View in the JustOut app
X

ஷெரீன் பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே மிக தெளிவாக இருப்பவர். அவருக்கு என்ன தோன்றுகின்றதோ அதை தான் செய்வார். இந்நிலையில் இன்று கவின் ஒழுங்காக கேம் விளையாடமால் இருக்க, ஷெரீன் ‘கேம் விளையாட இஷ்டம் இல்லை என்றால் எதற்கு வருகிறீர்கள்?’ என கேட்டார்.

01:25:01 on 19 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வரும் நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் அட்டவணையை தயார் செய்து நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ததாக தகவல் வெளியானது.

12:57:01 on 19 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

அமெரிக்கா செல்வதற்காக பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அரசிடம், மத்திய அரசு அனுமதி கோரியிருந்தது. ஆனால், மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த அந்நாட்டு அரசு அதிரடியாக அனுமதி மறுத்துள்ளது.

12:27:02 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஒரு கொலை வழக்கின் மீதான சந்தேகத்தின் பேரில் மாசிலாமணியை (பார்த்திபன்) போலீஸ் கைது செய்கிறது. அவ்வப்போது தனக்குள்ளேயே பேசிக்கொண்டு, தன்னிலை மறக்கும் மாசிலாமணி, தொடர்பின்றி முன்பின் உரையாடுகிறார். போலீஸ் விசாரணையின்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் அதிர்ச்சிகரமான பதில்களே ஒத்த செருப்பு.

12:00:15 on 19 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் நட்டாலம் சிவின்குமார் என்பவர், “இந்தி மொழியை ஆதரித்து இந்திக்கு எதிராக வீதியில் எவன் வந்தாலும் அவனை வெட்டி வீழ்த்துவோம். இந்தி எங்கள் உயிரடா!”என்றும் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

11:30:12 on 19 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.28,632க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமிற்கு ரூ.21 குறைந்து ரூ.3,579க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 காசுகள் குறைந்து ரூ.49.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

10:55:01 on 19 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைக்க வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரிகள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் மட்டும் நான்கரை லட்சம் லாரிகள் ஈடுபட்டுள்ளன.

10:30:01 on 19 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பெஞ்சமின், ராஜலட்சுமி உள்ளிட்ட நால்வரை அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டு, தோப்பு வெங்கடாசலம், குமரகுரு உள்ளிட்டவர்களை அமைச்சராக்க எடப்பாடி முடிவெடுத்திருந்தாராம். அவர்களை நீக்கினால் அவர்களும், மேலும் சிலரும் தி.மு.க.விற்கு மாறிவிட்டால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என உளவுத்துறை கூறியதாக சொல்லப்படுகிறது.

09:59:51 on 19 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

புதுக்கோட்டை அருகே உள்ள ராஜாபகதூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த சிலர், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி அமைந்துள்ள இடத்தில் கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக அந்தப் பள்ளியையே இடிக்கச் சொல்லியுள்ளனர். அந்த இடத்தில்தான் கோயில் கட்ட வேண்டும் என்று கடவுளே தங்களிடம் கேட்டுக்கொண்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

09:27:01 on 19 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

தூத்துக்குடியில் மூன்றே மதங்களில் 19 கொலை சம்பவங்கள் நிகழ்ந்ததால் காவல்துறையினர் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியில் அடுத்தடுத்து கொலை சம்பவங்களில் ஈடுபட்ட கொலையாளிகள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் தப்பியபோது வழுக்கி விழுந்து கைகால் முறிந்ததால் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.

09:25:01 on 19 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஈரான் எண்ணெய் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல், நேரடி ராணுவ தாக்குதல் உள்பட வெவ்வேறு வகையான தாக்குதல்களுக்குரிய திட்டங்களை டிரம்பிடம் ராணுவ தலைவர்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு டிரம்ப் மறுத்துவிட்டதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

08:57:02 on 19 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

சென்னை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, அடையார், குரோம்பேட்டை, கோடம்பாக்கம், அண்ணாநகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.

08:27:01 on 19 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்களின் எண்ணிக்கையைக் குறைத்து பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த வகுப்புகளுக்கு 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களுக்கு மட்டுமே இனி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 19 Sep

மேலும் வாசிக்க தினமணி

சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் சீதாலெட்சுமி அறிவித்துள்ளார். அதேபோன்று திருவள்ளூரிலும் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என ஆட்சியர் மகேஷ்வரி அறிவித்துள்ளார். விடிய விடிய மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:41:37 on 19 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.56 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.77 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:38:00 on 19 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

பாஜகவினரோடு நெருக்கமாக இருப்பவர்களுடனும் நெருக்கத்தை ரவீந்திரநாத் ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் போன்லெஸ் பீஸ் என்கிற வார்த்தை சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அது குறித்து என்ன என்று பார்த்த போது ரவீந்திரநாத்தை அப்படி கூறி திமுகவினர் மட்டும் அல்லாமல் பலரும் அழைத்து வருவது தெரியவந்துள்ளது.

