View in the JustOut app
X

பாஜகவின் டெல்லிக் கிளையின் சார்பாக வெளியிடப்பட்ட ட்விட்டர் செய்தியில் புகைப்படமொன்றும் கார்ட்டூன் படமொன்றும் சேர்க்கப்பட்டிருந்தன. அந்தப் புகைப்படத்தின் ஒருபுறம் எரிந்து கொண்டிருக்கிற ஒரு பேருந்தும் முஸ்லிம் குல்லாய் அணிந்துள்ள தோற்றத்துடன் டெல்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவாலும் காட்டப்படுகின்றனர்.

05:27:01 on 25 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிவியல் உண்மைகளை இந்தியா புறக்கணிப்பதாக இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.

04:57:01 on 25 Jan

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் ஆபத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய 7 பேர் கேரளாவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸால் இறந்த செய்தி வந்ததில் இருந்து, இதுவரை 96 விமானங்களில் 20 ஆயிரத்து 844-க்கும் மேற்பட்ட பயணிகள் இந்தியாவில் சோதனை செய்யப்பட்டுள்ளனர்.

04:27:01 on 25 Jan

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

நோக்கியா 6.2 மற்றும் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைப்பதாக நோக்கியா அறிவித்துள்ளது. ரூ.15,999 விலையில் வெளியிடப்பட்ட நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன் தற்போது ரூ.3500 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

03:57:01 on 25 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

ஆண்டுக்கு ரூ.2.50 லட்சத்துக்கும் அதிகமான வருமானம் ஈட்டுபவர்கள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை வழங்காவிட்டால், அவர்கள் ஊதியத்தில் இருந்து வரியாக 20 சதவீதம் பிடிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

03:27:01 on 25 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

"அதிமுகவில் எந்த தலைவர் பதவியும் காலியாக இல்லை. சசிகலா வெளியே வந்தால் மகிழ்ச்சி என ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் சட்டரீதியாக அணுகப்படும்" என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

03:02:46 on 25 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த முஸ்லிம்களை விரட்டியடிக்க வேண்டும் என்று சிவசேனை கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சாம்னாவில் வெளியாகியுள்ள தலையங்கத்தில், ஹிந்துத்துவா கொள்கையிலிருந்தும், மராத்திய மக்களுக்கான பணியிலிருந்தும் சிவசேனா ஒருபோதும் விலகி செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02:27:01 on 25 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நஸ்ரியா திருமணத்திற்கு பிறகு அவர் உடல் எடை அதிகமாக காணப்பட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் நஸ்ரியாவா இது? என்று அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் நஸ்ரியா வெளியிட்ட போட்டோவில் எடை குறைந்து காணப்படுகிறார், இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

01:57:01 on 25 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இரான் நடத்திய தாக்குதலில் 34 அமெரிக்க படையினருக்கு, அதிர்ச்சியால் மூளைக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது. 17 பேர் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகமான பெண்டகனின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

01:27:01 on 25 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திருமுருகன் காந்தி, ரஜினியின் கருத்துகளுக்காக அவரை “முட்டாள்” என்று சாடினார். தற்போது ஏன் அப்படியொரு காட்டமான விமர்சனத்தை வைத்தேன் என்பது குறித்து திருமுருகன் கூறியுள்ளார்.

12:57:01 on 25 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,862க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.30,896க்கு விற்கப்படுகிறது.

12:27:01 on 25 Jan

மேலும் வாசிக்க தினகரன்

சென்னை - மதுரை செல்லும் தேஜஸ் ரயிலில், பயணிகள் தங்களது செல்லிடப்பேசி, மடிக்கணினிகளில் திரைப்படங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு நிகழ்வுகளை கண்டுகளிக்கும் வகையில், வைஃபை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட 'மேஜிக் பாக்ஸ்' எனும் புதிய வசதியை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது

11:57:02 on 25 Jan

மேலும் வாசிக்க தினமணி

அமராவதி தலைநகரத்துக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் சிலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் மாதம் 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் கொண்ட நபர்கள் 797 பேர் 220 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் வாங்கியதற்கான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

11:27:01 on 25 Jan

மேலும் வாசிக்க விகடன்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, அரசு, இ-சேவை மையத்தில் இருந்துதான், முதன்முதலாக அம்பலமாகியுள்ளது. அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப -4 தேர்வு முடிவுகள் வந்தபோது, பலரும் தங்களுக்கு தெரிந்த, 'பிரவுசிங்' மையங்களுக்கு சென்று, தங்களின் பதிவு எண், தேர்ச்சி பட்டியலில் வந்துள்ளதா என்று பார்த்து உள்ளனர்.

