View in the JustOut app
X

சர்வதேச முகவாண்மை நிறுவனமான பி.டபிள்யூ.சி, உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது. கடந்த 2018ஆம் ஆண்டு 7வது இடத்தில் இருந்த இந்தியா, நடப்பு 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடத்தை பிடித்துள்ளது.

02:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்ய முடிகிற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த கட்டுப்பாடு மூலம் வதந்திகள் ஓரளவு குறைந்தது. இந்தக் கட்டுப்பாடு தற்போது உலக அளவில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

02:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

வாக்குப்பதிவு எந்திரங்களை முடக்கி, விருப்பப்பட்டவருக்கு வாக்களிக்க செய்யும் எந்த முயற்சியும் இந்திய எந்திரங்களிடம் பலிக்காது என்று கூறியுள்ள இந்திய தேர்தல் ஆணையம் லண்டன் நிகழ்ச்சி குறித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளது.

02:25:01 on 22 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சாம்சங் கேலக்ஸி m10 விலையானது ரூ.7,990ஆகும் சாம்சங் கேலக்ஸி m20 விலையானது ரூ.10,990 முதல் தொடங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக m சிரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிறது. இந்த போன்கள் இன்பினிட்டி வி டிஸ்பிளே, அதிக திறன் கொண்ட பேட்டரிகள் கொண்டுள்ளது.

02:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

சென்னையில் ஒரு நாளைக்கு சுமார் 5000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இப்படி வந்த குப்பையில்தான் இளம்பெண்ணின் உடலின் கை, கால்களை மட்டுமே பார்சல் செய்யப்பட்டு பெருங்குடிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இளம்பெண்ணைக் கொலை செய்து உடலை கச்சிதமாக பார்சல் செய்து குப்பையில் வீசியுள்ளது ஒரு கும்பல்.

01:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை ஏற்படுத்தும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் வெந்நீரில் கரைந்து விடும்.

01:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஹன்னா சம்மர்ஸ் என்ற 4 வயது குழந்தையின் தாய், “என் மகள் என்னிடம் நான் ஆணாக பிறந்திருந்தால் தீயணைப்பு வீரராகியிருப்பேன் என்றாள். அதற்கு நான் பெண்களும் தீயணைப்பு வீரராக முடியும் என்று சொன்னேன். நான் என் மகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் யாராவது எனக்கு உதவி செய்ய முடியுமா?” என்று ட்விட்டரில் அவர் கேள்வி எழுப்பினார்.

01:25:02 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அரசு பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மாணவ, மாணவியருக்கு தலா 4 சீருடை, பாட புத்தகம், புத்தகப்பை ஒரு ஜோடி காலணிகளையும் முதலமைச்சர் வழங்கினார். எல்கேஜி, யுகேஜியில் சேர 52,993 குழந்தைகள் ஏற்கனவே பதிவு செய்துள்ளனர்.

01:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க வெளிச்சம் டிவி

கிரிக்கெட்டில் இருந்து எப்போது ஓய்வு என்பது குறித்து இந்திய கேப்டன் விராட் கோலி மனம் திறந்துள்ளார். 'எட்டு ஆண்டுகளுக்குப் பின் அனுஷ்கா மற்றும் எனது குடும்பத்துக்கே முன்னுரிமை அளிப்பேன். கிரிக்கெட் எப்போதும் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கும்.' என கூறியுள்ளார்.

12:56:01 on 22 Jan

மேலும் வாசிக்க விகடன்

’முன்னதாக ராகுல்காந்தியைப் பிரதமராக ஏற்றுக்கொள்வதாக கூறிய திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது தேர்தலுக்கு பின் பிரதமர் யார் என்பதை பார்த்துக்கொள்ளலாம் என மறைமுகமாக கூறியிருப்பது, அவர் இரட்டை வேடம் போடுவதை காட்டுகிறது,’ என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

12:40:01 on 22 Jan

மேலும் வாசிக்க EENADU

உத்தராயன் திருவிழாவின்போது காற்றாடி விட்டு கொண்டாடும் மக்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழக்கின்றன. இந்நிலையில், அகமதாபாத்தை சேர்ந்த ரஹிலா உஸ்மான் பறவைகள் மீட்பு பிரசாரத்தை முடித்து வீடு திரும்பிய வேளையில், காற்றாடியின் நூல் ரஹிலாவில் கழுத்தில் சுற்றிக் கொண்டதில் உயிரிழந்தார்.

