View in the JustOut app
X

தலைநகர் டெல்லியிலுள்ள ராம்லீலா மைதானத்தில் தசரா விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஹர்சவர்தன் மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.

06:56:50 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

பாலிவுட்டில் 2014ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘குயின்'. இப்படத்தின் ரீமேக் வெர்ஷன்களில் காஜல் அகர்வால் தமிழிலும், தமன்னா தெலுங்கிலும், மஞ்சிமா மோகன் மலையாளத்திலும், பாருல் யாதவ் கன்னடத்திலும் நடித்துள்ளனர். தற்போது, 4 வெர்ஷன்களின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டுள்ளது.

06:56:01 on 19 Oct

மேலும் வாசிக்க என்.டி.டி.வி. தமிழ்

சீனாவில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட நிதித்துறை முன்னாள் துணை மந்திரி சாங் ஷாவ்சுன் கைதுச் செய்யப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டு என்ன? என்பது தொடர்பான தெளிவான விபரங்கள் எதையும் சீன ஊடகங்கள் வெளியிடவில்லை.

06:40:02 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற பத்தினம்திட்டா காவல்துறையின் கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ், அப்பகுதிகளில் 144 தடை உத்தரவை நீட்டித்துள்ளார்.

06:33:30 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சர்கார் டீசர் இந்திய அளவில் டிரெண்டாகியுள்ளது. டீசருக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்புத் தெரிவித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்காருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

06:27:34 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

செய்தியாளர்களைச் சந்தித்த, மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வின் தலைவர் மோகன்லால், 'திலீப்பிடம் சங்கத்திலிருந்து ராஜினாமா செய்யக்கோரினேன். அவர் ராஜினாமா கடிதத்தை உடனடியாக அளித்தார். அதன்படி அவரது ராஜினாமா ஏற்கப்பட்டது,' என்றார்.

06:26:02 on 19 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகர் சிவகுமார், சபரிமலை விவகாரம் குறித்து பேசியபோது, 'பைத்தியம் பிடித்தது போல் அய்யப்பன் கோவிலுக்குச் செல்கிறார்கள்,' என்று பெண்கள் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

06:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினமணி

மருத்துவமனைக்கு செல்லாமலே நோயாளிகள் மருத்துவ வசதி பெற ‘டெலி மெடிசின்’ என்ற கருவியை இஸ்ரோ உருவாக்கி வருவதாகவும், மக்களின் தேவையைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தியதால் விண்வெளிக்கு மனிதனை அனுப்பவில்லை, என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், 2022ஆம் ஆண்டில் விண்வெளிக்கு இஸ்ரோ மனிதனை அனுப்பும் என்றும் கூறினார்.

05:55:02 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகர் மாவட்டத்தில் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோவில் நூற்றாண்டு விழாவில் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, 'மத்திய அரசின் முக்கிய நோக்கம், ஏழைகளின் நலன் மட்டுமே. ஏனென்றால், வறுமை ஒழிப்புத் திட்டப்பணிகள் விரைந்து செயல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்,' என்று கூறினார்.

05:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

சென்னை நங்கநல்லூரில் நாயைக் குத்தி கொலை செய்தவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார். தன்னை பார்த்து குரைத்ததால் நாயைக் குத்தூசியால் குத்தி கொன்றதாக தகவல் தெவித்துள்ளார். புளூ கிராஸ் மேலாளர் ஜான் வில்லியம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

05:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

கவிஞர் வைரமுத்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

05:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சபரிமலை கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும். இதனால், பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். மேலும், 'தேவசம் போர்டு எடுத்திருக்கும் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்,' என்றும் கூறியுள்ளார்.

05:05:02 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கேரள அமைச்சர் பாலகிருஷ்ணன், 'உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த ஏராளமான ஏற்பாடுகளை சபரிமலையில் அரசு செய்யவிருந்தது,' என தெரிவித்தார். மேலும், 'சபரிமலை விவகாரத்தில் பாஜக பிரச்சினையை ஏற்படுத்துகிறது,' என்றும் தெரிவித்தார்.

04:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தென்மேற்குப் பருவமழை தாக்கத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த மாதம் மழை பெய்தது. இந்நிலையில், நாளை வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

04:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

புகழ்பெற்ற தசரா விழா மைசூரில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. பேரணியாக வரும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களைக் கண்டு சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்டுள்ள மக்கள் அலங்கார வாகனங்களைப் பார்த்து ஆரவாரமடைந்துள்ளனர்.

04:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஹைதராபாத்தில் உள்ள மோஜோ டிவி அலுவலகத்தை ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டுள்ளனர். மோஜோ டிவி செய்தியாளர் சுவிதா சபரிமலைக்குச் சென்றதை கண்டித்து ஐயப்ப பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

04:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை நடத்தி வருகிறது. சபரிமலை விவகாரத்தில் எந்த முடிவையும் எடுக்க தேவசம் போர்டுக்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் தேவசம்போர்டு தலைமையகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்துவருகிறது.

04:06:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் விஜயின் ‘சர்கார்’ படத்தை இயக்கியிருக்கும் ஏ. ஆர்.முருகதாஸ்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவிருப்பவர் என்ற பரபரப்பான செய்தி சற்றுமுன்னர் வெளியாகியிருக்கிறது.

03:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள க்ரிமியாவில் கல்லூரி மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரும் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இதில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

03:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

மதுரை, சிவகங்கை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையிலிருந்து வினாடிக்கு 200 கனஅடி வீதம் வரும் 22ஆம் தேதி முதல் 20 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

03:26:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

`தூதரக அலுவலகத்தினுள் சென்ற பத்திரிகையாளர் ஜமாலை, சவுதி ஏஜென்டுகள் சிலர் கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்’ என்று துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஜமால் 7 நிமிடங்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, விரலைத் துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

03:24:49 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளர்களின் நாணய கண்காணிப்புப் பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

03:11:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினமணி

'தீபாவளி பண்டிகை முடிந்த பின் சபரிமலைக்குச் செல்வேன். என்னை யாராலும் தடுக்க முடியாது.' என பெண் ஆர்வலர் திருப்தி தேசாய் கூறியுள்ளார். மேலும், 'கேரளாவில் நடக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் பாஜகவினரே காரணம்,' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

02:56:01 on 19 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

உலக பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம் மத வேறுபாடுகளின்றி அனைவராலும் தரிசிக்கப்படும் புனிதத் தலமாகும். ஆனால், இங்கு, பக்தர்களுக்குத் தேவையான தங்குமிடம், உணவு, கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட சேவையாகச் செய்யாமல் வியாபார கண்ணோட்டத்தில் ஆலய நிர்வாகம் செயல்பட்டுவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

02:40:02 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரை பயன்படுத்தி பண மோசடி நடந்துள்ளது. மதுரையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி நெல்லையைச் சேர்ந்த 13 பேரிடம் ரூ.41 லட்சத்திற்கு மேல் மோசடி செய்தவர் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

02:26:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

'எதிர்பாராத வகையில், பொருளாளராக என்னை விஜயகாந்த் அறிவித்துவிட்டார்,' என தேமுதிக பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளர். மேலும், 'தீபாவளி போனஸ்போல் எனக்கு பொருளாளர் பதவி கொடுத்துள்ளதாகத் தொண்டர்கள் கூறினார்கள்,' என்றும் தெரிவித்தார்.

02:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தஞ்சை மாவட்டம் மேலஉளூர் பகுதியில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

01:56:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

ஆவின் பாலக மட்டுமல்லாமல் ஆவின் இனிப்பகத்தை தொடங்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மேலும் அவர், பால் உற்பத்தியாளர்களுக்கு பணப்பட்டுவாடா முறையாக வழங்கப்படுகிறது என்றும், முறையாக பணப்பட்டுவாடா நடப்பதால்தான் விவசாயிகள் அதிகளவு பாலை ஆவினுக்கு கொடுக்க முன்வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

01:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிஎஸ்ஆர் விவகாரத்தில் கிரண்போடி மீது விசாரணை நடத்த உள்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் அவர், ’ஆளுநர் மாளிகை சிஎஸ்ஆர் நிதியை முறைகேடாக வசூலித்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த வேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.

