View in the JustOut app
X

இந்தியாவில் குழந்தை இல்லாத தம்பதிகள் வேறொருவர் குழந்தையை முறைப்படி தத்தெடுத்து வருகின்றனர். டெல்லியில் உள்ள குழந்தை தத்தெடுப்பு வள அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் குழந்தை இன்மை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

07:40:01 on 27 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ’இந்த நாடு என்னை பிரதமராக தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், என்றென்றும் நான் உங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும் சேவகனாகவும் இருப்பேன். உங்கள் பணியே எனக்கு முதன்மையானது’ எனக் கூறியுள்ளார்.

07:25:02 on 27 May

மேலும் வாசிக்க மாலை மலர்

2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்துவிட்டு பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடி வரும் தோனி, இன்னும் சில வருடங்கள் அணிக்காக ஆடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வார்னே, ‘தோனி எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை அவரே முடிவெடுப்பார்’ என்று கூறியுள்ளார்.

07:10:02 on 27 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருமலை சென்றடைந்தார். அங்குள்ள ஸ்ரீகிருஷ்ணா மாளிகையில் தங்கும் அவர், நாளை காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்கிறார்.

06:55:01 on 27 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகை ஸ்ரீதேவி நடிப்பில், அவரது கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவான மாம் படம் சமீபத்தில் சீனாவில் வெளியாகி வசூலில் சாதனை செய்துள்ளது. சீனாவில் 15 மில்லியன் டாலர் (ரூ.100 கோடி) வசூலித்துள்ளது. இப்படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார்.

06:49:31 on 27 May

மேலும் வாசிக்க தினமணி

'தேசிய அளவில் பாஜ 303 இடங்களைப் பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த மிகப் பெரும் வெற்றி சந்தேகத்தைக் கொடுக்கிறது' என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

06:40:01 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

இதுவரை உலகின் பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட யமஹா கீபோர்டுகள் இனி, காஞ்சிபுரத்துக்கு அருகிலிருக்கும் அதன் தொழிற்சாலையிலே உற்பத்தி செய்யப்படும். 'Make In India' திட்டத்தின் கீழ் உருவாகும் இத்தொழிற்சாலையின் முதல் தயாரிப்பான PSR - I500 என்ற மாடல் கீபோர்டு, இன்று சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.

06:25:01 on 27 May

மேலும் வாசிக்க விகடன்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், லாகூர் நகரில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் உள்ளது நாரோவல் கிராமம். இங்கு உள்ள சீக்கிய மத குரு குருநானக் நினைவாக 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அரண்மனையை மர்ம நபர்கள் சூறையாடி, அதன் ஜன்னல், கதவுகளை திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

06:10:04 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

‘தேர்தலில் ஏற்படக்கூடிய வெற்றி, தோல்வி ஒரு தலைவரின் செல்வாக்கையோ எதிர்காலத்தையோ தீர்மானிக்கக் கூடியது அல்ல. இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ள சறுக்கலுக்கு எப்படி ராகுல் மட்டும் பொறுப்பாக முடியும்?’ என மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.

05:55:02 on 27 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நாமக்கல்லில் மாவட்டம் என்.புதுப்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை மீட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:40:02 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

தற்போது பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடித்த சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற ’விக்கி டோனர்’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

05:21:47 on 27 May

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

நடிகை ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகிறது மஹா. இந்தப் படத்தில் நடிக்க நடிகர் சிம்பு 7 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளன. அந்த புகைப்படத்தில் நடிகை ஹன்சிகாவும் இடம்பெற்றுள்ளார்.

05:17:22 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற மறுநாள், நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரை நடத்துவதற்கான தேதியை கேபினெட் அமைச்சரவை கூடி முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 17வது மக்களவைக் கூட்டத்தொடர் ஜூன் 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

05:11:10 on 27 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு மன அழுத்தம் மற்றும் பல்வேறு மனநலப் பிரச்சனைகள் ஏற்படலாம் என ஆஸ்திரேலியாவிலுள்ள ஃப்லைண்டர்ஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு, ’தி லான்செட்’ இதழில் வெளியாகியுள்ளது.

