View in the JustOut app
X

சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ். வளாகத்தில் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட கட்டிடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’அரசு மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறை என்பதே கிடையாது’ என்று கூறியுள்ளார்.

01:55:01 on 19 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய சிவசேனா, ’தேசம் கோப அலைகளையும், அரசியல் வெற்றிகளையும் பார்த்து வருகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சனையும் தீர்க்கப்படவில்லை. ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதும் தடுக்கப்படவில்லை’ என கூறியுள்ளது.

01:40:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினத் தந்தி

சமீபத்தில் நடந்த ‘எல்.கே.ஜி’ திரைப்பட நிகழ்ச்சியில் பேசிய நடிகை பிரியா ஆனந்த் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ’இந்தப் படத்தில் நான் பேசிய அரசியல் வசனங்களுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை’ என்று கூறியுள்ளார்.

01:26:01 on 19 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

திருவண்ணாமலையில் செங்கம் பகுதியில் திருமண மண்டபத்திற்கு சுகாதாரச் சான்று வழங்க ரூ.6,000 லஞ்சம் வாங்கிய சுகாதாரப் பணிகள் இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

01:10:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினகரன்

தங்கம் இறக்குமதி நிலவரம் குறித்து வர்த்தக அமைச்சகம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில், தங்கம் இறக்குமதி 5 சதவீதம் சரிந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

12:56:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினகரன்

ராணா நடிப்பில், பிரபு சாலமன் இயக்கும் ‘காடன் படத்துக்காக, பிரமாண்ட ஆக்‌ஷன் காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்துப் பேசிய படக்குழு,‘இதற்காக 8 கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவு இந்தக் காட்சிகள் பேசப்படும்,’ என்று தெரிவித்துள்ளது.

12:40:01 on 19 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்தியாவில் எண்ணெய் வித்து சாகுபடியை அதிகரித்து, அதன்மூலம் கிடைக்கும் தாவர எண்ணெயைப் பொது விநியோகத் திட்டத்தில் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

12:26:01 on 19 Feb

மேலும் வாசிக்க தினமணி

முதுகு வலி, கழுத்து வலி உள்ளவர்கள் இந்த சுப்தவஜ்ராசனத்தைத் தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனைக் காணலாம். மேலும், இந்த ஆசனம், ஜனனேந்திரிய பாகங்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளித்து, தசை நாளங்கள், நரம்புக் கோளங்கள் முதலியவற்றை நன்கு இயங்கச் செய்கிறது.

12:10:01 on 19 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் புதிதாக இரண்டு ஹைட்ரோ கார்பன் மண்டலங்களை நிறுவ மத்திய அரசு ஏலம் நடத்தவுள்ளது. இந்த மூன்றாம் கட்ட ஏலமானது வரும் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது டெல்டா விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க நக்கீரன்

வடலூரில் சமூக விரோதிகளுக்குச் சிம்ம சொப்பனமாகவும், பொதுமக்களிடம் அன்பாகவும் இருந்த இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் விழுப்புரம் மாவட்டத்துக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ள செய்தி வடலூர் பகுதி மக்களைக் கவலையடையச் செய்துள்ளது.

11:40:01 on 18 Feb

மேலும் வாசிக்க விகடன்

உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு, 2022 FIFA உலக கோப்பை தொடைரை காண அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டு கத்தாரில் கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெறுவுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடருக்கான மூத்த செயல் அதிகாரியாக நாஸர் காட்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.

11:25:01 on 18 Feb

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

”ரஜினிகாந்த் யாரையும் தப்பா பேசமாட்டார். ரஜினிகாந்தை நிறைய பேர் திட்டும்போது கூட அவரிடம் நான் அதைப் பத்திக் கேட்டா, ‘தம்பி, அதெல்லாம் விடுங்க ஆண்டவன் பார்த்துபார்’னு சொல்லிடுவார்” என நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

11:10:01 on 18 Feb

மேலும் வாசிக்க விகடன்

தமிழ்நாடு சமூகப் பாதுகாப்பு சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆர்.ஜே.பாலாஜி, ப்ரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எல்.கே.ஜி. இந்தத் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, ‘முன்னாள் அரசியல் பிரமுகர் நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுவதாக,’ கலங்கியபடி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