12:26:01 on 22 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

‘தற்போது இந்திய அணியில் விளையாடுவது தோனி இல்லை, பழிவாங்கும் பழைய தோனி,’ என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் அலென் பார்டர் வியப்படைந்துள்ளார். மேலும், ‘ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சில் பலத்துடனும், இந்தியா சுழற்பந்து வீச்சுடனும் களத்தில் மோதுவார்கள். இப்பொது, அது தலைகீழாக நடந்துள்ளது,’ என்றார்.

12:10:01 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டியது தான் மிகமிக முக்கியமானது. அவர்கள் எந்த ஒன்றில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை கண்டறிய வேண்டும். அதில் அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். விருப்பமான துறைகளில் பணியாற்றும்போது தான் ஒருவனின் வாழ்வு மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

11:56:02 on 21 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

‘நாட்டின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு தன்னலமற்ற சேவை’ செய்ததற்காக ஃபிலிப் கோட்லர் பிரசிடென்சியல் விருது வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகத்தின் மூலம் பிரதமர் மோடி கடந்த 15ஆம் தேதி தெரிவித்தார். அந்த பதிவில் அவர் டேக் செய்திருக்கும் @WMC_India என்ற டிவிட்டரில் இதுவரை யாருமே எந்தவொரு பதிவையும் இடவில்லை.

11:40:02 on 21 Jan

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

அந்தமான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 7 தீவுகளில் இணைய சேவையை மேம்படுத்த சென்னையில் இருந்து 2,199 கிமீ நீளத்துக்கு ஓஎஃப்சி (Optical Fiber Cable) கேபிள்களை பதிக்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது.

11:26:01 on 21 Jan

மேலும் வாசிக்க காமதேனு

சந்திரனில் மனிதர்கள் தங்குவதற்கு வசதியாக குடியிருப்புகள் அமைக்க சீன தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், பூமியில் இருந்து வேறு கிரகத்தில் மனிதர்களைக் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

11:10:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

’இந்தியாவின் முதல் 9 கோடீசுவரர்களின் செல்வம் நாட்டின் 50 சதவிகித மக்களின் செல்வத்திற்கு சமமானதாகும்’ என ஆக்ஸ்பாம் அறிக்கை கூறியுள்ளது. இது குறித்து பேசிய அந்நிர்வாகத்தின் இயக்குனர் வின்னீ, ’சில செல்வந்தர்கள் இந்தியாவின் செல்வத்தின் வளர்ந்துவரும் பெரும் பங்கை குவித்து வருகின்றனர்,’ என்றார்.

10:56:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

கர்நாடக மாநிலத்தில் சொகுசு ஓட்டலில் தாக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங் காயங்களுடன் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உத்தரவின்படி, ஆனந்த் சிங்கைத் தாக்கிய எம்.எல்.ஏ. கணேஷ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

10:40:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினமலர்

நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி, 3ஆவது முறையாக கூட்டணி சேர்ந்திருக்கும் விஜய்-63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. சர்காரை தொடர்ந்து, விஜய் நடிப்பில் உருவாகும் விஜய்-63 படத்தை தீபாவளிக்கு வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

10:25:01 on 21 Jan

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

டிவிடெண்ட் கொடுப்பதா அல்லது, ‘பைபேக்’ எனும், பங்குகளை திரும்பப் பெறுவதா? எது சிறந்தது? ஒவ்வொரு தேர்விலும் யாருக்கு அதிக லாபம்? இது குறித்து முடிவுக்கு வருவது அவ்வளவு எளிதல்ல. இந்த முடிவை, வரி சட்டங்களை மட்டுமே வைத்து தீர்மானம் செய்யக் கூடாது.

10:10:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினமலர்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் முன்பு நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர். இதுகுறித்துப் பேசிய அவர், ‘திரைப்பட கலைஞர்களிடையே நேர்மையானவர் அஜித். தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக செலவு செய்ய நினைப்பவர். அவரைப் போலவே அஜித்தின் ரசிகர்களும் நல்லவர்கள்.’ என்றார்.

