View in the JustOut app
X

ராசிபுரம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள கொங்களம்மன் கோவில் அரசு நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர் சுரேஷ், என்பவர் பள்ளியில் படிக்கும் 8ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச படங்களை காட்டியதுடன் பாலியல் தொந்தரவும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஜாதி பெயரை சொல்லியும் திட்டியுள்ளார்.

12:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

புதுக்கோட்டை அருகே கிணற்றில் குளித்த போது சிறுவனின் மூக்கில் மீன் சென்றுள்ளது. மூச்சு விட முடியாமல் சிறுவன் தவித்ததை அடுத்து, அன்னவாசல் அரசு மருத்துவர்கள், கத்தரிக்கோல் மூலம், லாவகமாக மீனை உயிருடன் வெளியே எடுத்து அகற்றினர்.

12:25:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினமலர்

நவம்பர் 9ஆம் தேதியன்று, உச்ச நீதிமன்றம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த நிலப் பிரச்னை பற்றிய தீர்ப்பை அளித்தது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பு, சர்வதேச ஊடகங்களைக் கவனிக்க வைத்தது. இந்தத் தீர்ப்பைப் பற்றி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தலைப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

11:57:03 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மழை பெய்துள்ள நிலையில், வெப்பசலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11:27:01 on 15 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை கிண்டி காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மீது புகார் ஒன்றை இந்து முன்னனி சார்பில் தென் சென்னை மாவட்ட செயலாளர் வே.நித்தியானந்தம் கொடுத்துள்ளார். இந்து தெய்வங்களை இழிபடுத்தி பேசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தென்கொரியாவில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முயற்சியாக சுமார் 47 ஆயிரம் பன்றிகளை அந்த நாட்டு அதிகாரிகள் கொன்று குவித்தனர். கொல்லப்பட்ட பன்றிகளின் உடல்களை இம்ஜின் ஆற்றுக்கு அருகில் புதைத்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இம்ஜின் ஆற்றங்கரையோர பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது.

10:27:01 on 15 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்தோனேசியாவின் மொலுக்கா தீவு அருகே உள்ள கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் வடமேற்கு நகரமான டெர்னேட் என்ற இடத்தை மையமாக கொண்டு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை.

09:57:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

இரண்டாம் காலாண்டில் 50 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வோடபோன் நிறுவனமும், 23 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாக ஏர்டெல் நிறுவனமும் அறிவித்துள்ளன. இந்த அறிவிப்பால் பங்குச் சந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 20 சதவீதம் அளவுக்கு சரிந்தது.

09:27:02 on 15 Nov

மேலும் வாசிக்க தினகரன்

தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உள்ள பாப்பாநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார் அர்ச்சனா. இவர், பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக பயோ பிளாஸ்டிக் எனப்படும் உயிரி நெகிழியைக் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார். பை மற்றும் எந்த வடிவில் வேண்டுமானாலும் இதைக் கொண்டு பொருள்கள் தயாரிக்கலாம்.

08:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க விகடன்

17 பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபத்தை சேர்த்தாலும் அவை பந்தன் வங்கியின் மொத்த லாபத்தை விட குறைவாக இருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பந்தன் வங்கியானது, 2019 - 20 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 971.8 கோடி ரூபாயை நிகர வருமானமாக ஈட்டியுள்ளது.

07:55:02 on 15 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

டிஸ்னி+ வெளியான அன்றே சுமார் 10 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக டிஸ்னி+ அறிவித்துள்ளது. மேலும், டிஸ்னி+ மொபைல் ஆப் மட்டும் சுமார் 3.2 மில்லியன் டவுன்லோடுகளைப் பெற்றுள்ளது. 24 மணி நேரத்தில் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளதாக டிஸ்னி+ தெரிவித்துள்ளது.

06:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் மேற்கொள்ளலாம் எனும் தற்போதைய நிலையே நீடிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்ததையடுத்து, இவ்விவகாரத்தில் கேரள அரசு என்ன செய்யப்போகிறது எனும் கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே, சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

05:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க தினமணி

யமஹா FZ 25 மற்றும் யமஹா Fazer 25 மோட்டார் சைக்கிள்களின் 13,348 யூனிட்டுகளுக்கு இந்தியா யமஹா மோட்டார் திரும்ப பெறுவதாக கூறியுள்ளது. 12,620 யூனிட் FZ 25 மற்றும் 728 யூனிட் Fazer 25 மோட்டார் சைக்கிள்களில் ஹெட் கவர் போல்ட் தளர்த்துவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண இது ஒரு முன்னெச்சரிக்கை என்று யமஹா கூறுகிறது.

04:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நடிகர் ஆர்கேவிடம் வடிவேலு, ‘நானும் நீயும் நடுவுல பேயும்‘ என்கிற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முன்பணமாக ஒரு கோடி ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். அந்த படத்தில் கதை சரியில்லை என்று பல மாறுதல்களையும் செய்துள்ளார். இதுபோல நாட்களை வடிவேலு கடத்தியுள்ளார். இதனால், படப்பிடிப்பு தொடங்கப்படாமலேயே இருந்துள்ளது.

03:55:02 on 15 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆப்பிள் நிறுவனத்தின் 16 இன்ச் மேக்புக் ப்ரோ லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் ப்ரோ மாடலில் ரெட்டினா டிஸ்ப்ளே, 9 ஆம் தலைமுறை பிராசஸர், அதிகபட்சம் 64 ஜி.பி. ரேம், 8000 ஜி.பி. மெமரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ. 199,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

02:55:01 on 15 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவருக்கும், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த காஞ்சனா என்பவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யோகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

01:55:02 on 15 Nov

மேலும் வாசிக்க Behind Woods

பொன்னியின் செல்வன் கதையை தாய்லாந்தில் படமாக்குவதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, அந்த நாட்டில் சோழர்களின் நாகரிகத்தை பின்னணியாகக் கொண்ட கோவில்கள் இருப்பதாலும், அது படத்துக்கு உகந்த வகையிலும் இருப்பதாலுமே தாய்லாந்தை தேர்வு செய்ததாக மணிரத்னம் தரப்பு கூறியுள்ளது.

12:55:02 on 15 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பிளிப்கார்ட்டில் மொபைல் போனான்ஸா விற்பனையின் போது Samsung Galaxy A50, Redmi K20, Redmi K20 Pro, Poco F1, Realme 5, Google Pixel 3a மற்றும் Honor 20 ஆகியவை தள்ளுபடியைப் பெற்றுள்ளன. Realme 5 - ரூ.9,999-யிலிருந்து ரூ.8,999-க்கு விற்பனை செய்கிறது.

11:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வருடம் ஒருமுறை தவறாமல் கண் பரிசோதனை, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பரிசோதனை, இதயப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒருமுறை சிறுநீரகத்தில் புரோதம் வெளியாகிறதா என்று அறிய வேண்டும்.

10:57:02 on 14 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

முருகதாஸின் டிவீட்டை பார்த்த ரசிகர்கள், “சூப்பர், வாழ்த்துக்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள். டப்பிங் தியேட்டரில் இருந்து ஏதாவது வீடியோக்கள், புகைப்படங்கள் கசிந்து விடப் போகிறது. சம்பள பாக்கியால் நயன்தாரா கடைசி நாள் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லையே. சம்பள பிரச்சனை தீர்ந்துவிட்டதா” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

09:57:01 on 14 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சங்கத் தமிழன். இப்படம் நாளை வெளியாகவிருந்தது. இந்நிலையில் லிப்ரா நிறுவனத்துக்கு எதிராக விநியோகஸ்தர் விக்னேஸ்வரன் தொடர்ந்துள்ள வழக்கில் நாளை முதல் நவம்பர் 21 வரை நெல்லை மாவட்டத்தின் 10 திரையரங்குகளில் சங்கத் தமிழன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

08:57:02 on 14 Nov

மேலும் வாசிக்க தினமணி

தினந்தோறும் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும், தினந்தோறும் ஒரு பாடத்திற்கு 25 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் தயாரித்து, அதன் அடிப்படையில் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் கோவை முதன்மைக் கல்வி அதிகாரி, பள்ளிகளுக்கு அனுப்பியிருக்கும் கடிதம் ஒன்று சமூக ஊடகத்தில் பரவிவருகிறது.

08:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க விகடன்

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதை மையமாக வைத்து தற்போதைய கல்வி முறையை சாடும் வகையில் விஜய் 64’ படத்தின் கதை அமைந்துள்ளதாக தகவல் உலா வருகிறது. ஆனால் இது தொடர்பாக படக்குழு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

07:57:01 on 14 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

விழுப்புரம் வி.காலனியைச் சேர்ந்தவர் விமல். இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அங்கு சேலம் மாவட்டம் சின்ன சீரகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருத்திகா என்பவரும் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

07:25:01 on 14 Nov

மேலும் வாசிக்க தந்தி டிவி

குளிர் காலம் மட்டுமல்ல சிலர் எல்லா நாட்களிலும் கூட சுடு தண்ணீரில் குளிப்பார்கள். உண்மையில் சுடு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு நல்லது என்கின்றன ஜெர்மனியின் ஃபிரெய்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் முடிவுகள்.

06:55:02 on 14 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ரோகித் சர்மா 6 ரன்னில் வெளியேற, மயங்க் அகர்வால் மற்றும் புஜாரா சிறப்பாக விளைாட முதல்நாள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் 58.3 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்சில் சுருண்டது.

06:30:38 on 14 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

ஆளும் கட்சியான அதிமுகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதானாரா? முரசொலி நிலம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறதா? என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றன. இதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய இடத்தில் உள்ள திமுக ஐ.டி. விங் மிகவும் தடுமாற்றத்தில் உள்ளது என்று திமுகவினரே குமுறுகின்றனர்.

06:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

நார்த் மெட்ராஸ் நாயகி ஒருவர் வாய்ப்புகளுக்காக பெரிய நடிகர்களை இயக்கும் இளம் இயக்குனர்களை தன் வலையில் விழவைத்து வருகிறாராம். அதோடு மட்டுமல்லாமல் வீட்டுக்கு வந்த இயக்குனர்களிடம் அப்போதே வாய்ப்பு கேட்டு வாங்கிக்கொண்டு தான் கதவை திறந்து விடுகிறாராம். அதனால் அந்த நடிகை தொடர்ந்து நிறைய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

05:57:01 on 14 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டனம் காவல் நிலையத்தில், லாக்-அப் என்கவுன்டர் விவகாரத்தில் எஸ்.ஐ. காளிதாஸுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2014ஆம் ஆண்டு எஸ்பி பட்டினம் காவல் நிலையத்தில் காளிதாஸ் பணியாற்றிய போது செய்யது முகமது என்கிற விசாரணை கைதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

05:28:21 on 14 Nov

மேலும் வாசிக்க தினகரன்

வரும் ஆண்டு இறுதியில் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்தி மீண்டும் நிலவில் சாப்ட் லேண்டிங் செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சந்திரயான்-3ன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப முடிவு செய்துள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

05:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவர் குடும்ப பிரச்னை காரணமாக தனது இரு குழந்தைகளையும் சீக்குப்பாறை என்னும் இடத்தில் உள்ள வியூபாயிண்டில் இருந்து வீசியெறிந்து கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

04:57:01 on 14 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

டெல்லியில் 6 வயது சிறுமி ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த 60 வயதான நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஒருவர் அந்த நபரை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

04:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

’2011 உள்ளாட்சித் தேர்தலில் பாஜக இரு நகராட்சி, இரு ஒன்றியங்களில் ஜெயித்தது. அப்போது மோடி ஆட்சி இல்லை, காங்கிரஸ் ஆட்சி. அப்போதை விட இப்போது தமிழக பாஜக நன்கு வளர்ந்திருக்கிறது. எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலில் நமக்கு தோதான இடங்களில் தனித்தே போட்டியிடலாம்” என்று பாஜக நிர்வாகிகள் யோசனை தெரிவித்திருக்கிறார்கள்.

03:57:02 on 14 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெல்லி மக்களுக்கு சுகாதார வசதிகளை வழங்கும் வகையில், பல இடங்களில் மொஹல்லா கிளினிக்குகளை டெல்லி அரசு தொடங்கி வருகிறது. பொதுவாக ஏழை மக்கள் வசிக்கும் இடங்களில்தான் இந்த கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், முதல் தடவையாக வசதி படைத்தவரகள் வசிக்கும் கிரேட்டர கைலாஷ் பகுதியில் கிளினிக் திறக்கப்பட்டது.

03:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தயாராகி வருகிறது. இதில் அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அரவிந்த் சாமி தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி வருகிறார். அவரது புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

02:57:02 on 14 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

சில்லரை பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 4.62% ஆக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரித்ததாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. நுகர்வோர் விலை குறியீட்டு (சிபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 3.99% ஆக இருந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இது 3.38% ஆக இருந்தது.

02:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதன் மூலம், தொழில் நிமித்தமாக அடிக்கடி இடம் மாறுவோர். வேலை நிமித்தம் வேறு மாநிலங்களுக்கு செல்வோர், வீடு மாறுவோர் பெரிதும் பயன்பெறுவார்கள்.

01:57:02 on 14 Nov

மேலும் வாசிக்க தினமலர்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

01:26:28 on 14 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’சென்னை ஐஐடி மாணவி பாத்தீமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை ஐஐடியின் இருப்பும் செயல்பாடும் மர்மத்தீவு போல் உள்ளது. கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்த்து, அனைவரையும் சம உரிமையுடன் நடத்த வேண்டும்' என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

01:22:10 on 14 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தாயார், “இஸ்லாமியர் என்பதால் வெளியூருக்கு அனுப்புவதற்கு அச்சமாக இருந்தது. பாத்திமாவிற்கு பனாரஸில் மேற்படிப்பு படிக்கதான் முதலில் இடம் கிடைத்தது. ஆனால் வட மாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலையை நினைத்து நாங்கள் அஞ்சினோம். தமிழ்நாடெனில் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் அனுப்பினோம்” என்றார்.

01:08:11 on 14 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பிரதமர் மோடியை விமர்சித்த விவகாரத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீதான அவமதிப்பு வழக்கை, உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. மேலும், வருங்காலத்தில் இதுபோன்று பேசக்கூடாது எனவும், ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

12:57:01 on 14 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

12:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினமணி

மு.க.அழகிரி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஹெச்.ராஜா வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்துப் பேசினார். விரைவில் நடைபெற உள்ள ஹெச்.ராஜாவின் மகள் திருமணத்துக்கு முன்கூட்டியே பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அழகிரி.

11:57:02 on 14 Nov

மேலும் வாசிக்க விகடன்

ரபேல் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று கூறிய நீதிமன்றம், முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது.

11:53:01 on 14 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

சபரிமலை வழக்கு 5 நீதிபதிகள் அமர்வில் இருந்து 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

11:48:53 on 14 Nov

மேலும் வாசிக்க தினகரன்

இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 187 சென்டிமீட்டர் கனமழை கொட்டித் தீர்த்ததால் மிதக்கும் நகரம் எனப் பெயர் கொண்ட வெனிஸ் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக கடந்த 1,200 ஆண்டுகளில் புனித மார்க்ஸ் பஸிலிக்கா 6வது முறையாக நீரில் மூழ்கியுள்ளது.

11:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என்று தான் கூறவில்லையென அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் அவர், ”மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான விடையை அவர்கள் கொடுத்து விட்டனர். ஸ்டாலின் மிசா விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. மன்னிப்புக் கேட்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

10:57:01 on 14 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோவை மாவட்டம் இருகூர் ராவுத்தர் பாலம் அருகே ரயில் மோதி பலியான மாணவர்கள் 4 பேரின் உடலை மீட்டு, அவர்களின் விவரம் பற்றி போத்தனுர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் மோதி 4 பேரும் உயிரிழந்து இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

10:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இரவு ஆண்டியூர் பகுதியில் இருந்த அரிசி ராஜாவை வனத்துறை காவலர்கள் சுற்றிவளைத்தனர். பிறகு யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக அதிகாலை 3 மணிக்கு மற்றொரு மயக்க ஊசி செலுத்தப்பட்டது.

09:57:01 on 14 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா விதிக்கும் நிபந்தனை ஏற்கத்தக்கதல்ல என மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் 18 நாட்கள் வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார்.

09:27:01 on 14 Nov

மேலும் வாசிக்க தினகரன்

இளநீரை அதிகம் பருகி வருபவர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்டிராலின் அளவு வெகுவாக குறைவதாக மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரம் உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்ட்ரால் சத்துக்களை ரத்தத்தில் கலந்து செல்வதை இளநீர் ஊக்குவிக்கிறது.

08:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

விவோவின் U-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் சமீபத்திய கூடுதலாக Vivo U20 இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. Amazon.in-ல் விவோவின் அதிகாரப்பூர்வ டீஸர் பக்கத்தின்படி, Vivo U20 நவம்பர் 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகும். Vivo U20 மூன்று பின்புற கேமராக்களைக் பேக் செய்யும்.

07:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இந்தியாவில் டெலிகாம் நிறுவனதிற்கு இடையில் நடந்து வரும் போட்டிகளுக்கு மத்தியில், BSNL தனது பயனர்களுக்கு சிறந்த வசதிகளை வழங்க இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் அறிமுகப்படுத்திய இந்த ரூ.97 மற்றும் ரூ.365 திட்டங்களில், பயனர்கள் 2 ஜிபி தினசரி தரவுகளின் பயனைப் பெறுவார்கள்.

06:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் எந்த கட்டமைப்பும் இல்லை என முஸ்லிம் தரப்பு வாதிட்டது. சர்ச்சைக்குரிய இடத்திற்கு வந்த வரலாற்று ஆய்வாளர்கள் அந்த இடத்தில் சுவர் இருந்ததாக குறிப்பிட்டனர். அப்படியானால் காலி இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டது என்ற இஸ்லாமியர் தரப்பு வாதம் தவறு என்று நிரூபிக்கப்பட்டது.

05:55:02 on 14 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பற்பசைகளுக்கெல்லாம் முன்னோடி, நாயுருவிதான். முற்காலத்தில் மனிதர்கள், பற்பசை மற்றும் பல்துலக்கியாக நாயுருவி வேரைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். இந்த வேரால் பல் துலக்கினால், பற்கள் கறைகள் நீங்கி வெண்மையாவதுடன், பாக்டீரியா போன்ற கிருமிகளும் ஒழிந்துவிடும்.

04:55:02 on 14 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

லோகேஷ் கனகராஜ், மகிழ் திருமேணி ஆகிய இருவருமே புதிய தலைமுறை இயக்குநர்களாக அறியப்படுபவர்கள். இவர்களது படங்கள் இளைஞர்கள் ரசிக்கும் வகையிலும், பரபரப்பான திரைக்கதை, சுவாரஸ்யமான திரைக்கதை ஆகியவற்றிக்கு பெயர் பெற்றவை ஆகும். தடையற தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களின் திரைக்கதை ஆக்‌ஷன் கலந்த திரில்லருக்காக பேசப்பட்டவை.

03:55:02 on 14 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியா - பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது போன்று இஸ்ரேல் காஸா தீவிரவாதக் குழுக்கள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளது' என்றுகூறி இந்தத் தாக்குதல்களை மையமாக வைத்து தற்போது ட்விட்டரில் #indiawithisrael என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

01:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க விகடன்

சமீப காலமாக வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அடிக்கடி புயல் சின்னங்கள் உருவாகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”புவி வெப்பமாதல் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் புயல் உருவாவது 32% அதிகரித்துள்ளதாகவும், பத்து ஆண்டுகளில் 11% உயர்ந்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளது.

12:55:01 on 14 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாஜக சார்பில் முப்பெரும் விழா பேரணி நடைபெற்றது. இதில் பேசிய பாஜக பிரமுகர் அகோரம், மயிலாடுதுறை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தியை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், அவரது காக்கிச் சட்டையைக் கழட்டிவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

11:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நடிகை மந்த்ராவை ஞாபகமிருக்கிறதா? ஏன் இல்லாமல்? மறக்க முடியுமா மந்த்ராவை? நடிகர் அருண் விஜயின் அறிமுக நாயகி என்பதை விட அஜித்தின் 'ரெட்டை ஜடை வயசு' திரைப்பட நாயகி என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியுமே என்கிறீர்களா? சரிதான்.. அவர் மீண்டும் திரைப்படங்களில் தோன்றவிருக்கிறாராம். இம்முறை அம்மாவாக என்கிறார்.

