View in the JustOut app
X

'100' சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஏன் டி ராசாத்தி’என்னும் பாடலை வெளியிட்டுள்ளது படக்குழு.

11:15:01 on 23 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு காரணம் என கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இப்போது 310ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:55:01 on 23 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருப்பவர் பில்லா ஜெகன். லாரி தொழில் செய்துவரும் பில்லா ஜெகனிடம், தம்பி சிம்சன் பங்கு கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், பில்லா ஜெகன், துப்பாக்கியால் சிம்சனை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சிம்சன் உயிரிழந்தார்.

10:35:01 on 23 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

குஜராத், கேரளா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 117 தொகுதிகளில் 3ஆம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் 9.30 மணி வரை கேரளாவில் 6.57% வாக்குகளும், அசாமில் 12.36% வாக்குகளும், குஜராத்தில் 6.76% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

10:17:16 on 23 Apr

மேலும் வாசிக்க தினகரன்

40 வருட கால நடிப்பு அனுபவமுள்ள மோகன்லால் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அறியப்படுபவர். தற்போது அவர் தான் அடுத்து இயக்கப்போகும் புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பரோஸ் எனத் தலைப்பிடப்பட்ட 3டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கும் படத்தை மோகன்லால் இயக்கவுள்ளார்.

09:55:01 on 23 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் டெவின் ஜோன்ஸ் என்பவர் தனது வீட்டில் வளர்த்து வந்த சுமார் 18 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு அங்கிருந்து தப்பி சில தெருக்கள் தள்ளியிருந்த வீட்டின் மேற்கூரையில் சுற்றித் திரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த டெவின் அந்தப் பாம்பைப் பிடித்து மீண்டும் தனது வீட்டுக்குக் கொண்டு சென்றார்.

09:35:01 on 23 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1இல் தொடங்கி 2911ம் தேதியுடன் நிறைவடைந்தன. தற்போது பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றன. இதைத்தொடர்ந்து திட்டமிட்டபடி மே 8ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

09:15:01 on 23 Apr

மேலும் வாசிக்க தினமணி

மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள விருங்கா உயிரியல் பூங்காவில் இருக்கும் நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்கள் ‘செல்பி’க்கு அடிமையாகிவிட்டன. அங்கு பணிபுரியும் ஊழியர் செல்போனை தூக்கினாலே அந்த 2 கொரில்லாக்களும் வேகமாக வந்து போட்டோக்களுக்கு ‘போஸ்’ கொடுக்கின்றன.

08:55:02 on 23 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அவர், ‘நோட்டாவுக்கு பதிலாக நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

08:35:01 on 23 Apr

மேலும் வாசிக்க தினகரன்

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு ஜவுளிக் கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விலையுயர்ந்த ஆடைகளும் ,பொருட்களும் தீயில் எரிந்து சேதமாயின. இதுகுறித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

08:15:02 on 23 Apr

மேலும் வாசிக்க தின மலர்

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பில் 290 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில், இலங்கை பாராளுமன்றம் இன்று அவசரமாகக் கூடுகிறது. அதில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இலங்கை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பாராளுமன்றத்தில் பேச உள்ளனர்.

07:55:01 on 23 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.71 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.17 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:35:01 on 23 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத், கேரளா உள்பட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.

07:15:01 on 23 Apr

மேலும் வாசிக்க தினகரன்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரமே பிரதானம். எப்போதும் நாம் சுத்தமாக இருந்தால் ஒரு நோயும் நம்மை தீண்டாது. ஆரோக்கியம் என்பது மனிதனின் கருவறை தொடக்கம் முதல் கல்லறை வரை பயணிக்கிறது. சுகாதாரம் அல்லது சுத்தம் என்பது நலம் மற்றும் நலமான வாழ்வு கருதி ஒரு சமூகத்தால் பேணப்படும் பழக்க வழக்கங்களாகும்.

06:55:01 on 23 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

உடல் எடையைக் குறைக்க கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளே பரிந்துரைக்கப்படுகிறது. இதன் பக்க விளைவாக மலச்சிக்கல் பிரச்சனை தானாகவே வந்துவிடுகிறது. கீடோ டயட்டில் இருக்கும்போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க சில வழிகள் உள்ளன.