05:01:51 on 27 May

மேலும் வாசிக்க விகடன்

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இன்று தலைமைச் செயலகத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மூன்று மாதங்களுக்குப் பிறகு வழக்கமான பணிகளை மேற்கொண்டார்.

04:50:31 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இயக்குநர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா ஷெட்டியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

04:41:07 on 27 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கோடைகாலம் தொடங்கியதில் இருந்து டெல்டா மாவட்டங்களில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இன்று 104 டிகிரி ஃப்ரான்ஹீட் வெயில் சுட்டெரித்தது. அதேபோல், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 107 டிகிரி ஃப்ரான்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

04:40:02 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

04:38:46 on 27 May

மேலும் வாசிக்க தின மலர்

திண்டுக்கல் - வேடசந்தூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரைத் தாக்கி ரூ.4 லட்சம் வழிப்பறி செய்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கோயிலூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று டாஸ்மாக் ஊழியர் வெள்ளைச்சாமியை தாக்கி மர்மநபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர்.

04:31:41 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்துப் பேசிய பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ’கவலைப்பட வேண்டாம், எல்லோருக்கும் சவால்கள் வரும். நீங்கள் குஜராத்திலோ, மத்தியப் பிரதேசத்திலோ பணியாற்றவில்லை. தமிழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் சவால்களை எதிர்கொள்ளலாம்’ என அமித் ஷா கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

04:19:30 on 27 May

மேலும் வாசிக்க காமதேனு

ராயல்டி பிரச்சனை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும், எஸ்.பி.பி.க்கும் இடையே பிரச்சனை வெடித்தது. இந்நிலையில் இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியின் ஒத்திகைக்காக இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு எஸ்.பி.பி. வந்துள்ளார். இவர்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ‘The Duo is Back' என பதிவிட்டு வருகின்றனர்.

04:09:02 on 27 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயலாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

03:59:18 on 27 May

மேலும் வாசிக்க தினமணி

பிரபல போஜ்புரி நடிகை ரிதுசிங். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் ஒரு புதிய பட படப்பிற்காக உத்திரபிரதேச மாநிலத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர், அவரை துப்பாக்கிமுனையில் மிரட்டியுள்ளார்.

03:55:45 on 27 May

மேலும் வாசிக்க சினி ரிப்போர்ட்டர்ஸ்

மும்பையின் கோரேகான் பகுதியில் உள்ள வெஸ்டின் (westin) மேம்பாலத்தின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவுமில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

03:55:02 on 27 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஸ்பெயின் நாட்டின் தெற்கே ஜிப்ரல்டார் என்னும் சிறிய நாடு அமைந்துள்ளது. ஏறத்தாழ 30,000 பேர் வாழும் இந்த நாட்டின் பரப்பளவு, 6.8 சதுர கிலோமீட்டர்கள். பூர்விக மொழியாக 'லியானிட்டோ' இருந்தபோதிலும், ஸ்பானிஷ் மொழி பரவலாகவும், ஆங்கிலம் ஆட்சி மொழியாகவும் பேசப்படுகின்றன.

03:45:26 on 27 May

மேலும் வாசிக்க விகடன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையை அடுத்துள்ள நவமலையில் கடந்த இரண்டு நாளில் சிறுமி உள்ளிட்ட இரண்டு பேரை காட்டு யானை தாக்கி கொன்றது. இந்நிலையில், காட்டு யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

03:40:01 on 27 May

மேலும் வாசிக்க தின மலர்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்தவிருந்த ரூ.6.47 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மலேசியா செல்லவிருந்த தஸ்பிகா ராணி என்ற பயணியிடம் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

03:25:01 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

திருச்சி அருகேயுள்ள திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில், பராமரிக்கப்பட்டு வரும் அகிலா என்ற பெண் யானை, கோடை வெயிலின் காரணமாக அவதிப்பட்டு வந்தது. இதனையடுத்து அந்த யானை குளிப்பதற்காக பிரத்யேகமாக ஷவர் அமைக்கப்பட்டது. இந்த ஷவரில், யானை குதூகலமாக குளிக்கும் காட்சிகள் காண்போரைக் கவர்ந்து வருகிறது.