10:41:01 on 18 Feb

மேலும் வாசிக்க ie தமிழ்

’10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்களை, முக்கியப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டாம்,’ என அரசுத் தேர்வுத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

10:26:01 on 18 Feb

மேலும் வாசிக்க EENADU

இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது சொந்தக் கட்சி எம்.பி.க்களுக்கு எழுதிய உருக்கமான கடிதத்தில், தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பிரெக்ஸிட் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

10:10:01 on 18 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

'விஸ்வாசம்' படப்படிப்பின்போது, கேரவனில் அஜித்துடன் அமர்ந்திருக்கையில், விஜய்யின் தெறி பாடல்கள் டிவியில் பார்த்த அஜித் கூறியதை ரமேஷ் திலக் பகிர்துள்ளார். அதில், “விஜய் பிறக்கும் போதே ஒரு டான்சராக பிறந்துள்ளார்,” என்று அஜித் சாதாரணமாக கூறியதாக ரமேஷ் தெரிவித்தார்.

09:56:02 on 18 Feb

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளதாக வந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

09:41:01 on 18 Feb

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஜப்பானில் நடந்த பாரம்பரிய திருவிழா ஒன்றில், கிட்டத்தட்ட நிர்வாணமாக இருந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் இரண்டு புனித குச்சிகளைத் தேடும் போட்டியில் ஈடுபட்டனர். 'சிங்கி' என்றழைக்கப்படும் சுமார் 20 செ.மீ நீளமுள்ள புனித குச்சிகளை கண்டெடுப்பவர் அந்த ஆண்டின் அதிர்ஷ்ட நபராக கருதப்படுவார்.

09:26:02 on 18 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நேரவிரயம், பாதுகாப்பின்மை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சிரமங்களால் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மாணவர்களின் கல்விக் கனவைக் காப்பாற்றும் விதமாக பெரும்பாக்கத்தில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்குக் சிறப்பு நேரடி பேருந்து வசதியை கடந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது தமிழக போக்குவரத்து துறை.

09:10:02 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

’திமுகவின் ஊராட்சி சபை கூட்டத்தை குறைகூறிய கமல்ஹாசனின் அரசியல், அரைவேக்காட்டுத்தனம்,’ என முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், ‘கமல்ஹாசனுக்கு இதெல்லாம் தெரிய நியாயமில்லை என்றும், அந்த காலகட்டத்தில் அவர் கதாநாயகியுடன் டூயட் பாடிக்கொண்டு இருந்திருப்பார்,’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பஜாஜ் நிறுவனத்தின் அடுத்த பைக், 2019 பஜாஜ் டாமினார் ஆகும். இன்னும் சில வாரங்களில் இந்த பைக் விற்பனைக்கு வரவுள்ளது. அதற்கு முன்பே, இந்த பைக்கின் மெக்கானிக்கல் மற்றும் டெக்னிக்கல் விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.

08:41:01 on 18 Feb

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பான வீடியோ ஆவணங்களை வெளியிட்ட சுற்றுச்சுழல் பாதுகாப்பு இயக்கத்தின் செயற்பாட்டாளர் முகிலனை கடந்த 16ஆம் தேதி முதல் காணவில்லை என தகவல் வெளியாகின. இந்நிலையில், தற்போது முகிலனை தமிழகக் காவல்துறை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாக எவிடென்ஸ் கதிர் குற்றம் சாட்டியுள்ளார்.

08:36:26 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணியாக போட்டியிட உள்ளது. மராட்டியத்தில் பாஜக 25 தொகுதிகளிலும் சிவசேனா 23 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. பாஜக தலைவர் அமித்ஷாவுடன் சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே பேச்சில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

08:35:45 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

அதிமுக - பாஜக கூட்டணி பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுகவுடன் பாஜக கூட்டணியை இறுதி செய்ய அமித்ஷா நாளை சென்னை வருகிறார். ஏற்கனவே பியூஷ் கோயலுடன் அதிமுக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு அறிவிப்பும் அமித்ஷா வெளியிட வாய்ப்புள்ளது.

