View in the JustOut app
X

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியாமணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாரப்பா மற்றும் விராட பருவம் படக்குழுவினர் அவரின் தோற்றம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த இரண்டு போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

10:57:02 on 04 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

செம்பருத்தி சீரியல் படப்பிடிப்பு துவங்கப்போவதாக ஜி தமிழ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது செம்பருத்தி சீரியல் ரசிகர்களுக்கு மாபெரும் நற்செய்தியாகவும், மிக பெரிய கொண்டாட்டமாகவும் அமையும். மேலும் இதனால் மிகவும் கீழே சரிந்த ஜி தமிழ் தொலைக்காட்சியின் TRP கண்டிப்பாக உயரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

09:57:02 on 04 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

கொரோனா தொற்று மற்றும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வரும் நிலையில், குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டினர் எண்ணிக்கையை 70%லிருந்து 30 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் சபா அல்-காலித் அல்-சபா தெரிவித்துள்ளார்.

08:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க தினமலர்

சென்னையில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு யார் வந்தாலும் பிசிஆர் சோதனை மேற்கோள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற பகுதிகளைத் தொடர்ந்து, இன்று முதல் சென்னையில் இருந்து கடலூருக்கு வருபவர்களுக்கும் பிசிஆர் சோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

08:25:01 on 04 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

ஒரு நாளில் மிக அதிகமான பாடல்களைப் பாடியவர் என்னும் பெருமையும் எஸ்.பி,பியையே சாரும். கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாரின் இசையில் 12 மணிநேரத்தில் 21 பாடல்களைப் பாடிய பெருமையும் இவரையே சாரும். இதைப்போலவே ஒரு நாளில் 19 தமிழ் பாடல்களையும், ஒரு நாளில் 16 ஹிந்தி பாடல்களையும் பாடியுள்ளார்.

07:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

07:27:02 on 04 Jun

மேலும் வாசிக்க தினமணி

பொது வார்டில் கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நபர்களுக்கு 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கலாம் என்றும், அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டணம் a1 மற்றும் a2 கிரேடுக்கு 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலும், கட்டணம் வசூலிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

06:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06:56:21 on 04 Jun

மேலும் வாசிக்க தினமணி

சென்னையில் இன்று மட்டும் 1072 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 1384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

06:49:10 on 04 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கிகளில் குடும்ப அட்டையை காண்பித்து ரூ.50,000 கடனாக பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறிருந்தார். ஆனால் குடும்ப அட்டையை காண்பித்தால் எப்படி கடன் வழங்க முடியும் என்று அடுத்த நாளே மாற்றிக் கூறினார்.

06:30:24 on 04 Jun

மேலும் வாசிக்க சன் நியூஸ்

ஸ்நாப் சாட் என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற, ஒரு நாளைக்கு 22 கோடி பேரால் பயன்படுத்தப்படும் மல்டி மீடியா செயலி. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தொடர் ட்விட்டுகள் இனவெறியை ஊக்குவிப்பதாக இருப்பதாக குற்றம் சாட்டிய ஸ்நாப் சாட், தனது செயலியில் ட்ரம்பின் இடுகைகளை, கருத்துகளை புரமோட் செய்ய முடியாது என்று அறிவித்துள்ளது.

05:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதி கொந்தளிப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் பாம்பன் பகுதியில் கடந்த சில நாட்களாக வீசி வரும் பலத்த சூறாவளி காற்றால் கடல்நீர் நிறம் மாறி காட்சி அளிக்கிறது. கடலின் அடியில் உள்ள பாசி, தாழை செடிகள் கடலின் மேல்பகுதிக்கு வந்துள்ளதுடன் கடல்நீர் நிறம் மாறியுள்ளது.

05:27:01 on 04 Jun

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சரான ஸ்ரீராமுலு பங்கேற்ற விழாவில், பெருங்கூட்டமாக பா.ஜ.க-வினர் கலந்து கொண்டு, அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறியுள்ளனர். ஆனால் மத்திய பாஜக அரசு, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள், ஊரடங்கை மீறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறிக் கொண்டிருக்கிறது.

04:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சென்னையில் கொரோனா உள்ளவரிடம் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும், வீட்டில் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காமல் வெளியே வருபவர்களை மட்டுமே முகாமிற்கு அழைத்து செல்லப்படுவர் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

04:27:01 on 04 Jun

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட், காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது கொல்லப்பட்டதால், அந்த நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளதை அடுத்து இந்த மரணத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது புதிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

03:57:02 on 04 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார் நடிகை ஜெனிபர் அனிஸ்டன். 1995-ல், அனிஸ்டனுக்கு 26 வயது இருந்தபோது அவரை வைத்து ஒரு நிர்வாணப் புகைப்படத்தை எடுத்தார் புகைப்படக் கலைஞர் மார்க் செலிகர். அந்தப் புகைப்படத்தை நிவாரண நிதிக்காக ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளார் செலிகர்.

03:27:01 on 04 Jun

மேலும் வாசிக்க தினமணி

ஐஸ்வர்யா ராய் இவரை தெரியாதவர்கள் இந்தியாவில் யாரும் இருக்க முடியாது. ஏன் உலகம் முழுதுமே இவரை தெரியும். தற்போது இணையத்தில் ஒரு டிக் டாக் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில் உள்ள பெண்மணி அச்சு அசல் ஐஸ்வர்யா ராய் போலவே உள்ளது செம்ம வைரல் ஆகி வருகிறது.

02:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

சென்னை மதுரவாயலை சேர்ந்த செந்தில்நாதன் என்பவர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னி நாகநந்தினியை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். செந்தில் நாதன் நாக நந்தினியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாகநந்தினி வீட்டின் 2-வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

02:25:01 on 04 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பஞ்சாப்பைச் சேர்ந்த காதல் தம்பதி, பாதுகாப்பு கேட்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது, திருமண புகைப்படத்தில் தம்பதிகள் முகக்கவசம் அணியாமல் இருந்ததைக் கவனித்த நீதிமன்றம், தம்பதிகளுக்கு ரூ.10,000 அபராதத் தொகை விதித்தனர்.

01:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சேலம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்புப் பணிக்கு செல்லாமல் இருந்த காவலர் தென்றல் குமார் (28) என்பவரை, ஆஜர்படுத்துமாறு காவல் ஆய்வாளர் ஜீவா எட்வர்டு ராஜ் மற்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தென்றல்குமார் அவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். திடீரென்று அவர் ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்தார்.

01:27:01 on 04 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

அரபிக் கடலில் உருவான நிசர்கா புயல், மகாராஷ்டிராவின் மும்பை அருகே கரையை கடக்கும்போது வலுவிழந்தது. புயல் 90 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தது. அப்போது அங்கு கனமழை பெய்தது. இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் புயலில் சிக்கிய விமானம் ஒன்று தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு வெளியேறிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

12:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் 2-வது கட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மேலும் 4 ரயில்களை இயக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

11:57:02 on 04 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட ஆறு மண்டலங்களில் துவக்கம் முதலே கரோனா தொற்று அதிகமாக இருந்து வந்த நிலையில், சப்தமே இல்லாமல் சில மண்டலங்களில் தற்போது கரோனா பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அடையாறு மண்டலத்தில் இன்று காலை நிலவரப்படி கரோனா பாதிப்பு 1,007 ஆக உயர்ந்துள்ளது.