06:41:01 on 23 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் இணைந்து நடத்தும் மருந்து ஆய்வாளர், ஜூனியர் அனாலிஸ்ட் போன்ற பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06:25:01 on 23 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், தமது போக்குவரத்தை நிறுத்திவிட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் 150 புதிய விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் இயங்கி வந்த வழித்தடத்தில், இந்தப் புதிய விமானங்கள் இயக்கப்படும். இவற்றில், பெரும்பாலானவை உள்ளூர் விமான சேவைக்காக பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

06:11:02 on 23 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05:55:02 on 23 Apr

மேலும் வாசிக்க தினமணி

தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி இரண்டையும் கலந்து பிரெட்டின் மேல் ஜாம்முக்குப் பதில் தடவி உண்பதால் கொலஸ்ட்ரால் குறையும். இருதயத்தில் இருக்கும் தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்கள் இதை சாப்பிடுவதால் மறுபடி மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

05:40:01 on 23 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

நடிகர் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கிய சிவா தற்போது சூர்யாவை வைத்துப் படம் இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மற்ற நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

05:25:01 on 23 Apr

மேலும் வாசிக்க தின மலர்

உலகளவில், சுமார் 13 கோடி பெண்கள் சொந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்கிறது ஓர் ஆய்வறிக்கை. இதில் 80 லட்சம் பெண்கள் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். 20 முதல் 60 வயது வரையுள்ள பெண்களைக் கணக்கிட்டால், சுமார் 35 கோடி பெண்களில் 2.5%-க்கும் குறைந்த பெண்களே சொந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

05:10:02 on 23 Apr

மேலும் வாசிக்க விகடன்

புதிய ரக எஸ்யுவி உருவாக்குவதற்காக மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து செயல்படத் தயாராகியுள்ளது ஃபோர்டு. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து நடுத்தர ரக எஸ்யுவி மாடலை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கான பிளாட்ஃபார்ம் மற்றும் பவர்டிரைனை மஹிந்திரா அளிக்க உள்ளது.

04:55:01 on 23 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதுடன் நாள்தோறும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை எளிதாகக் குறைக்கலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை அளித்து வருகின்றனர்.

04:40:01 on 23 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் அபித் அலி, சச்சின் டெண்டுல்கரை பார்த்துதான் எனது கிரிக்கெட் வாழ்வைத் தொடங்கினேன் என புகழாரம் சூட்டியுள்ளார்.

04:25:02 on 23 Apr

மேலும் வாசிக்க ETV BHARAT

ஓப்போ தன் புதிய ஸ்மார்ட்போன் ஆன ஓப்போ A5sஐ சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் வந்த ஓப்போ A3s போலவே, தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 2 GB ரேம் + 32 GB சேமிப்பு வசதி மற்றும் 4 GB ரேம் + 64 GB சேமிப்பு வசதி ஆகிய இரண்டு வகைகளில் சந்தைக்கு வந்துள்ளது.

04:10:01 on 23 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நீங்கள் தூங்குவதற்கு முன்னர் பீர், ஒயின், விஸ்கி உள்ளிட்ட எந்த மதுபான வகையை அருந்தினாலும் அதனால் தூக்கம் அதிகரிக்காது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மதுபானம் அருந்துவது ஒருவரது சராசரி உறக்க நேரத்தைக் குறைக்கவே செய்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

03:55:01 on 23 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

’தேனியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் மையத்தில் 24 மணி நேரமும் அனைத்துக் கட்சி முகவர்களும் தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும்’ என தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.

03:40:01 on 23 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஏர் இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் மற்றும் கண்ட்ரோலர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

03:26:01 on 23 Apr

மேலும் வாசிக்க தினமணி

மீடூ விவகாரம் தொடர்பாக 9 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம். இக்குழுவில் சமூக ஆர்வலர் மற்றும் வக்கீல் ஆகியோரும் நியமிக்கப்பட உள்ளனர். இந்தக் குழு தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து விரைவில் வெளியாகவுள்ளது.