08:26:34 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

'காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலை வைத்து பாஜக அரசியல் செய்ய நினைக்கிறது,' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

08:26:01 on 18 Feb

மேலும் வாசிக்க காமதேனு

ஈரோடு மாவட்டத்தின் தவிட்டுப் பாளையத்தில் மத்திய அரசின் உதவியுடன் விவசாயி நியாய விலைக் கடை தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கடையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விலைக்கே பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:10:01 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

விமான நிலையங்களைத் தனியார் மயமாக்குவதைக் கண்டித்து நாடுமுழுவதும் விமான நிலைய ஊழியர்கள் வரும் 20ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

07:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

கேரளாவில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான கிரிபேஷ் மற்றும் சரத் லால், மர்ம கும்பலால் வெட்டிக்கொலைச் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ரீதியான மோதலே இந்த கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:41:01 on 18 Feb

மேலும் வாசிக்க தினமணி

பிரிவினைவாத தலைவர்களான மீர்வாய்ஜ் உமர் பரூக், ஷபீர் ஷா, அப்துல் கனி பட், பிலால் லோன் மற்றும் ஹாசிம் குரேஷி ஆகிய 5 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை காஷ்மீர் நிர்வாகம் திரும்பப் பெற்றது. இந்நிலையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட APHC, 'போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் இல்லையென்றாலும் கவலையில்லை,’ என தெரிவித்துள்ளது.

07:25:01 on 18 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிடகோரிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆலையைத் திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்துச் செய்து, ஆலையைத் திறக்கத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

07:15:23 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஹோண்டா மோட்டர்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இளம் தலைமுறையினருக்கான புதிய ’சிபி300ஆர்’ இருச்சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. முதல் முறையாக பெரிய பைக்கில், கம்பீரத்துடன் அமர்க்களமான பயணத்தை விரும்புபவர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.

07:10:03 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

விவோ நிறுவனம் தனது பாப்-அப் செல்ஃபி வசிதி கொண்ட ஸ்மார்ட்போனான விவோ வி15 ப்ரோ மொபைல் போனை வரும் 20ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ஆனால் அறிமுக தேதிக்கு முன்னரே இணையத்தில், அதன் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கிரேடியன்ட் ப்ளூ மற்றும் கிரோடியன்ட் ரெட் ஆகிய நிறங்களிலேயே வி15 இருக்க வாய்ப்புள்ளது.

06:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க NDTV தமிழ்

’ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்குத் தடை விதித்ததன் மூலம் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது’ என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

06:35:02 on 18 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற இன்னும் 100 நாட்களே உள்ளன. குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சு இந்தியாவிற்குப் பெரும் பலமாகக் கருதப்படுகிறது. இதனால் விராட் கோலி அணியின் தலைமையில் பவுலிங்கிற்கு மட்டும் குல்தீப் யாதவிற்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவரை அதற்குத் தலைமை வைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

06:15:01 on 18 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து ’1999இல் கந்தகாரில் மசூத் அசாரை விடுதலை செய்தது யார்? அதற்கு யார் பொறுப்பு? ஏன் ராணுவ வீரர்கள் உயிரிழக்க வேண்டும்? ’ போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்.

05:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க தினத் தந்தி

காஷ்மீரை ‘ஆசாத் காஷ்மீர்’ என்று கமல் கூறியிருப்பதுதான் வடஇந்திய மீடியாக்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. ‘அது எப்படி காஷ்மீரைப் பிரிக்க வேண்டும் என்ற தொனியில் கமல் பேசலாம்? அப்போ, அவர் பிரிவினைவாதியா?’ என்ற ரீதியில் விவாதங்கள் சென்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு கமல் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

05:53:20 on 18 Feb

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுப்பாக்கத்தில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், 500 வழித்தட எண் பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது பேனட் மீது மாணவர்கள் கால் வைத்ததாகவும், இதற்கு ஓட்டுநர் ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