10:57:02 on 13 Nov

மேலும் வாசிக்க தினமணி

கடந்த 2 மாதங்களில் பெய்த மழை காரணமாக தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 3 மீட்டர் அளவிற்கு உயர்ந்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் 1,286 நிலத்தடி நீர்மட்ட ஆய்வுக் கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. குடிமராமத்து பணி, மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் மூலம் சேமிக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

09:57:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான புல்புல் புயல் மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்துக்கு இடையே கரையைக் கடந்தது. அப்போது மேற்குவங்கத்தின் கடலோர மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன. சேத மதிப்பு சுமார் 19 ஆயிரம் கோடி ரூபாய் என அம்மாநில அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

08:57:01 on 13 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிவா-அஜித் கூட்டணியில் 4வது முறையாக தயாராகி வெளியான படம் விஸ்வாசம். அப்பா-மகள் பாசம், குடும்பங்களின் முக்கியத்துவம் என இன்றைய கால மக்கள் மறந்த சில விஷயங்களை இப்படம் பேசியது. தென்னிந்தியாவில் TRPயில் முதலிடம் உள்ள படம், 2019ம் ஆண்டின் தமிழ்நாட்டில் அதிக லாபம் கொடுத்த படம் போன்ற சாதனைகளை செய்துள்ளது.

08:27:02 on 13 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு முந்தைய தினம் அசம்பாவித சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் உத்தரப்பிரதேசத்தின் ஃபெரோசாபாத் மாவட்டத்தில் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மரக் குச்சி ஒன்றை குதிரையாக கற்பனை செய்துக்கொண்டு போலீசார் பயிற்சி எடுக்கும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

07:57:01 on 13 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் டூரிங் டாக்கீஸை அறிமுகப்படுத்தியவர் சாமிக்கண்ணு. கோயம்புத்தூரில் அப்போது அவர் அமைத்த திரையரங்கத்தின் பேரில் ஒரு சாலை இருக்கிறது, சாமிக்கண்ணு வின்செண்ட் தூக்கிச் சுமந்த டெண்ட் கொட்டாயிலிருந்து மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் பரிணமித்திருந்தாலும், இப்போதும் எங்கோ ஓர் இடத்தில் டென்ட் கொட்டாய் இயங்கத்தான் செய்கிறது.

07:27:01 on 13 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழ்ப்படம் 2 வை தொடர்ந்து சிவா சுமோ என்றொரு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். தமிழ்ப்படத்தில் நடித்ததில் இருந்து சிவாவை அகில உலக சூப்பர் ஸ்டார் என்று பலரும் அழைப்பார்கள். இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இந்த படத்தை எஸ்.பி. ஹோசிமின் இயக்குகிறார்.

06:57:02 on 13 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்த மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. மேலும் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

06:27:01 on 13 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சென்னை ஐஐடி மாணவியர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கேரள மாணவி, ஐஐடி பேராசிரியர்கள் மூவரைக் குறிப்பிட்டு தனது தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம் என தெரிவித்திருந்த செல்போன் பதிவு கிடைத்துள்ளதால் மாணவி தற்கொலை விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

06:14:58 on 13 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை ஐஐடி விடுதியில் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்த விவகாரத்தில் நீதி கேட்டு கேம்ப்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கோட்டூர்புரம் உதவி ஆணையர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

06:05:37 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

நுரையீரல் சிகிச்சை மருத்துவர் ஒருவர் கூறும் போது, ‘வீடுகளில் ஏற்றும் கொசுவர்த்தி சுருள்களால்கூட காற்று மாசு அதிகரிக்கும். மேலும் அதிலிருந்து வரும் புகை சிகரெட் பிடிப்பதற்கு சமமானது என கூறியுள்ளார். இந்த புகையால் நுரையீரல் பாதிப்படையும் என்றும், ஆஸ்துமா நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

05:57:02 on 13 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பெரும் வேதனையை அளிக்கிக்னறது என்றும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

05:42:02 on 13 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

உ.பி.யில் ராமர் பற்றிய ஆட்சேபகரமான படத்தை பதிவேற்றியதாக குற்றஞ்சாட்ட ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் அதிகாரி ரவீந்திர குமார் கூறுகையில், 'ஹயாத் நகரில் வசிக்கும் ஆசிப் அப்பாஸி, வாட்ஸ்அப் குழுவில் ராமர் குறித்த ஆட்சேபிக்கத்தக்க புகைப்படத்தை வெளியிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

05:27:02 on 13 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக பேராசிரியர்கள் உள்பட 11 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாத்திமா குற்றம்சாட்டிய பேராசிரியர்களிடம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை வாக்குமூலம் பெற்றது.

