11:00:44 on 20 Feb 2019,Wed
மக்களவை கூட்டணி தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ், தமாகா, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் அளித்தப் பேட்டியில் தெரிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், ‘2 கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது,’ என கூறினார்.
11:00:44 on 20 Feb
10:56:02 on 20 Feb 2019,Wed
எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.550 கோடி திருப்பிச்செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி உட்பட 3 பேர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், 4 வாரத்தில் நிலுவைத்தொகையில் ரூ.453 கோடியைக் கொடுக்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
10:56:02 on 20 Feb
10:35:01 on 20 Feb 2019,Wed
இந்தியா வந்த சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானை, மரபுகளை உடைத்து விமான நிலையத்துக்குச் சென்று பிரதமர் மோடி வரவேற்றுள்ளார். இளவரசரின் அரசு முறை பயணத்தில் ஒரு பகுதியான இந்த இந்திய பயணத்தில், ராணுவத்துறையில் முக்கியமான சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
10:35:01 on 20 Feb
10:15:02 on 20 Feb 2019,Wed
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை பிப்ரவரி 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். மேலும் விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6 ஆயிரம், 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10:15:02 on 20 Feb
09:55:02 on 20 Feb 2019,Wed
குஜராத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 டன் குட்கா பொருட்கள் சென்னை பூந்தமல்லியில் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு வாகனத்தில் இருந்து குட்காவை இறக்கி மற்றோரு வாகனத்திற்கு மாற்றும்போது போலீசார் மடக்கிப் பிடித்தனர். ரூ. 20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்களைக் கடத்தியது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
09:55:02 on 20 Feb
09:35:02 on 20 Feb 2019,Wed
இந்தியாவிலேயே முதல்முறையாக கேரளாவில், டிஜிபி அலுவலகத்தில் ரோபோ பணியமர்த்தப்பட்டிருக்கிறது. குறைகள் தொடர்பாக எந்த அதிகாரியைச் சந்திக்க வேண்டுமோ அவர்களைச் சந்திக்க தேவையான அனைத்து விவரங்களையும் இந்த ரோபோவிடம் பெற்றுக் கொள்ளலாம்.
09:35:02 on 20 Feb
09:15:02 on 20 Feb 2019,Wed
உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதி அருகே நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0ஆக பதிவானது. தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கத்தால் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
09:15:02 on 20 Feb
08:55:01 on 20 Feb 2019,Wed
நிர்மலாதேவி வழக்கில் சிறையில் இருந்த முருகன், கருப்பசாமி ஆகியோர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். 10 மாத சிறை வாசத்திற்கு பிறகு இருவரும் ஜாமினில் வெளிவந்தனர். உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியும் நீதிமன்ற நடைமுறையால் ஒருவாரத்துக்கு பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
08:55:01 on 20 Feb
08:35:01 on 20 Feb 2019,Wed
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக எம்.பி. பெர்னி சாண்டர்ஸ் அறிவித்துள்ளார். 77 வயதான பெர்னி சாண்டர்ஸ் தமது கல்லூரி நாட்களில் இருந்தே இன சமத்துவத்துக்கான போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்.
08:35:01 on 20 Feb
08:15:01 on 20 Feb 2019,Wed
அதிமுக-பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், 'அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்கு தேமுதிகவை இழுக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது,' எனவும் அவர் கூறினார்.
08:15:01 on 20 Feb
07:55:01 on 20 Feb 2019,Wed
இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரில் பாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உலகின் பல்வேறு நகரங்களில் இருந்து வந்த மக்கள் இளவரசிகளாகவும், கடல் கொள்ளையர்களாகவும் வேடம் அணிந்து அசத்தினர். இந்த திருவிழா கொண்டாட்டத்தில் ஆடை அலங்காரங்கள் காண்போரை கவர்ந்திழுத்தன.
07:55:01 on 20 Feb
07:40:02 on 20 Feb 2019,Wed
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ..73.72 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.91ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
07:40:02 on 20 Feb
07:25:01 on 20 Feb 2019,Wed
அன்னாசி பழத்தில் பல உடல்நல பயன்கள் இருப்பது போல சில உடல்நலத்தை பாதிக்கும் காரணிகளும் அடங்கியுள்ளன. இதனை அளவாக சாப்பிட்டால் பயன்கொடுக்க கூடியதாகவும், அளவு மீறினால் பலவித பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருக்கிறது.
