View in the JustOut app
X

தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் திருமணம் தொடர்பான ஒரு புகைப்படம்கூட வெளியிடாத காரணத்தால், தீபிகா – ரன்வீர் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதனைக் கவனித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபிகா – ரன்வீர் திருமணத்தைக் கலாய்த்துள்ளார்.

04:10:01 on 16 Nov

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

செய்தியாளர் ஜமால் கசோக்கி கொலையில் தொடர்புடைய 5 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. அதேநேரத்தில், ஜமால் கசோக்கி கொலையில் பட்டத்து இளவரசர் முகமதுவுக்கு தொடர்பில்லை என்றும் அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.

03:56:02 on 16 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஷ்மீர் பாகிஸ்தானுக்கு வேண்டாம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிடி கூறியதை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளது சர்ச்சையாகியுள்ளது.

03:40:01 on 16 Nov

மேலும் வாசிக்க காமதேனு

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ‘வெளிநாட்டிலிருந்து அதிகப் பணம் அனுப்பப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இந்த ஆண்டும் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் சரிபாதியைத் தென்னிந்திய மாநிலங்கள்தான் பெறுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:25:01 on 16 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், டாடா மோட்டார்ஸின் 2 பிரிமியம் கார்கள் பலரது கவனத்தை ஈர்த்தன. ஒன்று ஹேரியர் எஸ்யூவி என்றால், மற்றொன்று 45X ஹேட்ச்பேக். இதில் ஹேரியர் குறித்து டாடாவே பல தகவல்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தாலும், 45X விஷயத்தில் அந்த நிறுவனம் அமைதியாகவே இருக்கிறது.

03:10:01 on 16 Nov

மேலும் வாசிக்க விகடன்

அகில இந்திய வானொலி நிலையங்களில் பணிபுரியும் அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர்கள் சங்கத்திலிருந்து மத்திய மந்திரி மேனகா காந்திக்கு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தில் அகில இந்திய வானொலி நிலையங்களில் பணிபுரியும் அறிவிப்பாளர் மற்றும் தொகுப்பாளர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

02:55:01 on 16 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களின் துவக்க விலை முறையே ரூ.2.50 லட்சம் மற்றும் ரூ.2.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

02:40:01 on 16 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் 'மோடிஃபோபியா'வால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். மேலும் ராகுலிடம் பேசுவதற்கென்று எதுவும் இல்லை எனவும் விமர்சித்துள்ளார்.

02:25:01 on 16 Nov

மேலும் வாசிக்க தினமணி

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படப்பிரச்சனை இன்னும் தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சிம்பு நடித்துவரும் வந்தா ராஜாவாதான் வருவேன் படப்பிடிப்பை நிறுத்தும் அளவுக்கு பிரச்சனை முற்றியுள்ளது. சிம்புக்கு ஆதரவாக சிலரும் எதிராக பலரும் சங்கத்துக்குள் வடம்பிடிக்கிறார்கள்.

02:10:01 on 16 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கிருஷ்ணராஜசாகர் அணை அருகே ஒரு அருங்காட்சியகம் கட்டவும், அருங்காட்சியகத்தின் மேல்தளத்தின் மீது 360அடி உயரங்கொண்ட இரண்டு கண்ணாடிக் கோபுரம் அமைக்கவும் கர்நாடக அரசு தீர்மானித்துள்ளது. அருங்காட்சியகம், கண்ணாடிக் கோபுரம் ஆகியவற்றின் இடையே 125அடி உயரத்தில் காவிரித் தாய் சிலை அமைக்கவும் தீர்மானித்துள்ளது.

01:56:01 on 16 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கொழுப்பைக் குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன.

01:40:01 on 16 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நடப்பாண்டில் இந்தியாவில் தொழில் நுட்பச் செலவுகள் 6.7% அதிகரிக்கும் என்று கார்ட்னர் ஆய்வறிக்கை கூறியுள்ளது. மேலும் அதில், டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி பொதுத் துறை மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் இத்துறைக்கான செலவுகள் 89.2 பில்லியனாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:26:01 on 16 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம் இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.