04:59:50 on 13 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பாலியல் புகாரில் கைதான சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் முகிலன் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

04:57:02 on 13 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த ஃபாத்திமா தன்னுடைய அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை தொடர்பாக அவருடைய பெற்றோர் கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பெட்டிசன் ஒன்றை அளித்துள்ளனர். மேலும் கேரள அரசு தமிழக போலீசார் நடத்தும் விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

04:56:07 on 13 Nov

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை அலுவலகமும் வரும் என்று தலைமை நீதிபதி உள்ளிட்ட 3 நீதிபதிகளும், அதற்கு எதிராக 2 நீதிபதிகளும் தீர்ப்பு வழங்கியுள்ளனர். பெரும்பான்மை அடிப்படையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை அலுவலகமும் வரும் என்று இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

04:27:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினமணி

மத்திய அரசு உதவ முன்வராவிட்டால் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டிய நிலையில் இருப்பதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொழில் செய்வது சவாலான விஷயமாக உள்ளதாக வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

03:57:01 on 13 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

ஹாங்காங்கில் காவல்துறையின் தாக்குதலுக்கு எதிராக வில் அம்புகளில் தீ வைத்து எய்து விடும் போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளையும் வீசி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களால் ஹாங்காங் மற்றும் சீன அரசுகள் கவலை அடைந்துள்ளன.

03:27:01 on 13 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை அணை தொட்டு 3 நாட்கள் ஆகிறது. இந்நிலையில் நீர் பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்ததையொட்டி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

02:57:01 on 13 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

ஹாங்காங் ஓபன் பட்ட பேட்மிண்டன், மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, கொரியா நாட்டின் கிம் கா யூனை எதிர்கொண்டார். 36 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 21-15, 21-16 என்ற செட் கணக்கில் கிம்மை வீழ்த்தி சிந்து 2வது சுற்றுக்குள் நுழைந்து உள்ளார்.

02:27:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

விஜய் ரசிகர்களுக்கு பதிலளிக்கும் வகையில் சின்மயி, “உங்களுக்கு ஆள் பலம், ட்ரோல் பலத்துக்குக் எல்லாம் குறைச்சல் இல்லை” என குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார். இதற்கு பலரும் சின்மயிக்கு ஆதரவாக இருந்தாலும் விஜய் ரசிகர்கள் தீயில் ஊற்றிய நெய் போல முன்பை விட அதிகமாக சின்மயியை ட்ரோல் செய்து வருகின்றனர்.

01:57:01 on 13 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பாகிஸ்தானின், கராச்சி பகுதி விவசாய நிலங்களில் தற்போது வெட்டுக்கிளிகளின் தொல்லை தாள முடியாமல் அங்குள்ள விவசாயிகள் அவஸ்தைப் பட்டு வருகின்றனர். இந்நிலையில், வெட்டுக்கிளிகளைப் பிடித்து, சமைத்து பிரியாணி முதலிய உணவுகளை தயார் செய்து சாப்பிடுங்கள்” என அந்நாட்டு அமைச்சர் இஸ்மயில் ரஹோ தெரிவித்துள்ளார்.

01:27:02 on 13 Nov

மேலும் வாசிக்க தினமணி

நீலகிரி மாவட்டம், குன்னுார் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில், பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழக பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனுடன் சுவாமி சிலை, திருவள்ளுவர் ஓவியங்கள் வரைவது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

12:57:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினமலர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில், ”அரசியலை ஒரு லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நினைப்பவர்கள், எங்கள் தலைவர் கமல்ஹாசனை போன்ற நேர்மையானவர்களை கண்டு பயப்படுவது நியாயம் தான்.” என தெரிவித்துள்ளார்.

12:27:01 on 13 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

நன்னடத்தைக் காரணங்களால் 2020 ஜூலையிலேயே சசிகலா வெளியே வரலாம். அதிலிருந்து அவர் ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனாலும் சசிகலா தேர்தலில் போட்டியிடுவார். காரணம் தமாங் ஏற்படுத்தியுள்ள முன்னுதாரணம். பி.ஜே.பி. ஆட்சி போட்டுக் கொடுத்த பாதை.