07:25:01 on 20 Feb
07:11:01 on 20 Feb 2019,Wed
தமிழகத்தில் 11 ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளனர். ஐ.பி.எஸ் பி.ராஜன் நெல்லை மாவட்ட சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனைபோன்று 11 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
07:11:01 on 20 Feb
06:55:01 on 20 Feb 2019,Wed
மாதவன் நடித்து வெளியான `ப்ரீத்' (Breathe) எனும் வெப் சீரீஸ் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, இதன் இரண்டாம் பாகத்தில் நித்யா மேனன் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த சீரீஸில் இன்னொரு முக்கியக் கதாபாத்திரத்தில் அபிஷேக் பச்சன் நடிக்கவிருக்கிறார்.
06:55:01 on 20 Feb
06:41:02 on 20 Feb 2019,Wed
புல்வாமா தாக்குதலை அடுத்து காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யும் தேயிலைகள் விரைவில் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரைப் பாகிஸ்தானுக்கு ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் கிலோ தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
06:41:02 on 20 Feb
06:25:01 on 20 Feb 2019,Wed
தமிழக அரசின் பள்ளிப் பாடத் திட்டத்தில் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ்மகன் படத்தின் பாடலான ’முன்னாள் முன்னாள் முன்னாள் முன்னாள் வாடா’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடலை கவிஞர் வாலி எழுத ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
06:25:01 on 20 Feb
06:11:02 on 20 Feb 2019,Wed
புதுடெல்லியின் கிரேட்டர் கைலாஷ் பகுதியில், போலி ஆவணங்களைச் சமர்பித்து தங்களுடைய வீட்டினை 5 பேரிடம் விற்பனைச் செய்த 65 வயது தாயும், அவரின் 43 வயது மகளும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
06:11:02 on 20 Feb
05:55:01 on 20 Feb 2019,Wed
ஆஸ்திரேலியா எனும் நிலத்தின் தென்பகுதியில் வறட்சியின் காரணமாக நீரின்றி உயிரினங்கள் வறண்டு இறந்தன. அந்த வறட்சிக்குப் பிறகல்ல, அந்த வறட்சியின்போதே ஆஸ்திரேலியாவின் மறுபக்கத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு, அதுவும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை பலிவாங்கியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
05:55:01 on 20 Feb
05:40:01 on 20 Feb 2019,Wed
ஆண்ட்ராய்டு செயலியில் இருக்கும் இன்ஸ்டாகிராம் கோடுரளில், பயனர்கள் எவ்வாறு தொண்டு நிறுவனங்களை தேடி அவற்றை தொடர்பு கொள்ளலாம் என்ற விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது. இனி பயனர்கள் டொனேட் பட்டன் ஸ்டிக்கரை தங்களது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துக் கொள்ள முடியும்.
05:40:01 on 20 Feb
05:25:01 on 20 Feb 2019,Wed
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார்.
05:25:01 on 20 Feb
05:10:01 on 20 Feb 2019,Wed
சென்னையில் உள்ள 'நம்ம உணவகம்' உரிமையாளர் முகமது காசிம் என்பவரை 7.5 கோடி ரூபாய் மோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைதுச் செய்துள்ளனர். இந்த மோசடியில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
05:10:01 on 20 Feb
04:55:01 on 20 Feb 2019,Wed
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் தென்னை மரங்களை அறுத்து அதிலிருந்து கிடைக்கும் துகள்களை ஒருமுறை உபயோகப்படுத்தும் தட்டுகளாக தயாரித்து வருகிறது இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம்.
04:55:01 on 20 Feb
04:40:01 on 20 Feb 2019,Wed
அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனங்களின் அடமானப் பங்குகளை, வரும் செப்டம்பர் வரை விற்க மாட்டோம் என, பெரும்பான்மையான நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள், 5-11 சதவீதம் வரை உயர்ந்தன.