03:16:51 on 27 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரெடி ஒயின் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடலுக்கு சரியான அளவில் சேர்த்து கொண்டால் இருதய நோய்கள் மற்றும் பக்கவாதம் போன்றவை தடுக்கப்படும். ரெட் ஒயினில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஃப்ளேவனாய்டு, டேன்னின்ஸ் மற்றும் ரெஸ்வரேட்ரால் இருப்பதால் சருமத்தை இளமை தோற்றத்துடன் வைத்திருக்கும்.

03:10:02 on 27 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய புலி ஒன்று, சிமட்டஹள்ளி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் இருக்கும் புதரில் பதுங்கியது. இதனையடுத்து புலியைக் காண கிராம மக்கள் திரண்டு வந்தனர். இதனால் ஆக்ரோஷமடைந்த புலி, பொதுமக்களை விரட்டியது.

03:06:11 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

கனடாவின் ராப்டர் கன்சர்வன்சியில் ஸ்டீவ் என்பவர், கழுகு ஒன்று தண்ணீர் மேல் பறக்கும் காட்சியைப் படமாக எடுத்துள்ளார். கழுகு ஒன்று தண்ணீருக்கு அருகில் பறக்கும்போது அதன் துல்லியமான பிரதிபலிப்பை ஸ்டீவ் படமாக்கியுள்ளார். அவரின் இந்த மெர்சல் படம்தான் சில நாட்களாக இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

02:55:01 on 27 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சிதம், உக்கடம் பகுதியில் உள்ள மீன் சந்தைக்கு சென்றுவிட்டு, லாரிபேட்டை என்னும் பகுதி வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரஞ்சிதம் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

02:51:42 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

அழகி, பகவதி, சண்டக்கோழி போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் மோனிகா. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருக்கும் நடிகைகள் போல் இவரும் இப்போது எங்கே என்ன செய்கிறார் என்பது தெரியவில்லை.

02:45:06 on 27 May

மேலும் வாசிக்க சினி உலகம்

மூன்றாவது பிறக்கும் குழந்தைக்கு வாக்களிக்கும் உரிமையை அளிக்கக்கூடாது என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். மேலும் அவர், பசுக்களைக் கொல்வதைத் தடுக்க தேசிய அளவில் தடை கொண்டு வர வேண்டும் என்றும், மாமிசம் சாப்பிட வேண்டும் என்று கூறுபவர்களுக்கு வேறு வகையான மாமிசங்கள் உள்ளன என்றும் கூறியுள்ளார்.

02:35:56 on 27 May

மேலும் வாசிக்க சன் நியூஸ்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்த 22 தொகுதியில், 8 தொகுதி, நம் செல்வாக்குள்ள வட மாவட்டங்களில் வருகிறது. அதனால் இவற்றில் நம் பலத்தில் ஜெயிப்போம் என்றுதான் எடப்பாடி நம்மைக் கூட்டணியில் சேர்த்துக்கிட்டார். இப்ப வெட்கக்கேடா இருக்கிறது என தன் வருத்தத்தைப் பகிர்ந்துக் கொண்டாராம் பாமக நிறுவனர் ராமதாஸ்.

02:32:22 on 27 May

மேலும் வாசிக்க நக்கீரன்

ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ’வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் மிகவும் சாதுர்யமானவர், தனது நாட்டை மேம்படுத்த, அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்பதை அவர் அறிந்து இருப்பார்’ என்று கூறியுள்ளார்.