01:10:01 on 16 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பிரபல கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி, பிரபல இயக்குநர் ரவிஸ்ரீவத்சா மீது மீ டூவில் பாலியல் புகார் கூறினார். இந்த விவகாரம் கன்னட இயக்குநர்கள் சங்கம் வரை சென்று, இரு தரப்பினரையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

12:56:01 on 16 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

'சுல்தான் ஆஃப் காயின்ஸ்' என்றழைக்கப்பட்ட இரான் நாணய வர்த்தகர் ஒருவர் 2000 கிலோ தங்க நாணயங்கள் பதுக்கி வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டுள்ளார். அந்த வணிகருக்கும், மற்றொரு நாணய வர்த்தகருக்கும் 'உலகில் ஊழலை வேகமாக பரவச் செய்தனர்' என்ற குற்றச்சாட்டின் பேரில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

12:40:01 on 16 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் இத்தாலியில் இயற்கை எழில் சூழ்ந்த கோமோ ஏரி மாளிகையில் கொங்கனி முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

12:25:02 on 16 Nov

மேலும் வாசிக்க ஏசியாநெட்

டெல்லியின் வசந்த் கஞ்சில் ஒரு வீட்டில் ஆடை வடிவமைப்பாளரும் அவரின் உதவியாளரும் கொலை செய்யப்பட்டது தொடர்பாக மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர் வீட்டில் கொள்ளையடிக்க சென்றபோது இருவரையும் கொலை செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

12:10:02 on 16 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வேதாரண்யம்-நாகை இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் கஜா புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவித்துள்ளார்.

12:00:45 on 16 Nov

மேலும் வாசிக்க தினகரன்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூரை சேர்ந்தவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். அதே கம்பெனியில் இந்தோனேசியாவை சேர்ந்தவர் பணியாற்றுகிறார். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து, தற்போது பள்ளத்தூரில் உள்ள மணமகன் இல்லத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

11:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

பிரான்ஸ் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட ராணியான மேரி ஆன்டொவ்னெட்டின் முத்து மாலை 36 மில்லியன் டாலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. உலகளவில் இதற்கு முன்பாக ஒரு முத்துமாலை இந்த அளவு தொகைக்கு எடுக்கப்பட்டதில்லை.

11:40:02 on 15 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தெலுங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததைத்தொடர்ந்து, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 107 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இந்நிலையில், மேலும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தற்போது அக்கட்சி வெளியிட்டுள்ளது.

11:26:02 on 15 Nov

மேலும் வாசிக்க EENADU

டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டைட்டன், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 8.34 சதவிகிதம் கூடுதலான லாபம் ஈட்டியுள்ளது. இந்நிலையில், 'அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் விற்பனையை இரண்டு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக,’ டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

11:10:01 on 15 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஐ.நா.சபையில் மரண தண்டனைகளை நிறுத்தி வைக்க கோரும் தீர்மானம் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் வெற்றி பெற்றது. தீர்மானத்துக்கு ஆதரவாக 123 ஓட்டுகளும், எதிராக 36 ஓட்டுகளும் கிடைத்தன. 30 நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், இந்த தீர்மானத்துக்கு எதிராக இந்தியா ஓட்டு போட்டது.

10:56:01 on 15 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

பாஜக தேசியச் செயலாளராக பதவி வகிக்கும் ஹெச்.ராஜா அடிக்கடி எதையாவது பேசி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இடதுசாரிகள், திராவிடக் கட்சிகள், பெரியார் குறித்து சர்ச்சையாகப் பேசுவது அவரது வாடிக்கையான பேச்சுகளில் ஒன்று.

10:40:01 on 15 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

அறிவியல் மற்றும் ஆய்வியலில் வெவ்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்த ஆறு ஆய்வாளர்களுக்கு பிரபல மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் விருது வழங்கியுள்ளது. 6 ஆய்வாளர்களில் ஒருவராக விருது பெற்ற, செந்தில் முல்லைநாதன் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்.

