View in the JustOut app
X

ரயில்வே துறையில் சமீபத்தில் 62,907 குரூப் டி லெவல் 1 பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச தகுதி 10ஆம் வகுப்பு. இதற்கு சுமார் 2 கோடி பேருக்கும் மேல் விண்ணப்பித்திருக்கின்றனர்.

02:10:03 on 22 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

நீரிழிவு நோயாளிகளை ஊனமுற்றோர் பட்டியலில் சேர்க்கும் திட்டம் உள்ளதா? என மத்திய அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழகத்திலும், இந்தியாவிலும் எத்தனை நீரழிவு நோயாளிகள் உள்ளனர்? என்றும், போதிய மருத்துவ வசதிகளும் மருத்துவர்களும் உள்ளனரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

01:56:02 on 22 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ரயில் டிக்கெட்டுகளில் பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்த விளம்பரங்கள் இடம்பெறக்கூடாது என்று அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது இந்திய ரயில்வே. தேர்தல் விதிமுறைகளை மீறிவிடக் கூடாது என்பதற்காக இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது இந்திய ரயில்வே.

01:41:01 on 22 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

’போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்திருக்குமோ என்று மக்கள் நினைத்து விட்டால் கிரிக்கெட் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள்’ என ஸ்பாட் பிக்ஸிங் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதல் முறையாகப் பேசி உள்ளார்.

01:40:02 on 22 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

குழந்தைக்கு கண்களில் மை வைக்கலாமா? எனக் கேட்டால் பலரும் அதை வேண்டாம் என்பதுபோலவே ஜாடை செய்கின்றனர். கண்களில் மை இடுவதைப் பற்றி நிறைய முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. சில குழந்தைகளுக்கு கண் மை வைப்பதால் அரிப்பு, கண்களில் நீர் வழிதல், மற்ற அலர்ஜிகளும் வரலாம்.

01:26:01 on 22 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

டெல்லியில் நாட்டின் பாதுகாப்பிற்கான ஆயுதங்களை கொள்முதல் செய்வது தொடர்பான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறைக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் திட்டங்களுக்கு ரூ.2355 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

01:10:02 on 22 Mar

மேலும் வாசிக்க தினகரன்

சி-விஜில் என்ற பெயரில் தேர்தல் முறைகேட்டு புகாருக்கான செயலியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இச்செயலியில் விசித்திரமான புகார்களை பலர் அனுப்புவதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விழிபிதுங்கி உள்ளனர்.

12:56:01 on 22 Mar

மேலும் வாசிக்க தினகரன்

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கடலூர் மக்களவைத் தொகுதியிலும், அதிமுக சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இந்நிலையில், ’அதிமுக ஆட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது,’ என கடலூரில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

12:40:01 on 22 Mar

மேலும் வாசிக்க தினமணி

மத்தியப்பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து தலையை வெட்டி படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தப்பியோடிய ஒருவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

12:26:01 on 22 Mar

மேலும் வாசிக்க ETV Bharat

சில தாய்மார்கள் பிரசவத்துக்குப்பின் ஏற்படும் கோளாறினால் மனநிலை பாதிக்கப்படுவார்கள். தாய்மார்களுக்கு பொதுவாகவே பேபி ப்ளூஸ் அனுபவம் இருக்கும். குழந்தை பிறந்தவுடன் ஹார்மோன்களின் ஏற்ற தாழ்வினால் மனநிலை அலைபாயும்.

12:10:01 on 22 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு நாட்களே மீதமுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும்பின்னடைவாக, வேகப்பந்து வீச்சாளர் லுங்கி கிடி காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இவரது பந்துவீச்சில் பெரிதும் இம்ப்ரஸ் ஆனவர் கேப்டன் மகேந்திர சிங் தோனி.

11:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க ie தமிழ்

தமிழ் சினிமாவில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான துருவங்கள் பதினாறு படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் கார்த்திக் நரேன். இவர் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் அருண்விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றனர்.