02:24:19 on 27 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

கோவை ஆர்.எஸ்.புரம் குமாரசாமி காலனியைச் சேர்ந்த ஜோதிடர் சந்தோஷ் என்பவர், அரசியல் கட்சி ஒன்றில் இருந்து அண்மையில் விலகியுள்ளார். அவரை மீண்டும் கட்சியில் சேருமாறு அதே கட்சியில் உள்ள உறவினர் விஜயகுமார் என்பவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தோஷை 3 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

02:23:42 on 27 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

திருவள்ளூரை அடுத்த செஞ்சி பனம்பாக்கம் கிராமத்தில் உள்ள கோவிலில் கடந்த வாரம் ஜாத்திரை திருவிழா நடந்தது. இந்த திருவிழாவின் போது கோவிலுக்கு வந்த பெண்களை நான்கு பேர் கிண்டல் செய்துள்ளனர். இதுதொடர்பாக நடந்த மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர்.

02:20:33 on 27 May

மேலும் வாசிக்க மாலை மலர்

டெல்லியில் மே 30ஆம் தேதி நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பதவியேற்பு விழாவில் பங்கேற்பது குறித்து கமல் இன்னும் முடிவு செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

02:15:38 on 27 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழகம் முழுவதும் தற்போது தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், சென்னை ஓஎம்ஆர் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு வாசிகள் முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

02:13:23 on 27 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதிலும் பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும்.

02:02:17 on 27 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மித்ரன் இயக்கத்தில் பைக் ரேஸராக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘ஹீரோ’ என பெயர் வைத்து திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவும் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில் தெலுங்கிலிருந்து தமிழுக்கு அறிமுகம் ஆனவரான விஜய் தேவரகொண்டா அடுத்து நடிக்கும் படத்திற்கும் ‘ஹீரோ’ என பெயர் வைத்திருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.

01:48:48 on 27 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நார்ச்சத்து மிகுந்த உணவுகள் இருதய ஆரோக்கியத்தை சீராக பராமரிக்கும் தன்மை கொண்டது. மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வரும் இருதய நோயாளிக்கு இருதய ஆரோக்கியமும் சீராக இருக்கிறது.

01:33:56 on 27 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ADHD (கவனிப்பு குறைவால் தீவிர செயல்பாடு கோளாறு) உள்ளவராக தன்னுடைய வாழ்வு எப்படி இருக்கிறது என்று உடனிருப்பவர்களுக்குக் காட்டுவதற்கு டானி டோனோவான் விரும்பியபோது, தன்னுடைய வரைபடங்கள் பிரபலமாகக் கொண்டாடப்படும் அளவுக்கு ரசிகர்களைக் கொண்ட இணையதள காமிக்ஸ் தொடர்களாக மாறும் என்று ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.

01:27:06 on 27 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

17வது மக்களவைத் தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், வருகிற 30ம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினி பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:21:12 on 27 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ராமேஸ்வரம் கடற்பகுதியில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி தென்கடல், பாம்பன் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த காற்று வீசுவதால், கடலும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

01:17:09 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

செப்பு பாத்திரத்தை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்தவ குணங்கள் அடங்கி இருக்கிறது. தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது அதிமுக்கியமானதாக கருதப்படுகிறது.

01:10:14 on 27 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சமீபத்தில் செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு யார் இசையமைப்பாளர்? என்று கேட்டதற்கு அவர், ’கண்டிப்பாக ஜி.வி. பிரகாஷ் தான், ஏனெனில் அது அவருடைய படைப்பும்கூட’ என பதில் அளித்துள்ளார்.

01:00:49 on 27 May

மேலும் வாசிக்க சினி உலகம்

ஜீத்ராய் ஹன்ஸ்தா–ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர். ஜாம்ஷெட்பூர், சாக்‌ஷியில் உள்ள அரசு பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரி ஒன்றில் புரிந்து வருகிறார். 2017ஆம் ஆண்டு ஆதிவாசிகளின் உரிமை குறித்தும், மாட்டிறைச்சி உண்பது குறித்தும் முகநூலில் பதிவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.