06:55:01 on 19 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

ஜப்பானில் நாட்டையே உலுக்கிய 5 வயது சிறுமி உயிரிழந்த வழக்கில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி தாய்க்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வளர்ப்புத் தந்தை மீதான வழக்கு அக்டோபர் 1ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

05:55:02 on 19 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள் தொடர்பான ஆய்வில் பல வகையான கேள்விகள் பெண்களின் முன் வைக்கப்பட்டுள்ளது. 5,000 பெண்கள் இதில் பங்கேற்றுள்ள நிலையில் 55% பேர் பணியிடங்களில் நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து புகாரளிப்பதால் தன்னுடைய வாழ்க்கைப் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

04:55:02 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

இந்தியாவில் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்களிலேயே அதிக பேட்டரி திறனை பெற்ற ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையிலான ஸ்மார்ட் போன்களில் Galaxy M30s போனே அதிக திறன்மிக்க பேட்டரியை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

03:55:02 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இரவு தூங்குவதற்கு முன் முகத்தை வெந்நீரில் ஆவி பிடிக்க வேண்டும். பின்பு ஆமணக்கு எண்ணெய்யை மீசை மற்றும் தாடி வளரும் இடத்தில் தடவிட்டு உறங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் உங்கள் முகத்தில் கருகருவென மீசையும், தாடியும் வளர தொடங்கிவிடும். கருஞ்சீரக எண்ணெய்யையும் நீங்கள் முகத்தில் தேய்க்க பயன்படுத்தலாம்.

02:55:01 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள சமையலர், கார்பெண்டர், சுகாதாரப் பணியாளர், பிளம்பர், பெயின்டர் போன்ற 900க்கும் மேற்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

01:55:01 on 19 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த வருடம் சுமார் 5000 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. திருப்பூரில் தற்போது ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு விற்பனை என்பது சுமார் 60% அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள்.

12:55:02 on 19 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்தியருக்கு ஏற்படும் பாதிப்பை பொறுத்தவரை, எண்ணெய் உற்பத்தி எத்தனை நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து அமையும். ஆலையில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய சில நாட்கள் ஆகும் என்று சவுதி தெரிவித்துள்ளது. அதிக நாட்கள் ஆக ஆக எண்ணெய் விலை உயரும் என்பதால் மேலதிக பாதிப்புகள் ஏற்படும்.

11:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

சென்னை பீச் ஸ்டேஷனில், சுமார் 20 மாணவர்கள் கைகளில் கத்தியுடன் நேருக்கு நேராக மோதிக்கொள்ள, இதனைப் பார்த்த பயணிகள் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். தகவல் அறிந்து ரெயில்வே காவல்துறையினர் வரும்போது மாணவர்கள் தப்பித்து ஓடியுள்ளனர்.

10:57:01 on 18 Sep

மேலும் வாசிக்க Behind Woods News

சுஜா வருணித்தாவின் கணவர் சிவகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், முகென் ஒரு கறுப்புக் குதிரை என்றும் அவர் அமைதியாக பிக்பாஸ் டைட்டிலை கொத்திக் கொண்டு போகப் போகிறார் என்றும் என் இதயம் சொல்கிறது என்று பதிவு செய்துள்ளார்.

09:57:02 on 18 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

பிகில் படத்தில் விஜய்க்கு நாயகியாக மாளவிகா மோகனன் இணைந்திருக்கிறார். இவர் பேட்ட படத்தில் சசிகுமாரின் மனைவியாக நடித்தவர். 2013ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போலே படத்தின் மூலம் அறிமுகமான இவர் இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் பிஹைண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச கவனம் பெற்றார்.

08:57:01 on 18 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

மத்தியப்பிரதேசத்தின் ரஹ்லி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி ஷ்யாம் லால் யாதவ் (74) அவருக்கு 2014ஆம் ஆண்டு தலையில் அடிபட்டது. அதன் பின் நகம் போன்ற ஒன்று தலையில் முளைக்கத் தொடங்கியது. ஒவ்வொரு முறை சிகையலங்காரக் கலைஞரிடம் செல்லும் போது அதை நறுக்கிவிடுவது வழக்கம். ஆனால், அது மீண்டும் மீண்டும் முளைத்துக் கொண்டே சென்றது.