09:56:01 on 21 Jan

மேலும் வாசிக்க ie தமிழ்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தே பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வந்தன. இந்நிலையில், 2014 நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணர் தெரிவித்துள்ளார்.

09:49:06 on 21 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

சமூக வலைதளங்களில் உணவுப் பொருட்கள் குறித்து வெளியாகும் தவறான செய்திகளைத் தடுக்க வேண்டும் என கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

09:41:01 on 21 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் விளையாடி வந்த பப்ஜி இனி பணம் சம்பாதிக்கவும் வழிவகுக்கிறது. ஆம், War90.com என்ற இணையதளம் PUBG விளையாடுபவர்களுக்காக ஒரு போட்டி ஒன்றை நடத்திவருகிறது. இப்போட்டியில் ஆட்டத்தின் முடிவுவரை நீங்கள் நிலைத்து ஆடினால் உங்களுக்கு ரூ . 2000 வரை பரிசாக கிடைக்கும்.

09:26:01 on 21 Jan

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

இந்து மதம், பிரதமர் மோடி மற்றும் பாஜக குறித்த சர்ச்சைக்குரிய ஓவியங்கள் இடம்பெற்ற விவகாரத்தில் லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘சர்ச்சைக்குரிய ஓவியங்கள் பற்றி அறிந்ததும் கண்காட்சியில் இருந்து அவற்றை நீக்கிவிட்டோம்,’ என தெரிவித்துள்ளது.

09:16:41 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐநா அமைதிப் படையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதியை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

09:10:01 on 21 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து பெண்கள் சாப்பிட்டு வரலாம். அவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். உடலின் ஈரப்பதத்தை சம நிலையில் தக்கவைத்து வயதான தோற்றத்துக்கான அறிகுறிகளை தாமதப் படுத்தும்.

08:56:01 on 21 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

மத்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், 'தொழிற்சாலைகளை மத்திய அரசு மூடிவிடும் என்று தவறான பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. அத்தகைய திட்டமே மத்திய அரசிடம் இல்லை. எந்த தொழிற்சாலைகளையும் மூட மாட்டோம்.' என கூறினார்.

08:41:02 on 21 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

இந்தியாவில் வரும் அக்டோபர் 2019 முதல் வாகன பாதுகாப்புச் சட்டங்கள் கடுமையாக்கப்படுகின்றன. இதையொட்டி, ஹூண்டாயின் எலைட் i20 காரில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

08:26:01 on 21 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சி 2018ஆம் ஆண்டில் 6.6 சதவீதம் சரிவடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது குறித்து சீனா வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

08:10:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

தேசிய சீனியர் ஹாக்கி போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆட்டம் முடிவடைய 4 நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் தமிழக அணிக்கு பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்தது. இதை வினோதன் கோலாக மாற்ற அதுவே வெற்றி கோலாக அமைந்தது.

07:55:02 on 21 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் செய்தியாளர்களிடம் அளித்தப் பேட்டியில், ‘அதிமுக ஆட்சியைக் கலைக்கவே திமுக தலைவர் ஸ்டாலின் முயற்சி செய்துவருகிறார்,’ என்றார். மேலும், ‘திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறைக்குச் செல்லும் காலம் விரைவில் வரும்,’ என தெரிவித்துள்ளார்.

07:40:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினமணி

உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் கடந்த 15ஆம் தேதி கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது. இந்த கும்பமேளா நிகழ்ச்சியின் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய தொழில் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

07:25:01 on 21 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மதுரை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கான அனுமதி 10 நாட்களுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. வரும் 31ஆம் தேதி வரை விமான நிலையத்திற்கு செல்ல பார்வையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு படை துணை ஆணையர் மொஹந்தி தலைமையில் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

07:10:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை என நடிகர் அஜித் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச தொடர்பு என்றும், தனது திரைப்படத்தில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

07:09:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

கௌதம் போன்ற சிலர் ஒரு படத்தை நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டிருக்க, படத்தின் அறிவிப்பு முடித்த கையோடு படத்தை முடித்து ரிலீஸ் தேதி அறிவிக்கும் சுறுசுறுப்புக்காரர்களும் இருக்கிறார்கள். அதில் ஒருவர் அருண் குமார். பண்ணையாரும் பத்மினியும் பட இயக்குநர் என்றால் சட்டென்று தெரியும்.

06:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

கர்நாடகா மாநிலம் கார்வார் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கிய 24 பேரின் இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் 8 பேரின் உடல்களைத் தேடும் பணியில் இந்திய கடற்படை, கடலோர கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

06:52:49 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சிரியாவில் உள்ள ஈரானின் இலக்குகளை தாங்கள் தாக்க தொடங்கிவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானிய புரட்சிப் படையின் சிறப்பு பிரிவான குட்ஸ் படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை பிரிவு (IDF) கூறியுள்ளது. மேலும், இது குறித்து எந்த தகவலையும் இஸ்ரேல் ராணுவம் தெரிவிக்கவில்லை.

06:35:01 on 21 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தாராபுரம் அருகே மரவபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி செந்தில்குமார், தனது மனைவி துளசிமணியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். வழக்கம்போல ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து துளசிமணியின் கழுத்தை அறுத்துக் கொன்றதாக கூறப்படுகிறது.

06:15:01 on 21 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த குமரேசன் என்பவர் மீது சேத்துப்பட்டு மற்றும் சூளைமேடு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளன. இந்நிலையில் யுவராஜ் என்பவர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பும் வழியில் அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி அருகே குமரேசன் படுகொலை செய்யப்பட்டார்.

05:55:02 on 21 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

"இந்தியாவின் 1% செல்வந்தர்களின் சொத்து கடந்த 2018ல் 39 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் ஏழை மக்களின் செல்வங்கள் வெறும் 3% மட்டுமே அதிகரித்துள்ளது" என்கிற தகவலை ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவின் 10% உயர் செல்வந்தர்கள் நாட்டின் மொத்த செல்வத்தில் 77.4 சதவிகிதத்தை வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

05:39:01 on 21 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

"இந்தியாவின் 1% செல்வந்தர்களின் சொத்து கடந்த 2018ல் 39 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ஆனால் ஏழை மக்களின் செல்வங்கள் வெறும் 3% மட்டுமே அதிகரித்துள்ளது" என்கிற தகவலை ஆக்ஸ்பாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், இந்தியாவின் 10% உயர் செல்வந்தர்கள் நாட்டின் மொத்த செல்வத்தில் 77.4 சதவிகிதத்தை வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.

05:36:02 on 21 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அம்மாநில அமைச்சர் கோவிந்த் சிங், ”கடந்த 15 ஆண்டுகளில் வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை தயாரிக்க பாஜக-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் பயிற்றுவிக்கப்பட்ட குற்றவாளிகள் தற்போது ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர்.” என்றார்.

05:18:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அம்மாநில அமைச்சர் கோவிந்த் சிங், ”கடந்த 15 ஆண்டுகளில் வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகளை தயாரிக்க பாஜக-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளால் பயிற்றுவிக்கப்பட்ட குற்றவாளிகள் தற்போது ஒருவருக்கொருவர் சண்டையிடுகின்றனர்.” என்றார்.

05:15:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

கோடநாடு விவகாரத்தில் தன்னை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடலிலும், நெருப்பிலும் இறங்குவார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் அவர், பிரதமர் மோடியின் மீது எந்த ஒரு பெரிய ஊழல் குற்றச்சாட்டும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

04:57:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினமணி

விஸ்வாசம் படத் தயாரிப்பு தரப்பு ரஜினியின் கடந்தகாலச் சாதனையை அஜித் படம் முறியடித்ததாகக் கூறியது. இது சரியான ஒப்பீடா என்பதே இங்கு எழுப்பப்படுகிற கேள்வி. படத்தின் பட்ஜெட் வகையில் இருபடங்களும் 100 கோடியைத் தாண்டவில்லை. இரண்டு படங்களுமே சுமார் 55 கோடி வியாபாரத்தைத் தமிழகத்தில் கடக்கவில்லை.

