View in the JustOut app
X

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ’மத்தியில் பாஜகவுக்கு இடங்கள் கூடுமே தவிர குறையாது. தமிழகத்தில் கருத்துகணிப்பு பாஜகவுக்கு சாதகமாக இல்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சாதகமாகும். கருத்துக்கணிப்பை வைத்து முதலில் அரசியல் செய்வதே திமுக தான்’ என்று கூறியுள்ளார்.

08:14:25 on 20 May

மேலும் வாசிக்க தின மலர்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மக்களிடம் தமிழில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ‘உங்களுக்கு என்மீது வருத்தம் இருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்வை மேம்படுத்த ஜனாதிபதியாக நான் செய்த சேவை உங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று கூறியுள்ளார்.

08:10:01 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ஸ்ரீவில்லிப்புத்தூர் குறவன் கோட்டை பகுதியில் வட்டக் கற்களும், முதுமக்கள் தாழியும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில் அதே பகுதியில் புலி குத்தி வீரனின் நடுகல்லும் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் தொல்லியல் துறை சீரமைத்துப் பாதுகாக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

07:55:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நாளை காலை 11 மணிக்கு சென்னை ராஜாஜிபவன் சிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆதாரங்களுடன் ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

07:41:01 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

’மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முகவர்கள், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மையங்களில் இருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்காக மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் முறைப்படி அமைந்துள்ளனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

07:25:01 on 20 May

மேலும் வாசிக்க நக்கீரன்

ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சேலம், ராமநாதபுரம், சிதம்பரம் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

07:12:32 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

ஓசூர் அடுத்த அருளாளன் பகுதியில் தேனீக்கள் கொட்டியத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 60க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

07:10:01 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை இரவு டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்ப்ட்டுள்ளது.

06:58:38 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2019 ஜனவரி 1ஆம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

06:54:12 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சிஎஸ்கே அணியில் உங்களுக்குப் பிடித்த வீரர் யார் என நடிகர் சூர்யாவிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சூர்யா, ’ஹாய் மாப்ளே...’ என்று ஆரம்பித்து மகேந்திர சிங் தோனி தான் எனக்குப் பிடிக்கும்’ என்று கூறியுள்ளார்.

06:23:50 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

’கருத்துக்கணிப்பு முடிவுகள் இதற்கு முன் தவறாகவே அமைந்துள்ளன. 2004-ஐ எடுத்துக் கொள்வோம். அப்போது பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வெளியாகின. ஆனால், உண்மையில் நடந்து என்ன. எனவேதான் 23ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

06:11:16 on 20 May

மேலும் வாசிக்க விகடன்

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `கொலையுதிர் காலம்' படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் வருகிற ஜூன் 14ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது.

06:10:01 on 20 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் என்றும், மக்கள் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பாதுகாப்பாக பயணிக்குமாறும், பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

06:07:00 on 20 May

மேலும் வாசிக்க தின மலர்

தற்போது இந்திய அணிக்கு கேப்டனாக உள்ள விராட் கோலி அனைத்து சமூக வலைதளங்களிலும் தற்போது 100 மில்லியன் ஃபாலோவர்கள் என்ற கோட்டை எட்டியுள்ளார். இதன்மூலம், சமூக வலைதளங்களில் 100 மில்லியன் ஃபாலோவர்களைப் பெற்ற கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி.

05:49:53 on 20 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

கள்ளக்குறிச்சியில் 106 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவித்து வருகின்றனர். அதேபோல் தருமபுரியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் வாட்டியதால் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் திருவண்ணாமலையில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.