04:40:01 on 20 Feb
04:25:01 on 20 Feb 2019,Wed
'எல்கேஜி' படத்தின் அதிகாலைக் காட்சியை வைத்து ட்விட்டரில் விஷ்ணு விஷாலுக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கும் வாக்குவாதமே நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரின் கடுமையான இந்த விமர்சனம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
04:25:01 on 20 Feb
04:10:01 on 20 Feb 2019,Wed
ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கார் நிறுவனம் போர்ஷ் ஆகும். அதி நவீன உயர் ரக கார்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது இந்த போர்ஷ் நிறுவனம். பிரிட்டனில் தற்போது இந்தக் காரின் விலை 10 சதவிகிதம் உயர்ந்துள்ளதால், போர்ஷ் மகான் எஸ்யூவி காரின் விலை 52,880 யூரோவில் இருந்து 58,882 யூரோவாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
04:10:01 on 20 Feb
03:55:01 on 20 Feb 2019,Wed
தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் வெவ்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்ட தங்களது நிறுவனத்தின் கட்டடங்களுக்கு பல்வேறு அனுமதிகளைப் பெறுவதற்காக அரசு அதிகாரிகளுக்கு கிட்டத்தட்ட 26 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக பிரபல மென்பொருள் நிறுவனமான காக்னிசன்ட், அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை அமைப்பில் தெரிவித்துள்ளது.
03:55:01 on 20 Feb
03:40:01 on 20 Feb 2019,Wed
இந்திய அணியில் விராத் கோலி மற்றும் ரோகித் சர்மா நான்றாக விளையாடி வருவதால் ஆஸ்திரேலிய அணிக்கு இது சவாலாக இருக்கும். இந்திய ஆட்டக்காரர்களின் தற்போதைய ஆட்டம் சிறப்பாக உள்ளதால் விராட் கோலி இந்திய-ஆஸ்திரேலியத் தொடரில் ஆதிக்கம் செலுத்துவார்’ என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மத்தேயு ஹேடன் கூறியுள்ளார்.
03:40:01 on 20 Feb
03:25:02 on 20 Feb 2019,Wed
சிரியாவில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 24 பேர் பலியாகியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு எந்த ஒரு தீவிரவாதக் குழுவும் இதுவரைப் பொறுப்பேற்கவில்லை.
03:25:02 on 20 Feb
03:10:01 on 20 Feb 2019,Wed
மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாள் மற்றும் மக்களவைத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ’திமுகவுக்கு செல்வாக்கு கூடிவிட்டது என்று சொல்லும் ஸ்டாலின் ஏன் கூட்டணிக்கு முயற்சிக்கிறார். திமுக தனித்து நிற்கத் தயாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
03:10:01 on 20 Feb
02:55:01 on 20 Feb 2019,Wed
தமிழக அரசு அறிவித்த ரூ.2000 பெறத் தகுதியானவர்கள் யார் என்பது குறித்துக் குழப்பம் நீடிக்கும் நிலையில், இது தொடர்பாக பெயர் தெரிவிக்க விரும்பாத அரசு அதிகாரி ஒருவர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
02:55:01 on 20 Feb
02:40:02 on 20 Feb 2019,Wed
’கண்ணே கலைமானே’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகை தமன்னா, ’நாம் ஒன்றாக வேலை செய்யலாமா என்று எந்த ஒரு ஹீரோவிடமும் நான் கேட்பதில்லை. ஆனால் உங்களின் அடுத்தடுத்த படங்களில் நடிக்க என்னை பரிசீலனை செய்யுங்கள்’ என சீனு ராமசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
02:40:02 on 20 Feb
02:25:01 on 20 Feb 2019,Wed
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய துணைமின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நகர் பகுதிகளில் 16 கிலோவாட், 25 கிலோவாட், 63 கிலோவாட் திறன்கொண்ட புதிய ட்ரான்ஸ் பார்மர்கள் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆங்காங்கே நிறுவப்பட்டு வருகின்றன.
02:25:01 on 20 Feb
02:10:01 on 20 Feb 2019,Wed
தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 125 பெட்ரோல் பங்க்குகள் அமைப்பது குறித்த அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இதன் அடுத்தகட்ட விசாரணையை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
02:10:01 on 20 Feb
01:56:01 on 20 Feb 2019,Wed
’இன்றைய நிலவரப்படி, சுற்றுலா துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நாடாக இந்தியாதான் முன்னிலையில் இருக்கிறது. இங்கு உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளால் பயன்பெறுவது பெரும்பாலும் ஏழை மக்கள்தான்’ என மத்திய சுற்றுலா துறை இணையமைச்சர் கே.அல்போன்ஸ் கூறியுள்ளார்.