08:25:01 on 18 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

இனிப்பும், கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை. எல்லோரது வாழ்க்கையிலும் கசப்பான இன்னொரு பக்கம் இருக்கத்தான் செய்யும். அது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது. பெரும்பாலான பெண்கள், ‘திருமணத்திற்கு முந்தைய தங்களது கசப்பான அனுபவங்களை, திருமணத்திற்கு பின்பு கணவரிடம் சொல்லலாமா? கூடாதா?’ என்று குழப்பம் அடைகிறார்கள்.

07:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

”நேரு ஒரு பெண் பித்தர். அவர் பிரிட்டிஷாருடன் இணைந்து நாட்டை துண்டாக்கியவர். அவரது குடும்பமே இச்சையை விரும்பக் கூடியது. அதனால் தான் ராஜிவ், இத்தாலியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார்” என உ.பி.யைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ.வான விக்ரம் சைனி பேசியுள்ளது, புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

07:30:20 on 18 Sep

மேலும் வாசிக்க தினமலர்

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைப் பற்றி தரக்குறைவாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருந்தார். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை மருத்துவர்களிடம் காங்கிரஸ் கட்சியினர், ராஜேந்திர பாலாஜிக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சிகிச்சையளிக்கும்படியும் மனு அளிக்கச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

06:57:01 on 18 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் வடமாவட்ட துறைமுகங்களில் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

06:29:46 on 18 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

”தேனி மருத்துவக் கல்லூரியில் சென்னையை சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து சேர்நததாக புகார் வந்துள்ளது. வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்ட 2 புகைப்படங்களை புகார்தாரர் தந்துள்ளார்” என்று மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.

06:07:23 on 18 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பாஜக எப்போது பிரச்சினைகளில் சிக்குகிறதோ அப்போது மட்டும் பேட்டி அளிக்கிறார் என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விமர்சித்துள்ளார். மேலும் அவர், ”பேனர் விவகாரத்தில் ரஜினி கருத்து சொன்னாரா? ஏன் அதுகுறித்து அவர் வாய் திறக்கவில்லை? தமிழக மக்களுக்குத் தேவையான செய்திகளுக்கு அவர் வாய் திறக்க மாட்டார்.” என்றார்.

05:57:01 on 18 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

ரயில்வே தொழிலார்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த முடிவால் ரயில்வே தொழிலாளர்கள் 11.52 லட்சம் பேர் பயனடைவார்கள் என அமைச்சரவை அறிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

05:27:01 on 18 Sep

மேலும் வாசிக்க தினகரன்

தேனி மாவட்டம், கானாவிலக்கில் உள்ளது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. இக்கல்லூரியில் இந்தக் கல்வியாண்டில் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மாணவன் விசாரணை வளையத்திற்குள் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

05:00:10 on 18 Sep

மேலும் வாசிக்க விகடன்

1884 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜா உடையாரின் அம்பா விலாஸ் அரண்மனையில் தான் முதல் முதலில் மைசூர் பாகு தயாரிக்கப்பட்டது. இனிப்புப் பாகில் செய்யப்பட்ட பண்டம் என்பதாலும், மைசூரில் செய்யப்பட்டது என்பதாலும், இரண்டையும் சேர்த்து மைசூர் பாகு என்று கூறப்படுகிறது.

04:33:17 on 18 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

பா.ஜ.க மூத்த தலைவரும் சித்ரதுர்கா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நாராயணசாமி, இரு தினங்களுக்கு முன்னர், மத்திய அரசின் திட்டத்தின் கீழ் வீடற்றவர்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக தும்கூர் மாவட்டத்திலுள்ள கோலாரஹட்டி கிராமத்துக்குச் சென்றுள்ளார். அவர் தலித் என்பதால் கிராமத்திற்குள் அவரை அனுமதிக்கவில்லை.

04:00:10 on 18 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

தற்போது அரசு அறிவித்துள்ள ஆன்லைன் டிக்கெட்டிங் ஒருங்கிணைப்பு மூலம், ஒரு படத்தின் உண்மையான வசூல் என்ன, அதில் லாபம் எவ்வளவு என்பது தயாரிப்பாளர்களுக்கு ஒவ்வொரு காட்சிக்குமே வெளிப்படையாகத் தெரிந்துவிடும். அதேபோல ஒரு நடிகருக்கான ஓபனிங் என்ன, இயக்குநருக்கான ஓபனிங் என்ன என்பது துல்லியமாக வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

03:30:03 on 18 Sep

மேலும் வாசிக்க தினமணி

பெரியார் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களின் மத நம்பிக்கையையும் ஜாதிப் பழக்கவழக்கங்களையும் தூற்றினார். அவர்களை முட்டாள்கள் என்றார். அவர்களின் கடவுள்களை செருப்பால் அடிக்கப்போவதாகச் சொன்னார். காந்தி, தேசிய இயக்கத்தைக் கட்டியெழுப்ப விரும்பினார். பெரியாருக்கு திராவிட தென்னிந்தியா போதுமானதாக இருந்தது.