11:40:01 on 21 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கட்ட பிரியங்கா அந்த மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய அவர், ‘மோடி அரசு லாலிபாப்புகளைத்தான் மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது,’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

11:25:02 on 21 Mar

மேலும் வாசிக்க ஏசியாநெட்

காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளரான ரன்தீப் சர்ஜுவாலா, டெல்லியில் செய்தியாளர்களிடம் அளித்தப் பேட்டியில், 'ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை மீட்டெடுப்பதற்காகப் பொதுமக்களின் பணத்தை மோடி தவறாகப் பயன்படுத்துகிறார்,’ என குற்றஞ்சாட்டினார்.

11:10:01 on 21 Mar

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஹாலிவுட் திரையுலகில் முன்னணியில் இருக்கும் பிரபல பட தயாரிப்பு நிறுவனம் ‘வார்னர் பிரதர்ஸ்’. இந்நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் கெவின் டுசுஜிஹாரா. இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை அடுத்து வார்னர் நிறுவன தலைவர் கெவின் டுசுஜிஹாரா தனது பொறுப்பில் இருந்து விலகினார்.

10:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, ஷார்ஜா மற்றும் மலேசியா நாடுகளிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட 2.8 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

10:41:02 on 21 Mar

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் தேர்தல் சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது.

10:26:02 on 21 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பௌர்ணமி நாளான நேற்று போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பனில் காட்சியளித்த முழுமையான பூரண நிலவு கண்களுக்கு விருந்தாக அமைந்தது. லிஸ்பனின் அழகான முக்கிய இடங்களில் இந்த நிலாக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

10:10:02 on 21 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நடிகர் சித்தார்த், தன் ட்விட்டர் பக்கத்தில், ‘நான் தேவைப்படும்போதெல்லாம் அனைத்து பெரிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் பேசி இருக்கிறேன். ஆனால் ஒரு தரப்பினரிடம் இருந்து மட்டுமே எனக்கு மிரட்டல்கள் வந்தன. தற்போது அவர்களில் பெரும்பாலானோர் தங்களை சவ்கிதார் என்று அழைத்துக்கொள்கின்றனர்.’ என பதிவிட்டுள்ளார்.

09:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமெரிக்க அரசு தரப்பு பாகிஸ்தானிடம், தீவிரவாதத்துக்கு எதிராக ஸ்திரத்தன்மையுடைய நம்பகமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், ‘இந்தியா மீது இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடந்தால், நிலைமை மிகவும் மோசமானதாக மாறும்' என்று எச்சரித்துள்ளது.

09:40:02 on 21 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

அரசியலில் தந்தை-மகன், அண்ணன் - தம்பி, தந்தை - மகள் ஆகியோர் ஒரே தொகுதியில் போட்டியிடுவது குறித்த செய்திகள் அவ்வபோது வெளிவந்து ஆச்சரியத்தை அளிக்கும். அந்த வகையில் தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் தந்தையும் மகளும் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

09:25:01 on 21 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தை திவாலாகும் நிலையிலிருந்து மீட்டு தொடர்ந்து விமான சேவையைத் தொடர்வதற்கு அதன் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட கடன்தாரர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

09:11:01 on 21 Mar

மேலும் வாசிக்க தி இந்து

அதிமுகவைச் சேர்ந்த ஜெயலலிதா உட்பட 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் திமுகவைச் சேர்ந்த கலைஞர் கருணாநிதியும் 2016ஆம் ஆண்டுக்குப் பின் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் வழக்கைக் காரணம் காட்டி தேர்தல் நடத்தாத 3 தொகுதிகளோடு சேர்த்து, சூலூர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுமா என கேள்வியெழுந்துள்ளது.