01:25:03 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’கேரளாவில் பிறந்து வளர்ந்த எனக்கு, நான் பெருமைப்படும் ஊரில், இப்படித் தாக்கப்படுவேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை’ என்கிறார் சபரிமலை விவகாரத்தை செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் மினிட் செய்தியாளர் சரிதா பாலன்.

01:11:02 on 19 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரத்தின் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

12:56:01 on 19 Oct

மேலும் வாசிக்க NDTV தமிழ்

’மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தந்து 8 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் அவர், ’மீனவர்கள் வாழ்வில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகள் விலகியுள்ளன’ என்றும் கூறியுள்ளார்.

12:40:04 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் வலுக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய 3 மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க 3 மாநிலங்களையும் வலியுறுத்தியுள்ளது.

12:38:16 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’தொற்றுநோய் பரவாமல் தடுக்க அக்டோபர் 25ஆம் தேதிக்குள் 770 மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவர்’ என்றும் தெரிவித்துள்ளார்.

12:26:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’சபரிமலை கோயிலுக்கு என்று ஒரு மரபு உள்ளது. அது காக்கப்பட வேண்டும்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் அவர், ’சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தில் முறையிட்டு தேவசம் போர்டு தங்களின் உரிமையைப் பெற வேண்டும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

12:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சபரிமலை ஐயப்பன் கோயிலை மூடி சாவியை ஒப்படைத்து விட்டு வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தலைமை தந்திரி கண்டராரு ராஜீவரு இவ்வாறு கூறியுள்ளார். மேலும், பக்தர்கள் பக்கமே அவர் நிற்பதாகவும், வேறு வழியில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

11:55:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

சென்னையில் நடைபெற்ற தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேமுதிக பொருளாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தேமுதிகவில் எந்த பொறுப்பும் வகிக்காத நிலையில், பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக பொருளாளராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

11:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள படம் சர்கார். இந்நிலையில், இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் #SarkarTeaserDay என்ற ஹேஸ்டேக் உருவாக்கி, டுவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

11:26:01 on 19 Oct

மேலும் வாசிக்க EENADU

சபரிமலை சன்னிதானம் நோக்கிச் சென்ற ஐதராபாத் பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பெண்ணியவாதியான ரஹானா பாத்திமா ஆகிய இரு பெண்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு தற்போது அந்த இரு பெண்களும் பம்பைக்குத் திரும்புகின்றனர்.

10:55:03 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 23,000 கனஅடியில் இருந்து 21,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 104.07 அடியாகவும், நீர் இருப்பு 70.21 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 13,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 700 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

10:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க தின மலர்

சபரிமலை சன்னிதானத்தில் பக்தர்கள், அர்ச்சகர்கள் மற்றும் தேவசம் போர்டு உறுப்பினர்கள் ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சபரிமலை நிலவரம் குறித்து கேரள டிஜிபி லோக்நாத் பகராவிடம் ஆளுநர் சதாசிவம் ஆலோசனை நடத்தினார்.

10:44:55 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’சபரிமலை கலவர பூமியாக மாற அரசு விரும்பவில்லை’ என கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார். மேலும், ’போராட்டத்தை வெளிப்படுத்துவதற்கான இடம் சபரிமலை இல்லை’ எனவும் கூறியுள்ளார். பக்தர்கள் எதிர்ப்பால் பத்திரிகையாளர் உள்பட 2 பெண்களையும் திரும்பிச் செல்ல வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

10:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

’சபரிமலையில் காவல்துறையினர் பிரச்னையை ஏற்படுத்தமாட்டார்கள்’ என ஐ.ஜி.ஸ்ரீஜித் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’பக்தர்களுடனான மோதல் எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம்’ எனவும் தெரிவித்துள்ளார்.

10:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், ’ஐய்யப்பன் கோயிலின் பன்னெடுங்காலமாக பழக்கப்பட்டு வரும் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும். அங்கு பெண்பாடு முக்கியமில்லை. பழக்கப்பட்டு வரும் பண்பாடுதான் முக்கியம். இது மூட நம்பிக்கையல்ல. தீர்க்கமான தீவிரமான நடவடிக்கை’ என்று பதிவிட்டுள்ளார்.

10:10:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஒரு மாதத்துக்கு முன்பு, தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்போகும் கிக்ஸ் காரின் டிசைன் ஸ்கெட்ச்சை வெளியிட்டது நிஸான். இந்நிலையில் தற்போது கார் பார்வைக்கும் எப்படி இருக்கும் என்பதை, ஆட்டொமொபைல் பத்திரிகையாளர்களிடம் பிரத்யேகமாகக் காட்டியிருக்கிறது அந்த நிறுவனம்.

09:55:02 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

சபரிமலையில் சன்னிதானத்தை நெருங்கிய 2 பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. பெண் பத்திரிக்கையாளர் கவிதா மற்றும் அவருடன் சென்ற பெண்ணைத் திருப்பி அனுப்புமாறு கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. போராட்ட உணர்வை வெளிப்படுத்துவதற்கான இடம் சபரிமலை இல்லை என்று உத்தரவிட்டுள்ளது.

09:47:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11ஆம் தேதி கரையைக் கடந்தது. இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

09:35:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

உலக பொருளாதாரத்துறை சார்பில் உலக அளவில் 12 துறைகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியல் ஆண்டு தோறும் வெளியிடப்பட்டு வருகிறது. 2018ஆம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாவுக்கு உகந்த நாடுகளின் பட்டியலில் மிகவும் பாதுகாப்பான நாடு என ஓமன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

09:15:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே எடைக்கல் பகுதியில் டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த 4 பேர் உடல்கருகி பலியாயினர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

08:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க தின மலர்

`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அடங்க மறு’. கார்த்திக் தங்வேல் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்த நிலையில், படம் வருகிற நவம்பர் மாதம் ரிலீசாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

08:35:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

நேற்று நடைபெற்ற பரமுண்டா துர்கா பூஜையில் கலந்துகொண்ட திருநங்கைகள், டிட்லி புயலால் இறந்த ஆன்மாக்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள். இந்த பூஜையில் ஏரளாமான திருநங்கைகள் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

08:15:01 on 19 Oct

மேலும் வாசிக்க EENADU

ஏர் இந்தியா நிறுவனம், 55 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிப்பதுடன், தற்போது செயல்பாட்டு மூலதனம் மற்றும் வட்டி கட்டுவதற்கே மிகவும் சிரமப்படுகிறது. இதையடுத்து, 500 கோடி ரூபாய் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த, 500 கோடி ரூபாய் நிதியை, வங்கிகளிடமிருந்து பெற உள்ளது.

07:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க தின மலர்

செய்திகள் மற்றும் நிகழ்வுகளே சந்தையின் போக்கை நிர்ணயிக்கும். எனவே புதிய டிரேடர்களும், ரிஸ்க் எடுக்க விரும்பாத டிரேடர்களும் டிரேடிங் செய்வதைத் தவிர்ப்பதே நல்லது. ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களைக் கட்டாயமாக முழுமையாகத் தவிர்க்க வேண்டிய நாளிது.

07:35:02 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து, 25 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 11 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும், உள்ளன. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

07:15:02 on 19 Oct

மேலும் வாசிக்க தின மலர்

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த போட்டோகிராபர் ரன்தீப் சிங் என்பவரின் மகனான அர்ஷ்தீப் சிங், இங்கிலாந்தின் நேச்சுரல் ஹிஸ்டரி அருங்காட்சியகம் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு `வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ விருதை வென்று சாதித்திருக்கிறார்.

06:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே வெண்பேடு அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோயில் அருகே புதையுண்டிருந்த 4 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் பின்புறம் உள்ள இடத்தைத் தூர்வாரும்போது 4 சிலைகளை பொதுமக்கள் மீட்டனர். தோண்டி எடுக்கப்பட்ட 4 சிலைகளை கோயில் நிர்வாகத்தினர் வருவாய் அதிகாரி மூலம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

06:41:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

என்னைக் கொலை செய்ய முயல்கிறது இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரா என்கிற குற்றச்சாட்டை தனது அமைச்சரவை கூட்டத்தில் கூறியுள்ளார் இலங்கை அதிபராக உள்ள மைத்திரிபாலா சிறிசேனா. இந்த தகவல் செய்தியாக வெளியாகி தற்போது சர்வதேச அரங்கில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

06:26:01 on 19 Oct

மேலும் வாசிக்க நக்கீரன்

ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்திய மருந்துவ ஆய்வு குழுவை ராஜஸ்தானுக்கு அனுப்பி உள்ளது மத்திய அரசு. ஜிகா வைரசாஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் கர்ப்பிணி பெண்கள் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

06:11:02 on 19 Oct

மேலும் வாசிக்க தின மலர்

பிரான்ஸைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் சென்னை ஒரகடத்தில் ஆலை அமைத்துள்ளது. இந்நிறுவனத்தின் குறைந்த விலை கார் க்விட். இது ரூ. 2.78 லட்சம் விலையில் கிடைக்கிறது. குறைந்த விலை பிரிவு கார்களில் இது மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இதில் பிரீமியம் மாடல் விலை ரூ. 4.71 லட்சமாகும். இது 799 சி.சி. திறன் கொண்டது.

05:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலைமலர்

தலைவலிக்கு இஞ்சி மிகச் சிறந்த மருந்து. இஞ்சியில் தலைவலியைப் போக்கும் ஜிஞ்சரால் ரசாயனம் உள்ளது. காலை வெறும் வயிற்றில் இஞ்சிச் சாறு (2 டீஸ்பூன்) குடித்தால், நாள் முழுக்கத் தலைவலி வராமல் தடுக்கலாம். தினமும் மாலை வேளையில் பட்டை சேர்த்த பிளாக் டீ அருந்தி வந்தால் சைனஸால் உண்டாகும் தலைவலி நீங்கும்.

05:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

அசுஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அசுஸ் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள் சென்ஃபோன் லைட் எல்1 மற்றும் சென்ஃபோன் மேக்ஸ் எம்1 என அழைக்கப்படுகிறது. பண்டிகை கால சலுகையாக சென்ஃபோன் லைட் எல்1 ஸ்மார்ட்போன் ரூ.5,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

05:26:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

எச்1பி விசாவில் மாற்றங்களைச் செய்யவுள்ளதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களால் பெரும்பாலும் நடத்தப்படும் சிறிய, நடுத்தர ஒப்பந்த நிறுவனங்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

05:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினத்தந்தி

சிபிஎஸ்இ பாடநூலில் வரலாற்று உண்மைகளை மறைத்து, நாடார் சமூகத்தின் மீது அவதூறு சேற்றை வாரி வீசி இருப்பது மன்னிக்கவே முடியாத கொடும் செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். மேலும், மத்திய பாஜக அரசு உடனடியாக, நாடார்குல மக்களைத் தவறாகச் சித்தரிக்கும் பாடத்தை உடனே நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

04:56:01 on 19 Oct

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

பண்டிகை சீசனை முன்னிட்டு இந்த அக்டோபர் மாதத்துக்கான ஸ்மார்ட்போன் விற்பனை 24 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது. அதேபோல, சென்ற ஆண்டை விட இந்த ஆண்டில் 10 சதவிகிதம் அதிகமான அளவில் புதிய மொபைல்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:40:02 on 19 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க வேண்டிய பொறுப்பு பாகிஸ்தானிடமே உள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத கட்டமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்நாடு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

04:26:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினமணி

பெற்றோர் கண்டித்த காரணத்தினாலும் மியூசிக்கலி கலையரசன் தற்கொலை செய்துகொண்டிருக்க வாய்ப்பிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பக்கத்து வீட்டு இளைஞர் ஒருவருடன் நட்பு பாராட்டியதாகவும், இதனை கலையரசனின் பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

04:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது 10.66 சதவீதமும், டாலர் மதிப்பில், 15.96 சதவீதமும் சரிவடைந்துள்ளதாக ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர், சக்திவேல் கூறியுள்ளார்.