10:26:02 on 15 Nov

மேலும் வாசிக்க ie தமிழ்

டெல்லியின் குருகிராம் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்து சேவை வழங்கி வரும் நிறுவனம்தான் ஸ்பைஸ்ஜெட். விமான எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்நிறுவனத்துக்கு ரூ.389.4 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10:11:01 on 15 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழகத்தில் கஜா புயல் இன்று இரவு கரையைக் கடப்பதால் கடலோர மாவட்டங்களில் பாதிப்புகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தூத்துக்குடி பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடத்தப்பட்டது.

10:04:24 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து விழும் பனிப்பொழிவால் சரித்திரப் புகழ்வாய்ந்த மொகல் சாலை மூடப்பட்டது. ரஜோரி மாவட்டத்தில் உள்ள பீர்பஞ்சால் மலைப்பகுதி வழியாகச் செல்லும் மொகல் சாலை அப்பகுதி மக்களுக்கு வியாபார ரீதியாகவும், போக்குவரத்திற்கும் பயன்பட்டு வந்தது.

09:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நாகைக்கு கிழக்கே 95கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் 12 மணிக்கு பிறகு கரையை கடக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

09:51:39 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

ஏற்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காப்பி விளைச்சல் இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்காட்டில் விலையும் அராபிகா, ரொபாஸ்ட்டா காபி வகைகளுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

09:41:02 on 15 Nov

மேலும் வாசிக்க EENADU

நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பிறகு சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிகா பின்னர் நடிக்க தொடங்கினார். ராதாமோகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘காற்றின் மொழி’ படம் இப்போது திரைக்கு வருகிறது. அடுத்து மீண்டும் புதுமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

09:26:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முருகேசன், ‘சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரும் 25ஆம் தேதி 82ஆவது பட்டமளிப்பு விழா நடக்கிறது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.’ என தெரிவித்துள்ளார்.

09:11:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மொகல்லா கச்சேரா பகுதியில் பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை குரங்கு கடித்து கொன்றது. தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சென்று கொன்றது. இந்த நிலையில் ஆக்ராவில் பெண்ணை குரங்கு ஒன்று கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

08:55:02 on 15 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

முகேஷ் அம்பானியின் மகள் இஷா ஆனந்த், பிரமாலை டிசம்பர் 12ஆம் தேதி மணக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் திருமணத்துக்கு முந்தையச் சடங்குகள் இரு நாள்கள் நடைபெறுகின்றன. திருமணத்துக்குப் பிறகு மும்பை ஒர்லி கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற கிலிட்டா பங்களாவில் புதுமணத் தம்பதி குடிபுகவுள்ளனர்.

08:41:01 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தே.மு.தி.க. கொடியேற்று விழா மற்றும் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், 'தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமையே முடிவு எடுக்கும், நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் அனுமதி பெற்று பிரச்சாரத்தில் ஈடுபடுவேன்,’ என்றார்.

08:26:01 on 15 Nov

மேலும் வாசிக்க EENADU

ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பாம்பன் சுற்றுவட்டார இடங்களில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. கஜா புயலில் வெளி விளிம்பு கரையைத் தொட்ட நிலையில் சூறைக்காற்று அதிக அளவில் வீசி வருகிறது.

08:17:25 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

சாம்சங் நிறுவனம் கடந்த மாதம் மலேசியாவில் அறிமுகம் செய்த நான்கு கேமரா கொண்ட கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போனினை நவம்பர் 20ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. நான்கு கேமரா கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ9 ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படகிறது.

08:11:01 on 15 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

அமெரிக்காவில் இயங்கி வரும் இன்டர்மவுன்டெயின் மருத்துவ மையம் மற்றும் இதய நிறுவன ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி இருக்கும் 'கார்டியா’ (Kardia) எனும் புதிய ஸ்மார்ட்போன் செயலி மாரடைப்பு ஏற்பட இருக்கும் அபாயத்தை கண்டறிந்து தெரிவிக்கும்.