09:04:13 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடிகர் விஜய் சேதுபதி, நடிப்பையும் தாண்டி சமூக அக்கறைகள் கொண்டு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், தற்போது கொத்தடிமைகள் மறுவாழ்வு சங்கத்துக்கு ரூ.5 லட்சம் நிதி உதவியும், கார் ஒன்றையும் பரிசாக வழங்கியுள்ளார்.

08:56:01 on 21 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

இத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, அதன் ஓட்டுநரால் கடத்தப்பட்டது. பின்னர் அந்த ஓட்டுநர் பேருந்துக்கு தீ வைத்துள்ளார்.

08:42:01 on 21 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ஒவ்வொரு தொழிலும் நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. கட்டுமானத் தொழிலும் அதற்கு விதிவிலக்கல்ல. இடநெருக்கடி, கட்டிடக் கழிவுகள், ஆட்கள் பற்றாக்குறை, காலதாமதம் என கட்டுமானத் தொழில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவுகிறது `ப்ரீகாஸ்ட்’ தொழில்நுட்பம்.

08:27:01 on 21 Mar

மேலும் வாசிக்க காமதேனு

செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படத்தின் நன்றி அறிவிக்கும் விழாவில் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, ‘வாழைப்பழம் ஏழைகளின் ஆப்பிள் என்பார்கள். அதுபோல் திரைப்படப் பாடல் பாமரனின் கவிதை என்பேன். இந்தப்படத்தில் பங்காற்றிய அனைவரையும் தனித்தனியாக வாழ்த்துகிறேன்,’ என தெரிவித்தார்.

08:10:01 on 21 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

ஐபிஎல் போட்டிகள் 23ஆம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளன. இந்நிலையில், ‘சிஎஸ்கே அணியின் முதல் போட்டியின் வருமானம் அனைத்தும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும்,’ என்று அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

07:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் சி.பி.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தமிழிசை செளந்தரராஜன், இராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன்.இராதாகிருஷ்ணன், சிவகங்கையில் ஹெச்.ராஜா போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

07:54:51 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

மக்களவைத் தேர்தலில் உ.பி. வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுவதாகவும், குஜராத்தில் உள்ள காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் அமித்ஷா போட்டியிடுவதாகவும், உ.பி. அமேதி தொகுதியில் காங்., தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜகவின் ஸ்மிருதி இரானி போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

07:49:32 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தற்போது உள்ள பெண்கள் எல்லா துறைகளிலும் சாதனை புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போதிலும் கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என்று தெரிந்துகொண்டு அதைக் கருவிலேயே அழிக்கும் பழக்கம் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது ஒரு ஆய்வு மூலமாகத் தெரியவந்துள்ளது.

07:44:13 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

’சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட வேட்பாளர்களின் விளம்பரங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்,’ என மாவட்டத் தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

07:41:01 on 21 Mar

மேலும் வாசிக்க தினமணி

வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்துக்களால் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையின் போது, பொதுமக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த நீரை ஊற்றி மகிழ்வதும் வழக்கம். இதன்படி, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், ஹோலி பண்டிகையின் துவக்க நிகழ்வாக, சுத்தியலை கொண்டு செல்லும் பேரணி நடைபெற்றது.

07:25:01 on 21 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சியோமியின் போகோ எஃப்1 ஸ்மார்ட்போன் விலை நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. அதன்படி போகோ எஃப்1 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை குறுகிய காலத்திற்கு குறைக்கப்படுகிறது. அந்த வகையில் போகோ எஃப்1 ஸ்மார்ட்போனினை பயனர்கள் ரூ.2,000 தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிட முடியும்.

07:11:01 on 21 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

’பா.ஜ.க கூட்டணி ஏழைகளுக்கு கொடுத்து கொடுத்து கரம் சிவந்த எம்.ஜி.ஆா் கூட்டணி. காங்கிரஸ் கூட்டணி என்பது ஓட்டுக்கு நோட்டு கொடுத்து பழகிய கூட்டணி. வீட்டுக்கு நூறு இருநூறு நோட்டுக்கள் வேணுமா அல்லது வீட்டுக்கு ஓரு எம்.பி வேணுமா என்று மக்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்’ என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

06:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

ஆம்பூரில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சால்வை அணிவிக்கச் சென்றபோது தொண்டரைத் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தால் கோபமடைந்த அமைச்சர் வீரமணி சால்வை அணிவிக்க வந்த தொண்டரைத் தாக்க முயற்சி செய்துள்ளார்.

