாரம் மந்தமாகவே உள்ளது. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாகவே உள்ளது. உலகில் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது. உலக பொருளாதார வளர்ச்சி 3.2 சதவீத அளவிலேயே உள்ளது.” என மத்திய நிதி அமைச்சர் நிரமலா சீதாராமன் கூறியுள்ளார்.

06:17:54 on 23 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

பிக்பாஸ் வீட்டில் சென்றது முதல் கேப்டன் பதவிக்கு போட்டியிட்டு வருகிறார் சேரன். ஏனெனில், கேப்டன் ஆகிவிட்டால் அவரை யாரும் எவிக்‌ஷனுக்கு நாமினேஷன் செய்ய முடியாது. ஆனால், ஒவ்வொரு முறையும் வேறு ஒருவரே தெர்ந்தெடுக்கப்பட்டே வருவதால் அவர் தொடர்ந்து ஏமாற்றம் அடைந்து வந்தார்.

06:15:02 on 23 Aug

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

தற்போது ட்விட்டரில் அஜித்தின் விஸ்வாசம் சாதனை படைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை ட்விட்டரில் அதிக ஹேஷ்டேக் பயன்படுத்திய பெயர்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல் இடத்தில் விஸ்வாசம் உள்ளது. இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

06:01:57 on 23 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் தற்போது அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விஷாலுடன் இருந்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விஷால் தரப்பும், அனிஷா தரப்பும் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை கொடுக்கவில்லை.

06:00:05 on 23 Aug

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

பிரதமர் மோடியின் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை பூதாகரமாக்குவதை வாடிக்கையாக்குவது தவறு என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தெரிவித்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பாகியுள்ளது.

05:35:01 on 23 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து திருவாரூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:33:04 on 23 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து, நாகூரில் மாமனார் வீட்டில் தங்கியிருந்த சையது அபுதாகீர் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. நாகை காவல் நிலையத்தில் 2 மணி நேரமாக விசாரணை நீடிக்கிறது .ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் மணல்வாடி பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

05:20:58 on 23 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 26ஆம் தேதி வரை ப. சிதம்பரத்திடம் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

05:18:07 on 23 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விழுப்புரம் மாவட்டம் சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. இவருக்கு வருகிற செப்.1ஆம் தேதி குடும்பத்தினரால் திருமணம் நிச்சயமிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜான்சிராணி இன்று காலையில் செல்போனில் பேசிக்கொண்டே ரயில் பாதையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது விரைவு ரயில் அவர் மீது மோதியது.

05:16:01 on 23 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காக்கி படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இந்துஜா ஒப்பந்தமாகியுள்ளார். மேயாதமான் திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இந்துஜா தற்போது விஜய் நடிக்கும் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஈஸ்வரி ராவ், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிசம்பரில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

05:00:12 on 23 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள ஷமிகா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நமது பொருளாதாரத்தில் தற்போது தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து தேசிய அளவில் வளர்ச்சி திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

04:39:02 on 23 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள ஷமிகா ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நமது பொருளாதாரத்தில் தற்போது தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அனைத்து துறைகளுக்கும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயித்து தேசிய அளவில் வளர்ச்சி திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

04:36:02 on 23 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

‘அஸ்வின், ரோகித் போன்ற அனுபவ வீரர்கள் ஆடும் லெவன்சில் இல்லாமல் இருப்பது வருத்தமான ஒன்றுதான். இந்த பிட்சில் அஸ்வினைவிட ஜடேஜா மிகவும் சிறப்பாக பந்து வீசுவார் என்றுதான் அவரை அணி தேர்வு செய்திருக்கிறது.” என இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.

04:18:01 on 23 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

‘அஸ்வின், ரோகித் போன்ற அனுபவ வீரர்கள் ஆடும் லெவன்சில் இல்லாமல் இருப்பது வருத்தமான ஒன்றுதான். இந்த பிட்சில் அஸ்வினைவிட ஜடேஜா மிகவும் சிறப்பாக பந்து வீசுவார் என்றுதான் அவரை அணி தேர்வு செய்திருக்கிறது.” என இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.

04:15:01 on 23 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

ஒருதலைக் காதலில் தோல்வியடைந்தவர்கள் முதலில் தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நண்பர்களுடனும், புதிதான செல்பாடுகளிலும் நேரத்தைச் செலவிட வேண்டும். அடுத்தகட்ட வாழ்க்கை என்னவென்பதை பார்க்க வேண்டும்.