12:55:51 on 27 May

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள டில்லி கிராமத்தில் குறுவிவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர், ஆகாஷ் செளராஷ்யா. இவர் அடுக்கு விவசாயத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார். அதன் பலன் இன்று 2.5 ஏக்கரில் 5 அடுக்குகள் கொண்ட பண்ணையை அமைத்து 12 முதல் 15 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறார்.

12:49:50 on 27 May

மேலும் வாசிக்க விகடன்

பெற்றோர்கள் வழியில் வரக்கூடிய பூர்வீகச் சொத்தில் பெண்களுக்கும் உரிமை உள்ளது. பொதுவாக, ஒரு குடும்ப சொத்து பாகம் பிரிக்கப்படும்போது குடும்பத்தின் அனைத்து வாரிசுகளும் சம்மதம் தெரிவிப்பது அவசியம். ஒரு குறிப்பிட்ட வாரிசுக்குத் தெரியாமல் அல்லது அவரை புறக்கணித்து விட்டு செய்யப்படும் பாகப்பிரிவினை சட்டப்படி செல்லாது.

12:40:35 on 27 May

மேலும் வாசிக்க மாலை மலர்

சிக்கிம் மாநில முதல்வராக சிக்கிம் கிரந்தகாரி மோர்ச்சா கட்சித் தலைவர் பி.எஸ்.கோலோ பதவியேற்றார். சிக்கிம் கிராந்திகாரி கட்சி கடந்த 2013ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 32 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மை பெற்றது.

12:33:50 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

உங்கள் பெயரை நீங்கள் செவ்வாயில் பதிக்க விரும்பினால் உங்களது பெயரை நாசாவின் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ரோவரோடு அனுப்பப்படும் அந்த சிப்பில் நானோ எழுத்துக்களால் பதிவு செய்பவர்கள் பெயர் பொறிக்கப்பட்டு ரோவரோடு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

12:23:40 on 27 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

மதுரை மாநகராட்சி பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 26.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் 26.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், இதுவரை 8.9 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

12:16:05 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

12:09:02 on 27 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் அஜோய் குமார் பதவி விலகினார். 14 மக்களவை தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

12:00:14 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை, கோட்டூர்புரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் விட்டுச் சென்ற ரூ.1.56 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வராதாபுரம் ஏரிக்கரை அருகே பைக்கில் சந்தேகத்திற்கிடமாக சென்றவரை ரோந்து போலீசார் துரத்திய போது அவர் பணப்பையை கீழே தள்ளிவிட்டு தப்பியோடிய நிலையில் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

11:55:03 on 27 May

மேலும் வாசிக்க தினமணி

'மக்கள் தொகையை கட்டுப்படுத்த மூன்றாவது குழந்தைக்கு ஓட்டுரிமை இல்லை என்று சட்டம் கொண்டுவர வேண்டும். அரசின் பிற சலுகைகளையும் பறிக்க வேண்டும்,' என பாபா ராம்தேவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

11:45:50 on 27 May

மேலும் வாசிக்க நக்கீரன்

பெரு நாட்டின் அமேசானஸ் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகி உள்ளது. லகுனாஸ் பகுதிக்கு தென்கிழக்கே 80 கி.மீட்டர் தொலைவிலும், யூரிமேகுவாஸ் பகுதிக்கு வடகிழக்கே 158 கி.மீட்டர் தொலைவிலும், 114 கி.மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

11:41:01 on 27 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அதில், 4 பேர் பலியாகினர். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

11:34:03 on 27 May

மேலும் வாசிக்க தினமணி

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபுர்வி சண்டேலா தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இது, இந்த ஆண்டு இவர் கைபற்றிய இரண்டாவது தங்கம். ஏற்கனவே, கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த உலக கோப்பையில் தங்கம் வென்றிருந்தார்.

