View in the JustOut app
X

'முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வேன்,' என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

02:35:01 on 26 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

முப்பெரும் நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயப்பிரதா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2 முறை உ.பி. ராம்பூர் தொகுதியில் மக்களவைக்கு ஜெயப்பிரதா தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 வரை தெலுங்குதேசம் கட்சியிலும், 2004 முதல் 2014 வரை சமாஜ்வாதி கட்சியிலும் ஜெயப்பிரதா இருந்தது குறிப்பிடத்தக்கது.

02:15:01 on 26 Mar

மேலும் வாசிக்க தினகரன்

ராமநாதபுரம் தொகுதிக்கு புதியவரான நயினார் நாகேந்திரனுக்கு, பாஜக தரப்பில் இருந்து பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பாஜக கோஷ்டிப்பூசல் புகுந்து விளையாடி கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அக்கட்சியின் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றி கேள்விக்குறியாகியுள்ளது.

01:57:52 on 26 Mar

மேலும் வாசிக்க ஏசியாநெட் நியூஸ்

நடிகர் அஜித் குமார் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் உள்ள நீதிமன்ற காட்சிகள் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வாடகை கார் ஒன்றில் செல்வதை பேருந்தில் பயணம் செய்த ரசிகர்கள் காட்சிப்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

01:55:02 on 26 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

டாடா ஸ்கை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தெலுங்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 கன்னடம் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 பங்களாதேஷ் சேனல்கள் வரும் மே மாதம் 19ஆம் தேதி வரைக்கும் இலவசமாக தரப்படுகறிது.

01:45:56 on 26 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

காஞ்சிபுரம் அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த போது கிருஷ்ண மூர்த்தி, கண்ணன், கார்த்திக், பரமசிவன், லட்சுமிகாந்தன், சுரதாபாய் ஆகிய ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான ஆறு பேரில் மூன்று பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

01:36:50 on 26 Mar

மேலும் வாசிக்க தினகரன்

பீகார் மாநிலம் பாட்னாவில் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். இதற்கென அவர் பாட்னா விமான நிலையம் வந்தார். இவரை வரவேற்க ஆதரவாளர்கள் வந்திருந்தனர். ஆனால் சின்காவின் எதிர்ப்பாளர்கள் கையில் கறுப்புத்துணியுடன் வந்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

01:29:33 on 26 Mar

மேலும் வாசிக்க தினமலர்

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள சந்தில் சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து தடாகம் போலீசார் வவிசாரணை நடத்தி வருகின்றனர்.

01:20:37 on 26 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழகத்தில் உள்ள மூன்று அரசு மருத்துவமனைகளில் ஜனவரி மாதத்துக்குள்ளான கடைசி நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட 15 கர்ப்பிணிப் பெண்கள் ரத்த பக்கவிளைவுகளால் இறந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

01:15:02 on 26 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மொத்தம் ரூ.2.5 கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று முதல் 31ஆம் தேதி வரை நடக்கிறது. நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். உடல் நலக்குறைவு காரணமாக சாய்னா நேவால் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், சமீர் வர்மா ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.

01:10:32 on 26 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விழுப்புரம் மக்களவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் மனு தாக்கல் செய்ய சென்ற போது, வேட்புமனுவைக் கொண்டு செல்ல மறந்து விட்டார். உடனடியாக வெளியே நின்ற வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு வேட்பு மனுவினைக் கொண்டு வருமாறு கூறினர். இதன் பின்னர் தனது வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.

01:00:37 on 26 Mar

மேலும் வாசிக்க தினமணி

ராதாரவி நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்துப் பேசிய ராதாரவி, ’கட்சி எனக்கு ஒரு ஷோ காஸ்ட் நோட்டீஸ் அனுப்பி, உன்னை ஏன் கட்சியோட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கக்கூடாதுன்னு கேட்டு இருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

12:55:01 on 26 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

கடலூர் மாவட்டத்தில், நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ”நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல் குற்றம் செய்பவர்களை விஷ ஊசி போட்டு கொன்று விடுவேன்” என்றார். மேலும் அவர், வாக்கை விற்காமல் ஊழல் லஞ்சத்துக்கு எதிராக மக்கள் இருக்க வேண்டும் என்றார்.