01:56:01 on 20 Feb
01:40:01 on 20 Feb 2019,Wed
புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்தியாவையே உலுக்கியது. இந்நிலையில் பாரமுல்லாவில் ராணுவத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றது. 111 இடத்திற்கு ஆள்சேர்ப்பு பணி நடைபெற்றது. இதில் அதிகமான காஷ்மீர் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
01:40:01 on 20 Feb
01:26:02 on 20 Feb 2019,Wed
’சதுரங்க வேட்டை -2’, ‘நரகாசூரன்’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘கள்ளபார்ட்’ படத்தில் நடிக்கத் தொடங்கினார் அரவிந்த்சாமி. ராஜபாண்டி இயக்கி வரும் இப்படத்தில் ரெஜினா நாயகியாக நடித்து வருகிறார். இதுகுறித்து ரெஜினா, ‘அரவிந்தசாமியுடன் நடித்ததில் மகிழ்ச்சி’ என்று கூறியுள்ளார்.
01:26:02 on 20 Feb
01:10:01 on 20 Feb 2019,Wed
திருப்பதி கோவிலில் உள்ள தங்கும் விடுதிகளில் இருக்கும் வசதிகள் தமிழகத்தில் உள்ள கோவில்களில் ஏன் இல்லை? என்று இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி கோவில் தங்கும் விடுதிகளை பராமரிப்பதுபோல் தமிழகத்தில் உள்ள கோவில்களை ஏன் பராமரிப்பதில்லை? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.
01:10:01 on 20 Feb
12:56:02 on 20 Feb 2019,Wed
போலி பாஸ்போர்ட் மற்றும் விசா தயாரித்த சென்னையை சேர்ந்த ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட கும்பலை ஐதராபாத்தில் போலீசார் கைதுச் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 88 போலி பாஸ்போர்ட் மற்றும் விசாக்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
12:56:02 on 20 Feb
12:40:01 on 20 Feb 2019,Wed
ரட்சகன் திரைப்பட பாணியில், புதைக்க குழிதோண்டி வைத்துவிட்டு, சொத்து சண்டையில் கூலிப்படையை ஏவி, அண்ணனை தம்பியே கொலை செய்த சம்பவம் நாமக்கல் ராசிபுரத்தில் நடந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவுச் செய்த போலீசார் 3 பேரை கைதுச் செய்து விசாரித்து வருகின்றனர்.
12:40:01 on 20 Feb
12:26:02 on 20 Feb 2019,Wed
இன்ஜினியரிங் மாணவர்களை மிரள வைக்கும், 'போர்ட் ரூம்' என்ற மர்ம அறை குறித்து, ரகசிய கண்காணிப்பு நடத்த, அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட கல்லுாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விவரத்தை, ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அனுப்பவும், அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
12:26:02 on 20 Feb
12:10:01 on 20 Feb 2019,Wed
ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
12:10:01 on 20 Feb
11:55:02 on 19 Feb 2019,Tue
இந்தியாவின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான ஜவகர்லால் நேரு போர்ட் டிரஸ்ட் (ஜேஎன்பிடி) சார்பாக மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் சுமார் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
11:55:02 on 19 Feb
11:40:01 on 19 Feb 2019,Tue
பயன்பாட்டாளர்களின் செல்லிடப்பேசிக்கு உள்ளே ஒருவர் ஊடுருவினாலும் வாட்ஸ் ஆப்பிற்குள் நுழைய தனி பாதுகாப்பு அம்சத்தை வாட்ஸ் ஆப் உருவாக்கியுள்ளது. அதாவது, வாட்ஸ் ஆப்பிற்காக தனியாக ஒரு ‘லாக்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
11:40:01 on 19 Feb
11:25:01 on 19 Feb 2019,Tue
அனாதையாக விட்டுச்செல்லும் குழந்தைகளால் வழி தெரியாது நிற்கும் ஜப்பானின் மூத்த குடிமக்கள் அதிகளவிலான குற்றச்செயல்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. மேலும், வேலைவாய்ப்பின்மையின் காரணமாக, தங்களது குழந்தைகளின் கல்விக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்டவற்றை பெற்றோர் திருடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
11:25:01 on 19 Feb
11:10:02 on 19 Feb 2019,Tue
இரண்டாம் உலக போர்க்காலத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களின் வரிசையில் புதிதாக வெளியாக உள்ள திரைப்படம் "The Aftermath", இப்படத்தின் அறிமுகவிழா லண்டனில் நடைபெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர் கெய்ரா நைட்லி.