11:27:29 on 27 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

கார்த்திக் நரேன் தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார். இந்தப் படத்தில் கதாநாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில், படத்துக்கு ‘மாபியா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

11:20:12 on 27 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவிக்கிறார். வாரணாசியில் வழிநெடுகிலும் ஏராளமானோர் திரண்டு பிரதமர் நரேந்திர மோடியை வாழ்த்தி முழக்கமிட்டனர். அதன்பின், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.

11:09:10 on 27 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கிரிமியாவின் யால்டா பகுதியில், இரட்டையர்கள் தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இரட்டையர்களான குழந்தைகள் ஒரே மாதிரியான உடையணிந்து, கைகளில் பலூனுடன் பெற்றோர்களின் கைபிடித்து ஊர்வலமாக நடந்து சென்றனர்.

11:02:10 on 27 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

76 நாட்கள் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, உடனடியாக தேர்தல் நடை முறைகளும் வாபஸ் பெறப்பட்டன. தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் இன்று அரசு பணிக்கு திரும்ப இருக்கிறார்கள்.

10:52:35 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கணிக்கப்பட்டுள்ள இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் ஆடிய விதம் பல்வேறு விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இந்நிலையில், 'இந்தியாவின் பேட்டிங் குறித்து கவலைப்பட தேவையில்லை' என்று இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா கூறி உள்ளார்.

10:45:40 on 27 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழ் சினிமாவில் கடந்த வாரம் வெளியான, லிசா மற்றும் நீயா 2 படங்களை தாண்டி Aladdin, IndiasMostWanted, Sita, NarendraModi, Ishq போன்ற மற்ற மொழி படங்களும் வெளியாகி இருந்தது. சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரப்படி Aladdin- ரூ. 82 லட்சம், லிசா- ரூ. 21 லட்சம், நீயா 2- ரூ. 16 லட்சம் வசூலித்துள்ளது.

10:33:54 on 27 May

மேலும் வாசிக்க சினி உலகம்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். கோமாளி படத்தின் 9வது போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டருடன் படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10:17:26 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தாலும், வேலைக்குத் தொடர்பில்லாத விஷயமாக இருந்தாலும் புதிது புதிதாக விஷயங்களைக் கற்றுக்கொண்டே இருத்தல் அவசியம். இந்தப் பண்பு, பிற ஊழியர்களிடமிருந்து நம்மை தனித்துக்காட்ட உதவும்.

10:07:55 on 27 May

மேலும் வாசிக்க விகடன்

வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், 'கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.' என தெரிவித்துள்ளது.

10:00:45 on 27 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கோவை கரட்டுமேடு முருகன் கோயில் அருகே 3 வயது பெண்குழந்தை உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது. காரமடை பகுதியை சேர்ந்த தமிழ் என்பவரின் 3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:49:45 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

பொது இடங்களில் யூதர்கள் தங்களுக்கே உரிய 'கிப்பா' எனப்படும் குல்லாவை அணிய வேண்டாம் என யூத எதிர்ப்பை கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட 'ஆண்டி செமிடிசிசம்' ஆணையர் ஃபெலிக்ஸ் க்லைன் கேட்டுக் கொண்டுள்ளார்.

09:41:56 on 27 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

முன்னாள் பிரதமர் நேருவின் 55-வது நினைவு தினத்தை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், அவரின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

09:32:17 on 27 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கொல்கத்தா மாநகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை இன்று கைது செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது. இவர் வெளிநாடு தப்பிச் செல்லலாம் என்பதால், அவரை தேடப்படும் நபராக சிபிஐ நேற்று அறிவித்தது. இதற்கான, லுக் அவுட் நோட்டீசை அது வெளியிட்டது.