06:35:28 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

மூன்று தொகுதிகளுக்கு உள்ளூர் வேட்பாளர்கள் கிடைக்காததால் வேறு மாவட்ட நிர்வாகிகளை வேட்பாளர்களாக தே.மு.தி.க., அறிவித்துள்ளது. இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினர் புலம்புகின்றனர்.

06:35:01 on 21 Mar

மேலும் வாசிக்க தின மலர்

நடிகர் சல்மான் கான் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்யவுள்ளார் என்ற தகவல் பரவியது. இதுகுறித்துப் பேசிய சல்மான் கான், ‘நான் தேர்தலில் போட்டியிடவில்லை. அத்துடன் எந்தக் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்யப் போவதில்லை. அந்தச் செய்தி வதந்திதான்’ என்று விளக்கமளித்துள்ளார்.

05:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சேலத்தில் வாழப்பாடி அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைதான பாமக பிரமுகர் பூபதி உட்பட ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாக சேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

05:35:02 on 21 Mar

மேலும் வாசிக்க தினமணி

அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய நாகை நாடாளுமன்ற வேட்பாளர் சரவணன், நான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றதும் அங்கு தொகுதி மக்களின் கோரிக்கைக்குக் குரல் கொடுப்பேன் என தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் பேசி அசத்தினார்.

05:15:02 on 21 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

1975ஆம் ஆண்டு 'அபூர்வ ராகங்கள்' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார், சிவாஜிராவ். தமிழ்சினிமாவில் ஏற்கெனவே சிவாஜி நடித்துக் கொண்டிருப்பதால் சிவாஜிராவை அழைத்த இயக்குநர் கே.பாலசந்தர், 'இன்னையில இருந்து உன் பெயர் ரஜினிகாந்த் டா' என்று உரக்கச் சொல்லி உச்சிமோந்து ரஜினியை கட்டியணைத்துக் கொள்கிறார்.

04:55:04 on 21 Mar

மேலும் வாசிக்க விகடன்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை நண்பகல் 12 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

04:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க தின மலர்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிக்கும் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

04:35:02 on 21 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

வேலூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்து வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு பேரை, சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் இரண்டு பேரும், போதைப் பொருள் விற்பனை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.

04:16:18 on 21 Mar

மேலும் வாசிக்க மாலை முரசு

அமெரிக்காவின் அதிகாரமிக்க நீதிமன்றம் எனக் கருதப்படும் கொலம்பியா நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளிப் பெண் நியோமி ஜெஹாங்கிர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதகாவே இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் அந்தப் பதவியை வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

04:15:02 on 21 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி வருகின்ற 26ஆம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. மொத்தம் ரூ.2.4 கோடி பரிசுத்தொகை கொண்ட இந்த போட்டித் தொடரில் இருந்து, உடல்நலக் குறைவு காரணமாக இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் விலகுவதாக அறிவித்துள்ளார்.

04:11:25 on 21 Mar

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

உடல் எடை அதிகரிக்கும்போது இரத்த அழுத்தமும் அதிகரிக்கிறது. அதனால், உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அன்றாடம் உடற்பயிற்சி செய்வது மற்றும் ஆரோக்கியமான உணவு முறை உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும். உடல் எடையைக் குறைத்தால் இரத்த அழுத்தம் மட்டுமல்ல பல உடல் உபாதைகளும் குறையும்.