05:42:43 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

சேலம் மாவட்டம் வாழப்பாடி வனச்சரகத்திற்குட்பட்ட குறிச்சி பிரிவில் மிதிக்குட்டை காப்புகாட்டில் வாழப்பாடி சரக பணியாளர்கள் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு சட்டவிரோதமாக இயங்கிவந்த துப்பாக்கி தொழிற்சாலை இருந்ததைக் கண்டறிந்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

05:40:01 on 20 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ’மோடியின் தியானத்திற்கு சக்தி அளிக்கவும் தான் இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

05:25:17 on 20 May

மேலும் வாசிக்க காமதேனு

மைசூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, அரசியல் நையாண்டி என்ற பெயரில் அரசியல் தலைவர்களை இழிவுப்படுத்தவதால், செய்தி ஊடகங்களை ஒழுங்குமுறைப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

05:18:36 on 20 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்


’கடந்த 20-30 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் வரலாற்றைப் பாருங்கள், எப்போதும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்தான். கடந்த 5-7 ஆண்டுகளாகத்தான் விஷயங்கள் மாறத் தொடங்கின, நாங்களும் ஒரு அணியாகத் திரண்டு பந்து வீசுகிறோம்’ என்று மொஹமது ஷமி கூறியுள்ளார்.

05:07:28 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

கோட்ஸே குறித்து சர்ச்சை கருத்து கூறிய பாஜகவின் போபால் வேட்பாளர் பிரக்யா தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’என்னை மன்னித்துவிடுங்கள். தேர்தல் முடிவுகள் வரும் வரை மூன்று நாட்கள் மவுன விரதம் மேற்கொள்ளப் போகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

04:59:11 on 20 May

மேலும் வாசிக்க நக்கீரன்

புதுக்கோட்டையில் திருடிய நகை மூலம் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், வங்கி ஊழியர் மாரிமுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

04:53:54 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

அகர்பத்தியில் இருந்து வரும் புகையை சுவாசிப்பது உடலில் பலவிதமான நோய்களை ஏற்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். புகையிலை, சிகரெட் போன்றவற்றை விட ஆபத்தானதா என்பது குறித்து இன்னும் தெளிவாகக் கூறவில்லை.

04:44:55 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

சென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, அங்கு வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

04:34:26 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தூத்துக்குடியில் அருண்குமார் என்பவர் ஸ்ரீஜா என்ற திருநங்கையைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை அங்கீகரித்து பதிவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக ஆண்-திருநங்கையின் திருமணத்தை அரசு அங்கீகரித்து திருமணப் பதிவு சான்றிதழ் வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

04:26:44 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கோடைக் காலத்தில் நமது உடல் சூடாகவே காணப்படும். இதில் இருந்து எளிதில் விடுபட தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். இரவு படுக்கச் செல்லும் போது, உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்துவிட்டு படுப்பது உடல் சூட்டைத் தணிக்கும்.

04:10:01 on 20 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

தேர்தலுக்குப் பிறகு வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, ’கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம். இவை கருத்துக் கணிப்பு அல்ல. கருத்து திணிப்பு’ என்று கூறியுள்ளார்.

03:55:02 on 20 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தைத் தயாரிக்க இருந்த லைகா நிறுவனம் இந்தப் படத்திலிருந்து விலகியதாகத் தெரிகிறது. இதனால் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் காரணமாகவே லைகா விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இப்போது ஒருவேளை கைவிட்டாலும், மீண்டும் அம்முயற்சியைத் தொடர்வதாக முடிவெடுத்துள்ளனர்.

03:40:01 on 20 May

மேலும் வாசிக்க தினமணி

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் வெளியிடலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தென்கொரியாவில் இருந்து கிடைத்திருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் புதிய வடிவமைப்பு கொண்ட கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனை சோதனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

03:25:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

தமிழக அரசுப் பள்ளி மாணவ, மாணவியருக்கு வரும் கல்வி ஆண்டில் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்படுகிறது. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஒரு சீருடையும், 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை இன்னொரு சீருடையும் அறிமுகமாகிறது.

03:10:02 on 20 May

மேலும் வாசிக்க தினத் தந்தி

தான் வரைந்த ஓவியத்தைக் காட்டி இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தன்னுடைய முதல் ஓவியக் கண்காட்சியை விரைவில் நடத்த உள்ளதாகவும், அதற்கு சில காலம் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார்.

02:55:01 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

நாகையை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிறிய ரக வேனில் கடத்திவரப்பட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், வாகனத்தையும் பறிமுதல் செய்து, ஓட்டுநரான திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்த அருண்குமாரைக் கைது செய்தனர்.