11:10:02 on 19 Feb
10:55:01 on 19 Feb 2019,Tue
பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான ஹம்பியில் உள்ள விஷ்ணு கோயிலின் தூண்களை உடைத்து சேதப்படுத்திய இளைஞர்களுக்கு ரூ.2.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தூண்களின் சீரமைப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
10:55:01 on 19 Feb
10:41:01 on 19 Feb 2019,Tue
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பூதப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ரகுபதி தனது நிலத்தில் ராகி சாகுபடி செய்துள்ளார். நெற்ப்பயிருடன் ஒப்பிடுகையில் ராகிக்கு மிகவும் குறைவான நீர் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த முறை ராகி நல்ல மகசூல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார்.
10:41:01 on 19 Feb
10:26:01 on 19 Feb 2019,Tue
தென் ஆப்ரிக்காவின் கடலோரம் அமைந்துள்ள உல்ப்காத் உணவகம் தான் உலகின் சிறந்த உணவகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் 7 விதமான உணவின் விலை வெறும் 60 டாலர் தான்.
10:26:01 on 19 Feb
10:10:02 on 19 Feb 2019,Tue
இலந்தை பழத்தில் ஏ, சி, பி3, பி6 வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும், கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதமும் உள்ளது. இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.
10:10:02 on 19 Feb
09:55:01 on 19 Feb 2019,Tue
சாம்சங் நிறுவனம் மூன்று கேமரா செட்டப் கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் வழக்கமான கேமரா லென்ஸ், வைடு-ஆங்கிள் லென்ஸ் மற்றும் போர்டிரெயிட் புகைப்படங்களை எடுக்க டெலிஃபோட்டோ லென்ஸ் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படிருந்தது.
09:55:01 on 19 Feb
09:41:01 on 19 Feb 2019,Tue
இந்தியாவுக்கு புல்லட் ரயில் தேவையில்லை; நாட்டை பாதுகாக்கும் வீரர்களுக்கு புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் தான் தேவை என உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
09:41:01 on 19 Feb
09:29:15 on 19 Feb 2019,Tue
முத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக் தடை சட்டத்தின் படி, ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் கணவன் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
09:29:15 on 19 Feb
09:26:01 on 19 Feb 2019,Tue
”’சின்னத்திரை நடிகர் தற்கொலை'னு செய்தி வந்தா, `வேலை இல்லை; கடன் தொல்லை'னு வழக்கம்போல ’உச்’ கொட்டிட்டு கடந்துப் போயிடாதீங்க, என் விஷயத்துல அது தற்கொலை இல்லை, கொலை...' என டிவி நடிகர் பிர்லா போஸ் சென்னைக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
09:26:01 on 19 Feb
09:10:01 on 19 Feb 2019,Tue
இந்தியன் 2 படத்தின் பட்ஜெட் குறித்து இயக்குனர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்திற்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
09:10:01 on 19 Feb
08:55:01 on 19 Feb 2019,Tue
சென்னை சூளைமேடு அவ்வைபுரம் நேரு தெருவை சேர்ந்த செல்போன் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர், மனைவி தாய் வீட்டிற்குச் சென்றதால் விரக்தியடைந்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
08:55:01 on 19 Feb
08:41:01 on 19 Feb 2019,Tue
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் 15 வயது சிறுமியை 4 நாட்களாக ஒரு விடுதியில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைதுச் செய்தனர். இந்த சம்பவத்தால் வேளாங்கண்ணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
08:41:01 on 19 Feb
08:26:01 on 19 Feb 2019,Tue
’மீ டூ இயக்கத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு எதிரான புலம்பல்களின் பின்னணியில் உண்மை இருக்குமேயானாலும் நான் அதற்காக மன்னிப்பு கேட்கவும், தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படவும் தயாராக இருக்கிறேன்,’ என பாடகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் மிக உருக்கமான நீண்ட பதிவை வெளியிட்டிருக்கிறார்.
08:26:01 on 19 Feb
08:10:02 on 19 Feb 2019,Tue
நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில் இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி 5 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த விவரங்களை ஆன்லைன் நிலக்கரி வர்த்தக நிறுவனமான எம்-ஜங்சன் வெளியிட்டுள்ளது.
08:10:02 on 19 Feb
07:55:01 on 19 Feb 2019,Tue
திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மூங்கிலுக்கு நல்ல விலைக் கிடைப்பதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மூங்கிலில் செய்யப்படும் கூடை, தட்டு போன்றவற்றின் தேவை அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
07:55:01 on 19 Feb
07:51:14 on 19 Feb 2019,Tue
தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ’எல்லா சந்திப்புகளும் கூட்டணி பற்றியது மட்டுமே அல்ல. இது தனிப்பட்ட முறையில் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்கான சந்திப்பு’ எனக் கூறியுள்ளார்.