04:05:51 on 21 Mar

மேலும் வாசிக்க NDTV தமிழ்

நயன்தாரா படங்களில் பெரும்பாலும் சின்னத்திரை பிரபலம் தீபா வெங்கட்தான் டப்பிங் பேசுவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் கோலமாவு கோகிலா படத்திற்காக நயன்தாராவிற்கு டப்பிங் பேசியதற்கு விருது ஒன்றை பெற்றார். அப்போது டப்பிங் பேசிய அவருக்கு ஆடியன்ஸிடமிருந்து செம்ம ரெஸ்பான்ஸ். ஒரு நொடி நயன்தாராவை கண்முன் கொண்டு வந்துவிட்டார்.

03:55:42 on 21 Mar

மேலும் வாசிக்க சினி உலகம்

திருச்சியில் மண்ணச்சநல்லூர் அருகே சிறுகாம்பூரில் கல்லூரி மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு மனீஷ் என்பவர் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. மேலும் தப்பி ஓடிய மனீஷ் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

03:55:02 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னர் 48 மணி நேரத்திற்கு எவ்வித தேர்தல் பிரச்சாரமும் அனுமதிக்கப்படாது என ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூகவலைத் தளங்கள் அறிவித்துள்ளன.

03:35:01 on 21 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அரியானாவின் ஹிசார் நகரில் கிராமம் ஒன்றில் தனது வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த நதீம் என்ற ஒன்றரை வயது குழந்தை, அங்கிருந்த 60 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்து தேசிய பேரிடர் பொறுப்பு படையினர் மற்றும் ராணுவத்தின் நிபுணர்கள் அடங்கிய குழு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

03:15:01 on 21 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

கொடைக்கானலில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கை 4 மாதத்திற்குள் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஆணையிட்டுள்ளது.

02:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் இந்திய வீரர் உயிரிழந்தார்.

02:35:02 on 21 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சென்னையில் செய்தியாயளர்களைச் சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “காங்கிரஸ் மேலிடம் எனக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்காவிட்டாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்கள் வெற்றிபெற பாடுபடுவேன்.” என்றார். மேலும் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா ஒரு முந்திரிக்கொட்டை எனவும் விமர்சித்தார்.

02:21:38 on 21 Mar

மேலும் வாசிக்க நக்கீரன்

இம்முறை 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கான பிரத்யேக வடிவில் ஒரு புதிய டார்ச்சை ஜப்பான் வடிவமைத்துள்ளது. இதனை ஜப்பானின் டோக்யூஜின் யோஷியோகா வடிவமைத்துள்ளார். இந்த டார்ச் ஜப்பானின் பூல்லட் ரயில் உருவாக்கப்படும் அதே பொருளால் தயாரிக்கப்பட்டுள்ளது.

02:21:21 on 21 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இலங்கையில் பாணந்துறை - சரிக்கமுல்ல - திக்கல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தை அடுத்து, சிங்களவருக்கும், முஸ்லிம் இனத்தவருவருக்கும் இடையிலேயே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து, மோதல் சம்பவம் வலுப்பெற்றதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இதையடுத்து, அந்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

01:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சித்திரை திருவிழா காரணமாக மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், கிறித்துவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

01:44:47 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ஐரா. இந்த படம் வருகிற 28ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், யோகி பாபு நடிக்கின்றனர். சர்ஜுன் இதை இயக்குகிறார். தற்போது இந்த படத்தின் டிரலைர் சமூக வலைதளத்தில் வெளியாகி பலரின் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.

01:39:42 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ’96’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும், இயக்குநருமான மாருதி ராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாகக் கொடுக்கப்படும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை இப்படத்திற்காக இயக்குநர் பிரேம் பெறவுள்ளார்.

01:37:13 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'தென் கடலோர மாவட்டங்களில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து காணப்படும்,' என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் அறிவித்துள்ளது.

01:35:02 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அதிமுகவுடன் அமமுகவை இணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மதுரை ஆதினம் கூறியிருந்தார். இதற்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், "மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல.. அதற்கு அவசியமும் இல்லை" என கூறியுள்ளார்.