03:00:11 on 18 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

ராஜபாளையத்தை அடுத்துள்ள சுந்தர்ராஜபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் மாடசாமியை 4 ஆண்டுகளுக்கு முன் மணந்தார் ஸ்டெல்லா மேரி, பொறியியல் படித்திருந்தாலும், சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார் மாடசாமி. ‘படித்துவிட்டு விவசாயம் பார்க்கிறாரே!’ என்ற கோபத்தில் ஸ்டெல்லா மேரி தற்கொலை செய்துகொண்டார்.

02:25:01 on 18 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

மீண்டும் 2ஜி வழக்கை முதலில் இருந்து விசாரிக்குமாறு அனைத்து 2ஜி தொடர்பான வழக்குகளையும் விசாரிக்கவுள்ள நீதிபதி அஜய்குமார் குஹாரிடம் சிபிஐ கோரிக்கை வைக்கக் கூடும் என்று டெல்லி உயர் வட்டாரத்தில் வலுவான பேச்சிருக்கிறது.

02:00:06 on 18 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கோவையில் ரவுடி சுந்தர்ராஜன் என்பவருடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற அவரது கூட்டாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அனைவரும் காவல் நிலையத்தில் உள்ள லாக் அப்பில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது தனது கூட்டாளிகளிடம் சுந்தர்ராஜன் பேசிய பேச்சுத்தான் அவர் கொலை செய்ததை அம்பலப்படுத்திவிட்டது.

01:27:01 on 18 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

இந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். மேலும் பொதுவான மொழி இருந்தால் தான் நாடு முன்னேற்றம் அடையும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

01:00:15 on 18 Sep

மேலும் வாசிக்க தினகரன்

ஒருவர் உடற்பயிற்சியில் ஈடுபடும்போது, அவருடைய மனம் நேர்விதமாகச் சிந்திக்கிறது, அவர் தினசரிவாழ்க்கையின் கவலைகள் மற்றும் அழுத்தங்களை மறந்துவிடுகிறார். குறிப்பாக, வெளியே சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஒரு ஜாலியான விஷயம்; இதனால் பிறருடன் சமூகரீதியில் பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது, இது ஒருவருடைய மனோநிலையை மேம்படுத்துகிறது.

12:29:43 on 18 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

பிக்பாஸ் சீசன் 3 விரைவில் 100வது நாளை எட்டவுள்ளது. இறுதி நாட்கள் மிக அருகில் வந்துவிட்டன. வெற்றியாளரை மக்களின் ஓட்டுகள் தான் தீர்மானிக்கும் என்றாலும் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு அவர்களின் பொறுமையை சோதிக்கும் வகையில் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது.

11:55:02 on 18 Sep

மேலும் வாசிக்க சினி உலகம்

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.28,888க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3611க்கும், சவரன் ரூ.28,888க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

11:32:25 on 18 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

அரசுப் பள்ளிகளில் விளையாட்டு, திறன் மேம்பாடு, கற்றலை மேம்படுத்தும் பணிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி என பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் தாமதம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

11:30:13 on 18 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

அயோத்தி வழக்கை விசாரித்து வரும் அரசியல் சாசன அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் இடம் பெற்றுள்ள நிலையில் அவர் நவம்பர் 7ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். தமது காலத்திற்குள் தீர்ப்பை வெளியிட வேண்டும் என்று ரஞ்சன் கோகய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

11:00:04 on 18 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஆம்பூரைச் சேர்ந்த நீலம்பாரி, புதுப்பாளையத்தைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த காதல் ஜோடி, போளுர் சப்தகிரி மலை மீது ஏறி, அதன் உச்சியிலிருந்த குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர்.

10:25:01 on 18 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே இரவில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் காரை மறித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரசம் பேசிய பின் அமைச்சரின் கார் விடுவிக்கப்பட்டு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கன்னியாகுமரி தோவாளை சென்றார்.

10:00:04 on 18 Sep

மேலும் வாசிக்க தினமலர்

”சவுதி எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது. ஆனால் நாங்கள் அதற்கு பலியாக மாட்டோம். இனி எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை கிடையாது” என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

09:27:01 on 18 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

ஒடிஸா மாநிலம், பாலாசோர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மூலம் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அஸ்திரா ஏவுகணை, நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.