05:44:54 on 18 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திமுகவின் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் 20 ஆயிரம் பேர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி இணைப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:39:23 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7

சென்னை வேப்பேரியில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ’எதிர்காலத்தில் ஒவ்வொரு வீடுகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடையும்போது நாமும் அதை அறிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

05:35:02 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

”சமூகத்துக்காகப் போராடுபவர்களை பயணங்களின் போது கைது செய்வது காவல்துறைக்கு ஃபேஷனாகி உள்ளது. அன்று ஐ.நா.வில் பேசி நாடு திரும்பிய திருமுருகன் காந்தியும் இவ்வாறுதான் கைது செய்யப்பட்டார். நக்கீரன் கோபாலையும் இதுபோலவே விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்தனர்.”
என எவிடென்ஸ் கதிர் குற்றம் சாட்டியுள்ளார்.

05:32:25 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ்18 தமிழ்நாடு

”இந்தியக் குடியரசுத் தலைவராக கிரண்பேடியை நியமிக்காததற்கு பிரதமர் மோடிக்கு நான் நன்றி தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் தன்னுடைய தவறான சித்தரிப்புப் பழக்கம் மற்றும் நுனிப்புல் மேயும் வழக்கத்தால், நாடு முழுக்க குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி விடுவார்.” என புதுவை முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

05:28:28 on 18 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

”பா.ஜ.க.-அ.தி.மு.க. இடையே எவ்வித கூட்டணியும் இல்லை. எதிர்கட்சிகளுக்கு வழங்கக்கூடிய மக்களவை துணை தலைவர் பதவியை நான் வகித்து வருகிறேன். எங்களுக்குள் கூட்டணி இருந்தால் இந்த பதவியை எனக்கு தர முடியாது. இதுவரை அது போன்ற ஒரு நிலை ஏற்படவில்லை.” என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

05:20:16 on 18 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

நாகை, தோப்புத்துறை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக 5 படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்களின் 4 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து இந்திய கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:16:14 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, ‘நடிகர்கள் எல்லோரும் கருப்பு மற்றும் வெள்ளையில்தான் சம்பளம் வாங்குகிறோம். இது கமலுக்கு நன்றாகத் தெரியும். திமுகவை ஊழல் மூட்டை எனக் கூறும் கமல், ஊழல் செய்யாமல் அரசியலுக்கு வந்து பரிசுத்த ஆவியாக இருந்தால் நாட்டுக்கு நன்மை’ என்று கூறியுள்ளார்.

05:15:02 on 18 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

அதிமுகவுடன் கூட்டணி உருவாவதை தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகள் விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கடுமையான துயரங்களை அனுபவித்ததாகவும், தொண்டர்கள் பலரும் அதிமுக எதிர்ப்பு மனநிலையில் உள்ளதாகவும் கூறுகின்றனர் தேமுதிக வட்டாரத்தில்.

04:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க விகடன்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரரின் உடலுடன் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானம் செல்ஃபி எடுத்ததாக நெட்டிசன்கள் விமர்சித்தனர். இந்நிலையில் இதுகுறித்து அவர், ’வீரரின் உடலுடன் நான் செல்ஃபி எடுக்கவில்லை. உடல் அடங்கிய பெட்டியின் அருகே நின்றபோது என்னைப் புகைப்படம் எடுத்தனர்’ என தெரிவித்துள்ளார்.

04:35:01 on 18 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்திய திரைப்படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் நடிகர்களை நடிக்க வைக்கும் அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு திரைப்பட தொழிலாளர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

04:15:01 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் 160வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’புதிதாக அமையும் மத்திய அரசில் அதிமுகவின் பங்கு நிச்சயமாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

03:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

புல்வாமா தாக்குதலுக்கு அதிநவீன சாப்ட்வேர்களைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நவீன சாப்ட்வேர்களில், புல்வாமா தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்ற விபரங்கள் முழுமையாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

03:35:01 on 18 Feb

மேலும் வாசிக்க தின மலர்

ஒவ்வொரு ஊதியக்குழு பரிந்துரையின்போதும் அரசு ஊழியர்கள்-தனியார் ஊழியர்கள் இடையேயான ஊதிய இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது என ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகள் வகுக்கக் கூடாது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