01:19:17 on 21 Mar

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

’மக்களவைத் தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் இதுவரை 30 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்,’ என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னையில் பேட்டியளித்துள்ளார். மேலும், இடைத்தேர்தலில் போட்டியிட இதுவரை 3 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

01:15:01 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

நாகை மாவட்டம் வடகரையைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை, கணவனைப் பிரிந்து தனது குழந்தை மற்றும் தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கு சிராஜுதீன், அமானுல்லா, நூர் முகமது ஆகிய மூவரும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சிராஜுதீன், அமானுல்லா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

01:14:03 on 21 Mar

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஓமங் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் விவேக் ஓபராய், மோடியாக நடிக்கிறார். இப்படம் ஏப்.5ஆம் தேது வெளியாகிறது.

01:05:23 on 21 Mar

மேலும் வாசிக்க தினமணி

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில், அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமக்கு மோதிரம் சின்னம் ஒதுக்க கோரி, தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தார். ஆனால், அவருக்கு, தேர்தல் ஆணையம் பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

12:55:03 on 21 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பெரியகுளம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முருகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது தேனி மாவட்ட கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முருகன் பெரியகுளத்தில் போட்டியிட மாட்டார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்பு வழங்கப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

12:50:52 on 21 Mar

மேலும் வாசிக்க விகடன்

கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிவதற்குள் நாடு முழுவதும் 28 மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கி.மீ., பயணம் செய்து 225 பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். மார்ச் 28ஆம் தேதி முதல் உ.பி.,யில் இருந்து மக்களவைத் தேர்தல் பிரசாரத்தைத் துவக்குகிறார். அதன் பிறகு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

12:44:07 on 21 Mar

மேலும் வாசிக்க தினமலர்

ஒவ்வொரு நாளையும் உடற்பயிற்சியுடன் தொடங்கும்போது உடலும் மனமும் புத்துணர்வோடு இருக்கும். நாள் முழுதும் உற்சாகமானதாக, சுறுசுறுப்பானதாக மாறும். மார்புத்தசைகள் வலுவடைய எளிய பயிற்சி ஒன்று உள்ளது. இதன் பெயர் பிளேங்க் வித் ஒன் ஆர்ம் ரோவிங் (Plank with One Arm Rowing ). இந்தப் பயிற்சியை வீட்டில் இருந்தபடியும் செய்யலாம்.

12:35:02 on 21 Mar

மேலும் வாசிக்க மாலைமலர்

நியூசிலாந்தில் செமி ஆட்டோமேட்டிக், அசால்ட் ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் துப்பாக்கிகளுக்கு தடை விதித்து அறிவித்துள்ளார்.

12:35:01 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

அதிமுகவுக்கு எப்போதும் கைகொடுக்கும் கொங்கு மண்டலம் இந்த மக்களவைத் தேர்தலிலும் கைகொடுக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. சேலத்தைத் தவிர மற்ற பகுதிகளில் பாமக பலமில்லாமல் இருப்பது, தேமுதிகவில் பழைய வலிமை இல்லாமல் இருப்பது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைச் சம்பவம் போன்றவை அதிமுக கூட்டணிக்கு பாதகமாக உள்ளது.

12:26:05 on 21 Mar

மேலும் வாசிக்க தினமணி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் பொதிகுளம் பஞ்சாயத்தில் பொதிகுளம், சின்ன பொதிகுளம் யாதவர் குடியிருப்பு, ஒத்தவீடு போன்ற கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தின் தண்ணீர் விநியோகம் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

12:17:42 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

’சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமாரின் படம், ராஜேஷ் இயக்கத்தில் ’மிஸ்டர் லோக்கல்’, மித்ரன் இயக்கத்தில் ’ஹீரோ’ உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இவற்றைத் தொடர்ந்து தனது நீண்ட கால நண்பரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அனிருத் இசையமக்க நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