11:57:01 on 13 Nov

மேலும் வாசிக்க விகடன்

கர்நாடகாவில் 17 அதிருப்தி எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் சரியே என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பில் போதுமான எம்எல்ஏக்கள் பலம் இல்லாமல் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஆட்சி கவிழ காரணமாக இருந்த 17 எம்எல்ஏக்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

11:29:24 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

வேலூர் மாவட்டத்தை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என்ற புதிய மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளது. வேலூர் மாவட்டத்தில் புதிதாக வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்குவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

11:27:02 on 13 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டிய மசினகுடிக்கு சுற்றுலா சென்றவர்கள், தெப்பக்காடு நோக்கி வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சாலை ஓரத்தில் உள்ள புல்தரையில் படுத்திருந்த புலி ஒன்று, வாகனத்தை ‌கண்டதும் ஆக்ரோஷமாக பாய்ந்து வந்தது.

10:55:02 on 13 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

விருதுநகர், அல்லம்பட்டியைச் சேர்ந்த சண்முகவேல் ராஜன் அதிமுகவில் மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளார். நேற்றிரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.

10:25:01 on 13 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் அளித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக இருந்தாலும் லதா மங்கேஷ்கர் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் உள்ளது.

09:57:01 on 13 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடகத்தில் 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. சபாநாயகரின் உத்தரவு செல்லுமா? என்பதும், இடைத்தேர்தல் நடைபெறுமா? அல்லது ஒத்திவைக்கப்படுமா? அல்லது இடைத்தேர்தல் நடைபெற்றால் தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் போட்டியிட முடியுமா? என்பது தெரியவரும்.

09:45:21 on 13 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “ஆளுநர் தனிப்பட்ட கட்சிகளை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தபோது, ஏன் காங்கிரஸை மட்டும் அழைக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

09:29:18 on 13 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

எலுமிச்சையை உட்கொள்வது நமது ஆரோகியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கும். எலுமிச்சை சாறில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மனித உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க நிறைய உதவுகின்றன. வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த எலுமிச்சை நமது செரிமான அமைப்பை பலப்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

08:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

அமெரிக்காவில் சுமார் 12 ஆயிரம் பேர் தங்கும் இடமின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் அமேசான் நிறுவனம் மேரிஸ் ப்ளேஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, சியாட்டல் நகரில் 8 அடுக்கு குடியிருப்பு ஒன்றை நிறுவி வருகிறது. இதற்காக பயனாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப் போவதில்லை என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

07:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கேரளா மாநிலம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் என்பவர், முதலமைச்சரின் பொது நிவாரண திட்டத்திற்கு நிதி வழங்க திருவனந்தபுரம் தலைமை செயலகத்துக்கு சென்றிருந்தார். அப்போது இளைஞரின் கால்களை பிடித்து முதலமைச்சர் பினராயி விஜயன் குலுக்கினார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

06:55:02 on 13 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

இந்திய எஃகு நிறுவனத்துக்குச் (Steel Authority of India Limited) சொந்தமான உருக்காலைகளில் ஒன்றான பிலாய் எஃகு ஆலையில் (Bhilai Steel Plant) காலியாக இருக்கும் பல்வேறு நிலைகளிலான 296 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. www.sail.co.in எனும் இணையதளத்தில் ‘Careers’ எனும் பக்கத்துக்குச் சென்று இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

05:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க விகடன்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 123 உதவி பொறியாளர் மற்றும் உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

04:55:02 on 13 Nov

மேலும் வாசிக்க தினமணி

வோடபோன் வாடிக்கையாளர்கள் ரூ.569-ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற voice call, 100sms உள்ளிட்ட சலுகைகள் 84 நாட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

03:55:02 on 13 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

நடப்பு ஆண்டின் ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டில் 4.66 கோடி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று சர்வதேச தகவல் கழகம் தெரிவித்துள்ளது. கேஷ்பேக், எக்ஸ்சேஞ்ச், வட்டியில்லா சுலப தவணை போன்றவை ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரிக்க முக்கிய காரணங்களாக உள்ளன.

02:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

பல திரையரங்குகளில் இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கைதி திரைப்படம், வரும் நவம்பர் 25ஆம் தேதி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. ஹாட்ஸ்டார் மூலம் மொபைல் ஃபோனிலும், ஸ்மார்ட் டிவிகளிலும் குறிப்பிட்டத் தொகையை செலுத்தி எப்போது வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம்.

01:55:01 on 13 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மேலும் வாசிக்க