03:15:01 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிடிஎஸ் நிறுவனத்திற்கு கட்டிட அனுமதி வழங்க தமிழக அரசு ரூ.26 கோடி லஞ்சம் பெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், சிடிஎஸ் நிறுவனத்திடம் லஞ்சம் பெற்று அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு அரசு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

02:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்த பின்னர், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதா? அல்லது ரத்து செய்வதா? என்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

02:35:01 on 18 Feb

மேலும் வாசிக்க தினத் தந்தி

பாதுகாப்புப் படை வீரர்களை வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்ல விமானங்களைப் பயன்படுத்தும் திட்டத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதன்படி ஸ்ரீநகர்-ஜம்மு இடையே வீரர்களின் பயணத்துக்காக வாரத்துக்கு நான்கு நாட்களுக்கு தனி விமானம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:15:02 on 18 Feb

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பெண் டிக்கெட் பரிசோதகர்களை மட்டுமே கொண்டுள்ள கோவை-பெங்களூரு ‘டபுள் டெக்கர்’ உதய் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. கோவையிலிருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ‘டபுள் டெக்கர்’ (இரண்டடுக்கு) ரயில் சேவை 2018 ஜூன் 8ஆம் தேதி தொடங்கியது.

01:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க காமதேனு

புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை கொண்டாடிய 4 மாணவிகள் மீது தேச துரோக வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, சமூக வலைதளங்களில் பயங்கரவாதத் தாக்குதலைப் புகழ்ந்தது தொடர்பாக இதுவரை 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

01:35:01 on 18 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

’ஸ்டெர்லைட் வழக்கு உத்தரவு, மக்களின் அமைதிக்கு கிடைத்த தீர்ப்பு, அரசின் உத்தரவுப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

01:15:01 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று கிராமுக்கு ரூ. 6 உயர்ந்து ஒரு கிராம் ரூ.3,196க்கும், ரூ. 48 உயர்ந்து ஒரு சவரன் ரூ.25,568க்கும் விற்பனையாகிறது.

12:59:51 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கை எழும்பூர் நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், 4 வார காலத்தில் டிடிவி தினகரன் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12:56:57 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ரஜினியைப் பொறுத்தவரை இப்போதைய சூழ்நிலையில் எந்த கட்சியையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. முக்கியமாக ஆளுங்கட்சிகளை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. போட்டியோ ஆதரவோ தெரிவித்தால் நிச்சயம் பகைத்துக்கொள்ள வேண்டி வரும்.

12:54:54 on 18 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரை உடனே இஸ்லாமாபாத் திரும்ப பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீரில் நிலவி வரும் பதற்றமான சூழலையடுத்து, தமது தூதரை அவசர ஆலோசனைக்கு பாகிஸ்தான் அழைத்துள்ளது.

12:54:13 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திரா வரை, காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுவதால் உள் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

12:52:28 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தர்மபுரி, கிருஷ்ணகிரி திருவண்ணாமலை மாவட்டங்களில் டாஸ்மார் ஊழியர்களைத் துப்பாக்கியால் சுட்டு பணத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலைத் தர்மபுரி போலீஸார் கைது செய்துள்ளனர். கைதானாவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த சின்னதுரை மகன் வெங்கடேசன், நாகேஸ்வரன் மகன் பரதன் ஆகியோர் ஆவர்.

12:44:53 on 18 Feb

மேலும் வாசிக்க விகடன்

பேச்சுவார்த்தை நடத்த இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு வருவதற்கு புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து கிரண்பேடியின் அழைப்பை ஏற்று பேச்சு வார்த்தைக்கு நாராயணசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

12:33:14 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முன்வைத்த வாதங்கள் இந்த வழக்குக்கு வலு சேர்ப்பவையாக அமைந்துள்ளன.