12:49:21 on 26 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

தஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற தேர்தல் ஆணைய நிபந்தனையைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

12:46:37 on 26 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமமுகவின் 59 வேட்பாளர்களையும் சுயேச்சையாகக் கருதி ஒரே பொதுசின்னத்தை வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும், உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது எனவும் கூறினார். வாக்காளர்கள் குழம்பிவிடக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது என்றார்.

12:35:57 on 26 Mar

மேலும் வாசிக்க தினகரன்

இங்கிலாந்தின் ஸ்டான்ஸ்டட் விமானநிலையத்தில் இருந்து ஸ்பெயினின் ஃபூயர்டெ வென்ஜூரா என்ற இடத்திற்கு ராயன் ஏர் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த இளம்பெண் ஒருவர் அளவிற்கு அதிகமாக குடித்து விட்டு போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். விமான நிறுவன ஊழியர்கள் எவ்வளவோ கட்டுப்படுத்தியும் அவர்களால் முடியவில்லை.

12:30:18 on 26 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வரும் 28ஆம் தேதி பிரதமர் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு காஷ்மீர் என மூன்று மாநிலத்தில் ஒரே நாளில் பல்வேறு கூட்டங்களில் பங்கேற்கிறார். சமீபத்தில் அவர், பல ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அப்பகுதியில் துவக்கி வைத்தார். இதுபோன்ற வளர்ச்சி திட்டங்கள் பாஜகவுக்கு கைகொடுக்கும் என கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

12:15:02 on 26 Mar

மேலும் வாசிக்க தின மலர்

அ.ம.மு.கவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்ககோரிய கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று தினகரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்தல்களில் பொதுச் சின்னத்தை வழங்க பரிசீலிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

12:14:56 on 26 Mar

மேலும் வாசிக்க விகடன்

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரே குழுவில் உள்ளோருக்கு வெவ்வேறு சின்னத்தை வழங்கினால் அவர்களது அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகிவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

11:54:33 on 26 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’நான் இறங்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் என்றால், தமிழிசை யார்?’ என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தி.மு.க வேட்பாளர் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், ‘ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விரிவாக பா.ஜ.கவினர் பேசிவிட்டு என்னுடைய நேர்மையைப் பற்றி அவர்கள் பேசட்டும்’ எனவும் கூறியுள்ளார்.

11:35:02 on 26 Mar

மேலும் வாசிக்க விகடன்

கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தில் சூர்யா பாதுகாப்புப் படை அதிகாரியாக நடிக்கிறார். என்ஜிகே படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் தாடியுடன் வலம் வருவதாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து டப்பிங் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தை மே 31ஆம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது.

11:15:01 on 26 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சத்தீஷ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள பிமாபுரம் பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு மாவோயிஸ்டுகளின் நான்கு உடல்களைப் பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

10:55:01 on 26 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

12வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. டெல்லியில் இன்று நடக்கும் 5வது லீக் போட்டியில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணியும் மோதுகின்றன. இன்று இரவு 8 மணிக்குப் போட்டி தொடங்குகிறது.

10:36:02 on 26 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வனப்பகுதிக்குள் செல்லாததால் நல்லெண்ண அடிப்படையில், திருப்பதி தாசில்தார் முன்னிலையில் விடுவிக்கவுள்ளதாக செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

10:35:01 on 26 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகரின் மகன் மற்றும் பார் நாகராஜன் ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். அவர்கள் இருவரும் வரும் 28ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

10:15:02 on 26 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

லோக்சபா தேர்தலை நாடு சந்திக்க உள்ள நிலையில், பொதுமக்களின் கவனம் முழுவதும் அரசியலின் பக்கம் திரும்பி உள்ளது. மக்கள் தங்கள் பிரச்சனைகளில் இருந்து விலகி ’தேர்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிரமாண்ட திருவிழா’ என கருதும் வகையில் திசை திருப்பப்படுகின்றனர்.

09:55:01 on 26 Mar

மேலும் வாசிக்க தின மலர்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கியக் கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்களது அசையும் சொத்து, அசையா சொத்து மற்றும் வங்கிக் கடன்கள் ஆகிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

09:35:01 on 26 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மக்களவைத் தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கக்கோரி அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது, குக்கர் சின்னத்தை மீண்டும் ஒதுக்குவதில் என்ன பிரச்சனை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

09:15:02 on 26 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஞ்சிபுரம் மதுராந்தகம் ஆத்தூரில் சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனின் கார் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கார் ஓட்டுனரைத் தாக்கிய மூன்று பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

08:55:01 on 26 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.

