View in the JustOut app
X

ஜெயலலிதா கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய முறையில், மேயர் பதவியை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டு வரும் அவசர சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

06:50:30 on 19 Nov

மேலும் வாசிக்க தினமலர்

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்யப்பட்டதையடுத்து, கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்ட காரணத்துக்காக இதுவரை 765 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே ஜனவரி 1, 2019 முதல் ஆகஸ்ட் 4, 2019 வரை 361 வழக்குகள் பதிவாகியுள்ளது.

06:29:26 on 19 Nov

மேலும் வாசிக்க தினமணி

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 52.25 சதவிகித வாக்குகளைப் பெற்று, முன்னாள் ராணுவ அமைச்சரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே புதிய அதிபராக வெற்றிபெற்றுள்ளார். இவர், தமிழர்களை அரவணைப்பாரா? ஒடுக்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

06:25:01 on 19 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இந்தியாவில் காதல் விவகாரங்கள் கொலைக்கான முக்கிய காரணங்களில் 3வதாக உள்ளன என்று தேசிய குற்ற பதிவு ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 395 பேர் காதல் விவகாரங்களுக்காக கொலை செய்யப்படுகிறார்கள். நாட்டில் இதுதான் உயர்ந்த விகிதமாகும்.

06:23:41 on 19 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணத்துக்கு நீதி கேட்டு திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

06:18:37 on 19 Nov

மேலும் வாசிக்க தினகரன்

மத்திய பிரதேசம் மாநிலம், டாட்டியா பகுதியை சேர்ந்த சுஷில் ஜாதவ் (வயது 24) என்ற இளைஞர் கோபால்தாஸ் மலைப்பகுதியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவரை மீட்ட போலீசார் அவரது குடும்பத்தார்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

05:57:02 on 19 Nov

மேலும் வாசிக்க தினமலர்

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக என்சிஏஇஆர் எனப்படும் பொருளாதார ஆராய்ச்சி அமைப்பைச் சார்ந்த தேசிய கவுன்சில் மேற்கொண்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.9 சதவீதமாக குறையக்கூடும் என்று இந்த அமைப்பு கணித்துள்ளது.

05:27:01 on 19 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்து கோவில்கள் குறித்து இழிவாக பேசிய தீய சக்திகளின் ஒட்டுமொத்த உருவம் திருமாவளவன். அவர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

04:57:02 on 19 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

இந்திய பொருளாதாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், “பொருளாதார மந்த நிலைக்கு சில உண்மைகளே சாட்சிகளாகியுள்ளன. குறிப்பாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. 15 ஆண்டுகளில் இல்லாத அளவு கீழே சரிந்துள்ளது. அதனால் வேலையின்மை 45 ஆண்டுகளுக்கு இல்லாத அளவிற்கு அதிகமாகியுள்ளது.” என கூறியுள்ளார்.

04:27:02 on 19 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தன்னுடைய விலையுயர்ந்த காரை விட்டுவிட்டு ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளன. தற்போது 46 வயதாகும் இந்த நடிகை, தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார்.

03:57:02 on 19 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

உலகிலேயே முதன்முறையாக, ஆண்களுக்கான கருத்தடை ஊசியை உருவாக்கி, வெற்றிகரமாக சோதித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சாதனை படைத்திருக்கிறது. 13 ஆண்டுகள் பலன் தரும் இந்த ஆண்களுக்கான கருத்தடை ஊசி, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருக்கிறது.

03:27:01 on 19 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நவம்பர் 19 அன்று ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருந்ததாக பயனாளர்கள் புகார் அளித்து உள்ளனர். 63% பேர் மொத்த இருட்டடிப்பு செய்ததாகக் கூறினாலும், 16% பேர் தங்கள் செய்திகளை பதிவிடுவதில் சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் கூறி உள்ளனர்.

02:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

ஆண்களின் உரிமையை போற்றும் வகையில் சர்வதேச ஆண்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. ’பெண்கள் நம் நாட்டின் கண்கள்’ என்று பாடும் நாம், ஆண்களை பாராட்ட எந்த ஒரு கவிதைகளையும் பாடுவதுவில்லை. பெண்களை போலவே ஆண்களுக்கும் அழுகை வரும்.ஆனால் ‘ஆண் பிள்ளை அழுகலாமா’ என்று கேட்டு அழுகும் உரிமையை கூட பரித்து வைத்திருக்கிறோம்.