04:35:01 on 21 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் இதில், ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ரைசா வில்சன் நடிக்கிறார். கமல் பிரகாஷ் இயக்கும் இந்த படத்தை ஆரா சினிமாஸ் சார்பில், மகேஷ்.ஜி தயாரிக்கிறார். இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

04:15:02 on 21 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், பணிக்கு வராமல் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

03:55:02 on 21 Jan

மேலும் வாசிக்க தின மலர்

இந்தியாவின் ரூ.2000, ரூ.500, ரூ.200 நோட்டுகளை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்று நேபாள அரசு வங்கியான நேபால் ராஷ்டிரா வங்கி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக நேபாளத்துக்குச் சுற்றுலா வரும் இந்தியப் பயணிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

03:35:02 on 21 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில், “ இந்த வீடியோவைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்திரேலியா ஓப்பன் தொடரில், பாதுகாவலர் தன் வேலையை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். அதேபோன்று, ஃபெடரரின் செயலும் பாராட்டுக்குரியது. இன்றைய தேதிகளில், இதுபோன்ற நடவடிக்கை சாதாரணமானது அல்ல.” என பதிவிட்டுள்ளார்.

03:15:01 on 21 Jan

மேலும் வாசிக்க விகடன்

பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி காலமாகியுள்ளார். 111 வயதான சிவக்குமாரசாமி ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மடாதிபதி சிவக்குமாரசாமி இறுதிச்சடங்கு மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

02:55:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

'அதிமுக ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது,' என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். மேலும், 'பிரதமர் மோடியின் ஆட்சியில் நிறையும் இருக்கிறது, குறையும் இருக்கிறது, ஆனாலும் அவர் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை,' என அவர் கூறியுள்ளார்.

02:35:02 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஜனவரி 13இல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பிப்.21ஆம் தேதி படகு உரிமையாளர் ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

02:16:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஜனவரி 13இல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பிப்.21ஆம் தேதி படகு உரிமையாளர் ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

02:15:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

'தமிழகத்தின் உள்மாவட்டங்களில் மூடுபனி நீடிக்கும்' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ‘சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; காலை நேரத்தில் மூடுபனி இருக்கும்,’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01:55:02 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய ஓவியங்கள் இடம்பெற்ற விவகாரத்தில் லயோலா கல்லூரி நிர்வாகம் மன்னிப்புக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘சர்ச்சைக்குரிய ஓவியங்கள் பற்றி அறிந்ததும் கண்காட்சியில் இருந்து அவற்றை நீக்கிவிட்டோம்,’ என தெரிவித்துள்ளது.

01:40:57 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

டி.கே.ராஜேந்திரன் டிஜிபியாக செயல்பட இடைக்கால தடை கோரும் கோரிக்கையை நிகராகரித்தது நீதிமன்றம். டி.கே. ராஜேந்திரனின் பணி நியமனத்தை சட்டவிரோதம் என அறிவிக்ககோரிய வழக்கில் உயர்நீதிமன்றகிளை இந்த ஆணையிட்டுள்ளது.

01:37:44 on 21 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மேகாலயா சுரங்கத்தில் சட்ட விரோதமாக நிலக்கரி எடுக்க சென்று சிக்கி கொண்ட 15 தொழிலாளர்களை மீட்க இயலாது என்று கடற்படை வீரர்கள் மீட்பு பணிகளை நிறுத்திவிட்டனர். ஆனால், மீட்பு பணிகளை நிறுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததால் முழுமையாக கைவிடப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

01:35:02 on 21 Jan

மேலும் வாசிக்க EENADU

ஆறு, சிங்கம் என்று சூர்யாவை வைத்து படம் இயக்கிய ஹரி அடுத்து சூர்யாவோடு இணையும் படத்திற்கு யானை எனப் பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் பற்றிய முறையான அறிவிப்பை அப்படத்தைத் தயாரிக்கும் ஏவிஎம் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

01:18:10 on 21 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நாளை வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ள நிலையில் தலைமைச்செயலாளர் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.