04:00:18 on 23 Aug

மேலும் வாசிக்க விகடன்

சிறார்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு கொடுக்க வேண்டும் என் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் மதிய உணவு திட்டம். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப் பள்ளி ஒன்றில், சிறுவர், சிறுமிகளுக்கு தினமும் தலா ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக் கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ள செய்தி ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

03:35:02 on 23 Aug

மேலும் வாசிக்க தினமணி

பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் தகவல் படி இந்த ஆண்டு 74,155 காட்டுத்தீ சம்பவங்கள் நடந்து உள்ளதாக கூறி உள்ளது. ஆனால் ஆன்லைனில் பிரபலங்கள் பயன்படுத்தும் நிறைய படங்கள் பழையவை அல்லது தொடர்பில்லாதவையாக இருக்கின்றன.

03:00:15 on 23 Aug

மேலும் வாசிக்க தினத்தந்தி

"கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் உள்ளது. அரசு ஏதாவது செய்தாக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்." என நிடி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.

02:42:02 on 23 Aug

மேலும் வாசிக்க தினமலர்

"கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நிதித்துறையும் நெருக்கடியில் உள்ளது. அரசு ஏதாவது செய்தாக வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார வளர்ச்சியில் நாடு எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலையை தடுத்து நிறுத்த வேண்டும்." என நிடி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது.

02:38:50 on 23 Aug

மேலும் வாசிக்க தினமலர்

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் ஏதும் வெளியிடவில்லை என்று தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

02:18:02 on 23 Aug

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்திற்குள் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியானது. இந்நிலையில் பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் ஏதும் வெளியிடவில்லை என்று தமிழக டிஜிபி திரிபாதி தெரிவித்துள்ளார்.

02:15:01 on 23 Aug

மேலும் வாசிக்க தினகரன்

சுத்தமான தேங்காய் எண்ணெயுடன், வெட்டி வேர் சேர்த்து ஊறவைத்து தலைமுடிக்கு தேய்த்துவர வேண்டும். தலைமுடியின் வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது குறைந்து கருமையாக முடி வளரும். கண்களும் குளிர்ச்சியடையும்.

01:57:01 on 23 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறைக்கு எதிராக தொடர்ந்த முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை வரும் 26ம் தேதி வரை கைது செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

01:34:24 on 23 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவம் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடியதுபோல் இந்தியா போராடியதில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

01:30:50 on 23 Aug

மேலும் வாசிக்க ETV Bharat

ப.சிதம்பரம் முன்ஜாமீன் தொடர்பான வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் நீதிபதிகள் பானுமதி, போபன்னா அமர்வு ப. சிதம்பரம் ஜாமீன் மனுவை விசாரித்தனர்.

01:05:31 on 23 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஃப்ளெக்ஸி கடன் வசதியை நீங்கள் எளிமையாக பெறலாம். கடன் தொகைக்கு இணையான சொத்து பத்திரங்கள் உள்ளிட்டவற்றை அளிக்க தேவையில்லை. கடன் பெறுவதில் எந்த சிக்கலான தகுதி முறைகள் எதுவும் இருக்காது.

12:57:16 on 23 Aug

மேலும் வாசிக்க தினமணி

மேற்கு வங்க மாநிலத்தில் மூன்று குழந்தைகள் கார் டிக்கியில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. புகைப்படத்தில் இருக்கும் குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக தகவல் பகிரப்படுகிறது.

12:46:31 on 23 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

தீவிரவாதிகளுக்கான நிதியை தடுக்காததால் பாகிஸ்தானை சர்வதேச நிதி கண்காணிப்பு அமைப்பான FATP கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை, தீவிரவாதத்திற்கான நிதியுதவி உள்ளிட்ட பிரச்சனைகளை களைய FATP அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

12:45:08 on 23 Aug

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மக்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர். பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

12:12:56 on 23 Aug

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கோவையில் ஊடுருவிய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை கோவை போலீஸ் வெளியிட்டது. முன்னதாக இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் உளவுத்துறை போலீசாருக்கு அலர்ட் கொடுத்துள்ளது.