12:15:01 on 21 Mar

மேலும் வாசிக்க காமதேனு

சூலூர் தொகுதி எம்.எல்.ஏ. கனகராஜ் இன்று மாரடைப்பால் காலமானார். இதையடுத்து தமிழகத்தில் சட்டசபையில் 22 தொகுதிகள் காலியாகி உள்ளன. பாராளுமன்றத் தேர்தலுடன் 22 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

11:55:02 on 21 Mar

மேலும் வாசிக்க காமதேனு

விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன், தவறுதலாக திமுக வேட்பாளர் கனிமொழிக்கு வாக்களிக்கக் கோரினார். பின்னர், சுதாரித்துகொண்டு தமிழிசை சவுந்தரராஜன் என தெரிவித்தாலும், அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

11:35:01 on 21 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவை அறிமுகம் செய்து பேசினார். பின்னர் பேசிய அவர், ‘மோடியின் பேரனான ராகுல் காந்தியும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்,’ என பேசியது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

11:17:26 on 21 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், ’நான் யாரையும் சவாலாக கருதவில்லை, மத்திய, மாநில அரசுகளை மாற்றுவதே சவாலாக கருதுகிறேன்,’ என தெரிவித்தார். மேலும், ‘பல கட்சிகளில் இருந்து பலர் வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,’ எனவும் கூறினார்.

11:15:02 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

2007ஆம் அண்டு மதுரையில் தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

11:08:46 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சியில் ஸ்டாலினை சந்தித்த பின் ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் அளித்தப் பேட்டியில், ‘பெரம்பலூரில் வெற்றிபெற்றால் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்புகளை பெருக்குவேன்,’ என்றார். மேலும், ’மக்களுக்கு நன்கு அறிமுகமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் வெற்றி உறுதியாகிறது,’ எனவும் கூறினார்.

11:00:53 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருப்பதாக அந்த கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா அறிவித்தார், ஆனால் சிறிது நேரத்திலேயே வேட்பாளர்கள் குறித்து பாஜக தலைமை தான் அறிவிக்கும் என்றும் மற்றவை எல்லாம் யூகம் தான் என்றும் அவரே பேட்டி அளித்தார்.

10:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

திருச்சியில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் திமுகவில் இனைந்தார். அவர் அமமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாராக இருந்தார். பின்னர், டிடிவி.தினகரனால் அந்த பொருப்பில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

10:35:01 on 21 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தென்கொரியாவில் ஓட்டல் அறை எடுத்து தங்கிய விருந்தாளிகளுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, ஓட்டலில் ரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச காணொளியை தயாரித்து வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது கொரியாவில் செய்யப்பட்டுள்ளனர்.

10:15:02 on 21 Mar

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னை எழும்பூரில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 750 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இந்த செல்போன்கள் பிடிப்பட்டது.

09:55:02 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், 'என்னிடம் இன்றைக்கு பொறுப்பை கொடுத்தால், மறுநாளே பெட்ரோல் விலையை குறைத்து காட்டுவேன்,' என கூறியுள்ளார்.

09:35:02 on 21 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

கனடாவில் கடந்த மாதம் 25ஆம் தேதி நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் ஜக்மீத் சிங் வெற்றிபெற்றார். இதையடுத்து அவருக்கு நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

09:15:07 on 21 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். வீட்டில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டதில் அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

09:05:27 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

திருப்பூர் மாநகரில் சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர்களை, நுண்ணறிவு பிரிவு போலீசார் ரோந்து மேற்கொண்டு, ஆறு பேரை கைது செய்து, பணம், லாட்டரி டோக்கன் பறிமுதல் செய்தனர்.

08:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க தின மலர்

ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 3 வீரர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

08:35:01 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

கர்நாடகாவில் புதிய 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில், அந்த கட்டிடத்தில் இருந்த வாடிக்கையாளர்கள், கடைகளின் ஊழியர்கள், கட்டிட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி, பலியானோரின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

08:15:03 on 21 Mar

மேலும் வாசிக்க தினத் தந்தி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.52 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.50-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தென்ஆப்பிரிக்காவில் அதிபர் ரமபோசா தேர்தல் பிரச்சாரத்திற்காக, மெபோபானேவில் இருந்து தலைநகர் பிரிட்டோரியா செல்லும் ரெயிலில் ஏறினார். அங்குச் செல்ல 45 நிமிடங்கள் தான் ஆகும். ஆனால் இந்த ரெயில் 3 மணி நேரத்துக்கு பிறகுதான் பிரிட்டோரியா சென்றடைந்தது. இதனால் அதிபர் சிறில் ரமபோசா உள்பட பயணிகள் அனைவரும் தவிப்புக்கு உள்ளாகினர்.

07:41:01 on 21 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

மாசி, பங்குனி மாதங்களில் வரும் சிவராத்திரி, மாசி களரி உற்சவங்களில் கிராம கோயில்களில் உள்ள குலதெய்வங்களுக்கு பொங்கல் விழாவும், பங்குனிமாதங்களில் மாரியம்மன் கோயில்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக தேவைப்படும் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை தயாரிக்கும்பணி தற்போது மானாமதுரையில் தீவிரமடைந்துள்ளது.

07:25:01 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

2018 ஆம் ஆண்டு போதிய அளவில் மழை பெய்யாததால் தமிழகத்தில் சென்னை உட்பட 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச்செயலர் அதுல்ய மிஸ்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

07:11:01 on 21 Mar

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

46 வருடங்களுக்குப் பின், 'காசி யாத்திர' என்கிற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற டைட்டில் வைத்துள்ள இந்தப் படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

06:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க ஏசியா நெட் நியூஸ்

மதுரை காந்தி மியூசிய பணியாளர்களுக்குக் கூடுதல் ஊதியம் வழங்கும் வகையில் நிரந்தர வைப்பு நிதியை அதிகரிக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில, அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை ஏப்ரல் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

06:41:01 on 21 Mar

மேலும் வாசிக்க தினகரன்

ஒவ்வொரு சீஸனுக்கும் ஏற்ற வகையில் நமக்கு பழங்கள் கிடைக்கின்றன. பழங்களும் பச்சைக் காய்கறிகளும் அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். இவற்றிலுள்ள மினரல்களும் விட்டமின்களும் நமது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும், அதுமட்டுமல்ல இதில் உள்ள நீர்ச்சத்தும் உடலுக்கு குளுமையை அளிக்கும்.

06:25:01 on 21 Mar

மேலும் வாசிக்க மாலை மலர்

கன்னட சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் சுனில் குமார் தேசாயி உச்சக்கட்டம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாகிருக்க இந்த உச்சக்கட்டம் திரைப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

06:11:01 on 21 Mar

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

’முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நாட்டின் பிரதமராக உள்ள மோடி தான் மீண்டும் பிரதமராவார். மூன்று இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்’ என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

05:55:01 on 21 Mar

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சப்ஜா விதைகளில் பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்துப் பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்பு கொண்டது. சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும்.

05:40:01 on 21 Mar

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 1ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக ஏப்ரல் 20ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என மாவட்ட கலெக்டர் ஆனந்த் அறிவித்துள்ளார்.

05:25:01 on 21 Mar

மேலும் வாசிக்க தின மலர்

எதிர்வரும் காலத்தில், வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை நாள்களாக இருந்தால், கிடைக்கும் ஓய்வு நாள்களில், புதிய திறமைகளை வளர்ப்பதற்கே முக்கியத்துவம் தருவோம் என்று 66 சதவிகிதம் இந்தியர்கள் தெரிவித்துள்ளதாக க்ரோனாஸ் நிறுவனம் கூறியுள்ளது.

05:10:01 on 21 Mar

மேலும் வாசிக்க விகடன்

மேலும் வாசிக்க