01:15:02 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

முதியவர்களின் ஆயுளில் பங்கெடுத்த ஒரு உணவு என்றால் அது நீராகாரம்தான். பழைய சோற்றில் இருந்து கிடைக்கும் நீராகாரம் என்னும் நிசித்தண்ணீர் உடலுக்கு புத்துணர்ச்சி, குளிர்ச்சி தரும் ஒரு அமிர்தமாகும்.

01:14:51 on 21 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

சைக்ளிங் மெஷின், ட்ரெட்மில்லில் ஓடுவது எனக் கடுமையான பயிற்சிகளால் மட்டுமே உடலை வலுவாக வைத்திருக்க முடியும் என்றில்லை. ஜிம் பால் பயிற்சிகள் மூலமாகவும் உடலை வலுவாக்கலாம். உடலின் நெகிழ்வுத்தன்மை, அழகான உடல் கட்டமைப்பு, உடல் எடையைச் சீராக வைத்திருப்பது எனப் பல்வேறு பலன்களை இந்த ஜிம் பால் அள்ளித்தரும்.

01:12:55 on 21 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றிருப்பதாக இந்து மக்கள் கட்சி போலீசில் புகார் அளித்துள்ளது.

12:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வெளிநாட்டுக்குத் தப்பியோடிய தொழிலதிபர் மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டில் இந்திய குடியுரிமையைத் துறந்துள்ளார். அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் தன்னுடைய பாஸ்போர்ட்டையும் ஒப்படைத்துள்ளார்.

12:35:01 on 21 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

‘புதுப்பிக்கப்பட்ட அறையில் சாமிதான் கும்பிட்டேன் யாகம் நடத்தவில்லை,’ என துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், ‘முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தியதாக கூறப்படுவது உண்மையல்ல,’ என்றார்.

12:15:02 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

10% இடஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2 வாரத்தில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

12:07:38 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்ததற்கு பதிலாக, மாயாவதி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்,' என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். மேலும், ‘சமாஜ்வாதியுடன் கூட்டணியால் மக்களவை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எந்த அரசியல் லாபமும் கிடைக்காது என்பது அக்கட்சி தொடர்களுக்கே தெரியும்,’ என கூறினார்.

11:55:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சிபிஐ இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவ் நியமனத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் குழுவில் இருப்பதால் வழக்கில் இருந்து விலகுவதாக ரஞ்சன் கோகாய் அறிவித்துள்ளார்.

11:35:01 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'நான்கரை ஆண்டுகளாக டெல்லிக்கு எந்த நன்மையும் செய்யாத பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் 2014ஆம் ஆண்டு பலித்தது போல், டெல்லியில் இந்தாண்டு பலிக்காது,’ என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீஷித் தெரிவித்துள்ளார்.

11:15:01 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் அளித்தப் பேட்டியில், ‘நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றன,’ என கூறினார். மேலும், ‘நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது பற்றி அதிமுக அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிக்கும்,’ என கூறினார்.

10:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சென்னை தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் தண்ணீர் அளவு குறைந்துவிட்டதால், மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவை பாதியாக குறைக்க மெட்ரோ வாட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

10:35:01 on 21 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகியுள்ளார். 4ஆவது முறையாக சம்மன் அனுப்பட்டதைத் தொடர்ந்து ஆஜராகியுள்ளார்.

10:22:17 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்திய கடல், வங்க கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 40-60 கி.மீ. வேகத்தில் கடல் காற்று சீற்றம் வீசுவதால் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

10:15:01 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தைப்பூசத் திருவிழாவையொட்டி, வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

09:56:01 on 21 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 85ஆவது முறையாக கண்ணாடி உடைந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் 17ஆவது நுழைவு வாயிலில் கண்ணாடி கதவு உடைந்து விபத்து நிகழ்ந்தது.

09:35:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

உலகின் அழகான நாய் என்கிற பெயரை பெற்றது ‘பூ’ என பெயரிடப்பட்ட பொமரேனியன் வகையைச் சேர்ந்த நாய். அமெரிக்காவை சேர்ந்த இந்த நாய் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்நிலையில், 12 வயதான ‘பூ’ தூங்கிக்கொண்டிருந்த போது இதயம் வெடித்து உயிரிழந்ததாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

09:15:01 on 21 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

சென்னை புளியந்தோப்பில் வாலிபர் விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையானவர் மீது ஏற்கனவே அடிதடி, வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

08:55:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினத் தந்தி

நாகை மாவட்டம் நாகூரில் நடைபெற்ற காற்றாடித் திருவிழா குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் உற்சாகத்தை அளித்தது. பட்டம் விடும் திருவிழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் இலவசமாக பட்டங்கள் வழங்கப்பட்டன.