08:35:02 on 26 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

மியான்மரின் கிழக்குப் பகுதியில் சீனாவின் எல்லையையொட்டி உள்ள ஷான் மாகாணம், மாங்மாவோ நகரில் வெடிமருந்து அடைத்து வைக்கும் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் தீயில் கருகி பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 48 பேர் படுகாயம் அடைந்தனர்.

08:15:02 on 26 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

மதுரை லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் மீது 5 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் அவர்மீது அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

07:55:01 on 26 Mar

மேலும் வாசிக்க தின மலர்

நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. 13 மீனவர்களுடன் மூன்று படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை அவர்களை காங்கேசன் துறைமுகம் முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.

07:36:31 on 26 Mar

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.67 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.26 காசுகளா கவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:24:09 on 26 Mar

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை, திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் ரூ.1.94 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்ய வந்த அரபி என்பவரிடம் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

06:55:01 on 26 Mar

மேலும் வாசிக்க தினகரன்

சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியை தாண்டியும் திருமாவளவனுக்கென தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த தொகுதிக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக கைபற்றியது.

06:41:01 on 26 Mar

மேலும் வாசிக்க காமதேனு

இந்தியா முழுவதும் நடக்க இருக்கும் தேர்தலுக்காக 33 கோடி ரூபாய் செலவில் 26 லட்சம் மை பாட்டில்களைத் தேர்தல் ஆணையம் ஆர்டர் செய்துள்ளது. ஒவ்வொரு மை பாட்டிலும் 10 ml மையினைக் கொண்டிருக்கும்.

06:25:01 on 26 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

முன்பெல்லாம் தெரியாத ஊருக்கு காரில் சென்றால் வழியெங்கும்நிறுத்தி, நிறுத்தி விலாசத்தை கேட்டுச் செல்ல வேண்டும். இதனால் நேரமும் விரயமாகும். பல சமயங்களில் ஊரை சுற்ற வேண்டிய நிலையும் ஏற்படும்.

06:10:01 on 26 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டை விட 2019 தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் 30 சதவீதம் குறைவு என தெரியவந்துள்ளது.

05:55:01 on 26 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகத்தில் மலைகள் மற்றும் சாலைகளில் பேனர்கள் வைக்கவும், தேர்தல் விளம்பரங்கள் செய்யவும் சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழலின் அழகை கெடுக்கும் வகையிலான இதுபோன்ற விளம்பரங்கள் இடம்பெறாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:40:02 on 26 Mar

மேலும் வாசிக்க தினமலர்

தபால் வாக்கு முறை என்ற பெயரிலேயே அதனை எப்படி செலுத்துவார்கள் என்பது ஓரளவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது. இதனை தபால் வழியாக அல்லது வேறு ஏதேனும் எலக்ட்ரானிக் முறையிலும் வாக்களிக்கலாம்.

05:25:01 on 26 Mar

மேலும் வாசிக்க தினமணி

மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒரே மொபைல் செயலியில் இருக்கும் வகையில் "UMANG" ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கூகுள் பிளே ஸ்டோர்க்கு சென்று "UMANG" என டைப் செய்து செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

05:10:01 on 26 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

கோவை வெள்ளலூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் கடந்த 3 நாட்களாக எரிந்து வரும் தீயை அணைக்க விமானப்படை ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் பல ஆயிரம் டன் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த நிலையில் கிடங்கில் திடீரென தீப்பிடித்தது.

04:55:01 on 26 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

குழந்தைகளின் மனதை வென்ற கார்டூன் கதைகளில் ஒன்று ‘டோராவின் பயணங்கள்’. இதில் டோராவாக வந்த பள்ளி சிறுமி கதாப்பாத்திரம் குழந்தைகளின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்த குழந்தை கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு ஹாலிவுட் திரைப்படம் உருவாகி வருகிறது.

04:40:01 on 26 Mar

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அளவை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதிகரித்துள்ளது. அதன்படி, இந்த வங்கியில், சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும்.

04:26:01 on 26 Mar

மேலும் வாசிக்க ie தமிழ்

இந்தியாவின் தனியார் விமான போக்குவரத்து துறையை பொறுத்தவரை நீண்டகாலமாக சிறப்பான வளர்ச்சியுடன் இயங்கி வந்தது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். ஆனால், அந்நிறுவனம் சமீபத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவிலிருந்து நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி விலகியுள்ளனர்.