11:59:47 on 23 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

பாண்டியராஜன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ” நம்ம வீட்டுப் பிள்ளை” படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்த படத்திலிருந்து 'எங்க அண்ணன்' என்னும் பாடல் முதல் சிங்கிளாக வெளியாகியுள்ளது. அண்ணன் தங்கைக்கு இடையான பாசப்பிணைப்பு, இமானின் இசையில் உணர்ச்சி ததும்பிய வரிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

11:42:42 on 23 Aug

மேலும் வாசிக்க தினமணி

ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பகுதியில் அமைந்துள்ள உலக பணக்கார கடவுள்களில் ஒருவரான திருப்பதி ஏழுமலையான் ஆலயத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் வந்து செல்கின்றனர். தமிழக மக்களின் சிரமத்தை குறைக்க, சென்னையில் விசாலமான ஏழுமலையான் கோயில் ஒன்றை கட்டுவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

11:27:18 on 23 Aug

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

அமேசான் காடுகளில் தீப்பற்றும் சம்பவம் அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி என்றும், வரும் ஜி7 மாநாட்டில் இது முதல் முக்கிய பிரச்சனையாக பேசப்பட வேண்டும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

11:07:54 on 23 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசு சரிந்து ரூ.72.03 ஆக உள்ளது. அந்நியசெலாவணி சந்தையில் முதலீடுகள் வெளியேறியதே இந்திய ரூபாயின் மதிப்பு சரிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

11:06:26 on 23 Aug

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10:18:01 on 23 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10:15:01 on 23 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பிரதமர் மோடியின் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே கடல்சார் விழிப்புணர்வு மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவற்றின் இடையில் திறன் மேம்பாடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

09:57:01 on 23 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை இதுவரை இல்லாத சாதனையாக 1½ கோடி பேர் பார்த்துள்ளதாக டிஸ்கவரி தெற்கு ஆசிய நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறியுள்ளார்.

09:39:02 on 23 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை இதுவரை இல்லாத சாதனையாக 1½ கோடி பேர் பார்த்துள்ளதாக டிஸ்கவரி தெற்கு ஆசிய நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறியுள்ளார்.

09:36:01 on 23 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.930 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 88.657 டி.எம்.சி.யாகவும், அணையில் இருந்து 10,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

09:18:02 on 23 Aug

மேலும் வாசிக்க தின மலர்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.930 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 88.657 டி.எம்.சி.யாகவும், அணையில் இருந்து 10,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

09:15:02 on 23 Aug

மேலும் வாசிக்க தின மலர்

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து கோவையில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தமிழகத்திலும் ஊடுவியிருப்பதாக தகவல்கள் வெளியானது.

09:05:31 on 23 Aug

மேலும் வாசிக்க தினகரன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஒரு ஆண் குரங்கு மனிதர்களுடன் குழந்தை போல் பழகுகிறது. அங்கிருப்பவர்கள் மடியில் படுத்து உறங்கிக்கொண்டு பாசத்திற்கு ஏங்கும் மனிதர்களைப் போல் உள்ளது. இதனை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

08:39:01 on 23 Aug

மேலும் வாசிக்க ETV Bharat

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் ஒரு ஆண் குரங்கு மனிதர்களுடன் குழந்தை போல் பழகுகிறது. அங்கிருப்பவர்கள் மடியில் படுத்து உறங்கிக்கொண்டு பாசத்திற்கு ஏங்கும் மனிதர்களைப் போல் உள்ளது. இதனை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

08:36:02 on 23 Aug

மேலும் வாசிக்க ETV Bharat

'அசுரன்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் தனுஷ் வயதான தோற்றத்தில் காட்சியளித்த நிலையில் இந்த செகண்ட்லுக்கில் சின்னப்பையன் போல் வெகு இளமையாக தோன்றியுள்ளார். இதனால் அவர் இந்த படத்தில் அப்பா-மகன் என்ற இரட்டை வேடத்தில் நடித்திருக்க வாய்ப்பு உள்ளது.

08:15:02 on 23 Aug

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பாக சிவில் அமைப்புக்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்துரையாடி வருவதாகவும், இதில் சாதகமான தீர்மானம் எட்டப்படும்போது, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் தயாராக உள்ளதாகவும் ஹிஸ்புல்லா கூறினார்.

07:55:02 on 23 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை ஈரான் காட்சிப்படுத்தியுள்ளது. பாவர் - 373 எனப்பெயரிடப்பட்டுள்ள அந்த ஆயுதத்தை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஹாசன் ருஹானி ((Hassan Rouhani))உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

07:35:01 on 23 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காலை உணவிற்கு பிறகு காபி குடிக்கலாம் ஆனால் காபியே காலை உணவாக இருப்பது ஆபத்தானதாகும். உங்கள் உடல் காபிக்குள் காணப்படும் காஃபினுக்கு பதிலளிக்கும் வகையில் இன்சுலினை வெளியிடுகிறது. இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும்.