08:35:02 on 21 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. விசைப்படகில் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இரும்புக்கம்பியைக் கொண்டு தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

08:15:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

18-01-2019 அன்று நிஃப்டி பெரிய மாற்றம் எதுவும் இன்றி முடிவடைந்திருந்தது. கேப் ஓப்பனிங் வந்தால் நிதானித்து சந்தை செட்டிலான பின்னரே டிரேடிங் செய்வது குறித்து சிந்திக்கலாம். ஷார்ட் சைட் மற்றும் ஓவர்நைட் பொசிஷன்களை இது போன்ற சூழ்நிலைகளில் முழுமையாகத் தவிர்க்கவேண்டும்.

07:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க விகடன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.73.85 ஆகவும், டீசல் விலை ரூ.69.41 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:40:02 on 21 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

'அரசியல் அமைப்பு சட்டப்பிரவு 371இன் படி, குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாகலாந்து மாநிலத்திற்கு பொருந்தாது,' என்று அம்மாநில முதலமைச்சர் நெய்பியூ ரியோ தெரிவித்துள்ளார்.

07:26:01 on 21 Jan

மேலும் வாசிக்க EENADU

ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், பார்வையாளர்கள் வருகைக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

07:11:01 on 21 Jan

மேலும் வாசிக்க தினகரன்

2.0 படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் வில்லனாக நடிக்க அக்‌ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அக்‌ஷய் இன்னமும் சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் படக்குழுவினர் தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

06:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

உலகறிந்த சிந்தனையாளரும், கல்வியாளருமான ஆனந்த் டெல்டும்ப்டே மீது பொய்வழக்கு போடப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும், அவரைக் கைது செய்வதற்கு மகாராஷ்டிர பாஜக அரசு மேற்கொண்டுள்ள முயற்சியைக் கைவிட வேண்டும் எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

06:41:01 on 21 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

தமிழகத்தை ஒட்டியுள்ள கேரளப்பகுதி கிராமத்தில் துப்பாக்கிகளுடன் நுழைந்த 4 மாவோயிஸ்டுகள் உணவு பொருட்களை வாங்கி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேடப்பட்டு வரும் 30 மாவோயிஸ்டுகளில் 13 பேர் கோவை மாவட்டத்தை அடுத்த தமிழக கேரள எல்லையோர வனப்பகுதியில் நடமாடி வருவதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

06:26:02 on 21 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது என்று AIMIM கட்சித் தலைவர் அசதுத்தீன் ஒவைசி தெரிவித்தார். காங்கிரசோ பாஜகவோ, இதுவரை மத்தியில் ஆட்சிக்கு வந்த எந்தவொரு கட்சியிடமும், காஷ்மீரில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்கான கொள்கையோ, தொலைநோக்குப் பார்வையோ இருக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

06:10:01 on 21 Jan

மேலும் வாசிக்க மாலைமுரசு

சபரிமலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நாடு முழுவதிலும் உள்ள கோவில்களின் தனிப்பட்ட வழிப்பாட்டு முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் சபரிமலை ஐயப்பன் கோவிலை வர்த்தக நோக்கத்தில் பயன்படுத்த திட்டம் தீட்டப்படுவதாகவும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

05:55:01 on 21 Jan

மேலும் வாசிக்க இந்தியன் எக்ஸ்பிரஸ்

நாடு முழுவதும் தாமரையை மலரச் செய்து காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க மோடி முழு வீச்சுடன் செயல்பட்டார். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா என்றால் பாஜக, பாஜக என்றால் மோடி. மொத்தத்தில் இந்தியா என்றால் தான்தான் என்பதை மறைமுக நோக்கமாக வைத்தார்.