08:55:02 on 18 Sep

மேலும் வாசிக்க தினமணி

"முன்பெல்லாம் ஒரு நபர் தனது குடும்பத்தைவிட்டு பிரிந்ததும் துறவியாக மாறி ஆன்மிக பாதைக்கு திரும்புவார். ஆனால் இப்போது மக்கள் காவி அங்கி அணிந்துகொண்டு போலி மருந்து விற்கிறார்கள். காவி அங்கிகளில் கற்பழிப்புகள் நடக்கிறது. கோவில்களில் கற்பழிப்புகள் நடக்கிறது. இதுதான் நமது மதமா?" என திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

08:27:02 on 18 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 2 லாரிகளில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெசல் கிராமத்தில் வாகன சோதனையின் போது 25,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சரக்கு வாகனத்தில் 500 கேன்களில் எரிசாராயத்தை கடத்திய ஓட்டுநர் உட்பட 4 பேர் தப்பியோடியுள்ளனர்.

07:57:01 on 18 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.26 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.57 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:38:51 on 18 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஐஸ் கட்டிகள் உடல் வலியை நீக்க சிறந்த நிவாரணி. குறிப்பாக முதுகு வலி, முட்டி வலி என உடலில் எந்த இடத்தில் வலி ஏற்பட்டிருந்தாலும் ஐஸ் கட்டிகளால் மசாஜ் செய்ய பறந்து போகும். ஐஸ் மசாஜ் செய்ய வீட்டில் ஃபிரிஜ்ஜில் வைக்கக் கூடிய ஐஸ் கட்டிகளே போதுமானது.

05:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக், புதுவிதமான உணவுக் கட்டுப்பாட்டை பாகிஸ்தான் வீரர்களுக்கு விதித்துள்ளார். அதன்படி, அவர்கள் பிரியாணி, எண்ணெய் அதிகமாக இருக்கும் உணவுப்பொருட்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகள் உட்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

04:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சோனியும் - டிஸ்னியும் இணைந்து புதிய ஒப்பந்தம் போடத் தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தில் டிஸ்னி எதிர்பார்த்த 50 சதவிகித ஷேர் கிடைக்கவில்லை என்றாலும் 30 சதவீதம் கிடைத்துள்ளதால் இந்த ஒப்பந்தம் கைகூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

03:55:02 on 18 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

அதிகப்படியான சர்க்கரை பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற முதன்மை ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கிறது. எனவே அளவான அளவிலான சர்கரையை மட்டும் பயன்படுத்துங்கள்.

02:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

கர்நாடகாவில், வடகனரா மாவட்டம், கார்வாரில் இயங்கி வருகிறது எம்.இ.எஸ். சைத்தன்யா கல்லூரி, இக்கல்லூரியின் முதல்வராக இருப்பவர் ஆர்.எம். பட். இவர் மிகவும் கண்டிப்பானவர் என கூறப்படுகிறது. இவர் மாணவர்கள் கல்லூரிக்கு செல்போன் கொண்டு வர முற்றிலுமாக தடை விதித்துள்ளார்.

01:55:02 on 18 Sep

மேலும் வாசிக்க Behind Woods News

அரைத்த பீட்ரூட் விழுது மற்றும் கடைகளில் இயற்கையான முறையில் கிடைக்ககூடிய மருதாணி பவூடர், இரண்டையும் ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும் பின்னர் அதனை தங்களது தலைமுடியில் தேவைபட்ட இடத்தில் அப்ளை செய்த பின், 20 நிமிடம் கழித்து பார்த்தால் இயற்கை முறையில் ஹேர் கலர் கிடைத்திற்கும்.

12:55:01 on 18 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

”சிஸ்டம் மாறவேண்டும் என்று ரஜினி சார் சொல்லிக்கொண்டு வருகிறார். உங்கள் படம் மூலமாக சிஸ்டத்தை மாற்ற முயற்சி செய்யவேண்டும். இதுபோல அனைத்து பெரிய நடிகர்களும் தங்கள் படங்களுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்று கூறவேண்டும்” என ரஜினிக்கு நடிகர் ஆரி கோரிக்கை விடுத்துள்ளார்.

11:55:01 on 17 Sep

மேலும் வாசிக்க தினமணி

நடிகை யாஷிகா ஆனந்த் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தில் பேசியுள்ளார். ”என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என கூறியுள்ளார்.

10:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, “ ரஷ்யாவின் விளாடிவோஸ்தக் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த போது, ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து அவர் என்னிடம் எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.

09:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

டெல்லியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்துள்ளது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. நம்மால், நம்முடைய இலக்கை எட்ட முடியுமா? அவர்கள் அவநம்பிக்கையடைந்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.

08:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நெல்லை மாவட்டம் ஏர்வாடி எல்.என்.எஸ் புரத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் அதே ஊரைச்சேர்ந்த ரோஷன் பானுவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பிடித்து ரோஷன் பானுவுடன் தகாத உறவு வைத்திருப்பதாக கூறி அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

08:27:01 on 17 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது தென்கரை கிளை நூலகம். இங்கு அமைதியான முறையில் நடக்க இருந்த பெரியார், அண்ணா பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே விவாதப்பொருளாக மாறியுள்ளது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக இதே இடத்தில் விழா நடந்து வந்துள்ளது.

07:57:02 on 17 Sep

மேலும் வாசிக்க விகடன்

ஹவுத்தி ராணுவ செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், "எங்களது நீண்ட கைகள் நாங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என சவுதி அரசுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம்" எனக் கூறியுள்ளது. ஏமனின் கிளர்ச்சியாளர்களின் இந்த மிரட்டலால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

07:27:01 on 17 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆர்.டி.ஜி.எஸ். மூலம் ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட தொகையை ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் மூலமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செய்ய முடியும். தற்போது ரிசர்வ் வங்கி என்.இ.எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். முறையிலும் ஆன்லைனில் 24 மணி நேரமும் பண பரிவர்த்தனை செய்யலாம் என்று அறிவித்துள்ளது.

06:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 10,11,12ஆம் வகுப்புகளுக்கான வினாத் தாள்கள் சேர் ஷாட் செயலி மூலம் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் பள்ளி மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

06:27:01 on 17 Sep

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வரும் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கானி கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

05:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பிக்பாஸ் முடிவை எட்டி வருகிறது, இதனால் போட்டிகளும் கடுமையாகி வருகிறது.
இத்தனை நாள் காதல், சண்டை என பார்த்து வந்த நாம் இப்போது தான் பிக்பாஸ் டாஸ்க் கொடுக்கிறார். இப்போது போட்டியாளர்களுக்கு ஒரே காலில் நின்றபடி டாஸ்க் கொடுக்கிறார். இதில் லாஸ்லியா திணறுகிறார்.

05:25:01 on 17 Sep

மேலும் வாசிக்க சினி உலகம்

ராஜஸ்தான் அரசியலில் மகிப்பெரிய திருப்பமாக, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏக்கள் 6 பேரும் ஒட்டுமொத்தாக தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டனர். 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் அந்த கட்சியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது.

04:59:52 on 17 Sep

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ஒரு குட்டி பாம்பை நான்கு பூனைகள் சேர்ந்து சுற்றி வளைத்து அதனைத் தப்பிக்க முடியாமல் தடுக்கின்றன. இதனால் கடுப்பான பாம்பு படமெடுக்க பூனை ஒன்று ஓங்கி பாம்பை அறைகிறது.

04:25:02 on 17 Sep

மேலும் வாசிக்க Behind Woods News

திருப்பூரில் பல்லடம் சாலை, RVE லேஅவுட் போன்ற பகுதிகளில் உள்ள 7 வீடுகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிசை தொழில் போன்று வீடுகளில் போலியாக நெய் தயாரிக்கப்பட்டு வந்ததது தெரிய வந்தது.

04:00:12 on 17 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

ஈரோட்டைச் சோந்த இளம்பெண் ஒருவா் உடல் எடையைக் குறைக்க போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றதில் உயிரிழந்த சம்பவம் சா்ச்சைகளை எழுப்பியது. இதைத் தவிர, நூற்றுக்கணக்கானோர் இதுபோன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நம்பி உடல் நலிவுற்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

03:30:17 on 17 Sep

மேலும் வாசிக்க தினமணி

திண்டுக்கல் மாவட்டம் உள்ள நத்தம் தொகுதியில் இருக்கும் செந்துறை பகுதியில், போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினருடன் சென்ற எஸ்ஐ மாதவராஜா, தனது கைத் துப்பாக்கியை செல்வகுமரன் என்பவரது தலையில் தாக்கி மிரட்டியதாகவும் அதன்பின் செல்வகுமரனை போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றதாகவும் தெரிகிறது.

03:00:03 on 17 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். தற்போது காஜல் அகர்வாலின் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. அவர் துளிகூட மேக்கப் இல்லாமல் விமான நிலையம் வந்த புகைப்படம் தான் அது.