10:57:02 on 25 Jan

மேலும் வாசிக்க தினமலர்

நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் தற்கொலை என நினைத்து ஒருவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் உறவினர்கள் தகனம் செய்தனர். ஆனால் அவரை மதுபோதையில் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக கூறி நண்பர் ஒருவர் சரண் அடைந்துள்ளார்.

10:27:01 on 25 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

குடியரசு தின விழாவில் தமிழகத்தில் காவல் தெய்வமாகக் கூறப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. சிவப்பு வண்ணம், பெரிய மீசை என 17 அடி உயரப் பிரமாண்ட உருவத்தில் அய்யனார் அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

09:57:02 on 25 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

தமிழ்நாடு அரசில் துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட சில முதல்நிலைப் பணிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமையியல் பணிகள் – I தேர்வு (Combined Civil Services -I Examination) அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

09:25:01 on 25 Jan

மேலும் வாசிக்க விகடன்

சியோமி நிறுவனத்தின் Mi ஏ3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இதுவரை ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் விலையில் ரூ.1000 நிரந்தரமாக குறைக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது. அந்த வகையில் Mi ஏ3 ரூ.11,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

08:57:01 on 25 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

துருக்கி நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.8ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. முதலில் 4 பேர் பலி என தகவல் வெளியானது. இதன்பின் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

08:27:02 on 25 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

கோவை லாலிரோட்டில் உள்ள அவரது வீட்டில் அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுக பெயரில் இணையதளப் பக்கம் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.

07:57:01 on 25 Jan

மேலும் வாசிக்க தினகரன்

ஐ.டி.ஐ. எலக்ட்ரீசியன் படிப்பு முடித்த திருச்சி மாவட்டத்தைச் சோந்தவா்கள் ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், விண்ணப்பத்துடன் கல்வி, பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்.42, ஆலந்தூா் சாலை, திரு.வி.க.தொழிற்பேட்டை, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

06:55:01 on 25 Jan

மேலும் வாசிக்க தினமணி

நோய்களை வராமல் தடுக்கவும், வந்த நோய்களைக் கட்டுப்படுத்தவும் முத்திரைகள் உதவுகின்றன. உடலின் சமநிலையின்மை அல்லது செயல்குறைபாட்டை நரம்பியல் நிபுணர்கள் மூளையைத் தூண்டச் செய்து குணமாக்குகின்றனர். இதையே, பழங்காலத்தில் யோகிகள் முத்திரைகள் மூலமாக சரி செய்தனர்.

05:55:01 on 25 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகவும், அதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் ஜுன் மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

10:57:01 on 24 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஐந்து பூண்டு பற்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் அந்நீரால் ஆசன வாய் பகுதியைக் கழுவுங்கள். இப்படி கழுவி வர அரிப்பு அகலும். உருளைக்கிழங்கை வெட்டி, அதன் துண்டுகளை ஆசன வாயில் சிறிது நேரம் தேய்த்து உலர வைத்தால், நல்ல பலன் கிடைக்கும். உருளைக்கிழங்கும் மூல நோயால் ஏற்படும் வீக்கத்தைப் போக்கும்.

09:57:01 on 24 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

சமூக விழிப்புணர்வு சார்ந்த மற்றும் எதார்த்த கதைகளின் இயக்குனரான சுசீந்திரன் வாகன விபத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை நடைப்பயிற்சிக்கு சென்ற இயக்குனர் சுசீந்திரன், எதிர்பாராத விதமாய் ஒரு வாகனத்தால் மோதப்பட்டு காயமடைந்தார். இதனையடுத்து உடனடியாக லேசர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

08:57:01 on 24 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையே டாஸ்மன் கடலில் உள்ள லார்ட் ஹோவ் (Lord Howe) என்னும் தீவானது, ஒழுங்கற்ற பிறை வடிவ எரிமலையின் மிஞ்சிய பகுதிகள் என கூறப்படுகிறது. 28 தீவு குழுக்கள் அடங்கியது லார்ட் ஹோவ். இந்த தீவுகள் எரிமலைகள் மற்றும் பாறைகளை உள்ளடக்கியது.