04:10:01 on 26 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஜெர்மனியில் நாற்பதாண்டுகளுக்கு முன் டுயிஸ்பர்க் என்ற இடத்தில் கட்டப்பட்ட 20 தளங்களைக் கொண்ட ஒயிட் ஜெயண்ட் கட்டடத்தில் குடியிருப்புகளும், அலுவலங்களும் செயல்பட்டு வந்தன. பழமை காரணமாக அதனை இடிக்க முடிவு செய்யப்பட்டு, கட்டடத்தின் பல்வேறு பகுதிகளில் 290 கிலோ வெடிமருந்து வைக்கப்பட்டது.

03:55:02 on 26 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கோடைகாலத்தில் குழந்தைகளுக்கு உண்டாகும் தொற்று நோய்களிலிருந்து, அவர்களைக் காப்பாற்ற நம்முன்னோர்கள் பாரம்பரியமாக அருந்திவந்த பானகத்தை வீட்டிலேயே செய்துகொடுக்கலாம். இதனால், நமது உடலுக்கு நன்மைகள் ஏற்படும்.

03:40:01 on 26 Mar

மேலும் வாசிக்க ETV Bharat

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்துக்கு ஆதரவாக ஓட்டு கேட்டது குறித்த விவகாரத்திற்கு விளக்கம் அளித்துள்ளார் கார்த்தி. அதில், ‘தேர்தலில் நான் பிரச்சாரம் செய்வது போன்ற வீடியோ குறித்து எனக்கு நிறைய போன் வந்தது. அது முற்றிலும் தவறான தகவல். தேர்தலில் வாக்கு அளிப்பது மட்டுமே என்னுடைய பங்கு,’ எனத் தெரிவித்துள்ளார்.

03:26:01 on 26 Mar

மேலும் வாசிக்க காமதேனு

மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதைக் குறிப்பிடும் வகையில் நேரடி வார்த்தைகளைப் பயன்படுத்தி விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் இந்திய மனநல மருத்துவர்கள் அமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

03:10:01 on 26 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

டெட் லிப்ட் என்ற உடற்பயிற்சியானது மிகவும் சக்தி வாய்ந்த உடற்பயிற்சி. இதை டம்பெல் மற்றும் பார்பெல் இரண்டையும் கொண்டு செய்யலாம். ஆனால் டம்பெல்லை விட பார்பெல் தான் சிறந்தது. பார்பெல்லில் உடலால் எவ்வளவு அதிகமாக தூக்க முடியுமோ அந்த அளவுக்கு அதிகமாக வெயிட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

02:56:01 on 26 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

ரியல்மி U1 ஸ்மார்ட்போன் 2018ஆம் ஆண்டு மீடியாடெக் ஹூலியோ SoC, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி சேமிப்பு வசதிகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆண்டுராய்டு 9 பைய் அப்டேட்டுக்காக இந்த போனை பயன்படுத்துவோர்கள் காத்திருக்கும் நிலையில் தற்போது ரியல்மி நிறுவனம் சார்பில் OTA மென்பொருள் அப்டேட் வெளியாகியுள்ளது.

02:40:01 on 26 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

'காதலிக்க நேரமில்லை' சீரியலின்மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரஜின். இவருடைய காதல் மனைவி நடிகை சாண்ட்ரா. இருவரும் வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம்வந்தார்கள். தற்போது, இந்தத் தம்பதிக்கு அழகான இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன எனத் தகவல் வெளிவந்துள்ளது.

02:26:01 on 26 Mar

மேலும் வாசிக்க விகடன்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் 576 வாழை மரங்களை வெட்டி சாய்த்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

02:10:02 on 26 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

நாட்டின் பெரும்பான்மை மக்களின் தொழிலாக மட்டுமின்றி முக்கிய தொழிலாகவும் முதுகெலும்பாகவும் உள்ள விவசாயத்தை மேம்படுத்த திட்டங்கள் பல இருக்கின்றன. ஆனாலும் விவசாயிகளின் தற்கொலைகள் பெரும் முரணாக தொடர்கிறது.

01:55:01 on 26 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக படங்கள் வியாழன் அல்லது வெள்ளி ஆகிய தினங்களில் வெளியாகும். ஆனால், இந்தப் படம் சனிக்கிழமையன்று வெளியாகவுள்ளது.