07:51:14 on 19 Feb
07:40:26 on 19 Feb 2019,Tue
’புல்வாமா சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கூடுதல் தகவல்களைச் சேகரித்து வருகிறோம்’ என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
07:40:26 on 19 Feb
07:40:02 on 19 Feb 2019,Tue
புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களில் 23 பேரின் கடன்களை எஸ்.பி.ஐ. வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இதுகுறித்துப் பேசிய எஸ்.பி.ஐ. வங்கியின் சேர்மன் ரஜினிஷ் குமார், ‘வீரர்களை இழந்துத் தவிக்கும் குடும்பங்களுக்கு வங்கி செய்யும் சிறிய உதவி இது,’ என்று தெரிவித்தார்.
07:40:02 on 19 Feb
07:25:01 on 19 Feb 2019,Tue
பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிகழ்வான 'சூப்பர் மூன்' (Super Moon) இன்று நடைபெறுகிறது. சராசரியை விட இன்று நிலவு மிக பெரிதாகவும், ஒளிமயமாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
07:25:01 on 19 Feb
07:10:02 on 19 Feb 2019,Tue
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
07:10:02 on 19 Feb
06:55:02 on 19 Feb 2019,Tue
காசர்கோடு சம்பவம் தொடர்பாக பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ’2 இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது’ என்று கூறியுள்ளார். மேலும் அவர், கேரளாவில் தனது ஆட்சிக் காலத்தில் அரசியல் படுகொலைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
06:55:02 on 19 Feb
06:53:20 on 19 Feb 2019,Tue
திருச்சி முக்கொம்பு மேலணையில் ரூ.387.60 கோடியில் புதிய கதவணைக் கட்ட முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
06:53:20 on 19 Feb
06:50:35 on 19 Feb 2019,Tue
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துடன் பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், 'விஜயகாந்த் என்னுடைய பழைய நண்பர்; பிரதமர் மோடி, அமித்ஷா சார்பில் விஜயகாந்த் உடல் நலன் குறித்து விசாரித்தேன்,' என தெரிவித்தார்.
06:50:35 on 19 Feb
06:40:27 on 19 Feb 2019,Tue
ட்விட்டர் பயன்பாடு பற்றி சமீபத்தில் வெர்மாண்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ’இயற்கை பேரழிவு காலங்களில் பல லட்சம் ஃபாளோவர்களைக் கொண்டிருப்பவர்களைவிட, குறைந்தபட்சம் 100 முதல் 200 ஃபாளோவர்களைக் கொண்டிருப்பவர்களே ட்விட்டர் தளத்தை அதிகளவு சரியாக பயன்படுத்துகின்றனர்,’ என தெரிவித்துள்ளது.
06:40:27 on 19 Feb
06:35:01 on 19 Feb 2019,Tue
’தமிழகத்தில் நீட் தேர்வு எழுத மத்திய அரசு கூறியுள்ள உள்கட்டமைப்பு வசதிகளுடன், இந்த ஆண்டு 550 மையங்கள் தயார் நிலையில் உள்ளன’ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
06:35:01 on 19 Feb
06:23:55 on 19 Feb 2019,Tue
அதிமுக, பாஜக, பாமக கூட்டணி உறுதியானதைத் தொடர்ந்து, கூட்டணி குறித்து பியூஷ் கோயல், விஜயகாந்த்தைச் சந்திக்கிறார் என செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பியூஸ் கோயல் வரவில்லை என்றும், விஜயகாந்த் உடல்நலம் குறித்து விசாரிக்கவே பியூஸ் கோயல் வருவதாகவும் தேமுதிக விளக்கமளித்துள்ளது.
06:23:55 on 19 Feb
06:15:01 on 19 Feb 2019,Tue
’அதிமுக-பாஜக-பாமக கூட்டணி பலவீனமான கூட்டணி’ என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். மேலும் அவர், ’ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்த பாமகவுடன் அதிமுகவினர் கூட்டணி வைத்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பல கட்சிகள் காணாமல் போகும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
06:15:01 on 19 Feb
06:12:15 on 19 Feb 2019,Tue
வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருகை தந்துள்ளார். அதிமுக கூட்டணியில் 9 மக்களவைத் தொகுதிகள் தேமுதிக சார்பில் கேட்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
06:12:15 on 19 Feb
06:02:11 on 19 Feb 2019,Tue
தாகம் தணிப்பதற்கு செயற்கை குளிர்பானங்கள் அருந்துவது தற்போது வழக்கமாகிவிட்டது. இதில் ரசாயனச் சுவையூட்டிகள், பதப்படுத்தும் பொருள்கள், சர்க்கரை போன்றவை அதிகப்படியாகச் சேர்க்கப்படுகின்றன. இவை உடலுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. எனவே இயற்கை பானங்கள் பருகுவதே நல்லது என்கின்றனர் பல ஆய்வாளர்கள்.