02:27:02 on 19 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

சுமார் முப்பது லட்சம் பேர் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் இந்தியாவில் தோராயமாக ஏழு கோடி துப்பாக்கிகள் பயன்பாட்டில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதிலும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கள்ளத் துப்பாக்கிகளின் புழக்கம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

01:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க விகடன்

இந்திய பேட்ஸ்மேன் ரஹானே ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், வரலாற்றுச் சிறப்புமிக்க இளஞ்சிவப்பு பந்து டெஸ்ட் குறித்து கனவு காண்கிறேன் என்று எழுதி ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் படுக்கையில் உள்ள ரஹானே, இளஞ்சிவப்பு பந்தை அருகில் வைத்துக்கொண்டு உறங்குவதாக அந்தப் புகைப்படம் உள்ளது.

01:27:01 on 19 Nov

மேலும் வாசிக்க தினமணி

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் சும்சுல்லா ரஹ்மானி, செயலாளர் முகமது உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

12:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க தினகரன்

முதல்வராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ஒரு ரியல் தலைவர். ஒரு சினிமாவில் நடித்து விட்டு மறு சினிமா வாய்ப்பு தரும் முன்பே முதல்வராக ரீல் தலைவர்கள் ஆசைப்படுகின்றனர். முதல்வர் பழனிசாமியை விமர்சித்த நடிகர் ரஜினிகாந்துக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா பதிலடி தந்துள்ளது.

12:27:02 on 19 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

சென்னை மாநகராட்சி நிர்வாகம் பொதுகட்டிடங்கள், சாலைகள், தெருக்கள், விளையாட்டு திடல்கள், பூங்காக்கள் என மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை புதிய முறையில் ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாடுகளில் பின்பற்றப்படும் நவீன மழைநீர் சேகரிப்பு முறையை தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

11:55:01 on 19 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரேமலதா விஜயகாந்த், வெற்றி வாய்ப்புள்ளவர்களை அறிந்து இடம் கொடுக்க வேண்டும் எனவும், 3 மேயர் இடங்களை அதிமுகவிடம் கேட்டுள்ளதாகவும் பொறுப்பாளர்‌கள் மத்தியில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

11:27:01 on 19 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நடை திறக்கப்பட்ட முதல் நாளில் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து வந்த 10 இளம்பெண்களை பம்பையில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்நிலையில், மேலும் 2 பெண்களை நிலக்கல்லில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

10:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அம்மா முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இடைத் தேர்தல் வெற்றியை வைத்துக்கொண்டு ஆட்சியாளர்கள் அகம்பாவத்துடன் பேசி வருவது மேலிடம் கைவிடும் வரைதான்.” எனக் கூறினார்.

10:27:01 on 19 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கொரியா எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வடகொரியாவின் விமானப்படை திடீர் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது.

09:55:01 on 19 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

சியாச்சின் மலைப்பகுதியில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 4 பேர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

09:26:04 on 19 Nov

மேலும் வாசிக்க தினகரன்

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. 210 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்று எவ்வித பலன்களும் வழங்கப்படவில்லை.

08:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

தனது மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் ஹிரபுராவில் அமைந்திருக்கும் நித்யானந்தாவிற்கு சொந்தமான யோகினி சவஜ்னபீடம் ஆஸ்ரமத்தில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ஷர்மா என்பவர் அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நித்யானந்தா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது.

07:57:01 on 19 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

முருங்கை மரத்தில் இலை, பூ, காய் என எல்லாம் மருத்துவ குணமும் அதிக உயிர்சத்துகளை கொண்டதாகவும் உள்ளது. முருங்கைக்காய் சாம்பார், கீரை தொவட்டல் என பல வகையில் உதவும் முருங்கையில் நல்ல இரும்புச்சத்து உள்ளது. முருங்கை கீரையுடன் மிளகு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் ஆஸ்துமா, சுவாசக் கோளாறுக்கு நல்லது.