07:15:02 on 23 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

அமேசான் காடுகளில் ஏற்பட்ட தீ புகை தொடர்பான செயற்கை கோள் படத்தை நாசா வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக லியானார்டோ டி காப்பிரியோ, 'பூமியில் 20% ஆக்ஸிஜன் கொடுக்கும் அமேசான் காட்டில் தீ பற்றி எரிந்து வருகிறது. பூமியின் நுரையீரலாக விளங்கும் இந்தக் காட்டு தீயை ஏன் பத்திரிகைகள் கண்டு கொள்ளவில்லை?' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

06:55:01 on 23 Aug

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கடந்த சில தினங்களாக குற்றாலம் அருவிகளில் மிதமான தண்ணீர் வந்துக் கொண்டிருந்ததால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்த மழையால், திடீரென மெயின் அருவி, ஐந்தருவி, பழைய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.

06:25:01 on 23 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நியூயார்க் நகரை சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள ஏரி ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் மீன் ஒன்று சிக்கியது. அந்த மீனை எடுத்து பார்த்தபோது அதற்கு இரண்டு வாய் இருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், அந்த மீனின் புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

05:55:01 on 23 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

திருப்பூரில் ஆபாச செயலி மூலமாக ஓரின சேர்க்கைக்கு வரவழைத்து வழிபறியில் ஈடுபடும் இளைஞர் கும்பலை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கிரிண்டர் ஆப் மூலமாக அறிமுகமாகும் நபர்களை நம்பி யாரும் எங்கேயும் செல்ல வேண்டாம் என திருப்பூர் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

05:25:01 on 23 Aug

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தாலே பெரிய அளவில் பாப்புலர் ஆகிவிடுகின்றனர். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு தற்போது பல படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் யாஷிகா ஆனந்த். அவர் நடித்துள்ள ஸாம்பி படம் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் தற்போது அவர், வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார்.

04:55:01 on 23 Aug

மேலும் வாசிக்க சினி உலகம்

ஹரியானாவில் கர்னல் மாவட்டத்தில் திருமணமான பெண் ஒருவர், 16 வயது சிறுவனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால், ஊர் பஞ்சாயத்தில் மக்கள் கூடி, அவர்கள் இருவரையும் கொலை செய்யவும் துணிந்தனர். ஆனால், அதன் பின், இந்த பெண்ணுக்கும், அந்த மாணவருக்கும் செருப்பால் மாலை அணிவித்து ஊரார் பார்க்கும்படி ஊர்வலம் செல்லவைத்துள்ளனர்.

04:25:02 on 23 Aug

மேலும் வாசிக்க Behind Woods

உடலில் உள்ள இறந்த செல்களை நீக்குவதில் இந்துப்பு பயன்படுகிறது. இதில் உள்ள கனிமங்கள் சருமத்தை இதமாக உணரவைக்கிறது. உடலில் உள்ள நீர்த்தன்மையை பாதுகாக்கிறது. தலைமுடியை பகுதிகள் பகுதிகளாக பிரித்து அதில் கொஞ்சம் உப்பை தூவுங்கள். பின்னர் ஈரமான விரல்களால் மெல்ல மசாஜ் செய்யுங்கள். பொடுகு போய்விடும்.

03:55:01 on 23 Aug

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கர்நாடக தலைநகர் பெங்களூரிலுள்ள ஹனுமந்த் நகரை சேர்ந்தவர் ஜோதிடர் வெங்கட் கிருஷ்ணாச்சார்யா இளம்பெண் ஒருவரிடம், "நானும் நீயும் போன ஜென்மத்துல கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கோம். அப்போ நான் உனக்கு செஞ்ச பாவத்தாலதான், இந்த ஜென்மத்துல இப்படி பிரிஞ்சு கஷ்டப்படுறோம்" என்று அந்த பெண்ணை தனது வலையில் வீழ்த்தியுள்ளார்.

03:25:01 on 23 Aug

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ரெட்மி நோட் 8 Pro பற்றிய ஒரு புதிய டீஸர் வெளியாகியுள்ளது. அந்த டீஸர் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் 25x ஜூம் திறன் கொண்டுள்ளது என்பதை குறிக்கிறது. டீஸரில் ஒரு கிளியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது, மேலும் புகைப்படத்தை 25 முறை பெரிதாக்கும்போது கூட ஸ்மார்ட்போனில் ‘ஹேர் லெவல்' தெளிவை உருவாக்க முடியும் என குறிப்பிடுகிறது.