08:27:01 on 24 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 830ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கு அதிகமாக அதிகரித்துள்ளது.

07:57:01 on 24 Jan

மேலும் வாசிக்க தினமலர்

வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் பயணித்த இளைஞர் ஒருவர் தனது ஈரமான ஷூவை உலர வைப்பதற்காக விமானத்தில் இருக்கைக்கு மேலுள்ள ஏர் கண்டிஷனிங் வென்ட்டை பயன்படுத்தியுள்ளார். இளைஞரின் இந்த செயல் அங்கிருப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

07:27:01 on 24 Jan

மேலும் வாசிக்க தினமணி

நடப்பு ஆண்டிற்கான இந்தியாவின் பெருநிறுவன மற்றும் வருமான வரி வசூல் குறைந்தது 20 ஆண்டுகளில் முதல் முறையாக வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது என மூத்த வரி அதிகாரிகள் ராய்ட்டர்சிடம் தெரிவித்து உள்ளனர். இந்த ஆண்டிற்கான நேரடி வரி வசூல் 2019 நிதியாண்டில் சுமார் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

06:57:01 on 24 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

பாபா படத்தில் வரும் பாடலில், பெரியார்தான் ஆனதென்ன ராஜாஜி' என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப... திராவிடர் கழக வீரமணியிடம் பேசிய ரஜினி, படத்தில் இந்த வரிகள் வராமல் பார்த்துக்கொள்கிறேன்'' எனச் சொன்னார். காரணம தன் சொந்த செலவில் எடுக்கப்பட்ட 'பாபா' படத்துக்கு பிரச்னை வந்துவிடக் கூடாது என்பதற்காக.

06:25:01 on 24 Jan

மேலும் வாசிக்க விகடன்

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மீண்டும் இன்று மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளார். இதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, “அடுத்தவாரம் அந்த வழக்கை விசாரிப்பது பற்றி பரிசிலீக்கிறோம்” என்று பதில் அளித்துள்ளார்.

05:57:01 on 24 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

வரி ஏய்ப்பு தொடர்பான புகாரையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வேலம்மாள் குழுமத்திற்கு சொந்தமான சென்னை, மதுரை, தேனி, தஞ்சை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் நான்கு நாட்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டாத ரூபாய் 400 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 2 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

05:27:01 on 24 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

“மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரம் சிறுகச் சிறுக மத்திய அரசுக்குக் கீழ் செல்வதாகவே தெரிகிறது. இதற்கு ஒரு நல்ல உணாரணம். ஜி.எஸ்.டி வரிமுறை. ஜி.எஸ்.டி வந்ததில் இருந்து நமக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதைப் பெற மத்திய அரசிடம் போராடிக் கொண்டிருக்கிறோம்.” என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

04:57:02 on 24 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 4ஆம் வகுப்பு மாணவன் அவரது தந்தை குறித்து எழுதிய கடிதம் வைரலாகி வருகிறது. இந்த கடிதத்தினைப் பார்த்த அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் உடனடியாக அந்த சிறுவனுக்கும் அவரது குடும்பத்திற்கும் அனைத்து உதவிகளும் செய்ய முன்வந்துள்ளார்.

04:27:01 on 24 Jan

மேலும் வாசிக்க குமுதல் டாட் காம்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

04:12:11 on 24 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

04:08:21 on 24 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

”இந்தியாவை சகிப்புதன்மை, பல்வேறு மதங்கள் கொண்ட பகுதி என்ற நிலையில் இருந்து மாற்றி இந்து மத நாடாக மாற்ற பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். பிரதமர் மோடி அமல்படுத்திய சிஏஏ உள்ளிட்ட பல திட்டங்கள் நாட்டில் ரத்தம் சிந்தும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.” என பொருளாதார ஆய்வாளரான ஜார்ஜ் சோரோ தெரிவித்துள்ளார்.