06:55:01 on 19 Nov

மேலும் வாசிக்க மாலை மலர்

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான Xiaomi, தனது அடுத்த வரவான Redmi Note 8-ன் பர்ப்பல் வெர்சனை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. நெபுலா பர்பல் நிறத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், தற்போது இந்தியாவில் காஸ்மிக் பர்பல் மாறுபாட்டிலும் கிடைக்கிறது.

05:55:02 on 19 Nov

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

இந்திய ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிப் பாதையில் பயணித்ததால் கார் உற்பத்தி நிறுவனங்கள் தொடர் சலுகைகளை அறிவித்து வருகின்றனர். ஹூண்டாய் நிறுவனம் தனது குறிப்பிட்ட சில மாடல்களுக்கு 2.65 லட்சம் ரூபாய் வரையில் தள்ளுபடி தருகிறது.

04:55:02 on 19 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணியாற்றுபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் இவரை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், 'உங்களது கனரா வங்கி ஏ.டி.எம் கார்டைப் புதுப்பிக்க வேண்டும் எனக் கூறி அவரது கணக்கிலிருந்து ரூ.99,968 பணத்தை எடுத்துள்ளார்.

03:55:02 on 19 Nov

மேலும் வாசிக்க விகடன்

இந்தியாவிலிருந்து, மருதாணி பவுடர், முருங்கைக்காய் பவுடர், மிளகாய் பொடி, தேயிலைத் தூள் ஆகியவற்றை இறக்குமதி செய்வதில், சீனா மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், ஷாங்காயில் நடைபெற்ற இறக்குமதியாளர்கள் கண்காட்சியில், இது குறித்து சீன இறக்குமதியாளர்கள் போட்டிப்போட்டு விசாரித்ததாக கூறப்படுகிறது.

02:55:01 on 19 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கடந்த மூன்றே மாதங்களில் ரூ.50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வோடபோனும்,ரூ. 23,000 கோடி இழப்பை சந்தித்திருப்பதாக ஏர்டெல்லும் அறிவித்துள்ளன. இந்நிலையில் இந்நிறுவனங்கள் மீது அரசு கருணை காட்டும் பட்சத்தில் அவை செயல்பட கூடும் என தெரிகிறது. இல்லையெனில் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என வல்லுநர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

01:55:02 on 19 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. இந்நிலையில் ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் ’எனது வாழ்நாளில் நான் பார்த்த சிறந்த டப்பிங் செஷன் இது’ என குறிப்பிட்டு ரஜினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

12:55:01 on 19 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”ரஜினிகாந்த் கூறியதில் தவறில்லை. நாங்களும் அதிமுகவிற்கு விஸ்வாசமாக இருக்கும் நட்சத்திரங்களை தேர்தலில் களமிறக்குவோம். ரஜினி, கமல், விஜய் அரசியலுக்கு வரும்போது தல அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா?” என்றார்.

11:57:02 on 18 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

உயர்த்தப்பட்ட விடுதி கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி ஜே.என்.யூ மாணவர்கள் இன்று நாடாளுமன்றத்தின் முன் பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியின் போது மாணவர்களை நாடாளுமன்ற வீதிகளில் நுழையவிடாமல், போலீஸார் இரும்பு தடுப்புகள் கொண்டு தடுத்தனர்.

10:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

இந்திய பங்குச் சந்தைகளில் நவம்பர் மாதத்தில் 19,000 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீடுகள் வந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நவம்பர் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரையிலான நாட்களில் பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் ரூ.19,203 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

09:57:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினகரன்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்திலிருந்து உன்ன நினைச்சு என்கிற பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

08:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சில வாரங்களாகவே சுதாகரன் தனது வழக்கறிஞர்களிடம், ‘ஜெயலலிதா என்னை வளர்ப்பு மகனாக அறிவித்தார். அப்புறம் தேர்தல் தோல்விக்குப் பிறகு கோபத்துல சில முடிவெடுத்தாரே தவிர, நான் அவரோட வளர்ப்பு மகன் இல்லைன்னு கிடையாது. அதனால ஜெயலலிதாவோட சொத்துகள் என்னைதான் சேரும்னு சட்ட ரீதியாக முயற்சி எடுக்க முடியுமா’ என்று ஆலோசித்திருக்கிறார்.