02:40:02 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தேனி, கோவை, நீலகிரி, திருப்பூர், நெல்லை, உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

02:26:01 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ளது நஜாஃப்கர் சாலை. இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்நிலையில், இந்த சாலையில் டிராபிக்கை நிறுத்து, ரவுடிகள் கும்பல் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டது. இதில் இரண்டு ரவுடிகள் உயிரிழந்துள்ளனர்.

02:10:01 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

தஜிகிஸ்தான் நாட்டில் வாக்தாத் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 32 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

01:50:56 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் என்பது இந்த வாரத்தில் சற்று அதிகமாகவே உள்ளது. ரெட்மீ, ஹானர், ஓப்போ போன்ற முன்னனி நிறுவனங்கள் தங்களில் புதிய ஸ்மார்ட்போன்களை போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்தவுள்ளது.

01:23:53 on 20 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தான் வளர்த்த மாட்டுக்கு சீமந்தம் நடத்தி ஊர் மக்களை இளைஞர் ஒருவர் ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த மாடு 50க்கும் மேற்பட்ட மஞ்சு விரட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை குவித்துள்ளது.

01:14:35 on 20 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

பங்குச்சந்தை உயர்வால் ஒரே நிமிடத்தில் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.3.2 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. சாதகமான சூழலால் பங்குச்சந்தைகளில் இன்று சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.

01:06:16 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

முடக்கறுத்தான் தாவரத்தின் இலை, தண்டு, காம்பு, காய், ஆகிய அனைத்தும் பச்சை நிறமாக இருக்கும். இன்றைக்கும் நமது கிராமப் பகுதிகளில் முடக்கறுத்தான் கீரை ஒரு சிறந்த உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

01:04:34 on 20 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதற்கான ஓட்டு எண்ணிக்கை வருகிற 23ஆம் தேதி நடை பெறுகிறது. தமிழகத்தில் 43 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடை பெறுகிறது.

01:02:14 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கமல்ஹாசனின் நாக்கை அறுக்க வேண்டும் என கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் ராஜேந்திர பாலாஜி மீது ம.நீ.ம. நிர்வாகி சுதாகர் புகார் தெரிவித்துள்ளார்.

12:54:07 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

இந்த வருடம் முதல் கோடை விடுமுறையில் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் கட்டாய மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்பதையும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு ஹீமோகுளோபின் அளவு, வைட்டமின் குறைபாடு போன்றவற்றைக் கண்டறியும் பரிசோதனைகளை செய்வதும் நல்லது.

12:53:14 on 20 May

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

இந்தியாவில் மார்வெல், DC-க்கு அடுத்து அதிக ரசிகர்களை கொண்ட ஒரு ஆங்கில தொடர் Game of thrones. HBO வில் வெளியிடப்படும் இத்தொடர் 2011 ஆண்டு தொடங்கி 8 சீசன்களை கொண்டு இன்று முடிவுக்கு வந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

12:46:33 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

விஜய்யின் மெர்சல், ரஜினியின் காலா உள்ளிட்ட படங்களுக்கு எமோஜிக்கள் வெளியான நிலையில் தற்போது சூர்யாவின் என்ஜிகே படத்துக்கும் #NGK #NGKFire #NGKFromMay31 உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளுக்கு எமோஜிக்கள் வெளியாகியிருப்பதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

12:41:55 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

நாட்டின் 17வது மக்களவைக்கான தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலின்போது 5 அரசு அலுவலர்கள் உயிரிழந்தனர்.

12:21:12 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது நட்பு வட்டம், குடும்பம், திரையுலக வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது, ‘நான் பாலிவுட்டுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் சிலர் எனது கடந்த காலத்தை பற்றி பேசி வருகின்றனர். அதைப்பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை.’ என்றார்.

12:16:05 on 20 May

மேலும் வாசிக்க ETV Bharat

’சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என கமல்ஹாசன் கூறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மனுத்தாக்கல் செய்திருந்தார். விசாரணை முடிந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது.

12:09:40 on 20 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12:04:50 on 20 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடன் தேவைப்படும் நேரத்தில் நீங்களே ஆன்லைன் மூலமாக வெவ்வேறு வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன் வகைகளைத் தெரிந்துகொண்டு, பின்னர் உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். அதேபோன்று உங்களுக்கான கிரெடிட் ஸ்கோரையும் அதற்கென்றே இருக்கும் ஏஜென்சிகளின் தளம் மூலம் கேட்டுப் பெறலாம்.