02:29:59 on 17 Sep

மேலும் வாசிக்க சினி உலகம்

1990களிலேயே உலகம் முழுவதும் பூச்சிக்கொல்லி மருந்துகளை உண்டு தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்ட போதிலும், ஆசிய கண்டத்திலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய ஊரகப் பகுதிகளில் இதன் பயன்பாடு இன்னும் குறைந்தபாடில்லை.

02:00:12 on 17 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

‘செருப்பு உங்கள் மீது பட்டும் கோபம் வரவில்லையே ஏன்?’ என்று பெரியாரிடம் கேட்க, அதற்கு அவர் ‘படித்தவனாக இருந்தால் கூட்டத்தில் மறுத்துப் பேசுவான்; அல்லது செய்தித்தாளில் மறுப்பு தெரிவிப்பான். இவன் படிக்காத முட்டாள். இவன் தன் எதிர்ப்பைச் செருப்பு மூலம் காட்டினான். இதில் கோபப்படுவதற்கு என்ன இருக்கின்றது?’ என்றார்.

01:27:01 on 17 Sep

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

பிரதமர் மோடி தனது 69வது பிறந்தாள் கொண்டாடி வரும் அதே வேளையில் இன்று பெரியாரி 141வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ட்விட்டர் பக்கத்தில் #HBDPERIYAR141 ஹேஸ்டாக் முதலிடத்திலும், #HappyBdayPMModi ஹேஸ்டாக் இரண்டாம் இடத்திலும், #FatherOfTamilNation என்கிற பெரியாரின் ஹேஸ்டாக் மூன்றாமிடத்திலும் உள்ளது.

12:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க ஏசியா நெட் செய்திகள்

நடிகர்கள் அரசியல் பேசுவதும், அரசியலுக்கு வருவதும் நாடுமுழுக்க நடக்கும் நிகழ்வுதான். ஆனால், கொள்கைப் பிடிப்போடு தமிழ்ச் சமூகத்திற்காக உழைத்த பெரியார் பற்றியும் அவரது கொள்கை பற்றியும் பொதுவெளியில் நடிகர்கள் பேசுவது தமிழகத்தில் மட்டுமே காண முடிந்த ஒன்று.

12:29:59 on 17 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சூப்பர் டூப்பர் படத்தில் இருந்து ஸ்னீக் பீக் விடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவிலும் நடிகை இந்துஜா கவர்ச்சியாக நடித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஏன் இப்படி நடிக்கிறீர்கள் என்று இந்துஜாவை கேள்வி கேட்டு வருகின்றனர்.

11:55:02 on 17 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

சாதி, மதத்தை புறந்தள்ளி மானமும் அறிவும் உள்ள சுயமரியாதைக்காரனாக மனிதர்கள் வாழ வேண்டும் என்று வீதியெங்கும் பேசியவர் பெரியார். இன்று தமிழ்நாட்டு மக்கள் அனுபவிக்கும் இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த பேராசான் அவரே. தமிழ்நாடே இன்று கல்வியின் முன்னோடியாகத் திகழ மூல காரணமாக இருந்ததால்தான் அவர் இன்றும் போற்றப்படுகிறார்.

11:30:21 on 17 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதனால், வங்கி பணிகள் அனைத்தும் பாதிக்கப்படும். வரும் 28ஆம் தேதி, நான்காவது சனிக்கிழமை, 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே, தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவையை பயன்படுத்த முடியாது.

10:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க தினமலர்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள விரதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முதியவர் மலைச்சாமி. இவர் பி.வி‌.சிந்துவின் புகைப்படத்துடன் கூடிய மனுவுடன் மாவட்ட ஆட்சியர் அலு‌லகத்துக்கு வந்தார். அப்போது, தமக்கு 16 வயதே ஆவதாகவும், நாட்டில் உள்ள தீமைகளை அழிப்பதற்காக முதியவர் அவதாரம் எடுத்துள்ளதாகவும் கூறினார்.

10:27:01 on 17 Sep

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ராமசாமி நாயக்கர் இந்தியாவில் பிராமண எதிர்ப்புச் செயல்பாட்டாளராகவும் பகுத்தறிவுவாதியாகவும் சமரசங்களற்ற கடுமையான பேச்சாளராகவும் அறியப்பட்டவர். 1920களின் மத்தியில் சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிய ராமசாமி நாயக்கரை அவருடைய தொண்டர்கள் மகத்தான மனிதன் என்ற பொருள்படும் 'பெரியார்' என்ற சொல்லால் அழைத்தனர்.