08:25:01 on 18 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் கோட்டாபய ராஜபக்ச தோல்வியுற்றபோதும் இலங்கையின் அதிபராகியுள்ளார். இது எப்படி சாத்தியமானது? கோட்டாபய முன் இருக்கும் சவால்கள் என்ன என்பதை இந்த காணொளி விளக்குகிறது.

07:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

“அதிமுக காரன் சட்டையைத் தொட்டாங்கன்னா திமுக காரன் சட்டையைக் கிழிக்கணும். நம்ம வீட்டுக் கதவை திமுக காரர் தட்டினால் திமுக காரர் வீட்டுக் கதவை உடைக்கணும், எதுவந்தாலும் நான் பார்த்த்துக்கறேன். செயிக்கறதுக்கு என்னென்ன வழி இருக்கோ அத்தனை சித்து விளையாட்டுக்களையும் விளையாடுவேன்” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

07:25:01 on 18 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

ஆரணி அருகே அரசு பள்ளியில் மாணவர்களை ஆசிரியர்கள் கட்டுமான பணியில் ஈடுபடுத்திய வீடியோ சமூகவலைத் தளத்தில் வைரலாகி வருகிறது. மாணவர்களை மணல் அள்ள பயன்படுத்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

06:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க சன் நியூஸ்

இந்து மத கடவுள்களை திருமாவளவன் விமர்சித்ததாக கூறி பேஸ்புக்கில் திருமாவளவனை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்து பதிவிட்டதாக கூறி மாத இதழ் ஆசிரியரை, தேடிச்சென்று விடுதலை சிறுத்தை கட்சியினர் அடித்து உதைத்த சம்பவம் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அரங்கேறி உள்ளது.

06:25:01 on 18 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பிரபல நடிகை நயன்தாரா தனது 35-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். திரையுலகினர், ரசிகர்கள் எனப் பலரும் அவருக்குச் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் நயன்தாரா.

05:57:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினமணி

சிதம்பரத்தைச் சேர்ந்த சரவணன், தனது 65 வயது தாயார் விஜயாவுடன் சென்னைக்கு செல்வதற்காக, திருசெந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார். இருவரும் முன்பதிவு பெட்டியில் தெரியாமல் ஏறி விட்டனர். இந்நிலையில் அங்கு வந்த டிடிஆர் இந்தியில் கத்தியதாகவும், அதனால் இருவரும் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.

05:27:01 on 18 Nov

மேலும் வாசிக்க Behind Woods News

பிகில் படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் இதுவரை 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. கேரளாவில் மட்டும் பிகில் படம் 20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இதன் மூலம் கேரளாவில் அதிகம் வசூலான தமிழ் திரைப்படம் பிகில் என்ற பெருமையை பெற்றுள்ளது.

04:57:01 on 18 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ரிபப்ளிக் டிவிக்கு பேட்டியளித்த பாபா ராம்தேவ், டாக்டர் அம்பேத்கர் மற்றும் பெரியாரை பின்பற்றுபவர்களை கண்டு, தான் கவலை கொள்வதாகவும், அஞ்சுவதாகவும், தந்தை பெரியாரை “அறிவார்ந்த தீவிரவாதி” என்றும் விமர்சித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து #ArrestRamdev டிவிட்டரில் இந்திய அளவில் முதல் 4 இடங்களில் டிரெண்டானது.

04:27:01 on 18 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

நடிகையும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை பதிவிட்டு வருகிறார். இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் செருப்பால் அடியுங்கள் எனவும், திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க... நடிப்பு பத்தல எனவும் கமெண்ட் செய்துள்ளார்.