01:40:02 on 26 Mar

மேலும் வாசிக்க தினமணி

கர்நாடகாவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இந்நிலையில், ’கர்நாடகாவில் எங்களுக்கு 7 தொகுதிகள் போதும் 8 தொகுதிகள் வேண்டாம்,’ என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

01:25:01 on 26 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நார்வே நாட்டில், நடுக்கடலில், என்ஜின் கோளாறால் பேரலையில் சிக்கி தள்ளாடிய சொகுசு கப்பிலில் இருந்து 1,300க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். துரித கதியில் பயணிகளை மீட்ட, மீட்புக்குழுவுக்கு நார்வே பிரதமர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

01:10:01 on 26 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கூந்தலை வெட்டினால் அது அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளரும் என்பது தவறான நம்பிக்கை. ஹேர் கட் என்பது கூந்தலுக்கு ஒரு அழகிய தோற்றத்தைத் தரும். முறையாக ஹேர் கட் செய்வதன் மூலம் கூந்தல் நுனிகள் வெடிப்பதைத் தடுக்கலாம். மற்றபடி கூந்தல் வளர்ச்சி என்பது மண்டைப் பகுதியின் உள்ளிருந்து வருவது.

12:56:01 on 26 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

கரூர் மக்களவைத் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தம்பிதுரை, பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கரூர் கடைத் தெருவில் பல கிலோ மீட்டர் வரை நடந்து சென்று, வணிகர்கள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து, தனக்கான வாக்குகளை அவர் சேகரித்தார்.

12:40:01 on 26 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

உத்தரபிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத் ‌ஷகரான்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவர்கள் பயங்கரவாதிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்தனர் எனவும் பிரதமர் மோடி வெடி குண்டுகளையும் துப்பாக்கி குண்டுகளையும் பயங்கரவாதிகளுக்கு பரிசாக வழங்கி வருகிறார் எனவும் கூறியுள்ளார்.

12:25:01 on 26 Mar

மேலும் வாசிக்க தினகரன்

ஆப்ரிக்க கண்டத்தைக் கடந்த வாரம் தாக்கிய இடாய் புயலில் கிழக்கு ஆப்ரிக்க நாடான மொசாம்பிக்கில் 417 பேர் பலியாகினர். வெள்ளம் பாதித்த பகுதிகளில், மனித உடல்களும், வெள்ள நீர்களில் பாம்புகளும் அதிகமாக இருப்பதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

12:10:01 on 26 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நார்வே நாட்டில் நடுக்கடலில் என்ஜின் கோளாறால் பேரலையில் சிக்கித் தள்ளாடிய சொகுசுக் கப்பிலில் இருந்து 1,300க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். துரித கதியில் பயணிகளை மீட்ட மீட்புக் குழுவுக்கு நார்வே பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

11:55:01 on 25 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சர்வதேச சந்தைகளில், கடந்த வாரம் பல சுவாரசியமான நிகழ்வுகள் அரங்கேறியதை, நம்மில் பலர் கவனிக்கவில்லை. அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் இந்த ஆண்டில் இனி வட்டி விகிதத்தை கூட்ட வாய்ப்பில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

11:25:02 on 25 Mar

மேலும் வாசிக்க தின மலர்

மதுரை பிரசாரக் கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாலர் வைகோ, ’ஸ்டெர்லைட் படுகொலை, ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குச் சமமானது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு மக்கள் கண்டிப்பாக நீதி வழங்குவார்கள்’ என்று கூறியுள்ளார்.

11:10:01 on 25 Mar

மேலும் வாசிக்க விகடன்

பாகிஸ்தானில் 13 மற்றும் 15 வயதுடைய இரு இந்து சிறுமிகள் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்த செய்தி குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

10:55:01 on 25 Mar

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் அரசியல் கட்சிகள் விளம்பர பேனர்கள் வைக்கத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10:41:01 on 25 Mar

மேலும் வாசிக்க தினமணி

உத்தரபிரதேசம் மீரட்டைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மயக்க ஊசி செலுத்தி கீழ்நிலை ஊழியர்கள் 3 பேர் தன்னை கும்பல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் புகார் அளித்தார். இதற்கு உதவி செய்த பெண் உட்பட 5 ஊழியர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

10:25:01 on 25 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் மகேந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’வால்பாறை பகுதியை சுற்றுலா தலமாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று கூறியுள்ளார்.