05:40:02 on 21 Jan

மேலும் வாசிக்க EENADU

பொதுவாக குழந்தை பெற்ற பெண்கள் குளிர்ச்சியாக சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால் தாமரை தண்டு மட்டும் விதிவிலக்கு. இது குழந்தை பெற்ற பிறகு தாயின் வயிற்றில் தங்கிவிட்ட கசடுகளை வெளியேற்றுகின்றது. ஆகவே பச்சை தாமரைத் தண்டை மருந்து என்பார்கள்.

05:26:01 on 21 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கேரள முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான வைஷக் ராஜன், வெல்கம் டூ சென்ட்ரல் ஜெயில் உள்ளிட்ட பழங்களைத் தயாரித்துள்ளார். இந்நிலையில், கற்பழிப்பு வழக்கில் தன் மீது புகார் சுமத்திய நடிகை தன்னிடம் 6 கோடி பணம் கேட்டு பிளாக் மெயில் செய்த ஆடியோவை நீதிபதி முன்னிலையில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

05:10:01 on 21 Jan

மேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்

நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ள வேளாண் கடன் அளவைக் காட்டிலும் ரூ.1 லட்சம் கோடி கூடுதலாக உயர்த்தி ரூ.12 லட்சம் கோடியாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நடப்பாண்டைக் காட்டிலும் 10 விழுக்காடு உயர்வாகும்.

04:56:01 on 21 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆஸ்திரேலியாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கவகையில் டெஸ்ட், ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்தியஅணி அடுத்த சாதனை படைப்பதற்காக நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றுள்ளது. ஆக்லாந்து விமானநிலையத்தில் இந்திய அணியினர் இறங்கியதும், ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.

04:40:02 on 21 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டகள் நேபாளம் மற்றும் பூடான் செல்வதற்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேசமயம் மற்ற வயதினர், ஆதார் அட்டையை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது.

04:26:01 on 21 Jan

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

இலங்கையின் மன்னார் நகரில் தோண்டத் தோண்ட தமிழர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவம் நடத்திய வேட்டையில் கொல்லப்பட்ட மக்களின் எலும்புக் கூடுகள் இவை என்ற புகார் எழுந்தது.

04:10:01 on 21 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

திண்டுக்கல் மாவட்டம் ராமநாயக்கப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தன் மனைவி செல்வியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் தன் தாயார் வீட்டுக்கு செல்வி சென்றுள்ளார். மனைவியை அழைத்து வர செல்வம் சென்றபோது, மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அவர், கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

03:56:01 on 21 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7

சமூக வலைதளங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் சமூகவலைதள விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துவதால் மன அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படுவதாகவும் எச்சரித்தார்.

03:40:02 on 21 Jan

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில், 19 வயதான ஆகாஷ் யாதவ் என்பவர், மர அறுவை இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்ததை அடுத்து, தொழிற்சாலை உரிமையாளர் மீது தாய் புகாரளிக்க வந்தார். மகனின் மரணத்துக்கு நீதி கோரி இருகரம் கூப்பி கண்ணீர் மல்க கதறி அழுதார். ஆனால், காவல் அதிகாரி குடம்பா தேஜ் பிரகாஷ் சிங் அலட்டிக்கொள்ளாத தோரணையில் அமர்ந்திருந்தார்.

03:26:01 on 21 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

'தனியார் துறையைச் சேர்ந்த ஹெஸ்டிஎஃப்சி வங்கி மூன்றாம் காலாண்டில் ரூ.5,586 கோடி நிகர லாபம் எட்டியுள்ளது,' என அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

03:10:02 on 21 Jan

மேலும் வாசிக்க தினமணி

உயர் ரத்த அழுத்தம், சிறு ரத்த கட்டிகள், சதைகளின் சோர்வு இவையெல்லாம் மக்னீசியம் குறைபாட்டின் வெளிப்பாடாக இருக்கலாம். பருப்பு வகைகள், பசலை கீரை, அத்திப்பழம், வாழைப்பழம், வெண்டைக்காய்,
போன்றவை இயற்கை வழியில் மக்னீசியம் கிடைக்கும் வழிகள்.

02:56:01 on 21 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

மேலும் வாசிக்க