03:57:01 on 24 Jan

மேலும் வாசிக்க தினமலர்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு தமிழகத்தில் இருந்து திரும்ப பெறவேண்டும் எனக் கூறி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் வரும் 27ஆம் தேதி முதல் காவிரிப் படுகையில் தொடர் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

03:27:02 on 24 Jan

மேலும் வாசிக்க கலைஞர் செய்திகள்

நடிகர் சங்க தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடந்தது. இதில் தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

03:02:08 on 24 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

தொடர்ச்சியாக இளம் பெண்கள் கடத்தப்பட்டு அடுத்த நாள் தலையில்லாமல் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டு வைக்கப்படுகின்றனர். அதேபோன்று உதயநிதியின் காதலியாக வரும் அதிதியும் கடத்தப்படுகிறார். அவரை நித்யா மேனன் உதவியுடன் உதயநிதி அந்த சைக்கோ கொலைகாரனிடமிருந்து மீட்டாரா என்பதே மீதிக்கதை.

02:57:01 on 24 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

மாதுளம் பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது.

02:25:01 on 24 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

நடிகர் தனுஷ், ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அவருடன் சாரா அலி கான் ஹீரோயினாக நடிக்கிறார். இதே படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளார் என்றும் அவருக்கு சம்பளமாக 120 கோடி ருபாய் தரப்படுகிறது என்றும் முக்கிய பாலிவுட் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

01:57:01 on 24 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் கோரிக்கையை 3 மாதத்துக்கு பிறகு பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

01:27:01 on 24 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

ஆந்திர மாநிலம், கடப்பாவில் உள்ள, தனியார் சட்டக் கல்லுாரி முதல்வர் ஹிமவந்த குமார், 54, என்பவர், கல்லுாரிக்கே வராத, 1,000க்கும் மேற்பட்டோருக்கு, 80 சதவீதம் கல்லுாரிக்கு வருகை தந்தது போல பதிவேடு தயார் செய்து, சான்றிதழ் வழங்கியுள்ளார். இதற்கு, கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.

12:57:02 on 24 Jan

மேலும் வாசிக்க தினமலர்

சேலம் செவ்வாய்பேட்டையில் பாஜகவினர், ராமர், சீதை படங்களுடன் பேரணி செல்ல முயற்சி செய்தனர். பேரணி செல்ல முயன்றவர்களை தடுத்ததால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதையடுத்து பேரணி செல்ல முயன்ற பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

12:27:02 on 24 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பியதாக ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

12:06:01 on 24 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சாலவாக்கம் பகுதியில் இருந்த பெரியார் சிலை இன்று உடைக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையின் கை மற்றும் முகம் ஆகியவை உடைக்கப்பட்டுள்ளன. சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 1988ஆம் ஆண்டு கலி.பூங்குன்றன் இந்த திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்துள்ளார்.

11:57:00 on 24 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

பெரியார்-ரஜினி விவகாரம் தொடர்பாக தி.மு.கவின் அடுத்தகட்ட தலைவர்கள் பெரிதாக கருத்துக்களைத் தெரவிக்கவில்லை. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினியின் கருத்தைக் கண்டித்துப் பேசினார். இந்நிலையில், அ.தி.மு.கவினர் கண்டித்துப் பேசும் அளவுக்கு தி.மு.கவினர் பேசவில்லையென சமூக வலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது.

11:27:01 on 24 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

கொடைக்கானலில் ஹோம்மேடுசாக்லேட், நீலகிரி தைலம், முகத்திற்கு பூசும் கிரீம்கள், வண்ண வண்ண மிட்டாய்கள் மற்றும் விண்டர் கிரீன் ஆயில் போன்றவை அதிகமான கடைகளில் சுற்றுலாபயணிகளுக்கு விற்கப்படுகின்றது. இவற்றில் இந்த விண்டர் கிரீன் தைலமானது மனிதனுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும் ஒரு வேதி பொருளாகும்.

10:57:01 on 24 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, இருபது ஓவர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டித் தொடர்களில் விளையாடவுள்ளது. அந்த வகையில், 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று மதியம் 12.20 மணிக்கு நடைபெறுகிறது.

10:27:02 on 24 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள் பார்த்தசாரதி, வீரராஜ் இன்று கைது செய்யப்பட்டனர். குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரியாக இருந்துள்ளனர். தேர்வர்கள் கப்பி அடிக்கவும், தேர்வு பதில் தாள் (OMR sheet) மாற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

09:57:02 on 24 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்

ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த திட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் முதல் கட்டமாக பரீட்சார்த்த அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் செயல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

09:27:01 on 24 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான தேனி ஓ.பி.ரவீந்திரநாத் சென்ற வாகனத்தை முற்றுகையிட்டு, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் நேற்று இரவு (ஜனவரி 23) போராட்டம் நடத்தினார்கள். இதனால் தேனி மாவட்டம் கம்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

08:59:18 on 24 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சென்னையில் இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் 23 காசுகள் குறைந்து ரூ.77.31-க்கும், டீசல் 27 காசுகள் குறைந்து ரூ.71.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

08:50:24 on 24 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

சிரியாவின் இத்லீப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள 2 ராணுவ முகாம்களை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்கினர். இந்த தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர்.