12:32:40 on 18 Feb

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஈராக் நாட்டில் முதல் முறையாக இளம்பெண்ணிற்கு 6 பெண் மற்றும் 1 ஆண் என்று 7 குழந்தைகள் பிறந்து நலமுடன் உள்ளனர். ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் என்பது உலகில் இது இரண்டாவது முறையாகும்.

12:29:02 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி 6வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவரின் போராட்டத்தை விமர்சித்து அண்டங்காக்கா படத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

12:10:39 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 4 ஜி சேவை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்களுக்கு பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

12:06:14 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

சென்னை மாநகரில் 33 காவல் உதவி ஆணையர்களைப் பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அதில், ஆவடி சரக உதவி ஆணையராக ஜான் சுந்தர், கோயம்பேடு சரக உதவி ஆணையராக ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

11:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், பாலகிருஷ்ணரெட்டி மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

11:43:08 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

"ஆஃபிஸ்ல வேலை செய்யலாம்னு உட்கார்ந்தா மீட்டிங்னு அழைச்சிட்டு போயிடுறாங்க. மீட்டிங்ல என்ன வேலை செஞ்சீங்கன்னு கேட்கிறாங்க" - இது தமிழக ஐ.டி ஊழியர்கள் வாட்ஸ் ஆப் குழுக்களில் உலவும் மிகவும் பிரபலமான வசனம்.

11:32:51 on 18 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

’ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது,’ என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும், ‘தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது,’ என்றும் தெரிவித்தார்.

11:26:03 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் சிஇஓ ராம்நாத் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், ‘ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பது குறித்து உயர்நீதிமன்றக் கிளையை மீண்டும் அணுகுவோம்,’ என தெரிவித்தார். மேலும், ‘8 மாதங்களாக மூடப்பட்டுள்ளதால் ஆலை பாதுகாப்பு எங்களுக்கு கவலைத் தருகிறது,’ எனவும் தெரிவித்தார்.

11:23:56 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மீதான தாக்குதலில் தொடர்புடையோருக்கு பயங்கரவாதிகள் இருவரும் உதவியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

11:17:27 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்துப் பேசிய, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘ஸ்டெர்லைட் தடை மகிழ்ச்சியளிக்கிறது; என் வாழ்க்கையிலேயே மகிழ்ச்சியான நாள் இன்றுதான்,’ என தெரிவித்தார்.

11:10:20 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா ஆகியோர் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு, வேதாந்தா நிறுவன மனு, வைகோ மனு மீதான வழக்கில் தீர்ப்பு வழங்கினர். அதில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை விதித்தனர். மேலும்,சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

10:49:17 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆலையைத் திறக்க அனுமதிக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்துச் செய்து, ஆலையைத் திறக்கத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10:39:37 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கினாலும், மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்,’ என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

10:33:38 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 20 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. திடீரென பெய்த மழையால் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

10:33:14 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

ஸ்டெர்லைட் தீர்ப்பு இன்று வெளியாவதை முன்னிட்டு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 1 எஸ்.பி தலைமையில், 2 டி.எஸ்.பிக்கள் மற்றும் 200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10:31:05 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்துத் தெரிவித்த தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மாயமானது குறித்து எழும்பூர் ரெயில்வே போலீசில், பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

10:27:13 on 18 Feb

மேலும் வாசிக்க தினத்தந்தி

சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ள கடை முன்பு நேற்று நள்ளிரவு பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். கொலையுண்ட பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10:26:00 on 18 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

’இந்தியாவில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையுடன் தற்போது, வேலையில் இருப்பவர்களும் வேலையை இழக்கக்கூடிய சூழல் உருவாகி வருகிறது,’ என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

10:25:07 on 18 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

தேனி மாவட்டம் சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளனர். தூவானம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டதாலும், மழை இல்லாத காரணத்தினாலும் சுருளி அருவி கடந்த ஒரு வார காலமாக வறண்டு கிடக்கிறது.

10:24:44 on 18 Feb

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. முன்னதாக புல்வாமாவின் பிங்லான் பகுதியில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

10:20:12 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து, இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.