08:08:07 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியில், பழங்குடியினத்தைச் சேர்ந்த போராளி பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி படம் இயக்கவுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். இப்படம் பெரும் பொருட்செலவில் நமா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

08:05:03 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியல் குளறுபடி குறித்து விசாரிக்க நிபுணர் குழுவை பள்ளிக்கல்வித்துறை அமைத்துள்ளது. தையல், ஓவியம் பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்ததில் குளறுபடி என புகார் எழுந்ததையடுத்து, நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

07:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

வங்கக்கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

07:41:02 on 15 Nov

மேலும் வாசிக்க தினமணி

தாம்பரம், ரமணி நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வற்புறுத்தியதால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது. இது குறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:26:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'தமிழகத்தில் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டால் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

07:11:01 on 15 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்காக எட்டப்பட்டுள்ள வரைவு ஒப்பந்தத்துக்கு மனசாட்சியோடு ஆதரிக்க முடியாது என்று கூறி பிரெக்ஸிட் செயலாளர் டொமினிக் ராப் பதவி விலகியுள்ளார். அதைப்போலவே வேலை மற்றும் ஓய்வூதியச் செயலாளர் எஸ்தர் மெக்வே-வும் பதவி விலகியுள்ளார்.

06:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுவதாக இருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

06:35:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

மயிலாடுதுறை அருள்மிகு அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் துலா உற்சவப் பெருவிழா கடந்த வாரம் புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கஜா புயல் வருகையால் காலையே தேரோட்டம் நடைபெற்றது.

06:15:01 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

கஜா புயல் நாகையின் வடகிழக்கே 155 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கரையைக் கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கீ.மீ வரை காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

05:55:02 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 936 அவசர கால ஊர்திகள், 41 இரு சக்கர ஊர்திகள் இயக்கப்பட்டு வருகிறது.

05:35:02 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கடலூரில் சில்வர் பீச் உள்பட எந்த கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புயல் நெருங்கி வருவதால் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

05:15:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை பராமரிக்க கோரிய வழக்கில் தீபா, தீபக் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீசு அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

04:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாமனார் வீடு சேமூர் அம்மாபாளையத்தில் இருக்கிறது. அங்குள்ள தன் மாமனார் மற்றும் அவர் பங்காளிகளுக்குச் சொந்தமான குலத்தெய்வ கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைப்பெற்றது. இந்த கும்பாபிஷேக விஷேசத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோயிலுக்கு வந்திருந்தார்.

04:35:01 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

ஒன்பதாம் எண் எச்சரிக்கைக் கூண்டு துறைமுகத்துக்கு வலது புறமாக புயல் கரையைக் கடக்கும் என்பதைக் குறிக்கிறது. பத்தாம் எண் எச்சரிக்கைக் கூண்டானது துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களுக்கு அபாய நிலை என்று எச்சரிக்கும். 11ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டானது, புயலானது பேரழிவினை உண்டாக்கும் என்பதைக் குறிக்கும்.

04:15:01 on 15 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பல நகரங்களுக்கும் குஜராத்தின் அகமதாபாத்திற்கும் இந்து பெயர்களை வைக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் நினைக்கின்றனர். இவ்வாறு வைக்கப்படும் புதிய பெயர்கள், புகழ்மிக்க இந்துக்களின் காலத்தை குறிப்பதாக பா.ஜ.க கூறுகிறது. மேலும், இது இஸ்லாமிய பாராம்பரியத்தை இகழ்ச்சியடைய செய்கிறது.

03:55:02 on 15 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கஜா புயல் பாதிப்புள்ள 6 மாவட்டங்களில், இன்று மாலை 6 மணியிலிருந்து நாளை காலை 6 மணி வரை தனியார் மற்றும் அரசு பேருந்துகளை இயக்க வேண்டாம் என வருவாய்த்துறை அறிவுறுத்தியுள்ளது. கஜா புயல் கரையை நோக்கி நகர்வதால் கடலூரில் 3 மீட்டர் உயரம் வரை அலை சீற்றமாக காணப்படுகிறது

03:35:01 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாகை அருஜே கஜா புயல் கரையைக் கடக்கும்போது, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் 20 செ.மீ.க்கும் மேல் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

03:15:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினமணி

கஜா புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது. மேலும் கடலூர் துறைமுகத்தில் 9ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு, பாம்பன் துறைமுகத்தில் 8ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

02:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

வரும் 17ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருப்பதால், பாதுகாப்பு கேட்டு முதல்வர் பினராயிவிஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.