08:47:24 on 24 Jan

மேலும் வாசிக்க தினகரன்

வாயுவிற்கு மிகவும் பயனுள்ள தீர்வு கருப்பு மிளகு. கருப்பு மிளகு வாயு பிரச்சனையையும் நீக்குகிறது. கருப்பு மிளகு உட்கொள்வது வாயு பிரச்சினையில் நிவாரணம் தருவது மட்டுமல்லாமல், செரிமானத்தை சரியாக வைத்திருக்கிறது.
வயிற்றில் வாயு இருந்தால், பாலுடன் கலந்த கருப்பு மிளகு பொடி சேர்த்து குடிக்கலாம்.

07:55:01 on 24 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

சந்தானம் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் டகால்டி திரைப்படம். இதுவரை எந்த சந்தானம் படமும் தொடாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. முதல் முறையாக தமிழகமெங்கும் 475+ திரையரங்குகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

06:55:01 on 24 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் பேசிய வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் வகையில் சேவாக்கை கிண்டலாக பேசும் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் வெளியிட்டுள்ளார்.

05:55:01 on 24 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி இயர்பட்ஸ் விவரங்கள் என்.சி.சி. (தேசிய தகவல் பரிமாற்ற ஆணையம்) சான்று பெற்று இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் RMA205 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. மேலும் புதிய இயர்பட்ஸ் மெல்லிய கேஸ் கொண்டிருக்கிறது. இதன் வடிவமைப்பும் மிக மெல்லியதாக இருக்கிறது.

10:55:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

கார்த்தி நடித்த மெட்ராஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை கேத்ரின் தெரசா. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் சீனியர் நடிகரான நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கேத்ரின் தெரசாவை படக்குழுவினர் அணுகினர். அதற்கு, கேத்ரின் தெசரா, வயதான நடிகருடன் நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்ததாகத் தெரிகிறது.

09:57:02 on 23 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

''ரஜினியை அவமரியாதை செய்வது கண்டிக்கத்தக்கது. அதை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.ரஜினி ரசிகர்கள் பொறுமை காப்பது சங்கடமாக உள்ளது'' என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

08:55:01 on 23 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 7 தமிழ்

இன்று பெண்கள் ஊராட்சி தலைவர்களாக அமர்ந்திருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் பெரியார் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி மறுமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை மறக்க கூடாது.” என்றார்.

08:25:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினமலர்

நான் மட்டும் இன்று அமைச்சராக இல்லாவிட்டால் ஏர் இந்தியா நிறுவனத்தை நிறுவனத்தை ஏலம் கேட்க முயல்வேன் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சித்து வரும் நிலையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்

07:57:01 on 23 Jan

மேலும் வாசிக்க தி இந்து தமிழ்

தேனி மாவட்டம் கம்பத்தில் பஜாஜ் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய கடனை திருப்பி கட்டாததால் அரிவாளை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. கோம்பை சாலையை சேர்ந்த கண்ணன் என்பவர் நிதி நிறுவனத்தில் அரிவாளை காட்டி மிரட்டும் வீடியோ பரபரப்பானது.

07:25:01 on 23 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

பொங்கல் பண்டிகையையொட்டி அரசின் விதிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் சிறப்பாக நடந்த நிலையில், மஞ்சு விரட்டில் கட்டவிழ்க்கப்பட்ட காளைகளிடம் சிக்கிய சிலர் சாமர்த்தியமாக தப்பினாலும், ஆர்வமிகுதியால் காளைகளிடம் சிக்கிய கைப்புள்ளைகளின் பரிதாப காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

06:55:01 on 23 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பகுதியில் நேற்று மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சின்னப்பள்ளி குப்பம் பகுதியைச் சேர்ந்த ராமன் என்பவரின் காளைமாடு கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. இதனையடுத்து மஞ்சுவிரட்டு போட்டியை ஏற்பாடு செய்த நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

06:44:03 on 23 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவைச் சேர்ந்த ஜிம் மணி என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் செந்தில், புகழேந்தி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த புகழேந்தியை மர்மநபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர்.