10:11:01 on 25 Mar

மேலும் வாசிக்க ETV BHARAT

இந்தியாவில் கடந்த வாரம் அறிமுகமான விவோ வி15, தற்போது முன்பதிவைத் துவங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி தனது விற்பனையை பேடிஎம் மால், டாடா க்ளிக் (Tata CliQ) மற்றும் ஆஃப்லைன் கடைகளிலும் துவங்க உள்ளது.

09:55:02 on 25 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் ரஷ்யாவுடன் சேர்ந்து எவ்வித சதித் திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று அதுகுறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

09:41:02 on 25 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பிளாஸ்டிக் தடை உத்தரவிட்டு கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், பிளாஸ்டிக் பைகள் சர்வசாதாரணமாகக் கிடைப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ஒரு விதியை வெற்றியடையச் செய்ய அரசால் மட்டும் முடியாது. அதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

09:26:02 on 25 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சிவகங்கை மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுக கூட்டணி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அந்தத் தொகுதி வேட்பாளர் எச்.ராஜா, ’நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

09:11:03 on 25 Mar

மேலும் வாசிக்க காமதேனு

பாஜகவைத் தாக்கி, 'மோடி, ஒரு தவறு' என்று கோபண்ணா எழுதிய புத்தகத்தை ராகுல்காந்தி சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து, இந்தப் புத்தகத்தின் தமிழாக்கம் வரும் 29ஆம் தேதி, ‘அலங்கோல ஆட்சிகளை அகற்றுவோம்’ என வெளியாகவுள்ளதாக கோபண்ணா அளித்த பேட்டியில் அறிவித்துள்ளார்.

09:00:48 on 25 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

1829இல் கட்டப்பட்ட ஸ்கார்ட்லாந்து யார்டு கட்டிடம் லண்டன் மெட்ரோபாலிடன் காவல்துறையால் 60 ஆண்டுகள், அதாவது 1890 வரை கைதிகளை சிறை வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்தக் கட்டிடத்தைத் தற்போது இந்தியாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி என்பவர் 110 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.1,000 கோடிக்கு) வாங்கியுள்ளார்.

08:56:01 on 25 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வேப்பூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாக்கம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், சின்னசாமி என்பவரது காரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற 1,30,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

08:40:01 on 25 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் தர முடியாது என உச்சநீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொது சின்னத்தை வழங்க இயலாது எனவும் கூறியுள்ளது.

08:33:40 on 25 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற புதுவை எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தவர், அசோக் ஆனந்த்.

08:31:30 on 25 Mar

மேலும் வாசிக்க தினகரன்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 18 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

08:26:01 on 25 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பாஷா என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

08:10:01 on 25 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கோவா தலைநகர் பனாஜியில் உள்ள தேசிய கடலியல் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ’நீலப் பொருளாதாரத்தின் நோக்கமே நீண்ட கால அடிப்படையில் அனைவருக்குமான வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் கடல்சார் பொருளாதாரச் செயல்பாடுகளின் வாயிலாக பெறுவதே ஆகும்’ என்று கூறியுள்ளார்.

07:56:02 on 25 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாய் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டு காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக, நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரிப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

07:41:01 on 25 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அந்தமானில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதாக தெரிவித்தார்.

07:25:01 on 25 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

தங்கம் இறக்குமதியில் கடந்த நிதியாண்டை விட இந்த நிதியாண்டில் 5.5 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் தங்க மற்றும் ஆபகரணங்கள் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

07:11:01 on 25 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

தமிழில் 'ழ' என்ற வார்த்தைக்கு ஈடு இணையே இல்லை எனலாம்! உச்சரிக்கும்போதே அவ்வளவு அழகாக இருக்கும். தற்போது 'ழகரம்' என்ற வார்த்தையை தலைப்பாக வைத்து, நந்தா நடிக்கும் திரைப்படம் ஏப்ரல் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.

06:55:02 on 25 Mar

மேலும் வாசிக்க ETV Bharat

நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘நடிகைகளை கொச்சைப்படுத்துவது போல் இரட்டை வசன அர்த்தத்துடன் ராதாரவி பேசியது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் மனவருத்தம் அளிக்கிறது,’ என தெரிவித்துள்ளது.