02:35:01 on 15 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினால் மாநிலம் முழுவதும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்வேன் என அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்தார். மேலும் அவர், "தேமுதிக வளர்ந்து கொண்டிருக்கிறது. நான் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. சேவை செய்ய வேண்டும் என்பதற்காக வந்துள்ளேன்.” எனக் கூறியுள்ளார்.

02:15:02 on 15 Nov

மேலும் வாசிக்க காமதேனு

புவி வெப்பமயமாதலை முன்னிட்டு பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கும் பனிக்கரடிகள் குறித்த வீடியோ ஆய்வாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புவி வெப்பமயமாதல் பிரச்னையால் பனி உருகிவிட அதிலிருந்த பனிக்கரடியின் உணவான மீன்கள் குறைந்து போனதால் பனிக்கரடிகளின் வாழ்வு கேள்விக் குறியாகி உள்ளது.

01:56:01 on 15 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கஜா புயல் இன்று இரவு சுமார் 11.30 மணியளவில் பாம்பன் - கடலூர் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புயல் பாதிப்பிலிருந்து செல்லப்பிராணிகள் மற்றும் கால்நடைகளை மீட்க தன்னார்வலர்கள் தயாராக உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

01:41:02 on 15 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கஜா புயல் எதிரொலி காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் புதுச்சேரி கடற்கரை சாலை மூடப்பட்டு, வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தை பார்க்க வரும், பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.

01:25:02 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்கப்போவது யார்?’ என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இது குறித்து, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

01:21:13 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கவுள்ளது. இந்நிலையில், கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

01:10:01 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணமல்ல என்று உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எங்களது அறிக்கையை ஏற்பதும் நிராகரிப்பதும் தமிழக அரசின் முடிவைப் பொறுத்தது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

12:55:02 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

இடைத்தேர்தல் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படும் சூழல் உள்ளதால் தனது ஆடிட்டர்களுடன் சீக்ரெட் மீட்டிங்குகளை அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

12:40:01 on 15 Nov

மேலும் வாசிக்க ஏசியாநெட்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக வரும் நவம்பர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 21ஆம் தேதி வரை வியட்நாம் செல்லவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் பல ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே கையெழுத்தாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

12:25:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி கருணாநிதி சிலையும், புனரமைக்கப்பட்ட அண்ணா சிலையும் ஒரே இடத்தில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய தலைவர்கள் விழாவில் கலந்துக் கொண்டு கருணாநிதி சிலையை திறக்க உள்ளதாக திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:10:01 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புயலின் போது மக்கள் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழில் அனிமேஷன் வீடியோ மூலம் விழிப்புணர்வு செய்தியை பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த வீடியோ மக்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

11:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’கஜா புயலால் தூத்துக்குடிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது,’ என தூத்துக்குடி ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறியுள்ளார். மேலும், ’கடலில் உள்ள மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகலுக்குள் மீனவர்கள் கரை திரும்புவார்கள்,’ என்றார்.

11:42:01 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயல் கடலூர்- பாம்பன் இடையே நாகை அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். மேலும், கஜா புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

11:25:02 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி தயாராக உள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும், 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

11:10:01 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்ச தரப்பு எம்.பி.க்களிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ’இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் நேற்றைய தினத்தை போன்ற ஒரு கருப்பு தினத்தை நான் பார்த்ததில்லை. அதிபராக இருந்த எனக்கு பிரதமர் பதவி முக்கியமானதல்ல,’ என ராஜபக்ச இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

11:03:46 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் முன்னே சென்ற காரை முந்த முயன்ற கார் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த பேருந்தின் மீது அதிவேகமாக மோதியதில் காரில் வந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

10:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கஜா புயலின் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

10:41:01 on 15 Nov

மேலும் வாசிக்க EENADU

சென்னை எழிலகத்தில் பேரிடர் கால முன்னறிவிப்பு தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ‘தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் புயல் முன்னெச்சரிக்கை தகவல் மையம் செயல்படும்,’ என்றார். மேலும், ‘புயல் குறித்த தகவல்களை இந்த மையங்கள் மக்களுக்குத் தெரிவிக்கும்’ என்றார்.