03:56:01 on 19 Oct

மேலும் வாசிக்க தின மலர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு வழங்கும் கவுண்டரில் முறைகேடு நடந்துள்ளது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள 16,000 லட்டுகளை ஒப்பந்த ஊழியர்கள் அபேஸ் செய்துள்ளனர். இலவச தரிசன டிக்கெட் ஸ்கேன் ஆகவில்லை என கூறி ஒப்பந்த ஊழியர்கள் முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

03:40:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அடுத்த சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை ரவிந்திர ஜடேஜா முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

03:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்தியாவைப் பொறுத்தவரையில், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் எந்தவொரு விமான நிறுவனமும் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கவில்லை. ஆனால் இப்போது இதற்கான சந்தை மதிப்பு 69 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது.

03:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா "சபரிமலை பிரச்னைக்கு ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள்தான் காரணம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பது அப்பட்டமான பொய். அவர் இந்து விரோத சக்தி. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்’’ என்றார்.

02:55:02 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

சென்னை காரம்பாக்கத்தில் பச்சிளம் குழந்தையை கால்வாயில் வீசிச் சென்ற பெண், சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசில் சிக்கினார். வேளச்சேரியில் பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிக் கொன்ற தாய் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

02:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கவனத்தை திசை திருப்புவதற்காகவே இது போன்ற மீடூ புகார்கள் வருகின்றன என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறி உள்ளார்.

02:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

’ஸ்க்ரீன்ஷாட்கள் போன்ற டிஜிட்டல் ஆதாரங்களை ஆதாரமாகப் பயன்படுத்தலாம். ஸ்க்ரீன்ஷாட்கள் உட்பட. இந்திய சாட்சிய சட்டம் 1872 ஒரு வழக்கில் டிஜிட்டல் ஆதாரங்களைச் சமர்ப்பிக்க அனுமதிக்கிறது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு என எதுவாக இருந்தாலும் இது செல்லுபடியாகும்’ என்று சைபர் குற்ற வழக்கறிஞர் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.

02:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான விஜய் தேவரகொண்டா, நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். குறுகிய காலத்திலேயே மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை சேர்த்துவிட்டார் விஜய் தேவரகொண்டா. பெயரிடப்படாத இவரது அடுத்த தெலுங்கு படத்தில் வட சென்னை ஹீரோயின் ஐஸ்வர்யா ராஜேஸ் நாயகியாக நடிக்க உள்ளார்.

01:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

முதல்வர் கனவால், திமுக தலைவர் ஸ்டாலின் தூக்கிமின்றி தவிக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். மேலும் அவர், ”அ.தி.மு.க. என்பது மக்கள் இயக்கம். அதற்கு அழிவே இல்லை.” என்றார்.

01:40:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினமலர்

திமுக தலைவர் ஸ்டாலின், ராட்சசன் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து படத்தின் நாயகன் விஷ்ணு விஷால், ”மிக்க மகிழ்ச்சி. திமுக தலைவர் ஸ்டாலின் தனது நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி, ராட்சசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு எனது நடிப்பை பாராட்டினார்.” என்று கூறியுள்ளார்.

01:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

தயிரின் மூலம் தயாரிக்கப்படும் லஸ்ஸியை குடிப்பதால் உடலுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். இது உடனடி புத்துணர்ச்சி அளிக்ககூடியது. லஸ்ஸியில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது நம் எலும்புகளும் பற்களும் வலிமையாக உதவுகிறது. மேலும், எலும்பு தேய்மானம் போன்ற நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

01:10:01 on 19 Oct

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

MeTooவுக்குப் போட்டியாக HeToo, WeToo என்பது எல்லாம் பெண்களை மிரட்டுவது போன்றது என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். மத்திய இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பதவி விலகியதை மதம் சார்ந்ததாக பார்க்கக் கூடாது, மானம் சார்ந்ததாக பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

12:55:01 on 19 Oct

மேலும் வாசிக்க தினகரன்

கடந்த சில தினங்களில் மட்டும் மூன்று விமானங்களில் பழுது மற்றும் விமான விபத்து காரணமாகத் திருச்சி விமான நிலையம் திக் திக் எனக் கிடக்கிறது. கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் திருச்சியிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், விமான நிலையத்தின் காம்பவுண்டு சுவர் மற்றும் ஆண்டெனா ஆகியவற்றில் மோதியது.

12:40:02 on 19 Oct

மேலும் வாசிக்க விகடன்

செப்டம்பர் 30, 2018 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஜியோ சேவையில் சுமார் 25.23 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்து இருப்பதாகவும், ஒவ்வொரு வாடிக்கையாளரின் வருவாய் மட்டும் ரூ.131.7 என ஜியோ அறிவித்துள்ளது. ஜியோ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ஒவ்வொரு மாதமும் சுமார் 11 ஜி.பி. டேட்டா பயன்படுத்தி வருகின்றனர்.

12:25:01 on 19 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

’பாகிஸ்தானில் அரசாங்கம் மாற்றியமைந்தாலும் இந்தியாவின் அண்டை நாட்டினுடையக் கொள்கையில் அதே நிலைதான் உள்ளது. ஒரு புதிய அரசாங்கம் அமைந்த போதிலும் எல்லைகள் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை’ என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

12:10:02 on 19 Oct

மேலும் வாசிக்க தினத் தந்தி

நாட்டில் விமானப் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் விதமாக உள்நாட்டிலேயே விமானங்களை உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசு செயல்திட்டம் ஒன்றைத் தயாரித்து வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

11:56:01 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்யூப் ஜாவேத், ’பும்ரா வழக்கத்துக்கு மாறாக பந்து வீசுவதால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட வாய்ப்புள்ளது’ என்று கூறியிருந்தார். இதுபற்றிப் பேசிய பும்ரா, ’என்னைப் போல் இருக்கிற வேகப்பந்து வீச்சாளர்கள் யார்தான் காயம் அடையாமல் இருக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

11:40:02 on 18 Oct

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நாடு முழுவதும் தசரா விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வந்தனர். இதனை முன்னிட்டு சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

11:26:02 on 18 Oct

மேலும் வாசிக்க EENADU

வடமாநிலங்களில் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றனர். ராவணன் உருவ பொம்மைக்கு தீ வைக்கப்பட்டது. தீமை ஒழிந்து நன்மை செழிக்கும் என்பதைக் குறிக்கும் வகையில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

11:10:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை சேப்பாக்கத்தில் 8 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க முயன்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் வாயில் துணியை அடைத்துத் தூக்கிச் சென்று வன்கொடுமை செய்ய முயன்றதாக மாணிக்கம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

10:56:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

'பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கலைத்திட்ட குழுவின் கூட்டத்தில் , தற்பொழுது 9ஆம் வகுப்பிற்கு உள்ள முப்பருவக் கல்விமுறையை மாற்றி 10ஆம் வகுப்பில் உள்ளது போல் ஒரே புத்தகமாக வழங்கலாம்’ என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

10:41:01 on 18 Oct

மேலும் வாசிக்க EENADU

போக்குவரத்துக்கான உலகின் மிகப்பெரிய ஆளில்லா விமானத்தை சீனா வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்த்துள்ளது. FH 98 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானத்தை சீனாவின் ஏரோஸ்பேஸ் மின்னணு தொழில்நுட்பக் கழகம் தயாரித்துள்ளது. 1.5 டன் எடை கொண்ட பொருட்களை இந்த விமானம் சுமந்து செல்லும் திறன் பெற்றது.