03:57:01 on 18 Nov

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கர்நாடகாவில் எம்.எல்.ஏ.,வாக இருந்த நாகராஜ் தனது பதவியை இழந்தபோதும் கடந்த 18 மாதத்தில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 185 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் பா.ஜ.க.,வின் குதிரைபேரம் அம்பலமாகியுள்ளது என்றும், இதற்கான விசாரணையை நடத்தவேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

03:27:01 on 18 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர் தனது மனைவியை காணவில்லை என காவல்நிலையத்த்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் வழக்கறிஞர் ஒருவருடன் அவரது மனைவி காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

02:57:02 on 18 Nov

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

டிசம்பர் 2ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என்றும், டிசம்பர் 13ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான விவரங்களை உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்வதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

02:27:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினமணி

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்தில் பிரபல பாடகர் டீஜே ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அவர் தனுஷின் மகன் ரோலில் நடித்திருந்தார். அதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்தது. இந்த படத்தை தொடர்ந்து டீஜே தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

01:57:01 on 18 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

சிங்கள பெளத்த பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேசியுள்ளார். அனுராதபுரம் ருவன்வெலி மகா சாய பௌத்த விகாரையில் திங்கள்கிழமை நடந்த விழாவில் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன், தாம் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

01:49:54 on 18 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

நடிகர் விஜய் சேதுபதி, “மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரே பிடித்துள்ளது. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். எல்லோரும் இணைந்து இருப்போம் என்பதையே கட்சியின் லோகா சொல்வதாக உணர்கிறேன். கமல்ஹாசன் மக்களை ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்” என்று கூறினார்.

01:27:01 on 18 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சென்னையில் ஐ.ஐ.டி.யில் மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக 2 மாணவர்கள் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் மாணவர்கள் பிரச்சனையை பற்றி வெளிப்படையாக ஆய்வு நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

01:02:57 on 18 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கடல் கொந்தளிப்பினால் தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை 20 நாள்களுக்குப் பின் நேற்று முதல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகள் நேற்று தனுஷ்கோடி சென்றனர்.

12:57:01 on 18 Nov

மேலும் வாசிக்க விகடன்

நாட்டின் உயரிய சபையாக கருதப்படும் மாநிலங்களவைவின் முதல் கூட்டம் 1952ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதுவரை 249 கூட்டத்தொடர்களை நிறைவு செய்த மாநிலங்களவை, இன்று 250வது கூட்டத்தொடரை எட்டியது. இதனை முன்னிட்டு, மாநிலங்களவை குறித்த புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

12:50:22 on 18 Nov

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடகாவின் மைசூரு நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தன்வீர் சைத் சென்றுள்ளார். அவர் அருகே சென்ற நபர் ஒருவர் திடீரென சைத்தின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அந்த நபரை சுற்றியிருந்தவர்கள் உடனடியாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

12:25:01 on 18 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வயநாடை அடுத்த கல்பேட்டா பகுதியைச் சேர்ந்த மாணவிகள் அண்மையில் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது, விளையாட்டாக பேருந்தின் கியரை மாணவிகள் அடிக்கடி மாற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

11:55:02 on 18 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்தியாவில் சிறந்த தேனிலவு தலமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒரு பத்திரிகை சார்பில் இதற்கான விருது, டெல்லியில் வழங்கப்பட்டது. கேரள சுற்றுலாத்துறை துணை இயக்குனர் மனோஜ், விருதை பெற்றுக்கொண்டார். இதற்கு கேரள சுற்றுலா மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

11:27:01 on 18 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர், சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணைத் தாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த தீட்சிதர் தலைமறைவானார் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாக இல்லை என்பது தெரியவந்துள்ளது.

10:57:01 on 18 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

"கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு தொடர்பான உண்மை விவரம் மூடி மறைக்கப்பட்டது. அதேபோன்று தற்போது நுகர்வோர் செலவினம் பற்றிய விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதுதான், மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் நிலை" என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

10:27:02 on 18 Nov

மேலும் வாசிக்க தினமலர்

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு, சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கூடுதல் வாக்குகள் கிடைத்தன. வாக்கு எண்ணிக்கை முடிவில், அவர் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இலங்கையின் புதிய அதிபராக அவர் இன்று பதவி ஏற்கிறார்.

09:57:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

"முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது." என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

09:28:39 on 18 Nov

மேலும் வாசிக்க தினகரன்

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செஞ்சாரு. இந்த நிலைமையில உள்ளாட்சிப் பதவிகள்ல 25% இடங்களை கூட்டணியில் எங்களுக்கு ஒதுக்கணும்” என்று எடுத்த எடுப்பிலேயே வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள் தேமுதிகவினர்.