10:12:14 on 18 Feb

மேலும் வாசிக்க மாலை மலர்

'குஜராத் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்,' என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து குஜராத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

09:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

காஷ்மீரின் பல பகுதிகளில் இன்று காலை 4.23 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகி உள்ளது. இதனால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

09:35:02 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இன்ஜினியரிங் மாணவர்களை வேலைக்கு தகுதியானவர்களாக உருவாக்கும் வகையில், இன்போசிஸ் நிறுவனம் டிஜிட்டல் முறையிலான இ கோர்ஸ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இலவசமாக அளிக்கப்படும் இந்த பயிற்சி முடிந்தம் இன்போசிஸ் நிறுவனம் சான்றிதழும் வழங்குகிறது.

09:15:02 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து முதல்வர் நாராயணசாமி 6ஆவது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

08:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 13 காளைகளை அடக்கிய மதுரை வீரர் கார்த்தி 2 வீட்டு மனைகளும் ஒரு கார் மற்றும் தங்க நாணயங்களையும் தட்டிச் சென்றார். முதல் பரிசு மட்டுமல்ல இரண்டாம் மூன்றாம் பரிசும் சிறந்த காளைக்கான முதல் பரிசையும் மதுரையே வென்று அசத்தியது.

08:35:01 on 18 Feb

மேலும் வாசிக்க விகடன்

15-02-2019 அன்று நிஃப்டி இறக்கத்துடன் முடிவடைந்திருந்தது. தற்போதைய டெக்னிக்கல் சூழ்நிலையில் அனைத்துவிதமான டிரேடர்களும் வியாபாரம் செய்வதை தவிர்ப்பதே நல்லது. கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே டிரேடிங் செய்வது குறித்து சிந்திக்கலாம்.

08:15:02 on 18 Feb

மேலும் வாசிக்க விகடன்

'ஐஎஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்ற கடைசி போரில் பிடிப்பட்ட 800க்கும் மேலான ஐஎஸ் அமைப்பினரை பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய கூட்டணி நாடுகள் அழைத்துக் கொண்டு அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்,' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

07:55:02 on 18 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.61ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.84ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:40:01 on 18 Feb

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

"விஜய்சேதுபதி நடித்த தர்மதுரை படம் பெரிய வெற்றி பெற்றாலும் என்னை ஒரு சப்பானியாகத்தான் பார்த்தார்கள்." என்று இயக்குநர் சீனுராமசாமி உருக்கமாக தெரிவித்தார்.

07:25:01 on 18 Feb

மேலும் வாசிக்க EENADU

'ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா?' என்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இதையடுத்து தூத்துக்குடியில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.

07:10:02 on 18 Feb

மேலும் வாசிக்க தினகரன்

திருவள்ளூர் அருகே உள்ளது காக்களூர் கிராமம். இந்த கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அண்ணை தெரசா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதி மக்கள் கடந்த 16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவித்து வருகின்றனர்.

06:55:01 on 18 Feb

மேலும் வாசிக்க விகடன்

செவ்வந்தி பூக்கள் நல்ல விளைச்சல் கொடுத்துள்ளதால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், செவ்வந்திபூ சந்தைகளில் நல்ல விலைபோவதால் வாழ்வாதாரம் செழித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

06:41:02 on 18 Feb

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

தைவான் நாட்டில், ஒளியூட்டப்பட்ட லாந்தர் விளக்குகளைப் பறக்க விடும் திருவிழா, வழக்கமான உற்சாகத்துடன் முன்னெடுக்கப்பட்டது. புதிய தாய்பே நகரின் பிங்ஷி பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள், பிறப்பெடுக்கும் சீன புத்தாண்டின் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

06:25:01 on 18 Feb

மேலும் வாசிக்க மாலைமுரசு

சொகுசு வாகனங்கள், முழு நேரப் பாதுகாப்பு, ஏராளமான உதவியாளர்கள் என, வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருந்த, இலங்கையின் வடக்கு மாகாண அமைச்சராக பதவி வகித்த அனந்தி சசிதரன் தற்போது அலுவலகத்துக்கு தினமும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அதனை நம்புவதற்கு சற்று கடினமாகவே இருக்கும்.

06:11:02 on 18 Feb

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மேலும் வாசிக்க