06:44:58 on 25 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சியோமி எம்ஐ நோட்புக் ஏர் மடிக்கணினியை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது வெறும் 1.07 கிலோ உடையது என வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் 1.25 கிலோ எடையுள்ள நிலையில் சியோமியின் இந்த தயாரிப்பே 1.07 கிலோதான் எடை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

06:35:02 on 25 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தெலங்கானா மாநிலத்தில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து 37 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தெலுங்கு தேசம் கட்சி இல்லாமல் தெலங்கானா பகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது.

06:15:01 on 25 Mar

மேலும் வாசிக்க தினகரன்

தேர்தல் பரப்புரையில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘பயங்கரவாதிகளை கூண்டோடு அழிக்கும் சக்தி பிரதமர் மோடிக்கு தான் உள்ளது,’ என்றார். மேலும், ’நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும் என்பதற்காக ஒருமித்த கருத்தோடு இணைந்துள்ளோம்,’ எனவும் தெரிவித்துள்ளார்.

05:55:02 on 25 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்றது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட 91 மக்களவை தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.

05:40:00 on 25 Mar

மேலும் வாசிக்க தினகரன்

ராதா ரவி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து நடிகை நயன்தாரா 2 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த அறிக்கையில், ‘அனைவரும் பெண்களில் இருந்து வந்தவர்கள்தான் என்பதை ராதாரவிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்,’ எனவும் தெரிவித்துள்ளார்.

04:55:01 on 25 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, 'கடந்த 5 ஆண்டுகளாக துயரம் அனுபவித்து வரும் ஏழை மக்களுக்கு, குறைந்த பட்ச ஊதிய உறுதித் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.6000 வழங்குவோம் என்றும் அறிவித்துள்ளார்.

04:37:02 on 25 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

04:14:21 on 25 Mar

மேலும் வாசிக்க தினகரன்

வரவுள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றப் பொது தேர்தலின்போது தமிழகத்தில் 5,472 திருநங்கைகள் வாக்களிக்கவுள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் திருநங்கை வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட தொகுதியாக வடசென்னை தொகுதி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி சுமார் 447 திருநங்கைகள் இங்கு வாக்களிக்க உள்ளனர்.

03:55:01 on 25 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

லோக்சபா தேர்தலில் தவறுதலாக காங்., வெற்றி பெற்று விட்டால் பாக்., அதை தீபாளியாக கொண்டாடும் என குஜராத் பா.ஜ., முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். மேலும் அவர், ராம ராஜ்ய பாதையில் நாட்டை வழிநடத்தும் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்றார்.

03:35:01 on 25 Mar

மேலும் வாசிக்க தினமலர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குடிபோதை கணவரின் தொல்லை தாங்காமல் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் பெண் காவலரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

03:15:01 on 25 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னைத் திருவொற்றியூரைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்த வாலிபர் திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் தாய் உட்பட உறவினர்கள் வாலிபரை நைசமாகப் பேசி கடத்தினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02:55:02 on 25 Mar

மேலும் வாசிக்க விகடன்

காரில் பொருத்தப்பட்டிருக்கும் கேமிராவானது டிரைவர் கண் பார்வை சாலையை விட்டு அடிக்கடி விலகினாலோ, கண் சொருகினாலோ உடனடியாக எச்சரிக்கை செய்யும். அதற்கும் சரியான பதில் டிரைவர் அளிக்காமல் கார் செல்லும்போது, தானாகவே காரை பாதுகாப்பாக நிறுத்திவிடும்.

02:35:02 on 25 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். வேட்புமனுவை பெறுவதற்கு தேர்தல் அதிகாரி காலதாமதம் செய்வதாகக் கூறி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் அதிகாரி தம்மை மனுதாக்கல் செய்ய அனுமதிக்காமல் சுயேச்சை வேட்பாளர்களை அனுமதித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

02:16:03 on 25 Mar

மேலும் வாசிக்க தினகரன்

சிவகங்கை தொகுதி வேட்பாளரின் அறிமுகக் கூட்டம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், ’சிவகங்கைத் தொகுதியில் ஹெச்.ராஜாவை ஓராயிரம் கார்த்திக் சிதம்பரம் வந்தாலும் வீழ்த்த முடியாது. கார்த்திக் சிதம்பரம் எப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருப்பவர்’ என்று கூறியுள்ளார்.

01:55:01 on 25 Mar

மேலும் வாசிக்க விகடன்

மேலும் வாசிக்க