03:10:01 on 23 Apr

மேலும் வாசிக்க காமதேனு

மூன்று சக்கர ஆட்டோ ரிக்‌ஷா வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பஜாஜ், நான்கு சக்கர ஆட்டோ ஒன்றை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவின் முதல் குவாட்ரி சைக்கிள் என்ற பெருமையையும் கொண்டிருக்கிறது.

02:56:01 on 23 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மருங்கூர், கீரனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில், விவசாயிகள் இயந்திரம் மூலம் நடவு செய்யும் பணியை மேற்கொள்கின்றனர். இயந்திர நடவு மூலம் ஏக்கருக்கு 10 மூட்டை நெல் அதிகமாகக் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

02:26:01 on 23 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் இந்தியாவில் தஞ்சமடைந்த சிந்தி இன மக்கள் வாழும் மும்பை புறநகரான கல்யாணை ஒட்டியுள்ள உல்லாஸ் நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய உல்லாஸ் ஆறு தற்போது மாசு படிந்து குடிப்பதற்குத் தகுதியற்ற தண்ணீரைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

02:10:01 on 23 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஹரிஷ் கல்யாண் நடிக்கவிருக்கும் புதிய காமெடி படத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த ரியா சக்ரபோர்த்தி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தனுசு ராசி நேயர்களே என காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இயக்கவிருக்கிறார்.

01:56:01 on 23 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். கீர்த்தி சுரேஸ், ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் சந்தித்து நெருங்கிய தோழிகளாகி விட்டனர்.

01:26:01 on 23 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

01:10:02 on 23 Apr

மேலும் வாசிக்க தினகரன்

உயர் இரத்த அழுத்தத்தால் அவதி படுகிறீர்களா? கவலையை விடுங்கள். உங்களுக்காகவே இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் பீட்ரூட். பீட்ரூட் சாப்பிடுவதால் உடலில் ஹீமோக்ளோபின் அதிகரிக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் குறைகிறது.

12:55:02 on 23 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டபோது, 'பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் வரும் கல்வியாண்டில் உயர்த்தப்படும்,' என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சூரப்பா கூறினார்.

12:40:01 on 23 Apr

மேலும் வாசிக்க தினமணி

குழந்தைப் பருவத்தில் உடன் பிறந்தவர்களுடன் பயணிக்கும்போது சண்டைகளும் சச்சரவுகளுமே அதிகம் நிறைந்திருக்கும். ஆனால், இளமைப்பருவத்தில் மேற்கொள்ளும் பயணத்தின்போது உடன்பிறப்புகளுக்குள் பகிர்ந்துகொள்ள ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கும்.

12:29:41 on 23 Apr

மேலும் வாசிக்க விகடன்

சீன தலைநகரான பெய்ஜிங்கில் பெல்ட் அண்ட் ரோடு என்ற பொருளாதார உச்சிமாநாடு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

12:10:01 on 23 Apr

மேலும் வாசிக்க தினகரன்

கவுதம் கிருஷ்ணா இயக்கத்தில் தன்ஷிகா நடிப்பில் உருவாகி வரும் `யோகி டா' படத்திற்கு `லூசிபர்' பட பிரபலம் தீபக் தேவ் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.கே.பூபதியும், படத்தொகுப்பளராக ஜி.சசிகுமாரும், ஸ்டண்ட் இயக்குனராக கணேஷும் பணியாற்றி வருகின்றனர்.

11:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

உக்ரைன் அதிபர் தேர்தலில் அந்நாட்டின் பிரபல நகைச்சுவை நடிகர் வோலோடிமீர் ஜெல்லன்ஸ்கி பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளதாக வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

11:40:02 on 22 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். பசி உணர்வுகள் அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும்.

11:29:56 on 22 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டையை அடுத்த பாலமலை பகுதியில் அதிக அளவில் வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில், தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் ஒன்றை தெருநாய்கள் கடித்ததில் அது பரிதாபமாக உயிரிழந்தது.

11:10:01 on 22 Apr

மேலும் வாசிக்க ETV Bharat

2013ஆம் ஆண்டு, டிசிஎஸ் மற்றும் தபால் துறை ரூ.1,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் செய்துகொண்டன. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இந்திய தபால் துறையுடன் இணைந்து 1.5 லட்சம் தபால் நிலையங்களை நவீனமயமாக்கி வருகிறது.