11:35:27 on 04 Jun

மேலும் வாசிக்க தினமணி

நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு பேருந்தில் செல்லக்கூடிய பயணிகள் போக்குவரத்து ஊழியரிடம் தங்களுடைய ஆதார் கார்டு அல்லது அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். அதில் உள்ள எண்கள் மற்றும் செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து கொண்ட பிறகே அவர்கள் பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

11:28:05 on 04 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

கொரோனா இறப்பு விகிதத் தகவலை ஆய்வு செய்ததை வைத்து பார்த்ததன் அடிப்படையில், WHO-இன் தொற்று பாதுகாப்பு கண்காணிப்பு குழு மீண்டும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என அனுமதித்துள்ளதாக அதன் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியோசஸ் தெரிவித்துள்ளார்.

11:27:02 on 04 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் சத்திரத்தார் தெருவில் உள்ள ஒரு வீட்டை சினிமா படம் எடுக்கப்போவதாக திருப்பத்தூரை சேர்ந்த பெரியசாமி (வயது48) என்பவர் வாடகைக்கு எடுத்து உள்ளார். இங்கு குறைந்த வட்டியில் பணம் கடன் தருவதாக இவர்களது ஏஜெண்டுகள் மூலம் பல்வேறு நபர்களை வரவழைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

11:26:48 on 04 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.4,456-க்கும் சவரன் ரூ.35,648-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.53.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.

11:19:00 on 04 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பல இடங்களில் சீன ராணுவம் படைகளைக் குவித்துள்ள நிலையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் பின் நகர்ந்தது தெரிய வந்துள்ளது. பதிலுக்கு இந்திய ராணுவமும் சுமார் 1 கிலோ மீட்டர் பின் நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

10:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க விகடன்

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலை உள்ளது. இந்த சிலையை விஷமிகள் சிலர் அவமதிப்பு செய்துள்ளனர். தகவலறிந்த தூதரக அதிகாரிகள் சிலை பிளாஸ்டிக் கவரால் மூடி வைத்துள்ளனர். போராரட்டக்காரர்கள் தான் சிலையை அவமதிப்பு செய்திருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

10:27:01 on 04 Jun

மேலும் வாசிக்க தினமலர்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோன்று, சென்னையில் தலைமை செயலக ஊழியர்கள் 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

09:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் சிறுமியின் உறவினர் முருகாயி கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

09:48:37 on 04 Jun

மேலும் வாசிக்க தினமணி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3.87 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 109,142 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 5,815 ஆகவும், தமிழகத்தில் 208ஆகவும் உள்ளது.

09:27:01 on 04 Jun

மேலும் வாசிக்க தினகரன்

மித்ரன் மற்றும் Remove China Apps என்ற இரண்டு செயலிகளையும் கூகுள் பிளே ஸ்டோர் நீக்கியுள்ளது. எனினும் அதற்கான காரணங்களை கூகுள் பிளே ஸ்டோர் தரப்பு தெரிவிக்கவில்லை. பொதுவாக கூகுள் பிளே ஸ்டோரின் விதிமுறைகளை எந்த ஒரு செயலி பூர்த்தி செய்யவில்லையோ அந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் நீக்குவது வழக்கம்.

08:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க Asiavillenews

ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750-க்குப் போட்டியாக, Z650 பைக்கின் BS-6 வெர்ஷனும் களமிறங்கிவிட்டது. 5.94 லட்ச ரூபாய் இந்திய எக்ஸ்-ஷோரூம் விலையில் வந்திருக்கும் இந்த நேக்கட் பைக், முன்பைவிட வெறும் 25,000 ரூபாய் மட்டுமே விலை உயர்வைப் பெற்றிருக்கிறது.

07:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க விகடன்

கருவுற்ற 10 16வது வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம். காபி, தேநீர் போன்றவற்றை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. இவை உடலில் சோகை மற்றும் வேறு சில உபாதைகளை உண்டாக்கக் கூடும்.

06:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. நரம்பு வழியாக செலுத்தப்படும் இந்த Remdesivir மருந்தால், கொரோனா நோயாளிகளுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:57:01 on 04 Jun

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

சன் டிவியின் புதிய செய்தி வாசிப்பாளர் கண்மணி. தற்போது தமிழக இளைஞர்கள் மத்தியில் இவர் தான் ட்ரெண்ட். ப்ரியா பவானி ஷங்கர், அனிதா சம்பத்தை தொடர்ந்து தற்போது இவரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும், லைக் செய்தும் வருகிறார்கள்.

10:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க Behind Talkies

அன்பே ஆருயிரே, மருதமலை உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் நிலா. இந்நிலையில், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரை விட மகேஷ் பாபு தான் மிகவும் பிடிக்கும் என்று அவர் கருத்து தெரிவித்ததால், கடுப்பான ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் அவரை கடுமையான வார்த்தைகளால் வசைபாடி வருகின்றனர்.

09:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

கோவை சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்த சுவப்ன சுஜா, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் நீதிமன்றம் தொடர்பான பணியைக் கவனித்து வந்தார். இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை உரியவர்களிடம் இவர் ஒப்படைக்கப்படவில்லை என புகார் எழுந்தது.

08:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க விகடன்

கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த, நாடு முழுதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க மாநில தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது. இதன் ஒருபகுதியாக அங்கு வரும் 8-ம் தேதி பேஸ்புக்’ வாயிலாக ஆன்லைன்’ பொதுக்கூட்டத்திற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.

08:27:02 on 03 Jun

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மார்ச் மாதம் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக சிஏஏவுக்கு எதிரான போராட்டங்கள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் இன்று, குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த சில சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இதுதொடர்பான போஸ்டர் ஒன்று வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவியது.

07:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க தினமணி

மின்சாரப் பயன்பாட்டை, ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு, அதற்கு ஏற்ற மின் கட்டணம்தான் வாங்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர், ரூ.710 செலுத்த வேண்டியவருக்கு ரூ. 2,140 பில் செலுத்த வேண்டியநிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

07:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

கடந்த ஏப்ரல் மாதம் வரை சிலிண்டர் முன்பதிவு செய்து ரூ.782 பணம் செலுத்தி பெற்றவர்களின் வங்கிக் கணக்குக்கு மானியத் தொகை கிடைக்கப்பெற்றது. அதேநேரத்தில் மே மாதம் பதிவுசெய்து, ரூ.584.5 பைசா செலுத்திய சிலிண்டர் பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை சென்றடையவில்லை.

06:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,012 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது.

06:54:39 on 03 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான ஹால்டிக்கெட் நாளை பிற்பகல் முதல் விநியோகிக்கப்படும் என்றும், மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

06:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க Asiavillenews

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

06:02:00 on 03 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழக தலைமைச் செயலாளர் க.சண்முகத்தின் பதவிக்காலத்தை மூன்று மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் 46வது தலைமைச் செயலாளராக இருந்த க.சண்முகம், வருகின்ற ஜூலை மாத இறுதியில் பதவி முடிவடைய இருந்த நிலையில் மேலும் 3 மாதங்களுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

05:30:01 on 03 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பெரம்பலூர் மாவட்டம் கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்யக்கோரி பல முறை முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து இளையராஜா என்பவர், டிரான்ஸ்பார்மரில் கயிற்றுக் கட்டிலைப் போட்டு அதன் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி அமர்ந்துகொண்டு போராட்டம் நடத்தினார்.

04:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா ஏற்கனவே பிரபுதேவா இயக்கிய வில்லு படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

04:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களை இயக்கியவர் மிஷ்கின். இவர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் பேட்டி அளித்துள்ளார். அதில் ”நான் கமலுக்கு ஒரு கதை ரெடி செய்தேன். பின் படம் ட்ராப் ஆனது. அந்த கதை விஜய்க்கு செட் ஆகும் என நினைக்கிறேன். அந்த படம் பௌத்தம் குறித்த ஒரு படம், செம்ம ஆக்‌ஷன் ப்ளாக் அதில் இருக்கும்” என்றார்.

03:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

ஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் கங்கன் பகுதியில் புதன்கிழமை காலை பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

03:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க தினமணி

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம் என்பது ஒரு மாயை என கார்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தார். மேலும் அவர், ”ஏற்கனவே ஒவ்வொரு அக்கவுண்டிலும் பணம் போடுவதாக தெரிவித்திருந்தார், நடந்ததா? அதுபோன்ற மாயை தான் ரூ.20 லட்சம் கோடி திட்டமும்.” என விமர்சித்துள்ளார்.

02:57:02 on 03 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்ட பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு இருக்கும் மத்திய அரசின் தொடர்பைப் பயன்படுத்தி Zee5 நிறுவன உரிமையாளர்களையும் அச்சுறுத்தி காட்மேன் தொடரை வரவிடாமல் செய்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வெற்றிக்களிப்புடன் பதிவிட்டு வருகிறார்கள்.

02:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர், ராயப்பேட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அவர் பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது கிண்டி அருகே, எதிர்பாராத விதமாக மாஞ்சா நூல் ஒன்று பறந்து வந்து அவரது கழுத்தை அறுத்துள்ளது.

01:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் உள்ள வெள்ளியாற்றில் கர்ப்பிணி யானை ஒன்று நின்ற நிலையில் இறந்து கிடந்தது. இது தொடர்பான விசாரணையில், காட்டு யானை உணவு தேடி கிராமத்திற்கு வந்த நிலையில், யாரோ வெடி பொருட்கள் மறைத்து வைத்த அன்னாசி பழத்தை உணவாக தந்துள்ளனர். அந்த யானை, பழத்தை கடிக்கும் போது வெடி மருந்து வெடித்துள்ளது.

01:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்மில் நிரப்ப எடுத்துச் சென்ற பணத்தை இயந்திரங்களில் நிரப்பாமல், 78 லட்சம் ரூபாய் அளவுக்கு, சிறுக சிறுக கையாடல் செய்து, ஆன்லைனில் ரம்மி விளையாடி பறிகொடுத்த பணம் நிரப்பும் ஊழியர்கள் 2 பேரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

12:55:01 on 03 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஹைதராபாத்தைச் சேர்ந்த மாளவிகா தேவதி என்பவர், தனது கணவருடன் சேர்ந்து, திருமண இணையதளம் ஒன்றில் பல்வேறு புனைப்பெயர்களில் போலியான பக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் மோசடி செய்துள்ளார். இந்நிலையில், மாளவிகாவிடம் ரூ.1.02 கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாகக் கூறி ஒருவர் அளித்த புகாரில் மாளவிகாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

12:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 3,060 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,921 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 2,007 திரு.வி.க.நகரில் 1,711 பேருக்கும், தேனாம்பேட்டையில் 1871 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

11:57:02 on 03 Jun

மேலும் வாசிக்க தினகரன்

இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு" என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.

11:25:01 on 03 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

அமெரிக்காவில் கருப்பின நபரின் மரணத்தில் ஆங்காங்கே போராட்டம் வெடித்து வரும் நிலையில், போலீசார் போராட்டக்காரர்கள் முன்பு மண்டியிட்டது மட்டுமின்றி, அவர்களை அரவணைத்தது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

10:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

வீடு திரும்பும் தொழிலாளர்களால், எதிர்பாராத கர்ப்பங்கள் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை, பீஹார் அரசு துவக்கி உள்ளது. முகாம்களில் இருந்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, தலா இரண்டு, 'பாக்கெட்' ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

10:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க தினமலர்

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் 97வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், திமுக தொண்டர் அசோக்குமார் - மகாலட்சுமி திருமணத்தை நடத்தி வைத்தும் புதிய தம்பதிக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

09:57:02 on 03 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

வடக்கு மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் மாவட்டம் மற்றும் தெற்கு குஜராத்தில் உள்ள ஹரிகேஸ்வர் பகுதிகளுக்கு இடையே இன்று நண்பகல் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:27:01 on 03 Jun