10:26:01 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையைக் கண்காணிக்கத் தமிழகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட குழுவை அமைந்துள்ளதாகத் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. பொதுப்பணித்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10:10:02 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

மாணவர்கள் வேறு கல்லூரியில் சேர்ந்தால், அவர்களது சேர்க்கைக் கட்டணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று அனைத்துக் கல்லூரிகளுக்கும் யுஜிசி உத்தரவிட்டுள்ளது. அதில், மாணவர்களைக் கல்லூரியின் சேர்க்கைக் கட்டணம், நிர்வாக வசதிகள் உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தகத்தை வாங்குமாறு வற்புறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

09:56:02 on 18 Oct

மேலும் வாசிக்க மின்னம்பலம்

குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்குப் பாதுகாப்பானதா? நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் ரப்பர் நிப்பிள் குழந்தையை தாய்ப்பால் அருந்தவிடாமல் பாதிக்க செய்யும். கழுத்து போன்ற பகுதிகளில் அடைத்துகொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்தும்.

09:41:02 on 18 Oct

மேலும் வாசிக்க மாலை மலர்

மழைக்காலம் தொடங்க உள்ளதால் காய்ச்சல், இருமல் போன்றவை இரண்டு நாட்கள் தொடர்ந்தால் மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

09:26:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

’கிரிக்கெட் வீரர்கள் வெளிநாடுகளில் தங்கள் மனைவிகளை தங்க வைக்கும் கால அவகாசம் குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்களுக்கு இதுகுறித்து முடிவெடுப்பதற்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. தற்போது இதற்கு நாங்கள் சம்மதம் தெரிவித்ததாக உலவும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை’ என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

09:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க EENADU

திமிங்கலங்களுக்கு உணவு அளிக்கும் நேரத்தில், தொட்டிக்குள் ஒரு பெண் விழுந்தததை விளக்கும் வீடியோ, அதிர்ச்சியில் உறையவைக்கிறது. நல்ல வேளையாக, அப்பெண் எந்தவித காயமுமின்றி மீட்கப்பட்டார். இச்சம்பவம். ஜியாசிங் பகுதியில் உள்ள வியுயூ பிளாசாவில் நிகழ்ந்துள்ளது. சீன சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

08:57:01 on 18 Oct

மேலும் வாசிக்க என்.டி.டி.வி.

”புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் தசராப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ளாது. இதற்காக 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்” என மாவட்ட எஸ்.பி முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

08:40:01 on 18 Oct

மேலும் வாசிக்க விகடன்

ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு நேற்று மட்டும் கூடுதலாக 770 பேருந்துகள் இயக்கப்பட்டன. கொட்டும் மழையிலும் சொந்த ஊர் செல்வதற்காகக் கோயம்பேட்டில் பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

08:26:01 on 18 Oct

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சிலி நாட்டில் சூரிய ஒளியில் இயங்கும் கார்கள் அறிமுக விழா பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தலைநகர் சாண்டியாகோவில் சூரிய ஒளியில் இயங்கும் கார்களின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. அப்போது விசித்திரமான தோற்றத்துடன் வித்தியாசமாக இருந்த சூரிய ஒளிக் கார்கள் வேகமாக சீறிப்பாய்ந்த சென்றன.

08:10:01 on 18 Oct

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

காஞ்சிபுரம்-பெருமத்தூர் சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்த குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

07:55:01 on 18 Oct

மேலும் வாசிக்க தினகரன்

கேரளாவில் சபரிமலையை நோக்கிச் செல்லும் பெண்களைத் தடுத்து போராடிவந்த போராட்டக்காரர்கள், பக்தர்களுடன் கலந்து விட்டதால், யார் போராட்டக்காரர்கள், யார் பக்தர்கள் என கண்டுபிடிப்பதில் காவல்துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. செய்தியாளர்களும், காவல்துறையினருமே போராட்டக்காரர்களின் இலக்காக உள்ளதாக கூறப்படுகிறது.

07:42:01 on 18 Oct

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மேலும் வாசிக்க