10:25:02 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயல் இன்று இரவு சுமார் 11.30 மணியளில் பாம்பன்- கடலூர் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், புயல் கரையை கடக்கும்போது சென்னைக்கு பாதிப்பு இருக்காது; மிதமான மழை பெய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

10:24:30 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயலால் நாகை மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் உள்ள 86,000 பேர் மதியத்திற்குள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என தமிழக அரசின் நாகை மாவட்ட சிறப்பு அதிகாரி ஜவகர் தெரிவித்துள்ளார். மேலும், ’பாதுகாப்பு கருதி வேதாரண்யம் பகுதியில் இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்,’ என்றார்.

10:11:02 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னைக்கு அருகே 328 கி.மீ. தொலைவில், நாகைக்கு அருகே 338 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது கஜா புயல் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 14 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 23 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது.

09:57:42 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற யமஹா தலைமை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க பணியாளர்கள் இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு பணி நீக்கம் செய்யப்பட்ட 2 தொழிலார்களுக்கும் பணி வழங்க யமஹா நிறுவனம் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து உடன்பாடு எட்டப்பட்டு பேச்சு வார்த்தை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

09:41:02 on 15 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும், நாகைக்கு அருகே 370 கி.மீ தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், 6 மணி நேரத்தில், அதி தீவிர புயலாக ’கஜா’ வலுப்பெறும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

09:25:02 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

8 கி.மீ வேகத்தில் இருந்த கஜா புயலின் வேகம் மணிக்கு 14 கி.மீ வேகமாக அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், கஜா புயல் இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:10:02 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரஷ்யாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 புள்ளி 1 ஆக பதிவாகியுள்ளது. காமசட்கா தீபகற்பத்தை ஒட்டிய கடல்புரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அடுத்தடுத்து ஏராளமான நில அதிர்வுகளும் உணரப்பட்டன.

08:55:02 on 15 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

08:40:01 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கஜா புயல் நெருங்குவதால் நாகை, கடலூர், பாம்பன், புதுச்சேரி மற்றும் சென்னையில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னையில் அதிகாலையில் மழை பெய்த நிலையில் மீண்டும் பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

08:25:01 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, ‘கஜா’ புயல். கடந்த 3 நாட்களாக கடல் பகுதியில் நிலைக்கொண்டிருந்த ‘கஜா’ புயல் இன்று நிலப்பகுதியை நோக்கி வருகிறது. இது மணிக்கு 8 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

08:10:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினத் தந்தி

14-11-2018 அன்று நிஃப்டி மிகச்சிறியதொரு இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. செய்திகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னர் மட்டுமே வியாபாரம் செய்வதற்காக சந்தையை டிராக் செய்ய வேண்டியிருக்கும். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை முழுமையாக தவிர்க்கவேண்டிய நாளிது.

07:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.26 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.ரூ.76.19 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:40:02 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிவகங்கையில் இன்று நடக்கவிருந்த அழகப்பா பல்கலை. துறைகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

07:25:01 on 15 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ராஜஸ்தானை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. டவுசா ஹரிஸ் சந்திர மீனா, பா.ஜ.க.வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். ராஜஸ்தானின் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட், மாநில தலைவர் சச்சின் பைலட் மற்றும் மாநில பொறுப்பாளர் அவினேஷ் பாண்டே ஆகியோர் முன்னிலையில் டவுசா ஹரிஸ் சந்திர மீனா தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார்.