மேலும் வாசிக்க தினகரன்

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/ என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

08:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம் 11 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.10,999; 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 12,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் பிளாக், மெட்டாலிக் ப்ளூ மற்றும் வயலட் வண்ணங்களில் விற்பனைக்கு வருகின்றன. எம் 01 3 ஜிபி ரேம், 32 ஜிபியின் விலை ரூ.8,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

தரையில் கால்களை அகட்டி நின்று கொள்ளவும். இரண்டு கால்களுக்கு நடுவே கெட்டில் பெல்லை வைக்கவும். பின்னர் மெதுவாக குனிந்து இடுப்பை பின்னோக்கி தூக்கியவாறு அடிவயிறை உள்ளிழுத்துக் கொண்டு கெட்டில்பெல்லின் பிடிகளை பிடித்து நிற்கவும். இடுப்பிலிருந்து முதுகுவரை தட்டையாக இருக்க வேண்டும்.

06:55:01 on 03 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

05:57:01 on 03 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நடிகை சிம்ரன் தனது டுவிட்டர் பக்கத்தில், "நான் சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக பரவும் செய்தி போலியானது. அந்த படத்தில் நடிக்கும்படி இதுவரை யாரும் என்னிடம் அணுகவில்லை" எனக் கூறி உள்ளார். இதன்முலம் சிம்ரன் சந்திரமுகி 2-ம் பாகத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

10:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

தெய்வமகள் சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கிறார் அண்ணியார். அந்த வகையில், தற்போது குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டும் ட்ரான்ஸ்பரண்ட் உடையிலும் போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

09:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க Behind Talkies

ஆசியாவில் இதுவரை நடந்த மிக விலை உயர்ந்த விவாகரத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது சீன தம்பதியின் விவாகரத்து. இந்த விவகாரத்தால், உலகிலேயே மிகப் பணக்கார கோடீஸ்வரிகளில் ஒருவராக இடம்பெற்றுள்ளார் சீனப் பெண்மணி. இந்த விவாகரத்தின் மூலம் அவருக்கு இந்திய மதிப்பில் சுமார். ரூ.24 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது.

08:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூன்று மாவட்டங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

08:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க தினமணி

”அமெரிக்க அதிபர் அவர்களே, என்னை ஒன்று மட்டும் சொல்ல விடுங்கள். முன்னேற்றங்களை ஏற்படுத்தும் விதமான கருத்துக்கள் எதையும் உங்களால் கூற முடியவில்லை என்றால், எதுவும் பேசாமல் வாயை மூடுங்கள்” என ஹூஸ்டன் நகர காவல்துறை தலைமை அதிகாரி ஆர்ட் தெரிவித்துள்ளார்.

07:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சதுரங்க விளையாட்டில் வல்லவரான அமித் ஷா எப்போதுமே தனது போட்டியாளர்களை வியூகம் வகுத்து வென்று மகிழ்கிறார். அமித் ஷாவின் செயல்படும் பாணியே அவரை பிற தலைவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

07:25:01 on 02 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகத்தில் மேலும் 1091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 24,586-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 809 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

07:16:24 on 02 Jun

மேலும் வாசிக்க தினகரன்

நாடு முழுவதும் மின் விநியோகத்தையும், கட்டணம் வசூலிப்பதையும் மாநில அரசுகளிடமிருந்து பறித்து தனியாரிடம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான சட்ட மசோதாவுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மின்வாரிய தொழிலாளர்களும், விவசாயிகளும் பல வகையில் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

06:27:02 on 02 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

திமுக பொதுச் செயலாளரைச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கலாம் என்பதே இப்போதைய முடிவு. இது துரைமுருகனுக்குத் தெரியவர கடுமையான அதிருப்தியில் இருக்கிறார் என்கிறார்கள். துரைமுருகனின் அதிருப்தி என்றேனும் வெடிக்கலாம் என்ற எச்சரிக்கைத் தகவல் ஸ்டாலினுக்கும் சில சீனியர்கள் மூலமாகச் சொல்லப்பட்டுள்ளது.

05:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

நிறவெறி காரணமாக கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட் பரிதாபமாக கொல்லப்பட்டதை எதிர்த்து சமூக வலைதள நிறுவனங்கள் கருப்பு நிறத்தில் லோகோவை மாற்றியுள்ளன. கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக #BlackLivesMatter, #USAonFire என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

05:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

ஏற்கனவே கரோனாவினால் உலக நாடுகள் திக்குமுக்காடி வரும் நிலையில் காங்கோவில் புதிய எபோலா வைரஸ் தொற்றுக்கள் வங்கத்தா மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையத்து அங்கு பீதி நிலவி வருகிறது. இதுவரை 6 பேருக்கு எபோலா கண்டுப்பிடிக்கப்பட்டதில் 4 பேர் மரணமடைந்துள்ளனர். 2 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

04:57:02 on 02 Jun

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

டிக்டாக்கில் வாள்வீசும் வம்சம் என வீடியோ பதிவிட்ட கமுதி மாணவர் ஒருவர், வாளால் பிறந்தநாள் கேக் வெட்டியதால் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் கேக் வாங்கி தின்பதற்காக கூடி நின்று கைதட்டி உற்சாகப்படுத்தியவர்களையும் போலீசார் கொத்தாக தூக்கிச்சென்றனர்.

04:55:01 on 02 Jun

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன். பொறியியல் பட்டதாரி. வங்கியில் கடன் உதவி பெற்று, பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இந்த நிலையில் கல்வி கடனை திரும்ப செலுத்தகோரி வங்கி தரப்பில் இருந்து தொடர்ந்து நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.

04:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி காவல் நிலையத்திகு உட்பட்ட அல்லிகுண்டம் கிராமத்தில், 65 வயது மதிக்கத்தக்க அய்யக்காள் என்ற மூதாட்டி வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை செய்வதை போலீசார் கண்டறிந்தனர். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

03:57:02 on 02 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

''அமெரிக்காவில் இப்போது நடப்பது அமைதியான போராட்டம் அல்ல. இவை உள்நாட்டுப் பயங்கரவாத செயல். அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும், அப்பாவி மக்கள் ரத்தம் சிந்தப்படுவதும் மனிதக்குலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும், கடவுளுக்கு எதிரான குற்றமாகும்,'' என டிரம்ப் கூறியுள்ளார்.

03:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நம் தமிழ் சினிமாவில் தற்போது சிறந்து விளங்கி வரும் முன்னணி இயக்குனர்களான ஷங்கர் 46 கோடி ரூபாயும், ஏஆர் முருகதாஸ் 25 கோடி ரூபாயும், அட்லீ 20 கோடி ரூபாயும், மணிரத்னம் 10 கோடி ரூபாயும், செல்வராகவன் 7 கோடி ரூபாயும், பா.ரஞ்சித் 4 கோடி ரூபாயும், கார்த்திக் சுப்புராஜ் 5 கோடி ரூபாயும் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

02:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க சினி உலகம்

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திரையரங்கில் தான் முதலில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளதாக பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் அமேசான், நெட்நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT தளங்கள் மாஸ்டர் படத்தை வாங்க பெருந்தொகை அளிக்க முன் வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை விஜய் மறுத்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

01:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க தந்தி டிவி

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 லிருந்து 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை முடிந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 91,819 லிருந்து 95,527 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,394 லிருந்து 5,598 ஆக அதிகரித்துள்ளது.

01:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க நக்கீரன்

புதுக்கோட்டை அருகே கந்தர்வக்கோட்டையில் 13 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது தந்தை பன்னீர்செல்வம் மற்றும் உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு, சிறுமியை பன்னீர்செல்வம் நரபலி கொடுத்தது தெரியவந்துள்ளது.

12:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க தினமலர்

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா 1976 ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேற்கத்திய இசைக் கருவிகளை கொண்டு அவர் மெட்டமைத்த பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் இசைத்தன. இளையராஜா பாடல்கள் பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களுடன், இன்றும் இரண்டற கலந்துள்ளன.

12:25:01 on 02 Jun

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு முதல் இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரனை நியமித்து, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உத்தரவிட்டுள்ளார். இயக்குநர் நியமனத்துக்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

11:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க தினமலர்

திருப்பூர் - அவினாசி சாலை, குமார் நகரிலுள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில் தடையை மீறி ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், தடையை மீறி அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பாதிரியார் உட்பட 7 பேரை கைது செய்தனர்.

11:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியில் இருக்கும் சிவசேனா அரசை, கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு வந்தால் யாராலும் காப்பாற்ற முடியாது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

10:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க தினமலர்

கொரோனா தடுப்பு தொடர்பாக 25.3.2020 முதல் பொது பஸ் சேவை நிறுத்தப்பட்டது. ஜூன் 1-ந்தேதி முதல் 50 சதவீத பொது பஸ் சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில், மதுரை மண்டலத்துக்குட்பட்ட அரசு பேருந்துகளில் மார்ச் மாத பஸ் பாஸை ஜூன் 15 வரை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10:27:02 on 02 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

இந்திய இராணுவமும் சீன இராணுவமும் பீரங்கிகள் மற்றும் போர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை கிழக்கு லடாக்கில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கு அருகிலுள்ள தங்களது பகுதியில் குவித்து வருகின்றன. இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

09:57:02 on 02 Jun

மேலும் வாசிக்க தினத்தந்தி

காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு வரும் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் ஊரடங்கு நடவடிக்கை காரணமாக தேர்தல் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

09:27:01 on 02 Jun

மேலும் வாசிக்க தினகரன்

சலூன்கள், அழகு நிலையம், ஸ்பா நிலையங்களுக்கு செல்வோர் ஆதார் அட்டை அவசியம் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, செல்போன், ஆதார் விவரங்களை பதிவேட்டில் குறித்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

09:00:23 on 02 Jun

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற புதிய மலையாள படம், சமீபத்தில் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழில் ரீமேக்காகும் இப்படத்தில் சூர்யாவும், கார்த்தியும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

08:57:02 on 02 Jun

மேலும் வாசிக்க மாலைமலர்

திருவண்ணாமலை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் திருவண்ணாமலை மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு http://www.drbtvmalai.net/notification.php?id=201 என்ற லிங்க்கில் தெரிந்துகொள்ளலாம்.

07:57:02 on 02 Jun

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பதற்றத்தை ஒரு கோளாறின் அறிகுறியாக ஏற்றுக்கொள்ளுங்கள், வேண்டுமென்றே நிகழ்ந்த நிகழ்வு அல்ல. யாரும் கவலைப்படுவதை விரும்புவதில்லை, ஆனால் அது கவலை மற்றும் உடனடி உயிருக்கு ஆபத்தான பிரச்சினைகள் இல்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டால், அதைச் சிறப்பாகச் சமாளிக்க முடியும்.

06:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மாம்பழம் புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களின் அபாயத்தைக் குறைக்கும் என்பதை மிகச் சிலருக்குத் தெரியும். உண்மையில், மா பழத்தின் சாறில் கரோட்டினாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம், டெர்பெனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. இந்த எல்லா நன்மைகளாலும், மாம்பழம் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது.

05:57:01 on 02 Jun

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் மற்றொரு ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய உள்ளது. 43 இன்ச் கொண்ட இந்த டிவி ஜூன் 4-ம் தேதி பிளிப் கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 31,000 - 34,000 ரூபாய்க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

10:57:01 on 01 Jun

மேலும் வாசிக்க Asiavillenews

மேலும் வாசிக்க