06:36:54 on 23 Jan

மேலும் வாசிக்க தினமணி

”இந்தியா ஜனநாயக குறியீட்டில் 10 இடங்கள் சரிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிக்கும் அனைவருக்கும், ஜனநாயகம் அழிக்கப்பட்டு, ஜனநாயக அமைப்புகள் பலவீனமடைந்துள்ளன என்பது தெரியும். தேசபக்தி உள்ள ஒவ்வொரு இந்தியரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

06:31:27 on 23 Jan

மேலும் வாசிக்க தினமலர்

திருப்பதி ஏழுமலையான், சில்கூர் பாலாஜி, ஐயப்ப சாமி, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி உள்ளிட்ட அனைத்து இந்து தெய்வங்களுக்கும், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தின் பிரிவு 5(4)-ன் கீழ் குடியுரிமை வழங்க வேண்டும் என்று சில்கூர் கோவில் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் கூறி உள்ளார்.

06:25:29 on 23 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

போலீசார் நடத்திய விசாரணையில் தீவிரவாத இயக்கத்துக்கு தலைவன் காஜா மொய்தீன் இல்லை என்றும், அவரை பின்னணியில் இருந்து இயக்கும் நபர் வேறொருவர் எனவும் தெரியவந்தது. அவர் கொடுக்கும் உத்தரவின்பேரில் தான் காஜா மொய்தீன் செயல்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது.

06:25:01 on 23 Jan

மேலும் வாசிக்க விகடன்

சசிகலா சிறையில் இருந்து வெளியில் வர சட்ட ரீதியிலான முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும், தானோ அல்லது சசிகலாவோ துரோகிகளோடு ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

06:23:13 on 23 Jan

மேலும் வாசிக்க தினத்தந்தி

இந்தியாவிலிருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற செவிலியர்கள் 30 பேரிடம் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. கேரளத்தில் இருந்து சென்ற செவிலியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து 30 செவிலியரையும் தனி அறைகளில் தங்க வைத்து சோதனை செய்து வருகின்றனர்.

06:20:54 on 23 Jan

மேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்

வருங்கால வைப்பு நிதியில் (PF) பரிமாற்றம் செய்யும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஒரு மாபெரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் தேதியை ஊழியரே அப்டேட் செய்யும் வகையில், ஊழியர்கள் வைப்பு நிதி ஆணையம் புதிய வசதிகளை மேம்படுத்தியுள்ளது.

05:57:01 on 23 Jan

மேலும் வாசிக்க NDTV தமிழ்

இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சருக்குப் பிறகு இருண்ட பயன்முறையில் (dark mode) ஆதரவைப் பெறும் பேஸ்புக்கின் குடும்பங்களின் பயன்பாடுகளில் மூன்றாவது பயன்பாடாக வாட்ஸ்அப் சமீபத்தில் இணைந்துள்ளது.

05:25:02 on 23 Jan

மேலும் வாசிக்க ஜீ நியூஸ் தமிழ்

தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தா கியூபா, மெக்சிகோவுக்கு அருகிலுள்ள கரீபியன் தீவில் குட்டி நாடான பெலிசில் பதுங்கி இருப்பதாகவும், அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

04:57:02 on 23 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

கால் முட்டி மற்றும் இடுப்பெலும்பு துருத்திக்கொண்டிருக்கும் அளவுக்கு ஒல்லியாக இருப்பவர்கள் லெகிங்ஸ் பயன்படுத்தும்போது, இன்னும் ஒல்லியாகத் தெரிவீர்கள். அதனால் நீங்கள் லெகிங்ஸைத் தவிர்ப்பது நல்லது. மாறாக, ஜெகிங்ஸ் அல்லது நேரோ ஃபிட் பேன்ட்ஸ் பயன்படுத்தலாம்.

04:27:01 on 23 Jan

மேலும் வாசிக்க விகடன்

இஸ்ரோ நேற்று முதன்முதலாக 'வியோம் மித்ரா' என்ற பெண் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோ 2021ஆம் ஆண்டில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில், ஆண் விண்வெளி வீரர்களுக்கு உதவி செய்யும். ககன்யான் திட்டத்தில் வீரர்களை அனுப்புவதற்கு முன்னதாக வியோம் மித்ரா விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது.