10:00:24 on 17 Sep

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

காங்கிரஸ் ஆளும் மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் எழுந்து, நான் புதிய ஸ்கீம் கொண்டுவரப் போகிறேன் என்று ஒரு திட்டத்தின் பெயரைச் சொன்னதும் கோபமான சோனியா, ‘மிஸ்டர் நீங்கள் சொல்லும் ஸ்கீம் புதியது அல்ல, உங்கள் மாநிலத்தில் 12 வருடத்திற்கு முன்பே நான் தொடங்கிவைத்த ஸ்கீம்’ என்று மூக்கை உடைத்துள்ளார்.

09:35:05 on 17 Sep

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி கிடங்குகள் மீது ஏமன் ஹவுதி படையினர் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதன் விளைவாக பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாக சந்தை நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

09:27:01 on 17 Sep

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரை சேர்ந்தவர் உல்ரிச் கிளோபர். டாக்டரான இவர் கருக்கலைப்பு மருத்துவமனையை நடத்தி வந்தநிலையில், உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு சொந்தமான ஒரு வீட்டில் 2,246 கருக்கள் பதப்படுத்தப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

08:55:02 on 17 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

பிரதமர் மோடி இன்று தனது 69வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிரதமர் மோடியின் பிறந்த நாளை, கடந்த 14ஆம் தேதி முதல் சேவை வாரமாக கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவின் மூத்த தலைவர்களும் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

08:25:02 on 17 Sep

மேலும் வாசிக்க தினத்தந்தி

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் சில இடங்களில் இன்று முதல் செப்டம்பர் 20-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

07:57:01 on 17 Sep

மேலும் வாசிக்க தினமணி

கோவை ரத்தினபுரி செக்கான் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (53). கூலி தொழிலாளி. அதிக போதையில் இருந்த இவர் ரத்தினபுரி ரயில் பாதையை கடந்து வீட்டிற்கு செல்ல முயன்றார். அந்த நேரத்தில் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி வந்த ரயிலை கையை ஆட்டி நிறுத்த முயன்றார். அதிர்ச்சியடைந்த டிரைவர், ஹாரன் அடித்து எச்சரித்தார்.

07:25:02 on 17 Sep

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.99ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.31ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:06:39 on 17 Sep

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

உலகின் மிக பயங்கரமான ரோலர் ஹோஸ்டர் விரைவில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் திறக்கப்பட உள்ளது. தரையிலிருந்து 206 அடி உயரம் வரை அமையும் இதில் பயணம் செய்யும் இருக்கைகள் மணிக்கு 76 கி.மீ. வேகத்தில் செல்லும். 4,075 அடியில் மூன்று தலைகீழ் பாதைகளை கொண்ட இருப்பு பாதைகளின் நீளம் 92 டிகிரி சாய்வில் அமைய உள்ளது.

05:55:02 on 17 Sep

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ.

“ரசிகர்கள் என் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அதை ஏற்று கொள்கிறேன். வெளியிடங்களில் அவர்கள் அன்பு அதிகமாகும்போது, சிக்கலாகி விடுகிறது. சினிமா நட்சத்திரங்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. ’நோமீன்ஸ் நோ’ என்பது ரசிகர்களுக்கு இன்னும் புரியவில்லை.” என நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.

04:55:01 on 17 Sep

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

அகமதாபாத்தை சேர்ந்த ஏஜெண்ட் மோசஸ் என்பவர் ஒரு நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில், 426 டிக்கெட்டுகளை பதிவு செய்து இருக்கிறார். இந்த டிக்கெட்டுகளின் மொத்த மதிப்பு சுமார் 11.70 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைமறைவாகி விட்ட மோசஸை போலீசார் தேடிவருகின்றனர்.

03:55:01 on 17 Sep

மேலும் வாசிக்க நக்கீரன்

கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும். செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்கும்.

02:55:01 on 17 Sep

மேலும் வாசிக்க மாலைமலர்

டாப் போன்கள் வரிசையில் ஜியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரியல்மி 3 ப்ரோ ஆகிய போன்கள் முதல் இரண்டு இடங்களை முறையே பிடித்துள்ளன. மேலும், ஆன்லைன் டெலிவரியிலும் ஜியோமி அதிவிரைவாக செயல்படுவதும் கூடுதல் சிறப்பாகக் கருதப்படுகிறது.

01:55:01 on 17 Sep

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜென்னா தனது ஃபேஸ்புக்கில், ``நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது, நிச்சயதார்த்த மோதிரத்தை விழுங்கிவிட்டேன். மோதிரத்தை விழுங்குகிறேன் என்பது எனக்குத் தெரிந்தது. ஆனால், அது கனவு என்று நினைத்துவிட்டு, மீண்டும் தூங்கிவிட்டேன்.” என பதிவிட்டிருந்தார்.

12:55:02 on 17 Sep

மேலும் வாசிக்க விகடன்

மேலும் வாசிக்க