10:56:01 on 22 Apr

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

10:40:01 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சென்னையின் ஒரு நாளைய தண்ணீர் தேவை சுமார் 90 கோடி லிட்டர். ஆனால் மெட்ரோ நிர்வாகத்தால் 50 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்க முடிகிறது. இதனால் ஒருநாளைக்கு தேவைப்படும் தண்ணீரில் மிக சொற்ப அளவே மக்களுக்கு கிடைக்கிறது.

10:26:01 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

குஜராத்தில் ராஜ்சமதியால கிராமத்தில், ஊரில் எந்த அரசியல் கட்சிகளும் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும் அது மக்களுக்கு இடையூறாக இருக்கும் என்றும், அதே நேரம் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் அப்படி வாக்களிக்கவில்லை என்றால் அவர்களுக்கு ரூ.51 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

10:10:01 on 22 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.34½ லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தனர். மேலும் 4 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

09:56:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், தமது போக்குவரத்தை நிறுத்திவிட்ட நிலையில், நடப்பு நிதியாண்டில் 150 புதிய விமானங்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் இயங்கி வந்த வழித்தடத்தில் , இந்த புதிய விமானங்கள் இயக்கப்படும். இவற்றில், பெரும்பாலானவை உள்ளூர் விமான சேவைக்காக பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

09:40:01 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

உடல் எடையை குறைக்க ஒரே வழி புரதம் நிறைந்த உணவை அதிகம் உட்கொள்வது தான். புரதம் நம் பசியை போக்கி, மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும். புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள கொழுப்பு குறைந்து, தசைகள் வலுவாக இருக்கும்.

09:25:01 on 22 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கஜா புயல் பாதிப்பிற்குப் பின் பயிரிடப்பட்ட வேர்க்கடலைக்கு உரிய விலை கிடைக்காததால் நாகை மாவட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், தமிழக அரசே விலையை நிர்ணயித்து வேர்க்கடலையை கொள்முதல் செய்து உரிய விலை கொடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

09:10:01 on 22 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள டி.கே.எம். பெண்கள் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

08:56:02 on 22 Apr

மேலும் வாசிக்க மின்னம்பலம்

’சர்க்கரை நோயாளிகள் விரதமிருக்கலாம் என்றோ அல்லது கூடாது என்றோ பொதுவாக கூறிவிட முடியாது. நோயாளிகளின் தன்மைகளைக் கொண்டே தீர்மானிக்க முடியும்...’ என்கிறார் சர்க்கரை நோய் நிபுணர் நந்திதா அருண்.

08:40:02 on 22 Apr

மேலும் வாசிக்க விகடன்

ஆசியாவிலேயே முதன் முறையாக, தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக பொறியியல் துறையில் பயிலும் மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட பலூன் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

08:26:01 on 22 Apr

மேலும் வாசிக்க காமதேனு

பிராணயாமா என்பது ‘பிராண’ மற்றும் ‘அயாமா’ என்ற வார்த்தைகளின் கூட்டாகும். ‘பிராண’ என்றால் அதிமுக்கிய ஆற்றல் திறன் என்று பொருளாகும். அதே போல் ‘அயாமா’ என்றால் கட்டுப்பாடு என்று பொருளாகும். பிராணயாமா என்பது ஒரு உன்னத உடற்பயிற்சியாகும்.

08:10:02 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னையில் மைலாப்பூரில் பைக் ரேஸில் ஈடுபட்டதாக 6 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைதான இளைஞர்களிடம் இருந்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்களில், குரூப் - ‘சி’ (Group-'C') பிரிவின் அடிப்படையில் பல்வேறு பணிகளுக்கான தேர்வு பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

07:53:21 on 22 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பூண்டி ஏரியில் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருவதால், விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து நீர் எடுத்து சென்னை பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

07:40:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினமணி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டால் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட தயாராக இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

07:25:02 on 22 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார். வெங்கையா நாயுடுவை சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் ஆகியோர் வரவேற்றனர்.