03:57:01 on 23 Jan

மேலும் வாசிக்க பிபிசி தமிழ்

இந்தியா-நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாம் போட்டி நாளை ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்துகொண்டிருக்கும் இந்திய அணி, கடைசியாக நியூசிலாந்து அணியை உலகக் கோப்பை அரை இறுதி சுற்றுக்குப்பிறகு இன்றுவரை எந்த ஒரு போட்டியிலும் சந்திக்கவில்லை.

03:27:02 on 23 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

கேரள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லால் உடன் ஜாக்கி சான் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல்பர்ட் ஆண்டனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கவிருப்பதாக தெரியவந்துள்ளது.

02:57:01 on 23 Jan

மேலும் வாசிக்க குமுதம் டாட் காம்

மெரினா கடற்கரையில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவிடம், ஐ.ஐ.டி. யினரால் வடிவமைக்கப்பட்ட ‘பீனிக்ஸ்’ பறவை வடிவம் 15 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் இறக்கை மட்டும் 2 பக்கமும் 21 மீட்டர் நீளம் இருக்கும். மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் உயர்கல்வி நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை வழங்கிவருகிறது.

02:27:01 on 23 Jan

மேலும் வாசிக்க இப்போது டாட் காம்

மேற்கத்திய நாடுகளில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியாவிலும் மார்பக புற்றுநோய் மிக அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்மாநிலங்களை பொறுத்தவரையில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் மார்பக புற்றுநோய் அதிகமாக இருக்கிறது.

01:57:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலைமலர்

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை இழிவான சொற்களில் விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

01:27:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினகரன்

தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் மாற்ற கதைகளில் சில மாற்றங்களை செய்துள்ளாராம் இயக்குனர் ஸ்ரீகாந்த் அடாலா. அசுரனில் வரும் பிளாஷ்பேக் காட்சிகளுக்குப் பதிலாக, ஆந்திராவில் நடந்த உண்மைச் சம்பவத்தை கதையில் சேர்த்துள்ளனர்.

12:57:02 on 23 Jan

மேலும் வாசிக்க சினி உலகம்

வானில் தோன்றிய கருப்பு வளையத்தால் பாகிஸ்தான் நாட்டு மக்களிடையே பல்வேறு யூகங்கள் தோன்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாகூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வானில் கருப்பு வளையம் தோன்றியது. அந்த கருப்பு வளையத்தை பார்த்த பொதுமக்கள் பலர், ஏலியன்கள் அதில்தான் வருவார்கள் என்று பீதியை கிளப்பியுள்ளார்கள்.

12:27:01 on 23 Jan

மேலும் வாசிக்க நக்கீரன்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நாடு தலையிட அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு மீண்டும் இந்தியா திட்டவட்டமாக பதிலளித்துள்ளது. இதனை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்றும், பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்று ஆகிவிட முடியாது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

11:57:02 on 23 Jan

மேலும் வாசிக்க தினமலர்

”நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தேன். ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்காக ராஞ்சி வரை சென்றேன். தேசம் குறித்த அவர்களின் நிலைப்பாடு வேறு என்பதை உணர்ந்து கொண்டதால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து விலகிவிட்டேன்.” என ஐஏஎஸ் கோபிநாதன் கூறியுள்ளார்.

11:27:02 on 23 Jan

மேலும் வாசிக்க விகடன்

தமிழ்நாடு அரசு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் நாளை (ஜன.24) காலை 10.30 மணிக்கு, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகவளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

10:57:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினமணி

ராமநாதபுரத்தில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட திட்டம் தீட்டியதாக கூறி கைது செய்யப்பட்ட கீழக்கரையைச் சேர்ந்த பிச்சைக்கனி, கடலூர் கோண்டூர் காலனியை சேர்ந்த மணிகண்டன் என்கிற முகமது அலி, விழுப்புரம் கிருஷ்ணாபுரம் மணமேட்டைச் சேர்ந்த சொர்ண அருண்குமார் என்கிற முகமது அமீர் ஆகிய 3 பேரும் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டனர்.

10:27:02 on 23 Jan

மேலும் வாசிக்க பாலிமர் செய்திகள்

சிலர் பெறவேண்டியதைப் பெற்றுக்கொண்டு ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திற்கு டெண்டர் விதிகளைத் தளர்த்திக் கொடுக்கச் சொல்லி மிரட்டலான அழுத்தம் கொடுத்ததால், தலைமைச் செயலாளரிடம் விருப்ப ஓய்வு கடிதத்தைக் கொடுத்துள்ளார் சந்தோஷ்பாபு.