09:30:15 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

கண்டங்கத்திரி பழங்களை பறித்து சட்டியிலிட்டு நீர்விட்டு வேக வைத்து கடைந்து வடிகட்டிக் கொண்டு நான்கு பங்கெடுத்துக் கொண்டு அத்துடன் ஒரு பங்கு நீரடி முத்து எண்ணெய் சேர்த்து காய்ச்சி பக்குவத்தில் வடித்து வெண்குட்டம் உள்ள இடங்களில் பூசி வர வெண்புள்ளிகள் மறையும்.

08:55:01 on 27 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் பல்வேறு துறைகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல உள்ளனர். இத்தகைய புதுமுகங்கள் ஒருபுறம் இருக்க மறுபுறம் ஏராளமான மூத்த தலைவர்களை இந்த நாடாளுமன்றம் இழந்து இருக்கிறது.

08:35:01 on 27 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களில் 11 பேருக்கு ஒரே நாளில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையை இந்திய அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

08:15:02 on 27 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.50 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.45-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:01 on 27 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளது. அதன்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில், "பல தடைகளை கடந்து திருமாவளவன் வெற்றி பெற்றுள்ளார்”, என வைகோ கூறினார்.

07:35:05 on 27 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதற்கான செயல் திட்டத்தை சமர்ப்பிக்க தவறிய தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்கள், மாதம் தலா ₹1 கோடி இழப்பீட்டு தொகையை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளன. சுற்றுச்சூழல் கேடுக்கு பிளாஸ்டிக் முக்கிய காரணியாக உள்ளது.

07:15:02 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்காவைச் சேர்ந்த பென்சிலவெனியா பகுதியில் அஸ்லீ அன் ஸ்மித் என்ற பெண் ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளார். இவர் பணிபுரியும் இடத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளை முழு நிர்வாணமாகவும், ஆபாசமாகவும் படம் எடுத்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பி வந்துள்ளார்.

06:55:01 on 27 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் வெஜிடபிள் ஆயில் இரண்டிலும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட் இருக்கிறது. இது கர்ப்பிணிகளின் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அத்துடன் இருதய ஆரோக்கியத்தையும் பாதிக்கும் தன்மை கொண்டது. இந்த ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்டில் குறிப்பாக, லினோலிக் அமிலம் இருப்பதால் கல்லீரலின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது.

06:25:02 on 27 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

திருப்பூரில், சாலையில் செல்லும் போதெல்லாம் பார்த்து குரைத்ததால் 15க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்று விட்டதாக மீன் வியாபாரி ஒருவர் மீது அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

05:55:02 on 27 May

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தில் தற்போது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் பரபரப்பு ஆரம்பித்துவிட்டது. வரும் ஜூலை மாதம் 24ஆம் தேதியோடு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், ரத்தினவேல், அர்ஜுனன், லக்ஷ்மணன், திமுக எம்.பி கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

05:25:02 on 27 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடந்த மே 23-ம் தேதி இரவு தேர்தல் முடிவு வெளியானதிலிருந்து தஞ்சாவூரில் தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இது அ.தி.மு.க அரசின் பழிவாங்கும் செயலாக இருக்குமோ என தஞ்சை மக்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்.

04:55:02 on 27 May

மேலும் வாசிக்க விகடன்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒருத்தி கிராமத்தைச் சேர்ந்த வினோத், ஏழுமலை ஆகியோர் கட்டட வேலையும், விவசாய தொழிலையும் மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் அங்கு விற்கப்படும் எரிசாராயத்தை வாங்கி குடித்தவுடன், மயக்கம் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதில் வினோத், வீட்டிலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

04:25:01 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் 7

மும்பையில் உள்ள டோபிவாலா மருத்துவக் கல்லூரியில் பெண்கள் நல மருத்துவம் படித்து வந்தார். ஆனால், அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறாமலேயே போனது. கடந்த 22ஆம் தேதி தூக்கு மாட்டிக் கொண்ட பாயல், தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