08:57:02 on 18 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பானசோனிக் எலுகா ரே 810 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் நாட்ச் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 16 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இதன் விலை ரூ.7,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

07:57:01 on 18 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியாக உள்ள 100 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் டிசம்பர் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06:57:01 on 18 Nov

மேலும் வாசிக்க தினமணி

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1 லட்சத்து 51ஆயிரம் ஆக பதிவாகியுள்ளது. இது ஒட்டுமொத்தமாக முந்தைய ஆண்டை விட அதிகம். விபத்துகளில் அதிகளவு உயிரிழப்பவர்களின் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் உள்ளது.

05:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பா.ஜ.க ஆட்சியில் நிலவும் பொருளாதார மந்த நிலையால் பல துறைகள் கடும் சரிவை கண்டுள்ளன. இதனால் ஏராளமான தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இந்த நிலையில், இந்தியாவின் ஏற்றுமதி - இறக்குமதி குறைந்துள்ளதாக மத்திய அரசே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

04:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சமூக வீடியோ செயலியான டிக்டோக் (TikTok) App Store-ரிலும், Google Play-விலும் உலகளவில் 1.5 பில்லியன் பதிவிறக்கங்களை எட்டியுள்ளது. மேலும் இந்தியாவில் 466.8 மில்லியனுடன் அல்லது அனைத்து தனித்துவமான இன்ஸ்டால்களிலும் சுமார் 31 சதவீதத்துடன் முன்னணியில் உள்ளது.

03:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நாள்தோறும் உலகம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான விடியோக்கள் யூடியூப்

தளத்தில் பதிவேற்றப்படுகின்றன. இந்நிலையில் யூடியூப் தளத்தில் உள்ள சேனல்கள்

போதிய அளவு சம்பாதிக்கவில்லை என்றால் அத்தகைய சேனல்களை எல்லாம்

நீக்கப்போவதாக யூடியூப் புதிய விதிமுறையை வடிவமைத்து வருகிறது.

02:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

திருமணத்துக்குப் பிறகு சில காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார் நடிகை

சிம்ரன். பிறகு 2008-ல் `சேவல்' படம் மூலம் கம்பேக் கொடுத்தார். `சீமராஜா', `பேட்ட' என அடுத்தடுத்து ஹிட் கொடுத்தவர். தனது இரண்டாவது இன்னிங்ஸிலும் சிம்ரன் செம பிஸி!

01:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க விகடன்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்னக் கலையம்புத்துரைச் சேர்ந்த லட்சுமணன் -

ஜோதி தம்பதியின் 12 வயது மகள் ராகவி 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர்

கண்களை கட்டிக் கொண்டு, எதிரில் உள்ள பொருட்களின் வண்ணங்களை கூறுவதோடு,

அதில் உள்ள வார்த்தைகளையும் அடுத்த நொடியே கூறி விடுகிறார்.

12:55:01 on 18 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரவுடி பேபி பாடல் 700 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ‘யூடியூப்’பில் புதிய

மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய அளவில் குறுகிய காலத்தில் அதிகம் பார்க்கப்பட்ட

வீடியோ பாடல் என்ற சாதனையையும் ரவுடி பேபி பாடல் பெற்றுள்ளது. இப்பாடல் 318

நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

11:55:01 on 17 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

சீனாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் இரவு விளையாடிக்கொண்டிருந்த போது சுமார் 53 ஆண்குறி காந்த குண்டுகளை தனது ஆண்குறியில் செலுத்தி வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளான். அடுத்த நாள் அவரது உள்ளாடைகள் இரத்தமாக இருத்ததை தொடர்ந்து அவர் சற்று பயக்க ஆரமித்துள்ளார்.

10:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் சங்காலி வாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்மாலே சிங். பத்து நாள்களுக்கு முன்னர் நான்கு பேர் கொண்ட கும்பல் அவரை கட்டி வைத்து அடித்து துன்புறுத்திய நிலையில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அமர்ஜீத் சிங், ரிங்கு, லக்கி, பிந்தேர் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

09:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

“மிசாவில் ஸ்டாலின் இருந்தானா என்ற ஒரு சர்ச்சையை சில நாட்களாகவே தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். எதை விவாதிப்பது என்ற விவஸ்தையே இல்லை. ஸ்டாலின் திமுகவைச் சேர்ந்தவனா என்று எந்த முட்டாளாவது கேட்பானா? அப்படி ஒரு முட்டாள் தனமான விவாதம்தான் நான் மிசாவில் சிறையில் இருந்தேனா இல்லையா என்பதும்.” என ஸ்டாலின் கூறியுள்ளார்.

08:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய அனைத்து இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. 100% தள்ளுபடி செய்யப்படும் என தெரிந்தாலும், தாங்கள் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக வாரியம் தெரிவித்துள்ளது.

08:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவது குறைந்துள்ள நிலையில், காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் மாசு அளவு குறையும் என அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். தொடர்ந்து கடந்த 4 நாட்களாக நச்சுத்தன்மையுடனும், புகை மண்டலமாக காட்சி அளித்த டெல்லி நகரில், இன்று இதமான காற்றும், வெயிலும் காட்சி தருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

07:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினமலர்

விழுப்புரம் மாவட்டம் தியாக துருகத்தில் இருந்து மணலூர் பேட்டைக்கு தினமும் 2 முறை மட்டுமே அரசுப்பேருந்து இயக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் மணலூர் பேட்டையில் இருந்து தியாக துருகத்துக்கு தினமும் பள்ளி மாணவர்கள் பேருந்தின் பின்பகுதியில் தொங்கியபடியும், மேற்கூரையில் அமர்ந்தும் ஆபத்தான முறையில் பயணிக்கின்றனர்.

07:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

கொட்டைகள், விதைகள் இவைகளை குறிப்பிட்ட அளவு அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம் என அறிவுறுத்தப்படுகின்றது. அதில் பிஸ்தா கொட்டைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் புரதசத்து, நார்சத்து, நோய் எதிர்ப்பு இவையே இதன் முக்கியத்துவத்துக்கு காரணம் ஆகின்றது.

06:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் கிருஷ்ணகிரி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மதுரை திருப்பரங்குன்றம் அடுத்த விளாச்சேரி பகுதியை சேர்ந்த பாண்டி என்பவர், மனைவியை பிரிந்து தனது 8 வயது மகள், தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியின் 8 வயது மகள் நந்தினீஸ்வரி வீட்டிற்குள் சிறுநீர் கழித்து விட, கோபமடைந்த சம்பத் கடுமையான சொற்களால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

05:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

உடற்பயிற்சியில் கவனம் செலுத்துபவர்கள் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்படுவது குறைவாகவே உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். நல்ல உடற்தகுதியை பேணுவது மூளைக்கு நல்லது என்றும் இதனால் நினைவாற்றல் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

05:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

Redmi Note 5 Pro ஒரு புதிய அப்டேட்டைப் பெறுகிறது. இது நவம்பர் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் (November Android security patch) கொண்டுவருகிறது. இந்த போன் ஏற்கனவே கடந்த மாதம் MIUI 11 அப்டேட்டைப் பெற்றது. இப்போது புதிய அப்டேட் சமீபத்திய மென்பொருள் இணைப்பைக் கொண்டுவருகிறது.

04:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கார்டு திருடு போய்விட்டால், உடனே வங்கிக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான் உடனே அந்த கார்டின் மூலம் பரிவர்த்தனைகள் எதுவும் செய்ய முடியாமல் தடுக்க முடியும். நீங்கள் தெரியப்படுத்தும் முன், திருடப்படும் பணத்திற்கு வங்கிகளால் பொறுப்பேற்க இயலாது. ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் போனில் செய்தி வருவதால், நீங்கள் அலர்ட் ஆகலாம்.

04:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க விகடன்

தொடர்ச்சியாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது தற்போது மிகப்பெரிய மனநோயாக மாறிக் கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் சுமார் 5%க்கும் மேற்பட்டோர், Buying-shopping disorder என்கிற இந்த புதிய வகை மனநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

03:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பிரிட்டனைச் சேர்ந்த பிளட்ஹவுண்ட் எனும் கார் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் ஓடி புதிய உச்சத்தை அடைந்துள்ளது. உலக வரலாற்றில் நிலத்தில் ஓடும் கார்களில் மணிக்கு 965 கிலோமீட்டர் வேகத்தை தாண்டிய ஏழாவது கார் எனும் சிறப்பை இந்த கார் பெற்றுள்ளது.