02:55:01 on 23 Aug

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நியூஜெர்ஸியைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கும், 29 வயதான தைஜா ரஸ்ஸெலு என்பவருக்கும் இடையே உறவு இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த துணையை தைஜா ரஸ்ஸெல் உடலுறவுக்கு அழைத்துள்ளார். ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததால் உடலுறவு கொள்வதற்கு ரஸ்ஸெல்லின் துணை மறுத்துவிட்டார்.

02:25:02 on 23 Aug

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

கன்னியாகுமரி, ராஜாக்கமங்கலம் அருகே பாசனகுளம் தூர் வார பொதுமக்கள் அலுவலர்களுக்கு மனு கொடுத்து வந்த நிலையில், குளம் தூர் வாரி, கால்வாய் சீரமைத்ததாகக் கூறி அலுவலர்கள் எட்டரை லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

01:55:02 on 23 Aug

மேலும் வாசிக்க ETV Bharat

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன் பிளஸ் தனது அடுத்த தயாரிப்பாக டிவியை அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது. இதுவரை ஒன் பிளஸ் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆக்சஸரீஸ் போன்றவை சந்தைகளில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இந்த ஒன் பிளஸ் டிவிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

01:25:01 on 23 Aug

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்பி ஒருவரின் குழந்தைக்கு சபாநாயகர் பாட்டிலில் பால் ஊட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகள் மீது மிகுந்த பிரியம் கொண்ட மலார்ட், கடந்த 2017ஆம் ஆண்டு எம்பி வில்லோவ் ஜீன் ப்ரைம்மின் குழந்தையை இதே போன்று நாடாளுமன்றத்தில் கவனித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

12:55:02 on 23 Aug

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கூகுள் மற்றும் மொசில்லா நிறுவனம் கஜகஸ்தான் அரசுக்கு எதிராக ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, பயனர்களின் இணைய பயன்பாட்டை இடைமறிக்கும் கஜகஸ்தான் அரசின் செயல்பாட்டை அந்த நிறுவனம் தடை செய்துள்ளது.

12:25:02 on 23 Aug

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

11:55:01 on 22 Aug

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆசிரியர் தகுதி 2ம் தாள் தேர்வை 3 லட்சத்து 79 ஆயிரத்து 733 பேர் எழுதிய நிலையில் சுமார் 300க்கும் அதிகமான ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் தாள் தேர்வை போன்று இந்த தேர்விலும் 1 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 99 சதவீதத்தினர் தோல்வி அடைந்துள்ளது ஆசிரியர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

11:25:01 on 22 Aug

மேலும் வாசிக்க தினத் தந்தி

'உங்களுடைய நல்ல தோழியைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். அந்த உறவில் வருகிற சின்னச் சின்ன செல்லச் சண்டைகள், அதைச் சரி செய்ய நீங்கள் செய்கிற சமாதானங்கள் எல்லாம் வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள்...' என்று தன் தோழியும் காதல் மனைவியுமான கீர்த்திக்கு தன்னுடைய ட்விட்டரில் வாழ்த்துச் சொல்லியிருந்தார் சாந்தனு.

10:55:01 on 22 Aug

மேலும் வாசிக்க விகடன்

நோக்கியா 7.2 மாடலில் வட்ட வடிவ கேமரா மாட்யூலில் மொத்தம் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் காணப்படுகிறது. இதில் 48 எம்.பி. பிரைமரி சென்சார், வைடு ஆங்கில் சென்சார் மற்றும் டெப்த் சென்சிங் யூனிட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

10:25:02 on 22 Aug

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 'புற்றுநோயை காரணம் காட்டி விவகாரத்து கோர முடியாது. தாம்பத்திய உறவு வைத்துக் கொண்டால் புற்றுநோய் பரவாது. புற்று நோயை காரணம் கூறி விவகாரத்து அளிக்கப்பட்டால், அந்த உத்தரவை பின்பற்றி பலரும் விவகாரத்து கோர நேரிடும்' என வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

09:55:01 on 22 Aug

மேலும் வாசிக்க தினகரன்

'சந்திரயான் 2 திட்டத்தை தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இஸ்ரோவில் ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. திறமையானர்களுக்கு வாய்ப்பும், முன்னுரிமையும் உள்ளது' என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

09:25:02 on 22 Aug

மேலும் வாசிக்க தின மலர்

மேலும் வாசிக்க