11:58:29 on 20 May

மேலும் வாசிக்க விகடன்

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இன்று காலை தனியார் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 161 பயணிகள் பயணித்தனர். விமானம் சென்னையை நெருங்கியபோது விமானத்தில் சரக்குகள் வைக்கும் அறையில் இருந்து புகை வெளியானதை நடுவானில் கண்ட விமானி, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க அனுமதி கோரப்பட்டது.

11:39:06 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

மதன் கௌரி இன்றைய யு-டியூப் உலகின் சென்சேஷன். இந்நிலையில் மதன் கௌரி பிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்வதாக பல வதந்திகள் உலா வருகின்றது. இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘அப்படி செல்லும் ஐடியா எனக்கு இல்லை.100 நாட்கள் என் வேலையை பார்க்காமல் அங்கு சென்றால் என்னை பாலோ செய்பவர்கள் எண்ணிக்கை மிககுறைந்துவிடும்’ என்று கூறியுள்ளார்.

11:35:15 on 20 May

மேலும் வாசிக்க சினி உலகம்

உதகை மலர்க் கண்காட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி, ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். 5 பிரிவுகளாக நடைபெற்ற ஆடை, அலங்கார அணிவகுப்பில் பலவிதமான புதிய ஆடைகளை இளம்பெண்கள் அறிமுகப்படுத்திய விதம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.

11:30:20 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

தஞ்சையில் கணவருடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்து சென்ற பெண்ணின் கழுத்தில் இருந்து முகமுடி அணிந்த மர்ம நபர்கள் நகையை பறித்து செல்லும் சிசிடிவி பதிவை காவல்துறையினர் வெளியிட்டு உள்ளனர்.

11:28:03 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

பொதுவாக அலுவலகத்தில் கணிப்பொறி முன் அமர்ந்து எட்டு மணி நேரத்துக்கும் அதிகமாக பணி செய்யும் சூழ்நிலையில் உள்ளவர்கள் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பும் போது சோர்வையும் உடல் வலியையும் உணர்வர்.

11:23:36 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன், ஆசிஃப் அலியின் மகளான நூர் ஃபாத்திமா, ஸ்டேஜ் 4 புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு அமெரிக்காவில் இருக்கும் ஓர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

11:20:39 on 20 May

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இந்திய மக்களவைத் தேர்லுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இந்திய ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் பாஜகவுக்கு சாதகமாக உள்ளதாகவே குறிப்பிடுகின்றன.

11:17:17 on 20 May

மேலும் வாசிக்க இப்போது செய்திகள்

'அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் கொடுத்து திமுக தில்லுமுல்லு செய்துள்ளது,' என்று கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

11:11:12 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கர்நாடக முதல்வர் HD குமாரசாமி, 'நாங்கள் கார்ட்டூன் சித்திரங்கள் போல தோன்றுகிறோமா? எல்லாவற்றையும் நகைச்சுவையாக காட்ட உங்களுக்கு யார் அதிகாரம் அளித்தது?' என ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளார். மேலும், ஊடகங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர ஆலோசித்து வருவதாக கூறினார்.

11:09:26 on 20 May

மேலும் வாசிக்க ஜீ தமிழ்

ரோம் நகரில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நட்சத்திர வீரர்களான செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிச்சும் ஸ்பெயினின் ரஃபேல் நடாலும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

11:07:22 on 20 May

மேலும் வாசிக்க காவேரி செய்திகள்

’மத்தியில் மாநில கட்சிகளும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் என நம்புகிறேன்,’ என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ’பல நேரங்களில் கருத்துக்கணிப்பு அப்படியே நடந்துவிடாது,’ எனவும் தெரிவித்துள்ளார்.