07:24:07 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

பிரேக் இல்லாமல் முழு வீச்சில் நடக்கும் ’தர்பார்’ பட ஷூட்டிங்கில் கலந்துக் கொண்ட ரஜினி, மக்களவைத் தேர்தலுக்காக சென்னை திரும்பினார். தற்போது மீண்டும் அவர் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது ஷூட்டிங் ஸ்பாட் படங்கள் வெளியாகி இணையத்தைக் கலக்கி வருகின்றன.

07:10:01 on 22 Apr

மேலும் வாசிக்க ie தமிழ்

நிதின் சத்யா தயாரிக்கும் படத்தில் வெங்கட் பிரபு வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் வைபவ் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், வாணி போஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஈஸ்வரி ராவ், பூர்ணா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

06:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க விகடன்

சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஐ.பி.எல். இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தின் மூன்று கேலரிகளுக்கு மாநகராட்சி அனுமதி அளிக்காததால் இடவசதி கருதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

06:40:26 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

கடந்த ஒரு மாதமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அருவி, தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது. இதையடுத்து, நேற்று பெய்த கோடை மழை காரணமாக, அருவியில் மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்ட ஆரம்பித்துள்ளது. அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினரும் அனுமதி அளித்துள்ளதால், அங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

06:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம் மருத்துவமனையின் கேன்டீன் சுவர் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

06:21:12 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்ட ஆட்சியர் அனுபமா காவல் துறையினருடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வீடியோவாகப் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

06:15:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

நாமக்கலில் மழையின்மையால் தண்ணீர் இன்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் பயிர்கள் மட்டுமில்லாமல் பாக்கு மரங்கள், தென்னை மரங்கள் உள்ளிட்டவைகள் காய்ந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

05:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க ETV BHARAT

புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில் இன்று மாலை சுமார் 5 மணியளவில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

05:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

ஜோதிகாவின் அடுத்தடுத்த படங்களை எஸ்.ராஜ் மற்றும் கல்யாண் இயக்கியுள்ளனர். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் முடிந்துள்ளது. கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவும் கலந்துகொண்டு படக்குழுவை வாழ்த்தினார்.

05:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

நாடு முழுவதும் நீட் தேர்வுகள் மே மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய உடைகள் குறித்தும், தேசிய தேர்வு ஏஜன்சியான NTA அண்மையில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

04:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நெய்வேலி அருகே கும்பகோணம் சென்னை சாலையில் கண்ணுத்தோப்பு பாலத்தில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதின. இதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இதில் காயமடைந்த 20 பேரில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

04:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கையின் கொழும்பு பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தில் இருந்து 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெடி குண்டுகளைச் செயலிழக்க செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

04:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் 19வது ஓவரில் ஏன் சிங்கிள் எடுக்கவில்லை என்பது குறித்துப் பேசிய தோனி, ’ஆடுகளம் புதிதாகக் களமிறங்கியவர்களுக்கு அதிக சவாலாக அமையும் எனக் கருதியதால், சிங்கிள் வேண்டாம் என நினைத்தேன்’ என விளக்கமளித்துள்ளார்.

03:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஈஸ்டர் நாளன்று இலங்கையில் அடுத்தடுத்து எட்டு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடுத்து இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகனப்படுத்தப்படுவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவித்துள்ளார்.

03:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினமணி

சிதம்பரம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் ஏசி பேருந்தில், பழுது ஏற்பட்டு புகை வந்ததால், இறக்கிவிடப்பட்ட பயணிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் போலீசார் பயணிகளை வேறோரு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

03:15:02 on 22 Apr

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

02:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினத் தந்தி

இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.

02:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

டிக் டாக் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஏப்ரல் 24ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படாவிட்டால் அதன்மீதான தடை நீக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து, நாளை மறுநாள் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

02:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

தோனி, 48 பந்தில் 84 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனை அவரது ரசிகர்கள் "தோனி ஃபார் பிரதமர்" என்ற பதிவுகள் மூலம் வைரலாக்கினார். "ராகுல்காந்தி, மோடியை மறப்போம் தோனிதான் அடுத்த பிரதமர்" என்று ட்விட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

01:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க NDTV தமிழ்

'மோடியின் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறாரே தவிர அவருக்கு வாக்களிக்க ரஜினிகாந்த் கூறவில்லை,' என, ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்தார். மேலும், ‘ரஜினி - கமல்ஹாசன் நட்பு எப்போதும் நிலைக்கும். அரசியலுக்கு கமல் முன்கூட்டியே வந்துவிட்டார், ரஜினிகாந்த் விரைவில் வருவார்,’ எனவும் தெரிவித்தார்.

01:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க தி இந்து

அமேதி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது. ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமை குறித்து சுயேச்சை வேட்பாளர் ஒருவர் கூறிய ஆட்சேபத்தை தேர்தல் அதிகாரி நிராகரித்தார்.

01:15:01 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயற்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்த பரிசோதனை செய்வதற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

12:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கத்தார் நாட்டின் தோகா நகரில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், ஆசிய தடகளப் போட்டிகளில் இந்திய அணி முதல் நாளில் 5 பதக்கங்களை வென்றுள்ளது. அன்னு ராணி, அவினாஷ் சாபில் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

12:37:01 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

காஞ்சிபுரத்தில் மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்ததாக நாடகமாடிய தந்தை, சகோதரன் கைது செய்யப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

12:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

'ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன்,' என உச்சநீதிமன்றத்தில் ராகுல்காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

12:34:15 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 6 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஆம் ஆத்மீ கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

12:15:05 on 22 Apr

மேலும் வாசிக்க நக்கீரன்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டி.டி.வி.தினகரன் மனு அளித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனுவை ஒப்படைத்தார்.

12:07:45 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இலங்கையில் தேவாலயங்களில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பத்தை தொடர்ந்து, புதுச்சேரியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.

11:55:08 on 22 Apr

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

11:44:18 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இன்று சர்வதேச பூமி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பூமியைப் பாதுகாக்க வலியுறுத்தும் கூகுள் டூடுள், பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் பூமியில் வாழும் அரிய உயிரினங்களின் சிறப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

11:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

இலங்கையில் மேலும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் தங்கும் இடம், வாகனங்கள், பொது இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ளது.

11:14:08 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கையில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் நடத்தப்பட்ட அடுத்தடுத்து தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் உள்பட 215 பேர் பலியாகினர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க தினத்தந்தி

காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரும் மே 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அமமுக கட்சி வெளியிட்டுள்ளது.

10:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.டோனி, ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இவர் 203 சிக்சர்கள் அடித்துள்ளார்.

10:15:03 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த பானத்தை தினமும் அருந்திவர பெண்களுக்கு வயிற்று பகுதியில் மற்றும் இடுப்பு பகுதியில் சேரும் தேவையற்ற சதைகளை குறைக்க இந்த வெந்தய டீ பயன்படுகிறது.

09:55:01 on 22 Apr

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ் பிளேடு மோட்டார்சைக்கிளின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் பண்டிகை காலத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

09:35:01 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் இருந்த அறைக்கு சென்ற விவகாரம் தொடர்பாக மேலும் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கலால்வட்டாட்சியர் சம்பூர்ணத்தை தொடர்ந்து 3 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் நடராசன் உத்தரவிட்டுள்ளார்.

09:15:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள 40 ஊராட்சிகளில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்புநிலை திரும்பியதை அடுத்து 144 தடை உத்தரவை வாபஸ் பெறுவதாக புதுக்கோட்டை ஆட்சியர் உமா மகேஸ்வரி அறிவித்துள்ளார்.

08:57:52 on 22 Apr

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கை குண்டுவெடிப்பில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் இலங்கையில் 8 இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.

08:55:02 on 22 Apr

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மோட்டோ இசட்4 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விவரங்கள் இணையத்தில் லீக் ஆக்யுள்ளது. அதன்படி இதில் 48 எம்.பி. பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. இது குவாட் பிக்சல் தொழில்நுட்பத்தில் நான்கு பிக்சல்களை ஒன்றிணைத்து ஒற்றை பெரிய பிக்சலில் புகைப்படங்களை 12 எம்.பி. தரத்தில் வழங்கும் என கூறப்படுகிறது.

08:35:02 on 22 Apr

மேலும் வாசிக்க மாலை மலர்

மேலும் வாசிக்க