06:02:11 on 19 Feb
06:00:53 on 19 Feb 2019,Tue
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லத்தில் திமுக எம்.பி கனிமொழி அரை மணி நேரமாகக் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார். முன்னதாக தமிழகக் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினர்.
06:00:53 on 19 Feb
05:56:03 on 19 Feb 2019,Tue
பாஜக-அதிமுக கூட்டணி தமிழக மக்களுக்கு எதிரானது என்று எம்.எல்.ஏ கருணாஸ் கூறியுள்ளார். மேலும் அவர், தமிழர் நலனுக்கு விரோதமானது பாஜக ஆட்சி என்றும், அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது கேலிக்கூத்தாக உள்ளது எனவும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தை வெறும் ஓட்டு வங்கியாக மோடி பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
05:56:03 on 19 Feb
05:55:01 on 19 Feb 2019,Tue
ராஜஸ்தானில் அதிவேகமாக வந்த லாரி திருமண ஊர்வலத்துக்குள் புகுந்ததில் நான்கு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்துப் பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெல்லாட், விபத்து குறித்து கேள்விப்பட்டவுடன் துயரம் அடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
05:55:01 on 19 Feb
05:35:02 on 19 Feb 2019,Tue
'அதிமுக-பாஜக-பாமக கூட்டணி என்பது கட்டாய கல்யாணம்' என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், 'அதிமுக-பாஜக கூட்டணியின் மூழ்கும் கப்பலில் யார் ஏறினாலும் அவர்களும் மூழ்குவார்கள்' என்றும் தெரிவித்துள்ளார்.
05:35:02 on 19 Feb
05:21:43 on 19 Feb 2019,Tue
மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதியான நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு செல்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோரை சந்தித்து அதிமுக - பாமக - பாஜக கூட்டணியில் தேமுதிக இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
05:21:43 on 19 Feb
05:15:06 on 19 Feb 2019,Tue
புல்வாமாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, காஷ்மீரில் இருக்கும் தாய்மார்களுக்கு ராணுவ தலைமை அதிகாரி கன்வால் ஜீத் சிங், ‘தங்களின் பிள்ளைகள் கையில் துப்பாக்கி ஏந்தினால், அவர்களை ராணுவத்தில் சரணயடையச் செய்யுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
05:15:06 on 19 Feb
04:59:12 on 19 Feb 2019,Tue
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
04:59:12 on 19 Feb
04:57:55 on 19 Feb 2019,Tue
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அவர், காலியாகவுள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாஜக ஆதரவுத் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
04:57:55 on 19 Feb
04:55:01 on 19 Feb 2019,Tue
’உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது’ என்று இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர், ’நமது வீரர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள். கிரிக்கெட், ஹாக்கி மற்றும் எந்த விளையாட்டானாலும் பாகிஸ்தானுடன் நாம் விளையாடக் கூடாது’ எனவும் தெரிவித்துள்ளார்.
04:55:01 on 19 Feb
04:35:02 on 19 Feb 2019,Tue
2019 ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டி சென்னையில் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
04:35:02 on 19 Feb
04:15:01 on 19 Feb 2019,Tue
ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 எம்எல் திரைப்படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருக்கிறது. இதுகுறித்து நடிகை ஓவியா, மார்ச் 1ஆம் தேதி படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
04:15:01 on 19 Feb
03:55:02 on 19 Feb 2019,Tue
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த ஆலோசனக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், கே.வி.தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
03:55:02 on 19 Feb
03:55:01 on 19 Feb 2019,Tue
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்படி பொறுப்பாகும்? என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், ’புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியிருப்பது தவறு. ஆதாரங்களை இந்தியா அளித்தால் நிச்சயமாக அதன்மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்’ எனவும் கூறியுள்ளார்.