10:49:37 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே காலிகுடங்களுடன் 100க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 8 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி சக்தி நகரை சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10:38:57 on 20 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து மன்னார்குடி அடுத்த அரிச்சபுரம் கிராமத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் இறங்கி எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

10:37:50 on 20 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் அதிகம் கவனம் பெற்ற வீரராக இருந்தவர், பும்ரா. இந்நிலையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சுக்கு பின்னால் ஒரு ராக்கெட் சைன்ஸ் இருப்பதாக ஐஐடி கான்பூர் பேராசிரியர் சஞ்சய் மிட்டல் தெரிவித்துள்ளார்.

10:34:50 on 20 May

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பிரேசில் நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பாரா. இந்த மாகாணத்தில் உள்ள பெலம் நகரத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் பலியாகினர்.

10:31:32 on 20 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79 காசுகள் அதிகரித்து ரூ.69.44-ஆக உள்ளது.

10:11:57 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

உத்தரபிரதேசத்தில் பெண் குழந்தைகள் பிறப்பை ‘கிரீன் கேங்’ எனும் பச்சைக் குழு கொண்டாடி வருகிறது. பெண் குழந்தைகளை முறையாக பராமரிக்கிறார்களா என்றும் இவர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

09:56:46 on 20 May

மேலும் வாசிக்க காமதேனு

இயக்குனர் பாலா நடிகர் விக்ரமுக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் பாலா இயக்கிய படம் சரியில்லை என கூறி மொத்த படத்தையும் தூக்கி போட்டுவிட்டு தற்போது மீண்டும் வேறு பெயரில் படமாகிறது, ’ஆதித்ய வர்மா’. இந்நிலையில், அந்த படத்தில் தான் இயக்கிய காட்சிகள் இருக்கக்கூடாது என்று பாலா எச்சரித்துள்ளாராம்.

09:41:31 on 20 May

மேலும் வாசிக்க சினி உலகம்

அகர்பத்திகள், விளக்கில் எறியும் எண்ணெயின் வாசம், சாம்பிராணி புகையின் நறுமணங்கள் எப்போதுமே நமக்குள் பேரமைதியை ஏற்படுத்தும். இன்றைய நவீன வாழ்க்கை முறையின் குறியீடாக அரோமா மாறியிருப்பது அந்த பின்னணியில்தான். தெரப்பிகளில் மிகவும் பிரபலமானது, மக்களால் பெரும்பாலும் விரும்பப்படும் அரோமா தெரப்பிதான்.

09:35:53 on 20 May

மேலும் வாசிக்க விகடன்

'தேர்தல் 2 மாதங்கள் நடக்கும் போது. அதன் முடிவுகள் குறித்த ஏக்கம் இயல்பாக மக்களுக்கு வருகிறது. அதனை எதிர்கொள்ளும் கடமை ஊடகங்களுக்கு இருக்கிறது. மேலும், யார் வெல்வார்கள் என்று தெரிந்து கொள்ள மக்களுக்கு உள்ள விருப்பத்தின் வெளிபாடுதான் இந்த கருத்துக் கணிப்புகள்,' என மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

09:22:09 on 20 May

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்ததாகவும், 78 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

09:18:01 on 20 May

மேலும் வாசிக்க தினத்தந்தி

சர்வதேச அளவில் 5ஜி சேவையை முதன்முதலாக சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஷாங்காய் நகரில் 5ஜி சேவைக்கான டவர்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் டவர்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

08:55:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப் புதிய மாடல் ஸ்கிராம்ப்ளர் 1200 எக்ஸ்.சி. மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. சர்வதேச அளவில் எக்ஸ்.சி. மற்றும் எக்ஸ்.இ. என இரண்டு மாடல்களில் இது கிடைக்கிறது.

08:35:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

நாடு முழுவதும் எலக்ட்ரிக் கார்களை இயக்குவோரின் வசதிக்காக பொது சார்ஜிங் வசதியை ஏற்படுத்தும் பணியில் மத்திய எரிசக்தித்துறை தீவிரம் காட்டி வருகிறது. உலக அளவில் வாகனங்களின் பயன்பாடு என்பது அதிகமாக இருக்கிறது.