09:57:01 on 23 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

சீனாவின் வுகான் நகரில் கரோனா வைரஸ் தாக்குதலால் பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு மேலும் வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க பயண தடையை சீன அரசு அறிவித்துள்ளது.

09:27:01 on 23 Jan

மேலும் வாசிக்க தினகரன்

மீ ஆடியோ நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்10 பெயரில் புதிய ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்துள்ளது. புதிய இயர்பட்ஸ் IPx5 சான்று, ப்ளூடூத் 5.0 மற்றும் சார்ஜிங் கேஸ் பயன்பாட்டை சேர்த்து 23 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.4,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

08:55:01 on 23 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

பிளே ஸ்டேஷன் கேமிங் கன்சோலில் அனைவரின் வரவேற்பையும் பெற்று, மூன்று பாகங்கள் வரை வெளிவந்த 'God of War' எனப்படும் வீடியோ கேமை உருவாக்கிய குழு, தற்போது 'God Fall' எனப்படும் கேமை தயாரித்துள்ளது. இது வருகின்ற 2020ஆம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு மார்க்கெட்டுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

07:55:02 on 23 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.

06:55:02 on 23 Jan

மேலும் வாசிக்க தமிழ் வெப்துனியா

விஜய், அஜித் ரசிகர்கள் ஒன்று சேர்ந்துக்கொண்டு தெலுங்கு சினிமா ஹீரோக்களை பயங்கரமாக கலாய்த்து #UnrivalledTamilActors என ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும் போட்டிப்போட்டு கொண்டு தமிழ் சினிமா ஹீரோக்களை கலாய்த்து #TeluguRealHeroes என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

05:55:01 on 23 Jan

மேலும் வாசிக்க நியூஸ் ஜெ

கீரை ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நல்ல மூலமாகும், மேலும் ஆயுர்வேதத்தின்படி, மருத்துவ குணங்களும் இதில் ஏராளமாக காணப்படுகின்றன. கீரை ஆரோக்கியத்திற்கு ஒரு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த சூப்பர் புட் ஆகும். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்கள் இதில் போதுமான அளவில் காணப்படுகின்றன,

10:57:02 on 22 Jan

மேலும் வாசிக்க மாலை மலர்

சாம்சங் ஜனவரி-21 ஆம் தேதி, கேலக்சி நோட் 10 லைட் என்ற ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியது. 2019-ஆம் ஆண்டு வெளியான கேலக்சி நோட் 10 ஸ்மார்ட்ஃபோனுடைய லைட்டர் வெர்ஷனான இந்த ஃபோனில், சாம்சங் நிறுவனமே தயாரித்த Exynos 9810 SoC என்ற ஆக்டோ கோர் ப்ராசசர் பொருத்தப்பட்டுள்ளது.

09:57:01 on 22 Jan

மேலும் வாசிக்க மின்னம்பலம்

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடியம் மண்டலம், துல்லா கிராமத்தை சேர்ந்த சீனிவாஸ் என்பவர், அதே பகுதியில் உள்ள தனது அத்தை சத்தியவதி மகளை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சத்தியவதி தனது மகளை, சீனிவாசுக்கு திருமணம் செய்து கொடுக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

08:25:01 on 22 Jan

மேலும் வாசிக்க நியூஸ் 18 தமிழ்நாடு

தாய்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது சுரேஷ் என்பவரது பெட்டியில் அரிய வகை வனவிலங்குகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

07:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க புதிய தலைமுறை

கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள மீனாட்சி கார்டன் குடியிருப்பில் அண்மை காலமாக பெண்களின் ஆடைகள் மற்றும் செருப்புகள் திருடுப்போவது தொடர்கதையாகவே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் இருந்து வந்தனர்.

07:25:02 on 22 Jan

மேலும் வாசிக்க சத்தியம் டிவி

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ்- திமுக ஆகிய இரு கட்சிகளிடையே பிரிவினை ஏற்படும் என்று தான் ஏற்கனவே சொல்லியிருந்ததாகவும், அதுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார்.

06:55:01 on 22 Jan

மேலும் வாசிக்க விகடன்

மேலும் வாசிக்க