03:27:02 on 17 Nov

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

உத்தரப்பிரதேசம் நொய்டா பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், செக்டார் 63 பகுதியிலுள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது அவர் பார்க்க சென்ற நபரே, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகத் தெரிகிறது. இதனையடுத்து அந்தப் பெண் அலறி சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த இடத்திற்கு வந்த இருவர் அப்பெண்ணை காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

02:57:02 on 17 Nov

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பிகில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் வரவேற்பை பெற்ற படம். இப்படம் விஜய் ரசிகர்கள் தாண்டி அனைவரையும் கவர்ந்து இழுத்துவிட்டது. இந்நிலையில் பிகில் தமிழகத்தில் ரூ.141 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரும் சாதனையை செய்துள்ளது.

02:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க சினி உலகம்

நமீதா திருமணத்திற்கு பிறகும் தற்போது நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் இதற்காக கடினமாக உடற்பயிற்சியும் செய்து உடல் எடையை குறைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் புதிய தோற்றத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

01:57:03 on 17 Nov

மேலும் வாசிக்க மாலைமலர்

சென்னையில் 10 இடங்களில் எடுக்கப்பட்ட குழாய் நீரின் மாதிரிகளில், 11-ல் 9 சோதனை முடிவுகள், தரக்கட்டுப்பாடு அளவீடுகளை தாண்டி, குடிப்பதற்கு தரமின்றி உள்ளதாக அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதேபோல் டெல்லி குழாய் குடிநீரும் பாதுகாப்பானதாக இல்லை என்றும் கூறினார்.

01:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

12:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ஒடிசாவில் உள்ள பாலாசூர் மையத்தில் நேற்று இரவு அக்னி ஏவுகணை பரிசோதனை நடைபெற்றது. அக்னி ஏவுகணை நிர்ணயித்த இலக்கை துல்லியமாகவும் வெற்றிகரமாகவும் தாக்கியதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

12:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கடந்த 9 ஆண்டுகளாக தமிழகம் மிகப் பெரிய பள்ளத்தில் விழுந்து கிடப்பதாகவும், அதனை மீட்க திமுக போராடும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தருமபுரியில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில், மத்திய - மாநில அரசுகள் மக்கள் பிரச்னையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

11:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இலங்கையின் 8வது அதிபா் தோதலில் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபட்ச வெற்றிபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கோத்தபய ராஜபட்ச செய்தித்தொடர்பாளர் கேலியா ரம்புக்வாலா கூறுகையில், எங்கள் கட்சி 54 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றார்.

11:36:15 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

தமிழகம் முழுவதும் பரவலாக பருவமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. மேலும் சில இடங்களில் நிலச்சரிவும் மற்றும் தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:27:01 on 17 Nov

மேலும் வாசிக்க நக்கீரன்

வரும் மார்ச் மாதத்திற்குள் ஏர்இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பொருளாதார மந்தநிலை குறித்து அரசு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

10:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினமலர்

”நாட்டில் உண்மையை பேசினால் அழிவு என்பதுதான் போராளிகளின் நிலை. குளித்தலையில் ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை தூா்வார வேண்டும் என்று கேள்வி கேட்டதற்காக பட்டப் பகலில் இரண்டு பேரை கொலை செய்தார்கள். இதுதான் இன்றைய நாட்டின் நிலைமையாக இருக்கிறது.” என முகிலன் தெரிவித்துள்ளார்.

10:27:02 on 17 Nov

மேலும் வாசிக்க தினமணி

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர் தர்ஷன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிபாடு செய்ய வந்த தன்னை கன்னத்தில் அறைந்ததாக தீட்சிதர் தர்ஷன் மீது லதா என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

09:57:01 on 17 Nov

மேலும் வாசிக்க தினகரன்

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின்படி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் பிரேமதாசாவுக்கு 10 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.

09:34:56 on 17 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இதில் சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின்படி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் பிரேமதாசாவுக்கு 10 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.

09:31:56 on 17 Nov

மேலும் வாசிக்க தினத்தந்தி

மேலும் வாசிக்க