08:15:02 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.82 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.88-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

07:55:01 on 20 May

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தமிழ்நாட்டைப் போலவே குஜராத் மாநிலத்திலும் வறட்சி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால், நகர மக்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தட்டுப்பாடு காரணமாக, தண்ணீரை வீணடிப்பவர்களுக்கு ரூ.250 முதல் ரூ.500வரை அபராதம் விதிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

07:35:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மோட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளமான டிக்டாக் செயலியில், ஒரு சமூகத்தை பற்றி அவதூறாக பேசி இவர் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மாணவனை கைது செய்தனர்.

07:15:01 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வருசநாடு பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றிவருவதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறை, துப்பாக்கியை மட்டும் கொண்டுவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

06:55:01 on 20 May

மேலும் வாசிக்க விகடன்

ஏ.ஆர்.ரஹ்மானின் தீவிர ரசிகரான சந்தர் என்பவர் சொந்தமாக ஒரு பி.எம்.டபுள்யூ காரை வாங்கி அதில் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் கொண்ட பலகையை பொருத்தியுள்ளார். காரின் முன், பின் பகுதிகளை படம்பிடித்து அவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

06:25:01 on 20 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

”என்னைப் பொறுத்தவரை இந்த உலகக் கோப்பையையும் ஆஸ்திரேலியாவே வெல்ல வாய்ப்பு உள்ளது. அந்த அணி நிச்சயமாக இறுதிப் போட்டிக்குள் நுழையும். உலகக் கோப்பையை வெல்ல அடுத்து வாய்ப்பு உள்ள அணிகளில் இங்கிலாந்து, இந்தியா உள்ளன.” என கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

05:55:02 on 20 May

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

திருச்சி அருகே திருவானைக்காவலில் ஆட்டோ ஓட்டுநர் மர்ம நபர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அப்துல்லா எனபவரை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கிக் கொன்று விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய 4 பேரைப் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

05:25:01 on 20 May

மேலும் வாசிக்க தினகரன்

நுரையீரல் புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சைக்கு பயன்படும் இன்ஜெக்சன் 500 எம்ஜி மருந்து விலை மருந்து 22 ஆயிரம் ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதே பிரிவில்100 எம்ஜி மருந்துவிலை 7700 ரூபாயில் இருந்து 800 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

04:55:01 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தன் அம்மா இதமான இசையைக் கேட்பதும், தகவல்களைக் கேட்பதும் குழந்தைக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த இசையின் தன்மை சற்று மாறினாலோ, ஒலி அதிகமானாலோ குழந்தைக்குப் பிடிக்காது. பேரிரைச்சல், கடினமான சத்தங்களை ஏற்படுத்தும் சில வாத்திய கருவிகளின் இசை எல்லாம் குழந்தைக்குப் பிடிக்காதவை.

04:25:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

அட்லாண்டிக் பெருங்கடலை வான்வழியாக சுற்றிப் பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஹோண்டூராசில் இருந்து ஒரு சிறிய ரக விமானம் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 5 பேர் பார்வையிட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குட்டி விமானம், விபத்துக்குள்ளாகி கடலில் விழுந்தது.

03:55:01 on 20 May

மேலும் வாசிக்க மாலைமுரசு

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் புதிய வகை உணவுகளை வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

03:26:01 on 20 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

நேபாள நாட்டின் ரூபி வேலி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ரமேஷ் தாமங் என்பார் 5ஆம் வகுப்பு படித்து வருகிறான். அவனும் அதே பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பபித்ரா தாமங் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பபித்ரா தாமங் கர்ப்பமானார்.

02:56:01 on 20 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

உலகில் பெரும்பாலான நாடுகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். அதில் முக்கியமான நகரம் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நகரம் ஆகும். இந்நிலையில் இதுகுறித்து பிரபல நடிகர் விவேக் கருத்துக் கூறியுள்ளார்.

02:26:01 on 20 May

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பாலகோட்டில் இந்திய விமானப் படையினர் ஜெய்ஷே முகமது தீவிரவாத முகாம்கள் மீது வான் தாக்குதல் நடத்தி 75 நாட்களுக்கு மேலாகியும், பாகிஸ்தான் தனது எப்.16 விமானங்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்டுள்ளது.