03:55:01 on 19 Feb
03:35:02 on 19 Feb 2019,Tue
பாகிஸ்தானிய வெளியுறவு மந்திரி ஷா மஹ்மூத் குரேஷி ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியா கெடரெருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றங்களை குறைக்க உதவுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
03:35:02 on 19 Feb
03:18:01 on 19 Feb 2019,Tue
வேலூர் மாவட்டத்தில் சோலூர் வாக்குச்சாவடி முகவர்களிடையே பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’ராமதாசுக்கு வெட்கம் இல்லை; சூடு, சொரணை இல்லை. அதிமுக - பாமக ஏற்கனவே கூட்டணி வைத்து தோற்றுப் போனார்கள். ராமதாசுக்கு நாட்டைப்பற்றி கவலை இல்லை. பணத்தைப் பற்றிதான் கவலை’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
03:18:01 on 19 Feb
03:15:01 on 19 Feb 2019,Tue
வேலூர் மாவட்டத்தில் சோலூர் வாக்குச்சாவடி முகவர்களிடையே பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’ராமதாசுக்கு வெட்கம் இல்லை; சூடு, சொரணை இல்லை. அதிமுக - பாமக ஏற்கனவே கூட்டணி வைத்து தோற்றுப் போனார்கள். ராமதாசுக்கு நாட்டைப்பற்றி கவலை இல்லை. பணத்தைப் பற்றிதான் கவலை’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
03:15:01 on 19 Feb
02:55:01 on 19 Feb 2019,Tue
மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாமக கட்சிகளுக்கிடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? என்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
02:55:01 on 19 Feb
02:39:02 on 19 Feb 2019,Tue
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் 15 மக்களவைத் தொகுதிகளைக் கேட்டதாக சொல்லப்படும் நிலையில், தமிழகத்தில் 9 தொகுதிகளையும், புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் ஒதுக்க திமுக தலைமை ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
02:39:02 on 19 Feb
02:36:01 on 19 Feb 2019,Tue
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் 15 மக்களவைத் தொகுதிகளைக் கேட்டதாக சொல்லப்படும் நிலையில், தமிழகத்தில் 9 தொகுதிகளையும், புதுச்சேரியில் ஒரு தொகுதியையும் ஒதுக்க திமுக தலைமை ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
02:36:01 on 19 Feb
02:17:03 on 19 Feb 2019,Tue
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்தார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக-பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை சென்னையில் தொடங்கியது. கோயலுடன் அதிமுக சார்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
02:17:03 on 19 Feb
02:15:02 on 19 Feb 2019,Tue
மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாமக கட்சிகளுக்கிடையே கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், ’மக்களவைத் தேர்தலுக்கான திமுக - காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும்’ என காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
02:15:02 on 19 Feb
01:55:01 on 19 Feb 2019,Tue
தமிழக அரசு கடந்த மாதம் தீர்மானமாக கொண்டு வந்த பிரிவு 16ஏ என்ற சட்டத்தின் அடிப்படையில் பிரிவு 17 நிலங்களில் உள்ள அனைத்து நிலங்களையும் உடனடியாக வனமாக மாற்ற சட்டதிருத்தம் கொண்டு வர கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனைக் கண்டித்து நீலகிரியில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
01:55:01 on 19 Feb
01:35:01 on 19 Feb 2019,Tue
சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இந்நிலையில், எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
01:35:01 on 19 Feb
01:30:51 on 19 Feb 2019,Tue
அதிமுக-பாமக கூட்டணி தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘2009ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பாமக-அதிமுக கூட்டணி,’ என தெரிவித்தார். மேலும், ‘அதிமுக ஆட்சியை விமர்சித்து அண்மையில் புத்தகம் வெளியிட்டவர் பாமக தலைவர் ராமதாஸ்,’ என குறிப்பிட்டார்.
01:30:51 on 19 Feb
01:26:30 on 19 Feb 2019,Tue
மதுரையில் நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கின் மேல்முறையீடு 8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் நிலையில், விசாரணையை சிபிஐ மேலும் தாமதப்படுத்தினால் ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பளிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
01:26:30 on 19 Feb
01:24:03 on 19 Feb 2019,Tue
அதிமுக பாமக கூட்டணி பற்றி முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறிய கருத்தில், ’எந்தக் காலத்திலும் கொள்கை இல்லாத கட்சி பா.ம.க,’ என்று கூறினார். மேலும், ‘பாமக-அதிமுக கூட்டணி தோல்வி கூட்டணி என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது,’ எனவும் கூறினார்.
01:24:03 on 19 Feb