03:55:01 on 27 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாகிஸ்தானில் இளைஞர் ஒருவர் தான் வளர்த்துவரும் பசுவை தன்னுடைய பைக்கில் முன்னால் அமர்த்தி ஒட்டிச் செல்கிறார். பசு பைக்கில் செல்வதை மக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

03:26:01 on 27 May

மேலும் வாசிக்க தினமலர்

தென்னகத்து காஷ்மீர் என்று கூறப்படும் மூணாறில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்த வண்ணம் உள்ளனர். கோடை வெப்பத்தில் இருந்து காத்து கொள்ளவும், மூணாறில் நிலவும் கால நிலையை அனுபவிக்கவும், தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

02:56:01 on 27 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகை குஷ்பு மற்றும் பிக் பாஸ் காயத்ரி ஆகியோர், ட்விட்டரில் சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இருவரும், அவர்களுடைய கட்சிக்காக தான் இந்த சண்டையை போட்டுள்ளனர்.

02:26:01 on 27 May

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

01:56:01 on 27 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

'பாட்டாளிகளே... உங்களால் வீறு கொண்டு வெற்றிகளை குவிக்க முடியும்,' என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், 'மக்களவைத் தேர்தலில் நாம் தோல்வியடைந்தாலும், கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் பெற்ற அளவுக்கு இப்போதும் வாக்குகளை வென்றுள்ளோம்.' என தெரிவித்துள்ளார்.

01:26:01 on 27 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

வந்தவாசி அருகே கீழ் கொடுங்காலூரில் கவனிக்க ஆள் இல்லாததால் முதிய தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். அரசுக்குச் சொந்தமான காரிய மண்டபத்தில் தங்கியிருந்த அப்பாவு(96), அலமேலு (85) தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

12:55:02 on 27 May

மேலும் வாசிக்க தினகரன்

பெரம்பலுார் மாவட்டம், மேலமாத்துார் கிராமத்தைச் சேர்ந்த வாலிபர்கள், நீர்நிலைகளை துார் வாரும் பணியில், ஈடுபட்டு உள்ளனர். வாலிபர்களின் பணியை, இக்கிராமத்தினர் மட்டுமின்றி, பக்கத்து கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.

12:25:01 on 27 May

மேலும் வாசிக்க தின மலர்

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் நகராட்சிக்கு உட்பட்ட செல்வராஜ் நகர் விவேகானந்தர் தெரு பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில், மின்கம்பங்களில் மின் விளக்கு இல்லாமல் அப்பகுதி இருட்டாக இருக்கும் காரணத்தால், மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி இரவு 9 மணி வரை அந்த வெளிச்சத்தில் நடமாடி வருகின்றனர்.

11:55:02 on 26 May

மேலும் வாசிக்க நக்கீரன்

உத்தரபிரதேச மாநில முஸ்லீம் பெண்ணொருவர் தனக்கு பிறந்த குழந்தைக்கு நரேந்திர தாமோதர் தாஸ் மோடி என பெயரிட்டுள்ளார். அவர் மோடி அரசு வழங்கிய திட்டங்களை வெகுவாக பாராட்டினார்.

11:25:01 on 26 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி தொடங்கியது. ஒன்றரை டன் பழங்களைக் கொண்டு 7 அடுக்குகளில் அமைக்கப்பட்ட பழ அலங்காரத்தை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

10:55:01 on 26 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில், 'வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை,' என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

10:26:01 on 26 May

மேலும் வாசிக்க மாலை மலர்

மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டத்துக்கு ராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடைவிதித்து கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மத்திய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

09:55:01 on 26 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

ஆண்ட்ராய்ட் செல்போன், வாகனத் திருட்டை கண்டறிய உதவும் 'டிஜிகாப் செயலி'யை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக காவல்துறை. நெட்வொர்க் பிரச்சினையால் கோவை புறநகர் பகுதிகளில் இச்செயலியை பயன்படுத்துவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

09:26:01 on 26 May

மேலும் வாசிக்க காமதேனு

மேலும் வாசிக்க