01:56:02 on 20 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நொய்டா, செக்டார் 58ல் அமைந்துள்ள காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

01:26:01 on 20 May

மேலும் வாசிக்க காமதேனு

காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12:55:02 on 20 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

உங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை இன்னொருவருக்கு செய்துவிடக்கூடாது. யாரையும் இளக்காரமாக பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.

12:25:01 on 20 May

மேலும் வாசிக்க மாலை மலர்

ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. மதகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர்.

11:55:02 on 19 May

மேலும் வாசிக்க தந்தி டிவி

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில், செல்பி எடுப்பதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, அப்பகுதிவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் செல்பி மோகத்தால் உணிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருப்பது தான் வேதனை.

11:25:01 on 19 May

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை கருதி அரசுப்போக்குவரத்துக்கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

10:55:01 on 19 May

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் கடந்த 15 வருடங்களாக மக்களுக்காக சமூக சேவையாற்றிவரும் சத்யநாராயணனை பலரும் பாராட்டிவருகின்றனர். இவர், கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிரிக்கும் என்பதால் தண்ணீர், மோர், குளிர்பானம் ஆகியவற்றை வழங்கிவருகிறார். அதோடு, பேருந்தில் பசியோடு பயணிக்கும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கி வருகிறார்.

10:25:02 on 19 May

மேலும் வாசிக்க ETV தமிழ்

நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.

09:55:01 on 19 May

மேலும் வாசிக்க வெப்துனியா தமிழ்

மாநில அளவிலான 32வது செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது. இது குறித்து சென்னை மாவட்ட சதுரங்க விளையாட்டு சங்கத்தின் தலைவர் கணசேன், ‘எங்கள் மாவட்ட சங்கம் சார்பில் இந்த போட்டியை நடத்துகிறோம். இந்தப்போட்டி மே 20ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை நடைபெறும்.’ என்றார்.

09:26:01 on 19 May

மேலும் வாசிக்க தினகரன்

அமெரிக்காவைச் சேர்ந்த டெல் ஹால் என்பவர் ஒரு பீர் தயாரிப்பு கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர் 1600ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சில ஞானிகள் மது மட்டுமே குடித்து வாழ்ந்ததாக ஏதோ ஒரு இடத்தில் படித்துள்ளார். அவரும் டயட்டில் இருக்க முயற்சி செய்துள்ளார். அதற்காகபீரையே 46 நாட்களுக்கு குடித்துள்ளார்.

08:59:41 on 19 May

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

அரவக்குறிச்சியில் அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதுவுக்காக நடைபெற்ற பள்ளிவாசல் வியூகத்தை முறியடிப்பதற்காக செந்தில் பாலாஜி கூடுதலாக 1000 ரூபாயை இறக்கியுள்ளார். அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகத்தை செந்தில்பாலாஜியின் கரன்சி வியூகம் சமாளிக்குமா என்று தெரியவில்லை என்று திமுகவினரே கூறுகின்றனர்.

08:42:02 on 19 May

மேலும் வாசிக்க மின்னம்பலம்

விவசாயிகளின் நலனைப் பாதிக்கும் அனைத்துத் திட்டங்களையும் மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என தமிழ் பேரரசு கட்சி தலைவர் கவுதமன் தெரிவித்தார். மேலும் அவர், ”கோட்சேவும், காந்தியும் இந்துக்கள்தான் இதில் ஏது தீவிரவாதம். கமல்தான் இந்து தீவிரவாதி” என சாடினார்.

08:26:01 on 19 May

மேலும் வாசிக்க மாலைமுரசு

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள், திங்கட்கிழமை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போன்று வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதும் பங்குச்சந்தையில் ஏற்றமோ அல்லது இறக்கமோ அதிக அளவில் இருக்க வாய்ப்புள்ளது.

08:12:01 on 19 May

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

தேர்தல் முடிவுகள் அறிப்பதற்கு முன்பாகவே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என கோயில் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்ததுபோல மாணிக்கம்தாகூர் எம்.பி. என அச்சடிக்கப்பட்ட திமுக பிரமுகரின் மகள் திருமண பத்திரிக்கை ஒன்றும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

07:52:24 on 19 May

மேலும் வாசிக்க விகடன்

மேலும் வாசிக்க