07:11:02 on 15 Nov

மேலும் வாசிக்க தினத் தந்தி

இணைய பாதுகாப்பு குறித்து மெக்கஃபே நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஆய்வு மேற்கொண்டது. இதில் பெரும்பாலான இந்தியர்கள், சலுகைகள் கிடைக்கும் என்ற ஆசையில், முன்பின் தெரியாத இணையதளங்களில்கூட தங்களது தனிப்பட்ட தகவல்களை தாராளமாக பகிரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

06:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

இந்தியாவில் 90% பெற்றோர், தங்களது பிள்ளைகள் படிப்புக்காகத்தான் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகிறார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பதாக வெலோசிட்டி எம்ஆர். ஐரானிகலி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

06:41:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினமணி

பால்வெளி வழியாக நகரும் போது நம்பமுடியாத வகையில் வேகமாக வரும் அறியப்படாத பருப்பொருள் சூறாவளி விரைவில் பூமி மோதக்கூடும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். வானியியலாளர்கள் இந்த அறியப்படாத பருப்பொருள் சூறாவளி விநாடிக்கு 500 கிலோ மீட்டருக்கும் அதிக வேகத்தில் பயணிக்கிறது என கணித்து உள்ளனர்.

06:25:02 on 15 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

பெண்களிடம் அபார ஆற்றல் ஒன்று இருக்கிறது, அது பன்முகத்திறன். அதனால் அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை செய்யமுடியும். இது அவர்கள் வீட்டு வேலைகளை பார்ப்பதிலும், அலுவலக வேலைகளை பார்ப்பதிலும் கைகொடுக்கிறது. இது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், இதில் சில அபாயங்களும் அடங்கியிருக்கின்றன.

06:10:02 on 15 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

மும்பையில் டிசம்பர் 2ஆம் தேதி வட இந்தியர்கள் சங்கமான 'உத்தர பாரத் மாகாபஞ்சத் சங்' என்ற அமைப்பு நடத்தும் விழாவில் ராஜ் தாக்கரே கலந்துகொள்கிறார். இந்தத் தகவலை சங்கத்தின் தலைவர் சந்தீப் தேஷ்பாண்டே ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

05:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

”நான்கு மாநிலங்களைக் கூட பாகிஸ்தானால் நிர்வகிக்க முடியாது. காஷ்மீர் பாகிஸ்தானுக்கும் வேண்டாம். அதேசமயம், இந்தியாவுக்கும் வேண்டாம்” என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பரபரப்பு கருத்துத் தெரிவித்துள்ளார்.

05:40:02 on 15 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சுங்கச் சாவடி செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.9,681 கோடி முதலீட்டை அரசு ஈர்த்திருந்தது. அதன் இரண்டாம் கட்டமாகத் தற்போது 586 கிலோ மீட்டர் அளவிலான எட்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

05:26:01 on 15 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பூமியில் வளரும் பல தாவரங்கள் மூலிகைகளாகப் பயன்படுவதை போன்று கடல் தாவரங்களான பாசிகளும் மருந்தாகப் பயன்படுகிறது. கிரேசி, லேரியா, அசிரோசா போன்ற பாசிகளிலிருந்து ‘அகார் அகார்’ என்னும் பொருள் கிடைக்கிறது. இது ரொட்டி, பாலாடைக் கட்டி முதலியவற்றைப் பதப்படுத்த பயன்படுகிறது.

05:10:02 on 15 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

சிம்பு புதிதாக விலை உயர்ந்த பெண்ட்லி கார் ஒன்று வாங்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. அதற்கான டெமோ காரை சிம்பு நேற்று ஓட்டி பார்த்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிம்பு வாங்கும் காரின் விலை 3.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

04:56:01 on 15 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தமிழினத்தையே காக்க முடியாதவர்களால், இந்தியாவை எப்படி காக்க முடியும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சாடியுள்ளார். மேலும் அவர், ஏற்கெனவே பா.ஜ.க., காங்கிரஸ்., கூட்டணியில் இருந்த திமுக ஏன் இந்தியாவை காக்கவில்லை என்று விமர்சித்தார்.

04:40:01 on 15 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில் அரசு கொடுத்த இலவசங்களை விமர்சித்திருப்பதாக கூறி தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், படத்தின் போஸ்டரிலேயே இலவசங்களை விமர்சித்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.

04:26:02 on 15 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

மேலும் வாசிக்க